Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாடசாலைகளில் தனிமைப்படுத்தல் நிலையங்கள் - முல்லைத்தீவிலும் மக்கள் ஆர்ப்பாட்டம்

Featured Replies

 

பாடசாலைகளை தனிமைப்படுத்தல் நிலையங்களாக மாற்றப்படுவதற்கு எதிராக முல்லைத்தீவில் எதிர்ப்பு நடவடிக்கைகள்.மேற்கொள்ளப்படுகிறது

அந்தவகையில் முத்தையன்கட்டு இடதுகரைப் பாடசாலையின் பெற்றோர் இன்று மாலை எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்

கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுபவர்களை தனிமைப்படுத்தி கண்காணிப்பதற்கான நிலையங்களாக முல்லைத்தீவு மாவட்டத்தின் சில பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டு சில பாடசாலைகளின் தளபாடங்கள் மற்றும் ஆவணங்களும் சீரமைக்கப்பட்டும் அகற்றப்பட்டும் உள்ளன.

தனிமைப்படுத்தல் நிலையங்களாக அடையாளப்படுத்தப்பட்ட பாடசாலைகளாக முத்தையன்கட்டு இடதுவரை அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை , முத்தையன்கட்டு வலதுகரை மகாவித்தியாலயம், அளம்பில் றோமன் கத்தோலிக்க மகாவித்தியாலயம், விசுவமடு பாரதி வித்தியாலயம், இரணைப்பாலை ரோமன் கத்தோலிக்க வித்தியாலயம்,கூழாமுறிப்பு பாடசாலை,தண்டுவான் அ.த.க பாடசாலை உள்ளிட்டவை காணப்படுகின்றன.

இதனடிப்படையில் இன்று முத்தையன்கட்டு இடதுகரைப் பாடசாலையில் தளபாடங்கள் ஒதுக்கப்பட்டு மாணவர்களின் ஆவணங்கள் அடங்கிய அலுமாரி இராணுவத்தால் எடுத்துச்செல்லப்பட்டு அயலில் உள்ள தனியார் ஒருவரின் வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பாடசாலைக்கு முன்பாகக் கூடிய 60 இற்கும் மேற்பட்ட பெற்றோர் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இதேவேளை இப்பாடசாலைக்கு அண்மையில் உள்ள பாடசாலையான வலதுகரை மகாவித்தியாலயத்தில் கூடிய 30 இற்கும் மேற்பட்ட பெற்றோரும் தமது எதிர்ப்பினை வெளியிட்டனர்.நெருக்கமான குடியிருப்புக்களைக் கொண்ட விவசாய பிரதேசமாக முத்தையன்கட்டு காணப்படுவதாலும், தனிமைப்படுத்தல் நிலையம் குறித்த பகுதியில் அமைக்கப்பட்டால் இவ் நடவடிக்கை ஆபத்தினை விளைவிக்கும் என எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

 

625.0.560.350.390.830.053.800.670.160.91.png

625.0.560.350.390.830.053.800.670.160.91.png

625.0.560.350.390.830.053.800.670.160.91.png

https://www.ibctamil.com/srilanka/80/142039


பாடசாலைகள், கல்வி நிறுவனங்களில் தனிமைப்படுத்தல் மையங்கள்- இலங்கை ஆசிரியர் சங்கம் கடும் கண்டனம்!

In ஆசிரியர் தெரிவு     April 28, 2020 8:27 am GMT     0 Comments     1425     by : Litharsan

அரசாங்கம் தற்போது பாடசாலைகளிலும் ஏனைய கல்வி நிறுவனங்களிலும் இராணுவத்தினரை தங்கவைப்பதற்கான செயற்பாட்டை முன்னெடுத்து வருவதாக மக்கள் மத்தியில் அச்சநிலை ஏற்பட்டுள்ளது என இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

தென்னிலங்கையில் பாடசாலைகள் சிலவற்றை இராணுவத்தினர் சில தேவைகளுக்கு இதற்கு முன்னர் பயன்படுத்தியிருந்தாலும்கூட தற்போது கொரோனா நோய் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள நிலையில் இராணுவத்தினர் தங்கவைக்கப்படுவதை எதிர்த்து கோப்பாய் தேசிய கல்வியியற் கல்லூரி, கோப்பாய் ஆசிரியர் கலாசாலை போன்ற கல்வி நிறுவனங்களைச் சூழவுள்ள மக்களால் ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்றுள்ளன.

