Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஸ்ரீலங்காவில் கொரோனா பீதி! யாழ். களநிலவரம் என்ன? நேரடி ரிப்போர்ட்

Featured Replies

வடக்கில் படிப்படியாக ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடு தளர்வு: வடக்கு சுகாதார பணிப்பாளரின் அறிவிப்பு

In இலங்கை     April 16, 2020 11:57 am GMT     0 Comments     1992     by : Litharsan

யாழ்ப்பாணத்தில் ஊரடங்குச் சட்டம் உள்ளிட்ட கட்டுப்பாடுகளைத் தளர்த்த தற்போது சாத்தியமில்லை என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அத்துடன், வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணம் தவிர்ந்த ஏனைய 4 மாவட்டங்களிலும் அடுத்த வாரம் முதல் ஊரடங்குச் சட்டம் உள்ளிட்ட கட்டுப்பாடுகளை படிப்படியாக நீக்க முடியும் என பரிந்துரைகளை வழங்கவுள்ளதாகவும் அது தொடர்பாக மாவட்டச் செயலாளர்களுடன் பேச்சு நடத்தப்படவுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதியுடனான சந்திப்பின் பின்னர், யாழ்ப்பாணத்தில் உள்ள மாகாண சுகாதார சேவைகள் பணிமனையில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் கூறுகையில், “கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களில் சமூக மட்டத்தில் முதலாம் கட்டப் பரிசோதனைகளை முன்னெடுத்திருந்தோம். எனவே எதிர்வரும் நாட்களில் அந்த மாவட்டங்களில் இரண்டாம் கட்டப் பரிசோதனைகளை முன்னெடுக்கவுள்ளோம்.

அதன்போது எந்தவொரு சமூக மட்ட வைரஸ் தொற்றும் உறுதிப்படுத்தப்படாவிட்டால் அந்த 4 மாவட்டங்களிலும் ஊரடங்குச் சட்டம் உள்ளிட்ட கட்டுப்பாடுகளைப் படிப்படியாக நீக்க முடியும்.

யாழ்ப்பாணம், பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் கடந்த மார்ச் மாதம் 23ஆம் திகதி தொடக்கம் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த 20 பேரில் 16 பேருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிசெய்யப்பட்டது. அவர்கள் எந்தவகையிலும் சமூக மடத்தில் தொடர்பை வைத்திருக்கவில்லை. எனவே யாழ்ப்பாணம் மக்கள் அச்சமடையத் தேவையில்லை.

அத்துடன், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நேற்றுவரை சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட 140 பேரிடம் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன. அவர்கள் 140 பேருக்கும் வைரஸ் தொற்று இல்லை என்றே முடிவு கிடைத்துள்ளது.

எனவே, யாழ்ப்பாணம் அரியாலையில் கடந்த மார்ச் 15ஆம் திகதி சுவிஸ் போதகர் நடத்திய ஆராதனையில் பங்குபற்றிய 320 பேருக்கும் தொடர்ந்து வரும் நாள்களில் பரிசோதனைகளை முன்னெடுக்கவுள்ளோம்.

அந்தப் பரிசோதனைகளின் முடிவில் கடும் தாக்கம் உள்ளவர்களுக்கு இரண்டாம் கட்டப் பரிசோதனைகளை முன்னெடுப்போம். அந்தப் பரிசோதனைகளின் நிறைவில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் சமூக மட்டத் தொற்றுக்கான அபாயம் இல்லை என்று உறுத்திப்படுத்தப்பட்ட பின்னரே ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதற்கு பரிந்துரைகளை வழங்குவோம்” என்றார்.

இதேவேளை, “யாழ்ப்பாணத்தில் உடனடியாக ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படக்கூடிய பகுதிகளாக தீவகம், தென்மராட்சி, வடமராட்சி மற்றும் மருதங்கேணி பிரதேச செயலக பிரிவுகள் காணப்படுகின்றன. ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் போது அந்தப் பகுதிகளே தளர்த்தப்படும்.

அதன்பின்னர், சுவிஸ் போதகரின் வழிபாட்டில் பங்கேற்றவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நல்லூர், யாழ்ப்பாணம், உடுவில், சண்டிலிப்பாய் சுகாதார சேவைகள் பிரிவுகள் தவிர்ந்த யாழ்ப்பாணத்தின் ஏனைய பகுதிகளில் தளர்த்தப்படும்.

நான்கு பிரிவுகளிலும் தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டால் பின்னர் அந்தப் பகுதிகளுக்கும் ஊரடங்கு தளர்த்தப்படும்” என அவர் தெரிவித்தார்.

http://athavannews.com/வடக்கில்-ஊரடங்கு-மற்றும்/

  • Replies 134
  • Views 11.4k
  • Created
  • Last Reply

யாழில் இன்றைய கொரோனா நிலவரம்! பணிப்பாளர் சத்தியமூர்த்தி வெளியிட்ட பரிசோதனை முடிவு

இன்றைய (16) தினம் யாழில் மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனைகளில் ஒருவருக்கும் கொரோனா தொற்று இல்லை என யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

இன்று 20 பேருக்கு யாழில் கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

யாழ் போதனா வைத்தியசாலையில் மூவர், கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் மூவர் மற்றும் சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவை சேர்ந்த 16 பேர் என மொத்தமாக இன்று 20 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அவர்களில் எவருக்கு கொரோனா தொற்று இல்லை என யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி சற்று முன்னர் உறுதி செய்துள்ளார்.

இதேவேளை யாழில் நேற்று இருவருக்கும் நேற்று முன்தினம் 8 பேருக்கும் கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://www.ibctamil.com/srilanka/80/141343

யாழில் ஊரடங்கு எப்போது தளர்த்தப்படும்? சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ள கருத்து

186shares
 
 

யாழில் தொடர்ந்து அமுலில் உள்ள ஊரடங்கு சட்டத்தை தளர்த்துவது தொடர்பில் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் தவிர்ந்த கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் உள்ளிட்ட கட்டுப்பாடுகளை படிப்படியாக தளர்த்தும் ஆலோசனையை வழங்கவுள்ளதாக கூறியிருக்கும் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்,

யாழ்.மாவட்டத்தில் சமூக மட்டத்தில் கண்காணிக்கப்படுபவர்களுக்கு பரிசோதனைகள் நிறைவு செய்யப்பட்டு ஆபத்தில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டதன் பின்பே ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகளை தளர்த்தும் சிபார்சை வழங்க முடியும் எனவும் கூறியுள்ளார்.

ஜனாதிபதியுடனான சந்திப்பின் பின்னர் இன்று காலை மாகாண சுகாதார சேவைகள் பணிமனையில் ஊடகங்களை சந்தித்து கருத்து தொிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இது தொடர்பாக மேலும் அவர் கூறுகையில்,

வடமாகாணத்தில் யாழ்ப்பாணம் தவிர்ந்த 4 மாவட்டங்களில் சமூக மட்டத்தில் கண்காணிக்கப்படுபவர்களுக்கு 2ம் கட்ட பரிசோதனை அடுத்த சில நாட்களில் நடாத்தப்படவுள்ளது. இதன்போது தொற்றுக்குள்ளானவர்கள் அடையாளம் காணப்படாதவிடத்து,

அடுத்தவாரமே ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகளை தளர்த்தும் சிபார்சினை வழங்க தீர்மானித்துள்ளோம். ஆனால் யாழ்.மாவட்டத்தில் 17 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர், 320 பேர் சமூக மட்டத்தில் காண்காணிக்கப்படுகின்றனர்,

1200 வெளிநாட்டவர்கள் உள்ளனர். இந்நிலையில் கண்காணிக்கப்படுபவர்களில் 140 பேருக்கு பரிசோதனை நடாத்தப்பட்டுள்ளது. மற்றையவர்களுக்கும் பரிசோதனை நடாத்தப்படும். அதன் ஊடாக சமூக மட்டத்தில் ஆபத்தில்லை. என்பது உறுதிப்படுத்தப்பட்டதன் பின்பே ஆளுநர் மாவட்ட செயலருடன் கலந்துரையாடி ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகளை தளர்த்தும் ஆலோசனையை வழங்க முடியும் என்றார்.

https://www.ibctamil.com/srilanka/80/141332

 

யாழில் மதுபானசாலைகளில் இருப்பு கணக்கிடப்பட்டு சீல் வைப்பு!

