Jump to content

கொரோனாவும் இலங்கையின் தற்போதைய நிலவரமும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் 600 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன – அரசாங்க அதிபர் மகேசன் தகவல்

November 16, 2020
jaffna-town.600.png

38 Views

யாழ். மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களுடன் நேரடியாகத் தொடர்புபட்ட, தொற்றுக்குள்ளானவர்களுடன் பயணித்த சுமார் 600 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன என அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்தார்.

யாழ்.மாவட்டத்தில் நேற்று முன்தினம் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் ஏற்கனவே தனிமைப்படுத்தலில் இருந்தவர். எனினும் அவருடன் நேரடியாகத் தொடர்பு கொண்ட வர்களைத் தொடர்ச்சியாகத் தனிமைப்படுத்தி பி.சி.ஆர்.பரிசோதனையை மேற்கொள்வதற்கான நடவடிக்கையை சுகாதாரப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

யாழில் தொற்று சந்தேகத்தில் தனிமைப்படுத்தப்படுபவர்கள் பி.சி.ஆர். பரிசோதனையின் பின்னர் தனிமைப்படுத்தலிலிருந்து சுகாதாரப் பிரிவினரால் படிப்படியாக விடுவிக்கப்படுகின்றனர். அத்துடன் ஏற்கனவே தொற்று அச்சத்தால் முடக்கல் நிலையிலிருந்த மூன்று கிராமங்கள் விடுவிக்கப்பட்டுள்ளன. மேலும் தொற்றுக்குள்ளானவர்களுடன் தொடர்புகளைப் பேணிய சுமார் 600 குடும்பங்கள் நேற்றைய புள்ளிவிவரத்தின்படி தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். ஏற்கனவே தனிமைப்படுத்தலில் இருந்தோரின் எண்ணிக்கையை விட சற்று குறைவாகவே இது காணப்படுகின்றது.

இந்துக்களின் கந்தசஷ்டி விரதம் ஆரம்பித்துள்ளதால் பூசகர் மற்றும் திருவிழா உபயகாரர் உட்பட ஐவர் மட்டுமே ஆலயத்துக்குள் செல்ல அனுமதிக்குமாறு ஏற்கனவே சுகாதாரப் பிரிவினரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் அதற்கேற்ப விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.

பொதுமக்கள் தொடர்ந்து சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி அநாவசியமற்ற பயணங்களைத் தவிர்த்து ஒன்றுகூடல்களையும் தவிர்ப்பதன் மூலமே யாழ்.மாவட்டத்தில் வைரஸ் பரவல் அதிகரிப்பதைக் கட்டுப்படுத்த முடியும்” என்றார்.

 

 

https://www.ilakku.org/யாழ்ப்பாணத்தில்-600-குடும்/

Link to comment
Share on other sites

  • Replies 1.1k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

கொழும்பு நகரை 3 வாரங்கள் முடக்க வேண்டும் – மாநகர மேயர்

rosy-senanayake.jpg?189db0&189db0

 

கொழும்பு நகரை மூன்று வாரங்கள் பயணக் கட்டுப்பாடுகளுடன் முடக்க வேண்டும் என்று கொழும்பு மாநகர மேயர் ரோஷி சேனநாயக்க கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும்,

“கொழும்பில் கொரோனாவை கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கை எடுக்கப்படா விட்டால் அது சவாலானதாக மாறும்.

நகரில் முதியோர்கள் அதிகமாக இருப்பதால் அவர்களை தொற்று நோயில் இருந்து பாதுகாக்க முடியுமா என்பது கேள்விக்குள்ளாகி வருகிறது.

தனிமைப்படுத்தலில் உள்ள மட்டக்குளியில் இருந்து நேற்றும் வேலைக்கு சென்றதாக தெரிவிக்கப்படுகிறது. எனவே நகரில் கொரோனாவை கட்டுப்படுத்த கடுமையான பயணக் கட்டுப்பாடுகள் தேவை.

எனவே கொழும்பு நகரை 14 அல்லது 21 நாட்களுக்கு வெளியேற, உள்வரத் தடை விதித்து முழுமையாக முடக்க வேண்டும்” – என மேயர் கோரியுள்ளார்.

https://newuthayan.com/கொழும்பு-நகரை-3-வாரங்கள்-ம/

Link to comment
Share on other sites

மேலும் 382 பேருக்கு கொரோனா

நாட்டில் மேலும் 382 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நேற்றைய தினம் மேலும் 382 பேர் கொரோனா தொற் றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் கொரோனா தொற்றாளர்களுடன் நெருங் கிய தொடர்பு கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன்படி, திவுலபிட்டிய – பேலியகொட கொத்தணியில் தொற்றாளர் எண்ணிக்கை 14 ஆயிரத்து 170 ஆக உயர்ந் துள்ளது.

Coronavirus.COVID19.3-1.jpg

அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 17 ஆயிரத்து 674 ஆக உயர்ந் துள்ளது.

நாட்டில் கொரோனா தொற்றால் மேலும் 562 பேர் நேற் றைய தினம் குணமடைந்தனர். அத்துடன் நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகிக் குணமடைந்தவர் களின் மொத்த எண்ணிக்கை 11 ஆயிரத்து 806 ஆக அதி கரித்துள்ளது.

தற்போது வைத்தியசாலைகளில் மற்றும் சிகிச்சை மையங்களில் 5 ஆயிரத்து 807 பேர் சிகிச்சை பெற்று வரு கின்றனர்.

இதேவேளை, கொரோனா சந்தேகத்தில் 464 பேர் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன் கொரோனா தொற்றால் இதுவரை 61 பேர் உயிரிழந்துள்ளமை குறிப் பிடத்தக்கது.

https://thinakkural.lk/article/89830

Link to comment
Share on other sites

கொரோனாவை விட மிக வேகமாகவும் அதிகமாகவும் மக்களை தாக்கும் சமூக ஊடக போலிச் செய்திகள்

suren-cartoon-01-1024x737.jpegகொரோனாவை விட மிக வேகமாகவும் அதிகமாகவும் சமூக ஊடக போலிச் செய்திகள் மக்களை தாக்குகிறது. இது ஆரோக்கியமற்றது.

கருத்தோவியம் ; ஆர்.சுரேந்திரன்

https://thinakkural.lk/article/89660

நேற்றைய தினம் கொழும்பு மாவட்டத்தில் 231 பேருக்கு கொரோனா

இலங்கையில் நேற்றைய தினம் பதிவான கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் பெரும் பாலானவர் கள் கொழும்பு மாவட்டத்திலிருந்து பதிவாகியுள்ளதாக கொவிட் 19 தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, நேற்றைய தினம் 387 பேர் கொவிட்-19 கொ ரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள் ளனர் இவர்களில் 231 பேர் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந் தவர்கள் என தெரியவந்துள்ளது.

இந்நிலையில் கம்பஹா மாவட்டத்தில் 42 பேர், களுத் துறை மாவட்டத்தில் 20 பேர் , குருணாகல் மாவட்டத்தில் 11 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

colombo.smog_.jpg

காலி மாட்டத்தில் 02 பேர் , இரத்தினபுரி , கேகாலை, மொன ராகல, யாழ்ப்பாணம் மற்றும் நுவரெலியா ஆகிய மாவ ட்டங்களிலும் தலா ஒரு தொற்றாளர்கள் அடை யாளம் காணப்பட்டுள்ளனர்.

போகம்பர சிறைச்சாலையில் 41 பேர், வெலிகட சிறைச் சாலையில் ஒருவர் , பொலிஸ் அதிகாரிகள் 08 பேர், பொ லிஸ் சிறப்புப் பணிக்குழுவினர் 05 பேர் ஆகியோர் இவ் வாறு கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

https://thinakkural.lk/article/89853

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 124ஆக அதிகரிப்பு

Nov 17, 20200

 

கிழக்கு மாகாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 124ஆக அதிகரித்துள்ளது என கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர், வைத்தியர் அழகையா லதாகரன் தெரிவித்தார்.இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 80ஆக அதிகரித்துள்ளதாக மேலும் தெரிவித்தார்.அத்துடன் கிழக்கு மாகாணத்தில் 9674பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இவர்களில் 5091பேர் பி.சி.ஆர்.பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் வைத்தியர் அழகையா லதாகரன் தெரிவித்துள்ளார்.(15

Link to comment
Share on other sites

கொவிட் -19 பாதிப்பில் இலங்கைக்கு 99ஆவது இடம்

கொவிட்-19 வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட சர்வதேச நாடுகளின் பட்டியலில் இலங்கை 99ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

SL-4-178x300.jpg

இதன்படி இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 17 ஆயிரத்து 674 ஆக உயர்வடைந்துள்ளது. இந்த நிலையிலேயே இலங்கை 99 ஆவது இடத்தில் பதிவாகியுள்ளது.

மேலும் 98 ஆவது இடத்தில் பதிவாகியுள்ள பின்லாந்தில் 19 ஆயிரத்து 419 பேருக்கு இதுவரையில் கொரோனா தொற்று பதிவாகியுள்ளது.

இதேநேரம், 17 ஆயிரத்து 310 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ள மடகாஸ்கர் 101 ஆவது இடத்தில் உள்ளது.

குறித்த பட்டியலில் முதல் நூறு நாடுகளின் வரிசையில் ஆகக்குறைந்த மரணங்கள் சிங்கப்பூரில் பதிவாகியுள்ளன. அங்கு இதுவரையில், 28 மரணங்கள் பதிவாகியுள்ளன. இதற்கு அடுத்ததாக இரண்டாவது இடத்திலுள்ள இலங்கையில் 61 இறப்புகள் பதிவாகியுள்ளன.

ஏனைய நாடுகளில் நூற்றுக்கும் அதிகமான மரணங்கள் பதிவாகியுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

https://thinakkural.lk/article/89988

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா : உலகளவில் முன்னேறிய இலங்கை?

