Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, goshan_che said:

எனக்குத் தெரிந்த ஒரு இந்திய குமரி. பிளஸ்2 வுடன் இங்கே வந்தவா. இப்போ இரெண்டு மணத்தியாலத்துக்கு 500£ சம்பாதிக்கிறா.

🤦‍♂️

இதை ஆக்ஸ்பேட்.. கேம்பிரிச்சில் படிக்கும்.. படித்த குமரிகளும் செய்கிறார்கள். நீங்கள்.. இந்தியக் குமரிகளோடு நிற்கிறீர்கள். 

  • Replies 405
  • Views 37.1k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Maruthankerny said:

நீங்கள் செய்யும் ஒப்பந்த அடிப்படையை பொறுத்தது 
எத்தனையோ காசு கார கிழடுகள் இளம் பெண்களை இப்படி வைத்திருப்பதை 
நீங்கள் பார்த்ததே இல்லையா?

கிழடுகள், பணக்காரர்கள் வைத்திருப்பதை  குடும்ப வாழ்வுடன் ஒப்பிடவே முடியாது. காசில்லாத யாராவது கிழவனுடன் இளம்பெண்கள் இருந்திருக்கிறார்களா என்ன ??  அதன் நோக்கம் பணம் என்று ஒப்புக்கொள்கிறீர்கள் தானே. பணத்துக்காக சேர்ந்து வாழ்தல் விபச்சாரம். ஆனால் குடும்ப வாழ்வு அப்படியானது அல்ல. திருமணம் செய்யாதவர்களுக்கு அது புரியாது.

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

ஊர் பள்ளியில் படிப்பவர்களும் வேம்படியில் படிப்பவர்களும் ஒன்றல்ல. தேர்வில் நல்ல புள்ளி எடுத்தவர்  மட்டும் தான் வேம்படிக்குப் போகமுடியும். அதுபோலத்தான் யூனியும். ஆசைப்பட்டவுடன் மட்டும் நல்ல யூனிக்குப் போய்விட முடியாது எல்லோரும்.  என் மகளுக்கு 11ம் வகுப்பில் கேம்பிறிச்சுக்கு ஆப்பிளை செய்யும்படி ஆசிரியரே எம்மைக் கூப்பிட்டுக் கதைத்தார். ஏனெனில் நல்ல புள்ளி எடுப்பவர்களை சாதாரண பள்ளியில் இருந்தும் குறிப்பிட்ட தொகையில் எடுப்பார்கள். உங்கள் மக்களுக்கு அதிட்டம் இருந்து கிடைத்தால் நல்லது தானே என்று அதிகப்படியாக குறிப்புகள் எழுதி மகளுக்கு கொடுத்தார். ஆனால் அங்கு இடம் கிடைக்கவில்லை. பாடசாலைகளே தம் பள்ளி மாணவர்களுக்கு நல்ல யூனி கிடைத்தால் தமக்குப் பெருமை என்று எண்ணும் போது நாம் சொல்வதில் என்ன தவறு. சாதாரண யூனியில் சில கற்கைநெறி நல்லதாகக்கூட இருக்கலாம். அதற்காக பெயர் போன யூனிகளில் கற்பவர்களை மட்டம் தட்டுவது தவறு.  

கேம்பிரிச்,  ஒக்ஸ்பேட் போன்ற யூனியில் எடுக்கும் சம்பளத்தில் அதிகமாக்க கூட ஆச்சி எடுக்கலாம். ஆனால் ஏதாவது ஒரு பல்கலைக்கழகத்தில் கற்பிக்க முடியுமோ ????

வேம்படியில் படிக்க என்ன கொம்பா முளைச்சிருக்கனும். போட்டிப் பரீட்சைகளில் சித்தியடையாமல்.. செல்வாக்கைப் பயன்படுத்தி வேம்படியில் சேர்ந்தவர்களையும் எங்களுக்குத் தெரியும். அதேபோல்.. வேம்படியில் சேர்ந்து எல்லா பாடங்களிலும்.. கொடி விட்டவர்களையும் எங்களுக்குத் தெரியும். வேம்படின்னா.. என்ன பெரிய பிஸ்தாவா. சாதாரண ஒரு பள்ளிக்கூடம். அதைச் சுற்றி ஒரு உருப்பெருத்த விம்பத்தை கட்டியமைத்துவிட்டு.. நம்மவர்கள் வெட்டிப் பெருமை பேசித் திரிகிறார்கள்.

அதேபோல்.. தான்.. கேம்பிரிஷ்.. ஒக்ஸ்பேட் ஆக்களும். உண்மையில்.. கேம்பிரிஷ்.. ஒக்ஸ்பேட் வடிக்கட்டிற கட்டுக்கு.. அங்கு போவர்கள் எல்லாம் மேதைகள் ஆக வேண்டும். ஆனால்.. மோடர்கள் ஆவது தான் அதிகம். 

இதனால் தான் ஒரு வெள்ளையின மாணவி.. கேம்பிரிச் அனுமதியை பெற்றுவிட்டு.. பின்.. கேம்பிரிச்சுக்கு தனக்குப் படிப்பிக்க தகுதியில்லை என்று அதன் அனுமதியை நிராகரித்து விட்டிருந்தார். அந்தளவு தைரியமும்.. போலி விம்பத்தை உடைக்கும் துணிவும் நம்மவர்களிடம் இல்லை. காரணம்.. அந்தப் போலி விம்பத்துக்குள் போலிப் பெருமை தேட வேண்டுமே.

இதுதான் நம்மவருக்கும் உண்மையான இங்கிலாந்தினருக்கும் உள்ள வேறுபாடு. 

