Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செருக்கைத் துறந்த சுகர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

செருக்கைத் துறந்த சுகர்

 

நான் எனது என்ற செருக்குக் கொண்ட மனிதனை யாரும் அண்டுவதில்லை. செருக்குக் கொண்ட மனிதன் தனித்து விடப்படுகிறான். ஆனால் செருக்கு அகன்று தன்னை உணர்ந்து பிறரை மதிப்பவன் மேன்மகனாகப் போற்றப்படுவான். அப்படிச் செருக்குக் கொண்ட சுகரைப் பற்றியும் தன் செருக்கை அவர் அகற்றி மேன்மகனாக ஆனது பற்றியும் பார்ப்போம் குழந்தைகளே.
பதினெண்புராணங்களையும் இயற்றியவர் வேத வியாசர். அவர் ஒரு முறை பச்சைக்கிளி உருவில் இருந்த கிருதாசீ என்ற தேவ கன்னிகையின் மேல் விருப்பம் கொண்டதால் அவர்களுக்கு சுகப் பிரம்மர் என்ற குழந்தை பிறந்தது. தாயைப் போல சுகப் பிரம்மருக்கும் மூக்குக் கிளிமூக்குப் போல அமைந்து இருந்தது.
 
இளம் வயதிலேயே அறிவுக்கூர்மை மிக்கவராக விளங்கினார் சுகர். ஆயினும் அவருக்கு பிரம்ம ஞானம் என்றால் என்ன எனப் புரியவில்லை. இது பற்றி அவர் தன் தந்தை வியாசரிடம் கேட்கிறார்.


“தந்தையே பிரம்ம ஞானம் என்றால் என்ன ?”