In இலங்கை     April 17, 2020 11:21 am GMT     0 Comments     1434     by : Litharsan

Sealing-of-liquor-shops-in-Jaffna.jpg

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பாதுகாப்பு முன்னேற்பாடாக மதுபான சாலைகளில் இருப்பு கணிப்பீடு செய்யப்பட்டு முத்திரையிடப்படுவதாக (சீல்) மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கில் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்குச் சட்டம் தற்காலிகமாக தளர்த்தப்படும் மாவட்டங்களில் மதுபானசாலைகளைத் திறக்க அனுமதியில்லை என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நாட்டில் கொரோனா வைரஸ் அபாய வலயங்களாக பிரகடனப்படுத்தப்பட்ட மாவட்டங்களில் மதுபானசாலைகள் மதுவரித் திணைக்களத்தினரால் பூட்டப்பட்டு முத்திரையிடப்படுகிறது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக யாழ்ப்பாணத்தில் மதுபானசாலைகளில் உள்ள மதுபானங்களின் இருப்புகள் கணக்கெடுக்கப்பட்டு முத்திரையிடப்படுகின்றன. இந்தப் பணி நேற்று (வியாழக்கிழமை) வலிகாமத்தில் முன்னெடுக்கப்பட்டது.

ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டாலும் மறு அறிவிப்புவரை மதுபானசாலைகளை மூடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன் காரணமாகவே மதுவரித் திணைக்களத்தினரால் மதுபானசாலைகளுக்கு முத்திரையிடப்படுகிறது.

இதேவேளை, யாழ்ப்பாணத்தில் பல இடங்களில் சட்டத்துக்குப் புறம்பாக கசிப்பு உற்பத்தி அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Sealing-of-liquor-shops-in-Jaffna-2.jpg

ஊரடங்கு வேளையில் யாழில் இருந்து கொழும்பு செல்ல முயன்ற பெண் கைது! விசாரணையில் வெளியான தகவல்

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் ஊரடங்குச் சட்டத்தை மீறினர் என்ற குற்றச்சாட்டில் 19 பேர் இன்று வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் அனைவரும் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன், 19 பேருக்கும் வரும் ஜூலை மாதம் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாகவும் கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணத்தில் ஊரடங்குச் சட்டம் கடந்த மார்ச் 24 ஆம் திகதி தொடக்கம் தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

அதனால் பலரும் மரக்கறி உள்ளிட்ட விவசாயப் பொருள்களை விவசாயிகளிடம் வாங்கி விற்பனை செய்து வருகின்றனர். அவர்களில் பலர் பிரதேச செயலரிடம் ஊரடங்கு அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொண்டுள்ளனர்.

சிலர் அனுமதி பெறாமல் ஊரடங்கு வேளையில் வீதியில் வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவ்வாறு ஊரடங்கு அனுமதிப்பத்திரமின்றி வியாபாரத்தில் ஈடுபட்டவர்கள் 10 இற்கும் மேற்பட்டவர்கள் கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

வெளிநாடு செல்ல கொழும்புக்கு புறப்படுவதாகத் தெரிவித்த பெண் ஒருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

ஊரடங்குச் சட்டத்தை மீறினர் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 19 பேரும் இன்று பிற்பகல் பொலிஸ் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டதுடன், வரும் ஜூலை மாதம் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுமாறு தவணையும் வழங்கப்பட்டது.

https://www.ibctamil.com/srilanka/80/141412?ref=home-imp-flag

 

சற்று முன் வெளியான அறிக்கை: யாழில் இன்று 50 பேருக்கு பிசிஆர் பரிசோதனை

யாழில் 50 பேரிடம் இன்று மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் ஒருவருக்கும் கோரோனா வைரஸ் தொற்று இல்லை என அறிக்கை கிடைத்துள்ளது.

இந்த தகவலை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் அரியாலையில் உள்ள தேவாலயத்தில் கடந்த மார்ச் 15 ஆம் திகதி சுவிஸ் போதகர் தலைமையில் நடைபெற்ற ஆராதனையில் பங்கேற்றவர்கள் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா என வடக்கு மாகாணத்தில் அவர்களது வீடுகளில் சுயதனிமைப்படுத்தலுக்கு உள்படுத்தப்பட்டுள்ளனர்.

அவர்களது சுயதனிமைப்படுத்தல் காலம் நிறைவடையும் நிலையில் அவர்களது மாதிரிகள் ஆய்வுகூடப் பரிசோதனைக்கு உள்படுத்தப்படுகின்றன.

இந்த நிலையில் இன்று (ஏப்ரல் 17) வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுக்குட்பட 30 பேரிடமும் கிளிநொச்சியைச் சேர்ந்த 11 பேரிடமும் மாதிரிகள் பெறப்பட்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடத்தில் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டன.

அவர்கள் 41 பேருக்கும் கோரோனா வைரஸ் தொற்று இல்லை என அறிக்கை கிடைத்துள்ளது.

இதேவேளை, வெளிநாடுகளிலிருந்து திரும்பி வீடுகளில் சுயதனிமைப்படுதலுக்கு உள்படுத்த 5 பேரிடமும் கொரோனா வைரஸ் அறிகுறியுடன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட மூவரும் வவுனியா வைத்தியசாலையிலிருந்து ஒருவரும் என 9 பேரிடமும் மாதிரிகள் பெறப்பட்டு பிசிஆர் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டது.

இந்த நிலையில் சுவிஸ் போதகரின் ஆராதனையில் பங்பேற்ற 41 பேருக்கும் ஏனைய 9 பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

https://www.ibctamil.com/srilanka/80/141414

 

சமுர்த்தி கொடுப்பனவில் ஏற்பட்ட வாக்குவாதம்: யாழில் நஞ்சு அருந்தி உயிரை மாய்க்க முயற்சித்த குடும்ப பெண்

கிராம மக்களுக்கு உதவிப்பொருள்கள் வழங்கும் திட்டத்தில் சமுர்த்தி உத்தியோகத்தர் பாரபட்சம் காட்டியதாக எழுந்த முரண்பாட்டையடுத்து 25 வயதுடைய இளம் குடும்பப் பெண் ஒருவர் நஞ்சு அருந்தி உயிரை மாய்க்க முயற்சித்துள்ளார்.

நஞ்சு அருந்திய அவரை உறவினர்கள் உடனடியாக அழைத்துச் சென்று சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

இந்தச் சம்பவம் கொடிகாமம் பலாவி பகுதியில் இன்று (ஏப்ரல் 17) வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.

இந்தச் சம்பவம் தொடர்பில் கொடிகாமம் பொலிஸார் தெரிவித்ததாவது;

தென்மராட்சி பாலாவி பகுதியில் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் ஊடாக உதவிப்பொருள்கள் வழங்கும் செயற்பாடு நேற்று முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது இரண்டு குடும்பங்களுக்கு உதவிப்பொருள்களை வழங்க சமுர்த்தி உத்தியோகத்தர் மறுத்துள்ளார். புதிய பதிவுடைய குடும்பங்களுக்கு தற்போது வழங்க முடியாது. ஏனையோருக்கு வழங்கப்பட்ட பின்னரே புதிய பதிவுடையவர்களுக்கு வழங்குவது தொடர்பில் தீர்மானிக்க முடியும் என்றும் சமுர்த்தி உத்தியோகத்தர் தெரிவித்துள்ளார்.

இதனால் உதவிப்பொருள்கள் வழங்கப்படாத இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள், சமுர்த்தி உத்தியோகத்தருடன் முரண்பட்டதுடன் தாக்குதல் நடத்தவும் முற்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கொடிகாமம் பொலிஸாருக்கு சமுர்த்தி உத்தியோகத்தரால் முறைப்பாடு வழங்கப்பட்டது. எனினும் தற்போதைய சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு இரு தரப்பினரையும் அழைத்து இணக்கமாகச் செல்லுமாறு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியால் அறிவுறுத்தப்பட்டு, அனுப்பிவைக்கப்பட்டனர்.

எனினும் இன்று வெள்ளிக்கிழமை சமுர்த்தி உத்தியோகத்தர் அந்தப் பகுதிக்குச் சென்று மீளவும் இந்தப் பிரச்சினையை வைத்து, அந்தப் பகுதியைச் சேர்ந்த சமுர்த்தி பயனாளிகளையும் அழைத்து தன்னுடன் முரண்பட்டவர்களை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்துமாறு கேட்டுக்கொண்டார்.

சம்பவம் இடத்துக்குச் சென்ற பொலிஸார், தற்போதைய சூழ்நிலையில் மக்களை ஒன்றுகூட்ட வேண்டாம் என்று சமுர்த்தி உத்தியோகத்தரைக் கேட்டுக்கொண்டனர்.

எனினும் அவர் உடன்பட மறுத்தார். இதற்கு இடையில் சமுர்த்தி உத்தியோகத்தர் தனக்கு அவமானத்தை ஏற்படுத்துகிறார் என்று குற்றஞ்சாட்டிய 25 வயதுடைய குடும்பப் பெண் நஞ்சு அருந்தி உயிரை மாய்க்க முற்பட்டார்.