இந்த மனநிலைக்கு நம்மவர்களைக் கொண்டு வருவது மிகக் கடினம்.. என்பது எங்களுக்குத் தெரியும். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, nedukkalapoovan said:

நீங்கள் உங்கள் வாதத்தை விட்டுக்கொடுக்க மாட்டீர்கள் என்பது தெரிந்ததுதானே. வேம்படியில் படிதத்தவர்களுக்கு கொம்பு முளைக்காது தன்னம்பிக்கை அதிகம் வரும். அனுபவம் நிறைய வரும், நல்ல துணிவும் ஏற்படும் கிராமப் பள்ளியில் கற்கும் மாணவரை விட. இப்பவரை வேம்படியில் கற்றவர்கள் பல சாதனைகளைப் படைத்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

கேம்பிறிச் வெள்ளை இன மாணவிக்கு என்ன உளவியல் பிரச்சனையோ??? யார் கண்டார்.

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நீங்கள் உங்கள் வாதத்தை விட்டுக்கொடுக்க மாட்டீர்கள் என்பது தெரிந்ததுதானே. வேம்படியில் படிதத்தவர்களுக்கு கொம்பு முளைக்காது தன்னம்பிக்கை அதிகம் வரும். அனுபவம் நிறைய வரும், நல்ல துணிவும் ஏற்படும் கிராமப் பள்ளியில் கற்கும் மாணவரை விட. இப்பவரை வேம்படியில் கற்றவர்கள் பல சாதனைகளைப் படைத்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

கேம்பிறிச் வெள்ளை இன மாணவிக்கு என்ன உளவியல் பிரச்சனையோ??? யார் கண்டார்.

அப்படி என்ன பெரிய உலக சாதனையை வேம்படிப் பெண்கள் சாதித்து விட்டார்கள்..??! ஒரு உதாரணம் சொல்ல முடியுமா..?!

கிராமப்புற அல்லது பிற பிந்தங்கிய மாவட்ட பெண்கள் விளையாட்டில் இருந்து படிப்பு வரை தேசிய அளவி சாதிக்கும் அளவுக்கு வடிகட்டி .. செல்வாக்கு காசு வாங்கி ஆட்கள் சேர்க்கும் வேம்படி சாதித்தது எதனை..???! 

சரியான சமூக ஆய்வு ஒன்றைச் செய்துவிட்டு வந்து சொல்லுங்கள்.. வேம்படிப் பெண்களா.. கிராமப் பள்ளிக்கூடப் பெண்களா கூடிய ஆளுமை கொண்டு இயங்கிறார்கள் என்று.

கேம்பிரிச்சை அந்தப் பெண் மட்டுமல்ல.. இன்னும் பலர் நிராகரித்திருக்கிறார்கள். அந்தப் பெண் குறிப்பிட்டது.. கேம்பிரிச் தான் வழமையாக திறமையான மாணவர்களையும் நிராகரிக்கும். ஆனால்.. நான் அவர்களுக்கு இப்போ ஒரு பாடம் புகட்டி இருக்கிறேன்.. கேம்பிரிச்சை மாணவர்களும் நிராகரிக்க முடியும் என்று. அது கேம்பிரிச் தொடர்பான போலி பெருமைக்கு கொடுக்கப்பட்ட சம்மட்டி அடி. அதனை நிச்சயம் நம்மவர்களால் செய்ய முடியாது. ஏனெனில்.. அந்தப் போலிப் பெருமைக்குள் தமது போலிப் பெருமையை கட்டியமைக்க வேண்டுமே. 

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, nedukkalapoovan said:

இதுதான் நம்மவருக்கும் உண்மையான இங்கிலாந்தினருக்கும் உள்ள வேறுபாடு

இந்த மனநிலைக்கு நம்மவர்களைக் கொண்டு வருவது மிகக் கடினம்.. என்பது எங்களுக்குத் தெரியும். 

யூகேயில் பாடசாலை போய், அதன் வழியே யூனி போகாதவர்களால் தான் இப்படி எழுத முடியும்.

Eleven plus இல் பொதுவாக தனியார் fee paying schools ற்கோ, அல்லது அரச Grammar Schools ற்கோ போக முடியும்.

இப்படியான பள்ளிகள் மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் open days வைப்பார்கள்.

தமது பாடசாலையில் உள்ள விளையாட்டு, இதர வசதிகள் பற்றி ஒரு கண்காட்சி போல நடத்துவார்கள்.

ஆனால் படிப்பு சம்பந்தமாக கதைக்கும் போது, இந்த open days இல் - அதிபர் முதல் கொண்டு - ஒவ்வொரு துறை ஆசிரியரும் - மீள, மீள சொல்லும் ஒரே விசயம் - போன வருடம் எமது பாடசாலையில் இருந்து OxBridge இற்கு எத்தனை பேர் போனார்கள் என்பதுதான்.

சில பள்ளிகூடங்கள் தமது prospect இல் கூட இந்த தகவலை தருவார்கள்.

இதுவரைக்கும் எந்த ஓப்பன் டேயிலும், ஈஸ்ட் லண்டன் யூனிக்கு, அல்லது சவுதபேங் யூனிக்கு இத்தனை பேர் போனார்கள் என யாரும் விளம்பரப்ப் படுத்தி நான் காணவில்லை 🤪

வெள்ளைகாரர்கள் கல்வி நிலையங்களில் தராதரம் பார்ப்பது இல்லை என்பது, “வெள்ளையாய் இருப்பவன் பொய் சொல்ல மாட்டான்” என்பதை போல ரொம்பவே வெள்ளேந்தியான சிந்தனை😂

பாடசாலைகளிலும், யூனிகளிலும் தராதரம் பார்ப்பதிலும், பெயர் போன பாடசாலை, யூனியில் பிள்ளைகளை சேர்க்க வேண்டும் என்பதிலும் middle class, upper class வெள்ளைகள் எம்மை விட ஆர்வமானவர்கள்.

