Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொரோனாவும் இலங்கையின் தற்போதைய நிலவரமும்

Featured Replies

  • தொடங்கியவர்

95608911_606664320192922_6103354686046208_n.jpg

  • Replies 1.1k
  • Views 268.1k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மருந்துகளை பாவிக்கவும்

அப்துல்சலாம் யாசீம், கதிரவன், வடமலை ராஜ்குமார்

உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மருந்துகளை பாவிக்குமாறு, கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்களத்தின் மாகாண பணிப்பாளர் திருமதி எஸ்.சிறிதர் கோரிக்கை விடுத்துள்ளார்.

கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்களத்தில்  நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே, அவர் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.

கொரோனா வைரஸைத் தடுப்பதற்கு மருந்துகள் கண்டுபிடிக்காத நிலையில், அதனை தடுக்கும் முகமாக ஆயுர்வேத திணைக்களம் பாரிய முன்னெடுப்புகளை முன்னெடுத்து வருவதாகவும், அதில் ஒரு கட்டமாக உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் பாரிய மருந்து வகைகளை விநியோகம் செய்து வருவதாகவும் அவர் இதன்போது தெரிவித்தார். 

திருகோணமலை மாவட்டத்தில்  கிண்ணியா, நிலாவெளி, கப்பற்றுறை வைத்தியசாலைகளில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் நோக்கில் மருந்துகள் விநியோகம் செய்யப்பட்டு வருவதாகவும், கபச்சுர குடிநீர், பிரண ஜீவனி, HERBAL FUMES போன்ற மருந்துளை பெற்றுக் கொள்ளுமாறும், அவர் தெரிவித்தார். 

இதேவேளை, இஞ்சி, வெள்ளைப் பூடு, கொத்தமல்லி, நெல்லி, சீந்தில் போன்றவற்றை நாளொன்றுக்கு 2 தடவைகள் குடிக்குமாறும் இலகுவான யோகாசனம் உடற்பயிற்சி போன்றவற்றை மேற்கொள்ளுமாறும், பொதுமக்களிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். 

http://www.tamilmirror.lk/திருகோணமலை/நோய்-எதிர்ப்பு-சக்தியை-அதிகரிக்கும்-மருந்துகளை-பாவிக்கவும்/75-249508

  • தொடங்கியவர்

30. 04.2020. 6.30 pm. (வியாழக்கிழமை)

.........................

முழங்காவில் தனிமைப்படுத்த நிலையத்தில் இருந்த நேற்று போதனா வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்ட ஒருவருக்கு தொற்று உறுதி.
( மேற்படி பெண் கடந்த 11 ஏப்ரல் முழங்காவில் பகுதிக்கு கொண்டு வரப்பட்டவர். அவருடைய சகோதரனுக்கு கொரோனா தொற்று என் 13 ஏப்ரல் உறுதிப்படுத்தபட்டது.)

ஏனைய பரிசோதனைக்கு உட்பட்ட 75 பேருக்கு கொரோனா தொற்றில்லையென உறுதி செய்யப்பட்டது.

.........................

இன்று 76 பேருக்கான COVID - 19 பரிசோதனை யாழ் மருத்துவபீட ஆய்வுகூடத்தில் மேற்கொள்ளப்பட்டன.
பரிசோதனைக்குட்பட்டவர்களின் விபரங்கள்:

* போதனா வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டவர்கள் - 9 பேர்.

* போதனா வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவில் பரிசோதிக்கப்பட்டவர்கள் - 7 பேர்.

* ஆதார வைத்தியசாலை தெல்லிப்பளை - ஒருவர்.

* வவுனியா பொது வைத்தியசாலை - 3 பேர்.

* முல்லைத்தீவு பொது வைத்தியசாலை - ஒருவர்.

* முல்லைத்தீவு வெலிஓயா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு - ஒருவர்.