 
1-98-696x435.jpg
 74 Views

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட சர்வதேச நாடுகளின் பட்டியலில் இலங்கை 99ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

உலகளவில் 54,558,120 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே நேரம் 1,320,148 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 17 ஆயிரத்து 674 ஆக உயர்வடைந்துள்ளது. 61 பேர் மரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இதையடுத்து உலகில் கொரோனா வைரஸ் தொற்று பரவுதலில் இலங்கை 99 ஆவது இடத்தில் பதிவாகியுள்ளது

மேலும் 98 ஆவது இடத்தில் பதிவாகியுள்ள பின்லாந்தில் 19 ஆயிரத்து 419 பேருக்கு இதுவரையில் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இதேநேரம், 17 ஆயிரத்து 310 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ள மடகஸ்கார் 101 ஆவது இடத்தில் உள்ளது.

குறித்த பட்டியலில் முதல் நூறு நாடுகளின் வரிசையில் ஆகக்குறைந்த மரணங்கள் சிங்கப்பூரில் பதிவாகியுள்ளன. அங்கு இதுவரையில், 28 மரணங்கள் பதிவாகியுள்ளன. இதற்கு அடுத்ததாக இரண்டாவது இடத்தில் உள்ள இலங்கையில் 61 இறப்புகள் பதிவாகியுள்ளன.

ஏனைய நாடுகளில் நூற்றுக்கும் அதிகமான மரணங்கள் பதிவாகியுள்ளது.

https://www.ilakku.org/sri-lanka-tops-list-of-corona-infected-countries/

Link to comment
Share on other sites

இன்று 401 பேருக்கு உறுதியானது தொற்று!

கம்பஹா – மினுவாங்கொடை ஆடை தொழிற்சாலை தொடர்பு மற்றும் அதன் தொடர்பால் உருவான துணைக் கொத்தணி அல்லது இரண்டாம் அலை காரணமாக இன்று (17) இதுவரை 401 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளானமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்படி மினுவாங்கொடை ஆடை தொழிற்சாலை தொடர்பு மற்றும் அதன் தொடர்பால் உருவான துணைக் கொத்தணி காரணமாக தொற்றுக்கு உள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 14,568 ஆக உயர்ந்துள்ளது.

இன்று வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பிய மூவருக்கும் தொற்று உறுதியானது.

இதனுடன் இலங்கையின் மொத்த கொரோனா தொற்று எண்ணிக்கை 18,075 ஆகும்.

இதேவேளை மொத்தமாக 12,210 பேர் குணமடைந்துள்ளதுடன், இப்போது 5,799 பேர் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

https://newuthayan.com/இன்று-401-பேருக்கு-உறுதியான/

Link to comment
Share on other sites

இலங்கையில் கெரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 18,402 ஆக உயர்வு

நாட்டில் மேலும் 327 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நேற்றைய தினம் திவுலபிட்டிய – பேலியகொட கொத் தணியில் 325 பேர் அடையாளம் காணப்பட்டனர்.

கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப் பட்ட நபர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்களே இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன்படி, திவுலபிட்டிய – பேலியகொட கொத்தணியில் தொற்றாளர் எண்ணிக்கை 14 ஆயிரத்து 893 ஆக உயர்ந் துள்ளது.

PCR-CORONA-COVID.jpg

வெளிநாட்டில் வருகை தந்த கடற்படையினர் இருவர் கொரோனா தொற்றாளராக அடையாளம் காணப் பட்டுள்ளனர்.

அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 18 ஆயிரத்து 402 ஆக உயர்ந் துள்ளது.

நாட்டில் கொரோனா தொற்றால் மேலும் 377 பேர் நேற் றைய தினம் குணமடைந்தனர். அத்துடன் நாட்டில் கொ ரோனா தொற்றுக்குள்ளாகிக் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 12 ஆயிரத்து 587 ஆக அதிகரித் துள்ளது.

தற்போது வைத்தியசாலைகளில் மற்றும் சிகிச்சை மை யங்களில் 5 ஆயிரத்து 746 பேர் சிகிச்சை பெற்று வருகின் றனர்.

இதேவேளை, கொரோனா சந்தேகத்தில் 489 பேர் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன் கொரோனா தொற்றால் இதுவரை 69 பேர் உயிரிழந்துள்ளமை குறிப் பிடத்தக்கது.

 

https://thinakkural.lk/article/90572

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கில் 127 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு

 
IMG_0245-696x464.jpg
 29 Views

கிழக்கு மாகாணத்தில் இதுவரையில் கொரோனா தொற்றுள்ளவர்கள் 127பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் டாக்டர் அழகையா லதாகரன் தெரிவித்தார்.

நேற்று மூன்று நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் பணிப்பாளர் தெரிவித்தார்.

இன்று மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைப்பணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில்,

“நேற்று அடையாளம் காணப்பட்டவர்களில் ஒருவர் அக்கரைப்பற்றில் அடையாளம் காணப்பட்டவர்.இவர் கொழும்பு-அக்கரைப்பற்று தனியார் பஸ் சாரதியாக கடமையாற்றுபவர்.குறித்த சாரதியுடன் நேரடியாக தொடர்புபட்டவர்களை தனிமைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அதேபோன்று மட்டக்களப்பு கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பேலியகொட மீன்சந்தையுடன் நேரடியாக தொடர்புபட்டவருக்கு தொற்று உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் ஏற்கெனவே சுயதனிமைப்படுத்தலில் உள்ளவர்.

அதேபோன்று ஆரையம்பதி சுகாதார பிரிவின் ஒல்லிக்குளம் பகுதியில் 37வயதுடைய பெண்னொருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். இவரும் கொழுப்புக்கு சென்றுவந்தவர். இவருடன் நேரடியாக தொடர்புகொண்டவர்களை தனிமைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

கிழக்கு மாகாணாத்தில் ஐந்து வைத்தியசாலைகளில் கொரோனா நோயாளர்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். பேலியகொட கொத்தனியின் பின்னர் இதுவரையில் 881பேர் எங்களால் பராமரிக்கப்பட்டுள்ளனர். ஐந்து வைத்தியசாலையில் இன்றைய நிலவரத்தில் 228நபர்கள் தற்போது சிகிச்சைபெற்றுவருகின்றனர்.

இதேபோன்று இன்னும் மேலும் நான்கு வைத்தியசாலைகள் தயார்படுத்தப் பட்டு வருகின்றன. குச்சவெளி வைத்தியசாலை, பெரியகல்லாறு வைத்தியசாலை, பாலமுனை வைத்தியசாலை, தமன வைத்தியசாலை என நான்கு வைத்தியசாலைகள் 450 நோயாளர்களை பராமரிக்ககூடியவாறு தயார் படுத்தப்படடு வருகின்றது.

எதிர்வரும் காலத்தில் அனைத்து வைத்தியசாலைகளிலும் 950 கொரோனா தொற்றாளர்களை தொற்று இருக்கலாம் என சந்தேகிப்பவர்களையும் பராமரிக்கின்ற வைத்தியசாலைகளாக செயற்படவுள்ளது.

நேற்று அடையாளம் காணப்பட்டவர்களில் இருவர் கிழக்கு மாகாணத்திற்கு வெளியே சென்று இங்கு தொற்றினை கொண்டுவந்துள்ளார்கள். யாராவது வெளி மாகாணத்தில் இருந்து எமது மாகாணத்திற்கு வரும்போது தாங்களாகவே தங்களை அடையாளப்படுத்துங்கள். அதன் பின்னர் பொதுச்சுகாதார பரிசோதகர்கள் உங்களை தனிமைப்படுத்துவதா இல்லையா என்பதை தீர்மானிப்பார்கள்.

நாங்கள் இந்த கொரோனா தொற்றினை கட்டுப்படுத்த வேண்டுமானால் கிழக்கு மாகாணத்தில் காத்திரமான முடிவுகளை கிழக்கு மாகாணத்தில் எடுக்கவேண்டியுள்ளது.

கிழக்கு மாகாணத்தின் அனைத்து போக்குவரத்து பாதைகளும் பாதுகாப்பு தரப்பினரின் உதவியுடன் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. மட்டக்களப்பு மாவட்டத்தில் கிராமங்கள் தோறும் பொதுச்சுகாதார பரிசோதகரின் வழிகாட்டலின் கீழ் ஐந்து நபர் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டு அந்த குழுக்கள் தொடர்ச்சியான கண்காணிப்பில் ஈடுபடுகின்றது.

எங்களால் வழங்கப்படும் அனைத்துவிதமான சுகாதார வழிமுறைகளையும் கண்டிப்பாக கடைப்பிடிக்கவேண்டிய நிலையுள்ளது. கொரோனா தொடர்பில் ஆரம்பத்தில் விழிப்புணர்வுடன் செயற்பட்டாலும் ஆனால் தற்போது மீண்டும் பழைய நிலையில் செயற்படுகின்றனர்.

ஆனால் தொற்றின் தாக்கம் அதிகரித்துச் செல்கின்றது. மேல்மாகாணத்தில் தினமும் அதிகளவில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றனர். குறித்த பகுதியுடன் கிழக்கு மாகாணத்திற்கு தொடர்புகள் காணப்படுகின்றன. தினமும் பிராயணங்கள் நடைபெறுகின்றன. இவற்றினை நாங்கள் நூறுவீதம் தடுக்கமுடியாது.

சரியான சுகாதார வழிமுறைகளையும் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளையும் தொடர்ச்சியாக கண்காணிக்கும்போது தொற்றினை கிழக்கில்   தடுக்கமுடியும்” என்றார்.

https://www.ilakku.org/கிழக்கில்-127-பேர்-கொரோனா-தொ/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேலும் 9 கொரோனா தொற்று மரணங்கள்!

Big-News.gif?189db0&189db0

 

இலங்கையில் கொரோனா (கொவிட்-19) வைரஸ் தொற்று காரணமாக மேலும் 9 மரணங்கள் பதிவாகியுள்ளது என்று இன்று (21) சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பை சேர்ந்த ஒன்பது பேரே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.