அவரை உறவினர்கள் உடனடியாக அழைத்துச் சென்று சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதித்தனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

தற்கால நிலமையில் உதவிப்பொருள்கள் வழங்கப்படும் போது அனைவருக்கு அவை சென்றடைய வேண்டும். அதுதொடர்பில் அதிகாரிகள் கவனம் செலுத்தவேண்டும் என்பது அனைவரது எதிர்பார்ப்பாகும்.

https://www.ibctamil.com/srilanka/80/141413

  • தொடங்கியவர்

92531984_10220027488890261_5541612975644

அரியாலை கூட்டத்தில் கலந்து கொண்ட இருவர் கொரோனாவிலிருந்து குணமடைவு -நாளை வீடு திரும்புகின்றனர்

பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் கண்காணிப்பிலிருந்த நிலையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி வெலிகந்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இருவர், முழுமையாகக் குணமடைந்து நாளை வீடு திரும்பவுள்ளனர்.

இந்தத் தகவலை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

அவர்கள் வீடுகளுக்கு திரும்பினாலும் 14 நாள்கள் சுயதனிமைப்படுத்தலுக்கு வீட்டிலேயே இருப்பார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

யாழ்ப்பாணம் அரியாலை தேவாலயத்தில் சுவிட்ஸர்லாந்திலிருந்து வருகை தந்த போதகரால் கடந்த மார்ச் 15ஆம் திகதி நடத்தப்பட்ட ஆராதனையில் பங்கேற்றவர்கள் தனிமைப்படுத்தலுக்கு உள்படுத்தப்பட்டனர்.

சுவிஸ் போதகருடன் நெருக்கமாகப் பழகிய மானிப்பாயைச் சேர்ந்த போதகர், சுவிஸ் போதகரின் சாரதி உள்ளிட்ட அரியாலை மற்றும் மானிப்பாய், வவுனியாவைச் சேர்ந்த 20 பேர் பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் கடந்த மார்ச் 23ஆம் திகதி நிறுவன தனிமைப்படுத்தலுக்கு உள்படுத்தப்பட்டனர்.

அவர்கள் 20 பேரிடமும் ஏப்ரல் முதலாம் மற்றும் மூன்றாம் திகதிகளில் மாதிரிகள் பெறப்பட்டு முதல்கட்ட பரிசோதனை நடத்தப்பட்டது.

அதில் மானிப்பாயைச் சேர்ந்த மதபோதகர் உள்பட 6 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டது. அவர்கள் 6 பேரும் வெலிகந்தை வைத்தியசாலை கொரோனா சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டனர். அவர்களில் இருவரே இவ்வாறு முழுமையாகக் குணமடைந்துள்ளனர்.

https://www.ibctamil.com/srilanka/80/141474?ref=imp-news

வடக்கில் கொரோனா சமூகத்துக்கிடையில் பரவவில்லை

DR-sathyamoorththy-120320-400-seithy.jpg

 

வடக்கில் கொரோனா வைரஸ் தொற்று சமூகப் பரவலாக இல்லையெனவும் ஓரளவு பாது காப்பாகவே வட மாகாணம் உள்ளதாகவும் யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

இதனால் மக்கள் அச்சமடையத் தேவையில்லை என்பதுடன் விழிப்புடன் இருப்பதும் அவசியம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கில் கொரோனா வைரஸ் நிலைமை தொடர்பாக நேற்று புதன்கிழமை யாழ். போதனா வைத் தியசாலையில் நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் தெரிவிக்கையில்,

“கொரோனா தொற்றில் அதிகமானவர்கள் தொற்றிற்கான அறிகுறிகளை வெளிப் படுத்தாதவர்களாக இருந்திருப்பார்கள்.

ஆனால் நோய்க் காவிகளாக இருப்பார்கள். இதில் அவதானமாக எல்லோரும் இருக்க வேண்டும்.

தனிமைப்படுத்தல் முகாமில் இவர்கள் அடையாளம் காணப்பட்டதால் பிரச்சினை யில்லை. ஆனால், சமூகத்தில் யாருக்காவது அறிகுறியில்லாமல் தொற்று ஏற்பட்டிருந்தால் அது வேறு ஒருவருக்கு பரவினால், மற்றவர் களுக்கும் பரவக்கூடிய நிலைமையுள்ளது.

யாழ்ப்பாணத்தின் தற்போதைய நிலை தொடர்பாக ஜனாதிபதி செயலணி முடிவுகளை எடுக்கிறது.

எமது கருத்துக்களைக் கேட்கும்போது, நிலைவரங்களைத் தெரிவிக்கிறோம்.\

ஊரடங்கு பற்றி, நோயின் எதிர்காலம் பற்றி உடனடியாகக் கூறிவிட முடியாது. பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ஏனெனில் இது உலகளாவிய தொற்றாகும்.

நேற்றுமுன்தினம் தொற்று உறுதிப்படுத் தப்பட்டவர்கள் தனிமைப்படுத்தல் மையத் திலிருந்தே அடையாளம் காணப்பட்டனர்.

கொரோனா தொற்று வடக்கில் எமது சமூகத்தில் பரவவில்லையென்பது தெரிகிறது. என்றாலும், நாம் அவதானமாக இருக்க வேண்டும்.

பி.சி.ஆர். பரிசோதனைக்குத் தேவையான பொருட்கள் ஓரளவிற்கு கையிருப்பில் உள்ளது.

மத்திய அரசு மூன்று நாட்களுக்கு ஒருமுறை அவற்றை எமக்கு வழங்கி வருகிறது.

யாழ். போதனா வைத்தியசாலையில் உள்ள இயந்திரத்தின் மூலம் நாளொன்றுக்கு 72 பரிசோதனைகள் செய்யலாம்.

விரைவில் யாழ். போதனா வைத்திய சாலையிலுள்ள இயந்திரம் மூலமும் பரிசோதனை மேற்கொள்ளவுள்ளோம். அங்கும் நாளொன்றுக்கு 72 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளலாம்.

இதேவேளை, தனிமைப்படுத்தல் மையத்தில் தொற்று ஏற்பட்டதா என செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர்.

இதன்போது தெரிவித்த அவர்,

“தனிமைப்படுத்தல் செயற்பாட்டை இராணுவமும், சுகாதார அமைச்சும் மேற் கொள்கிறது.

இதுபற்றி என்னால் தெளிவாகக் கூற முடியாவிட்டாலும், பாதிரியாருடன் நெருக்கமாகப் பழகியவர்கள் என்ற அடிப்படையில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.

எனவே, வளியால் தொற்றிற்குள்ளானார்கள் என்பதை என்னால் தெளிவாகக் கூறமுடியாது.

ஆனால், அங்கு தொற்று ஏற்பட்ட ஒருவர் ஊடாக மற்றவர்களுக்குத் தொற்று ஏற்பட்டிருக்கலாமென்ற சந்தேகம் நிலவுகிறது” என்றார்.

https://valampurii.lk/news/headlines/2020/வடக்கில்-கொரோனா-சமூகத்து/

இரவுடன் காெராேனா தாெற்று அதிகமானது!

April 19, 2020 01
 
இலங்கையில் கொரோனா (கொவிட்-19) வைரஸ் தொற்று மேலும் அறுவருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று (18) இரவு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்படி நேற்று மட்டும் புதிதாக 12 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது புதிதாக உறுதி செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

இப்போது கொரோனா தாெற்று (Active) இருப்போர் எண்ணிக்கை 161 ஆக காணப்படுகிறது.

கொரோனா தொற்றுக்கு உள்ளாகியோர் மொத்த எண்ணிக்கை 254 ஆகும்.

தொற்றுக்கு உள்ளானோர் 254
இப்போது சிகிச்சை பெறுவோர் 161
குணமடைந்தோர் 86
இறப்புக்கள் 07
யாழ்ப்பாணம் – (பாஸ்டருடன் தொடர்புடையோர்) 17
https://newuthayan.com/இரவுடன்-காெராேனா-தாெற்/
  • தொடங்கியவர்

கொரோனாவினால் பாதிக்கப்பட்ட நான்கு யாழ்ப்பாணத்தவர்கள் குணமடைந்தனர்!

Coronavirus-Negative.jpg

பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் கண்காணிப்பிலிருந்த நிலையில் கோரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி வெலிகந்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நான்கு, முழுமையாகக் குணமடைந்து இன்று வீடு திரும்பவுள்ளனர்.

இந்தத் தகவலை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

அரியாலையைச் சேர்ந்த நான்கு பேரே இவ்வாறு முழுமையாகக் குணமடைந்து வீடு திரும்பும் அவர்களை வெலிகந்தையிலிருந்து அம்புலன்ஸில் அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அவர்கள் வீடுகளுக்கு திரும்பினாலும் 14 நாள்கள் சுயதனிமைப்படுத்தலுக்கு வீட்டிலேயே இருப்பார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

யாழ்ப்பாணம் அரியாலை தேவாலயத்தில் சுவிட்ஸர்லாந்திலிருந்து வருகை தந்த போதகரால் கடந்த மார்ச் 15ஆம் திகதி நடத்தப்பட்ட ஆராதனையில் பங்கேற்றவர்கள் தனிமைப்படுத்தலுக்கு உள்படுத்தப்பட்டனர்.