பொதுவாக “ஊத்தை வெள்ளை” என எம்மால் அழைகப்படும், சோசல் காசில் வாழும் வெள்ளைகள்தான், பிள்ளை எங்க போய் படிச்சு எக்கேடு கெட்டாலும் போகட்டும் என இருப்பது. 

கருத்தாளருக்கு அதிகம் இப்படியானவர்களைத்தான் தெரியும் போல இருக்கிறது, அதை வைத்து எல்லா வெள்ளைகளும் இப்படித்தான் என தான் நம்புவது மட்டும் அல்லாமல், ஏனையோருக்கும் எப்படி வெள்ளைகள் போல வாழ்வது என வகுப்பு எடுக்க முயல்கிறார்😂

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, goshan_che said:

எனக்குத் தெரிந்த ஒரு இந்திய குமரி. பிளஸ்2 வுடன் இங்கே வந்தவா. இப்போ இரெண்டு மணத்தியாலத்துக்கு 500£ சம்பாதிக்கிறா.

🤦‍♂️

அதெப்படி உங்களுக்குத் தெரியுமெண்டு யாரும் கேட்கக் கூடாது. அது கோசானுக்கு மட்டுமேயான பரகசியம். 🤪

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, nedukkalapoovan said:

அப்படி என்ன பெரிய உலக சாதனையை வேம்படிப் பெண்கள் சாதித்து விட்டார்கள்..??! ஒரு உதாரணம் சொல்ல முடியுமா..?!

கிராமப்புற அல்லது பிற பிந்தங்கிய மாவட்ட பெண்கள் விளையாட்டில் இருந்து படிப்பு வரை தேசிய அளவி சாதிக்கும் அளவுக்கு வடிகட்டி .. செல்வாக்கு காசு வாங்கி ஆட்கள் சேர்க்கும் வேம்படி சாதித்தது எதனை..???! 

சரியான சமூக ஆய்வு ஒன்றைச் செய்துவிட்டு வந்து சொல்லுங்கள்.. வேம்படிப் பெண்களா.. கிராமப் பள்ளிக்கூடப் பெண்களா கூடிய ஆளுமை கொண்டு இயங்கிறார்கள் என்று.

கேம்பிரிச்சை அந்தப் பெண் மட்டுமல்ல.. இன்னும் பலர் நிராகரித்திருக்கிறார்கள். அந்தப் பெண் குறிப்பிட்டது.. கேம்பிரிச் தான் வழமையாக திறமையான மாணவர்களையும் நிராகரிக்கும். ஆனால்.. நான் அவர்களுக்கு இப்போ ஒரு பாடம் புகட்டி இருக்கிறேன்.. கேம்பிரிச்சை மாணவர்களும் நிராகரிக்க முடியும் என்று. அது கேம்பிரிச் தொடர்பான போலி பெருமைக்கு கொடுக்கப்பட்ட சம்மட்டி அடி. அதனை நிச்சயம் நம்மவர்களால் செய்ய முடியாது. ஏனெனில்.. அந்தப் போலிப் பெருமைக்குள் தமது போலிப் பெருமையை கட்டியமைக்க வேண்டுமே. 

எனக்குத் தெரிந்த இன்னொரு பெண் - நல்ல விலைக்கு விற்ற ஒரு செண்ட் போத்தலை அதிக விலை கொடுத்து வாங்கி - கடைகார் முன்பே போட்டு உடைத்தா.

அநியாய விலைக்கு விற்றதுக்கு நல்ல செருப்படி கொடுத்தா.

இந்த தைரியம் எமது பெண்களுக்கு வராது கண்டியளே😂

# மண்டை பிழை கேசுகளை எல்லாம் உதரணமாக கருத முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, goshan_che said:

யூகேயில் பாடசாலை போய், அதன் வழியே யூனி போகாதவர்களால் தான் இப்படி எழுத முடியும்.

Eleven plus இல் பொதுவாக தனியார் fee paying schools ற்கோ, அல்லது அரச Grammar Schools ற்கோ போக முடியும்.

இப்படியான பள்ளிகள் மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் open days வைப்பார்கள்.

தமது பாடசாலையில் உள்ள விளையாட்டு, இதர வசதிகள் பற்றி ஒரு கண்காட்சி போல நடத்துவார்கள்.

ஆனால் படிப்பு சம்பந்தமாக கதைக்கும் போது, இந்த open days இல் - அதிபர் முதல் கொண்டு - ஒவ்வொரு துறை ஆசிரியரும் - மீள, மீள சொல்லும் ஒரே விசயம் - போன வருடம் எமது பாடசாலையில் இருந்து OxBridge இற்கு எத்தனை பேர் போனார்கள் என்பதுதான்.

சில பள்ளிகூடங்கள் தமது prospect இல் கூட இந்த தகவலை தருவார்கள்.

