Jump to content

பிள்ளைகளுக்கு உண்மை சொல்வோம் - வ,ஐ,ச,ஜெயபாலன்


Recommended Posts

எங்கள் பிள்ளைகளைகளுக்கு உண்மையைச் சொல்லி வளர்ப்போம்.
.
NO TO TAMIL NATIONAL ANTHEM. "SRI LANKA IS ONLY FOR SINHALESE" - 1956, 1958, 1983 AND NOW IN 2020.
எனது Jaya Palan பதிவு தொடர்பான முகநூல்  விவாதங்கள்.
.
M YM Siddeek ஒரு சாண் ஏற்றம் ஒரு முழம் இறக்கம். அப்போதய தமிழ் உரிமை ப்போராளிகள் பலர் தம் தாய்மொழிக்காக உயிரை விட்டார்கள். ஒருசிலர் இன்னும் உயிருடன் இருக்கின்றனர். எதிர்க்கட்சி த்தலைமை கதிரையை சூடேற்றி அரச சௌபாக்கியங்களை அனுபவித்த வர்கள் ஏன் வாயடைத்தவர்களாக காணப்படுகின்றனர்? தமிழ் பேசும் சமூகங்களை ஒன்றை ஒன்று பகைக்க வைத்து தமிழ் பேசும் சமூகங்களின் அடப்படை உரிமை களைக்கூட பறிப்பதற்கான சூழ்ச்சி க்குள் அகப்பட்டு தமிழ் பேசும் சமூகங்கள் இன்று எல்லா உரிமைகளையும் இழந்து நிற்கின்றன. தமிழர் விடுதலை ப்போராட்டம் உலக்கைதேய்ந்து உளிப்பிடியான கதையாகி தமிழ் த்தாயகத்திற்காகப்போராடிய தமிழ் மக்கள் பேரின வாத சக்தி களுடன் கைகோர்த்து ஒரு பிரதேச செயலகத்திற்காக களம் இறங்கி ய அசிங்கத்தை அண்மையில் கண்டோம்.
.
Nazeer Haji ஈழம் கேட்டாவார்கள் இன்று தமிழில் தேசியகீதம் இல்லை என போராடுகிறார்கள். அவர்களிடாம் ஆயுதமும்., இயக்கங்களும் இருந்த போது முஸ்லிம்களை மானுடப்பிறவிகளாககூட பார்த்தார்களா? இன வெறி பிடித்தாடினார்கள். இன்றும் கூட மனச்சாட்சியுடன் நடக்கின்றார்களா? முஸ்லிம்களை பகைக்க வில்லை என்றிருந்தால் எல்லாம் கிடைத்திருக்கும்.
.