சுவிஸ் போதகருடன் நெருக்கமாகப் பழகிய மானிப்பாயைச் சேர்ந்த போதகர், சுவிஸ் போதகரின் சாரதி உள்ளிட்ட அரியாலை மற்றும் மானிப்பாய், வவுனியாவைச் சேர்ந்த 20 பேர் பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் கடந்த மார்ச் 23ஆம் திகதி நிறுவன தனிமைப்படுத்தலுக்கு உள்படுத்தப்பட்டனர்.

அவர்கள் 20 பேரிடமும் ஏப்ரல் முதலாம் மற்றும் மூன்றாம் திகதிகளில் மாதிரிகள் பெறப்பட்டு முதல்கட்ட பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் மானிப்பாயைச் சேர்ந்த மதபோதகர் உள்பட 6 பேருக்கு கோரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டது. அவர்கள் 6 பேரும் வெலிகந்தை வைத்தியசாலை கோரோனா சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டனர். அவர்களில் நால்வரே இவ்வாறு முழுமையாகக் குணமடைந்துள்ளனர்.

http://athavannews.com/கொரோனாவினால்-பாதிக்கப்-17/

யாழ்ப்பாண மாவட்டத்தின் ஊரடங்கு சட்டம் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள அவசர கோரிக்கை

யாழ்ப்பாணத்தில் சுகாதார நிறுவனங்களில் உள்ள சுகாதார ஊழியர்களின் தனிப்பட்ட பாதுகாப்பிற்கான வசதிகளை மேம்படுத்துவதற்கும் ஊரடங்கு உத்தரவை குறைந்தது 7 நாட்களுக்கு நீடிக்குமாறு கேட்டுக் கொள்வதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் வடக்கு மாகாண இணைப்பாளர் வைத்திய கலாநிதி த.காண்டீபன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்

யாழ்ப்பாண மாவட்டத்தில் விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு நாளையதினம் ஏப்ரல் 20 ஆம் திகதி காலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை நீக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் , வடக்கு மாகாணம் அவர்களுடன் நாங்கள் அவசர சந்திப்பு ஒன்றை இன்று நடத்தியிருந்தோம். ஆதார வைத்தியசாலை பருத்தித்துறையின் கிளை, தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலையின் கிளை,யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பிரிவின் கிளை,மற்றும் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் கிளை ஆகியவற்றின் கிளை சங்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

குறுகிய அறிவிப்புடன் ஊரடங்கு உத்தரவை நீக்குவதற்கான இந்த முடிவானது வடக்கு மாகாணத்தின் சுகாதார வைத்திய அதிகாரிகளின் வலுவான பரிந்துரைகளுக்கு எதிராக எடுக்கப்பட்டது என்பதை நாங்கள் அறிந்து கொண்டோம்.

16 தொற்று நோயாளர்கள், மதகுருவுடன் இருந்து கொரோனா தொற்றுக்குள்ளாகியதும் அவருடன் நெருங்கிய தொடர்புகள் கொண்ட 329 பேர்களில் 80க்கு மேற்பட்டோர் இன்னமும் பரிசோதனைக்கு உட்படாமலும் மற்றும் யாழ்ப்பாண மாவட்டத்தில் வெளிநாட்டிலிருந்து வந்த 1200 க்கும் மேற்பட்டவர்கள் பரிசோதனைக்கு உட்படாமலும் இருப்பதால், வடக்கு மாகாண சுகாதார அதிகாரிகள் ஏப்ரல் 27 க்குப் பிறகு மட்டுமே ஊரடங்கு உத்தரவை நீக்க பரிந்துரைத்துள்ளனர்.

இந்த காலகட்டத்தில் பரிசோதனைகளை ஆகக் குறைந்தது இந்த நெருங்கிய தொடர்புகளுடன் செய்வதன் மூலம் யாழ்ப்பாணத்தின் சமூக தொற்று நிலை சம்பந்தமான வெளிப்பாடு மேம்படும்.

குறுகிய அறிவிப்புடன் ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்ட பின்னர், பொது மக்கள் பல்வேறு வியாதிகளுக்கு மருத்துவமனைகளுக்கு வருவார்கள்.மேலும் கோவிட் -19 க்கான குறைந்தபட்ச தடுப்பு நடவடிக்கைகளுடன் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய எல்லா மருத்துவமனைகளும் இன்னமும் தயார் நிலையில் இல்லை.

எனவே, நெருங்கிய தொடர்புகளின் பரிசோதனைகளை நிறைவு செய்வதற்கும், மருத்துவமனைகள் மற்றும் சுகாதார நிறுவனங்களில் உள்ள சுகாதார ஊழியர்களின் தனிப்பட்ட பாதுகாப்பிற்கான வசதிகளை மேம்படுத்துவதற்கும் ஊரடங்கு உத்தரவை குறைந்தது 7 நாட்களுக்கு நீடிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

https://www.ibctamil.com/srilanka/80/141544?ref=imp-news

2 hours ago, Rajesh said:

குறுகிய அறிவிப்புடன் ஊரடங்கு உத்தரவை நீக்குவதற்கான இந்த முடிவானது வடக்கு மாகாணத்தின் சுகாதார வைத்திய அதிகாரிகளின் வலுவான பரிந்துரைகளுக்கு எதிராக எடுக்கப்பட்டது என்பதை நாங்கள் அறிந்து கொண்டோம்.

யாழ் மக்களை ஒரு பரிசோதனை ஆய்வுகூட எலிகளாக சிங்களம் பார்க்கின்றது. 

எங்கே எங்கள்  வேட்டி கட்டிய வாய்வீரர்கள்? 

2 hours ago, Rajesh said:

ஊரடங்கு உத்தரவை குறைந்தது 7 நாட்களுக்கு நீடிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

வடக்கு மாகாண சுகாதர அதிகாரிகள் தமிழர்களாக இருப்பதால் இந்த குரல். நாளை இவர்களையும் சிங்களவர்களாக நியமித்து இனவழிப்பு முன்னெடுக்கபபடலாம். 

பரிந்துரைகளை மீறி யாழில் தளர்த்தப்பட்ட ஊரடங்குச் சட்டம்!

வடமாகாண சுகாதார வைத்திய அதிகாரிகளின் வலுவான பரிந்துரைகளுக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் வடமாகாண இணைப்பாளர் வைத்தியர் காண்டீபன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

யாழ்ப்பாண மாவட்டத்தில் பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு சட்டம் இன்று முதல் தளர்த்தப்பட்டுள்ளது.

இன்று முதல் அதிகாலை 5 மணிக்கு தளர்த்தப்படும் ஊரடங்குச் சட்டம் இரவு 8 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படவுள்ளது.

இந்த நிலையில் யாழ்ப்பாணத்தில் ஊடரங்குச் சட்டம் தளர்த்தப்பட்டமை தொடர்பான வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆர்.கேதீஸ்வரனுடன் நேற்றைய தினம் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் யாழ் மாவட்ட கிளையினர் சந்திப்பு ஒன்றை நடத்தியுள்ளனர்.

இதன்போது வடமாகாண சுகாதார வைத்திய அதிகாரிகளின் வலுவான பரிந்துரைகளுக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டுள்ளமையை அறிந்து கொண்டதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் வடமாகாண இணைப்பாளர் வைத்தியர் காண்டீபன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் அடையாளம் காணப்பட்ட 16 பேருக்கு சுவிஸ் போதகர் மூலமே கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தது.

அத்துடன் சுவிஸ் போதகருடன் நெருங்கிய தொடர்புகள் கொண்ட 329 பேரில் 80க்கு மேற்பட்டோர் இன்னமும் பரிசோதனைக்கு உட்படாமலும் மற்றும் யாழ்ப்பாண மாவட்டத்தில் வெளிநாட்டிலிருந்து வந்த 1200 க்கும் மேற்பட்டவர்கள் பரிசோதனைக்கு உட்படாமலும் இருப்பதாக வைத்தியர் காண்டீபன் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனால் வட மாகாண சுகாதார அதிகாரிகள் ஏப்ரல் 27 ஆம் திகதிக்கு பின்னர் யாழ்ப்பாணத்தில் ஊரடங்குச் சட்டத்தை நீக்குமாறு பரிந்துரைத்துள்ளனர்.

