Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அவசர கொரோனா தேர்தல் மரணத்துக்கு வித்திடும்

Featured Replies

அவசர கொரோனா தேர்தல் மரணத்துக்கு வித்திடும்
Editorial   / 2020 ஏப்ரல் 15 , பி.ப. 11:00 - 0      - 24


ஒரு மாதத்துக்கும் மேலாக, கொரோனா வைரஸுக்கு எதிரான போராட்டம் இந்த நாட்டுக்குள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வரும் சூழ்நிலையில், தேர்தலொன்றை நடத்துவதென்பது, இத்தனை நாள்களாக முன்னெடுத்த போராட்டத்தை வீண் விரயமாக்கிவிடும் என்று, முன்னாள் நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அவர், இலங்கையிலிருந்து நூற்றுக்கு நூறு விகிதம் கொரோனா ஒழிக்கப்படும் வரையில், தேர்தலை ஒத்திவைப்பதே சிறந்ததென்றும் அதுவே மக்களுக்குப் பாதுகாப்பானது என்றும் தெரிவித்துள்ளார்.

தேர்தலெனச் சொல்லப்படுவது, தேர்தல் தினத்தில் வாக்குச் சாவடிக்குச் சென்று புள்ளடி போடுவது அல்லவென்றும் ஒவ்வொரு வேட்பாளரும் ஒவ்வொரு கட்சியும், சில வாரங்களாகவே உழைத்து, மக்களை ஒன்றுதிரட்ட வேண்டுமென்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

“வீடு வீடாகச் சென்று, வேட்பாளர்கள் பற்றிய அறிவிப்புப் பத்திரங்களை வழங்க வேண்டும். தங்களுடைய கட்சியின் கொள்கைகளை வெளிப்படுத்த வேண்டும். பொதுத் தேர்தல் எனும் போது, ஆயிரக்கணக்கான வேட்பாளர்களும், தங்களுக்கான வேட்பாளர் இலக்கம் பற்றி, பொதுமக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும்.

“அத்துடன், வாக்கெடுப்பு தினத்தில், பல பாடசாலைகளை, வாக்கெடுப்பு நிலையங்களாகப் பயன்படுத்த நேரிடும். வாக்கெடுப்புக்குப் பின்னரான 48, 72 மணித்தியாலங்கள் வரை, அரச ஊழியர்கள், சில அரச கட்டடங்களில் திரண்டு, வாக்குகளை எண்ண வேண்டும். இவ்வாறான பணிகளை முன்னெடுக்கவேண்டிய நிலையில், கொரோனா பின்னணியில் தேர்தலை நடத்துவது, பல உயிர்களைக் காவுகொடுப்பதாகிவிடும்” என்றும், மங்கள தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், தேர்தலை நடத்தும் வரையில், கொரோனா வைரஸுக்கு எதிரான நடவடிக்கைகளுக்காக, நாடாளுமன்றம் ஊடாக நிதி ஒதுக்கீடுகளைச் செய்துகொள்ள வேண்டுமாயின், ஜனாதிபதிக்குள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி, நாடாளுமன்றத்தைக் கூட்டி அதைப் பெற்றுக்கொள்ளலாம் என்றும் எதிர்க்கட்சியினர் என்ற வகையில் ஜனாதிபதிக்கு அதற்காக ஒத்துழைப்பு வழங்க, தாங்கள் தயாரென்றும், அவர் தெரிவித்துள்ளார்.
 

http://www.tamilmirror.lk/செய்திகள்/அவசர-கரன-தரதல-மரணததகக-வததடம/175-248636

  • தொடங்கியவர்
6 minutes ago, ampanai said:

எவ்வாறாயினும், தேர்தலை நடத்தும் வரையில், கொரோனா வைரஸுக்கு எதிரான நடவடிக்கைகளுக்காக, நாடாளுமன்றம் ஊடாக நிதி ஒதுக்கீடுகளைச் செய்துகொள்ள வேண்டுமாயின், ஜனாதிபதிக்குள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி, நாடாளுமன்றத்தைக் கூட்டி அதைப் பெற்றுக்கொள்ளலாம் என்றும் எதிர்க்கட்சியினர் என்ற வகையில் ஜனாதிபதிக்கு அதற்காக ஒத்துழைப்பு வழங்க, தாங்கள் தயாரென்றும், அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால், கூட்டமைப்பு இதற்கு எதிர்ப்பு என எண்ணுகிறேன். 
 