எனவே இந்த அச்சமான சூழ்நிலையில் தனிமைப்படுத்துதல் மற்றும் தொற்றைக் கட்டுப்படுத்தல் என்னும் போர்வையில் பாடசாலைகளைப் பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவே மக்கள் மத்தியில் அச்ச நிலை உருவாகியுள்ளது என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்ராலின் தெரிவித்துள்ளார்.

மேலும், “இந்தச் சூழலில் பாடசாலைகளையும் கல்வி நிறுவனங்களையும் இராணுவத்தினருக்கு வழங்குவதை அரசாங்கம் நிறுத்தவேண்டும். நாடுபூராகவும் 43 இலட்சம் மாணவர்கள் கல்வி கற்றுவரும் நிலையில் பாடசாலைகளைச் சூழவுள்ள சமூகத்தினருக்கு அச்சமூட்டும் வகையில் செயற்பாடுகள் நடைபெறுவதை இலங்கை ஆசிரியர் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.

மக்கள் செறிவு நிறைந்த இடங்களில் அமைந்த பாடசாலைகள் மற்றும் நிறுவனங்களில் இத்தகைய தனிமைப்படுத்தல் நிலையங்களை அமைக்க முயற்சிப்பதாகவே தகவல்கள் கிடைத்துள்ளன. குறிப்பாக வடக்கு மாகாணக் கல்வியமைச்சிடம் வடமராட்சி, சாவகச்சேரி, யாழ்ப்பாணம் போன்ற பகுதிகளில் பாடசாலைகள் சிலவற்றை வழங்குமாறு இராணுவத்தினர் கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

இவ்வாறு, கொரோனா நோய்த்தொற்று தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு பாடசாலைகளையும், கல்வி நிறுவனங்களையும் வழங்குவதை இலங்கை ஆசிரியர் சங்கம் எதிர்க்கிறது.

இதனிடையே, ‘தனிமைப்படுத்தல் நிலையங்களாக பாடசாலைகள் மாற்றப்படாது’ எனக் கல்வியமைச்சு அறிவித்துள்ள நிலையில் இதன் உண்மைத் தன்மைகளை கல்வியமைச்சு முறையான அறிக்கையூடாக வெளிப்படுத்த வேண்டும். அச்சுறுத்தல் நிறைந்த இந்தச் சூழலில் பாடசாலைகளை இராணுவத்தினருக்கு வழங்கும் செயற்பாட்டை கல்வியமைச்சு உடன் நிறுத்த வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

http://athavannews.com/பாடசாலைகள்-கல்வி-நிறுவன/

வடக்காகினும் தெற்காகினும் மக்கள் வாழ்விடங்களில் இவ்வாறான செயற்பாடுகளை மேற்கொள்ளாதீர்கள்!

மக்கள் குடியிருப்பு பகுதிகளிலுள்ள பாடசாலைகளில் கொரோனா தனிமைப்படுத்தல் முகாம்கள் அமைப்பதனை நிறுத்துமாறு இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா கேட்டுக்கொண்டுள்ளார்.

கொரோனா தொற்று நாட்டில் அதிகரித்து வரும் நிலையில் தனிமைப்படுத்தல் முகாம்களை அமைப்பதற்கு வடக்கிலுள்ள பாடசாலைகள் சிலவற்றை இராணுவத்தினர் கோரிய நிலையிலேயே மாவை சேனாதிராஜா இதனை தெரிவித்துள்ளார்.

