Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழப்போரட்டத்துக்கு எதிராக மீண்டும் இந்தியா?

Featured Replies

ஈழப்போரட்டத்துக்கு எதிராக மீண்டும் இந்தியா?

ராமேஸ்வரம் பகுதியில் 6 கப்பல்களுன் 500 படையினரும் படைகலன்களும் ஏவுகணைகளுடனும் நிற்பதாக வானொலிச்செய்தி

இது உண்மையா?

எந்த வானொலியில் கேட்டீர்கள்? லங்கா புவத்தா?

  • தொடங்கியவர்

எந்த வானொலியில் கேட்டீர்கள்? லங்கா புவத்தா?

கனடாவில் சீ எம் ஆர் வானொலி

இந்தியா மீண்டும் ஒரு தவறு செய்யாது.

நேருவின் பஞ்சசீல கொள்கையை இப்பொழுதாவது பின்பற்றும் என் நம்புகிறேன்

Edited by கர்ணன்

ஈழத்தமிழர்களும் சரி சிங்களவர்களும் சரி இரண்டு பேரின் முகமும் என்னவென்று இந்தியாவிற்க்கு தெறிந்துவிட்டது, இனி அண்ணிய நாட்டின் பிரச்சனையில் தளையிடுவது இல்லை என்று தீர்மானத்துடன் இருக்கிறது இந்திய அரசு. ராணுவத்தை எங்கள் நாட்டில் நிறுத்தினால் உடனே ஈழப்போராட்டத்திற்க்கு எதிராக இந்தியா என்று போட்டுவிடுவதா?. ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாகவும் எதிராகவும் எந்த நடவடிக்கைகளியும் இந்தியா ஈடுபட சாத்தியம் இல்லை.

ஈழப்போராட்டத்துக்கெதிராக ஆதரவாக எந்தசடவடிக்கையிலும் இந்தியா ஈடுபடாவிட்டால் சந்தோசம்

கப்பல்கள் படைகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது உண்மைதானா?

இன்று இந்தியாவை ஒரு பிராந்திய வல்லரசு என்று அழைக்கிறார்கள். பாக்கிஸ்தான், சீனா ஆகிய நாடுகளுடன் ஒப்பிடும்போது எந்தளவுக்கு இந்தப் பெயர் இந்தியாவுக்கு பொருந்தும் என்ற கேள்வி ஒருபுறமிருக்க இந்தியா எதிர்காலத்தில் நல்ல பிள்ளையாக மட்டுமின்றி நிதானமாகவும் நடந்து கொள்ள வேண்டியது இந்தியாவின் தேசிய ஒருமைப்பாட்டுக்கு மிக மிக அவசியம். மக்குப் பிடித்த பழங்கால அரசியல் இராணுவ உத்திகளையும் பழமைவாதத்தையும் விடுத்து இந்தியா ஒரு புதிய பாதையை வகுக்கவேண்டும். தவறினால் இந்தியா தான் வைக்கும் பொறியில் தானே சிக்கிக் கொள்ளும் அபாயத்திலிருந்து தப்பவே முடியாது. ஈழத்தமிழர் பிரச்சினையில் இந்தியாவின் உண்மையான கவலை என்ன என்பதில் மத்திய, மாநில மற்றும் தேசிய பாதுகாப்புத் தலைமைக்குள்ளும் தெளிவான ஒருமித்த தொலைநோக்குப் பார்வை கிடையாது என்பது தான் இன்றைய யதார்த்தம்.

இந்தியா மருந்து கசக்கும் என்பதற்காக அதைக் குடிக்காமல் மருந்திலும் பார்க்க நோயே பரவாயில்லை என்று காலத்தை ஓட்டிக்கொண்டிருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

ஜயா நீங்கள் யார்? உங்கள் நோக்கம் என்ன? சி.எம்.ஆர் வானொலியா? அல்லது சி.ரி.பி.சி வானொலியா நல்லாக ஜோசித்துச் சொல்லுங்கள்.

அதாவது சி.எம்.ஆர், சி.ரி.ஆர் போன்றவை அவசரப்பட்டு செய்திகளை வெளியிடும் ஊடகங்கள் இல்லை ஆகவேதான் எனக்குச் சந்தேகமாகவுள்ளது.