விபரங்கள்,

  1. கொழும்பு 2ஐ சேர்ந்த 57 வயது ஆண்.
  2. வெல்லம்பிட்டியை சேர்ந்த 65 வயது ஆண்.
  3. வெல்லம்பிட்டியை சேர்ந்த 75 வயது பெண்.
  4. தெமட்டகொடயை சேர்ந்த 89 வயது ஆண். இவர் வீட்டில் மரணமடைந்தார்.
  5. கொழும்பு 10ஐ சேர்ந்த 48 வயது பெண். இவர் வீட்டில் மரணமடைந்தார்.
  6. கொழும்பு 10ஐ சேர்ந்த 72 வயது ஆண். இவர் வீட்டில் மரணமடைந்தார்.
  7. கொழும்பு 13ஐ சேர்ந்த 69 வயது பெண். இவர் வீட்டில் மரணமடைந்தார்.
  8. வெள்ளவத்தையை சேர்ந்த 76 வயது ஆண்.
  9. கொழும்பை சேர்ந்த 76 வயது பெண்.

இதன்படி இதுவரை கொரோனா தொற்றால் 83 பேர் மணமடைந்துள்ளனர். இதேவேளை கொரோனா வைரஸ் தொற்று காணப்பட்ட மூவர் இதுவரை தற்கொலை, விபத்து மற்றும் துப்பாக்கி சூடு காரணமாக மரணமடைந்து உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

https://newuthayan.com/மேலும்-9-கொரோனா-தொற்று-மரண/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா தொற்றாளருடன் தொடர்பு – கிளிநொச்சியில் 516 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்

 
quarantine-800-696x348.png
 42 Views

கிளிநொச்சி மாவட்டத்தில் 516 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார்.

மாவட்ட செயலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் தெரிவித்தவை வருமாறு:-

“கிளிநொச்சி மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 516 பேரும் ஏற்கனவே தொற்றாளர்களுடன் அல்லது தொற்று அபாயமுடையவர்களுடன் நெருக்கமாக இருந்தவர்கள் என்ற அடிப்படையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அண்மையில் திருவையாறு பகுதியில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியான கொழும்பு ஆட்டுப்பட்டித் தெருவிலிருந்து வருகை தந்திருந்தார்.

தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசத்திலிருந்து அவர் குறுக்கு வழியைப் பயன்படுத்தியே இவ்வாறு வருகைதந்துள்ளார். அவர்கள் தமது சமூகப் பொறுப்பை உணராத தன்மையும், தங்களுடைய பாதுகாப்பு மற்றும் ஏனையோருடைய பாதுகாப்புப் பற்றி அக்கறையில்லாத வகையிலும் செயல்பட்டுள்ளார் என்றார்.

 

https://www.ilakku.org/கொரோனா-தொற்றாளருடன்-தொடர/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் 20 ஆயிரத்தைக் கடந்த கொரோனா எண்ணிக்கை

 
covid.600.jpg
 34 Views

இலங்கையில் இன்று மட்டும் 458 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இவ்வாறு, தொற்று கண்டறியப்பட்டவர்கள் அனைவரும் ஏற்கனவே தொற்று கண்டறியப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என  அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில், நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 20ஆயிரத்து 967ஆக அதிகரித்துள்ளது. 90க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், அமெரிக்காவைத் தலைமையகமாகக் கொண்டு செயல்படும் மருத்துவப் பல்கலைக்கழகமான ஜான்ஸ் ஹாப்கின்ஸ கூறும்போது, “கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் பரவிய கொரோனா வைரஸுக்கு உலகம் முழுவதும் 5,91,24,016 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 13,95,519 பேர் கொரோனாவுக்குப் பலியாகி உள்ளனர் என்று தெரிவித்துள்ளது.

 

https://www.ilakku.org/இலங்கையில்-20-ஆயிரத்தைக்-க/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள்!

 
1-62-696x387.jpg
 48 Views

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை  தொடர்ந்து அதிகரித்து வருவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

மேலும் இலங்கையில் இது வரையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 94 ஆக அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  இந்த வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 20ஆயிரத்து 967ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், அமெரிக்காவைத் தலைமையகமாகக் கொண்டு செயல்படும் மருத்துவப் பல்கலைக்கழகமான ஜான்ஸ் ஹாப்கின்ஸ கூறும்போது, “கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் பரவிய கொரோனா வைரஸுக்கு உலகம் முழுவதும் 5,91,24,016 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 13,95,519 பேர் கொரோனாவுக்குப் பலியாகி உள்ளனர் என்று தெரிவித்துள்ளது.

 

https://www.ilakku.org/இலங்கையில்-அதிகரிக்கும-2/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Jaffna Muslim

பெரும்பாலானோருக்கு இறக்கும் வரையில் கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது தெரியாது – மக்களுக்கான முக்கிய அறிவிப்பு!

கொரோனா வைரஸ் தொற்றினால் இறக்கும் பெரும்பாலானோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்பது மரணிக்கும் வரையில் தெரியாது என்று அரச மருந்தக கூட்டுத்தாபனத்தின் தலைவர் வைத்தியர் பிரசன்ன குணசேன தெரிவித்தார்.

இதனால் கொரோனா நோய் அறிகுறிகள் காணப்படும் சந்தர்ப்பத்தில் ஆரம்பத்திலேயே வைத்தியசாலைக்குச் சென்று அது தொடர்பிலான சந்தேகத்தை தெளிவுபடுத்திக்கொள்வது மிகவும் பொருத்தமானது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் வீடுகளில் இறப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளிவருகின்றன.

இந்த கொரோனா நோய் விசேடமாக நுரையீரலில் ஏற்படுகிறது. நுரையீரலில் இந்த தொற்று ஏற்பட்டு சிலவேளைகளில் அதற்கான அறிகுறிகள் உங்கள் உடம்பில் காணக்கூடியதாக இருக்காது.

இந்த நோயினால் பயங்கரமான நிலைமையில் இருக்கின்றீர்களா? என்பது குறித்து கண்டறிவதற்கு வழியுண்டு. பொதுவாக ஒருவர் உடலில் இரத்தத்தில் ஒட்சிசனின் அளவு 95வீதத்துக்கு மேற்பட்டதாக இருக்கும்.

நுரையீரலில் இந்த தொற்று நோய் ஏற்பட்ட பின்னர் உடம்பில் பரவும்போது உடலில் ஒட்சிசனின் அளவு 93 வீதமாக குறைவடையும். இதனால் ஒட்சிசன் அளவை பரிசோதித்து அறிந்து கொண்டால் இந்த நோயை கட்டுப்படுத்திக்கொள்ள முடியும். சிகிச்சை உண்டு.

நோய் ஏற்பட்டு வைத்தியசாலைக்கு செல்லாமல் இருந்தால் சிலவேளைகளில் ஆரோக்கியமானவராக இருந்தாலும் அல்லது வேறேதும் நோய்தொற்றாளராக இருந்தாலும் விசேடமாக தொற்றா நோயை எதிர்க்கொண்டிருந்தால் ஆரம்பத்திலேயே இந்த நோயை அறிந்துகொள்ளும் சந்தர்ப்பம் இல்லாமல் போய்விடும்.

சில வேளைகளில் மரணத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். சுவாசிப்பதில் சிரமம் போன்ற நிலைமைகளின் போது வைத்தியசாலைகளில் சிகிச்சைகளை பெற்றுக்கொள்வதில் சிரமம் ஏற்படும். இதன் காரணமாக நோய் அறிகுறிகளை சரியாக புரிந்து செயற்பட வேண்டும்.

நோய் தொற்று ஏற்பட்டிருப்பதாக நீங்கள் சந்தேகித்தால் உடனடியாக பிசிஆர் பரிசோதனையை மேற்கொண்டு வைத்தியரின் ஆலோசனைகளை பெற்றுக்கொள்ள வேண்டும்.

சிகிச்சைக்காக வைத்தியசாலைகள் அல்லது வைத்தியசாலை போன்று நாம் தயார்படுத்தியுள்ள இடங்களில் இரண்டு நாளைக்கு ஒருமுறை ஒட்சிசனின் அளவை பரிசோதித்து பார்ப்போம்.

அவ்வாறான சந்தர்ப்பத்தில் ஒட்சிசனின் அளவு குறைவதாக நாம் கண்டறிந்தால் உடனடியாக சிகிச்சையினை மேற்கொள்வதன் மூலம் இந்த நோய் அதிகரிப்பை எம்மால் தடுக்க முடியும்” என்றும் அரச மருந்தக கூட்டுத்தாபனத்தின் தலைவர் வைத்தியர் பிரசன்ன குணசேன மேலும் தெரிவித்தார்.

http://athavannews.com/பெரும்பாலானோருக்கு-இறக்/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கு மாகாணத்தில் இதுவரை 144 பேர் கொவிட்-19 தொற்றாளர்களாக அடையாளம் – மருத்துவர் ஏ.லதாகரன்

 

(வ.சக்திவேல்)

கிழக்கு மாகாணத்தில் 144 பேர் இதுவரை கொவிட்-19 தொற்றாளர்களாக அடையாளப் படுத்தப்பட் டுள்ளனர். இந்நிலையில் அக்கரைப்பற்று சுகாதார அலுவலகப் பிரிவு மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஏ.லதாகரன் தெரிவித்தார்.

Dr-2-300x194.jpeg

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார அலுவலகத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தில் புதிய கொவிட் – 19 தொற்றாளர்கள் 13 பேர் அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர். இதில் அக்கரைப்பற்றில் மாத்திரம் 10 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அக்கரைப்பற்று சந்தையில் எழுமாற்றாக 20 பேருக்கு மேற்கொண்ட பி.சி.ஆர்.பரிசோதனையின் போதே இந்த 10 பேர் அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதையடுத்து அக்கரைப்பற்று சுகாதார அலுவலகப் பிரிவு தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதுடன் அங்கு தொடர் பிசிஆர் பரிசோதனைகள் மற்றும் ஏனைய பரிசோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக பொது மக்கள் பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.

பேலியகொட மீன் சந்தைக் கொத்தணி போன்று இங்கும் சிறிய கொத்தணி ஏற்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எனவே, இதிலிருந்து அனைவரையும் பாதுகாக்க சுகாதாரத் துறையில் அதிகாரிகள், பாதுகாப்புத் தரப்பினர் கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கின்றனர். இதில் பொதுமக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியமாகும்.