Jaya Palan : இனக்கொலையின்பின் சம்பந்தர் இல்லையெனில், பதிலாக இன்னொருவர் இருந்திருந்தால் தமிழர் தேசிய கட்சிகளின்பின் சரணடைவதைத்தவிர நிமிர வழி இருந்திருக்காது நண்பர்களே. இன்று சர்வதேசிய அழுத்தம் முதன்மை பெற்றிருக்கு. சர்வதேச அழுத்தமும் செல்வாக்கும் சிறப்பாக வளர்ந்திருக்கு. அவர் அமைச்சுபதவியை ஏற்க்கவில்லை. எதிர்கட்ச்சி பதவியை தமிழரது சமதத்துடனும் சர்வதேச ஆதரவோடும்தான் ஏற்றார்.
அதனால்தான் போரில் இரத்த சகதியில் கிடந்த மக்களை தேசிய கட்ச்சிகளில் சரணாகதி அடையாமல் தடுத்து நிலம் மிட்ட்பு சர்வதேச அழுத்தம் போன்ற காரியங்களை செய்யக்கூடியதாக இருந்தது, யில் .
“பேரின வாத சக்தி களுடன் கைகோர்த்து ....களம் இறங்குதல்” ஒரு தரப்பின் மீது மட்டும் வைக்கக்கூடிய குற்றச் சாட்டா? கழுகொட்டியா நாட்களில் பாண்டியூரான் மகன் பற்றி உன்னிடம் தொலைபேசியில் விசாரித்தபோது நீயும் மனம் நொந்து போயிருந்தாயல்லவா? எல்லா இழிவுகளும் எங்களோடு மறைய வேண்டும் தமிழரோ முஸ்லிம்களோ நாம் நமது பிள்ளைகளுக்கு நாம் உண்மையைச் சொல்லி வளர்க்க வேண்டும். அல்லது நாம் அவர்களையும் பயங்கரவாதத்தை நோக்கி தள்ளியவர்களாக இருப்போம்.
.
தமிழ் முஸ்லிம் உறவைப் பொறுத்து 1970 பதுகளில் இருந்தே கலவர சூழல் முழைவிடுகிறது. உதரணத்துக்கு மன்னார் முஸ்லிம் கிரமங்கள் அம்பாறையில் வீரமுனை போன்ற கிராமங்கள். அதன் அடிப்படை. தமிழர் மத்தியில் செல்வநாயகத்தின் அணுகுமுறைக்குப் பதைலாக தமிழ் மைய அரசியல் உருவானதும் முஸ்லிம்கள் மத்தியில் சவூதி அரேபிய செல்வாக்கில் முஸ்லிம் மைய வாதமும் 1970 களில் உருவானதும் அடிப்படைக் காரணங்களாகும். இது 1990களில் இயக்க அரசியல் வளற்சியில் மோசமடைகிறது. 1985 அமபாறை மாவட்டத்தில் மருதமுனை தவிர்த்து ஏனைய தமிழ் கிராமங்கள் எரியூட்டப்பட்ட கலவரத்தின்பின் “முஸ்லிம் என்று சொல்ல வெட்கி தலை குனிகிறேன்” என தோழர் தலைவர் அஸ்ரப் மனம் நொந்து அறிக்கைவெளியிட்டார். 1990 களில் வடபகுதி முஸ்லிம் வெளியேற்றம்போன்ற பாதகங்களைப் பார்த்து ”அழியட்டும் எனது இனம். அழியட்டும் என் கவிதை. அழியட்டும் எனது தமிசழ்” என நான் மனம் நொந்து அறம் பாடினேன், இரண்டும் இரண்டு வரலாற்றுக் கல்வெட்டுகள்.
.
தோழர் M YM Siddeek. நண்பர் Nazeer Haji, எங்கள் பிள்ளைகளுக்கு நாங்கள் சொன்ன பொய்கள் போதும். கலவரம் கொலை வீடெரிப்பு பயங்கரவாத தற்கொலைத் தாக்குதல் என நிறைய கண்டுவிட்டோம். நண்பர்ர்களே, எங்கள் பிள்ளைகளுக்கு நாம் உண்மையை சொல்லி வளர்க்கவேணும். இல்லாவிட்டால் அவர்களுக்கும் போராட்டத்துக்கும் பயங்கரவாதத்துக்கும் வித்தியாசம் தெரியாமல் போய்விடும்.

Link to comment
Share on other sites

திரு ஜெயபாலன் இங்குள்ள அங்கத்தவரகளில் பல பேர்களுக்கு ஆரம்பபுள்ளிகள் தெரியவாய்ப்பில்லை பிரதேசவாதங்களை வளர்த்தவர்கள் எங்கே தொடங்கினார்கள் என்பதும் யாழ்ப்பாண எதிர்ப்பாளர் சங்க திருகோணமலை தலைவர இதே சம்பந்தன் தான் கட்சி மாறி துவேசங்கள் வளர்த்ததும் ஒருவர் அதன் சில வலைதளங்களில் உங்களை அனுமதித்ததும் அந்த பாசங்கள் தொடர்பு தானோ தெரியாது நிறைய தெரிந்த சரித்திரங்கள் பலபேர் வலைத்தளம் அறிவு அற்றதனால் மற்றவர்கள் மகாத்மா பட்டம் வாங்கிவிட்டார்கள்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.