Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது (edited)

Picture1.jpg

வரலாற்று ஆய்வாளர் திரு.தெய்வநாயகம் அவர்களின் பேச்சு, அவசியம் காண  வேண்டிய காணொளி..!

Edited by ராசவன்னியன்
  • Like 4
  • Thanks 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

அருமையான தகவல்கள் நிறைந்த காணொளி.இவரின் ஆய்வுகள் பொக்கிசமானமை.இவையும் பாதுகாக்கப்பட வேண்டும்.ஐயா கூறியது போல் எமது தமிழர் வரலாறுகளை உரியமுறையில் கொண்டு சேர்க்க வேண்டிய கடமை எல்லோரிடமும் இருக்கின்றது.
இணைப்பிற்கு மிக்க நன்றி ராசவன்னியர்.இப்படியான காணொளிகளை இணையுங்கள்.

கலோ இனி பேசுவ...?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மிக நேர்தியான, அதைவிட நேர்மையான பேச்சு.

ராஜேந்திர சோழனின் மெய்கீர்தியை விட, தன் சுய கீர்த்தியை ஐயா பேசினாலும் கூட, அதையும் அறிவுச் செருக்கு என்று ரசிக்கவே முடிகிறது.

ரோமில் தமிழர் குடியிருப்பு இருந்தது, சோழ நாணயங்கள் கிடைத்தன எனவே ரோமனியர்கள் தமிழர்கள், சீலன் என்ற பெயர்தான் மருவி சீசர் என்றாகியது என்று பைத்தியக்காரத்தனம் பண்ணாமல் விட்டார் பாருங்கள் - அதுதான் முத்தாய்ப்பு.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, goshan_che said:

ஒன்றுமே இல்லாத/தெரியாத குடுகுடுப்பைகள் குலுக்கும் இந்தக்காலத்தில் ஐயாவைப் போன்று நாலு விடயங்கள் தெரிந்தவர்கள் தங்களைப்பற்றி சொல்வதில் எந்த தவறும் இல்லை.

ஒருவர் தன்னைப்பற்றி பகிரங்கமாக சொல்வதன் மூலம்தான் இவர் அந்த விடயத்தைப்பற்றி சொல்வதற்கு தகுதியானவரா என்பதை மக்கள் தெரிந்து கொள்வார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, குமாரசாமி said:

இது ஏற்றுக் கொள்ளக் கூடியதுதான்,

உதாரணதுக்கு இவர் இவ்வளவவையும் சொல்லி இராவிட்டால், எனக்கு இவரின் பின்புலம் பற்றி தெரிந்திராது. யாரோ இன்னுமொரு யுடியூப் கோமாளி என்று நினைத்திருக்கவும் கூடும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, goshan_che said:

இது ஏற்றுக் கொள்ளக் கூடியதுதான்,

உதாரணதுக்கு இவர் இவ்வளவவையும் சொல்லி இராவிட்டால், எனக்கு இவரின் பின்புலம் பற்றி தெரிந்திராது. யாரோ இன்னுமொரு யுடியூப் கோமாளி என்று நினைத்திருக்கவும் கூடும்.

இதென்ன புது கண்டுபிடிப்பா இருக்கே..?
அதற்கு உங்கள் வரைவிலக்கணம் எப்படியோ..? :)

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மேலே காணொளியில் பேசுபவர், முனைவர்.கோ.தெய்வநாயகம் அவர்கள், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியாரக பணியாற்றியவர்.

இன்னொரு காணொளியும் இருக்கு..!

அண்மைக்காலங்களின் யாழ்களத்தில் ஒரு சிலரால் யுடியூப் கோமாளிகள் என மிக இலகுவாக நக்கலடித்து தங்களின் அதிமேதாவித்தனமான கருத்துக்களை முன்னிலைப்படுத்துகின்றார்கள்.
இன்றைய தொலைக்காட்சி  வானொலி ஊடகங்களே தங்கள் செய்திகளை யுடியூப்பில் தரவேற்றுவதில் ஆர்வம்  காட்டுகின்றார்கள்.அந்த அளவிற்கு யுடியூப் முக்கிய தளமாக உருவாகி விட்டது. அதை விட யுடியூப் தொலைக்காட்சி செய்தி ஒளிப்பதிவுகளும் நிறையவே வந்து கொண்டிருக்கின்றது.பல தொழில்நுட்ப செய்முறைகள் எல்லாம்  யுடியூப் மூலமாகவே அறிந்து கொள்ள முடிகின்றது.புத்தக படிப்பின் மூலம் தெரிந்து கொள்ள முடியாத எத்தனையோ விடயங்களை அறிந்து கொள்ள முடிகின்றது.

