Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ; உயர் நீதிமன்ற சட்டத்தரணி ஹிஜாஸ் கைது

Featured Replies

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் உயர் நீதிமன்ற சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் உட்பட பலர் சி.ஐ.டி.யினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இதேவளை கடந்த வருடம் ஏப்ரல் மாதம் 21 அம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற குண்டு தாக்குதல் சம்பவம் தொடர்பில் நேற்றிரவு முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியூதீனின் இளைய சகோதரரான ரியாஜ் பதியூதீன் புத்தளத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டிருந்தார்.

இந்நிலையில், முன்னாள் அமைச்சர் ரிஷாட்டின் சகோதரருக்கு மேலதிகமாக உயர் நீதிமன்ற சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் உட்பட பலர் சி.ஐ.டி.யினரால் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/80010

  • தொடங்கியவர்
13 hours ago, ampanai said:

இந்நிலையில், முன்னாள் அமைச்சர் ரிஷாட்டின் சகோதரருக்கு மேலதிகமாக உயர் நீதிமன்ற சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் உட்பட பலர் சி.ஐ.டி.யினரால் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உயர் நீதிமன்ற சட்டத்தரணிக்கு சட்டத்தரணியை தேவையாக்கி விட்டார்கள்.

  • தொடங்கியவர்

Rishad Bathiudeen responds to brother’s arrest

Former Minister Rishad Bathiudeen yesterday denied that he, his brother, or any member of his family were linked to terror activities.

The former Minister responded to his brother’s arrest via a video message on social media, stating that he nor his family were involved in any terrorist activities, and denied the allegations against his brother.

Bathiudeen also added that he will take legal action against his brother’s arrest by the Criminal Investigation Department (CID).

http://www.ft.lk/news/Rishad-Bathiudeen-responds-to-brother-s-arrest/56-698873

  • தொடங்கியவர்

உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுதாரியுடன் ஹோட்டலில் கலந்துரையாடியுள்ள ரிஷாத்தின் சகோதரர் : பொலிஸ் பேச்சாளர் வெளிப்படுத்தும் தகவல்கள் இதோ

உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் குறித்து விசாரணை செய்யும் சி.ஐ.டி.யின் பிரதான விசாரணைக் குழு, சிரேஷ்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ், முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின்இளைய சகோதரர் ரியாஜ் பதியுதீன், சுங்க அதிகாரி ஒருவர் உட்பட 6 பேர் நேற்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் சகோதரர் ரியாஜ் பதியுதீன், தற்கொலை குன்டுதாரி ஒருவருடன் மிக நெருங்கிய தொடர்பில் இருந்துள்ளமையும், தாக்குதலை அண்மித்த நாளொன்றில்பிரசித்த ஹோட்டல் ஒன்றில் குறித்த தற்கொலைதாரியைதனியே சந்தித்து கலந்துரையாடியுள்ளமை தொடர்பிலான தகவல்களும் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் குண்டுத் தாக்குதல்களை நடாத்த திட்டமிட்டதன் பின்னணியில்இருந்தமை தொடர்பில்விசாரிக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர்பொலிஸ் அத்தியட்சர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் சி.ஐ.டி.யின் பிரதிப் பொலிஸ் மா அதிபர்நுவன் வெதிசிங்கவுடன் விஷேட செய்தியாளர் சந்திப்பை நடாத்தியே அவர் இந்த தகவல்களை வெளிப்படுத்தினார்.