புதன்கிழமை (25) அடையாளப்படுத்தப்பட்ட 13 புதிய தொற்றாளர்களில் அக்கறைப்பற்றில் 10 பேரும், காத்தான்குடியில் இருவரும், சாய்ந்தமருதில் ஒருவருமாவர்.

காத்தான்குடியில் அடையாளப்படுத்தப்பட்டவர்களில் ஏற்கனவே தொற்றுக்குள்ளான பெண்ணுடன் நேரடித் தொடர்புட்ட பெண் ஒருவரும் மற்றும் கொழும்பிலிருந்து வந்த ஒருவரும் அடங்குவர்.
கிழக்கு மாகாணத்தில் 144 பேர் இதுவரை கொவிட்-19 தொற்றாளர்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர்.

அதில் வியாழக்கிழமை வரை மட்டக்களப்பு மாவட்டத்தில் 85 பேரும், திருகோணமலை மாவட் டத்தில் 16 பேரும், அம்பாறை பிராந்தியத்தில் 8 பேரும் கல்முனை பிராந்தியத்தில் 35 பேரும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதேபோன்று டெங்கின் தாக்கமும் அதிகரித்து வருகின்றது. இதனைக் கட்டுப்படுத்தவும் பொது மக்கள் பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என அவர் இதன்போது தெரிவித்தார்.

 

https://thinakkural.lk/article/92891

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று 559 பேருக்கு தொற்றியது!

கம்பஹா – மினுவாங்கொடை ஆடை தொழிற்சாலை தொடர்பு மற்றும் அதன் தொடர்பால் உருவான துணைக் கொத்தணி அல்லது இரண்டாம் அலை காரணமாக இன்று (26) இதுவரை 559 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளானமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்படி மினுவாங்கொடை ஆடை தொழிற்சாலை தொடர்பு மற்றும் அதன் தொடர்பால் உருவான துணைக் கொத்தணி காரணமாக தொற்றுக்கு உள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 18,491 ஆக உயர்ந்துள்ளது.

வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பிய 6 பேருக்கும் இன்று தொற்று உறுதியானது. இதனுடன் இலங்கையின் மொத்த கொரோனா தொற்று எண்ணிக்கை 22,028 ஆகும்.

இதேவேளை மொத்தமாக 15,816 பேர் குணமடைந்துள்ளதுடன், இப்போது 6,113 பேர் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

https://newuthayan.com/இன்று-559-பேருக்கு-தொற்றியத/

 
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் கொரோனா – தனியார் வைத்தியசாலையும் வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டன

யாழ்ப்பாணம் மாநகரில் திருநெல்வேலியில் தனியார் வைத்தியசாலையின் சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன் மற்றும் 4 வர்த்தக நிலையங்களை மூடுவதற்கு மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி பாலமுரளி அறிவுறுத்தியுள்ளார்.

யாழ்ப்பாணம் – கொழும்பு பயணிகள் மற்றும் பொருள்கள் சேவையில் ஈடுபடும் அதி சொகுசு பஸ் மற்றும் பாரவூர்தி வாடிக்கையாளர் நிலையமும் புடவையகம் ஒன்றும் நாவாந்துறையில் ஒரு வியாபார நிலையமும் இவ்வாறு உடனடியாக மூடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கொழும்பிலிருந்து காரைநகர் வந்த ஒருவருக்குக் கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை நேற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அவர் சென்று வந்த இடங்கள் சுகாதாரத் துறையினரால் இனங்காணப்பட்டு தொடர்புடையவர்கள் சுயதனிமைப்படுத்தப்படுகின்றனர்.

இந்த நடவடிக்கையின் தொடர்ச்சியே யாழ்ப்பாணம் மாநகர சபை பிரிவில் தனியார் வைத்தியசாலையின் சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன் 4 வர்த்தக நிலையங்கள் மூப்பட்டுள்ளன. தனியார் வைத்தியசாலையின் பணியாளர்கள் மற்றும் வர்த்தக நிலையங்களின் ஊழியர்கள் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு முடிவுகள் கிடைத்த பின்னர் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.

 

https://www.ilakku.org/யாழ்ப்பாணத்தில்-கொரோனா-2/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா நோயாளி யாழ்நகரில் சென்ற இடங்கள் மூடப்பட்டன

 
1-200.jpg
 43 Views

கொழும்பில் இருந்து யாழ் மாவட்டத்திற்கு அண்மையில் வருகை தந்த ஒருவர் சுகாதார வைத்திய அதிகாரிக்கு எவ்வித தகவலையும் வழங்காது, கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை கடைப்பிடிக்காது மாவட்டத்தின் பல இடங்களுக்கு சென்று வந்ததினால் வட மாகாண மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியகலாநிதி ஆ. கேதீஸ்வரன் முக்கிய செய்தி குறிப்பொன்றை வெளியிட்டுள்ளார்.

அதில்,“கொழும்பில் இருந்து யாழ் மாவட்டத்திற்கு அண்மையில் வருகை தந்த ஒருவர் சுகாதார வைத்திய அதிகாரிக்கு எவ்வித தகவலையும் வழங்காததுடன், சுயதனிமைப்படுத்தலையும் கடைபிடிக்காது யாழ் மாவட்டத்தில் உள்ள பல நிறுவனங்கள், வர்த்தக நிலையங்கள், மற்றும் உறவினர்கள், நண்பர்கள் போன்ற தனியார் வீடுகளுக்கும் சென்று வந்துள்ளார்.

பின்னர் அவரைப் பற்றிய தகவல் சுகாதார திணைக்களத்தினருக்கு கிடைத்ததை தொடர்ந்து இவர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவினரால் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு  PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டடுள்ளது.

அதனால் இவர் சென்று வந்த அனைத்து நிறுவனங்கள், வர்த்தக நிலையங்கள் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளதுடன் நூற்றுக்கணக்கானவர்கள் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

ஒரு தனிமனிதனின் சமூக பொறுப்பற்ற தவறான நடவடிக்கையால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் நிகழாது தவிர்ப்பதற்கு இவ்வாறு வேறு மாகாணங்களில் இருந்து தமது பிரதேசங்களுக்கு வருகை தந்தோர் பற்றிய தகவல்களை அவர்களோ அல்லது பொதுமக்களோ தமது பிரிவு சுகாதார வைத்திய அதிகாரி, பொதுச் சுகாதார பரிசோதகர், குடும்பநல உத்தியோகத்தர் அல்லது வடமாகாண சுகாதார சேவை திணைக்களத்தின் 24மணிநேர அவசர அழைப்பிலுள்ள 021 222 6666 என்ற இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு விபரங்களை அறியத்தர வேண்டும்.

இதன் மூலம் தங்;களையும் சமூகத்தையும் கொரோனா தொற்றிலிருந்து பாதுகாக்க வேண்டிய அவசர சேவைகளை எம்மால் வழங்க முடியும். இந்நோய் எமது மாகாணத்தில் பரவாதிருக்க எமக்கு தகவல்களை வழங்கி ஒத்துழைப்பு வழங்கவும்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

https://www.ilakku.org/கொரோனா-நோயாளி-யாழ்நகரில்/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பு மாநகரசபை எல்லைக்குட்பட்ட பகுதியை முடக்க வேண்டும்! ரோஸி சேனாநாயக்க  - Tamilwin

கொழும்பில் நிலைமை ஆபத்தில் – ரோஸி சேனாநாயக்க எச்சரிக்கை

கொரோனா தொற்றினால் ஏற்படும் இறப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதாலும் அதிகமான மக்கள் தொற்றுநோயால் பாதிக்கப்படுவதால் கொழும்பில் நிலைமை ஆபத்தாக உள்ளது என கொழும்பு மாநகர மேயர் ரோஸி சேனாநாயக்க எச்சரித்துள்ளார்.

அண்மையில் பதிவானாக கொரோனா வைரஸ் தொடர்பான இறப்புகள் மற்றும் தொற்று உறுதியான நோயாளிகள் பெரும்பாலும் கொழும்பு மாவட்டத்திலேயே அடையாளம் காணப்பட்டனர்.

இந்நிலையில் ஓய்வுபெற்ற பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மற்றும் பயிற்சியாளர்களின் சேவைகளைப் பெற மருத்துவ பீடத்தின் உதவியையும் ரோஸி சேனாநாயக்க நாடியுள்ளார்.

தற்போது கொழும்பில் ஒரு நாளைக்கு மேற்கொள்ளப்படும் 991 பி.சி.ஆர் சோதனைகளில் 249 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியும்போது, அது ஒரு தீவிரமான பிரச்சினை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அத்தோடு கொழும்பின் நிலைமையைக் கட்டுப்படுத்த கொழும்பு மாநகர சபையுடன் இணைந்து அரசாங்கம் அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருவதாக அவர் தெரிவித்தார்.

இதேவேளை கொரோனா தொற்றினை கட்டுப்படுத்த கொழும்பு மாநகர சபைக்கு தனியார் மற்றும் வெளிநாட்டு தரப்பினர்களிடம் இருந்து நன்கொடை கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

http://athavannews.com/கொழும்பில்-நிலைமை-ஆபத்தி/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கல்முனையில் மேலும் 14 பேருக்கு தொற்று!

Corona.jpg?189db0&189db0

 

அம்பாறை – கல்முனை பகுதியில் இன்று மேலும் 14 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதியாகியுள்ளது.

இதையடுத்து கிழக்கு மாகாணத்தில் கொரோனா தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 200 ஆக அதிகரித்துள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அ.லதாகரன் தெரிவித்தார்.

https://newuthayan.com/கல்முனையில்-மேலும்-14-பேரு/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

118 ஆக அதிகரித்தது கொரோனா மரணம் – மேலும் இருவர் பலி; நேற்றும் 503 பேருக்குத் தொற்று

 
corona-test-02-696x348.jpg
 9 Views

இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் மேலும் 2 பேர் மரணமடைந்துள்ளனர் என்று அரச தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன்படி நாட்டில் கொரோனாத் தாக்கத்தால் பலியானவர்களின் எண்ணிக்கை நேற்றிரவு 118 ஆக அதிகரித்துள்ளது.

