Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொரோனாவும் இலங்கையின் தற்போதைய நிலவரமும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா தொற்றுக்குள்ளான கடற்படையினர் பயணம் செய்த ரயில், பஸ் விபரம் அறிவிப்பு

 
Bus-and-Train-696x261.jpg
 41 Views

காங்கேசன்துறை கடற்படை முகாமில் பணியாற்றும் கடற்படையினர் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 21 வயதான பெண் கடற்படை உத்தியோகத்தர் ஒருவர் கடந்த ஐப்பசி 4ம் திகதி காங்கேசன்துறை புகையிரத நிலையத்திலிருந்து அதிகாலை 3.45 மணிக்கு புறப்பட்டு கொழும்பு நோக்கி செல்லும் புகையிரதத்தில் 3ம் வகுப்பு பெட்டியில் பிரயாணம் செய்து காலை 11.30 மணிக்கு கொழும்பு புறக்கோட்டை புகையிரத நிலையத்தை சென்றடைந்துள்ளார்.

பின்னர் அதே தினம் பிற்பகல் கொழும்பு புறக்கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து 4 மணிக்கு புறப்பட்டு காங்கேசன்துறை நோக்கி செல்லும் புகையிரதத்தில் 3ம் வகுப்பு பெட்டியில் பிரயாணம் செய்து இரவு 11.00 மணிக்கு காங்கேசன்துறை புகையிரத நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

மேலும் இதே கடற்படை முகாமைச் சேர்ந்த 31 வயதான ஆண் கடற்படை உத்தியோகத்தர் ஒருவர், புரட்டாதி 27ம் திகதி பதுளை மாவட்டத்தின் வெலிமடையில் உள்ள தனது வீட்டுக்கு விடுமுறையில் சென்றுள்ளார். இவர் கடந்த ஐப்பசி 06 ம் திகதி அதிகாலை 6 மணிக்கு புறப்பட்டு கண்டி நகரத்தை காலை 11 மணிக்கு சென்றடைந்துள்ளார். அங்கிருந்து இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேருந்தில் 11.40 மணிக்கு புறப்பட்டு மாலை 6.30 மணிக்கு யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

மீண்டும் அங்கிருந்து மாலை 6.50 மணிக்கு காங்கேசன்துறைக்கு செல்லும் தனியார் பேருந்தில் பயணித்து இரவு 7.40 மணிக்கு காங்கேசன்துறையை அடைந்துள்ளார்.

மேற்குறிப்பிட்ட புகையிரத வண்டிகளில் 3ம் வகுப்பு பெட்டிகள் மற்றும் பேருந்துகளில் இக் கடற்படை உத்தியோகத்தர்களுடன் பயணித்தவர்கள் வடமாகாண சுகாதார சேவை திணைக்களத்தின் 24மணிநேர அவசர அழைப்பிலுள்ள 0212226666 என்ற இலக்கத்தை தொடர்பு கொண்டு உங்களது விபரங்களை அறியத்தரவும்.

பயணம் செய்தவர்களின் விபரங்களை அறிவிப்பதன் மூலம் உங்களுக்கு கொரோனா தொற்று உள்ளதா எனப் பரிசோதித்து அறியவும் உங்களது குடும்பங்களையும் அயலவர்களையும் கொரோனா தொற்றிலிருந்து பாதுகாக்கவேண்டிய அவசர சேவைகளை உடனடியாக வழங்குவதற்கும் சுகாதார சேவைகள் திணைக்களத்தினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இந்நோய் எமது மாவட்டத்தில் பரவாதிருக்க பயணம் செய்தவர்கள் அச்சமின்றி உங்களின் தகவல்களை வழங்கி ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

 

https://www.ilakku.org/கொரோனா-தொற்றுக்குள்ளான-க/

 
 
 
 
  • Replies 1.1k
  • Views 268.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா அச்சம் – வவுனியா பொது வைத்தியசாலை இன்று தற்காலிகமாக மூடப்பட்டது

கொரோனா நோயாளிகளை வவுனியா பொது வைத்திய சாலைக்குக் கொண்டு செல்லும் அம்புலன்ஸ் காரணமாக வைத்தியசாலைக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்படும் அபாயம் இருப்பதால், இன்று 19 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் எந்தவொரு வெளி நேயாளியையும் வைத்தியசாலையில் அனுமதிப்பதைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.அத்துடன் வைத்தியசாலை வைத்தியர்கள், நிர்வாக ஊழியர்கள் மற்றும் ஏனைய ஊழியர்கள் மாத்திரமே சுகாதாரப் பரிசோத னைக்கு உட்படுத்தப்பட்டு அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இதேவேளை இன்றையதினம் வவுனியா பொது வைத்தியசாலை முழுமையாக கிருமி நீக்கம் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியாவிலுள்ள பூந்தோட்டம் பகுதியில் அமைந்துள்ள தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு இராணுவத்தால் வவுனியா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர்களுக்கு மேற்கொண்ட பி.சி.ஆர் பரிசோதனை மூலம் 3 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து மருத்துவமனையை முடக்கும் தீர்மானம் எடுக்கப்பட்டதாகச் சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.இதனால் இன்று முதல் வெளிநோயாளர்களை வைத்தியசாலையில் அனுமதிக்கும் செயற்பாடு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.(15)

 

http://www.samakalam.com/செய்திகள்/கொரோனா-அச்சம்-வவுனியா-பொ/

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பரிசோதனையில் நேற்று நால்வருக்கு கொரோனா

Oct
coronavirus.600.png
 86 Views

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்று நடத்தப்பட்ட பரிசோதனைகளில் நால்வருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.