ஒரு விடயத்தை இனங்காண முடியாவிடில் எல்லாம்  கோமாளித்தனமாகவே தெரியும்..:cool:

இனி பேசுவ...? 🤣🤣🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, ராசவன்னியன் said:

மன்னிக்கவேண்டும் ரா.வ,

நான் இவரை யூடியூப் கோமாளி எனக் கூறவில்லை. இவர் தன் தகமைகள் பற்றி கூறி இராவிடின், இவரையும் அப்படி நினைத்திருப்பேன் என்றே கூறினேன்.

யுடியூப் கோமாளிகள் டிஸ்கி:

தமக்கு முற்றிலும் விளக்கம் இல்லாத ஒரு விடயத்தை, எந்த ஆராய்சி, துறைசார் நிபுணத்துவம், உசாத்துணை ஆதாரம் ஏதுமின்றி மானாவாரியாக வியாக்கியானம் கொடுப்பவர்கள்.

யார் யுடியூப் கோமாளிகள்? சில உதாரணங்கள் கீழே

எல்லாம் லைக் வாங்கி காசு பார்க்கத்தான்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
39 minutes ago, குமாரசாமி said:

அண்மைக்காலங்களின் யாழ்களத்தில் ஒரு சிலரால் யுடியூப் கோமாளிகள் என மிக இலகுவாக நக்கலடித்து தங்களின் அதிமேதாவித்தனமான கருத்துக்களை முன்னிலைப்படுத்துகின்றார்கள்.
இன்றைய தொலைக்காட்சி  வானொலி ஊடகங்களே தங்கள் செய்திகளை யுடியூப்பில் தரவேற்றுவதில் ஆர்வம்  காட்டுகின்றார்கள்.அந்த அளவிற்கு யுடியூப் முக்கிய தளமாக உருவாகி விட்டது. அதை விட யுடியூப் தொலைக்காட்சி செய்தி ஒளிப்பதிவுகளும் நிறையவே வந்து கொண்டிருக்கின்றது.பல தொழில்நுட்ப செய்முறைகள் எல்லாம்  யுடியூப் மூலமாகவே அறிந்து கொள்ள முடிகின்றது.புத்தக படிப்பின் மூலம் தெரிந்து கொள்ள முடியாத எத்தனையோ விடயங்களை அறிந்து கொள்ள முடிகின்றது.

ஒரு விடயத்தை இனங்காண முடியாவிடில் எல்லாம்  கோமாளித்தனமாகவே தெரியும்..:cool:

இனி பேசுவ...? 🤣🤣🤣

பொழுது போக்கு, செய்திக்கு யுடியூப் ஓகே ஆனால் அறுவை சிகிச்சை எப்படி செய்வது என்பதை யூடியூப் பார்த்து கற்ற ஒருவரிடம் நீங்கள் அறுவை சிகிச்சை செய்ய ரெடியா?

வரலாற்று ஆராய்சி, தொல்லியல் தடயவியல் என்பது வேற லெவல் மேட்டர். இதற்கென தனிப்பட்ட பயனாளர் (subscriber) தளங்கள் உள்ளன, ஜேர்னல்கள் உள்ளன, பீல்ட் வேர்க், Peer review இப்படி பல விடயங்கள் மூலம் ஒரு எடுகோளை நிறுவ வேண்டும்.

ஒரு கோயிலை வீடியோ எடுத்து விட்டு அதை டப்பிங் பண்ணி யுடியூப்பில் ஏத்தினால் -அதையும் நம்பி - அதையும் “ஆராய்சி” என பார்ப்பீர்களா?

அப்போ நீங்கள் அடுத்த கண் ஆப்பரேசனையும் ஒரு யுடியூப் டாக்டரிடமே செய்யுங்கள். 

பார்வை பிச்சிக்கும் 🤪

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, goshan_che said:

பொழுது போக்கு, செய்திக்கு யுடியூப் ஓகே ஆனால் அறுவை சிகிச்சை எப்படி செய்வது என்பதை யூடியூப் பார்த்து கற்ற ஒருவரிடம் நீங்கள் அறுவை சிகிச்சை செய்ய ரெடியா?

அறுவை சிகிச்சை பற்றிய காணொகள் அது சம்பந்தமாக படிப்பவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். என் போன்றவர்களுக்கு அப்படியான காணொளிகள் மர்மமாக இல்லாமல் எப்படி செய்கின்றார்கள் என தெரிந்து கொள்ள உதவும்.