கண்டி – கலஹ பகுதியைச் சேர்ந்த 72 வயதான ஒருவரும், அட்டுலுகம பகுதியைச் சேர்ந்த 81 வயதான பெண்ணொருவருமே உயிரிழந்துள்ளனர். கண்டியில் பதிவாகியுள்ள முதலாவது மரணம் இதுவாகும்.

இதேவேளை, இலங்கையில் நேற்றும் 503 பேர் கொரோனா வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதையடுத்து மொத்தத் தொற்றாளர்களின் எண்ணிக்கை 23 ஆயிரத்து 987 ஆக அதிகரித்துள்ளது.

இவர்களில் 17 ஆயிரத்து 560 பேர் குணமடைந்துள்ளனர். 6 ஆயிரத்து 309 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

https://www.ilakku.org/118-ஆக-அதிகரித்தது-கொரோனா-மர/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு உட்பட இலங்கையின் அதிக ஆபத்தான இடங்களின் விபரம் வெளியானது

இலங்கையில் கொரோனாவால் அதிக ஆபத்துள்ள பகுதிகள் குறித்த விவரங்களை வெளியிட்டுள்ளது.

சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு இதை வெளியிட்டுள்ளது.

சுகாதாரப் பகுதிகளின் மருத்துவ அதிகாரிகளின் வகைப்படுத்தல், பதிவான வழக்குகளின் எண்ணிக்கை மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களின் விநியோகம் ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு அலகு ஒரு வரைபடத்தை வெளியிட்டது.

நவம்பர் 25 ஆம் திகதியுடன் முடிவடைந்த கடைசி 14 நாட்களுக்குள் பதிவாகியுள்ள சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த வரைபடம் உருவாக்கப்பட்டுள்ளது.

 

இதில் வடக்கில் கண்டாவளை, கிளிநொச்சி, நல்லூர் போன்ற இடங்கள் அதிக ஆபத்துள்ள பகுதிகளாக உள்ளன.

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

 

 

https://www.ibctamil.com/srilanka/80/155321?ref=imp-news

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் 1010 குடும்பங்களைச் சேர்ந்த 2220 பேர் சுயதனிமைப்படுத்தலில்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கில் அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை

 
IMG_0244-696x464.jpg
 18 Views

கிழக்கு மாகாணத்தின் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 257ஆக அதிகரித்துள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் டாக்டர் அழகையா லதாகரன் தெரிவித்துள்ளார்.

அக்கரைப்பற்று பிரதேசத்தில் 32பேரும் அட்டாளைச்சேனையில் 06பேரும் ஆலையடிவேப்பு பகுதியில் ஒருவரும் வாழைச்சேனை பகுதியில் 04பேரும் கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளதாகவும் அவர்  கூறியுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

அக்கரைப்பற்று பொதுச்சந்தையுடனும் பேலிகொட மீன்சந்தையுடனும் தொடர்புபட்டவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புகொண்டவர்களே அதிகளவில் இனங்காணப்பட்டுள்ளனர்.

இதுவரையில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவில் 138பேர்கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளதுடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் 92பேரும் அம்பாறை சுகாதார பிரிவில் 11பேரும் திருகோணமலை மாவட்டத்தில் 16பேரும் கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.

அக்கரைப்பற்று பொதுச்சந்தையுடன் தொடர்புபட்ட 109பேர் இதுவரையில் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.

பொதுமக்கள் அக்கரைப்பற்று பொதுச்சந்தையுடன் தொடர்புபட்டவர்கள் தொடர்பான தகவல்களை பொதுச்சுகாதார பிரிவினருக்கு வழங்குமாறும் கொழும்பு உட்பட பிற இடங்களில் இருந்து வருகைதருவோர் தொடர்பிலும் பொதுமக்கள் விழிப்பாக இருந்து சுகாதார மற்றும் பாதுகாப்பு துறையினருக்கு தகவல்களை வழங்கவேண்டும்” என்றார்.

 