இந்நிலையில் இந்த 6 பேரும்தற்போது சி.ஐ.டி.யின் பொறுப்பில், நான்காம் மாடியில்பயங்கரவாத தடை சட்டத்தின் விதிவிதானங்கள் பிரகாரம் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும் நிலையில்,மற்றொரு சட்டத்தரணி உட்பட பலர் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக சி.ஐ.டி.யின்உயர் அதிகாரி ஒருவர் கேசரிக்கு தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டுள்ள சிரேஹ்ச்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் தொடர்பில்மாவனெல்லை புத்தல் சிலை உடைப்பு விவகாரம் முதல் வெளப்படுத்தப்பட்டுள்ள பல்வேறு ஆதாரங்களை மைப்படுத்தியே கைது நடவடிக்கையை முன்னெடுத்ததாகவும்,குறிப்பாக தற்கொலை குண்டுதாரிகள் இருவரும் அவருக்குநெருங்கிய தொடர்புகள் இருந்துள்ளதாகவும், குண்டுதாரிகளுடன் இணைந்து செயற்பட்டுள்ளமைக்கான சான்றுகள் கிடைத்துள்ளதாகவும் அந்த அதிகாரி சுட்டிக்காட்டினார்.

குறிப்பாகஇந்த சட்டத்தரணியின் அமைப்புக்குகிங்ஸ்பரி ஹோட்டல் தற்கொலை குண்டுதாரியான மொஹம்மட் இப்ரஹீம் இன்சாப் அஹமட் எனும் பயங்கர்வாதி, ஒரு இடத்தையே பெற்றுக்கொடுத்துள்ளார். அதன் பின்னணி குறித்து ஆராய வேண்டியுள்ளது என அந்த அதிகாரி குறிப்பிட்டார்.
இந்நிலையில் நேற்று இடம்பெற்ற விஷேட செய்தியாளர் சந்திப்பில் தற்போதைய விசாரணைகளில் புதிதாக கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பில் பொலிஸ் பேச்சாளார் பொலிஸ் அத்தியட்சர் ஜாலிய சேனாரத்ன தகவல் தருகையில்,

'கைது செய்யப்பட்ட இந்த 6 பேரில் ஒரு சட்டத்தரனியுள்ளார். சுங்க அதிகாரி ஒருவர் உள்ளார். மேலும் மூவரும் உள்ளனர். அவற்ரை விட முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் சகோதர் ரியாஜும் உள்ளடங்குகின்றார்.

ரியாஜ் பதியுதீன் எனும் சந்தேக நபர் ஒருதற்கொலை குண்டுதாரியுடன் நேர்டியாக தொடர்புகளைப் பேணியுள்ளார்.அதேபோல், குண்டுதாக்குதலுக்கு மிக நெருங்கிய காலப்பகுதியில் ரியாஜ் பதியுதீன், குறித்த குண்டுதாரியுடன் கொழும்பின் பிரபல ஹோட்டல் ஒன்றில்தனியாக சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

அதேபோல் தற்போது கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள்,நலன்புரி அமைப்புக்கள் நிறுவனங்களை உருவாக்கி, குண்தாரிகளுடன் ஒன்றாக பதவிகளை வகித்து செயற்பட்டுள்ளனர்.அந்த நிருவனங்களில் குண்டுதாரிகள்பணம் முதலீடு செய்துள்ளமை தொடர்பிலும் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.அந்த நிறுவனங்களுக்காக காணிகளை தானமாககுண்டுதாரிகள் வழங்கியுள்ளானர். இவ்வாறான பல தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டே இந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அது தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெறுகின்றன.' என தெரிவித்தார்.

இதன்போது ஊடகவியலாளர்கள் பொலிஸ் பேச்சாளர் ஜாலிய சேனாரத்னவிடம்கேள்விகளைத் தொடுத்து விளக்கம் கோரினர்.

கேள்வி:கைது செய்யப்பட்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் என அறிகின்றோம். அவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் என்ன?
பதில்:அந்த சட்டத்தரணி இரு குண்டுதாரிகளுடன் தொடர்புகளை பேனியமை தொடர்பில் தகவல்கள் வெளப்படுத்தப்பட்டுள்ளன. குண்டுதாரிகளுடன் இணைந்து பல அமைப்புக்கள் நிறுவங்களில்ஒன்றாக பதவிகளை வகித்துள்ளார். குண்டுத் தாக்குதல் சம்பவங்களை திட்டமிட்டதன் பின்னணியில் அவருக்கு உள்ள சிற்சில தொடர்புகள் வெளப்படுத்தப்பட்டுள்ளன. அதனை மையப்படுத்தியே அவர் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகள் இடம்பெறுகின்றன.