எனினும் வைத்திய அதிகாரிகளின் பரிந்துரைகளை மீறி ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

கோவிட் -19 க்கான குறைந்தபட்ச தடுப்பு நடவடிக்கைகளுடன் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய எல்லா மருத்துவமனைகளும் தயார் நிலையில் இல்லை.

எனவே, நெருங்கிய தொடர்புகளின் பரிசோதனைகளை நிறைவு செய்வதற்கும், மருத்துவமனைகள் மற்றும் சுகாதார நிறுவனங்களில் உள்ள சுகாதார ஊழியர்களின் தனிப்பட்ட பாதுகாப்பிற்கான வசதிகளை மேம்படுத்துவதற்கும் ஊரடங்கு உத்தரவை குறைந்தது 7 நாட்களுக்கு நீட்டிக்குமாறு அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் வடமாகாண இணைப்பாளர் வைத்தியர் காண்டீபன் கேட்டுக்கொண்டுள்ளார்.

https://www.ibctamil.com/srilanka/80/141581?ref=imp-news

சற்று முன்னர் தளர்த்தப்பட்டது ஊரடங்கு சட்டம்: மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை

ஸ்ரீலங்காவில் ஏற்பட்ட கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக கடந்த மாதம் முதல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்தது.

அதிலும் குறிப்பாக கொரோனா அபாய வலயங்களாக அறிவிக்கப்பட்ட கொழும்பு கண்டி கம்பஹா களுத்துறை புத்தளம் மற்றும் யாழ்ப்பாணம் போன்ற மாவட்டங்களில் தொடர்ச்சியாக ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் கொழும்பு கண்டி கம்பஹா களுத்துறை புத்தளம் தவிர்ந்த யாழ்ப்பாணம் உள்ளிட்ட ஏனைய மாவட்டங்களில் இன்று (20) காலை 5 மணிக்கு ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ளது.

காலை 5 மணிக்கு தளர்த்தப்பட்ட ஊரடங்கு சட்டம் மீண்டும் இன்று இரவு 8 மணிக்கு அமுல்படுத்தப்படவுள்ளது. இதே நடைமுறை தினமும் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஸ்ரீலங்காவில் கொரோனா தொற்று முற்றாக கட்டுப்படுத்தப்படாத நிலையில் இவ்வாறு ஊரடங்கு தளர்த்தப்படுவது ஆபத்தானது என பல தரப்பிலிருந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டாலும் நேற்று அறிவிக்கப்பட்டது போன்று இன்று ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ளது.

நாட்டின் பொருளாதாரத்தை கட்டி எழுப்புவதற்காகவே ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படுவதாகவும் மக்கள் சுகாதார நடவடிக்கைகளை பின்பற்றி செயற்படுமாறும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளார்.

குறிப்பாக யாழில் கொரோனா அபாயம் இன்னும் நீங்கவில்லை. தனிமைப்படுத்தி வைக்கப்பட்டிருக்கும் பலருக்கு இன்னும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படவில்லை.

இந்நிலையில் யாழ்ப்பாணத்தில் சுகாதார நிறுவனங்களில் உள்ள சுகாதார ஊழியர்களின் தனிப்பட்ட பாதுகாப்பிற்கான வசதிகளை மேம்படுத்துவதற்கும் ஊரடங்கு உத்தரவை குறைந்தது 7 நாட்களுக்கு நீடிக்குமாறு கேட்டுக் கொள்வதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் வடக்கு மாகாண இணைப்பாளர் வைத்திய கலாநிதி த.காண்டீபன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை யாழ்ப்பாண மாவட்டத்தில் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படுவதற்கு மக்களுக்கு மிகவும் ஆபத்தானது என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இராமலிங்கம் சந்திரசேகரன் எச்சரித்துள்ளார்.

இவ்வாறு ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டமைக்கு எதிர்ப்புக்கள் கிளம்பி வருகின்றது. அதிலும் குறிப்பாக யாழில் ஊரடங்கு தளர்த்தப்படுவதால் பல தரப்பிலிருந்தும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று காலை 5 மணிக்கு ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டது.

எனவே அவர் அவரே அவர் அவரது பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். வெளியில் செல்லும் போது முகக்கவசம் அணிதல் சுகாதார நடவடிக்கைகளை பின்பற்றுதல் போன்றவற்றை கடைப்பிடித்தலுடன் தேவையற்று வெளியில் நடமாடுதல் கூட்டம் கூடுதல் போன்ற விடயங்களை தவிர்க்க வேண்டும் என்பது அவசியமானது.

https://www.ibctamil.com/srilanka/80/141558

  • தொடங்கியவர்

இராணுவ வீரருக்கு கொரோனா அறிகுறி: கிளிநொச்சியிலிருந்து யாழ்.வைத்தியசாலைக்கு மாற்றம்

கிளிநொச்சி, பூநகரி வைத்தியசாலையில் இருந்து கொரோனா சந்தேகத்தின் அடிப்படையில் இராணுவ வீரர் ஒருவர் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த இராணுவ வீரர் கொழும்பில் இருந்து கிளிநொச்சி, பூநகரி பகுதிக்கு வருகை தந்ததாகவும், நெஞ்சுவலி காரணமாக பூநகரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த விடயம் தொடர்பாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி தகவல் வெளியிடுகையில்,

இராணுவ வீரர் கொரோனா தொற்று சந்தேகத்தின் அடிப்படையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கான மருத்துவ பரிசோதனையின் பின்னர் இன்று மாலை மருத்துவ அறிக்கை வெளியிடப்படும் என தெரிவித்துள்ளார்.

https://www.ibctamil.com/srilanka/80/141589

அலுவலகங்களில் பின்பற்ற வேண்டிய பிரதான நடைமுறைகள் குறித்த அறிவிப்பு

In இலங்கை     April 21, 2020 12:13 pm GMT     0 Comments     1292     by : Litharsan

கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்கு அலுவலகங்களில் பின்பற்ற வேண்டிய பிரதான நடைமுறைகள் தொடர்பாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரனால் அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் உலகளாவிய ரீதியிலும் எமது நாட்டிலும் பரவி பாரிய பாதிப்புகளை ஏற்படுத்தி வருவவதாகத் தெரிவித்துள்ள அவர், இந்த ஆபத்தான தருணத்தில் முக்கியமான பாதுகாப்பு நடைமுறைகளை வேலைத் தளங்களில் கட்டாயமாகப் பின்பற்றுவதனை உறுதிசெய்து கொள்வதன் மூலமாகவே எம்மையும் எமது சமூகத்தையும் நாம் பாதுகாத்துக் கொள்ள முடியும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரனால் பின்வரும் அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன.

1. பணியாளர்கள், பொதுமக்கள் தம்மை கொரோனா தொற்றிலிருந்து பாதுகாப்பதற்குரிய வழிகாட்டுதல்களை அலுவலக வாயிலில் காட்சிப்படுத்துதல் வேண்டும்.

2. வேலைத் தளத்தினுள் நுழைவதற்கு முன்பு பணியாளர்கள், வாடிக்கையாளர்கள் கைகளைச் சரியான முறையில் சவர்க்காரமிட்டுக் கழுவுதல் அல்லது தொற்று நீக்கியைப் பாவித்து தூய்மைப்படுத்துவதைக் கட்டாயமாக்கவும்.

3. இதற்காக அலுவலகத்தின் நுழைவாயிலிலும் பொருத்தமான ஏனைய இடங்களிலும் கை கழுவும் வசதியினை ஏற்படுத்திக் கொடுத்தல் வேண்டும் அல்லது தொற்று நீக்கி பாவனையை உறுதி செய்தல் வேண்டும்.

4. அலுவலகத்தின் அனைத்துப் பகுதிகளையும் தூய்மையாகப் பேணுவதுடன் அலுவலகத்தில் மக்கள் அதிகளவில் ஒன்றுகூடும் பொதுப் பயன்பாட்டு இடங்கள் மற்றும் தளபாடங்கள், கதவுக் கைபிடிகள், படிக் கைபிடிகள், இலத்திரனியல் உபகரணங்களைப் பொருத்தமான தொற்று நீக்கியைப் பாவித்து கிரமமாக அடிக்கடி தூய்மைப்படுத்தலும் வேண்டும்.

5. கூடுமானவரை அலுவலகத்தின் கதவுகள், ஜன்னல்களைத் திறந்து வைத்திருக்கவும்.

6. சேவை வழங்கும் இடங்களில் சேவை பெறுநர்களின் எண்ணிக்கையை அலுவலகத்தின் உள்ளேயும் வெளியிலும் மட்டுப்படுத்துவதுடன் அலுவலகப் பணியாளர்கள், சேவை பெறுநர்களுக்கிடையில் ஆகக் குறைந்தது 3 அடி இடைவெளி கட்டாயமாக்கப்பட வேண்டும்.