இதுவரைக்கும் எந்த ஓப்பன் டேயிலும், ஈஸ்ட் லண்டன் யூனிக்கு, அல்லது சவுதபேங் யூனிக்கு இத்தனை பேர் போனார்கள் என யாரும் விளம்பரப்ப் படுத்தி நான் காணவில்லை 🤪

வெள்ளைகாரர்கள் கல்வி நிலையங்களில் தராதரம் பார்ப்பது இல்லை என்பது, “வெள்ளையாய் இருப்பவன் பொய் சொல்ல மாட்டான்” என்பதை போல ரொம்பவே வெள்ளேந்தியான சிந்தனை😂

பாடசாலைகளிலும், யூனிகளிலும் தராதரம் பார்ப்பதிலும், பெயர் போன பாடசாலை, யூனியில் பிள்ளைகளை சேர்க்க வேண்டும் என்பதிலும் middle class, upper class வெள்ளைகள் எம்மை விட ஆர்வமானவர்கள்.

பொதுவாக “ஊத்தை வெள்ளை” என எம்மால் அழைகப்படும், சோசல் காசில் வாழும் வெள்ளைகள்தான், பிள்ளை எங்க போய் படிச்சு எக்கேடு கெட்டாலும் போகட்டும் என இருப்பது. 

கருத்தாளருக்கு அதிகம் இப்படியானவர்களைத்தான் தெரியும் போல இருக்கிறது, அதை வைத்து எல்லா வெள்ளைகளும் இப்படித்தான் என தான் நம்புவது மட்டும் அல்லாமல், ஏனையோருக்கும் எப்படி வெள்ளைகள் போல வாழ்வது என வகுப்பு எடுக்க முயல்கிறார்😂

நம்மவர்களைப் போல வெள்ளைகள் வெட்டிப் பெருமைக்காக கேம்பிரிச் போவதில்லை. அவர்கள் தமக்கு அங்கு படிப்பதற்கு அவசியமான பாடம் இருந்தால் மட்டுமே தான் கேம்பிரிச்சை தெரிவு செய்வார்கள்.

எத்தனையோ 3 ஏ * எடுத்த வெள்ளை மாணவர்கள்.. மாணவிகள்.. யுனிப் பக்கமே போகாமல்.. அப்பரன்ரசிப் செய்து முன்னேறிப் போய்விடுகிறார்கள். 

நம்மவர்கள்.. யுகே பள்ளியில் படித்து பல்கலைக்கழகம் போவதே பெருமை.. என்ற முழு முட்டாள் தன சிந்தனையில் இருக்கிறார்களே தவிர.. ஒவ்வொரு யுகே.. யுனியும் வெளிநாட்டு கல்வித்தகமைகளை  அங்கீகரிக்கும் வெளிப்படைத் தன்மையை பேணுவது கூட சிலர் அறியவில்லை. அந்தளவுக்கு வெட்டிப் பெருமை மாயையாகச் சூழ்ந்துள்ளது. அவ்வளவே. 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

என்ன செய்து சம்பாரிக்கிறா என்று எங்களுக்கும் சொன்னால் ........😀

சமூக சேவை

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, goshan_che said:

எனக்குத் தெரிந்த இன்னொரு பெண் - நல்ல விலைக்கு விற்ற ஒரு செண்ட் போத்தலை அதிக விலை கொடுத்து வாங்கி - கடைகார் முன்பே போட்டு உடைத்தா.

அநியாய விலைக்கு விற்றதுக்கு நல்ல செருப்படி கொடுத்தா.

இந்த தைரியம் எமது பெண்களுக்கு வராது கண்டியளே😂

# மண்டை பிழை கேசுகளை எல்லாம் உதரணமாக கருத முடியாது.

ஆமாம்... வெட்டிப் பெருமைக்கு கேடு செய்தால்.. அது மண்டைப் பிழையாகக் காட்டினால் தானே.. நாம் அந்த வெட்டிப் பெருமையை வைச்சு பிழைப்பை ஓட்டலாம். இது தான் எம்மவர்கள் கடைந்தெடுத்த முட்டாள் தனம். இதுதான் அவர்களை காட்டியும் கொடுக்கிறது. 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

என்ன செய்து சம்பாரிக்கிறா என்று எங்களுக்கும் சொன்னால் ........😀

கேள்வி பிழை. பதிலைச் சொல்லிப்போடுவன்.பிறகு கோவிக்கப்படாது. சரிதானே. 

(பி.கு.: உங்களுக்கு அந்த தொழிற் தகமை இல்லை என்பது என் தாழ்மையான கணிப்பு 😂)

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, nedukkalapoovan said:

நம்மவர்களைப் போல வெள்ளைகள் வெட்டிப் பெருமைக்காக கேம்பிரிச் போவதில்லை. அவர்கள் தமக்கு அங்கு படிப்பதற்கு அவசியமான பாடம் இருந்தால் மட்டுமே தான் கேம்பிரிச்சை தெரிவு செய்வார்கள்.

எத்தனையோ 3 ஏ " எடுத்த வெள்ளை மாணவர்கள்.. மாணவிகள்.. யுனிப் பக்கமே போகாமல்.. அப்பரன்ரசிப் செய்து முன்னேறிப் போய்விடுகிறார்கள். 

நம்மவர்கள்.. யுகே பள்ளியில் படித்து பல்கலைக்கழகம் போவதே பெருமை.. என்ற முழு முட்டாள் தன சிந்தனையில் இருக்கிறார்களே தவிர.. ஒவ்வொரு யுகே.. யுனியும் வெளிநாட்டு கல்வித்தகமைகளை  அங்கீகரிக்கும் வெளிப்படைத் தன்மையை பேணுவது கூட சிலர் அறியவில்லை. அந்தளவுக்கு வெட்டிப் பெருமை மாயையாகச் சூழ்ந்துள்ளது. அவ்வளவே. 

இது ஒரு வித தரவும் இல்லாமல் வெறுமனே கருத்தாளரின் ஓபீனியன் மட்டுமே.

