Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமெரிக்காவை உலுக்கும் மனிதப் பேரழிவு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உலகம் முழுவதும் தீவிரமாகப் பரவி மனித அழிவை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் அமெரிக்காவை ஒரே நாளில் திணறவைத்துள்ளது.

உலக நாடுகளில் இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த 2 மணிநேரங்களில் ஆயிரத்து 800ஐயும் தாண்டி மனித உயிரிழப்பு பதிவாகியுள்ளது.

இந்தச் செய்தி பதிவிடும்வரை ஒருநாளில் 1845 பேர் அங்கு மரணித்துள்ளதுடன் புதிய நோயாளர்கள் 27 ஆயிரத்து 178 பேர் அடையாளங்காப்பட்டுள்ளனர்.

அத்துடன் மொத்த உயிரிழப்பு 12ஆயிரத்து 716 ஆக அதிகரித்துள்ள அதேவேளை, மொத்தமாக 3 இலட்சத்து 94ஆயிரத்து 182 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

அத்துடன் அமெரிக்காவில் இதுவரை 21ஆயிரத்து 571 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ள நிலையில் சிகிச்சை பெறுவோரில் ஆயிரத்து 169 பேர் கவலைக்குரிய நிலையில் உள்ளமை பதிவாகியுள்ளது.

இந்நிலையில் அமெரிக்க மாநிலங்களில் நியூயோர்க்கில் வைரஸ் தொற்று கடுமையாகியுள்ள நிலையில் அங்குமட்டும் கடந்த 24 மணிநேரங்களில் 731 பேர் மரணமடைந்துள்ளனர்.

அங்குமட்டும் ஒரு இலட்சத்து 38 ஆயிரத்து 863 பேர் வைரஸ் தொற்றுக்குள்ளான நிலையில் மொத்த உயிரிழப்பு 5 ஆயிரத்து 489ஆகக் காணப்படுகிறது.

இதையடுத்து நியூஜெர்ஸி மாகாணம் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதுடன் ஒரேநாளில் 229 பேர் மரணித்து மொத்த மரணம் ஆயிரத்து 232ஆகப் பதிவாகியுள்ளது.

அங்கு 44 ஆயிரத்து 416 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் மிச்சிகக்ன் மாகாணத்தில் ஒரு நாளில் 118 பேர் மரணித்து மொத்த உயிரிழப்பு 85 ஆகவும் மொத்த பாதிப்பு 18ஆயிரத்து 970ஆகவும் பதிவாகியுள்ளது.

இதேவேளை, ஐரோப்பிய நாடான பிரான்சில் 1417 பேர் ஒரே நாளில் மரணித்துள்ளமை பதிவாகியுள்ளதுடன் அங்கு மொத்த உயிரிழப்பு பத்தாயிரத்தைக் கடந்து 10 ஆயிரத்து 328ஆகப் பதிவாகியுள்ளது.

அத்துடன் உலக அளவில் 14 இலட்சத்து 23 ஆயிரத்து 642 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளான நிலையில் மரணங்கள் 80 ஆயிரத்தைக் கடந்து தற்போது 81 ஆயிரத்து 857ஆகப் பதிவாகியுள்ளது.

மேலும், கொரோனா தொற்றில் இருந்து விடுபட்டு இதுவரை 3 இலட்சத்து ஆயிரத்து 623பேர் குணமடைந்துள்ள போதும், தற்போது மரணமடைவோரின் எண்ணிக்கை பன்மடங்காக அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/அமெரிக்காவை-உலுக்கும்-மன/

 

Country,
Other
Total
Cases
New
Cases
Total
Deaths
New
Deaths
Total
Recovered
Active
Cases
Serious,
Critical
Tot Cases/
1M pop
Deaths/
1M pop
Total
Tests
Tests/
1M pop
World 1,426,609 +80,573 81,995 +7,341 301,828 1,042,786 47,912 183 10.5    
USA 396,416 +29,412 12,813 +1,942 21,674 361,929 9,169 1,198 39 2,075,739 6,271
Spain 141,942 +5,267 14,045 +704 43,208 84,689 7,069 3,036 300 355,000 7,593
Italy 135,586 +3,039 17,127 +604 24,392 94,067 3,792 2,243 283 755,445 12,495
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு கருவாட்டு பாசல்  அல்லது பால்கோவாவை கொண்டுவந்தாலும் தூக்கி குப்பையிலை போடுவினம் இரண்டு முறை நியூயோர்க்கில் செய்தவை . எப்படி 4.5 லட்ஷம் கொரனோ  கூட்டத்தை உள்ள விட்டவையல் ?