உங்களை போன்ற ஜாம்பவான்களுக்கு சத்திர சிகிச்சை கூடங்களில் அருகில் நின்று பார்க்க வசதிகள் இருக்கும். நமக்கு????:(

நான் யுடியூப் பார்ப்பது ஒன்றை தெரிந்து கொள்வதற்கு மட்டுமே. பார்த்ததை வைத்து தொழில் செய்வதற்கு அல்ல. சில வேளைகளில் மின்சார இணைப்புகள்,தொலைபேசி இணைப்புகள்,அலுமாரி கட்டில் கதிரை பொருத்துதல் பற்றிய விவரங்களுக்கு யுரியூப்பை பார்ப்பேன்.பேருதவியாக இருக்கும். எனக்கு தெரிய வாகனம் திருத்துபவர்கள் கூட புதிய வாகனங்களில் வரும் சிக்கல்களை யுடியூப் காணொளிகளை பார்த்து தெரிந்து கொள்கின்றனர்..அண்மையில் நான் வேறு வாகனம் வாங்கும் போது கூட யுடியூப்பில் வரும் காணொளியில் வரும் கண்ணோட்டங்களையும் கருத்துக்களையும் வைத்தே தெரிவு செய்தேன்.

5 hours ago, goshan_che said:

வரலாற்று ஆராய்சி, தொல்லியல் தடயவியல் என்பது வேற லெவல் மேட்டர். இதற்கென தனிப்பட்ட பயனாளர் (subscriber) தளங்கள் உள்ளன, ஜேர்னல்கள் உள்ளன, பீல்ட் வேர்க், Peer review இப்படி பல விடயங்கள் மூலம் ஒரு எடுகோளை நிறுவ வேண்டும்.

இப்படியான தளங்கள் பல உண்மைக்கு புறம்பான ஆய்வுமுடிவுகளையும் வெளியிடுகின்றன.எல்லாவற்றையும் நம்ப ஏற்க முடியாதவை.

5 hours ago, goshan_che said:

ஒரு கோயிலை வீடியோ எடுத்து விட்டு அதை டப்பிங் பண்ணி யுடியூப்பில் ஏத்தினால் -அதையும் நம்பி - அதையும் “ஆராய்சி” என பார்ப்பீர்களா?

கண்ணா! சந்தைக்கு கத்தரிக்காய் வாங்கப்போனால் வியாபாரி தூக்கிப்போடுற கத்தரிக்காய் எல்லாத்தையும் எடுக்கப்படாது.சூத்தை கத்தரிக்காயும் அதுக்கை இருக்கும்.பார்த்து நல்லதாய் தெரிஞ்சு எடுக்கணும்.வெண்டிக்காய் வாங்கினால் முறிச்சுப்பார்த்து வாங்கணும்.அது போலத்தான் யுடியூப் விடியோக்களும்.தெரிஞ்சு தேடி நல்லதை மட்டும் பாக்கணும்😂

5 hours ago, goshan_che said:

அப்போ நீங்கள் அடுத்த கண் ஆப்பரேசனையும் ஒரு யுடியூப் டாக்டரிடமே செய்யுங்கள். 