* முல்லைத்தீவு புதுமாத்தளன் தனிமைப்படுத்தல் நிலையம் - 54 பேர்.
(வெலிசர கடற்படை முகாமில் கடமையாற்றிய கடற்படை சிப்பாய் ஒருவருக்கு 26 ஏப்ரல்தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. அந்த நபர் 21 ஏப்ரல் முல்லைத்தீவு பதவிசிரிபுர நோக்கி பயணித்த ஏனைய படைவீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர் )

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு

covid-19-2.jpg

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இதன்காரணமாக மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 666 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 154 ஆக அதிகரித்துள்ளதுடன், இதுவரையில் 7 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/கொரோனா-தொற்றாளர்களின்-எ-41/

  • தொடங்கியவர்

25.jpg

  • தொடங்கியவர்

01.05.2020. 8.45 pm. (வெள்ளிக்கிழமை)

.........................

முழங்காவில் தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்து இன்று போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஒருவருக்கு மட்டும் தொற்று உறுதி ( 40 வயது ஆண்)

.........................

இன்று 39 பேருக்கான COVID - 19 பரிசோதனை யாழ் மருத்துவபீட ஆய்வுகூடத்தில் மேற்கொள்ளப்பட்டன. பரிசோதனைக்குட்பட்டவர்களின் விபரங்கள்:

* போதனா வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டவர்கள் - 14 பேர்.
( இவர்களில் 9 பேர் முழங்காவில் தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்து போதனா வைத்தியசாலையில் இன்று அனுமதிக்கப்பட்ட வர்கள்)

* போதனா வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவில் பரிசோதிக்கப்பட்டவர்கள் - 4 பேர்.

* வவுனியா பொது வைத்தியசாலை - ஒருவர்.

* முல்லைத்தீவு கேப்பாபிளவு தனிமைப்படுத்தல் நிலையம் - ஒருவர் ( 80 வயது முதியவர் இன்று முல்லைத்தீவு பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது இறப்பு உறுதி செய்யப்பட்டவர்)

* பலாலி தனிமைப்படுத்தல் நிலையம் - 4 பேர் ( அரியாலை போதகரோடு கூடிய அளவில் தொடர்பை கொண்ட 20 பேரில் ஏற்கனவே 16 பேர் தொற்று உள்ளவர்களாக உறுதிப் படுத்தப்பட்டு விசேட சிகிச்சைக்காக அனுப்பப்பட்ட நிலையில் எஞ்சியவர்கள் )

* வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு - 10 பேர்.

* பாதுகாப்பு படையினர் தனிமைப்படுத்த நிலையம் , கிளிநொச்சி - 5 பேர்.

  • கருத்துக்கள உறவுகள்

covid-19-2.jpg

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 690 ஆக அதிகரிப்பு!

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இதன்காரணமாக மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 690 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 689 ஆக அதிகரிப்பு!

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 15 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன்காரணமாக மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 689 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 157 ஆக அதிகரித்துள்ளதுடன், இதுவரையில் 7 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/கொரோனா-தொற்றாளர்களின்-எ-42/

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா வைரஸ் – பாதிக்கப்பட்டவர்களின் மாவட்ட ரீதியான விபரம்

covid-3.jpg

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் கொழும்பில் மட்டும் இதுவரை 160 நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சு இன்று (சனிக்கிழமை) காலை வெளியிட்டுள்ள அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

இலங்கையில் இதுவரை கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக 690 பேர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 172பேர் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.

அந்தவகையில் தற்போது கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் மாவட்ட ரீதியான தகவல்கள் சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளன.

அதன்படி கொழும்பில் 160 பேர், களுத்துறை 65, கம்பஹா 53, புத்தளம் 41, குருநாகல் 27, யாழ்ப்பாணம் 16, கண்டி 15, அனுராதபுரத்தில் 12, இரத்தினபுரி மற்றும் கேகாலையில் தலா 8 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதேவேளை மொனராகல 04 பேரும் ஹம்பாந்தோட்டை மற்றும் பதுளையில் தலா 03 பேரும் மாத்தறை, கல்முனை, வவுனியா மற்றும் திருகோணமலையில் தலா 02 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை காலி, மட்டக்களப்பு, மாத்தளை, பொலன்னறுவை பகுதிகளில் தலா ஒருவரும் வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பியவர்களை தனிமைப்படுத்திய மையங்களில் 41 பேரும் இலங்கை திரும்பியிருந்த 03 வெளிநாட்டு பிரஜைகளுக்கும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் வெலிசறை கடற்படை முகாமில் 217 பேரும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நோயாளிகாளாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவ்வாறு நோயாளிகளாக அடையாளம் காணப்பட்டவர்களின் கடற்படையினர் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய 296 பேர் அடங்குவதாகவும் முல்லைத்தீவு, மன்னார், கிளிநொச்சி மற்றும் நுவரெலியாவில் எவரும் தொற்றுக்குள்ளாகவில்லை என்றும் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
 