இதில் ஒருவர் யாழ்ப்பாணம் பருத்தித்துறையை சேர்ந்தவர் என்றும், மற்றையவர்கள் கம்பஹாவை சேர்ந்த வவுனியா தனிமைப்படுத்தல் முகாமில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் என்றும் தெரியவருகின்றது.

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் வடக்கில் தனிமைப்படுத்தப்பட்ட 160 பேருக்கு பி.சி.ஆர். பரிசோதனை நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

 

https://www.ilakku.org/யாழ்ப்பாணம்-போதனா-வைத்த-2/

 

நோயாளி என அறிவிக்கப்பட்டவர் ஒரிரு நாட்களில் நோயாளியில்லை என அறிவிக்கப்படும் சம்பவங்கள்- பிசிஆர் சோதனை முடிவுகள்குறித்து சந்தேகம்

இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட சில பிசிஆர் பரிசோதனை முடிவுகள் குறித்து சந்தேகங்கள் வெளியாகியுள்ளன.
முதலில் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என அறிவிக்கப்பட்ட பலர் பின்னர் நோயினால் பாதிக்கப்படவில்லை என அறிவிக்கப்பட்ட பல சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
மருத்துவ ஆய்வு கூட தொழில்நுட்பவியலாளர்கள் சங்கத்தின் தலைவர் ரவிகுமுதேஸ் இதனை சுட்டிக்காட்டியுள்ளார்.

PELIYAGODA-PCR-TEST-CORONA-300x150.png
முதல் தடவை நோயாளி என அறிவிக்கப்பட்ட ஒருவர் 14 நாட்களின் பின்னரே நோயாளியில்லை என அடையாளம் காண முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
முதலில் நோயாளி என ஒருவர் அறிவிக்கப்பட்ட நிலையில் அவர் பாதிக்கப்படவில்லை என்ற அறிவிப்பு அடுத்த ஓரிருநாட்களில் வெளியாகின்றது என்றால் அதன் அர்த்தம் ஆய்வு கூடசோதனைகளி;ல் தவறு நிகழ்ந்துள்ளது என்பதே என அவர் தெரிவித்துள்ளார்.
நோயாளி என அறிவிக்கப்பட்டவர்கள் அடுத்த ஒரிருநாட்களில் நோயாளிகள் இல்லை என அறிவிப்பு வெளியாவது குறித்து கரிசனை வெளியாகியுள்ளது என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் தலைமை செயலாளர் மருத்துவர் ஹரிதே அலுத்கே தெரிவித்துள்ளார்.

https://thinakkural.lk/article/81206

  • கருத்துக்கள உறவுகள்

புங்குடுதீவில் நடைமுறைப்படுத்தப்பட்ட தனிமைப்படுத்தல் சட்டம் நீக்கம்

புங்குடுதீவில் கடந்த 5 ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்ட தனிமைப்படுத்தல் சட்டம் இன்று காலை நீக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர், க. மகேசன் தெரிவித்தார்.

கடந்த மூன்று வாரங்களாக யாழ்ப்பாணம் புங்குடுதீவு பகுதி தற்காலிக முடக்கத்திற்கு உள்ளாக்கப்பட்டிருந்தது.

அப்பகுதியில் சுய தனிமைப்படுத்தப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளில் எவருக்கும் தொற்று ஏற்படவில்லை என்று அறிக்கை கிடைத்துள்ளது.

அதனடிப்படையில் புங்குடுதீவு பகுதியானது இன்று காலையிலிருந்து தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.

எனினும் அப்பகுதி மக்கள் சுகாதார நடைமுறைகளினை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று மாவட்டச் செயலாளர் கேட்டுள்ளார்.

அப்பகுதிக்கு சென்று வரும் பொது மக்களும் சுகாதார நடைமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று குறிப்பிட்ட அவர், புங்குடுதீவு தொடர்ந்து சுகாதாரப் பிரிவினரால் கண்காணிக்கப்படும் எனவும் கூறினார்.
 

 

https://www.virakesari.lk/article/92515

  • கருத்துக்கள உறவுகள்

தனிமைப் படுத்தல் நிலையத்திற்கு அனுப்பப்பட்டார் ரிசாத் பதியுதீன்

 
ysYwitx.png
 41 Views

கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீன் தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளார்.

நீர்கொழும்பில் உள்ள பலசேன இளைஞர் குற்றவாளிகளுக்கான பயிற்சி நிலையத்தில் இயங்கும் தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு நேற்றிரவு ரிசாத் பதியுதீன் அனுப்பப்பட்டுள்ளார் என சிறைச்சாலை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் சுகாதார அறிவுறுத்தல்களின் அடிப்படையில் சிறைச்சாலை கைதிகளைத் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுத்ததாகச் சிறைச்சாலை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ரிஷாட் பதியுதீன் நேற்று அதிகாலை தெஹிவளையில் வைத்து சி.ஐ.டி.யினரால் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், இம்மாதம் 27 ஆம் திகதி வரை முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனை விளக்கமறியலில் வைக்கு மாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்தே அவர் தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளார்

https://www.ilakku.org/தனிமைப்-படுத்தல்-நிலையத்/

  • கருத்துக்கள உறவுகள்

மருதங்கேணியில் 21 கொரோனா நோயாளிகள் அனுமதி!