அத்துடன் யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரிக்கு அருகில் மக்கள் அதிகமாக வாழ்வதனால் அங்கு இராணுவ வீரர்களை தங்க வைக்கும் செயற்பாடு பரிசீலிக்கப்பட வேண்டியது எனவும் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

மேலும் வடக்காக இருந்தாலும் சரி தெற்காக இருந்தாலும் சரி மக்கள் அதிகம் செறிந்து வாழும் பகுதிகளை இவ்வாறான தனிமைப்படுத்தல் முகாம்கள் அமைப்பதற்கு தெரிவு செய்ய வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் யாழில் அரச அதிபர் மற்றும் உரிய அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

https://www.ibctamil.com/srilanka/80/142078

  • கருத்துக்கள உறவுகள்

அவ்வளவு சனம் கூடின காத்தான்குடி ஆஸ்பத்தியில்  நோயாளிகளை கொண்டு வந்து வைத்திருந்தும் சுத்தியுள்ள சனம் சூழ்நிலை கருதி அமைதியாய் இருக்கு ...இவர்கள் ஆர்ப்பாட்டம் செய்து நோயாளிகளை கொண்டு வந்து ஆஸ்பத்தியில் போடப் போறான்  

 

யாழின் மற்றுமோர் இராணுவ முகாமிற்கு வெளிநபர்கள் அழைத்து வரப்பட்டு தனிமைப்படுத்தல்! ஒன்று கூடி கடும் எதிர்ப்பு வெளியிடும் மக்கள்

யாழ்ப்பாணம் அராலிதுறையில் உள்ள இராணுவ முகாமில் தனிமைப்படுத்தல் நிலையம் அமைப்பதாகத் தெரிவித்து அப்பகுதியிலுள்ள மக்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

யாழ் அராலி துறையில் அமைந்துள்ள இராணுவ முகாமில் நேற்றையதினம் தொடக்கம் முகாமிலிருக்கும் இராணுவத்தினர் தவிர்ந்த வெளியாட்கள் தொடர்ச்சியாக அங்கு அழைத்துவரப்பட்டு தனிமை படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தே அயல் கிராம மக்கள் இன்று காலை எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இதன்போது இராணுவ முகாமில் கொரோனா நோய் சந்தேக நபர்களை தனிமைப்படுத்தினால் அது தமக்கு ஆபத்தானதாக அமையும் எனவும் பல்வேறு பாதிப்புக்களை ஏற்படுத்தும் என்றும் கவலை வெளியிட்டுள்ளனர்.

மேலும் அருகில் உள்ள தாம் மீன்பிடித் தொழிலை மேற்கொள்ளும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்கள் என்றும் மீன்பிடித் தொழில் மேற்கொள்வது சிக்கலானதாக மாறும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

இதனால் தமக்கும் இராணுவத்துக்கும் பாதிப்பில்லாத பொருத்தமான இடத்தில் இத்தகைய தனிமைப்படுத்தல் நிலையங்களை அமைக்குமாறும் மக்கள் செறிவாக வாழ்கின்ற இந்தப் பகுதியில் இரணுவத்தின் முகாமில் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூடாது என்றும் அந்த மக்கள் தெரிவித்தனர் .

 

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

https://www.ibctamil.com/srilanka/80/142142

முல்லைத்தீவு வற்றாப்பளை மகா வித்தியாலயம் கொரோனா தனிமைப்படுத்தல் நிலையம் – பிரதேச மக்கள் எதிர்ப்பு

In இலங்கை     April 29, 2020 3:59 am GMT     0 Comments     1140     by : Jeyachandran Vithushan

முல்லைத்தீவு வற்றாப்பளை மகா வித்தியாலயத்தை கொரோனா தனிமைப்படுத்தல் நிலையமாக மாற்றுவதற்கு எதிராக பிரதேச மக்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இராணுவத்தினர் வருகை தந்து முன்னாயத்த நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்த போது பிரதேச மக்கள் அங்கு கூடி தமது எதிர்ப்பினை தெரிவித்தனர்.

இந்த எதிர்ப்பு நடவடிக்கை காரணமாக அங்கு இராணுவ உயர் அதிகாரிகளும் பொலிஸாரும் இங்கு வருகைதந்து மக்களுடன் வாதப்பிரதிவாதங்களில் ஈடுபட்டனர்.

பொதுமக்கள் தொடர்ந்தும் தமது எதிர்ப்பினை வேளியிட்டனர் அதன் பின் 14 நாட்களுக்கு மாத்திரம் அனுமதிக்குமாறு இராணுவத்தினர் கோரினர்.