“மகனே, இதை நீ மிதிலை மன்னன் ஜனகனிடம் சென்று கேள் “ என்கிறார் தந்தை வியாசர். தன் தந்தைக்குத் தெரியாதது என்ன அந்த ஜனகருக்குப் பெரிதாகத் தெரிந்துவிடப் போகிறது என்று நினைக்கிறார் சுகர்.
தந்தைக்கு ஏதும் தெரியாமல் இருக்குமா. அதை மகன் இன்னொருவர் மூலம் அறிந்து தெளிவதே சிறப்பு என்று அனுப்புகிறார்.
ஜனகரின் அரண்மனைக்கு வரும் சுகப்பிரம்மர் அங்கே வாயிற்காப்போனிடம் “ சுகப் பிரம்ம மகரிஷி அவர்கள் வந்திருக்கிறார்கள் என்று மன்னரிடம் தெரிவி “ எனச் சொல்கிறார்.
அவனோ மன்னனிடம் அதைத் தெரிவிக்க ஜனகரோ “ அவருடன் வந்திருக்கும் நான்கைந்து ஆட்களை விட்டுவிட்டு அவரை மட்டும் வரச் சொல் “ என்கிறார்.
இதை வாயிற்காப்போன் சுகரிடம் ”உங்களுடன் வந்துள்ள நான்கைந்து பேரை விட்டு விட்டு வரச் சொல்கிறார் மகாராஜா “ என்று தெரிவிக்க சுகரோ குழம்புகிறார். பின்னர் தான் சொன்னதை யோசித்துப் பார்த்துவிட்டு வாயிற்காப்போனிடம் ”சுகப் பிரம்ம ரிஷி வந்திருக்கிறார் “ என்று சொல்லச் சொல்கிறார்.
அதையும் கேட்டுவிட்டு அரசர் ”இன்னும் இரண்டு மூன்று பேர் இருக்கிறார்களே அவர்களையும் விடச்சொல்” என்று கூறி அனுப்புகிறார். இதையும் காவலன் வந்து சொல்ல சுகர் கேட்டு விட்டு “ சுகப் பிரம்மம் வந்திருக்கிறேன் என்று சொல்” என்று கூறித் திரும்ப வாயிற்காப்போனை அனுப்புகிறார்.
மன்னரோ பின்னரும் “இன்னும் ஒருவர் இருக்கிறார். அவரையும் விட்டுவிட்டு வரச் சொல் “ என்க அதைக் கேட்டுச் சுதாரித்த சுகர் “சுகன் வந்திருக்கிறேன் “ என்று சொல் எனச் சொல்லி அனுப்புகிறார். அப்போதே சுகருக்கு சுய செருக்கு கொஞ்சம் அழிகிறது.
இப்போது மன்னன் உள்ளே வரச் சொல்ல சுகரும் அரசவைக்குச் செல்கிறார். அங்கே ஜனக மன்னன் சுகருக்குத் தகுந்த ஆசனம் அளித்து அமரச் சொல்கிறார். வேறு ஏதும் பேசவில்லை. உபதேசிக்கவும் இல்லை.
அங்கே ஒரு வழக்கு நடந்து கொண்டிருக்கிறது. அதில் மரணதண்டனைத் தீர்ப்பு விதிக்கப்பட்டவன் அங்கே நின்று கொண்டிருக்கிறான். இந்த வழக்கை உற்றுக் கவனிக்கிறார் சுகர். அந்தக் கைதியிடம் மன்னன் ஜனகர் கூறுகிறார். “ உன் மரணதண்டனையில் இருந்து தப்ப ஒரு வாய்ப்பு அளிக்கிறேன்”
என்ன வாய்ப்பு, சொல்லுங்கள் என்று கேட்க நினைத்து வாய்மூடிப் பயந்தபடி அந்த மரணதண்டனைக் கைதி நிற்கிறான். அதிலிருந்து தப்பித்தால் போதும் என்றிருக்கிறது அவனது பார்வை.
“ உன் தலையை மொட்டையடித்து அதன் மீது ஒரு தட்டை வைத்து அது நிரம்ப எண்ணெய் ஊற்றச் சொல்வேன். அந்த எண்ணெய் ஒரு சொட்டுக்கூடச் சிந்தாமல் சிதறாமல் நீ இந்த ஊரைச் சுற்றி வர வேண்டும். ஒரு சொட்டுச் சிதறினாலும் உன் தலை சிதறும். ஒரு சொட்டுக் கூடச் சிந்தாமல் வந்தால் உன் மரணதண்டனையை ரத்து செய்கிறேன். செய்கிறாயா ?” எனக் கேட்கிறார். அவனும் ஆமோதிக்க அவன் தலை மொட்டையடிக்கப்பட்டுத் தட்டு வைத்து எண்ணெய் ஊற்றப்படுகிறது.
ஊரெங்கும் கோலாகலம், வண்ண வண்ணப் பெண்கள், நடனக் கச்சேரிகள், இசை நிகழ்ச்சிகள், வண்ணக் கோலங்கள், வாண வேடிக்கைகள், நாவூறச் செய்யும் விருந்துக் கூடங்கள், இவை எவையும் அவன் சிந்தைக்குள் ஏறவில்லை. எண்ணெய் சிந்திவிட்டால் தன் தலை சிதறிவிடும் என்பதால் சிந்தையைக் குவித்து ஒரே மனதோடு கட்டுப்பாடாக ஊரைச் சுற்றி வந்து ஆசுவாசப் பெருமூச்சு விட்டான்.
மன்னன் ஜனகரும் அந்தக் கைதியின் தண்டனையை ரத்து செய்தார். பிரம்ம ஞானம் என்றால் என்ன என்று அவர் எந்தப் பாடமும் சுகருக்கு எடுக்கவில்லை. ஆனால் இந்த நிகழ்வைக் கண்டதன் மூலம் சுகர் பிரம்ம ஞானத்தை அடைந்ததோடு தன் செருக்கும் துறந்து மேன்மகனானார்.
நாமும் நம்மை அழிக்கும் செருக்கைத் துறந்து மேன்மக்களாவோம் குழந்தைகளே
  • கருத்துக்கள உறவுகள்

ஏராளன் இந்தக் கதையின் பின் பகுதிக்கும் செருக்குக்கும் என்ன தொடர்பு என்பது என் சிற்றறிவுக்குப் புரியவில்லையே.🤔

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

ஏராளன் இந்தக் கதையின் பின் பகுதிக்கும் செருக்குக்கும் என்ன தொடர்பு என்பது என் சிற்றறிவுக்குப் புரியவில்லையே.🤔

செருக்கிழப்பும் மன ஒருமைப்பாடும் வந்தால் ஞானம் கிடைக்கும் என்று சொல்ல வருகினமோ தெரியவில்லை.

Edited by ஏராளன்
கருத்து திருத்தம்

  • கருத்துக்கள உறவுகள்

வேத வியாஸரின் மகன் சுகப்பிரமம் என்னும் சுகர்......இவர் பிறக்கும்போதே ப்ரம்ம ஞானியாக பிறந்தவர்.ஆயினும் விளக்கின் அடியில் இருக்கும் சிறு இருள்போல் இவரிடமும் சிறு கர்வம் (செருக்கு) இருந்ததை தந்தை வியாசர் கவனித்துள்ளார். பொதுவாக பெற்றோர் எவ்வளவுதான் படித்தவர்களாக இருந்தாலும் பிள்ளைகள் பொறுமையாக அவர்களிடம் படிக்க மாட்டார்கள். அவர்களும் எருமைகளாக பிள்ளைகளை முட்டுவார்கள். அதனால் இன்னொருவரிடம் டியூசனுக்கு சென்றுதான் பிள்ளைகள் கற்றுக்கொள்வார்கள். இது பொதுவான நியதி.அதனால் சுகர் ஜனகமன்னரிடம் ட்யூசன் எடுக்க செல்கிறார்.......!