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, ampanai said:

ஆனால், கூட்டமைப்பு இதற்கு எதிர்ப்பு என எண்ணுகிறேன். 
 

தேர்தலை இலங்கையில் இப்படிப்பட்ட சூழ்நிலையில் நடுத்துவது சவாலான விடயம், பலர் வோட்டு போட வரமாட்டார்கள், அப்ப கள்ள வோட்டு தாரளாமாக விழும், கூட்டமைப்பு என்ன செய்யுதென்று பார்ப்போம் 

  • கருத்துக்கள உறவுகள்

தோர்தல் அவசரமில்லை: கொரோனாவை முதலில் ஒழியுங்கள்: வலியுறுத்துகிறார் சஜித்

sajith-1-250x300.jpgமக்களின் கண்ணீருக்கு மத்தியில் தேர்தலை நடத்தி நாட்டை சீரழிக்க எந்த சந்தர்ப்பத்திலும் நாம் தயாராக இல்லை எனத் தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ, பாராளுமன்ற ஜனநாயகத்தை விட நாட்டு மக்களின் பாதுகாப்பான வாழ்விற்கு முன்னுரிமையளிக்கத் தேவையில்லையா என்றும் கேள்வி எழுப்பினார்.

சஜித் பிரேமதாஸ இது தொடர்பில் மேலும் கூறியிருப்பவை வருமாறு:-

“தற்போது பொதுமக்கள் மத்தியிலும் அரசியல் வட்டாரங்களிலும் பிரதான பேசு பொருளாக மாறியிருப்பது பொதுத் தேர்தலை நடத்துவதா இல்லையா என்பதாகும். நாடாளுமன்ற ஜனநாயகத்தை நடைமுறைப்படுத்துகின்ற, அதற்கு மதிப்பளிக்கின்ற மக்கள் காணப்படுகின்ற எமது நாட்டில் அனைவரும் நாடாளுமன்றத் தேர்தல் உரிய நேரத்தில் நடத்தப்பட வேண்டும் என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

 

நாடாளுமன்ற ஜனநாயகத்தை நாம் பலப்படுத்த வேண்டும். நாடாளுமன்ற ஜனநாயகத்தை விட நாட்டு மக்களின் பாதுகாப்பான வாழ்விற்கு முன்னுரிமையளிக்கத் தேவையில்லையா? நாடாளுமன்றத் தேர்தலின் காரணமாக தற்போது ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்ந்தும் அபாயகரமான நிலைக்குள் செல்லும் சந்தர்ப்பம் பாரதூரமான பாதிப்பு இல்லையா? உண்மையில் இந்த சந்தர்ப்பத் தில் தேர்தல் நடத்தப்பட்டால் கொரோனா வைரஸ் வெகு துரிதமாக பரவக்கூடிய அபாயகரமான நிலைமையே தற்போது காணப்படுகிறது.”

http://thinakkural.lk/article/38865

 

  • கருத்துக்கள உறவுகள்

மேயில் தேர்தலை நடத்துவது ஒருபோதும் சாத்தியமில்லை; கைவிரித்தார் தேர்தல் ஆணையாளர்

mahintha.jpg

மே மாத இறுதியில் தேர்தலை நடத்தும் சூழல் இல்லையென்று தெரிவித்துள்ள தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய,
எனினும், பொதுத் தேர்தலை நடத்தும் திகதி குறித்து தன்னால் எந்த முடிவையும் எடுக்க முடியாது என்றும் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கொரோனா வைரஸிலிருந்து நாடு விடுபடவில்லை. நாளுக்குநாள் நிலைமை மோசமடைந்து கொண்டு செல்கிறது. நாட்டின் இயல்பு வாழ்வு மோசமடைந்துள்ளது. எனினும் தேர்தலை மே மாத இறுதிக்குள் நடத்த முடியாது போனால் ஜூன் 2ஆம் திகதி புதிய நாடாளுமன்றம் கூட முடியாமல் போகலாம். இது விடயத்தில் உரிய கவனம் செலுத்துமாறு ஜனாதிபதியை வலியுறுத்தியுள்ளோம்.