கேள்வி:காணி ஒன்றினை அல்லது இடம் ஒன்றினை தானமாக வழங்கியதாக கூறினீர்கள். அது குறித்து விளக்க முடியுமா?
பதில்: குண்டுதாரி ஒருவர், ஒரு அமைப்புக்கு ஒரு இடத்தை தானமாக வழங்கியுள்ளார். குறித்த அமைப்பு இன்றும் அந்த இடத்தில் தான் இயங்குகின்றது.

கேள்வி:சந்தேக நபர்களை நீதிமன்றில் ஆஜர் செய்வது தொடர்பில்?
பதில்:உங்களுக்கு தெரியும் இது மிக நீண்ட சூட்சுமமான விசாரணை(சந்தேக நபர்களின் தொடர்படல் வலையமைப்பு அடங்கிய வரிப்படம் ஒன்றினை மடிக் கனிணியில் காண்பித்து விளக்கினார்) அதனால் அவர்களை இன்று , நாளை நீதிமன்றில் ஆஜர் செய்வது சாத்தியமற்றது. முடியுமான வரை விரைவில் விசாரணைகளை நிறைவு செய்து ஆஜர் செய்வோம்.

கேள்வி: அண்மையில் இடம்பெற்றஊடகவியலாளர் சந்திப்பில், முன்னர்இந்த விவகாரங்களை கையாண்ட விசாரணை அதிகாரிகள் சரியாக அவற்றை கையாளாமையால் விசாரணைகள் பாதிக்கப்பட்டதாக கூறினீர்கள்,அவர்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?
பதில்: அவர்கள் குறித்து பதில் பொலிஸ் மா அதிபரின் நேரடி கட்டுப்பாட்டில் விசாரணைகள் பொலிஸ் விஷேட விசாரணைப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அவர்கள் குறித்து முடிவெடுக்க பொலிஸ் மா அதிபர் அடுத்த இரு வாரங்களுக்குள்விசாரணையாளர்களிடம் அறிக்கை கோரியுள்ளார்.

கேள்வி: முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் இந்த விவகாரத்துடன் தொடர்புபட்டுள்ளதாக தகவல்கள் உள்ளதா?
பதில்: தற்போதைய நிலையில் அவரின் சகோதரரின் தொடர்பு குறித்து வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் அவரது சகோதரரைக் கைது செய்துள்ளோம். மேலதிக விசாரணைகளை நாம் முன்னெடுக்கின்றோம். குற்றப் புனாய்வுத் திணைக்களத்துக்கு இந்த விசாரணைகளில், இக்குற்றத்தின் பொறுப்பு யார் மீது உள்ளது என்பதைக் கண்டுபிடிப்பதை தவிர,அவ்வாறான நபர்களின் தரம், அந்தஸ்து தேவையற்றது என்றார்.

https://www.virakesari.lk/article/80040

 

 

  • தொடங்கியவர்

இலங்கை ஈஸ்டர் தாக்குதல்

இலங்கையில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி ஈஸ்டர் தினத்தன்று பயங்கரவாதத் தாக்குதலொன்று நடத்தப்பட்டிருந்தது.

இந்த தாக்குதல் சம்பவத்தில் 277 பேர் உயிரிழந்திருந்தனர்.

இலங்கை ஈஸ்டர் தாக்குதல் : பிரபல முஸ்லிம் அமைச்சரின் சகோதரர் கைதுபடத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionஇலங்கை ஈஸ்டர் தாக்குதல் : பிரபல முஸ்லிம் அமைச்சரின் சகோதரர் கைது

அத்துடன், சுமார் 400ற்கும் அதிகமானோர் காயமடைந்திருந்ததாக நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த தாக்குதல் சம்பவத்திற்கு இஸ்லாமியவாத பயங்கரவாத அமைப்பான தேசிய தௌஹித் ஜமாத் அமைப்பு பொறுப்பு கூறியிருந்தது.