https://www.ilakku.org/கிழக்கில்-அதிகரிக்கும்-க/

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • யாழ்ப்பாணத்தில் தந்தை செல்வாவின் 47வது நினைவு தினம் adminApril 26, 2024 யாழ்ப்பாணத்தில் தந்தை செல்வாவின் 47வது நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. குறித்த நிகழ்வானது யாழ்ப்பாணத்தில் உள்ள செல்வா சதுக்கத்தில் இடம்பெற்றது. இதன்போது அன்னாரின் திருவுருவச் சிலைக்கு மலர்மாலை அணிவித்து மலர் அஞ்சலியும் செலுத்தப்பட்டதுடன், நினைவு பேருரையும் இடம்பெற்றிருந்தது. இந்நிகழ்வில் கட்சி ஆதரவாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.     https://globaltamilnews.net/2024/202016/
    • வெளிநாட்டில் உள்ளவரின் காணியை மோசடியாக விற்ற யாழ்.வாசி விளக்கமறியலில் adminApril 26, 2024   வெளிநாட்டில் உள்ளவரின் காணியை மோசடி செய்து விற்பனை செய்த நபர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.   வெளிநாட்டில் வசிக்கும் நபர் ஒருவர் யாழ்ப்பாணத்தில் உள்ள தனது காணியை பராமரிப்பதற்காக யாழ்ப்பாணத்தை சேர்ந்த உறவினர் ஒருவருக்கு அற்றோணித்தத்துவம் முடித்து கொடுத்துள்ளார். அற்றோணித்தத்துவத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்தி காணியினை மூன்று துண்டுகளாக பிரித்து ஒரு பகுதியை  நபர் ஒருவருக்கு விற்பனை செய்ததுடன் , மற்றுமொரு பகுதியை வங்கியில் ஈடுவைத்துள்ளார். மற்றைய துண்டினை தனது உறவினருக்கு நன்கொடையாக கொடுத்து , அதனை மீள அறுதியாக பெற்றுள்ளார். இது தொடர்பில் அறிந்த காணி உரிமையாளர் யாழ்ப்பாண  காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்த நிலையில் , முறைப்பாட்டின் பிரகாரம் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து , காணி விற்பனையில் ஈடுபட்ட நபரை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவரிடம் விசாரணைகளை முன்னெடுத்த பின்னர் யாழ்.நீதவான் நீதிமன்றில் முற்படுத்தியவேளை , மன்று சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.   https://globaltamilnews.net/2024/202012/  
    • காணி தருவதாக யாராவது பணம் பெற்றால் முறைப்பாடு செய்யுங்கள்! ஜனாதிபதியின் திட்டத்திற்கு அமைய வடக்கிற்கு 50 ஆயிரம் சோலர் பவர் வீட்டுத் திட்டங்கள் வழங்கப்படவுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் அமைச்சர்களின் பெயரை பயன்படுத்தி வீட்டுதிட்டம், காணி தருவதாக யாராவது பணம் பெற்றால் முறைப்பாடு செய்யுங்கள் என கிராமிய பொருளாதார அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் தெரிவித்துள்ளார். வவுனியா, கண்டி வீதியில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று (23) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், யுத்தம் முடிவடைந்த பின்பும் எமது மக்களின் மீள்குடியேற்றம், புனர்வாழ்வு என்பன கனவு போன்றே இருந்தது. இது சம்மந்தமாக பல அமைச்சர்கள் செயற்பட்டிருந்தாலும் அது பூரணப்படுத்தப்படவில்லை. எமது மாவட்டத்தின் வீட்டுத் திட்ட தேவை, உட்கட்டமைப்பு வசதிகளின் தேவை, வீதி புனரமைப்பு உள்ளிட்ட பல்வேறு தேவைப்பாடுகள் தொடர்பாக நாம் ஜனாதிபதியிடம் தொடர்ச்சியாக கூறி வந்தோம். இந்நிலையில் கடந்த காலங்களில் பல்வேறு வீட்டுத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டது போன்று தற்போது வடக்கிற்கு சோலர் பவர் வீட்டுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. பயனாளிகளுக்கு 35 இலட்சம் ரூபாய் பெறுமதியான வீட்டுத் திட்டம் இதன் மூலம் கிடைக்கவுள்ளது. வடக்கு மாகாணத்திற்கு 25 ஆயிரம் வீட்டுத்திட்டம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அதனை 50 ஆயிரம் வீட்டுத்திட்டமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாவட்ட மட்டத்தில் எடுக்கப்பட்ட தகவல்கள் 25 ஆயிரத்தையும் கடந்து சென்றதால் 50 ஆயிரம் வீட்டுத்திட்டம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வடக்கில் வீடற்ற எவரும் இனி இருக்க முடியாது. உப குடும்பங்கள் அனைவருக்குமே இதன் மூலம் வீட்டுத்திட்டம் கிடைக்கும். வீட்டுத்திட்டம் மட்டுமன்றி எமது மாவட்ட மக்களுக்கான மின்சார இணைப்புக்கள் மற்றும் தேவைப்பாடுகள் தொடர்பாக நாம் மக்களிடம் இருந்தும், பிரதேச செயலகம் மற்றும் மாவட்ட செயலகம் ஊடாகவும் தகவல்களைப் பெற்று அதனைப் பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றோம். பொது இடங்கள் மற்றும் மக்களுக்கான மின்சார இணைப்புக்கள் வழங்கப்பட்டு வருகின்றது. அதேபோன்று, மக்களது குடிநீர் இணைப்புக்களை வழங்க முதல் கட்டமாக வவுனியா மாவட்டத்திற்கு 5,000 பேருக்கும், மன்னார் மாவட்டத்திற்கு 1,500 பேருக்கும், முல்லைத்தீவு மாவட்டத்திற்கு 5,000 பேருக்கும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மின்சார இணைப்பு மன்னார் மாவட்டத்திற்கு 2,500 உம், வவுனியா மாவட்டத்திற்கு 1,500 உம், முலலைத்தீவு மாவட்டத்திற்கு 1,500 உம் வழங்கப்பட்டு வருகின்றது. கிராம மட்ட தேவைகள் குறித்து நாங்கள் ஜனாதிபதிக்கு தெரிவித்து விசேட நிதியைப் பெற்று இந்த திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. சில கிராம மக்களுக்கு இத் தகவல்கள் கிடைக்கவில்லை. மின்சாரம், நீர் இணைப்பு இல்லாதவர்கள் உங்கள் பகுதி உத்தியோகத்தர்களுடன் தொடர்பு கொள்ளவும். அல்லது எமக்கு தெரியப்படுத்தவும். பொது வீதிகளுக்கான மின்சார இணைப்பும் வழங்கப்படுகிறது. எமது மக்களுக்கு எது தேவையோ அதனை செய்வதற்கு ஜனாதிபதி அவர்கள் தயதராக இருக்கின்றார். கேட்டுப் பெற வேண்டியது எங்களது பொறுப்பு. மாவட்ட மட்டத்தில் 1,000 பேருக்கு பாரிய வாகனங்களை இயக்குவதற்கான பயற்சி வழங்கி சாரதி அனுமதிப்பத்திரம்  வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பொது அமைப்புக்களும் இளைஞர்களை வழிப்படுத்தி அவர்கள் வெளிநாடுகளில் தொழில் வாய்ப்புக்களைப் பெறப் கூடிய நிலையை உருக்வாக்க முன்வர வேண்டும். இதேபோன்று, பல கிராமங்களில் காணிகள் வன இலாகா சார்ந்த பிரச்சனையாக இருக்கிறது. அதனை விடுவிக்க தொடர் நடைவடிக்கை இடம்பெறுகின்றது. நான் கடந்த காலங்களில் 3 ஜனாதிபதிகளுடன் பணியாற்றி இருக்கின்றேன். ஆனால் கடந்த காலத்தில் இருந்த இரு ஜனாதிபதிகள் வனஇலாகாவிடம் இருந்து காணிகளை விடுவிக்க பூரண கரிசணை காட்டவில்லை. தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் அதனை விடுவிக்க துரித நடவடிக்கை எடுத்துள்ளார். தேசிய ரீதியில் காணி விடுவிப்புக்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இரண்டு மாதங்களில் பல காணிகள் விடுவிக்கப்படும். விடுவிப்பதற்கான காணிகளின் விபரம் வந்துள்ளது. இதன் மூலம் காணி இல்லாத மக்களுக்கு அதே கிராம்களில் காணிகளை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்டபட்டுள்ளது. அவர்களது கிராமத்தில் காணி இல்லாதுவிடின் அயல் கிராமத்தில் காணியினை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குடியிருப்பதற்கான நிலம் மற்றும் விவசாய நிலம் என்பன வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சிலர் சில பகுதிகளில் ஏக்கர் கணக்கில் காணிகளை அடாத்தாக பிடித்து வைத்துள்ளார்கள். அதனை மீட்டு பொது மக்களக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகள் பொதுவாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. சிலர் தற்போது அந்த அமைச்சர், அந்த எம்.பி என சொல்லி காணி எடுத்து தருவதாக கிராமங்களில் பணம் பெறுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். இவ்வாறு பல முகவர்கள் நிதி பெறுவதாக கூறப்படுகிறது. இவ்வாறான செயற்பாடுகளுக்கு எமது பெயரையோ அல்லது பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் பயன்படுத்தப்பட்டால் முறைப்பாடு செய்யுங்கள் நடவடிக்கை எடுக்கப்படும். அரசசேவைகளை வழங்குவதற்கு எந்தப் பணமும் அறவிடப்பட முடியாது. நாங்கள் மக்களது சேவையாளர்கள். மக்களிடம் பணம் பெற்று தான் அவர்களுக்கு சேவை வழங்கும் கலாசாரம் இல்லை. வன்னியில் அவ்வாறு நடைபெறக் கூடாது. ஒரு காணிக்கு 15 நாளில் ஆவணம் தருவதாகவும் பணம் பெறப்படுகிறது. வவுனியா ஊடகவியலாளர்கள் தமது குடியிருப்பு காணி பெற எத்தனை வருடமாக போராடுகிறார்கள். ஆனால் 15 நாளில் ஆவணத்துடன் காணி எவ்வாறு சாத்தியம். இவ்வாறு பொய்யான கதைக்களைக் கூறி பாமர மக்களிடம் பணம் பெற்று ஏமாற்றுகிறார்கள். நாமும் காணிப் பிரச்சனை, குளம் பிரச்சனை என அதிகாரிகளுடன் சென்று பார்வையிட்டு வருகின்றோம். போய் பார்வையிடுவதும் கதைப்பதும் தான் முகப் புத்தகங்களில் வருகிறது. அதற்கு என்ன நடந்தது என்பது பிறகு வருவதில்லை. அதற்கு என்ன நடந்தது என்ற தகவலைக் கேளுங்கள். மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள். ஒரு நபர் 70 ஏக்கர் காணிகளை பிடித்து வெளிநாட்டில் உள்ள நபர் ஒருவருக்கு கொடுத்துள்ளதாக அமைப்பு ஒன்று சுட்டிக் காட்டியுள்ளது. இது தொடர்பாக பிரதேச செயலாளரிடம் முறையிட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதுபோல், எம்மை சந்திக்கும் பலர் எம்முடன் நின்று புகைப்படம் எடுப்பார்கள். அப்படி எடுத்த ஒருவர் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டால் நானும் துணை என கூறாது முறைப்பாடு தாருங்கள் நடவடிக்கை எடுக்கப்படும். எம்.