"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 72
[This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.]
பகுதி: 72 / பின் இணைப்பு – மகாவம்சத்தின் சுருக்கம் / அத்தியாயம் 01 முதல் அத்தியாயம் 37 வரை
எட்டாம் அத்தியாயம், பண்டு வாச தேவன் பட்டாபிஷேகத்தில், சிங்கபுரத்தில் [Sihapura or sinhapura] சிங்கபாகுவின் [Sihabahu or Sinhabahu] மரணத்துக்குப் பிறகு, அவனுடைய மகன் சுமித்த அரசன் ஆனன. மதுர நாட்டரசனுடைய மகளை அவன் மணந்து கொண்டான்.[Sumitta was king; he had three sons by the daughter of the Madda king./ -Madda = Skt. Madra, Means Madura, the capital city of the Pandyans] அவர்களுக்கு மூன்று பிள்ளைகள் பிறந்தனர்.அவர்களில் இளையகுமாரன் பண்டு வாச தேவன் [Pandu Vasudeva]. மேலும் விஜயனும் அவனது தோழர்களும் மணந்த பெண்கள், பாண்டிய தமிழ் மகளிர்கள். மகாவம்சத்தின் கெய்கரின் மொழி பெயர்ப்பிலும், முதலியார் விஜய சிங்கவின் மீளாய்விலும் ‘தெற்கேயுள்ள மதுரை’ என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. பாளி மொழியில் பாண்டியர் என்ற பெயர் பண்டு என வழங்கப்பட்டது. அதனால் தானோ என்னவோ பண்டு வாசதேவ, பண்டுகாபய முதலிய அரசபெயர்கள் காணப்படு கின்றன.
விஜயன் 38 ஆண்டுகள் ஆட்சி செய்தார். மேலும் தனது, கடைசி காலத்தில், தனது சகோதரன் சுமித்தாவுக்கு [Sumitta] செய்தி அனுப்பினார், அவரை ஆட்சியை பொறுப்பேற்க வருமாறு அழைப்பு விடுத்தார்.விஜயனிடமிருந்து வந்த தூதர்கள் கடிதத்தை அரசனிடம் கொடுத்தனர். அந்தக் கடிதத்தை படிக்கக் கேட்டதும் அரசன் தன் மூன்று பிள்ளைகளையும் கூப்பிட்டு இவ்வாறு சொன்னான்: 'அன்புடையவர்களே! எனக்கோ வயதாகி விட்டது. எ ன து சகோதரனுக்கு உரியதான அழகிய இலங்கைத் தீவுக்கு உங்களில் ஒருவர் போக வேண்டும். அங்கே அவனுடைய மறைவுக்குப் பின் ஆட்சிப் பொறுப்பையும் ஏற்க வேண்டும்' என்றான். ஆனால் அந்த செய்தியை அனுப்பிய உடனேயே விஜயன் இறந்து விட்டார். மன்னன் சுமித்தாவிற்குப் பதிலாக, அவரது இளைய மகன் பண்டுவாசுதேவன், மன்னரின் அமைச்சர்களின் முப்பத்திரண்டு மகன்களுடன் பிச்சைக்காரத் துறவிகள் வேடத்தில் இலங்கைக்கு வந்தார். தீபாவம்சம் மன்னர் பண்டுவாசுதேவனை (கிமு 504-474) பண்டுவாச / Pandu Vasa என்று அழைக்கிறது. இது பாளி அல்லது பிராகிருத மொழியில் பாண்டிய நாட்டைச் சேர்ந்தவர் என்று பொருள்படும். ஒருவேளை பாண்டிய அரசைச் சேர்ந்த அவரது தாயாரால் இருக்கலாம்?இருப்பினும், பண்டுவாச, விஜயனுடன் எவ்வாறு தொடர்புடையவர் என்பது தீபவம்சத்தில் கொடுக்கப்படவில்லை என்பதை நினைவில் கொள்க. மகாவம்சத்தில் மட்டுமே அவர் விஜயனின் சகோதரரான சுமித்தாவின் இளைய மகன் என்று கூறுகிறது? .
மன்னரின் அழைப்பின் பேரில் வந்த அவர்கள், ஏன் மாறுவேடத்தில் வர வேண்டும் என்று ஒருவர் யோசிக்கலாம்? ஆனால், எனோ, அப்படித்தான் வந்தார்கள். அதேநேரத்தில், மற்றொரு மன்னன் சக்க இளவரசர் பாண்டுவின் இளைய மகள் கச்சனா [Kaccana] அல்லது பத்தகச்சனா [Bhaddakaccana] என்ற இளவரசி, முப்பத்திரண்டு இளம் கன்னிப் பெண்களுடன் ஒரு கப்பலில் கடலில் மிதக்க விட்டிருந்தனர். முப்பத்திரண்டு மகன்களும் முப்பத்திரண்டு மகள்களும் ஒரே காலத்தில் நிகழ்வது, என்ன ஒரு தற்செயல் நிகழ்வு [What a coincidence]! அவர்களும் விஜயனைப் போல இலங்கையை அடைந்தனர்! பண்டுவாசுதேவ பத்தகச்சனை மணந்து இலங்கையின் அரசரானார். அதேபோல 32 மந்திரி மார்களின் மகன்களும், 32 பத்தகச்சனாவின் தோழிகளை மணந்தனர். சித்தார்த்தாவின் (கௌதம புத்தரின்) தந்தை சுத்தோதனனுக்கு (Suddhodana) நான்கு சகோதரர்கள் இருந்தனர். அவர்களில், அமிதோதனா [Amitodana] இளையவர் ஆவார். இவரின் மகன் தான் சக்க பாண்டு [Sakka Pandu]. எனவே புத்தரின் தம்பியின் பேத்தி தான் பத்தகச்சனா ஆகும். ஆகவே வலிந்து கட்டிக்கொண்டு புத்தருடனான உயிரியல் தொடர்பு இந்த அத்தியாயத்தில் ஏற்படுத்தப் பட்டுள்ளது. ஆனால், புத்தர் பிறந்த பூமியில், இதில் எதுவுமே அவர்களின் வரலாற்று நிகழ்வில் பதியவில்லை.