தேசிய தௌஹித் ஜமாத் அமைப்பின் தலைவரான சஹ்ரான் ஹாஷிம் தலைமையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதுடன், பயங்கரவாதத் தாக்குதலில் அவரும் உயிரிழந்திருந்தார்.

கொழும்பு கொச்சிகடை புனித அந்தோனியார் தேவாலயம், நீர்கொழும்பு செபஸ்டியன் தேவாலயம் மற்றும் மட்டக்களப்பு சியோன் தேவாலயம் ஆகிய கிறிஸ்தவ தேவாலயங்களின் மீதும், கொழும்பிலுள்ள பிரபல நட்சத்திர ஹோட்டல்களான கின்ஸ்பேரி, சங்கிரிலா மற்றும் சினமன் கிரேன்ட் ஆகிய ஹோட்டல்கள் மீதும் இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.

இதேவேளை, ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் 197 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவிக்கின்றார்.

இதன்படி, குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் 119 சந்தேகநபர்களும், பயங்கரவாதத் தடுப்பு பிரிவிரினால் 78 சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

ஈஸ்டர் தாக்குதலின் சூத்திரதாரி சஹ்ரான் ஹாஷிம் என்கிறது இலங்கை அரசு Image captionஈஸ்டர் தாக்குதலின் சூத்திரதாரி சஹ்ரான் ஹாஷிம் என்கிறது இலங்கை அரசு

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் 40 பேர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகவும், 33 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

அத்துடன், பயங்கரவாதத் தடுப்பு பிரிவினர் கீழ் 52 சந்தேக நபர்கள் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிடுகின்றார்.

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை துரிதப்படுத்தி விரைவில் நிறைவு செய்ய எதிர்பார்த்துள்ளதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன தெரிவிக்கின்றார்.

https://www.bbc.com/tamil/sri-lanka-52293709

  • கருத்துக்கள உறவுகள்

வெளிப்படையாக, சண்டித்தனம் காட்டியவர் றிசாட்.

ஆனால், நசுக்கிடாமல் சண்டித்தனம் காட்டியவர் ஹிஸ்புல்லா.

இருவருமே இலங்கை அரசியலுக்கு தோதானவர்கள் அல்ல.

 

******

...இந்த 6 பேரும்தற்போது சி.ஐ.டி.யின் பொறுப்பில், நான்காம் மாடியில்பயங்கரவாத தடை சட்டத்தின் விதிவிதானங்கள் பிரகாரம் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும் நிலையில்....

******

காலம் உருண்டோடுகின்றது.

வண்டியில் ஏறிய ஓடத்தில், வண்டி ஏறி இருகின்றது.

புலிகள் என்ற சந்தேகத்தில் கைதான பலரை, தமிழ் தெரியாத சிங்கள அதிகாரிகள் விசாரணை செய்ய முடியாத நிலையில், விசாரணை என்ற பெயரில் சித்ரவதை செய்தவர்கள் தமிழ் பேசிய முஸ்லீம் அதிகாரிகள்.

இன்று முஸ்லீம் பயங்கரவாதிகள் என்ற சந்தேகத்தில் கைதான பலர், அதே நாலாவது மாடியில்.... இப்போது சிங்கள அதிகாரிகள் தமிழ் நன்றாக பேசுகின்றார்களாமே.

Edited by Nathamuni

  • தொடங்கியவர்
57 minutes ago, ampanai said:

அந்த நிறுவனங்களுக்காக காணிகளை தானமாககுண்டுதாரிகள் வழங்கியுள்ளானர்.

தானங்கள் பலவிதம். இது உண்மையானால், இது புதுவிதம். 