பி ஒருவரின் அரசியல் கட்சி பிரதி நிதி பிறிதொரு நபருக்கு காணி கொடுக்க மக்கள் தயார் என பிரதேச செயலாளருக்கு கடிதம் கொடுத்துள்ளார். ஆனால் அந்த மக்களுக்கு அந்த விடயம் தெரியாது. அந்த எம்.பிக்கும் தெரியுமோ தெரியாது. சுடலைக் காணியை கூட பிடித்து கொடுக்கிறார்கள். மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும். காணி மற்றும் வீட்டுத்திட்டம் தொடர்பான விடயங்கள் பிரதேச செயலகத்தில் உள்ளன. அங்கு சென்று பார்வையிட்டு தங்களது விபரங்கள் இல்லையெனில் பதிவு செய்யுங்கள். முகவர்களிடம் பணம் செலுத்தி ஏமாறாது அது தொடர்பில் மக்கள் விழிப்பாக இருங்கள். காணி ஆவணங்கள் கிடைப்பின் அது நீண்ட ஒரு நடவடிக்கை ஊடாகவே நடைபெறுகிறது. அது ஜனாதிபதியின் பணிப்பின் பேரில் பிரதேச செயலகம் முன்னெடுக்கும் நடவடிக்கை. எம்.பி மார் மற்றும் அரசியல்வாதிகளுக்கு பெயர் பெறுவதற்காக முகவர்கள் கூறுவது பொய் மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும் என தெரிவித்தார்.     http://www.samakalam.com/காணி-தருவதாக-யாராவது-பணம/  
    • ”பிள்ளையானை கைது செய்து விசாரணை நடத்தினால் கொலைகளின் உண்மைகளை அறியலாம்” பிள்ளையானை கைது செய்து விசாரணை நடத்தினால் 2005 முதல் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் வரையிலான அனைத்த கொலைகளின் உண்மை தகவல்களையும் அறிந்துகொள்ளலாம். என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் பாராளுமன்றத்தில் நேற்றைய தினம் தெரிவித்தார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற சபை ஒத்திவைப்பு வேளை இரண்டாம் நாள் விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அதன்போது அவர் மேலும் கூறுகையில். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஏற்கனவே நாம் பலமுறை விவாதித்துள்ளோம். ஆனால் எவ்வளவு தான் விவாதித்தாலும்இ விசாரணைகளை மேற்கொண்டாலும் அது குறித்து திருப்தியடைய முடியாமையினாலேயே இது குறித்து தொடர்ந்தும் விவாதிக்க வேண்டியுள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பலரும் பாராளுமன்றத்தில் பேசியிருந்தாலும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலானது 2019ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டிருப்பினும் இதன் பின்புலத்தில் இருந்தவர்கள் 2005ஆம் ஆண்டு முதல் நாட்டினுள் செயற்பட்டுக் கொண்டு இருந்துள்ளனர். இது தொடர்பில் நாம் எவ்வளவுதான் எடுத்துரைப்பினும் அதனை யாரும் பெரிதாக கண்டுகொள்வதில்லை. 2004ஆம் ஆண்டு இடம்பெற்ற சம்பவம் ஒன்று தொடர்பில் மீண்டும் சி.ஐ.டி. விசாரணைகளை ஆரம்பிப்பதாக நாம் நேற்று செய்தியொன்றை பார்த்திருந்தோம். காத்தான்குடியில் பள்ளியொன்றினுள் இரண்டு குழுவினர்களுக்கு இடையே இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் காத்தான்குடி பொலிஸார் மீண்டும் விசாரணைகளை ஆரம்பிப்பதாக தமிழ்வின் என்ற நாளிதழிலில் செய்தி வெளியாகியுள்ளது. இந்த தாக்குதலின் பின்புலத்தில் அதாவது இந்த தாக்குதலை அடிப்படையாக கொண்டே இலங்கையில் புலனாய்வு துறையினால் செயற்படுத்தப்பட்ட டிரிபோலி பிளாட்டூன் (Tripoli Platoon) இது செனல்-4 செய்தியிலும் வெளியாகியிருந்தது. அதாவது டிரிபோலி பிளாட்டூன் என்பது மூன்று கோணங்கள். அந்த மூன்று கோணங்களாவது தமிழ் சிங்களம் முஸ்லிம். இவர்களை கொண்ட புலனாய்வு துறையுடன் தொடர்புடைய குழுவே இதனை 2004இ 2005 காலப்பகுதியில் ஆரம்பித்திருந்தது. 2004 என்பதைவிட 2005 என்பதே உகந்ததாக இருக்கும். 2004இ 2005 காலப்பகுதியில் இச்சம்பவம் இடம்பெறும்போது இதனுடன் பொலிஸ் பாஹிஸ் என்ற நபர் தொடர்புபட்டிருந்தார். பொலிஸ் பாஹிஸ் என்பவர் தற்போது பிரித்தானியாவில் இருக்கிறார். அவர் தற்போதும் இலங்கை புலனாய்வுத்துறை அதிகாரியாக செயற்பட்டு வருகிறார். இதனை நாம் சகல சந்தர்ப்பங்களிலும் குறிப்பிட்டுள்ளோம். அவரது முகப்புத்தக கணக்கு உள்ளிட்ட அனைத்தையும் நாம் இதற்கு முன்னரே வெளிப்படுத்தியுள்ளோம். பொலிஸ் பாஹிஸ் என்ற நபர் 2004இல் ‘இமானிய நெஞ்சங்கள்’ என்ற அமைப்பை உருவாக்கியுள்ளார். இது இஸ்லாமிய அல்லது முஸ்லிம் சமூகம் சார்ந்த அமைப்பு இல்லை. இது இலங்கை புலனாய்வு துறையின் செயற்பாடாகும். நாட்டினுள் முஸ்லிம் தீவிரவாதத்தை ஏற்படுத்தும் நோக்கில் இந்த இமானிய நெஞ்சங்கள் என்ற அமைப்பு 2004, 2005 காலப்பகுதியில் உருவாக்கப்பட்டது. பொலிஸ் பாஹிஸ், ஆர்மி மொஹிதீன் கலீல் ஆகிய மூவரே இந்த டிரிபோலி பிளாட்டூனுடன் தொடர்புடையவர்கள். ரத்ன தேரரும் இந்த ஆர்மி மொஹிதீன் குறித்து நேற்று கதைத்திருந்தார்;. இந்த கலீல் என்ற நபர் 2005 டிசம்பர் மாதம் 25ஆம் திகதி கத்தோலிக்க தேவாலயத்தினுள் வைத்து சுட்டுக் கொல்லப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கொலை வழக்கின் குற்றவாளியாவார். மேலும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர் சிவனேசத்துரை சந்திரகாந்தன், கஜன் மாமா என்ற ஒருவர் கலீல், பிரதீப் மாஸ்டர் ஆகியோரும் இந்த வழக்கில் தொடர்புபட்டவர்கள் ஆவர். கலீல் என்பவர் இந்த டிரிபோலி பிளாட்டூனுடன் தொடர்புடைய நபராவார். இவரும் ஜோசப் பரராஜசிங்கம் கொலை வழக்கில் தொடர்புபட்டு 2005ஆம் ஆண்டு சிறைக்கு சென்று 2020ஆம் ஆண்டு கோட்டாபய அரசாங்கத்தில் விடுதலையாகியிருக்கிறார். இது எவ்வாறு இடம்பெற்றது என்றால் புலனாய்வு துறைக்கு தேவையான இரண்டு மூன்று கொலை சம்பவங்களை அரங்கேற்றுவதற்கு இந்த டிரிபோலி பிளாட்டூனுடன் மேற்கொள்ளும் பிற கொலை சம்பவங்கள் குறித்து ஆராய்வதில்லை. இதற்கு உதாரணமாக ஒரு சிலவற்றை கூறுகின்றேன். 2006 ஜனவரி 31ஆம் திகதி மட்டக்களப்பிலிருந்து வவுனியாவிற்கு டி.ஆர்.ஓ. என்ற அமைப்பிலிருந்து சென்றவர்களை வெள்ளை வானில் கடத்திச் செல்கின்றனர். இலங்கையில் வெள்ளை வான் கலாசாரம் ஆரம்பமாகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள். வெள்ளை வானில் கடத்திச் சென்று பெண்கள் உள்ளிட்டோரை துஸ்பியோகத்திற்கு உட்படுத்தி கொலை செய்கின்றனர். அதில் தனுஸ்கோடி பிரிமினி கணக்காளர் சண்முகநாதன் சுவேந்திரன்இ தப்பிராஜா வசந்தராஜா கைலாயப்பிள்ளை ரவீந்திரன் உள்ளிட்ட பத்து பேர் இருந்தனர். இது குறித்து வெளியான செய்தியொன்றை இங்கு முன்வைக்கிறேன் ‘கிழக்கின் உறவுகளை கடத்தி கொலை செய்த’ பாராளுமன்ற உறுப்பினரின் பெயரும் படமும் இதில் போடப்பட்டுள்ளது. இது தொடர்பில் இதுவரை எவ்வித விசாரணைகளும் முன்னெடுக்கபடவில்லை. 2006 டிசம்பர் 15ஆம் திகதி கிழக்கு மாகாண முன்னாள் துணைவேந்தர் எஸ்.ரவீந்திரன் என்பவர் கொழும்பு பௌத்தாலோக மாவத்தையில் வைத்து கடத்தப்பட்டு கொலை செய்யப்படுகிறார். இதற்கு முன்னர் கருணா பிள்ளையான் குழுவினரால் பாலசுகுமாரன் என்ற முன்னாள் பேராசிரியர் கடத்தப்பட்டிருந்ததுடன் துணை வேந்தரையும் அப்தவியிலிருந்து விலகுமாறு எச்சரிக்கப்பட்டிருந்தது. அவர் அப்பதவியிலிருந்து விலகாமையினாலேயே அவர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இலங்கையில் இது தொடர்பில் இதுவரை எவ்வித விசாரணைகளும் முன்னெடுக்கப்படவில்லை. 2007ஆம் ஆண்டு சதீஸ்குமார் சுந்தரராசா எனும் நபர் கடத்தப்பட்டு கொலை செய்யப்படுகிறார். இவை அனைத்தும் மட்டக்களப்பு மாவட்டத்திலேயே இடம்பெறுகின்றன. இதனை செய்தது யார் என்பது குறித்து இதுவரை எவ்வித விசாரணைகளும் முன்னெடுக்கப்படவில்லை. இது தொடர்பில் குற்றம் சாட்டப்படுபவர்கள் இந்த பாராளுமன்றத்தினுள்ளும் உள்ளனர். இந்த 2007ஆம் ஆண்டில் கடத்தப்பட்டவரின் மகள் 2009ஆம் ஆண்டு கொலை செய்யப்படுகிறார் அதற்று முன்னர் 2009 மார்ச் 11ஆம் திகதி திருகோணமலை புனித மேரிஸ் ஆரம்ப பாடசாலையில் கல்வி கற்று வந்த வர்ஷா ஜுட் ரிஜி என்ற ஆறு வயதுடைய முதலாம் ஆண்டில் கல்வி கற்கும் சிறுமி கப்பம் கோரப்பட்டு கடத்திச் செல்லப்படுகிறார். 