இது விடயத்தில் உயர்நீதிமன்றத்தை நாட வேண்டியுள்ளது. எனினும், உயர்நீதிமன்றத்தை நாட வேண்டியதில்லையென ஜனாதிபதி கூறியுள்ளார். அப்படியாயின், மே மாத இறுதிக்குள் தேர்தலை நடத்தும் வாய்ப்பொன்றை அரசு எதிர்பார்க்கிறதா என எண்ண வேண்டியுள்ளது. ஜனாதிபதியிடமிருந்து கிடைக்கும் உத்தரவிற்கமைய தேர்தல் ஆணைக்குழு கூடி முடிவொன்றை எடுப்போம்.

உரிய காலக்கெடு முடியும் பட்சத்தில் தேர்தலை நடத்துவதில் பெரும் சட்டச்சிக்கல் ஏற்படலாம். இந்த வார இறுதிக்குள் ஜனாதிபதியை சந்தித்து இது குறித்து கலந்துரையாடுவோம். பின்னர் கட்சித் தலைவர்களையும் சந்தித்து கலந்துரையாடுவோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்

http://thinakkural.lk/article/38889

 

  • கருத்துக்கள உறவுகள்

திரைமறைவு அரசியல் நாடகங்கள்’

திரைமறைவு அரசியல் நாடகங்களால், மக்கள் இக்கட்டான சூழ்நிலைக்குள் தள்ளப்படும் ஆபத்து ஏற்பட்டுள்ளது என, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்திய காலநிதி சிவமோகன் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றிலேயே, அவர்  மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவித்துள்ளதாவது,

கொரோனா வைரஸால் ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த அச்சமான சூழ்நிலையில், வாழ்வாதார ரீதியாகவும் மன ரீதியாகவும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், திரைமறைவில் தேர்தல் நடத்துவதா என்று அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

கொரோனா பாதிப்பு, முற்றாக சரிசெய்யப்பட்டுள்ளது என, சுகாதார தரப்பினரால் அறிவிக்கப்பட்ட பின்னர், மக்கள் தங்களை மீள் கட்டுமாணம் செய்துகொள்வதற்கு குறைந்தது மூன்று மாதகாலமாவது கால அவசாகம் வழங்கிய பின்னரே, தேர்தல் எனும் வார்த்தையை, தேர்தல்கள் ஆணையகம் உச்சரிக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

அதைவிடுத்து, வெறுமனே இரண்டு வாரங்கள் அறிவித்ததில், தேர்தல் நடத்தப்படல் வேண்டும் என்று சிலர் கூக்குரல் எழுப்பி வருவது, மக்களை இன்னும் அழுத்தத்துக்கு உள்ளாக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

வேட்புமனுத் தாக்கலுக்கு முன்னரே, இந்த கொரோனா விவகாரம் சூடுபிடித்திருந்த நிலையில், அப்போதே, விமான நிலையத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருந்தால், இந்த அளவுக்கு நாட்டில் பாதிப்பு ஏற்பட்டிருக்காது என்றும் இதனால், இப்போது பொதுமக்கள் அனைவரும் பல துன்பங்களுக்கு முகங்கொடுத்து வருவதாகவும் அவர் மேலும் கூறினார்.

எனவே, தேர்தலை நடத்துவது தொடர்பான முயற்சியைக் கைவிட்டு, இந்தக் கொடூர நோயில் இருந்து மக்களைக் காப்பாற்றும் செயற்பாட்டில், அரசாங்கம் தொடர்ந்து ஈடுபடவேண்டும் என்றும் என்று அவர் மேலும் கோரிக்கை விடுத்துள்ளார்.