  • கருத்துக்கள உறவுகள்

நாளைக்கு இவனுகள் சுரண்டின பணத்தை அள்ளி வீச, பல்லிளித்துக்கொண்டு சலூட் அடிச்சு விடுவிப்பினம். அதுக்கு இவ்வளவு விளக்கம். இப்போ சிங்கள மன்னர்களுக்கு வேண்டியது பணம். 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, satan said:

நாளைக்கு இவனுகள் சுரண்டின பணத்தை அள்ளி வீச, பல்லிளித்துக்கொண்டு சலூட் அடிச்சு விடுவிப்பினம். அதுக்கு இவ்வளவு விளக்கம். இப்போ சிங்கள மன்னர்களுக்கு வேண்டியது பணம். 

மறந்துவீட்டீர்களோ; பொஸ் கோத்தா!

எல்லாத்தையும் பிடுங்கிக் கொள்வார். எதுக்கு பல்லிலித்து வாங்கிக் கொள்ளவேண்டும்?

வெகுவிரைவில் கிஸ்புல்லாவின் கிழக்கு பல்கலைகழக வளாகம் பிடுங்கப்பட்டு, தேசியமயமாக்க வேலை நடக்குது.

 

Edited by Nathamuni

  • தொடங்கியவர்
3 hours ago, Nathamuni said:

மறந்துவீட்டீர்களோ; பொஸ் கோத்தா!

எல்லாத்தையும் பிடுங்கிக் கொள்வார். எதுக்கு பல்லிலித்து வாங்கிக் கொள்ளவேண்டும்?

வெகுவிரைவில் கிஸ்புல்லாவின் கிழக்கு பல்கலைகழக வளாகம் பிடுங்கப்பட்டு, தேசியமயமாக்க வேலை நடக்குது.

வருவான் ... சிங்களம் கொள்ளையடிக்க விடுவான் ... பின்னர் அவனே கொள்ளையனிடம் கொள்ளையடிப்பான்  

 

  • தொடங்கியவர்

சீயோன் தேவாலய குண்டுதாரியுடனான தொலைபேசி அழைப்புக்கள், புத்தர் சிலை உடைப்பு குறித்து  ரிஷாத்தின் சகோதரரிடம்  தீவிர விசாரணை

 

(எம்.எப்.எம்.பஸீர்)

உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் குறித்து விசாரணை செய்யும் சி.ஐ.டி.யின் பிரதான விசாரணைக் குழுவினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் சகோதரர் ரியாஜ் பதியுதீன், சிரேஷ்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் உள்ளிட்ட 6 பேரிடமும் தடுப்புக் காவலில் விஷேட விசாரணைகள் நடாத்தப்பட்டு வருகின்றன.

கைதுசெய்யப்பட்டுள்ள 6 சந்தேக நபர்களில் அனேகர், ஷங்கரில்லா மற்றும் சினமன் கிராண்ட் ஹோட்டல்களில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய மொஹமட் இப்ராஹீம் இல்ஹாம் அஹமட் மற்றும் மொஹம்மட் இப்ராஹீம் இன்சாப் அஹமட் ஆகியோருடன் தொடர்பில் இருந்துள்ளமை தொலைபேசி பகுப்பாய்வு ஊடாக தெரியவந்துள்ளதாகவும் அதன் படி தீவிர விசாரணைகள் இடம்பெறுவதாகவும் சி.ஐ.டி. தகவல்கள் தெரிவித்தன.

எவ்வாறாயினும் மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் குண்டுத் தாக்குதலை நடாத்திய மொஹம்மட் நசார் மொஹம்மட் அசாத் எனும் குண்டுதாரியின் தொலைபேசி இலக்கத்தை பகுப்பாய்வு செய்த போது, முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் சகோதரர், ரியாஜ் பதியுதீனுடனான 7 அழைப்புக்கள் தொடர்பில் தகவல்கள் வெளிப்பட்டுள்ளதாகவும் அது குறித்து தடுப்புக் காவலில் அவரிடம் விசாரணை நடாத்தப்படுவதாகவும் நான்காம் மாடித் தகவல்கள் தெரிவித்தன.