ஜயா நீங்கள் யார்? உங்கள் நோக்கம் என்ன?

வல்லை அவர்களே

கருத்துக்களத்தில் (ஏன் ஆட்களை மிரட்டுகிறீர்கள்) சுதந்திரமாக கருத்துக்களை எழுத விடுங்கள்.

ராமேஸ்வரம் கடலில் போர்க் கப்பல்கள் ரோந்து

மே 25, 2007

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கடல் பகுதியில் இந்திய கடல் படையின் 6 போர்க் கப்பல்கள் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை படையினருக்கும் இடையிலான மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும் புலிகளுக்கு விமான பலமும் கூடியுள்ளது. இதையடுத்து இந்திய கடல் பகுதியில் பாதுகாப்பும், கண்காணிப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

தமிழக கடலோரப் பகுதிகளில் பல்வேறு வகையான கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் 5 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதற்கும், 12 மீனவர்கள் கடத்தப்பட்டதற்கும் விடுதலைப் புலிகள்தான் காரணம் என்று கூறப்பட்டதால் கடல் பகுதி கண்காணிப்பு பன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.

மொத்தம் 6 அதி நவீன போர்க் கப்பல்கள் ராமேஸ்வரம் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. ஏவுகணைகளைத் தாக்கி அழிக்கும் ஏவுகணைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இதுதவிர ஆள் இல்லாத உளவு விமானங்களும் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றன.

24 மணி நேரமும் இந்த ரோந்துப் பணி மேற்கொள்ளப்படுகிறது. 6 போர்க் கப்பல்களிலும் 500 கடற்படை வீரர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

ரோந்துப் பணி குறித்து டெல்லியில் உள்ள கடற்படை தலைமையகத்திற்கும், விசாகப்பட்டனத்தில் உள்ள பிராந்திய அலுவலகத்திற்கும் அதிகாரிகள் அவ்வப்போது அறிக்கை அனுப்பி வருகின்றனர்.

தற்ஸ்தமிழ்

Edited by aathipan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் ஆதிபன் அண்ணா!

வல்வை மைந்தன் அவர்களின் கேள்வி புரியாமல் பதில் அளித்துள்ளீர்கள்;

அதாவது சி.எம்.ஆர் வானொலியில் இது சம்பந்தமாக செய்தி ஒலிபரப்பப் படவில்லை இது தான் விடயம்.

இந்தியக் கடலோரப் பகுதியில் ரோந்து நடவடிக்கை புதியதல்ல. ஆனால் உங்களால் குறிப்பிடப்படும் இணையத்தளத்தில் புதிய செய்திகள் கிடைக்காத படியினால் ஏதோ இன்றைய செய்திமாதிரி பிரசுரிக்கப் பட்டுள்ளது.

நீங்கள் நினைக்கின்ற மாதிரி யாரும் யாரையும் பயப்பிடுத்த வேண்டிய அவசியமில்லை. வல்வை நீங்கள் குறிப்பிடும் நபருமில்லை.

உங்கள் சுதந்திரத்தில் யாரும் தலையிடவில்லை ஆனால் கருத்துக்கள் என்றால் எல்லாம் எழுதமுடியாது அதற்கும் விதிமுறைகள் உண்டு.

உதாரணமாக கனடாவில் சி.ரி.பி.சி வானொலியும் தானும் உண்மையைத் தான் சொல்லுகின்றேன் என்று சொல்லிக்கொண்டு தமிழ்த் தேசியத்திற்கு எதிராக விசத்தைக் கக்கிக் கொண்டிருக்கிறதாக அறிந்தேன்.

Edited by eelanila

ஈழப்போரட்டத்துக்கு எதிராக மீண்டும் இந்தியா?

ராமேஸ்வரம் பகுதியில் 6 கப்பல்களுன் 500 படையினரும் படைகலன்களும் ஏவுகணைகளுடனும் நிற்பதாக வானொலிச்செய்தி

இது உண்மையா?