FB_IMG_1603185376127.jpg?189db0&189db0

 

மருதங்கேணி கொரோனா சிகிச்சை வைத்தியசாலையில் கொரோனா தொற்று நோயாளிகள் 11 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிமனை தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்று (19) காலை, மருதங்கேணி கொரோனா வைத்தியசாலை, உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

இந்நிலையில் குறித்த வைத்தியசாலைக்கு நேற்று இரவு 10.30 மணியளவில், வவுனியா தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு, கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட மினுவாங்கொடை பகுதியைச் சேர்ந்த 21 பேர் சிகிச்சைக்காக மாற்றப்பட்டுள்ளார்கள்.

https://newuthayan.com/மருதங்கேணியில்-21-கொரோனா-ந/

 

மினுவாங்கொடை தொற்று 2222 ஆனது!

கம்பஹா – மினுவாங்கொடை ஆடை தொழிற்சாலையின் ஊழியர்களுடன் நெருங்கிப் பழகிய 60 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது இன்று (20) இதுவரை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்படி மினுவாங்கொடை ஆடை தொழிற்சாலை பெண் ஊழியரின் கொரோனா தொற்று காரணமாக தொற்றுக்கு உள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 2,222 ஆக உயர்ந்துள்ளது.

இதன்படி இலங்கையின் மொத்த கொரோனா தொற்று எண்ணிக்கை 5,685 ஆகும்.

https://newuthayan.com/மினுவாங்கொடை-தொற்று-2222-ஆனத/

  • கருத்துக்கள உறவுகள்

கோவிட்-19 கட்டுப்பாடுகள் நாடாளுமன்றத்திற்கு கிடையாது-சுகாதார அமைச்சர்

 
1-67-696x392.jpg
 32 Views

இலங்கை அரசாங்கத்தினால் கோவிட்-19 ஒழிப்பு தொடர்பில் வெளியிடப்பட்ட சுகாதார நடைமுறைகள் அடங்கிய விசேட வர்த்தமானி அறிவித்தல், நாடாளுமன்றத்திற்குள் செலுப்படியாகாது என இலங்கை சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

இலங்கையில் கொரோனா தொற்று மிக வேகமாக பரவிவரும் சூழ்நிலையில், சுகாதார நடைமுறைகளை பின்பற்றி நாடாளுமன்ற அமர்வுகள் நடத்தப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ,கோரிக்கை விடுத்தார்.

அதே நேரம் அரசாங்கத்தினால் வெளியிடப்படும் சுற்று நிருபங்களை பின்பற்றப்பட வேண்டியது அவசியம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இந்நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸாவின் கோரிக்கைக்கு, பதில் அளித்த சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, நாடாளுமன்ற அமர்வுகளுக்குள், குறித்த வர்த்தமானி செலுப்படியற்றது என கூறினார்.

மேலும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பொறுப்புடன், நாடாளுமன்றத்திற்குள் நடந்து கொள்ளவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதையடுத்து கருத்து தெரிவித்த எதிர்கட்சித் தலைவர், நாடாளுமன்றம் பொது இடம் கிடையாது. நாடாளுமன்ற உறுப்பினர்களை பொறுப்புடன் நடந்து கொள்ளுமாறும் சுகாதார அமைச்சர் கோருவது தவறானது என்றார்.

அத்துடன் கோவிட் ஒழிப்பு தொடர்பில் அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலை, நாடாளுமன்றத்திற்குள் நடைமுறைப்படுத்த முடியாதுள்ளமை குறித்து, தான் கவலை அடைவதாகவும் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

https://www.ilakku.org/கோவிட்-19-கட்டுப்பாடுகள்-ந/

நேற்று மட்டும் 180 பேருக்கு கொரோனா; மினுவாங்கொடை தொற்றாளர்கள் 2,342 ஆக அதிகரிப்பு

corona-test.jpgநாட்டில் நேற்று மட்டும் 180 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, மினுவாங்கொடை கொரோனா கொத்தணிப் பரவலுடன் தொடர்புடைய 120 பேர் நேற்று இனங்காணப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து மினுவாங்கொடை கொத்தணிப் பரவலுடன் தொடர்புடைய கொரோனா தொற்றாளர்கள எண்ணிக்கை 2,342 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 5,805 ஆக உயர்வடைந்துள்ளதுடன் 2,335 தொற்றாளர்கள் தற்போது நாடு முழுவதுமுள்ள 21 வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அத்துடன் நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளான 3,457 பேர் குணமடைந்தும் 13 பேர் உயிரிழந்துமுள்ளனர். அதேநேரம் வைரஸ் தொற்று சந் தேகத்தின் பேரில் 297 பேர் வைத்திய கண்காணிப்பில் உள்ளமை குறிப்பிடத் தக்கது.

https://thinakkural.lk/article/81613

களுபோவில வைத்தியாசாலை ஊழியருக்கு கொரோனா-மினுவாங்கொடை பரவலுடன் தொடர்பில்லாதவர்

கொழும்பு களுபோவில வைத்தியாசாலையின் பணியாளர் ஒருவர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளார்.
குறிப்பிட்ட பணியாளர் 15ம் திகதி பணியிலிருந்தவேளை காய்ச்சலால் பாதிக்கப்பட்டார் அதனை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் சோதனையி;ன் போது அவர் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதியாகியுள்ளது என வைத்தியசாலையின் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