http://athavannews.com/கொரோனா-வைரஸ்-பாதிக்கப்ப/

  • தொடங்கியவர்

02.05.2020. 9.00 pm ( சனிக்கிழமை)
.........................

இன்றைய பரிசோதனையில் ஒருவருக்கும் கொரோனா தொற்று இல்லையென உறுதி செய்யப்பட்டது.

.........................

இன்று 52 பேருக்கான COVID - 19 பரிசோதனை யாழ் மருத்துவபீட ஆய்வுகூடத்தில் மேற்கொள்ளப்பட்டன. பரிசோதனைக்குட்பட்டவர்களின் விபரங்கள்:

* போதனா வைத்தியசாலை - 5 பேர்.

* போதனா வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவு - 3 பேர்.`

* பொது வைத்தியசாலை முல்லைத்தீவு - 3 பேர்.

* பொது வைத்தியசாலை மன்னர் - 2 பேர்.

* பொது வைத்தியசாலை வவுனியா - 3 பேர்.

* விடத்தல்பளை தனிமைப்படுத்தல் நிலையம் - 36 பேர்.

 

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.

  • தொடங்கியவர்

100.jpg

  • தொடங்கியவர்

Image

  • கருத்துக்கள உறவுகள்

லண்டன், மெல்பர்னில் சிக்கிய இலங்கையர்களை, அழைக்க ஸ்ரீலங்கன் விமானம் பறக்கவுள்ளது…

May 2, 2020

SriLankan-Airlines-800x400.jpg

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பிரித்தானியாவின் லண்டன் மற்றும் அவுஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரங்களில் சிக்கியுள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்துச் செல்ல, விசேட விமான சேவைகளை முன்னெடுக்க ஸ்ரீலங்கன் விமான சேவை தீர்மானித்துள்ளது. வெளிவிவகார அமைச்சின் தலையீட்டுடன் இந்த விசேட விமான சேவை முன்னெடுக்கப்படவுள்ளது.

அதற்கமைய நாளை (03), நாளை மறுதினம் (04) மற்றும் எதிர்வரும் 05 ஆம் திகதிகளில் லண்டனில் இருந்து மூன்று விமான சேவைகளும் மெல்பர்னில் இருந்து ஒரு விமான சேவையும் முன்னெடுக்கப்படவுள்ளது. அதேபோல் எதிர்வரும் 3 ஆம் திகதி முதல் 5 ஆம் திகதி வரை லண்டனில் இருந்து கொழும்பு நோக்கி மூன்று விமான வேவைகளும் முன்னெடுக்கப்படவுள்ளன.

இதற்கும் மேலதிகமாக மே 8 ஆம் திகதி மெல்பர்னில் இருந்து கொழும்பு நோக்கி விசேட விமான சேவை ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக க ஸ்ரீலங்கன் விமான சேவை தெரிவித்துள்ளது.

 

 

http://globaltamilnews.net/2020/142099/

  • தொடங்கியவர்

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 718 ஆக அதிகரிப்பு

In இலங்கை     May 3, 2020 5:55 pm GMT     0 Comments     1284     by : Benitlas

நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் சிலர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 718ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன், நாட்டில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 184 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது

இதேவேளை, இதுவரையில் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/கொரோனா-தொற்றாளர்களின்-எ-47/

  • தொடங்கியவர்

’மட்டக்களப்பில் எவருக்கும் தொற்று இல்லை’

கனகராசா சரவணன், எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த எவருக்கும் இதுவரை கொரோனா தொற்று இல்லை என்றும் தடுப்பு முகாம்களில் தனிமைப்படுத்தப்பட்ட 62 பேருக்கு தொற்று உள்ளமை கண்டுபிடிக்கப்பட்டு, அவர்கள் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும், மட்டக்களப்பு பிராந்திய சுகாதார வைத்திய கலாநிதி எம்.அச்சுதன் தெரிவித்தார்.