ராமேஸ்வரம் கடலில் போர்க் கப்பல்கள் ரோந்து

மே 25, 2007

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கடல் பகுதியில் இந்திய கடல் படையின் 6 போர்க் கப்பல்கள் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை படையினருக்கும் இடையிலான மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும் புலிகளுக்கு விமான பலமும் கூடியுள்ளது. இதையடுத்து இந்திய கடல் பகுதியில் பாதுகாப்பும், கண்காணிப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

தமிழக கடலோரப் பகுதிகளில் பல்வேறு வகையான கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் 5 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதற்கும், 12 மீனவர்கள் கடத்தப்பட்டதற்கும் விடுதலைப் புலிகள்தான் காரணம் என்று கூறப்பட்டதால் கடல் பகுதி கண்காணிப்பு பன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.

மொத்தம் 6 அதி நவீன போர்க் கப்பல்கள் ராமேஸ்வரம் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. ஏவுகணைகளைத் தாக்கி அழிக்கும் ஏவுகணைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இதுதவிர ஆள் இல்லாத உளவு விமானங்களும் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றன.

24 மணி நேரமும் இந்த ரோந்துப் பணி மேற்கொள்ளப்படுகிறது. 6 போர்க் கப்பல்களிலும் 500 கடற்படை வீரர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

ரோந்துப் பணி குறித்து டெல்லியில் உள்ள கடற்படை தலைமையகத்திற்கும், விசாகப்பட்டனத்தில் உள்ள பிராந்திய அலுவலகத்திற்கும் அதிகாரிகள் அவ்வப்போது அறிக்கை அனுப்பி வருகின்றனர்.

thatstamiloneindia

தினமலரும் இச்செய்தியை பிரசுரித்துள்ளது

  • தொடங்கியவர்

சீ எம் ஆர் இல் கேட்டசெய்தியைதான் இங்கேபதித்து இதுஉண்மையா? என கேட்டிருந்தேன் யாழ் களத்தில் பலபக்கங்களிலிருந்தும் பலர்இணைவார்கள் அதன்மூலம்இச்செய்தியின்உண்ம

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா இறங்குமா என்பது சந்தேகமாக இருந்தாலும் கடல் நடமாட்டங்களைச் சிங்கள அரசிற்கு வழங்கக் கூடும். நெடுந்தீவில் கடல்மார்க்கமான தாக்குதல், போல வேறு எங்கு நடந்தாலும் என அஞ்சி, கடல்புலிகளின் பயணங்கள் பற்றிய செய்திகளை சிங்கள அரசுக்கு வழங்கு உசார் படுத்தக் கூடும். இந்தியா ஈழத்தில் தரை இறங்கச் சிந்தத்திதால் வெறுமனே அது மட்டும் இறங்காது. அதற்கு எதிரானவர்கள் மறைமுகமாக மற்றய பக்கத்திற்கு ஆதரவளிக்கக் கூடும்.

அப்படி நடந்தால் அதிகம் பாதிக்கப்படுவது நம் மக்களாகத் தானிருக்கும்.

அப்படி இந்தியா ஈழத்தில் இறங்குமானால் அது ஒரு பிராந்திய போரின் தொடக்கமாக அமையும் என நினைகின்றேன்.பாக்கிஸ்தான் சீனாவின் ஊடுறுவல் இலங்கை அரசபடைகளீல் தாராளமாக இருகின்றது.இன்னொரு தவறான முடிவை இந்தியா எடுக்காது என்பது நிதர்சனம்.

ஈழப்போராட்டத்துக்கெதிராக ஆதரவாக எந்தசடவடிக்கையிலும் இந்தியா ஈடுபடாவிட்டால் சந்தோசம்

கப்பல்கள் படைகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது உண்மைதானா?

பத்திரிக்கைகளில் படிக்கும் அது உண்மைதான், இந்திய மீனவர்கள் கொள்ளப்பட்டது, மீனவர்கள் 12 பேர் கடத்தப்பட்டது போன்ற சம்பவங்களின் பிறகு, இந்திய கப்பல் படை தண்ணுடைய நடவடிக்கைகளை அதிர்கரித்து இருக்கிறது.

அதற்க்கு வான் புலிகளும் ஒரு காரணம், விடுத்தலைப்புலிகளை இந்திய அரசுகள் நம்பத்தாயாராக இல்லை என்பதே உண்மை.

ஹீ ஹீ இந்திய அரசு நம்பாட்டி எங்களுக்கு என்ன?