corona-update-300x168.jpg
பாதிக்கப்பட்டவர் தெகிவளையை சேர்ந்தவர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
அடையாளம் காணப்பட்டுள்ள நோயாளி கொஸ்கம கொவிட்19 கிசிச்சை நிலையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட நபருக்கும் மினுவாங்கொட பரவலிற்கும் தொடர்பில்லை என வைத்தியசாலையின் இயக்குநர் தெரிவித்துள்ளார்.
அவருடன் நெருங்கிய தொடர்பிலிருந்த 16 ஊழியர்களுடன் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

https://thinakkural.lk/article/81674

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனாவுக்கு மத்தியில் டெங்கு பரவாதிருக்க நடவடிக்கைத் தேவை-சி.யமுனாநந்தா

 
image0-6-696x522.jpeg
 33 Views

கொரோனா தொற்றினை தடுக்க முக கவசங்களை அணிவதோடு மட்டுமல்லாது டெங்கு நோய் பரவுகின்ற சூழ்நிலையினையையும் இல்லாது செய்ய வேண்டும் என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் சி.யமுனாநந்தா கோரிக்கை விடுத்துள்ளார்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போதைய டெங்கு தொற்று நிலைமை தொடர்பில் கருத்து தெரிவித்த அவர்,

“தற்போது டெங்கு நோயானது யாழ்ப்பாண மாவட்டத்தில் மீள பரவ ஆரம்பித்துள்ளது. நேற்று மட்டும் 5 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். இவர்கள் பாசையூர், சுழிபுரம், சுன்னாகம், அரியாலை மற்றும் கோப்பாய் பகுதியைச் சேர்ந்தவர்கள்.

தற்போது மழைகாலம் ஆரம்பித்துள்ளதால் நுளம்பு பெருக்கம் அதிகமாக காணப்படும். எனவே யாழ் மாவட்ட மக்கள் சுற்றுச் சூழலினை மிகவும் தூய்மையாக பேண வேண்டியது அவசியமாகும். குப்பைகள்,பிளாஸ்டிக் போன்றவற்றினை இல்லாமல் செய்வதன் மூலம் டெங்கு நுளம்பு பெருகுவதனை கட்டுப்படுத்தலாம்.

அடுத்ததாக டெங்கு நுளம்பு கடிக்கும் நேரமான காலை 9 மணி வரை அதேபோல் மாலை 4 தொடக்கம் 6 மணி வரை இருக்கும். சிறு பிள்ளைகளுக்கு நுளம்பு கடிக்காமல் இருப்பதற்காக ஆடைகளை உடம்பு முழுவதுமாக போட வேண்டும்.

தற்போது நாட்டில் கொரோனா தொற்றும் அதிகரித்துள்ள நிலையில், டெங்கு தொற்றும் ஏற்படுமாயின் இரட்டை நோய் தொற்று ஏற்பட்டு விடும். மேலும் தொற்றுக்குள்ளானவர்களை சிகிச்சையளிக்க வைத்தியசாலைகள் நெருக்கடிக்குள்ளாகும். எனவே பொது மக்கள் உரிய காப்பு நடவடிக்கைகளை எடுப்பதன் மூலமும் டெங்கு பெருகும் சூழலை எமது பிரதேசத்தில் இல்லாமல் செய்வதன் மூலமும் டெங்கு தொற்று ஏற்படுவதனை தடுக்க முடியும்.

குறிப்பாக வீடுகளுக்கு வெளியே உள்ள புற்கள் புதர்களை சுத்தப்படுத்தி வைத்திருத்தல் வேண்டும். யாழ்ப்பாணத்தில் பெரும்பாலானவர்கள் வீடுகளிற்கு வெளியில் வீதிகளில் குப்பைகளை பொறுப்பற்ற விதத்தில் போடுகின்றார்கள். இது நுளம்பு பெருக்கத்திற்கு ஏதுவாக அமையலாம்.

எனவே பொதுமக்கள் கொரோனா தொற்று ஏற்படா வண்ணம் முககவசங்களை அணிவதோடு மட்டுமல்லாது டெங்கு நோய் பரவுகின்ற சூழ்நிலையினையும் இல்லாது செய்தல் வேண்டும். இவ்வாறு செய்வதனால் நமக்கு ஏற்படக்கூடிய அனாவசியமான இழப்புக்கள், உயிரிழப்புகளை தவிர்க்கலாம்” என்றார்.

 

https://www.ilakku.org/கொரோனாவுக்கு-மத்தியில்-ட/

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து வைத்தியகலாநிதி ஆ. கேதீஸ்வரன் விளக்கம்

 
image0-7-696x522.jpeg
 36 Views

கொரோனா பரவல் நாட்டில் தற்போது தீவிரமடைந்துவரும் நிலையில், இந்நோய் பரம்பலை கட்டுப்படுத்தவதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என வைத்தியகலாநிதி ஆ. கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியகலாநிதி ஆ. கேதீஸ்வரன்,  வடமாகாணத்தில் முன்னெடுக்க வேண்டிய செயற்பாடுகள் குறித்து  தெரிவிக்கையில்,

1. சுகாதார அமைச்சினால் ஏற்கனவே அறிவுறுத்தப் பட்டமைக்கு அமைவாக கூட்டங்கள், ஒன்றுகூடல்கள் வைபவங்களை தவிர்த்துக்கொள்ளவும் அல்லது பிற்போடவும்.

2. சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்ட வர்த்தமானிக்கு அமைவாக, அலுவலகங்கள், பொது நிறுவனங்களில் முக கவசம் அணிதல், கை கழுவுதல், சமூக இடைவெளி பேணுதல், உடல் வெப்பநிலை அளவிடுதல் மற்றம் வருகை தருவோரின் விபரங்கள் பதிவேட்டினை பேணுதல் போன்றவற்றை இறுக்கமாகப் பின்பற்றவேண்டும்.