7. கடமை நேரத்தில் உத்தியோகத்தர்கள் சரியான முறையில் முகக்கவசம் அணிந்து கடமையாற்றுவதை உறுதிப்படுத்துதல் வேண்டும்.

8. மட்டுப்படுத்தப்பட்ட ஆளணியுடன் சேவைகளை ஒழுங்குபடுத்துவதோடு வேலை நேரங்களை பணியாளர்களுக்கு பொருத்தமான வகையில் அதிகளவானோர் ஒரே நேரத்தில் ஒன்று கூடாதவாறு தீர்மானித்தல் வேண்டும்.

9.பணியிடங்களில் ஒன்றுகூடல்களின்போது முக்கியமான அங்கத்தவர்கள் மாத்திரம் பங்குபற்றுவதையும் போதிய தனிநபர் இடைவெளியையும் உறுதிப்படுத்தல் வேண்டும். ஒன்றுகூடலின் பின் குறித்த பகுதி உடனடியாக தூய்மைப்படுத்தப்பட வேண்டும்.

10. ஒவ்வொரு சேவைகளையும் குறித்தொதுக்கப்பட்ட தினங்களிலும் நேரங்களிலும் திட்டமிட்டு நடைமுறைப்படுத்துவதுடன் பொருத்தமான ஊடகங்கள் வாயிலாக பொதுமக்களுக்கு அறிவுறுத்தி மக்கள் அதிகளவில் ஒன்றுகூடுவதைத் தவிர்த்தல் வேண்டும்.

11. பணியாளர்கள் தமக்கு கொவிட்-19 நோயின் அறிகுறிகளான காய்ச்சல், இருமல், மூச்செடுப்பதில் சிரமம், தொண்டைநோவு போன்ற அறிகுறிகள் சிறிதளவேனும் இருந்தால் கடமைக்கு சமூகமளிப்பதை தவிர்க்கும்படி அறிவுறுத்தவும். என அறிவித்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன.

http://athavannews.com/அலுவலகங்களில்-பின்பற்ற-வ/

கொழும்பில் மட்டும் இதுவரை 110 நோயாளிகள்… மாவட்ட ரீதியான தகவல்..!

In இலங்கை     April 21, 2020 9:18 am GMT     0 Comments     1657     by : Jeyachandran Vithushan

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் கொழும்பில் மட்டும் இதுவரை 110 நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சு இன்று (செவ்வாய்க்கிழமை) காலை வெளியிட்டுள்ள அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

இலங்கையில் இதுவரை கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இதுவரை 309 பேர் (நேற்று மட்டும் 33 பேர்) அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 100 பேர் இதுவரை குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.

அந்தவகையில் தற்போது கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் (304 பேர் விபரம்) மாவட்ட ரீதியான தகவல்கள் சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளன.

அதன்படி கொழும்பில் 110 பேர், களுத்துறை 45, புத்தளம் 35, கம்பஹா 32, யாழ்ப்பாணம் 16, கண்டி, 07, இரத்தினபுரியில் 5 பேரும் கேகாலையில் 03 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதேவேளை குருநாகல், மாத்தறை மற்றும் கல்முனை பகுதிகளில் தலா 02 பேரும் காலி, மட்டக்களப்பு, பதுளை மற்றும் வவுனியாவில் தலா ஒருவரும் வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பியவர்களை தனிமைப்படுத்திய மையங்களில் 38 பேரும் இலங்கை திரும்பியிருந்த 03 வெளிநாட்டு பிரஜைகளுக்கும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

http://athavannews.com/கொழும்பில்-மட்டும்-இதுவர/

93279849_10220064721861062_1466514972606

93819011_10220076270029759_3726936774224

  • தொடங்கியவர்

யாழ்ப்பாண மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு

ஊரடங்குச் சட்டம் யாழ்ப்பாணத்தில் தளர்த்தப்பட்டு உள்ளது. ஆனாலும் நாட்டில் கொரோனா தொற்றும் வாய்ப்புள்ள அசாதாரண நிலை நிலவுவதன் காரணமாக பொது மக்கள் சுகாதாரத்துறையினால் கூறப்படுகின்ற விடயங்களை கடைப்பிடிக்காமை மீண்டும் யாழ்ப்பாணத்தில் கொரோனா தாக்கம் ஏற்பட்டுவிடும் என அஞ்சுகின்றோம்.

இதற்கு யாழ்ப்பாணத்தில் மக்கள் மதுபானக்கடைகளில் அளவுக்கதிகமாக கூடியதும் அவர்கள் அளவுக்கதிகமாக கொள்வனவு செய்ததையும் இன்றைய பத்திரிகைகள் மூலம் அனைவரும் அறிந்து கொண்டோம் என

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் வட மாகாண இணைப்பாளர் வைத்திய கலாநிதி த . காண்டீபன் எச்சரித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது

கொரோனா தொற்றுநோய் காலப் பகுதியில் மதுபானம், புகைப்பது கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.

மதுபானம் குடிப்பவர்கள் சமூகத்தில் சமூக விலகலை கடைப்பிடிக்க மாட்டார்கள் என்பது அனைவரும் அறிந்ததே .

வழக்கமாக மதுபானம் அருந்துபவர்கள், குழுக்களாக செய்கிறார்கள், எனவே சமூக தூரத்தை பராமரிக்க முடியாது.அது மட்டுமல்ல ஒருவரில் இருந்து இன்னொருவருக்கு இலகுவில் தொற்றுவதற்கு சந்தர்ப்பம் அதிகம்.

இந்த காலகட்டத்தில் மது அருந்துவதால் யாழ்ப்பாணத்தில் அதிக துஷ்பிரயோக சம்பவங்கள் அதிகரிக்கும். இதனால் இதில் ஈடுபடுபவர்களை கைதுசெய்ய காவல்துறை தேவையின்றி தலையிட வேண்டியிருக்கும்.

இந்த காலகட்டத்தில் சமூகத்திற்குள் தேவையற்ற ஒழுக்கச்சரிவு ஏற்படும்.

மதுபானம் பயன்படுத்துபவர்களில் சிலர் புகைபிடிக்கும் பழக்கத்திலும் ஈடுபடுவர்.

இத்துடன் புகைபிடிக்கும் நபர்கள் கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு இந்த நோய் மோசமான விளைவுகளை மட்டுமல்ல மரணத்தையும் ஏற்படுத்தலாம்.

புகையிலை பொருட்களையும் புகைப்பதைத் தவிர்க்குமாறும், மதுபானம் அருந்துவதை தவிர்க்குமாறும் நாங்கள் பொதுமக்களுக்கு அறிவுறுத்துகின்றோம்.

இதே வேளை இன்றுமுதல் மறு அறிவித்தல் வரை நாடு முழுவதும் உள்ள அனைத்து மதுபான விற்பனை நிலையங்களையும் மூடிவிடுமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இதனால் பெருமளவிலான பொருளாதார இழப்பு ஏற்பட்டாலும் ஜனாதிபதி அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் கோரிக்கையை ஏற்று கொரோனா தொற்றில் இருந்து மக்களின் நலனுக்காக நல்ல முடிவை எடுத்திருக்கின்றார்.

புகைத்தல் மக்களுக்கு கொரோனா நோய் மட்டுமல்ல புற்றுநோய் உட்பட பல்வேறு நோய்களை ஏற்படுத்துவதனால் புகையிலை பொருட்களை மக்களுக்கு விற்பனை செய்வதை வியாபாரிகள் தவிர்க்குமாறும் வடமாகாண சுகாதாரத்துறையினர் இது சம்பந்தமாக வடமாகாண உயர் அதிகாரிகளுடன் இனணந்து புகைத்தலை இக் கொரோனா தொற்றுக்காலத்தில் முற்றாக கட்டுப்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறோம்.

https://www.ibctamil.com/srilanka/80/141672?ref=imp-news

யாழில் சமூகத்தொற்று இல்லையென யாரும் கூறிவிட முடியாது- வைத்தியர் காண்டீபன்

In இலங்கை     April 22, 2020 10:16 am GMT     0 Comments     1281     by : Litharsan

யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் சமூகத் தொற்றாக ஏற்படவில்லை என யாரும் கூறிவிட முடியாது என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின்  வட மாகாண இணைப்பாளர் வைத்திய கலாநிதி த. காண்டீபன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்று (புதன்கிழமை) நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் குறிப்பிடுகையில், “யாழ்ப்பாணத்தில் சமூகத் தொற்று ஏற்படவில்லை எனவும் வெளிநாட்டிலிருந்து வந்த மதபோதகரினாலேயே குறித்த கொரோனா தொற்று ஏற்பட்டதாகவும் கொரோனா தொடர்பாக பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை எனவும் வடக்கு சுகாதார அதிகாரிகளினால் தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் இந்தக் கருத்தினை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாது. உதாரணமாக நான் ஒன்றைக் கூற விரும்புகிறேன். கடந்த வாரம் கொழும்பில் இடம்பெற்ற சம்பவங்கள் நமக்கு ஒரு படிப்பினையாக உள்ளன.