பார்வை பிச்சிக்கும் 🤪

லண்டனிலை இருக்கிற எங்கட ரமில் டொக்டர் பொடியளை நக்கலடிக்கிறியள் போல.. 🤪

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • டெஸ்ட் போட்டிகளில் பயன்படுத்தும் சிகப்பு பந்தின் கட்டு வெள்ளைபந்தை விட உறுதியாக இருப்பதனால் இவ்வாறான பந்துவீச்சுகளை எதிர் கொள்ளவேண்டியிருக்கும் பந்து வீச்சாளர் பந்தின் கட்டினை பைன் லெக் திசையில் வைத்து  பந்தினை வீசும் போது மணிக்கட்டினை நேராக வைத்து பிளிக் செய்வது போல் வீசும் போது இவ்வாறு நிகழும் மிக சிலரே இதனை சிறப்பாக செய்வார்கள், அத்துடன் பந்தின் கட்டினை தளம்பலாக வீசும் போது பந்து எந்த பக்கம் திரும்பும் என்பதும் கணிப்பது சிரமமாகும், இந்த பிரச்சினை 20 ஓவர் 50 ஓவர் போட்டிகளில் பயன்படுத்தும் வெள்ளை பந்தில் பெரிதாக இருக்காது.
    • இந்திய அரசியல்வாதிகளில் ஆரம்பம்முதல் இறுதிவரை விசுவாசமாக புலிகள் பக்கம் நின்ற அரசியல்வாதிகள் இரண்டுபேர் மட்டுமே ஒன்று எம்ஜிஆர் , மற்றையது திரு.பழநெடுமாறன் அவர்கள் மீதமுள்ள ராமதாஸ் , திருமாவளவன், வைகோ போன்றவரெல்லாம் புலிகளுக்கும் பாடிவிட்டு பின்பு கருணாநிதியுடனும் சேர்ந்து கூத்தடிச்சவர்களே. பாண்டிபஜார் கைதிலிருந்து ,ஆயுதங்கள் தொலைதொடர்பு சாதனங்கள் பறிமுதல், கிட்டண்ணா பயணித்த கப்பல் மீதான இந்திய கடற்படை தாக்குதல், ஜூலை கலவரத்தின்போது தமிழக எழுச்சி, தமிழீழத்திற்கு சிலமுறை உயிரை பணயம் வைத்து பயணம் என்று முள்ளிவாய்க்கால்வரை அவர் காட்டிய புலிகள்மீதான பற்று சந்தேகத்திற்கப்பாற்ப்பட்டது. பின்னாளில் அவர் வயது முதுமை காரணமாக யாரோ அடிச்சுவிட்டதையெல்லாம் நம்பி தலைவர் உயிருடன் இருக்கிறார் என்று பேசபோனது அவர் தள்ளாமையின் பிரதிபலிப்பு ஆனாலும்  தமிழீழம் உருவாக இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது  என்பது இந்தியாவிடம் பயிற்சிபெற்ற இயக்கங்களுக்கும் தெரியும், இலங்கைக்கும் தெரியும் இலங்கை தமிழருக்கும் தெரியும், இந்திய வெளியுறவு கொள்கை வகுப்பாளர்களுக்கும் தெரியும். இந்திய உதவியுடன் தமிழர்கள் கை ஓங்கியிருந்த அக்காலத்திலேயே தமிழீழத்தை நினைத்தும் பார்க்க அனுமதிக்காத இந்தியா இனிமேல் அது உருவாக அனுமதிக்கும் உதவி செய்யும்  என்று ஐயா எதிர்பார்ப்பது இதுவும் அவர் தள்ளாத வயதின் பிரதிபலிப்பே. இந்தியாவின் நோக்கமெல்லாம்அன்றும் இன்றும்  இலங்கை தமிழருக்கு நாடு பெற்று தருவதல்ல, சிங்கள அரசை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதே என்பது ஐயாவுக்கு நன்றாக தெரியும், ஆனாலும் பேசுகிறார் என்றால் அதுவும் தள்ளாமையின் ஒரு அம்சமே.
    • கிளிநொச்சியில் மட்டும் 16 பாராம்.. யாழ் 5.. மற்ற இடங்களில் 2 பார்சிறி பார்சிறி தான். ஒரு நாளைக்கு சங்கு  இன்னொரு நாளைக்கு சைக்கிளோட பேச்சுவார்த்தை  இன்னொருநாள் பார் லைசென்ஸ் புரோக்கர்  மற்ற நாள் வாகன பெர்மிட் விற்பனை  கார்த்திகையில தியாக புராணம்  போற போக்கில கமலஹாசன மிஞ்சிடுவார். தமிழ்த்தேசிய அரசியலின் தலைசிறந்த போலித் தமிழ் தேசியவாதி நசுக்கிடாக்கள்ளன் பார்சிறி.. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் : ஒரு நாடு இரு தேசம்.. சுமந்திரன் : ஒன்றுபட்ட இலங்கையில் மாண்புமிக்க, சமத்துவமான, சுயநிர்ணய உரிமையுடன் கூடிய உடனிருப்பு.. சிறிதரன் : போதையின் பாதையில் தமிழ்த்தேசியம்..  
    • மாவீரர்கள் சிந்திய குருதி எம்மண்ணிலிருந்து இன்னும் காயவில்லை. அவர்களின் எழுச்சி குரலும், தாகமும் இன்னும் அடங்கவில்லை. முள்ளிவாய்க்கால் அவலக் குரலும் தினம் தினம் ஒலித்துக் கொண்டே இருக்கின்றன.நாம் ஏற்றிய தீபங்கள் எம் மனசாட்சியின் தீபங்களாக இருக்கட்டும். இந்த உண்மையை அனவரும் உணர்ந்தால் வெற்றி நிச்சயம்..
    • கருத்துக்கள உறவுகள் Posted 59 minutes ago வீர வணக்கம் அம்மா.  🙏 
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.