3. பொது இடங்களில் முககவசம் அணிதல், சமூக இடைவெளி பேணுதல் கட்டாயமாக கடைபிடித்தல் வேண்டும். இல்லையேல் சட்ட நடவடிக்கை எடுக்கப்படலாம்.

4. தவிர்க்க முடியாத கட்டாயமாக நடாத்தப்படவேண்டிய நிகழ்வுகளை மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையான அங்கத்தவர்களுடன் சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றி நடாத்தப்படல் வேண்டும்.

5. வர்த்தக நிலையங்கள், சலூன்கள் உணவகங்கள் போன்றவற்றிற்கு ஏற்கனவே சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்ட வழிகாட்டல்களை இறுக்கமாக கடைப்பிடிக்க வேண்டும்

6. பொதுப் போக்குவரத்து வாகனங்களில் ஆசனங்களுக்கு அளவான பயணிகள் மட்டுமே பயணம் செய்யமுடியும்.

7. காய்ச்சல், இருமல், தடிமன், தொண்டை நோ உள்ளவர்கள் அலுவலகங்கள் அல்லது பொது இடங்களுக்கு செல்வதை தவிர்த்தல் வேண்டும்.

8. இயலுமானவரை நீண்டதூர பயணங்களை தவிர்த்தல் வேண்டும்.

9. பாடசாலைகள் மற்றும் தனியார் கல்வி நிலையங்கள் மறு அறிவித்தல் வரை நடாத்துவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதனை இறுக்கமாக கடைப்பிடிக்கவும்.

10. எனவே பொதுமக்கள் மேற்குறிப்பிட்ட சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி கொரோனா தொற்று பரம்பலை எமது மாகாணத்தில் கட்டுப்படுத்த உதவுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

https://www.ilakku.org/33077-2/

வவுனியாவுக்குள்ளும் ஊடுருவியது கொரோனா; 3 பேருக்கு தொற்று உறுதி

coronavirus_home_page-2.jpgவவுனியா, நெடுங்கேணியில் வீதி அபிவிருத்திப் பணிகளில் ஈடுபட்டுவந்த மூன்று தொழிலாளர்களுக்கு கொரோனா தொற்றியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் பணியில் ஈடுபட்டுள்ள 25 பேருக்கு பி.சி.ஆர். பரிசோனை மேற்கொள்ளப்பட்டது. இதில் மூவருக்கு கொரோனா தொற்றியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

https://thinakkural.lk/article/81892

பேலியகொடை மீன் சந்தையில் 49 பேருக்கு தொற்று!
October 21, 202002
SHARE0

கம்பஹா – பேலியகொடை மீன் சந்தையில் 49 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது இன்று (21) உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த 49 பேரில் 46 பேர் வர்த்தகர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து மீன் சந்தை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது

https://newuthayan.com/பேலியேகொடை-மீன்-சந்தையில/

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளையே அழித்த எங்களுக்கு கொரானா எம்மாத்திரம் ...
இப்போ என்ன பேதி புடுங்குது போல ...? திடீரென  செத்து விழுந்தவர்கள் எல்லாம் எதனால்  செத்தார்கள் என்றே தெரியவில்லை என்று சொல்லிவிட்டு பாடியை எரிக்கும் போதே எங்களுக்கு தெரியும் ,
தேர்தல் முடியும்வரை கொரோனவை கட்டுப்படுத்தியதாக இலங்கை மந்தைகளை மேய்ந்துவிட்டு 
மெதுவாக Brendix இலிருந்து  ஆரம்பித்திருக்கிறார் ங்கோத்தா   (அதுவும் முஸ்லிம்களின் நிறுவனமாமே )
நாளைக்கே இலங்கை பெரும்பாண்மை சிங்கள இனவெறியர்கள்  கொரோனாவில் கடுப்பாகி Brendix  நிறுவனத்தை போய்  எரித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை 

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் அனைத்து மாவட்டங்களுக்கும் கொரோனா பரவும் அபாயம்- வைத்தியர் சுடத்சமரவீர

Sudath-Samaraweera-768x384-696x348.jpg
 39 Views

இலங்கையில் தற்போது 13 மாவட்டங்களுக்கு கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியுள்ளது எனத் தெரிவித்துள்ள தொற்றுநோயியல் பிரிவின் தலைமை அதிகாரி வைத்தியர் சுடத்சமரவீர, ஏனைய மாவட்டங்களுக்கும் பரவினால் அது ஆபத்தில் போய் முடியும் என்று எச்சரித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“குருநாகல், புத்தளம், கேகாலை, கண்டி, காலி, அம்பாந்தோட்டை, யாழ்ப்பாணம், வவுனியா, அனுராதபுரம், பொலனறுவை உட்பட பல மாவட்டங்களில் இருந்தும் விசேடமாக கம்பஹாவிலிருந்தும் நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்“

பேலியகொட மீன் சந்தையில் மீன் விற்பவர்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து மீன் விற்பவர்கள் ஊடாக கொரோனா வைரஸ் நாட்டின் பல பகுதிகளில் பரவும் ஆபத்துள்ளது.