மகாநாம தேரர் தனது மகாவம்சத்தின் மூலம் இலங்கையை 'தம்ம தீபமாக' [‘Dammadeepa’]’ சித்தரித்தார்; அதாவது, புத்தர் தர்மத்தைப் பாதுகாக்கவும் பிரச்சாரம் செய்யவும், தேர்ந்தெடுத்த நிலம் இது என்கிறார். அத்துடன் அவர், மகாநாம தேரர், (புத்தர் அல்ல), பௌத்தம் ஐயாயிரம் ஆண்டுகளாக மேலோங்கும் என்றும், சிங்களவர்கள் மட்டுமே அதைப் பாதுகாக்க வேண்டும் என்றும் கூறினார்.
தென்னிந்தியத் தமிழர்கள் மற்றும் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் வாழ்ந்த தமிழர்கள் உட்பட இந்தியாவில் பௌத்தம் அதன் செல்வாக்கை இழக்கத் தொடங்கிய ஒரு நேரத்தில், மகாவிஹார துறவிகள், குறிப்பாக மகாநாம தேரர் பீதியடைந்திருக்கலாம், எனவே பௌத்தத்தைப் பாதுகாக்க, இலங்கையை ‘பௌத்த நாடாக’ மாற்ற முடிவு செய்திருக்கலாம். இவ்வாறு, சிங்கள-பௌத்த என்ற இந்த ஒரு ‘உச்ச’ இனத்தை உருவாக்க, பல்வேறு பழங்குடியினர் மற்றும் இனக்குழுக்களைச் சேர்ந்தவர்களை ஒன்றிணைத்து, சிங்கள இனத்தை அப்பொழுது தான் உருவாக்கினார்; எனவே, இந்த புது மொழியில் தேர்ச்சி பெறாத சராசரி பௌத்த பாமர மக்கள், திரிபிடகத்திற்கும் மகாவம்சத்திற்கும் இடையிலான வேறுபாட்டைப் புரிந்துகொண்டிருக்க மாட்டார்கள். திரிபிடகம் என்பது மூன்று முக்கிய வகை நூல்களைக் கொண்டுள்ளது, அவை கூட்டாக பௌத்த நியதியை உருவாக்குகின்றன: சூத்திர பிடகம், வினய பிடகம் மற்றும் அபிதம்ம பிடகம் ஆகும். எனவே பௌத்த துறவிகள் மகாவம்சத்தைப் பிரசங்கித்தபோது, அந்தத் துறவிகள் கூறிய அனைத்தையும் புத்தரின் உண்மையான வார்த்தைகள் என்று பாமர மக்கள் ஏற்றுக்கொண்டனர். அன்று முதல் இந்நாட்டின் பௌத்த மதகுருமார்கள், பௌத்த தத்துவத்தை சிங்களவர்களின் ‘இன’மதமாக மாற்றி, மகாவம்சத்தின்படி அதனைப் பிரச்சாரம் செய்தனர். இவ்வாறாக, கடந்த 1400 முதல் 1500 வருடங்களாக, இந்த நாட்டில் பௌத்தர்கள், நமது பௌத்த மதகுருமார்களாலும், அவர்களின் 'பைபிள்' என்ற மகாவம்சத்தாலும் தவறாக வழிநடத்தப்பட்டு, வழிகாட்டப் பட்டு, பொய் சொல்லப்பட்டுள்ளனர்!
Part: 72 / Appendix – Summary of the Mahavamsa / Chapter 01 to Chapter 37
Chapter 8: This is about consecrating of Panduvasudeva. Vijaya ruled for 38 years, and sent a message to his brother Sumitta inviting him to come and take over the reign. Vijaya died soon after sending the message. Instead of Sumitta, his youngest son Panduvasudeva came to Lanka with thirty two sons of the ministers of the king in disguise of mendicant monks. One may wonder why they should come in disguise when they were on the invitation of the king! Coincidentally, Bahaddakaccana, the youngest daughter of another king Sakka Pandu was set to drift in sea on a ship along with thirty-two young maidens. What a coincidence to have thirty-two sons and thirty-two daughters! They too reached Ceylon, like Vijaya: what a coincidence! Panduvasudeva married Bahaddakaccana and became the ruler of Lanka. The Sakka Pandu was the son of Amitdodana who was the youngest brother of Suddhodana, the father of Gautama Buddha. Biological connection with Buddha is invented in this chapter.
நன்றி
Thanks
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
[Kandiah Thillaivinayagalingam,
Athiady, Jaffna]
பகுதி / Part: 73 தொடரும் / Will follow
துளி/DROP: 1955 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 72
https://www.facebook.com/groups/978753388866632/posts/33000992909549264/?
By
kandiah Thillaivinayagalingam ·