சுகாதார பணிமனையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மட்டக்களப்பில் எதுவித கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவாதவாறு தடுப்பு நடவடிக்கையால் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதாகவும் அவர் கூறினார்.

“உலகளாவிய ரீதியில் கொவிட்19 வைரஸ் தாக்கம் அதிகரித்துவருகின்ற நிலையில், இலங்கையில் இந்தத் வைரஸ் தடுப்பு நடவடிக்கை, ஜனாதிபதி தலைமையில் தேசிய மட்டத்தில் செயலணி உருவாக்கப்பட்டு, இதற்கு தேவையான மிகவும் காத்திரமான முடிவுகள் எடுக்கப்பட்டு, எங்களுக்கு அறிவிக்கப்படுகின்றது. அவற்றை மட்டக்களப்பு மாவட்ட சுகாதாரத் திணைக்களம் உன்னிப்பாக நடைமுறைப்படுத்திக் கொண்டுள்ளது” என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

http://www.tamilmirror.lk/மட்டக்களப்பு/மடடககளபபல-எவரககம-தறற-இலல/73-249666

  • தொடங்கியவர்

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.

  • தொடங்கியவர்

Image

  • தொடங்கியவர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் பி.சி.ஆர் பரிசோதனை இன்று முதல் ஆரம்பம் |

(தி.சோபிதன்)

யாழ்.போதனா வைத்திய சாலையில் கொரோனா வைரஸ் தொடர்பான பி.சி.ஆர் பரிசோதனை இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

இதன்படி இன்று வைத்தியசாலையில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள 5 பேர் மற்றும் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெற்ற 9 பேருக்கு வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் பி.சி.ஆர் பரிசோதனை நடத்தப்படவுள்ளது.

குறித்த பரிசோதனைகளின் முடிவுகள் மதியம் வெளியாகும். மேலும் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்படும் மாதிரிகளும் இங்கு உள்ள ஆய்வுகூடத்தில் பரிசோதிக்கப்படும் என்றும் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/81333

  • தொடங்கியவர்

இலங்கையில் கொரோனாவால் 08ஆவது மரணம் பதிவானது

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நிலையில் 08 மரணம் இன்று (04) பதிவாகியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

72 வயதுடைய பெண் ஒருவரே உயிரிழந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

ஹோமாகம வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த குருநாகல் பொல்பெத்திகம பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவி்க்கப்படுகிறது.

இதேவேளை, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 721ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன், 194 பேர் வைரஸ் தொற்றிலிருந்து பூரணமாக குணமடைந்துள்ளதுடன், 519பேர் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.

http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/இலஙகயல-கரனவல-08ஆவத-மரணம-பதவனத/150-249735

  • தொடங்கியவர்

இலங்கையில் கொரோனாவால் 9ஆவது மரணம் பதிவானது

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நிலையில் 9ஆவது மரணம் இன்று (05) பதிவாகியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

'ஐடிஎச்'இல் சிகிச்சை பெற்றுவந்த கொழும்பு 15ஐச் சேர்ந்த 52 வயதுடைய பெண் ஒருவரே உயிரிழந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 755ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன், 197 பேர் வைரஸ் தொற்றிலிருந்து பூரணமாக குணமடைந்துள்ளதுடன், 550பேர் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/இலஙகயல-கரனவல-9ஆவத-மரணம-பதவனத/150-249760

  • தொடங்கியவர்

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.

  • தொடங்கியவர்

95463848_555774312002435_3084265884122873856_n.jpg

  • தொடங்கியவர்

Image

  • தொடங்கியவர்

Image

  • தொடங்கியவர்

Image

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.