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, பெருமாள் said:

ஒரு கருவாட்டு பாசல்  அல்லது பால்கோவாவை கொண்டுவந்தாலும் தூக்கி குப்பையிலை போடுவினம் இரண்டு முறை நியூயோர்க்கில் செய்தவை . எப்படி 4.5 லட்ஷம் கொரனோ  கூட்டத்தை உள்ள விட்டவையல் ?

புரியாத புதிர்....

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கா.... ஆரம்பத்தில் இந்த நோய்...  
சீனா,  ஐரோப்பாவுடன் முடிந்து விடும் எனவும், தங்களுக்கு எதுவும் நடக்காது என்று... 
அசட்டையாகவும், இறுமாப்புடனும் இருந்து விட்டது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
10 hours ago, தமிழ் சிறி said:

அமெரிக்கா.... ஆரம்பத்தில் இந்த நோய்...  
சீனா,  ஐரோப்பாவுடன் முடிந்து விடும் எனவும், தங்களுக்கு எதுவும் நடக்காது என்று... 
அசட்டையாகவும், இறுமாப்புடனும் இருந்து விட்டது.

வேறை ஒரு மாதிரியும் சொல்லலாம்...
இவர்களைக்கு மனித அழிவுகள் என்றால் என்னவென்று தெரியாது. செயற்கையான அழிவுகளை அனுபவிக்கவில்லை.இவர்கள் அன்று தொடக்கம் உலக நாடுகளுக்கு அழிவுகளை செய்தார்கள். குண்டுகளை போட்டு அழித்தார்கள்.இராணுவத்தை அனுப்பி நாட்டை/மக்களை அழித்தார்கள்.அழிந்த அனுபவம் போரின் துன்பங்களை அனுபவிக்கவில்லை.ஒரு பாரிய அழிவு வந்தால் அதை எதிர் கொள்ளும் திறன் இவர்களிடம் இல்லை.ஒரு கொரோனாவுக்கே இந்த நிலை என்றால்?????? மிகுதியை நீங்களே கூட்டிக்கழித்துப்பாருங்கள்.

நாடு நிறைய ஆயுதங்களை வைத்திருக்கின்றார்கள். ஆனால் அது இன்று எதுக்குமே பிரயோசனப்படவில்லை. மாறாக மற்றவர்களுக்கென வரும் முகக்கவசங்களையே திருடுகின்றார்கள்.அடிப்படை மருத்துவ வசதிகள் இல்லாமல் திண்டாடுகின்றார்கள்.தனி மனிதனுக்கு மருத்துவ காப்புறுதி இல்லை.காப்புறுதி சட்டத்தை கொண்டு வந்த ஒபாமாவை எள்ளி நகையாடி சட்டத்தையும் தூக்கி எறிந்து விட்டார்கள்.   வல்லரசு எப்படியிருக்க வேண்டும் என்பதற்கு சீனாதான் முன்னுதாரணமாக தற்போது இருக்கின்றது.

இந்தியாவில் வாக்குக்கு காசு வாங்கிவிட்டு கைதட்டுற கூட்டமும்.....
அமெரிக்காவில் விஷ்கியும் பியரும் அடித்துவிட்டு ஓ ஜே போட்டு கைதட்டுற கூட்டமும் ஒன்றே.....

போரில் அழிந்த ஜேர்மனி ஆயுதங்கள் தயாரிப்பதை விடுத்து மக்கள் நலனில் மட்டும் அதிக கவனம் செலுத்தினால் எப்படியிருக்கலாம் என்பதற்கு தற்போது நடக்கும் நிலவரங்கள் நல்ல உதாரணம்.....அது மட்டுமல்லாமல் மனித நேயத்திற்கும் முன்னுதாரணமாக இருக்கின்றார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.