பேலியகொட மீன் சந்தையிலிருந்து நாட்டின் பல பகுதிகளுக்கும் மீன்களை விற்பனை செய்துள்ளனர் எனத் தெரிவித்துள்ள அவர் இதன் காரணமாக தொற்றிற்குள்ளானவர்கள் இருக்கக்கூடும்” என்றார்.

https://www.ilakku.org/இலங்கையில்-அனைத்து-மாவட்/

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்புக்குள்ளும் ஊடுருவியது கொரோனா; பல பகுதிகளில் திடீர் ஊடரங்கு அமுலானது

 
curfew.600.png
 44 Views

கொரோனா பரவல் தீவிரமடைந்து கொழும்புக்குள்ளும் ஊடுருவியிருக்கும் நிலையில், கொழும்பு மாவட்டத்தில் மட்டக்குளி, மோதர, புளுமென்டல், கிரான்ட்பாஸ், வெல்லம்பிட்டி பகுதிகளில் உடனடியாக ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

இராணுவத் தளபதி சவேந்திர சில்வா சற்று முன்னர் இதனை அறிவித்தார். மறுஅறிவித்தல் வரை இந்த ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

கம்பஹா மாவட்டத்தில் நேற்றிரவு முதல் திங்கட்கிழமை ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

https://www.ilakku.org/கொழும்புக்குள்ளும்-ஊடுர/

  • கருத்துக்கள உறவுகள்

ஊரடங்கு காலத்திலும் தொழிற்சாலைகள் இயங்கும் –BOI அறிவிப்பு

1-72-696x405.jpg
 33 Views

கம்பஹா மாவட்டத்தில் அமைந்துள்ள இலங்கை முதலீட்டுச்சபை(BOI) தொழிற்சாலைகள் கொரோனா ஊரடங்கு காலத்திலும் எவ்வித இடையூறுமின்றி இயங்குமென அறிவித்துள்ளது.

கட்டுநாயக்க, பியகம, வத்துபிட்டிவல, மல்வத்த மற்றும் மீரிகம ஆகிய ஏற்றுமதி வலயங்களிலுள்ள நிறுவனங்கள் உற்பத்தியைத் தொடரும் என்பதுடன் சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள சுகாதார பாதுகாப்பு வழிமுறைகள் கண்டிப்பாக கடைப் பிடிக்கப்படும் என்றும்   தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு மேற்குறிப்பிட்ட வலயங்கள் தவிர்ந்த வெளியிடங்களில் அமைந்துள்ள முதலீட்டு சபையில் பதிவு செய்யப்பட்ட தொழிற்சாலைகளும் இயங்கவுள்ளன.

இதேவேளை ஊரடங்கு குறித்த முதலீட்டு சபையின் நடைமுறைகள் அதன் www.investsrilanka.com. இணையத்தளத்தில் உள்ளதாகவும் இலங்கை முதலீட்டுச்சபை அறிவித்துள்ளது.

https://www.ilakku.org/ஊரடங்கு-காலத்திலும்-தொழி/

தெஹிவளை சந்தை தொகுதி மூடல்!

dehiwela-junction.jpg?189db0&189db0

 

கொழும்பு – தெஹிவளை மத்திய சந்தைக் கட்டடத் தொகுதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெஹிவளை பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்துள்ளார்.

பேலியகொட மீன்சந்தை வளாகத்தில் இருந்து தெஹிவளை மத்திய சந்தைப் பகுதிக்கு மீன்களை ஏற்றிவந்த லொறியின் சாரதி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தொற்றுக்குள்ளான குறித்த நபர் தெஹிவளை மத்திய சந்தைக் கட்டடத் தொகுதியில் மீன் விநியோக நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

 

https://newuthayan.com/தெஹிவளை-சந்தை-தொகுதி-மூட/

சற்றுமுன் 259 பேருக்கு தொற்று உறுதி!

கம்பஹா – மினுவாங்கொடை ஆடை தொழிற்சாலை தொடர்பு மற்றும் அதன் தொடர்பால் உருவான துணைக் கொத்தணி காரணமாக இன்று (22) இதுவரை 309 பேருக்கு கொரோனா தொற்றுக்கு உள்ளானமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

பேலியகொடை மீன் சந்தை தொடர்பால் 182 பேருக்கும் மினுவாங்கொடை தொடர்பு காரணமாக பல்வேறு இடங்களில் 75 பேர், தனிமைப்படுத்தல் மையத்தில் இருவர் என 77 பேருக்கு இவ்வாறு தொற்று உறுதியானது.

இதன்படி மினுவாங்கொடை ஆடை தொழிற்சாலை தொடர்பு மற்றும் அதன் தொடர்பால் உருவான துணைக் கொத்தணி காரணமாக தொற்றுக்கு உள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 2,817 ஆக உயர்ந்துள்ளது.

https://newuthayan.com/சற்றுமுன்-259-பேருக்கு-தொற்/

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று மட்டும் 309 கொரோனா தொற்றாளர்கள்; மொத்த எண்ணிக்கை 6,287 ஆக உயர்வு

 
corona-sl.600.png
 8 Views

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுடன் நேற்று மாத்திரம் 309 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

பேலியகொடை மீன் சந்தைப் பகுதியில் 188 பேருக்கும், தனிமைப்படுத்தப்பட்ட நிலையங்களில் இருந்த 02 பேருக்கும், கட்டுநாயக்கவில் 22 பேருக்கும், மினுவாங்கொடை கொரோனாத் தொற்றாளர்களுடன் நெருங்கிய தொடர்பைப் பேணிய 97 பேருக்கும் நேற்று கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 6 ஆயிரத்து 287ஆக உயர்வடைந்துள்ளது. அவர்களில் 3 ஆயிரத்து 561 பேர் குணமடைந்துள்ளனர். 2,712 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 14 பேர் உயிரிழந்துள்ளனர்.

https://www.ilakku.org/நேற்று-மட்டும்-309-கொரோனா-தொ/

  • கருத்துக்கள உறவுகள்

மோசமடையும் இலங்கை நிலை; ஒரே நாளில் 865 கொரோனா நோயாளர்கள் அடையாளம்

 
coronavirus.600.png
 4 Views

இலங்கையில் ஒரே நாளில் 865 கொரோனா வைரஸ் நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மினுவாங்கொட கொரோனா வைரஸ் பரவலுடன் தொடர்புடைய மேலும் 256 நோயாளிகள் இனம் காணப்பட்டுள்ளதை தொடர்ந்து இன்று இனம் காணப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 865 ஆக அதிகரித்துள்ளது.