 

http://www.tamilmirror.lk/செய்திகள்/தரமறவ-அரசயல-நடகஙகள/175-248734

 

  • கருத்துக்கள உறவுகள்

அபாயம் நீங்கும்வரை தேர்தல் அறவிப்பை விடுக்கவேண்டாம்: முஸ்லிம் காங்கிரஸ்

kariapar-300x180.jpgஇலங்கையில் கொவிட்–19 தொற்று முற்றாக நீங்கும் வரை பொதுத் தேர்தலுக்கான அறிவிப்பை விடுக்க வேண்டாமென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு எழுத்துமூலம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

நாட்டில் சுமூகமான நிலைமை ஏற்படுவதற்கு முன்னர் தேர்தல் அறிவிப்பு விடுக்கப்படுமானால், அது சுதந்திரமாகவும் நேர்மையாகவும் தேர்தல் நடைபெறுவதை பெரிதும் பாதிக்கும் என்று அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

http://thinakkural.lk/article/38977

 

  • தொடங்கியவர்
On 16/4/2020 at 02:09, உடையார் said:

கொரோனா வைரஸிலிருந்து நாடு விடுபடவில்லை. நாளுக்குநாள் நிலைமை மோசமடைந்து கொண்டு செல்கிறது. நாட்டின் இயல்பு வாழ்வு மோசமடைந்துள்ளது. எனினும் தேர்தலை மே மாத இறுதிக்குள் நடத்த முடியாது போனால் ஜூன் 2ஆம் திகதி புதிய நாடாளுமன்றம் கூட முடியாமல் போகலாம். இது விடயத்தில் உரிய கவனம் செலுத்துமாறு ஜனாதிபதியை வலியுறுத்தியுள்ளோம்.

ஆக குறைந்தது முக்கிய நகரங்களில் ஐம்பது வீதமான மக்களுக்காவது கோவிட் 19 கான பரிசோதனை செய்யாமல் தேர்தலை வைப்பது என்பது மீண்டும் அதிகரித்த உயிரிழப்புக்களை ஏற்படுத்தும். 

அதையும் மீறி தேர்தல், பல மக்கள் தேர்தலை புறக்கணிக்க கூடும்.  

  • கருத்துக்கள உறவுகள்
On 16/4/2020 at 11:41, ampanai said:

“வீடு வீடாகச் சென்று, வேட்பாளர்கள் பற்றிய அறிவிப்புப் பத்திரங்களை வழங்க வேண்டும். தங்களுடைய கட்சியின் கொள்கைகளை வெளிப்படுத்த வேண்டும். பொதுத் தேர்தல் எனும் போது, ஆயிரக்கணக்கான வேட்பாளர்களும், தங்களுக்கான வேட்பாளர் இலக்கம் பற்றி, பொதுமக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும்

உந்த சிரமம்  இல்லாமலே   வெற்றி எப்பவோ திட்டமிட்டாச்சியா. அதை வெளியிடுகிறது ஒன்றுதான் பாக்கி. இது வெறும் கண்துடைப்பு.  இதுகூட புரியாமல் நீங்களெல்லாம் என்னத்தை சாதிக்கபோறீர்கள்? எதுக்கும் தயாராய் இருங்கள்.  முடிஞ்ச கையோடு காப்பு கொண்டு வருவினம்.  

On 16/4/2020 at 11:39, உடையார் said:

மே மாத இறுதியில் தேர்தலை நடத்தும் சூழல் இல்லையென்று தெரிவித்துள்ள தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய, எனினும், பொதுத் தேர்தலை நடத்தும் திகதி குறித்து தன்னால் எந்த முடிவையும் எடுக்க முடியாது என்றும் தெரிவித்தார்.

மனுஷன் மேல கடும் அழுத்தங்கள் பிரயோகிக்கப்படலாம்!

கொரோன வைரஸ் தாக்கத்தினை சாதகமாக பயன்படுத்தி தேர்தலை எப்படியாவது நடத்தி கள்ளவாக்குகள் மூலம் 2/3 பெரும்பான்மையைப் பெற வேண்டிய தேவை போர்க்குற்றவாளிகளான ராஜபக்ச கும்பலுக்கு உள்ளது. 

அதற்காக சகல காய்களும் நகர்த்தப்படுகின்றன.

மக்கள் பலியாவதைப்பற்றி ஆட்சியை கைப்பற்றி வைத்துள்ள பயங்கரவாதிகள் கும்பல் கவலைப்படவில்லை.   

 

மக்கள் 20 ஆயிரம் 30 ஆயிரம் செத்தாலும் பரவாயில்லை எப்பிடியாவது தேர்தலை நடத்தி பாராளுமன்றத்தை ஒருவழி செய்து அதிகார துஷ்பிரயோகங்களை நியாயப்படுத்தும் சட்டங்களை இயற்றாமல் ஓயப்போவதில்லை என்டு போர்குற்றவாளி கோத்தபாய ஒற்றைக்காலில் நிற்கிறாராம்.