கொழும்பில் நேற்று மற்றும் நேற்று முன்தினம் ஏற்பட்டுள்ள தொற்றுகள் அனைத்தும் நோய் அறிகுறி இல்லாது ஏற்பட்ட தொற்றாகவே நாம் பார்க்கின்றோம். எனினும் யாழ்ப்பாணத்தைப் பொறுத்தவரைக்கும் இன்றுவரை 360 பேர் வரை கொரோனா பரிசோதனையை மேற்கொண்டுள்ளோம்.

இந்தப் பரிசோதனையானது மூன்று, நான்கு மடங்காக அதிகரிக்கப்படும் வரை யாரும் யாழ்ப்பாணத்தில் சமூகத்தொற்று இன்னும் ஏற்படவில்லை என்பதைக் கூறமுடியாது. எனவே நாங்கள் வடக்கிலுள்ள சுகாதாரத் திணைக்களத்தினரிடம் கோரிக்கை முன்வைக்க விரும்புகின்றோம்.

யாழ்ப்பாணத்திற்கு வெளிநாட்டில் இருந்து வந்த மதபோதகருடன் தொடர்புபட்ட நபர்களுக்கே கொரோனா பரிசோதனையை இன்றுவரை மேற்கொண்டுள்ளோம். ஒரு தடவை அல்லது இரண்டு தடவைகள் பரிசோதனையை மேற்கொண்டுவிட்டு நாம் சமூகத்தொற்று இல்லை என்று கூறிவிட முடியாது.

எனினும் யாழ்ப்பாணத்தைப் பொருத்தவரைக்கும் வெளிநாட்டில் இருந்து வருகை தந்துள்ளவர்கள் நிறையவே உள்ளார்கள். அவர்கள் தொடர்பாக நாம் அதிக அக்கறை செலுத்த வேண்டியதாக உள்ளது. எனவே வடக்கில் கொரோனா பரிசோதனையை இரண்டு, மூன்று மடங்காக அதிகரித்து அந்த பரிசோதனை முடிவின் பின்னரே நாம் சமூகத்தொற்று உள்ளதா, இல்லையா என்பதைப் பரிசீலிக்க முடியும்” என அவர் தெரிவித்தார்.

http://athavannews.com/யாழில்-சமூகத்தொற்று-இல்ல/

  • தொடங்கியவர்

யாழ்ப்பாணத்திற்குள் சட்டவிரோதமாக நுழைந்தவர்களினால் அச்சுறுத்தல் சந்தேக நபர்களை தேடி வலை வீச்சு!

EWM4Ab_WsAEgX2o-5.jpg

கொழும்பில் கொரோனா அபாய வலயமாக அறிவிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து பாரவூர்தி மூலம் யாழ்ப்பாணத்துக்கு தப்பித்து வந்த 7 பேர் தொடர்பில் விவரங்கள் கிடைத்துள்ளன. அந்த விவரங்கள் பாதுகாப்புத் தரப்பினரிடம் வழங்கப்பட்டுள்ளன என யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர் க.மகேசன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்று(புதன்கிழமை) இரவு நடத்திய அவசர ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “வலி.மேற்கு பிரதேச சபைக்கு உட்பட்ட சங்கானை, தொல்புரம் ஆகிய இடங்களைச் சேர்ந்தவர்கள் சுகாதார பிரிவினரால் தனிமைப்படுத்தலுக்கு உள்படுத்தப்பட்டுள்ளனர்.

நாட்டில் கொரோனா அச்சுறுத்தல் அதிகமாகக் காணப்படும் கொழும்பு மாவட்டத்தின் அபாய வலயங்களில் தங்கியிருந்த இவர்கள் 7 பேரும் யாழ்ப்பாணம் குருநகர், பாசையூர், நாவற்குழி, தெல்லிப்பளை, தொல்புரம் மற்றும் சங்கானையைச் சேர்ந்தவர்கள். அவர்களின் விவரங்கள் பாதுகாப்புத் தரப்பினரிடம் வழங்கப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் ஒரு மாதகாலம் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு கொரோனா அச்சுறுத்தலிலிருந்து மீள்வதற்கு அனைவரும் வழங்கிய தியாகம் இந்த நபர்களால் உதாசீனம் செய்யப்பட்டுள்ளது.

அவர்கள் அடையாளம் காணப்பட்டால் தனிமைப்படுத்தல் நிலையத்தில் நிறுவன தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் உண்மையைக் கூறி உரிய வகையில் இங்கு வருகை தந்திருக்க முடியும்.

அவர்களால் சொந்தக் குடும்பத்தினருக்கும் அயலவர்களுக்கும் சமூகத்துக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது“ எனக் குறிப்பிட்டுள்ளார்.

http://athavannews.com/யாழ்ப்பாணத்திற்குள்-சட்/

 

யாழ்ப்பாணத்திற்குள் சட்டவிரோதமாக நுழைந்த இரண்டாவது நபரும் தனிமைப்படுத்தப்பட்டார்

கொழும்பிலிருந்து பாரவூர்தி மூலம் யாழ்ப்பாணத்துக்கு தப்பித்து வந்த இரண்டாவது நபரும் சங்கானையில் அடையாளம் காணப்பட்டு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

சங்கானை தேவாலய வீதியில் அவரது வீட்டில் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

நாட்டில் கொரோனா அச்சுறுத்தல் அதிகமாகக் காணப்படும் கொழும்பு மாவட்டம் டாம் வீதியில் தங்கியிருந்த ஒருவர், பாரவூர்தியில் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த நிலையில் அவரை உடனடியாக தேடிக் கண்டறிந்த வலி.மேற்கு பிரதேச சுகாதார பரிசோதகர்கள், சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தினர்.

முதலாவது நபர் சுழிபுரம் – தொல்புரம் முத்துமாரி அம்மன் ஆலய வீதியைச் சேர்ந்த 30 வயதுடையவரே அமைச்சின் அறிவுறுத்தல்களை மீறி யாழ்ப்பாணத்துக்கு தப்பி வந்தவர் என்று கண்டறியப்பட்டார்.

இந்த நிலையில் சங்கானையைச் சேர்ந்த இரண்டாவது நபரும் இன்று(புதன்கிழமை) மாலை வட்டுக்கோட்டை பொலிஸாரின் உதவியுடன் கண்டறியப்பட்டார். அவர் உடனடியாகவே சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

கொழும்பு டாம் வீதியில் தங்கியிருந்து மேசன் வேலை செய்வதாகவும் அங்கிருந்து மிளகாய் ஏற்றி வந்த பாரவூர்தியில் ஏறி இன்று யாழ்ப்பாணத்துக்கு வந்ததாக அவர் பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கிய போதும் சந்தேகங்கள் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் இவர் வருகை தந்த பாரவூர்திகளின் சாரதிகள் தொடர்பில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் சிறப்புப் பொலிஸ் அணி விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

http://athavannews.com/யாழ்ப்பாணத்திற்குள்-சட-2/

கொழும்பில் இருந்து யாழிற்கு தப்பிவந்த 8 பேருக்கும் ஒரு மாதம் தனிமைப்படுத்தல்- நீதிமன்றம் உத்தரவு

In இலங்கை     April 23, 2020 7:42 am GMT     0 Comments     1378     by : Litharsan

கொழும்பில் கொரோனா வைரஸ் பரவல் அபாய பகுதியில் இருந்து பாரவூர்தி ஒன்றில் யாழ்ப்பாணத்துக்கு தப்பிவந்த 8 பேரையும் அவர்களை சட்டத்துக்குப் புறம்பாக ஏற்றிவந்த பாரவூர்தி சாரதியையும் விடத்தல்பளை படைமுகாம் தனிமைப்படுத்தல் நிலையத்தில் வைத்து கண்காணிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

யாழ்ப்பாணம் பொலிஸார் தாக்கல் செய்த விண்ணப்பத்துக்கு, யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதவான் ஏ.பீற்றர் போல் உத்தரவிட்டார்.

நாட்டில் கோரோனா அச்சுறுத்தல் அதிகமாகக் காணப்படும் கொழும்பு-12 பகுதியிலிருந்து 8 பேர் பாரவூர்தியில் சுகாதார அமைச்சின் அறிவுறுத்தல்களை மீறி யாழ்ப்பாணத்துக்கு தப்பிவந்தனர். அவர்கள் 8 பேரும் அடையாளம் காணப்பட்டதுடன், அவர்களை ஏற்றி வந்த சாரதியும் கண்டறியப்பட்டார்.