எத்தனை சதவீத வெள்ளைகள் 3 A எடுத்து விட்டு, அபிரெண்டசிப் செய்தார்கள், எத்தனை சதவீத தமிழ் பிள்ளைகள் இதை செய்தார்கள்,

வெள்ளைகளில் எத்தனை பேர் கேம்ரிட்ஜ் போக வாய்ப்பு இருந்தும் போகாமல் வேறு யூனி போனார்கள் என்ற எந்த வித ஆய்வுத்தரவும் இலாமல், 

சீ..சீ அந்த கேம்பிறிச் பழம் புளிக்கிறது என்ற ஒரு தரமற்ற யூனி முன்னாள் மாணவனின் அழுக்காறு என்பதாகவே இதை கருத முடியும்.

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, nedukkalapoovan said:

இதை ஆக்ஸ்பேட்.. கேம்பிரிச்சில் படிக்கும்.. படித்த குமரிகளும் செய்கிறார்கள். நீங்கள்.. இந்தியக் குமரிகளோடு நிற்கிறீர்கள். 

அவர்கள் நிச்சயம் €500.00 க்கு போகாயினம். அவர்கள் தகமைக்கேற்ற வேதனம் வேண்டுமெல்லோ.😀

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, nedukkalapoovan said:

ஆமாம்... வெட்டிப் பெருமைக்கு கேடு செய்தால்.. அது மண்டைப் பிழையாகக் காட்டினால் தானே.. நாம் அந்த வெட்டிப் பெருமையை வைச்சு பிழைப்பை ஓட்டலாம். இது தான் எம்மவர்கள் கடைந்தெடுத்த முட்டாள் தனம். இதுதான் அவர்களை காட்டியும் கொடுக்கிறது. 

இதெல்லாம் attention seeking மனநோய். என்னை பார்த்ததாயா நான் கேம்பிரிஜ் கிடைத்தும் போகவில்லை என வெத்து கெத்து காட்டுவது.

இதற்கு கேம்பிரிஜ் போனேன் என காலரை தூக்கிவிடும் கோமாளிகள் எவ்வளவோ மேல்.

4 minutes ago, Kapithan said:

கேள்வி பிழை. பதிலைச் சொல்லிப்போடுவன்.பிறகு கோவிக்கப்படாது. சரிதானே. 

(பி.கு.: உங்களுக்கு அந்த தொழிற் தகமை இல்லை என்பது என் தாழ்மையான கணிப்பு 😂)

இந்த பி.கு complement ஆ? அல்லது insult ஆ 😂

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

யாரும் எதையும் கூறலாம். ஆனால் உலக அரசியலையும் பொருளாதாரக் கொள்கைகளையும்  தீர்மானம் செய்பவர்கள் உலகின் முன்ணணிப் பல்கலைக்  கழகங்களில் கல்வி கற்றவர்களே. 

இதை ஏதன் அடிப்படையில் சொல்கிறீர்கள்?
இப்போது உலகில் அரசியலில் அல்லது பொருளாதார கொள்கைகளை நிர்வகிக்கும் திறனில் 
இருக்கும் யார்? அல்லது எத்தனை வீதம் இந்த முன்னணி பல்கலையில் இருந்து வந்திருக்கிறார்கள்?

முன்னணி பல்கலையில் இருந்து நீங்கள் வெளியேறும்போது 
கொப்பிரேட் கொம்பனிகள் உங்களை உயர்பதவிகளுக்கு உடனேயே எடுத்துக்கொள்வார்கள் 
அதற்கு பல காரணம் உண்டு. ஒன்று உண்மையிலேயே நீங்கள் கல்வியில் திறமையானவராகத்தான் இருப்பீர்கள். இரண்டாவது உங்களுக்கான சம்பளம் மட்டுப்படுத்தப்பட்டு இருக்கும். இரண்டு நீங்கள் இப்போதைய டெக்னாலஜியை உலக பொருளாதர நிலைமைகளை கற்று வந்து இருக்கிறீர்கள் ... ஆகவே நீங்கள் தற்போதைய நவீன உலகோடு முன்னியவர்களை விட இலகுவாக பயணிப்பீர்கள் .. கொம்பனியையும் நவீன மயமாக்குவீர்கள். இன்னொரு மறைமுக காரணம் நீங்கள் வேறு ஒரு கொம்பனிக்கு சென்றால்? அது எதிர்காலத்தில் சவாலாகவும் அமையலாம். இதன் அடிப்படையில்தான் அவர்கள் கொம்பனிகளின் உயர் பதவிகளை உடனேயே பெற்றுவிடுவார்கள் ... இங்கு அமெரிக்காவில் நேர்முக தேர்வை உங்கள் வீட்டுக்கு அவர்களே வந்து செய்வார்கள்  நீங்கள் அவர்களை தேடி போகத்தேவை இல்லை. 

ஆனால் அரசியல்  பொருளாதார நிர்ணயம்  புதிய தொழிநுட்பம் போன்றவற்றை புத்தக படிப்பு மட்டும்  
தீர்மானிப்பது இல்லை அது உங்கள் சொந்த அறிவு தேடல் விடா முயற்சி போன்றவையும்  அரசியலை எடுத்தால்  சிபாரிசு முறையும்தான் தீர்மானிக்கின்றன. 

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, goshan_che said:

இது ஒரு வித தரவும் இல்லாமல் வெறுமனே கருத்தாளரின் ஓபீனியன் மட்டுமே.