15 hours ago, Rajesh said:

மனுஷன் மேல கடும் அழுத்தங்கள் பிரயோகிக்கப்படலாம்!

தேர்தல் ஆணைக்குழுவுக்கும் ஜனாதிபதிக்குமிடையில் வெடித்துள்ள முரண்பாடு: ஆணைக்குழுவிற்கு அதிகாரம் இல்லை எனக் கூறும் மஹிந்த

ஜனாதிபதியால் நிர்ணயிக்கப்பட்ட திகதியில் நாடாளுமன்ற தேர்தலை நடத்த முடியாவிட்டால், தேர்தல்கள் ஆணைக்குழு பிறிதொரு திகதியை அறிவிக்கும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

திகதியொன்றை நிர்ணயிக்காமல் தேர்தலை ஒத்திவைப்பதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அதிகாரம் இல்லை எனவும் மஹிந்த ராஜபக்ச சுட்டிக்காட்டினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

ஸ்ரீலங்காவில் ஏப்ரல் மாதம் பொதுத்தேர்தல் நடைபெறவிருந்த நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவிற்கும் நாட்டின் நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதிக்கும் இடையில் முரண்பாடுகள் வெடித்துள்ளன.

மார்ச் மாதம் 2 ஆம் திகதி ஜனாதிபதியினால் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, ஏப்ரல் 25 ஆம் திகதி பொதுத் தேர்தல் நடத்தப்படும் என்றும், மே மாதம் 14 ஆம் திகதி புதிய நடாளுமன்றம் கூடும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும் கடந்த மார்ச் மாதம் 21 ஆம் திகதி தேர்தல் ஆணைக்குழுவிற்கு இருக்கும் அதிகாரங்களுக்கு அமைய கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பொதுத் தேர்தலை திட்டமிட்டபடி ஏப்ரல் 25 ஆம் திகதி நடத்த முடியாது என்று கூறி தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும் அவர் தலைமையிலான அரசாங்கமும் மே மாதம் 28 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னரான ஒரு தினத்தில் தேர்தலை நடத்துவதில் எந்தவித சிரமங்களும் ஏற்படாது என்று அறிவித்துள்ளது.

அரசாங்கத்தின் இந்த செயற்பாடுகளுக்கு எதிர்கட்சிகள் கண்டனம் வெளியிட்டு வரும் நிலையிலேயே நாடளுமன்ற தேர்தலுக்கான புதிய திகதியை தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிக்க வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ச இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இதனை தெரிவித்துள்ளார்.

பொதுத் தேர்தலுக்கான திகதியை நிர்ணயிக்காமல் தேர்தலை ஒத்திவைப்பதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு எந்த அதிகாரமும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

1981 ஆம் ஆண்டின் இலக்கம் முதலாவது நாடாளுமன்றத் தேர்தல் சட்டத்தின் பிரிவு 24 இன் 3 ஆவதை மேற்கோள் காட்டி பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்காலத்தில் என்ன நிகழலாம் அல்லது நடக்காது என்ற ஊகத்தின் அடிப்படையில் இத்தகைய சட்டங்களை புறக்கணிக்க முடியாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அதன் பிரகாரம் தேர்தல்கள் ஆணைக்குழு முதலில் தனது கடமைகளை நிறைவேற்ற வேண்டும் என்றும் அதன்பின்னர் நிலுவையில் உள்ள ஏதேனும் சிக்கல்கள் தொடர்பில் விவாதிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

https://www.ibctamil.com/srilanka/80/141463

தேர்தல் நடாத்தப்படும் திகதி குறித்து பல்வேறு வதந்திகள் உலாவுகின்றன – மஹிந்த தேசப்பிரிய!