பொதுமக்களின் முழுமையான சம்மதம் தெரிவிப்பதற்கு முன்னரே துப்பரவு நடவடிக்கையில் ஈடுபடும் இராணுவ வீரர்கள் உள் நுழைதனர் வற்புறுத்தலின் மத்தியில் மக்கள் அங்கிருந்து விலகிச் சென்றனர் என எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.

http://athavannews.com/முல்லைத்தீவு-வற்றாப்பளை/

தனிமைப்படுத்தல் முகாம்களாக கிழக்கில் 11 பாடசாலைகள்

கிழக்கு மாகாணத்தில் 11 பாடசாலைகள், கொரோனா தனிமைப்படுத்தல் முகாம்களாகின்றன. கல்முனைப் பிராந்தியத்தில் 04 பாடசாலைகளும் திருமலைப் பிராந்தியத்தில் 04 பாடசாலைகளும் அம்பாறைப் பிராந்தியத்தில் 03 பாடசாலைகளும் இராணுவத்தால் பொறுப்பேற்கப்பட்டுள்ளன.

இத்தகவலை, கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூர் ஊர்ஜிதம் செய்தார்.

கல்முனைப் பிராந்தியத்தில், கல்முனை உவெஸ்லி உயர்தரப் பாடசாலை, நாவிதன்வெளி வேப்பையடி கலைமகள் வித்தியாலயம், அக்கரைப்பற்று சென் ஜோன்ஸ் வித்தியாலயம், பாணமை தமிழ் மகா வித்தியாலயம் ஆகிய 04 பாடசாலைகள் தனிமைப்படுத்தல் முகாம்களாகின்றன.

திருகோணமலைப் பிராந்தியத்தில், மூதூர் இலங்கைத்துறை முகத்துவாரம் பாடசாலை, ரொட்டவேவ முஸ்லிம் வித்தியாலயம், மொறவேவ சிங்கள மகா வித்தியாலயம், புல்மோட்டை கனிஜாவலி சிங்கள மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகள் முகாம்களாக்க தெரிவுசெய்யப்பட்டுள்ளன.

அம்பாறைப் பிராந்தியத்தில், பொத்துவில் பாணமை மகா வித்தியாலயம், உகன ஹிமிதுறவ வித்தியாலயம், உகன கலகிட்டியாகொட மகா வித்தியாலயம் ஆகிய 03 பாடசாலைகளே தனிமைப்படுத்தல் முகாம்களாகின்றன.

மேற்படி 11 பாடசாலைகளையும் இராணுவத்தினர் பொறுப்பேற்று, தனிமைப்படுத்தல் முகாம்களாக மாற்றுவதற்கான ஏற்பாடுகளை முன்னெடுத்துக்கொண்டிருப்பதாகத் தெரியவருகிறது.

கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுபவர்களை தனிமைப்படுத்திக் கண்காணிப்பதற்காக இப்பாடசாலைகள் பயன்படுத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுன்றது.

இதேவேளை, நாட்டின் சில பகுதிகளில் இவ்வாறான செயற்பாடுகளுக்கு எதிர்ப்பும் கிளம்பி வருகிறது. வடக்கில் கோப்பாய் தேசிய ஆசிரியர் கல்லூரி, முல்லைத்தீவு முத்தையன் கட்டுப்பகுதியிலும் நேற்று எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டும் அவற்றை இராணுவம் கையேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.tamilmirror.lk/அம்பாறை/தனமபபடததல-மகமகளக-கழககல-11-படசலகள/74-249448

பல நூறு ஏக்கர்களை ராணுவ முகாம்களாக ஆக்கிரமித்திருக்கும் சொறிலங்கா கொலைகார அரசு அவற்றில் தனிமைபடுத்தும் இடங்களை அமைக்காமல் வடக்கு-கிழக்கு பிரதேச தமிழ் பாடசாலைகளை குறிவைப்பது திட்டமிட்ட அரச பயங்கரவாத்தை தவிர வேறொன்றுமில்லை.

கண்துடைப்புக்கு 1, 2 பிற பாடசாலைகளையும் எடுப்பதாக வெறும் அறிவிப்பாக வெளிவரலாம்.