எத்தனை சதவீத வெள்ளைகள் 3 A எடுத்து விட்டு, அபிரெண்டசிப் செய்தார்கள், எத்தனை சதவீத தமிழ் பிள்ளைகள் இதை செய்தார்கள்,

வெள்ளைகளில் எத்தனை பேர் கேம்ரிட்ஜ் போக வாய்ப்பு இருந்தும் போகாமல் வேறு யூனி போனார்கள் என்ற எந்த வித ஆய்வுத்தரவும் இலாமல், 

சீ..சீ அந்த கேம்பிறிச் பழம் புளிக்கிறது என்ற ஒரு தரமற்ற யூனி முன்னாள் மாணவனின் அழுக்காறு என்பதாகவே இதை கருத முடியும்.

ஆமாம்.. நீங்கள் சொல்வதெல்லாம்.. ஆய்வின் பிரகாரமாகும். நாங்கள் உங்கள் வெட்டிப் பெருமையை நொருக்கினால்.. அதற்கு ஆய்வுத்தகவல் அவசியம்.

ஒவ்வொரு தடவையும்.. யுகே யில் ஏல் பெறுபேறு வரும் போது.. பள்ளிகளுக்குச் சென்று விசாரிக்கவும்.

கடைசி வசனம்.. மீண்டும் தங்கள் கற்பனையினது. 

Image result for apprenticeship students vs uni students

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, nedukkalapoovan said:

வேம்படியில் படிக்க என்ன கொம்பா முளைச்சிருக்கனும். போட்டிப் பரீட்சைகளில் சித்தியடையாமல்.. செல்வாக்கைப் பயன்படுத்தி வேம்படியில் சேர்ந்தவர்களையும் எங்களுக்குத் தெரியும். அதேபோல்.. வேம்படியில் சேர்ந்து எல்லா பாடங்களிலும்.. கொடி விட்டவர்களையும் எங்களுக்குத் தெரியும். வேம்படின்னா.. என்ன பெரிய பிஸ்தாவா. சாதாரண ஒரு பள்ளிக்கூடம். அதைச் சுற்றி ஒரு உருப்பெருத்த விம்பத்தை கட்டியமைத்துவிட்டு.. நம்மவர்கள் வெட்டிப் பெருமை பேசித் திரிகிறார்கள்.

அதேபோல்.. தான்.. கேம்பிரிஷ்.. ஒக்ஸ்பேட் ஆக்களும். உண்மையில்.. கேம்பிரிஷ்.. ஒக்ஸ்பேட் வடிக்கட்டிற கட்டுக்கு.. அங்கு போவர்கள் எல்லாம் மேதைகள் ஆக வேண்டும். ஆனால்.. மோடர்கள் ஆவது தான் அதிகம்

இதனால் தான் ஒரு வெள்ளையின மாணவி.. கேம்பிரிச் அனுமதியை பெற்றுவிட்டு.. பின்.. கேம்பிரிச்சுக்கு தனக்குப் படிப்பிக்க தகுதியில்லை என்று அதன் அனுமதியை நிராகரித்து விட்டிருந்தார். அந்தளவு தைரியமும்.. போலி விம்பத்தை உடைக்கும் துணிவும் நம்மவர்களிடம் இல்லை. காரணம்.. அந்தப் போலி விம்பத்துக்குள் போலிப் பெருமை தேட வேண்டுமே.

இதுதான் நம்மவருக்கும் உண்மையான இங்கிலாந்தினருக்கும் உள்ள வேறுபாடு. 

இந்த மனநிலைக்கு நம்மவர்களைக் கொண்டு வருவது மிகக் கடினம்.. என்பது எங்களுக்குத் தெரியும். 

நெடுக்ஸ்,

நீங்கள் விருமுவதைச் சொல்வதற்கு உங்களுக்கு முழுச் சுதந்திரமும் உள்ளது. ஆனால் அதனால் நீங்கள் கூறுவது முழுமையாக உண்மையாக இருக்க வேண்டிய அவசியமில்லை. 

நடைமுறையில் என்ன நடக்கிறது என்று உங்கழுக்கு மிக நன்றாகவே தெரியும். 

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Kapithan said:

நெடுக்ஸ்,

நீங்கள் விருமுவதைச் சொல்வதற்கு உங்களுக்கு முழுச் சுதந்திரமும் உள்ளது. ஆனால் அதனால் நீங்கள் கூறுவது முழுமையாக உண்மையாக இருக்க வேண்டிய அவசியமில்லை. 

நடைமுறையில் என்ன நடக்கிறது என்று உங்கழுக்கு மிக நன்றாகவே தெரியும். 

நடைமுறையில் நடப்பதை அவதானித்துத் தான் சொல்கிறோம். வடிக்கட்டி ஆண்டுக்கு ஆயிரக்கணக்கில் மாணவர்களை உள்வாங்கும்.. கேம்பிரிச்.. ஒக்ஸ்பேட்.. இங்கிலாந்தில் சாதித்ததை விட.. இவர்களை போல் வெட்டிப் பெருமை பேசாது.. சாதிக்கும் பல்கலைக்கழகங்கள் அதிகம். 

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Maruthankerny said:

இதை ஏதன் அடிப்படையில் சொல்கிறீர்கள்?
இப்போது உலகில் அரசியலில் அல்லது பொருளாதார கொள்கைகளை நிர்வகிக்கும் திறனில் 
இருக்கும் யார்? அல்லது எத்தனை வீதம் இந்த முன்னணி பல்கலையில் இருந்து வந்திருக்கிறார்கள்?