அத்துடன் கைது செய்யப்பட்டுள்ளோரில் உள்ளடங்கும் சுங்க அதிகாரி, ஏற்கனவே தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு உதவியமை தொடர்பில் பயங்கரவாத குற்றச்சாட்டுக்கு உள்ளாகி கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டவர் என தெரியவந்துள்ளதாகவும் பொலிஸ் தகவல்கள் கூறின.

இந் நிலையில் உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களுக்கு முன்னர், மாவனெல்லை புத்தர் சிலை உடைப்பு விவகார சந்தேக நபர்களை விடுவிக்க சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க பிரதான சந்தேக நபரான மொஹம்மட் சஹ்ரான் எனும் பயங்கரவாதியால் 20 இலட்சம் ரூபா பணம் வழங்கப்பட்டமை தொடர்பில் ஏற்கனவே சி.ஐ.டி. தகவல்களை வெளிப்படுத்தியிருந்தது.

இந் நிலையில் அந்தப் பணம் கைது செய்யப்பட்டுள்ள சட்டத்தரணி ஹிஜாஜ் ஹிஸ்புல்லாஹ்வுக்கே வழங்கப்பட்டதாக கூறப்படும் நிலையில், அந்த சம்பவம் தொடர்பிலும் சட்டத்தரணி ஹிஜாஜ் ஜிஸ்புல்லாஹ்விடம் விசாரிக்க சி.ஐ.டி. நடவடிக்கை எடுத்திருந்ததாக சி.ஐ.டி.யினர் கூறினர்.

இந்நிலையில் கைதுசெய்யப்பட்டவர்களிடம் தொடர்ந்தும் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

https://www.virakesari.lk/article/80111

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ampanai said:

குண்டுத் தாக்குதல்கள் குறித்து விசாரணை செய்யும் சி.ஐ.டி.யின் பிரதான விசாரணைக் குழுவின

நான் குறிப்பிட்டது இந்தக் குழுவை 

11 hours ago, Nathamuni said:

இப்போ சிங்கள மன்னர்களுக்கு வேண்டியது பணம். 

 

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, satan said:

நான் குறிப்பிட்டது இந்தக் குழுவை 

 

அது சரி எப்படி எனது பெயரில் உங்கள் பதிவின் வசனம் வருகிறது (இப்போ சிங்கள மன்னர்களுக்கு வேண்டியது பணம். )?

வெட்டி ஒட்டபட்டதா ? 

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, Nathamuni said:

வெளிப்படையாக, சண்டித்தனம் காட்டியவர் றிசாட்.

 

வண்டியில் ஏறிய ஓடத்தில், வண்டி ஏறி இருகின்றது.

 

2009 ஆம் ஆண்டு அமைச்சருக்கு பொலிஸ் /இராணுவ கொமாண்டோ படையினர் பலத்த பாதுகாப்பு  வழங்யிருந்தனர் ...அந்த வீடியோ யாழில பார்த்த  ஞாபகம்....இப்ப டமிழ் அதிகாரிகளும் இருக்கினம்

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Nathamuni said:

மறந்துவீட்டீர்களோ; பொஸ் கோத்தா!

எல்லாத்தையும் பிடுங்கிக் கொள்வார். எதுக்கு பல்லிலித்து வாங்கிக் கொள்ளவேண்டும்?

 

19 minutes ago, Nathamuni said:

(இப்போ சிங்கள மன்னர்களுக்கு வேண்டியது பணம். )?

பொருத்திப் பாருங்கள்.

2 minutes ago, putthan said:

2009 ஆம் ஆண்டு அமைச்சருக்கு பொலிஸ் /இராணுவ கொமாண்டோ படையினர் பலத்த பாதுகாப்பு  வழங்யிருந்தனர் ...அந்த வீடியோ யாழில பார்த்த  ஞாபகம்....இப்ப டமிழ் அதிகாரிகளும் இருக்கினம்

காலச் சக்கரத்தின் திரு விளையாடல். 