In இலங்கை     April 19, 2020 5:17 am GMT     0 Comments     1279     by : Benitlas

பொதுத் தேர்தலை நடத்துவதற்கு, நாடு வழமை நிலைமைக்கு திரும்பிய பின்னர் ஐந்து வார கால அவகாசம் தேவை என தேர்தல் ஆணைக் குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

ஊடகம் ஒன்றின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தேர்தலை நடத்தும் தினம் குறித்து தேர்தல் ஆணைக்குழு இதுவரை தீர்மானிக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தேர்தல் நடத்தப்படும் தினம் எனக்கூறி பல்வேறு வதந்திகள் பரவி வருவதுடன் சமூக வலைத்தளங்களிலும் பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன், அனைத்து நிலைமைகள் சம்பந்தமாகவும் கலந்துரையாடத் தேர்தல் ஆணைக்குழு நாளை கூடவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

http://athavannews.com/தேர்தலுக்கு-நாடு-வழமைக்க/

 

தேர்தல்கள் ஆணைக்குழுவின் முடிவு நாளை – மஹிந்த தேசப்பிரிய

In இலங்கை     April 19, 2020 5:38 am GMT     0 Comments     1039     by : Jeyachandran Vithushan

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான திகதி இப்போது திட்டமிடப்பட வேண்டுமா அல்லது தேர்தலை ஒத்திவைக்க வேண்டுமா என்ற கடுமையான விவாதத்திற்கு மத்தியில், தேர்தல்கள் ஆணைக்குழு தனது இறுதி முடிவை எடுப்பதற்கு முன்னர் சுகாதார அதிகாரிகளின் கருத்துக்களை பெற்றுக்கொள்வதற்கு தீர்மானித்துள்ளது.

தேர்தலை நடத்துவதற்கான சூழல் சரியானதா என்பதை தீர்மானிக்கவும் கொரோனா வைரஸ் பரவுவது குறித்த தகவல்களை பெற்றுக்கொள்ளவும் நாளை (திங்கள்கிழமை) சுகாதார அதிகாரிகள், பாதுகாப்புப் படையினர் மற்றும் தொடர்புடைய அதிகாரிகளை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

குறித்த சந்திப்பில் தீர்மானம் எடுக்கும்வரை நாடாளுமன்ற தேர்தலின் எதிர்காலம் குறித்து என்னால் கருத்து தெரிவிக்க முடியாது என்றும் அவர் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.

இதேவேளை “நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டுவது போன்ற பிற விடயங்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவின் அல்லது தேர்தல் செயலகத்தின் கீழ் வரவில்லை. ஜனாதிபதி விரும்பினால் நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்ட முடியும். அதுவே அவரின் தனிச்சிறப்பு. தேர்தல்கள் ஆணைக்குழு தேர்தல்களை நடத்துவது மட்டுமே” என குறிப்பிட்டுள்ளார்.

http://athavannews.com/தேர்தல்கள்-ஆணைக்குழுவி-10/

பொதுத் தேர்தலை நடத்துவதற்கு இது சரியான நேரம் இல்லை – மக்கள் விடுதலை முன்னணி!

In இலங்கை     April 19, 2020 6:25 am GMT     0 Comments     1091     by : Jeyachandran Vithushan

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையில் பொதுத் தேர்தலை நடத்துவதற்கு இது சரியான நேரம் இல்லை என மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

இது குறித்து நேற்று (சனிக்கிழமை) கருத்து தெரிவித்துள்ள அவர், புதிதாக பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்து வருவது பரிசோதனை நடத்தப்படாதமையினால் தான் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

“இலங்கையில் போதுமான ப்ரிசோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை அதனால்தான் புதிய நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை குறைவாக உள்ளது, மக்களின் நல்வாழ்வைப் பற்றி அக்கறை கொண்டிருந்தால் இந்த விடயத்தில் முடிவெடுப்பது ஜனாதிபதியின் பொறுப்பாகும்” என்றார்.

மேலும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் நீங்கும் வரை பொதுத் தேர்தல்களை நடத்துவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உட்பட பலர் ஆட்சேபனை தெரிவித்துள்ளனர், மேலும் தேர்தல்கள் ஆணைக்குழுவுடன் கலந்துரையாடல்களை கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/பொதுத்-தேர்தலை-நடத்துவத-2/

ஸ்ரீலங்காவில் கொத்துக் கொத்தாக மக்கள் பலியாவதற்கான சூழலை ஏற்படுத்த அனுமதிக்க முடியாது

தேர்தல் ஆணையாளரின் மீது தற்போதைய அரசாங்கம் அழுத்தங்களை பிரயோகிக்க கூடாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிவமோகன் தெரிவித்துள்ளார்.