முன்னணி பல்கலையில் இருந்து நீங்கள் வெளியேறும்போது 
கொப்பிரேட் கொம்பனிகள் உங்களை உயர்பதவிகளுக்கு உடனேயே எடுத்துக்கொள்வார்கள் 
அதற்கு பல காரணம் உண்டு. ஒன்று உண்மையிலேயே நீங்கள் கல்வியில் திறமையானவராகத்தான் இருப்பீர்கள். இரண்டாவது உங்களுக்கான சம்பளம் மட்டுப்படுத்தப்பட்டு இருக்கும். இரண்டு நீங்கள் இப்போதைய டெக்னாலஜியை உலக பொருளாதர நிலைமைகளை கற்று வந்து இருக்கிறீர்கள் ... ஆகவே நீங்கள் தற்போதைய நவீன உலகோடு முன்னியவர்களை விட இலகுவாக பயணிப்பீர்கள் .. கொம்பனியையும் நவீன மயமாக்குவீர்கள். இன்னொரு மறைமுக காரணம் நீங்கள் வேறு ஒரு கொம்பனிக்கு சென்றால்? அது எதிர்காலத்தில் சவாலாகவும் அமையலாம். இதன் அடிப்படையில்தான் அவர்கள் கொம்பனிகளின் உயர் பதவிகளை உடனேயே பெற்றுவிடுவார்கள் ... இங்கு அமெரிக்காவில் நேர்முக தேர்வை உங்கள் வீட்டுக்கு அவர்களே வந்து செய்வார்கள்  நீங்கள் அவர்களை தேடி போகத்தேவை இல்லை. 

ஆனால் அரசியல்  பொருளாதார நிர்ணயம்  புதிய தொழிநுட்பம் போன்றவற்றை புத்தக படிப்பு மட்டும்  
தீர்மானிப்பது இல்லை அது உங்கள் சொந்த அறிவு தேடல் விடா முயற்சி போன்றவையும்  அரசியலை எடுத்தால்  சிபாரிசு முறையும்தான் தீர்மானிக்கின்றன. 

எனது கூற்று பிழை என்கிறீர்களா ?

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Maruthankerny said:

மருது,

நீங்கள் சொல்வதும் உண்மையே. அதாவது நல்ல மாணவர்களை தேர்ந்து எடுத்து தம் தரத்தை இந்த யூனிகள் மெயிட்டேன் பண்ணுகிறன. என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. 

ஆனால் அதற்காக இந்த யூனிகளுக்கு இருக்கும் உலகளாவிய தர நிர்ணயத்தை ஒன்றும் இல்லை என்றோ, இந்த யூனியில் படிக்க ஆசைபடுவது ஊர் மனோநிலை என்றோ கூற முடியாது.

உலகின் பெரும்பாலான தலைவர்கள்/நிர்வாகிகள் என்று சொல்ல முடியாவிட்டாலும், கணிசமான மாற்றத்தை ஏற்படுத்திய ஆளுமைகள் இப்படி பட்ட யூனிகளில் இருந்து வந்தவர்களே. காந்தி, நேரு, இமரான்கான், சுகர்பேர்க், இப்படி பலர். 

குறிப்பாக யூகேயின் தற்போதைய அமைச்சரவையை எடுத்துப்பாருங்கள்,

அல்லது யூகேயின் நீதித்துறையில் உயர், மேல், உச்ச நீதிமன்ற நீதிபதிகளை எடுத்து பாருங்கள்

சிவில் சேர்விசில் ஒவ்வொரு திணைகளத்தின் அதி உயர் அதிகாரிகளையும் எடுத்துப்பாருங்கள்.

Disproportionate ஆக கேம்பிரிஜ், ஆக்ஸ்போர்ட் பட்டதாரிகள் இருப்பர். 

  • கருத்துக்கள உறவுகள்
Just now, nedukkalapoovan said:

நடைமுறையில் நடப்பதை அவதானித்துத் தான் சொல்கிறோம். வடிக்கட்டி ஆண்டுக்கு ஆயிரக்கணக்கில் மாணவர்களை உள்வாங்கும்.. கேம்பிரிச்.. ஒக்ஸ்பேட்.. இங்கிலாந்தில் சாதித்ததை விட.. இவர்களை போல் வெட்டிப் பெருமை பேசாது.. சாதிக்கும் பல்கலைக்கழகங்கள் அதிகம். 

சாதித்திருக்கலாம். ஆனால் அவர்களையெல்லாம் முன்ணணிப் பல்கலைக் கழகங்களில் கல்விகற்றவர்களின் தீர்மானங்களே கட்டுப்படுத்துகின்றன. வழிநடாத்துகின்றன. ஒழுங்குபடுத்துகின்றன.

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நீங்கள் உங்கள் வாதத்தை விட்டுக்கொடுக்க மாட்டீர்கள் என்பது தெரிந்ததுதானே. வேம்படியில் படிதத்தவர்களுக்கு கொம்பு முளைக்காது தன்னம்பிக்கை அதிகம் வரும். அனுபவம் நிறைய வரும், நல்ல துணிவும் ஏற்படும் கிராமப் பள்ளியில் கற்கும் மாணவரை விட. இப்பவரை வேம்படியில் கற்றவர்கள் பல சாதனைகளைப் படைத்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

கேம்பிறிச் வெள்ளை இன மாணவிக்கு என்ன உளவியல் பிரச்சனையோ??? யார் கண்டார்.