  • கருத்துக்கள உறவுகள்

பத்திரிக்கைகளில் படிக்கும் அது உண்மைதான், இந்திய மீனவர்கள் கொள்ளப்பட்டது, மீனவர்கள் 12 பேர் கடத்தப்பட்டது போன்ற சம்பவங்களின் பிறகு, இந்திய கப்பல் படை தண்ணுடைய நடவடிக்கைகளை அதிர்கரித்து இருக்கிறது.

அதற்க்கு வான் புலிகளும் ஒரு காரணம், விடுத்தலைப்புலிகளை இந்திய அரசுகள் நம்பத்தாயாராக இல்லை என்பதே உண்மை.

நல்லது.

பாகிஸ்தான் விமானிகளை வைத்து இந்தியாவிற்கு அருகில் உள்ள வன்னிக்குக் குண்டு போட்டபோது இந்தியா பாகிஸ்தானை நம்பியது. ஆனால் வான்புலிகளை நம்பவில்லை...ம்... தேவைகளையும் காட்சிகளையும் தங்களுக்கு ஏற்றவித்தில் மாற்ற முயல்கின்றார்கள்

அவை நம்பினா தான் என்ன நம்பாட்டி தான் என்ன?

நல்லது.

பாகிஸ்தான் விமானிகளை வைத்து இந்தியாவிற்கு அருகில் உள்ள வன்னிக்குக் குண்டு போட்டபோது இந்தியா பாகிஸ்தானை நம்பியது. ஆனால் வான்புலிகளை நம்பவில்லை...ம்... தேவைகளையும் காட்சிகளையும் தங்களுக்கு ஏற்றவித்தில் மாற்ற முயல்கின்றார்கள்

அதெல்லாம் நடிப்பு தூயவன்!

இலங்கை அரசிடம் ஒரு நாள் வசமா வாங்கும் போது தெரியும்

  • கருத்துக்கள உறவுகள்

யாரப்பா இந்த rmsachitha மனிதன்?

  • தொடங்கியவர்

பத்திரிக்கைகளில் படிக்கும் அது உண்மைதான், இந்திய மீனவர்கள் கொள்ளப்பட்டது, மீனவர்கள் 12 பேர் கடத்தப்பட்டது போன்ற சம்பவங்களின் பிறகு, இந்திய கப்பல் படை தண்ணுடைய நடவடிக்கைகளை அதிர்கரித்து இருக்கிறது.

அதற்க்கு வான் புலிகளும் ஒரு காரணம், விடுத்தலைப்புலிகளை இந்திய அரசுகள் நம்பத்தாயாராக இல்லை என்பதே உண்மை.

விடுதலை புலிகளுக்கு நேர்மையாக இந்தியா நடந்துகொண்டால் விடுதலைபலிகள் உயிரையும் கொடுப்பார்கள்

கழுத்தறுக்கநினைத்தால்...........

விடுதலை புலிகளுக்கு நேர்மையாக இந்தியா நடந்துகொண்டால் விடுதலைபலிகள் உயிரையும் கொடுப்பார்கள்

கழுத்தறுக்கநினைத்தால்...........

அப்புறம் சொல்லுங்க தெளுங்கு பட வில்லன் மாதிறியல்ல பேசுரீங்க

  • தொடங்கியவர்

அப்புறம் சொல்லுங்க தெளுங்கு பட வில்லன் மாதிறியல்ல பேசுரீங்க

நீங்கள் தெலுங்கா? அதுதான் இப்படி தமிழருக்கு எதிரா நிற்கிறீங்களா?

அப்புறம் சொல்லுங்க தெளுங்கு பட வில்லன் மாதிறியல்ல பேசுரீங்க

நிறைய தெலுங்கு படங்கள் பார்ப்பீர்கள் போல் இருக்கிறது. அறிவை வளர்க்க சிறந்த வழி.

நீங்கள் உள்ளூரை சேர்ந்தவர் இல்லை! நெல்லூரை சேர்ந்தவர் போல் இருக்கிறது. அது தான் தமிழில் இத்தனை எழுத்துப்பிழைகள் விடுகிறீர்கள்!!!

Edited by vettri-vel

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.