குருநகர், பீச் வீதியைச் சேர்ந்த ஒருவர், யாழ்ப்பாணம் ஐந்துசந்தி- ஒஸ்மானியா வீதியைச் சேர்ந்த ஒருவர், சங்கானை- ஓடக்கரையைச் சேர்ந்த ஒருவர், சுழிபுரம் – தொல்புரத்தைச் சேர்ந்த ஒருவர், தெல்லிப்பழை (சந்திக்கு அருகில்) ஒருவர், நாவற்குழி வீட்டுத்திட்டம் பகுதியைச் சேர்ந்த மூவர் மற்றும் புன்னாலைக்கட்டுவனைச் சேர்ந்த சாரதி ஆகிய ஒன்பது பேரே இவ்வாறு தனிமைப்படுதலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

சாரதி யாழ்ப்பாணத்தில் இருந்து அத்தியாவசிய சேவைக்கான அனுமதிப்பத்திரத்துடன் கொழும்புக்கு சென்றுள்ளார். ஏனையவர்கள் தொழில் நிமித்தம் கொழும்பில் தங்கியிருந்து யாழ்ப்பாணத்துக்கு வந்துள்ளனர்.

சாரதி உட்பட 9 பேரையும் விடத்தல்பளையில் உள்ள படை முகாம் தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்த யாழ்ப்பாணம் பொலிஸாரால் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் விண்ணப்பம் செய்யப்பட்டது.

அதனை ஆராய்ந்த யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.பீற்றர் போல், 9 பேரையும் மே மாதம் 26ஆம் திகதிவரை விடத்தற்பளை படைமுகாம் தனிமைப்படுத்தல் நிலையத்தில் வைத்து கண்காணிக்க உத்தரவிட்டார்.

http://athavannews.com/கொழும்பில்-இருந்து-யாழிற/

  • தொடங்கியவர்

யாழ் அரியாலை விவகாரம்: வெளியான இறுதி முடிவுகள்

யாழ் அரியாலை ஆராதனையில் கலந்துகொண்ட அனைவருக்கும் கொரொனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் அரியாலை தேவாலயத்தில் கடந்த மார்ச் 15 ஆம் திகதி இடம்பெற்ற சுவிஸ் போதகர் நடத்திய ஆராதனையில் பங்கேற்ற 346 பேர் தனிமைப்படுத்தலுக்கு உள்படுத்தப்பட்டிருந்த நிலையில் அவர்கள் அனைவரது பரிசோதனைகளும் இன்று முடிவுறுத்தப்பட்டுள்ளன.

அவர்களில் 16 பேருக்கு மட்டும் கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

அவர்களில் 46 பேருக்கு இரண்டு முறை பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

தாவடியைச் சேர்ந்த 18 பேருக்கும் இரண்டு முறை பரிசோதனைகள் நடதப்பட்டன என்று அறிக்கை கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பில் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் மேலும் தெரிவித்ததாவது;

யாழ்ப்பாணம் நல்லூர் மருத்து அதிகாரி பிரிவைச் சேர்ந்த 28 பேருக்கும் பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த நால்வருக்கும் அவர்களைப் பராமரித்த 4 படையினருக்கும் என 36 பேருக்கு பிசிஆர் பரிசோதனை இன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடத்தில் முன்னெடுக்கப்பட்டது.

அவர்கள் அனைவருக்கும் கோரோனா வைரஸ் தொற்று இல்லை என்று இன்று மாலை அறிக்கை கிடைத்துள்ளது.

இந்த நிலையில் வடக்கு மாகாணத்தில் வெளிநாடுகளிலிருந்து வருகை தந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கே இனிவரும் நாள்களில் பரிசோதனைகள் இடம்பெறும். மேலும் கொழும்பிலிருந்து வருகை தந்து தனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்பட்டுள்ளவர்களுக்கும் பரிசோதனைகள் முன்னெடுக்கப்படவேண்டும்.

அவர்களுக்கான பரிசோதனைகள் நிறைவடைந்ததும் இறுதியாக சமூக மட்ட பரிசோதனைகள் நடைபெறும் - என்றார்.

https://www.ibctamil.com/srilanka/80/141772?ref=ibctamil-recommendation

  • தொடங்கியவர்

நீடிக்கும் கொரோனாவின் அபாயகரமான சூழல்! வடக்கில் கொரோனாவை வைத்து இராணுவ ஆட்சி

நாட்டில் தற்போது ஏற்பட்டிருக்கும் கொரோனா அபாயம் நீங்காத நிலையில், பொது மக்களிடையே சமூக விலகல் குறைந்து வருவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்தநிலையில், ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டுள்ள பகுதிகளில் பொது மக்களின் செயல்பாடுகள் அச்சத்தை உண்டுபண்ணுவதாக அமைந்திருக்கிறது.

இதேவேளை, கொரோனா அபாயம் நீங்காத நிலையில் அரசாங்கம் நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பில் சிந்திக்கத் தொடங்கியிருக்கிறது.

மறுபுறம் கொரோனாவை வைத்து வடக்கில் இராணுவ ஆட்சியினை நிறுவுவதற்கு அரசாங்கம் முயற்சித்துக் கொண்டிருப்பதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் குற்றம் சாட்டியிருக்கிறார்.

இது தொடர்பில் பேசிய அவர்,

  • தொடங்கியவர்

வடக்கில் அடுத்தக்கட்டமாக இடம்பெறவுள்ள பரிசோதனை நடவடிக்கை- வைத்தியர் கேதீஸ்வரன் அறிவிப்பு

Northern-Province-Health-Services-Director-Dr.Ketheeswaran-1.jpg

வடமாகாணத்தில் அடுத்தக்கட்டமாக வெளிநாடுகளில் இருந்து வந்துள்ளவர்களுக்கும் அத்தியாவசிய சேவைகளுக்காக வெளிமாவட்டங்களுக்குச் சென்று வருபவர்களுக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாக வடமாகாண சுகாதாரப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

இதேவேளை, இதுவரை வடக்கு மாகாணத்தில் 346 பேருக்கு வைரஸ் தொற்றுத் தொடர்பான பரிசோனை நிறைவுபெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

வடமாகாண சுகாதார அமைச்சின் அலுவலத்தில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் கூறுகையில், “சமூக மட்டத்தில் கொரோனா பரம்பல் இருக்கின்றதா என்பதை உறுதிப்படுத்துவதற்காக கொரோனா தொற்றுக்கான பி.சி.ஆர். பரிசோதனைகளை மேற்கொண்டு வந்தோம்.

இதனடிப்படையில் அரியாலை ஆராதனையில் கலந்துகொண்ட 346 பேரை அடையாளம் கண்டநிலையில், அவர்கள் அனைவருக்குமான பரிசோதனைகளும் முடிவடைந்துள்ளன.

அதில், 20 பேரை காங்கேசன்துறை தனிமைப்படுத்தல் மையத்தில் அனுமதித்திருந்தோம். அவர்களில் 16 பேருக்குத் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஏனைய 4 பேருக்கு மூன்றாவது தடவையாக பரிசோதனை மேற்கொள்ளப்படுகின்றது.

அத்துடன் குறித்த 20 பேருக்கும் உணவு பரிமாறிய நான்கு இராணுவத்தினருக்கும் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனைவிட யாழ்.மாவட்டம் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் 26 பேருக்கு இரண்டு தடவைகள் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவர்களுக்கு தொற்று இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவின் கீழ், 23 பேருக்கு பரிசோதனைக்கான மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளன. அத்துடன் ஆராதனையில் கலந்துகொண்ட அத்தனை பேருக்கும் சோதனைகள் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

யாழ்.மாவட்டத்தில் முதலாவது தொற்றாளரான தாவடியைச் சேர்ந்த நபருக்கும் அவருடன் நெருங்கிய தொடர்புடைய மூன்று குடும்பங்களைச் சேர்ந்த 18 பேருக்கும் இரண்டு தடவைகள் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அவர்களுக்கு தொற்று இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அடுத்தக் கட்டமாக வெளிநாடுகளில் இருந்து வருகை தந்தவர்களுக்கு பரிசோதனைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. அதுமட்டுமன்றி கொழும்பு மாவட்டத்தில் இருந்து அத்தியாவசிய தேவைகள் மற்றும் ஏனைய தேவைகளுக்காக சென்றுவரும் பாரவூர்திகளின் சாரதிகள் மற்றும் அவர்களின் உதவியாளர்கள் ஒவ்வொரு மாட்டங்களிலும் பரிசோதனைகள் செய்யப்படவுள்ளன.

இதுவரைக்கும், 411 பேருக்கு சமூக மட்டத்தில் பரிசோதனை மேற்கொண்டுள்ளோம். இவற்றில் 11 பேருக்கு மட்டுமே வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஏனையவர்களுக்கு இல்லை என்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

http://athavannews.com/வடக்கில்-அடுத்தக்கட்டமா/

tamil-23.04corona-copy.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.