30 மில்லியன் ரூபாய் கப்பம் கோரப்பட்டு கடத்திச் செல்லப்பட்ட பின்னர் மார்ச் மாதம் 13ஆம் திகதி கண்கள் வாய் கைகள் கட்டப்பட்ட நிலையில் பையொன்றில் கட்டப்பட்ட நிலையில் அவரது சடலம் கண்டெடுக்கப்படுகிறது. ஆறு வயது சிறுமியை கடத்திச் சென்று இவ்வாறு கொலை செய்யப்பட்ட வழக்கின் பின்புலத்தில் செயற்பட்டதாக சந்தேகத்தின் பேரில் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் அமைப்பின் திருகோணமலை மாவட்ட பொறுப்பாளராக செயற்பட்ட மேர்வின் என்ற நபர் கைது செய்யப்படுகிறார். அக்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரும் இங்கு இருக்கிறார். இவருடன் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் அமைப்பின் திருகோணமலை மாவட்ட உப செயலளார் வரதராஜா ஜனார்த்தனன் இவர் நிசாந்தன் மற்றும் ரெஜினோல்ட் ஆகியோர் பொலிஸாரால் கைது செய்யப்படுகின்றனர். அப்போது பிரதி அமைச்சராகவிருந்த கருணா என்கின்ற விநாயகமூர்த்தி முரளிதரனின் ஊடக பேச்சாளர் இனியபாரதி இக்கொலையை பிள்ளையான குழுவினரே மேற்கொண்டதாக குறிப்பிட்டிருந்தார். அதற்கு பிள்ளையானின் ஊடக பேச்சாளரான அசாத் மௌலானா இல்லை அதனை செய்தது கருணா என்று கூறுகின்றார். அதாவது அசாத் மௌலானாவும் இதில் தொடர்புபட்டிருக்கிறார். சில நாட்களின் பின்னர் இந்த நால்வரும் இலங்கை அரசாங்கத்தின் இராணுவ புலனாய்வு பிரிவினரால்; சுட்டுக் கொல்லப்படுகின்றனர். அதாவது அந்த கொலையுடன் நேரடியாக தொடர்புடையவர்கள் என்று கைது செய்யப்பட்ட நால்வரும் பொலிஸ் பொறுப்பில் இருந்தபோது சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். அதில் ஒருவர் தப்பிச் செல்ல முற்பட்டபோது சுட்டுக் கொல்லப்பட்டதாக குறிப்பிட்டுள்ளனர். ஒருவர் சைனட் உட்கொண்டு உயிரிழந்ததாக குறிப்பிட்டுள்ளனர். ஏனைய இருவரும் பயங்கரவாதிகளுடனான துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்ததாக குறிப்பிட்டுள்ளனர். கருணாவின் ஊடக பேச்சாளர் பிள்ளையான் செய்ததாக கூறுகிறார். பிள்ளையானின் ஊடக பேச்சாளர் கருணா செய்ததாக கூறுகிறார். இவ்வாறிருக்க சந்தேகநபர்கள் நால்வரும் பொலிஸ் பொறுப்பில் இருக்கும்போது கொல்லப்படுகின்றனர். டிரிபோலி பிளாட்டூனுடன் தொடர்பை பாருங்கள். டிரிபோலி பிளாட்டூன் தேவைக்கேற்ப அவர்களுக்கு தேவையானவர்களை கொலை செய்தவுடன் அதிலுள்ள சில உறுப்பினர்கள் கப்பம் பெறுவதற்கு ஆறு வயது குழந்தை கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமையை மூடி மறைப்பதற்கு இராணுவம் உதவுகின்றது. அதன் தொடர்பை நன்கு புரிந்துக் கொள்ளுங்கள். 2007ஆம் ஆண்டு சதீஸ்குமார் சந்திரராசா எனும் நபர் கொலை செய்யப்படுகின்றார். இவரது கொலை தொடர்பில் என்னிடம் அதிக தகவல்கள் இல்லை. ஆனால் மட்டக்களப்பு கோட்டைமுனை கனிஷ;ட வித்தியாலயத்தில் கல்வி கற்று வந்த அவரது மகளான தனுசியா சதீஸ்குமார் என்ற எட்டு வயது சிறுமி 28.04.2009 கட்டத்தப்பட்ட நிலையில் பின்னர் கிணறொன்றிலிருந்து சடலமாக மீட்கப்படுகிறார். 30 மில்லியன் ரூபாய்க்காகவே இச்சிறுமி கட்டத்தப்பட்டுள்ளார். இச்சிறுமியின் கொலையுடன் தொடர்புடையவர்களை கைது செய்யுமாறு மட்டக்களப்பில் 25 மாணவர்கள் தொடர்ந்து ஒன்பது நாட்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர் போராட்டத்தின் பின்னர் இருவர் கைது செய்யப்பட்டிருந்தனர். அதில் ஒருவர் கந்தசாமி ரதீஸ்குமார் மற்றையவர் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் புலனாய்வுத்துறை பிரதானி திவ்யசீலன் ஆகியோர் கைது செய்யப்படுகின்றனர். இவர்கள் இருவரும் இராணுவ புலனாய்வுத்துறையின் அப்போதைய கேர்னல் நிஜாப் முதலிப்-இன் கீழ் பணியாற்றியவர்கள் ஆவர். இந்த கைது செய்யப்பட்ட இருவர் உள்ளிட்ட நால்வரும் ஊரணி அல்லது கல்வியன்காடு பகுதியில் வைத்து இராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்படுகின்றனர். இது இரண்டாவது உதாரணம். டிரிபோலி பிளாட்டூனுடன் அரசாங்கத்திற்கு தேவையான கொலைகளை அரங்கேற்றுவதால் அரசாங்கத்தின் ஒப்பந்தங்களை நிறைவேற்றுவதால் அவர்கள் கொள்ளையடிக்கின்றனர் அவர்கள் கொள்ளையடிப்பதற்கு இடமளிக்கின்றனர். அவர்கள் சிக்கிக் கொண்ட பின்னர் அரசாங்கம் தலையீடு செய்து அவர்களை காப்பாற்றுவதற்காக இந்த மரணங்களை மறைத்துள்ளனர். இவ்வாறான உதாரணங்களை அடுக்கிக் கொண்டே செல்லலாம். மேலும் இவ்வாறு கொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் எனும் போது லசந்த விக்ரமதுங்க பிரதீப் எக்னெலிகொட மாத்திரமே கொலை செய்யப்பட்டவர்கள் என பலரும் எண்ணிக் கொண்டிருக்கக் கூடும். வர்ஷா ஜுட் ரிஜி கொலையின் போது பிள்ளையானின் அப்போதைய ஊடக பேச்சாளராக இருந்த அசாத் மௌலானா அக்கொலை கருணா குழுவினரால் மேற்கொள்ளப்பட்டதாக குறிப்பிட்டிருந்தார். அதே அசாத் மௌலானா மீண்டும் கூறியிருக்கிறார். லசந்த விக்ரமதுங்க பிரதீப் எக்னெலிகொட ஆகியோரின் கொலை தொடர்பான தகவல்கள் தன்னிடம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் தமிழ் ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். நடேசன் என்ற ஊடகவியலாளர் கொலை செய்யப்பட்டுள்ளார். தம்பையா என்ற பேராசிரியர் கொலை செய்யப்பட்டுள்ளார். கிஷேர் என்ற மிகவும் திறமையான விளையாட்டு அதிகாரி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இதற்கும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கும் என்ன தொடர்பு என சிலருக்கு கேள்வி எழலாம். நான் அதற்கு சிறந்த உதாரணமொன்றை தருகிறேன். 2008 மாகாணசபை தேர்தலுக்கு முன்னர் 2019 கோட்டாபய ராஜபக்ஷவின் தேர்தலுக்கு முன்னர் நாட்டில் ஸ்திரமற்ற நிலை ஏற்பட்டு ஸ்திரமற்ற நிலையினூடாக ஆட்சிக்கு வருவதற்கு கோட்டாபயவிற்கு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தேவைப்பட்டதை போன்று 2008ஆம் ஆண்டு கிழக்கு மாகாண தேர்தலுக்கு முன்னர் பிள்ளையான் மற்றும் அம்மாவட்டத்தில் அப்போதிருந்த அரசியல்வாதிகளுக்கு ராஜபக்ஷ ஆட்சியை நிறுவுவதற்கு ஏதேனுமொரு முறைமை தேவைப்பட்டது. அது ஒரு பரீட்சார்த்த நடவடிக்கை. மட்டக்களப்பில் கிழக்கு மாகாணத்தில் பரிசீலிக்கப்பட்ட விடயமே நாடு முழுவதும் செயற்படுத்தப்பட்டது. 2008இல் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் உறுப்பினரான சாந்தன் என்பவர் பட்டப்பகலில் சப்பாத்து கடையொன்றினுள் வைத்து முஸ்லிம்கள் என அடையாளப்படுத்தும் இருவரினால் சுட்டுக் கொல்லப்படுகின்றார். அந்த இருவரில் ஒருவரின் பெயர் ஹுசைன் மற்றையவர் நான் ஏற்கனவே குறிப்பிட்ட பொலிஸ் ஃபாஹிஸ் என்பவர். சாந்தன் எனும் நபர் கொல்லப்பட்டு ஒரு வாரத்திற்குள் தமிழ் குழுவொன்று காத்தான்குடிக்கு சென்று அங்கு 13 பேர் கொல்லப்படுகின்றனர். இதனூடாக காத்தான்குடி கிழக்கு மாகாணத்தில் ஸ்திரமற்ற நிலையொன்று ஏற்பட்டது. இது 2008 மாகாணசபை தேர்தலை அடிப்படையாகக் கொண்டு தேர்தலுக்கு முன்னதாக திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட தாக்குதலாகும். இதன் பின்னர் தற்போது உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தகவல் வெளியானவுடன் எமக்கு நிறைய தகவல்கள் கிடைத்தன. பிள்ளையான் என்ற நபரை சிறையிலிருந்து விடுதலை செய்வதற்கு காரணம் பிள்ளையான் வாயை திறந்தால் அனைவருக்கும் பிரச்சினையாகிவிடும் என பயந்துவிட்டனர். அதனாலே அவரை விடுதலை செய்ய நேரிட்டது. 2018 வவுணதீவு பொலிஸ் நிலையத்தில் இருவர் கொல்லப்பட்ட சம்பவம் குறித்த முறையான அறிக்கை வெளியிட்ட புலனாய்வுத்துறை அதிகாரியொருவர் என்னை சந்தித்தார். அவர் கூறினார் நாம் இதனை கூறினோம். ஆனால் எமது புலனாய்வுத்துறை அறிக்கையை புறக்கணித்துவிட்டனர். 2019இல் தாளங்குடாவில் சஹ்ரானின் தாக்குதலுக்கு முன்னதாக இடம்பெற்ற தாக்குதல் குறித்து நாம் எடுத்துரைத்தோம். அந்த புலனாய்வுத்துறை அறிக்கையை மறைத்துவிட்டனர். பின்னர் தற்போது உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து வந்தவுடன் 2008இல் சாந்தன் என்ற நபரை மட்டக்களப்பில் வைத்து கொலை செய்த ஹுசைன் என்ற நபரின் தற்போதைய பெயர் ரவீந்திரன் குகன். அவரது அடையாள அட்டை இலக்கம் இங்குள்ளது. அவர் மட்டக்களப்பில் உள்ளார். ஆனால் அவர் தற்போது ஹுசைன் என்ற பெயரிலா அல்லது ரவீந்திரன் குகன் என்ற பெயரில் உள்ளாரா என்பது தெரியாது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சர்வதேச விசாரணையொன்றை மேற்கொண்டிருந்தால் தகவல்களை வெளியிட இவர்கள் தயாராக இருந்தனர். ஆனால் தற்போது இவை அனைத்தையும் மூடிமறைத்துள்ளனர். 2005ஆம் ஆண்டு ஜோசப் பரராஜசிங்கம் கொலையுடன் தொடர்புடைய பிள்ளையானுடன் கைது செய்யப்பட்ட கஜன் மாமா என்பவர் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் திடீரென உயிரிழந்தார். மரண விசாரணை முன்னெடுக்கயேனும் இடமளிக்காமல் அவரது சடலத்தை எரித்துவிட்டனர். அதனால் நான் ஜனாபதியிடம் கோருவதுஇ இந்தவொரு பாராளுமன்ற உறுப்பினரை காப்பாற்றுவதற்காக உங்களது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம். அவரை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்துங்கள். விசாரணை நடத்தினால் இந்த சபையில் மூன்று நாட்களை நாம் வீணாக்க தேவையில்லை. இந்த ஒரு நபரை கைது செய்து விசாரணை நடத்தினால் அனைத்து உண்மைகளையும் அறிந்து கொள்ள முடியும். 2005 முதல் இந்த சம்பவங்களுடன் அவர் தொடர்புபட்டுள்ளார். அந்த தொடர்புகளை கண்டறிய முடியும். ஜனாதிபதி தேர்தல் குறித்து அஞ்ச வேண்டாம். அவர்களிடம் வெறும் 50 ஆயிரம் வாக்குகள் மாத்திரமே இருந்தது. அதுவும் கடந்த முறை இருந்த 50 ஆயிரம் தற்போது 20 ஆயிரமாக குறைந்திருக்கும். அதனால் இது குறித்து சர்வதேச விசாரணையொன்றை மேற்கொள்ளுமாறு நான் ஆணித்தரமாக கேட்டுக் கொள்கிறோம். எதிர் வரும் காலங்களில் ஏற்பட இருக்கும் அசம்பாவிதங்களுக்கும் முற்றுப்புள்ளி வையுங்கள். மக்களை காப்பாற்றுங்கள். -(     http://www.samakalam.com/பிள்ளையானை-கைது-செய்து-வ/
    • வடிவேலு மூட்டைப் பூச்சி அடிக்கும் மிசின் கண்டு பிடித்த மாதிரி இவர்களும் ஒவ்வொரு குரங்காய் பிடித்து வைத்து பொருத்துவார்கள் போல.........!   😁
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.