இறுதியாக அடையாளம் காணப்பட்ட 256 பேரில் 39 பேர் பேலியகொட மீன் சந்தையுடன் தொடர்புபட்டவர்கள்.

 

https://www.ilakku.org/மோசமடையும்-இலங்கை-நிலை-ஒ/

  • கருத்துக்கள உறவுகள்

மருதானை, தெமட்டக்கொடை பகுதிகளில் உடனடியாக ஊடரங்கு; மறு அறிவித்தல் வரை தொடரும்

Ocurfew.600.png
 15 Views

கொழும்பு மாவட்டத்தில் மருதானை, தெமட்டக்கொடை பகுதிகளில் இன்றிரவு முதல் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. மறு அறிவித்தல் வரை இந்த ஊரடங்கு தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே கம்பஹா மாவட்டத்திலும், கொழும்பு, களுத்துறை மாவட்டங்களின் பல பகுதிகளிலும் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

https://www.ilakku.org/மருதானை-தெமட்டக்கொடை-பக/

  • கருத்துக்கள உறவுகள்

மூடப்பட்டது திருகோணமலை மீன் சந்தை!

October 24, 2020

திருகோணமலை மத்திய மீன் சந்தையில் ஆறு பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் குறித்த மீன் சந்தை முழுமையாக மூடத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குறித்த கொரோனா தொற்றாளர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்களை அடையாளம் காண நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகச் சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.

 

https://thinakkural.lk/article/82779

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கு மாகாணத்தில் 27பேர் கொரோனா தொற்று உறுதி

 
IMG_0112-696x522.jpg
 18 Views

கிழக்கு மாகாணத்தில் 27பேர் கொரோனா தொற்றுக்குள்ளானது இன்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் அழகையா லதாகரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் காரியாலயத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மினுவாங்கொடை ஆடைத்தொழிற்சாலையினை தொடர்ந்து பேலியகொட மீன் சந்தையில் ஏற்பட்ட கொரோனா தொற்று பரவல் அடிப்படையில் கிழக்கு மாகாணத்தில் மினுவான்கொடை மீன் சந்தையுடன் தொடர்புபட்டவர்கள் அடையாளப்படுத்தப்பட்டு பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.

இதனடிப்படையில் திருகோணமலை மாவட்டத்தில் 06பேரும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 11பேரும் கல்முனை பிராந்தியத்தில் 08பேரும் வேறு வழிமுறையில் தொற்றுக்குள்ளான ஒருவரும் கொரோனா தொற்றியுள்ளதாக இன்று உறுதிப்படுத்திய அதேவேளை, நேற்று அம்பாறை சுகாதார பணிமனைக்குட்பட்ட தெவிலிப்பிட்டிய பகுதியில் பொது நிகழ்வில் கலந்துகொண்ட ஒருவருக்கும் கொரோனா தொற்று உள்ளது உறுதிப்படுத்தப்பட்டது.

திருகோணமலை மாவட்டத்தில் 25பேர் நேற்று அடையாளம் காணப்பட்டு பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், ஆறு பேர் உறுதிப்படுத்தப்பட்டனர். இப்பகுதியில் மேலும் பலர் இருக்கலாம் என்ற அடிப்படையில் அவர்களையும் தேடி கண்டுபிடித்து பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு 150க்கும் மேற்பட்டவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.அவர்கள் அனைவரும் சுயதனிமைப்படுத்தப்பட்டு அந்ததந்த காலத்திற்கு ஏற்ற வகையில் பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுத்திருக்கின்றோம்.

இதேபோன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரதானமாக வாழைச்சேனை, கோறளைப்பற்று மத்தி பிரதேசத்தில் இந்த மீன்சந்தையுடன் தொடர்புடையவர்கள் 65 பேர் அடையாளம் காணப்பட்டார்கள். இந்த 65 பேரில் 25பேருக்கு நேற்று பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இவர்களில் 11பேருக்கு கொரோனா உள்ளதாக அடையாளம் காணப்பட்டது.

ஏனைய 40பேருக்கும் இன்றும் நாளையும் பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.இருந்தபோதிலும் அனைவரும் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதேபோன்று கல்முனையில் 34பேர் அடையாளப்படுத்தப்பட்டு அவர்களில் 17பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இவர்களில் எட்டுப்பேருக்கு கொரோனா உள்ளது உறுதிப்படுத்தப்பட்டது. இந்த வைரஸின் தாக்கம் ஒரு குறித்த பகுதிக்கு மட்டும் மட்டுப்படுத்தப்படாமல் கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை தொடக்கம் பொத்துவில் வரையில் இதன் தாக்கம் காணப்படுகின்றது.