இன்று அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

வெளிவரும் ஊடக செய்திகளின் அடிப்படையில் தேர்தல் ஆணையாளர் கடுமையான அரசியல் அழுத்தத்திற்கு உட்பட்டுள்ளதை மக்களால் விளங்கிக் கொள்ள கூடியதாக உள்ளது தேர்தல் ஆணையாளர் வரப்போகும் அனர்த்தங்களை புரிந்து கொண்டு அரசியல் யாப்புக் குழப்பங்கள் ஏற்படாத வகையில் உயர் நீதிமன்றத்தின் ஆலோசனையை பெற்றுக் கொள்ளுமாறு அரசுக்கு எழுத்து மூலமான கோரிக்கையை விடுதிருந்தார்.

அதற்கு ஜனாதிபதியின் சார்பாக பதிலளித்த செயலாளர் அரசியல் யாப்பு வியாக்கியானங்களை தெரிவித்து தேர்தலை நடத்துவதற்கு உரிய வகையில் எழுத்து மூலமான பதிலை வழங்கியிருந்தார். தற்போதைய அபாய சூழலை புரிந்து கொள்ளாத அரசின் அமைச்சர் உட்பட பலர் தேர்தலை நடத்த முடியும் அதற்கான பொறுப்பு தேர்தல் ஆணையாளரிடமே உள்ளது என அழுத்தங்களை பிரயோகித்து இருந்தனர். நாட்டில் கொரோனா நீங்கி விட்டதை கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கான ஜனாதிபதி செயலணி நாட்டு மக்களுக்கு உறுதிப்படுத்த வேண்டும்.

அதுவே ஒட்டுமொத்த கொரோனா அழிப்பு செயலணியை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ஜனாதிபதிக்கு பொருத்தமான செயற்பாடாக அமையும் எனவே தற்போதுள்ள சூழல் மிகவும் பயங்கரமான நிலமை என்பதை அரசு அறிந்து கொண்டு உலக நாடுகளில் ஏற்பட்ட கொரோனா அனர்த்தங்களை விளங்கிக் கொண்டும் செயற்பட வேண்டும். சீன நாட்டில் வூகான் மாநிலத்தில் வைத்தியர்களால் எச்சரிக்கை செய்யப்பட்ட போதும் கூட அதில் அசண்டை ஈனம் காட்டிய சீன அரசு பாரிய பாதிப்பிற்குள்ளாகியது.

இத்தாலிய நட்டில் அரசின் அறிவுறுத்தல்களை உதாசினம் செய்த மக்கள் கொத்துக் கொத்தாக இறக்க நேர்ந்து இறுதியில் மருத்துவ சேவை முழுதும் முடங்கியது. அமெரிக்காவில் 100 பேர் கொரோனாவில் இறந்திருந்த பொழுது ஊடகவியலாளரால் எச்சரிக்கை செய்யபட்டது. அதை உதாசீனம் செய்தார் அமெரிக்க ஜனாதிபதி டரம்ப்.

அதனால் 30ஆயிரத்திற்கு மேல் அமெரிக்க மக்களை பலி கொடுத்து பதிலளிக்க முடியாமல் திண்டாடி வருகிறார் இலங்கையில் கொரோனா கோர தாண்டவத்திற்கு எமது மக்களை பலி கொடுக்க மக்கள் பிரதிநிதிகளான நாங்கள் அனுமதிக்க முடியாது.

இறுதியில் இலங்கையில் சுகாதார சேவைகள் முடக்கப்பட்டு கொத்துக் கொத்தாக மக்கள் பலியாகும் நிலை ஏற்பட்டால் அந்த அனர்த்ததிற்கு காரணம் கூறாமல் முன் எச்சரிக்கையாக இவ் அரசும் தேர்தல் திணைக்களமும் நடந்து கொள்ள வேண்டும் என்று சுட்டிக்காட்டியுள்ளதுடன் மக்களது சுமுகமான வாழ்க்கை 100 வீதம் வழமைக்கு திரும்பும் வரை தேர்தலை மக்களுக்குள் திணிக்க கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.

https://www.ibctamil.com/srilanka/80/141509

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.