  • தொடங்கியவர்

ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வுக்கு முஜிபுர் ரஹ்மான் பாராட்டு

“சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ், தேசப்பற்றுள்ள ஒரு இளம் சட்டதரணியாவார்” என்று தெரிவித்துள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், மோசமான அரசியல் கலாசாரத்தில் இருந்து அரசாங்கம் விடுபட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ், மனிதாபிமான பிரச்சினைகள்,  அரசமைப்பு விடயங்கள் தொடர்பிலும் சிறுபான்மையின மக்களுக்கு எதிரான செயற்பாடுகளின்போதும், மிகவும் துடிப்புடன் செயற்பட்டு, நீதிக்காக போராடி வருகின்றவர் என்று குறிப்பிட்டுள்ளார்.

“2018 ஆம் ஆண்டு இடம்பெற்ற அரசியலமைப்புக்கு விரோதமான  ஆட்சி மாற்றத்தின்போது சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ், உயர் நீதிமன்றில் நீதிக்கான போராட்டத்தை மேற்கொள்வதில் முன்னின்று செயற்பட்டிருந்தார்.

“அத்துடன் கடந்த காலங்களில் நாட்டில் சிறுபான்மை மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட அடக்குமுறைகள், திட்டமிட்ட வன்முறைகளை எதிர்த்து துணிந்து போராடிய சட்டத்தரணியாக திகழ்ந்தவர்” என்றும் அந்த அறிக்கையில் அவரைப் பாராட்டியுள்ளார்.

இந்நிலையில் அவர்மீது அரசியல் ரீதியில் பழிவாங்கும் நோக்கிலே, உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலுடன் தொடர்புபடுத்தி, அரசாங்கம் அவரை கைது செய்திருக்கின்றது என்றும் இது இந்த அரசாங்கத்தின் மிகவும் கண்டிக்கத்தக்க செயற்பாடாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் எதிர்வரும் தேர்தலை இலக்காகக்கொண்டு அரசாங்கம் இனவாதத்தை கட்டவிழ்த்துவிடாது, நாட்டை மிக மோசமாக பாதிப்புறச் செய்திருக்கும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் வேலைத்திட்டத்தை மேற்கொள்ளவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

http://www.tamilmirror.lk/செய்திகள்/ஹிஜாஸ்-ஹிஸ்புல்லாஹ்வுக்கு-முஜிபுர்-ரஹ்மான்-பாராட்டு/175-248739

  • தொடங்கியவர்

சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா நிரபராதி என உறுதிப்படுத்தும் வரை நீதிமன்ற நடவடிக்கைகளில் அவர் ஈடுபடுவதை நிறுத்த வேண்டும் - பொதுபலசேனா

(நா.தனுஜா)

சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா நிரபராதி என்பது நீதிமன்றத்தினால் உறுதிப்படுத்தப்படும் வரை அவர் சட்ட மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதை இடைநிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுபலசேனா அமைப்பு வலியுறுத்தியிருக்கிறது.

இது குறித்து பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் இன்று நீதிமன்ற சேவைகள் ஆணைக்குழுவின் தலைவர் பிரதம நீதியரசர் ஜயந்ந ஜயசூரியவிற்கு கடிதமொன்றை அனுப்பிவைத்திருக்கிறார்.

Ganasara.jpg

 

அக்கடிதத்தில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:
கடந்த ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற குண்டுத்தாக்குதல்களுடன் தொடர்புபட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில் சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா கைது செய்யப்பட்டிருக்கிறார். 
அவர் குண்டுதாரிகள் இருவருடன் தொடர்புகளைப் பேணியதாகவும் அவர்களுடன் இணைந்து பல்வேறு அமைப்புக்களிலும் வெவ்வேறு பதவிகளை வகித்ததாகவும் அதுமாத்திரமன்றி குண்டுத்தாக்குதலை மேற்கொள்வதற்கான திட்டத்திலும் பங்குகொண்டதாகச் சந்தேகிப்பதாக கடந்த 15 ஆம் திகதி குற்றப்புலனாய்வுப் பிரிவி தெரிவித்தது.