ஜனக மகாராஜா, இவர் மிதிலை நாட்டிற்கு(சீதாப்பிராட்டியாரின் ஊர்.சீதைக்கு ஜானகி என்றும்,மைதிலி என்றும்  கூட  பெயர்கள் உண்டு.). மன்னராக இருந்தபோதிலும் ஒரு ஜீவன்முக்தராகவே வாழ்ந்து கொண்டிருப்பவர். இந்த ஜீவன்முக்தர் என்பது முனிவர், ரிஷி, பிரம்மரிஷி (வசிஷ்டர்,விசுவாமித்திரர்) ஸப்தரிஷி (அகத்தியர்,அத்ரி, பரத்வாஜர் போன்றவர்கள்)போன்றவர்களைவிடவும் மேலான நிலை. ஒரு அகில உலக உச்சநீதிமன்ற நீதிபதி என்று சொல்லலாம் என நினைக்கின்றேன்.....!

இந்த ஜனக மகாராஜாவிடம் ஏற்கனவே நாரதர், அகத்தியர் ஆகியோர் வந்து தமக்கு ஏற்படும் அற்பசொற்ப கர்வம், ஆணவம் களை  களைந்து விட்டு சென்றிருக்கின்றார்கள். அப்பேற்பட்டவரிடம் சுகர் வருகின்றார்.(சுகம் என்றால் கிளி. இவரது முகம் கிளி முகம் போன்று இருக்கும்). வந்தவர் வாயிற்காப்போனிடம் தனது பட்டங்கள், கப்புகள், மெடல்கள் எல்லாவற்றையும் சிறிது செருக்குடன் சொல்லி, சொல்லி விட்டதால் அவற்றை எல்லாம் தூக்கி எறிந்து விட்டு வரும்படி மகாராஜாவால் அறிவுறுத்தப்படுகிறார்.( பின்னாளில் அவர் ஆடைகளையும் துறந்து விட்டு பரிநிர்வாணமாகவே வாழ்ந்து வந்தார்).......!

அப்போதே அவரது செருக்கில் பாதி போய் விட்டது. அரசவைக்குள் செல்கிறார்.அங்கு வழக்கு நடைபெறுகின்றது.தீர்ப்பு கொடுக்கப் படுகின்றது. அதை  ஊண்றிக் கவனிக்கின்றார். அந்த குற்றவாளி தனது தலை சிதறப்போகின்றது என்ற நிலை வரும்போது ஆட்டம் பாட்டம் எதிலும் கவனம் செலுத்தாமல் தனது தலையில் உள்ள எண்ணெய் மீது மட்டுமே கவனத்தை குவித்து ஊரை சுற்றி வந்து தண்டனையில் இருந்து விலக்கு பெறுகிறான்......!

(இதே போன்றதொரு தண்டனையை மகாவிஷ்ணு நாரதருக்கும் கொடுத்திருக்கிறார்).

பிரம்மஞானத்தை பெறுவது அப்படியே. ஒருமுகபட்ட  சிந்தனையுடன் அதை தியானித்து,அதையே தியானித்து பெறவேண்டும் என்பதை சுகர் புரிந்து கொள்கிறார்.......!  😂

கல்லால மரத்தின் கீழ் குரு  தட்ஷணாமூர்த்தி வீற்றிருக்கின்றார். அவரிடம் கல்வி கற்க பிரம்மாவின் பிள்ளைகளான சனகர்,சனந்தனர்,சனாதனர்,சனத்குமாரர் ஆகியோர் வருகின்றனர்.யாரும் யாரோடையும் எதுவும் பேசவில்லை.காலம் செல்கிறது.கண்விழித்த குரு  பார்வையால் வினவுகிறார் புரிந்ததா என்று, அவர்களும் நன்றாக புரிந்தது என்று வணங்கி செல்கின்றனர்.....!

ஏதோ என் சிற்றறிவில் படித்தது, கேட்டதை கொண்டு சொல்லியிருக்கிறேன்.சுகரை பற்றி  மேலும் பல கதைகள் உள்ளன.....!  🤔

 

 

Edited by suvy
எழுத்து பிழை திருத்தம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.