அதுவும் மக்கள் செறிந்துவாழும் பகுதிகளை போர்குற்றவாளிகளின் கொலைகார அரசு தெரிவு செய்துள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, Rajesh said:

பல நூறு ஏக்கர்களை ராணுவ முகாம்களாக ஆக்கிரமித்திருக்கும் சொறிலங்கா கொலைகார அரசு அவற்றில் தனிமைபடுத்தும் இடங்களை அமைக்காமல் வடக்கு-கிழக்கு பிரதேச தமிழ் பாடசாலைகளை குறிவைப்பது திட்டமிட்ட அரச பயங்கரவாத்தை தவிர வேறொன்றுமில்லை.

கண்துடைப்புக்கு 1, 2 பிற பாடசாலைகளையும் எடுப்பதாக வெறும் அறிவிப்பாக வெளிவரலாம்.

அதுவும் மக்கள் செறிந்துவாழும் பகுதிகளை போர்குற்றவாளிகளின் கொலைகார அரசு தெரிவு செய்துள்ளது.

இவர்கள் வேணுமென்றே செய்கின்றார்கள், சிங்கள இடத்தில் செய்ய முடியுமா? 

இப்ப இருக்கின்ற தமிழ் அரசியல் தலைமைகள் அறிக்கை மட்டும்தான் 😡

  • கருத்துக்கள உறவுகள்

பொதுக் கட்டிடங்களில் கொறோனா நோயாளர்கள் தங்க வைக்கப்பட மாட்டார்கள்;அமைச்சர் டக்ளஸிடம் ஜனாதிபதி உறுதி

duglas.jpg

நாடாளாவிய ரீதியில் படைத்தரப்பினர் மத்தியில் சமூக இடைவெளியை பேணுவதற்காகவே பொருத்தமான பாடசாலைகள் உட்பட பொது கட்டடிடங்கள் அடையாளப்படுத்தப்பட்டு வருவதாகவும் அவ்வாறு அடையாளப்படுத்தப்படுகின்ற பாடசாலைகள் போன்ற பொதுக் கட்டிடங்களில் கொறேனா ரைவஸினால் பாதிக்கப்பட்ட நோயாளர்கள் தங்க வைக்கப்பட மர்ட்டார்கள் எனவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜயபக்ஷ அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு உறுதியளித்துள்ளார்.

நாடாளாவிய ரீதியில் படைத் தரப்பினரினால் பொது கட்டிடங்கள் அடையாளப்படுத்தப்பட்டு வருகின்றமையினால் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அச்சம் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் இன்று அமைச்சரவையின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்ட நிலையிலேயே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் மேற்குறிப்பிட்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நாடளாவிய ரீதியில் திட்டமிட்ட முறையில் அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற ஊடங்கு சட்டம் காரணமாக கொறோனா வைரஸின் தாக்கம் கட்டுப்படுத்தப்பட்டுள்ள போதிலும் துரதிஸ்டவசமாக எதிர்காலத்தில் சமூகப் பரவலாக மாற்றமடையுமாயின் ஒவ்வொரு பிரதேசத்திலும் வைத்தியசாலைகளில் ஏற்படக் கூடிய இடப்பற்றாக் குறையை சமாளிப்பதற்கான முன்ஏற்பாடாகவும் குறித்த கட்டடிங்கள் அடையாளப்படுத்தப்பட்டு தயார்ப்படுத்தப்படுவதாகவும் ஜனாதிபதியினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பொதுக் கட்டிடங்கள் பர்துகாப்பு தரப்பினரினால் அடையாளப்படுத்தப்பட்டு வருகின்றமை தொடர்பில் மக்கள் அச்சமடையத் தேவையில்லை எனத் தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தமிழர் பிரதேசங்களில் கொறோனா வைரஸை பரப்பும் நோக்கில் திட்டமிட்ட முறையில் அரசாங்கத்தினால் தனிமைப்படுததல் மையங்கள் அமைக்கப்பட்டு வருவதாக, குறுகிய நலன் கொண்ட தமிழ் அரசியல் தரப்புகளினால் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் சில பிரதேசங்களில் மக்களை வீதிக்கு இறக்கி தேவையற்ற பதற்றத்தினையும் ஏற்படுத்தி வருகின்றமைக்கு தன்னுடைய கவலையையும் தெரிவித்துள்ளார்.

http://thinakkural.lk/article/39800

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.