நபரொருவர் குற்றவாளி என்பது நிரூபணமாகும் வரை அவர் நிரபராதியாகவே கருதப்படவேண்டும் என்பதை நாமறிவோம்.
 

எனினும் இந்த சட்டத்தரணியின் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களின் பாரதூரத்தன்மையைக் கருத்திற்கொண்டு விசாரணைகளின் பின்னர் அவர் நிரபராதி என்பது நீதிமன்றத்தினால் உறுசெய்யப்படும் வரையில் அவரை சட்டத்துறையில் பணியாற்ற அனுமதிப்பது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தலாம் எனக் கருதுகின்றோம்.
 

அதுமாத்திரமன்றி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா நிரபராதி என்பது நிரூபணமாக முன்னர் அவர் தனது தொழிலில் ஈடுபட அனுமதியளிக்கும் பட்சத்தில் மக்கள் நீதிமன்றத்தின் மீது கொண்டிருக்கும் நம்பிக்கையை இழப்பதற்கும் வாய்ப்புள்ளது. எனவே அவரது குற்றமற்ற தன்மை உறுதியாகும் வரை அவர் சட்ட நீதிமன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதை இடைநிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

https://www.virakesari.lk/article/80176

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ampanai said:

“அத்துடன் கடந்த காலங்களில் நாட்டில் சிறுபான்மை மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட அடக்குமுறைகள், திட்டமிட்ட வன்முறைகளை எதிர்த்து துணிந்து போராடிய சட்டத்தரணியாக திகழ்ந்தவர்” என்றும் அந்த அறிக்கையில் அவரைப் பாராட்டியுள்ளார்

 எந்த சிறுபான்மையை குறிப்பிடுகிறார் என்று தெரியவில்லையே?   அதையும் வெளிப்படையாக சொல்லி விட வேண்டியது.   ஒருவேளை தமிழருக்கு அறைகூவல் விடுகிறாரோ? 

ஒரு அனிஞாயம்  நடக்கும் போது பாதிக்கப்பட்டவருக்காக இல்லாவிட்டாலும் நாளைக்கு நான் அதே அனிஞாயத்தால்  பாதிக்கப்படாமல் இருப்பதற்காகவேனும் தட்டிக் கேட்க வேணும். அப்போ சம்பந்தப்படவனுக்கு ஓர் எச்சரிக்கை வரும். ஆனால் யாருக்கோ நடக்குது நாம் அதில் சுகம் காணுவோம் என்று இருந்துவிட்டு, இப்போ நிஞாயம், அனிஞாயம் கேட்டால் எப்பிடி சாத்தியமாகும்? உனக்கொரு நீதி. மற்றவனுக்கொரு நீதி. அல்லாஹ் அப்பிடி செய்வாரோ? 

  • தொடங்கியவர்
10 hours ago, ampanai said:

எனினும் இந்த சட்டத்தரணியின் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களின் பாரதூரத்தன்மையைக் கருத்திற்கொண்டு விசாரணைகளின் பின்னர் அவர் நிரபராதி என்பது நீதிமன்றத்தினால் உறுசெய்யப்படும் வரையில் அவரை சட்டத்துறையில் பணியாற்ற அனுமதிப்பது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தலாம் எனக் கருதுகின்றோம்.

இதை கூறுவதும் ஒரு குற்றவாளி 😞 

"விசாரணைகளின் பின்னர் அவர் நிரபராதி என்பது நீதிமன்றத்தினால் உறுசெய்யப்படும் வரையில் அவரை சட்டத்துறையில் பணியாற்ற அனுமதிப்பது" - சட்டத்தின் முன்னால் யாவரும் சமம்.   இதை மறுத்தால் ஜிகாதிகளுக்கு பரப்புரை செய்ய இலகுவாகி விடும். அடுத்த உயிர்த்த ஞாயிறு தாக்குதல் கூட நடக்கலாம்.  

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.