கண்ணுக்கு தெரிந்த, அறிந்தவர்களையே நாங்கள் நாடிச்சென்று சோதனை முன்னெடுத்துள்ளோம். எங்களுக்கு தெரியாமல் பலர் தொற்றுடன் காணப்படலாம். நாங்கள் கேட்டுக்கொள்வது என்னவென்றால் யாராவது நபர்கள் பேலியகொட மீன்சந்தையில் நேரடியாக தொடர்புபட்டவர்களாக இருந்தால், அல்லது அவர்களை நீங்கள் யாராவது அடையாளம் கண்டால் உடனடியாக அருகில் உள்ள சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கோ அல்லது பொதுச்சுகாதார பரிசோதகருக்கோ அல்லது அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கோ அறிவிக்கவும்.

ஆரம்பத்திலேயே நாங்கள் எடுக்கும் நடவடிக்கைகள் சரியான வகையிலும் அனைவரையும் அடையாளப்படுத்தி மேற்கொள்ளும்போது இந்த தொற்றும் வீரியத்தினையும் பரவும் அளவினையும் கட்டுப்படுத்தமுடியும். இனிவரும் காலங்கள் மிகவும் சவாலான காலங்கள். கிழக்கு மாகாணத்திலும் தொற்று பரவ ஆரம்பித்திருக்கின்றது.

கண்ணுக்கு தெரியாத எதிரியுடன் நாங்கள் போராடிக்கொண்டிருக்கின்றோம். இதனை சுகாதார திணைக்களத்தினாலோ பொலிஸாரினாலோ பாதுகாப்பு தரப்பினராலோ மட்டும் கட்டுப்படுத்தமுடியாது. ஊடகத்துறையினரும் பொதுமக்களும் இணைந்து சுமுகமான முறையில் மிக அவதானமாக நடவடிக்கைகளை முன்னெடுக்கும்போது இந்த  தொற்றின் அளவினை நாங்கள் நிச்சயமாக கட்டுப்படுத்தி அதற்குரிய நடவடிக்கைகளை எங்களால் மேற்கொள்ளமுடியும்.” என்று தெரிவித்துள்ளார்.

https://www.ilakku.org/கிழக்கு-மாகாணத்தில்-27பேர/

  • கருத்துக்கள உறவுகள்

நெடுங்கேணியில் அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்கள் : இன்று மேலும் 07 பேருக்கு தொற்று உறுதி

வவுனியா நெடுங்கேணியில் வீதி அபிவிருத்தி பணிகளில் ஈடுபட்டுவந்த மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

நெடுங்கேணி பகுதியில், வீதி அபிவிருத்திப்பணியில் ஈடுபட்டுவந்த ஊழியர்களுக்கு முதல் தடவையாக கொரோனாவுக்கான பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டபோது 3 பேர் அடையாளம் காணப்பட்டனர். இந்நிலையில் அங்கு பணியாற்றும் ஏனையவர்களிடமும் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 

நெடுங்கேணி வரைபடம்

இதனையடுத்து கடந்த 4 நாட்களுக்கு முன்னர் 27 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனையில்  தொற்றுக்குள்ளான இருவர் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை மேலும் 83 பேரிடம் பி.சி.ஆர் சோதனை நடத்தப்பட்டது.  இதில் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து தற்போது  நெடுங்கேணி வீதி அபிவிருத்தி பணியாளர்களில் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. 

https://www.virakesari.lk/article/92888

தொடங்கொடவில் 50 வீடுகளுக்கு போக்குவரத்து கட்டுப்பாடு

களுத்துறை மாவட்டத்தில் மீகஹதென்ன பொலிஸ் பிரி விற்குட்பட்ட 5 கிராமங்களுக்குப் போக்குவரத்து கட்டுப் பாடு விதிக்கப்பட்டுள்ளது.

வேதவத்த /மகாலந்தாவ தெற்கு / மகுருமஸ்வில / குலா விட்ட வடக்கு மற்றும் குலாவிட்ட  தெற்கு ஆகிய 5 கிராமங் களுக்குப் போக்குவரத்து கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள் ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

CURFEW-1.jpeg

இதற்கிடையில், தொடங்கொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெபிலியவத்த கிராமத்தில் சுமார் 50 வீடுகளுக்குப் போக் குவரத்து தடை விதிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றாளர்கள் தொடர்பான அறிக்கை களைக் கருத்தில் கொண்டு குறித்த கிராமங்களுக்குப் போக்குவரத்து கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்

https://thinakkural.lk/article/82929

  • கருத்துக்கள உறவுகள்

மூடப்பட்டது வவுனியாவின் மரக்கறி மொத்த வியாபர நிவையம்

வவுனியா மரக்கறி மொத்த வியாபார நிலையத்தில் தொற்று நீக்கும் செயற்பாட்டுக்காக இன்று மூடப்பட்டுள்ளது. 

spacer.png

வவுனியா மாவட்ட செயலாளர் சமன் மந்துலசேனவின் வேண்டுகோளுக்கு அமையவே இச்செயற்பாடு முன்னெடுக்கப்பட்டிருந்தது. 

spacer.png

குறிப்பாக இலங்கையில் அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் இனங்கானப்பட்டுள்ளதுடன், வவுனியா மாவட்டத்திலும் 12 பேர் வரை கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்தனர். 

spacer.png

இதனையடுத்து அதிகளவான மக்கள் செல்கின்ற இடமான வவுனியா மரக்கறி மொத்த வியாபர நிலையம் முழுமையாக மூடப்பட்டு தொற்று நீக்கும் செயற்பாடு இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. 
 

https://www.virakesari.lk/article/92920

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.