என்ன சாதனைகளை செய்கிறார்கள் என்று கூற முடியுமா?
அதுக்காக அவர்கள் திறமைசாலிகள் இல்லை என்று நான் கூறவறவில்லை 
சாதாரண ஒரு கலவன் பாடசாலையில் இருந்து ஒரு மாணவி எட்டு பாடமும் சித்தி ஆகி 
எ/எல் படிக்க போவது என்பது வேம்படியில் படித்து எடுப்பதை விட பல மடங்கு சாதனையாகும் 
பருத்தித்துறை மெதடிஸ் பெண்கள் எனக்கு தெரிய சிறந்த மருத்துவர்களாக அவுஸ்திரேலியா அமெரிக்கா இலங்கையிலும் இருக்கிறார்கள். வேம்படியில் படித்தவர்களும் இருக்கலாம் ...... நாங்கள் வடமராட்சியை சார்ந்து இருப்பதால் எமது வலையமைப்பு அதுக்குள்தான் இருக்கும். தற்கால ஓ/ல் எ/ல் தேர்வு முடிவுகளை பார்க்கும்போது நீங்கள் கூறுவதுபோல இல்லையே ஒப்பீட்டளவில் 

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, nedukkalapoovan said:

ஆமாம்.. நீங்கள் சொல்வதெல்லாம்.. ஆய்வின் பிரகாரமாகும். நாங்கள் உங்கள் வெட்டிப் பெருமையை நொருக்கினால்.. அதற்கு ஆய்வுத்தகவல் அவசியம்.

ஒவ்வொரு தடவையும்.. யுகே யில் ஏல் பெறுபேறு வரும் போது.. பள்ளிகளுக்குச் சென்று விசாரிக்கவும்.

கடைசி வசனம்.. மீண்டும் தங்கள் கற்பனையினது. 

Image result for apprenticeship students vs uni students

சும்மா ஜி ஜி பொன்னம்பலம் மாரி  department for education இல் எடுத்த ஒரு கிராப்பை போட்டு குழையடிக்க வேண்டாம்.

இந்த கிராபில் எங்கே 3அ எடுத்து விட்டு, யூனி போகாமல் அபிரசெண்டிப் போனார்கள் என தரப்பட்டுள்ளது?

இந்த கிராப்பில் எங்கே வெள்ளை, இலங்கை தமிழ் பிள்ளைகள் இடையான வேறுபாடு காட்டப்பட்டுளது?

level 4 என்றால் GCSE / OL

level 7 - மாஸ்டேர்ஸ்

இந்த கிராப் ஒவ்வொரு வருடத்திலும் லெவெல் 4-7 நிலையில் எத்தனை பேர் அபிரசெப்டிவ்க்கு போனார்கள் என்பதையே காட்டுகிறது.

மேலும் ஒருவர் லெவெல் 7 இல் இருந்து அபிர்செண்டிப் செய்தார் என்றால் அதன் அர்த்தம் மாஸ்டர் படிப்பை கைவிட்டு அபிரசெண்டிப் போனார் என்பதல்ல.

அந்த படிப்போடு சேர்த்து, துறைசார் அபிரெசெண்டிப்பும் செய்தார் என்பதே.

இப்போ என்னோடு கூட கிழமையில் ரெண்டு நாளைக்கு 4 புருணல் யூனி பிள்ளைகள் அபிரசெடிப் அடிப்படையில் வேலை செய்கிறார்கள்.

3 A எடுத்தவர் பற்றியோ, வெள்ளை/வெள்ளை அல்லாதோர் பற்றியோ எந்த தரவும் இந்த கிராபில் இல்லை.

15 minutes ago, nedukkalapoovan said:

நடைமுறையில் நடப்பதை அவதானித்துத் தான் சொல்கிறோம். வடிக்கட்டி ஆண்டுக்கு ஆயிரக்கணக்கில் மாணவர்களை உள்வாங்கும்.. கேம்பிரிச்.. ஒக்ஸ்பேட்.. இங்கிலாந்தில் சாதித்ததை விட.. இவர்களை போல் வெட்டிப் பெருமை பேசாது.. சாதிக்கும் பல்கலைக்கழகங்கள் அதிகம். 

ஓமோம் உங்களுக்கு மட்டுமே தெரிந்த இந்த உண்மை, உலகெங்கும் யூனிகளை தரப்படுத்தும் பத்திரிகைகள், அமைபுகளுக்கு ஏனோ தெரியவில்லை.

அதனால் உலகின் முதல் 5 இல் ஓக்ஸ்போர்டையும் கேம்பிரிஜ்ஜையும் வச்சுக் கொண்டு, வேறு எந்த யூகே யூனியையும் முதல் 10 ற்குள் கூட வர விடாமல் பண்ணுகிறர்கள்🤣🤦‍♂️

இதையே தொழிலாக செய்யும் அத்தனை அமைப்புகளிம் collective judgement ஐ விட உங்கள் அவதானம் மேலானது என, சம்பந்தமே இல்லாத கிராபை போட்டு நீங்கள் வகுப்பு எடுக்க, எல்லாரும் அதை கேட்டுக்கொண்டிருக்க போவதில்லை😂

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்

2016 இல் நிகழ்ந்த ஆய்வின்படி

யூகேயின் நீதிபதிகளில் 74% பேர் ஆக்ஸ்போர்ட் அல்லது கேம்பிர்ஜ் பட்டதாரிகள்.

https://www.legalcheek.com/2018/09/three-quarters-of-new-deputy-high-court-judges-attended-oxbridge/ 

இன்னுமொரு கட்டுரை உங்கள் மேலான “அவதானத்துக்கு”

https://www.bbc.co.uk/news/education-48745333

இதை படிச்சுப் பார்த்தா தலை சுத்தும். இது அரசே செய்த ஆய்வு. பக்கம் 9 ஐ பார்க்கவும்.

https://assets.publishing.service.gov.uk/government/uploads/system/uploads/attachment_data/file/811045/Elitist_Britain_2019.pdf

Edited by goshan_che

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.