Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியுமென ஜனாதிபதி தெரிவிப்பு ! பல திட்டங்களை முன்வைத்தார் !

Featured Replies

கொவிட் 19 நோய்த்தொற்று காரணமாக வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு முடியுமென ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இதற்காக புதிய பொருளாதார மாதிரியொன்றை தயாரிக்கும் பொறுப்பு பொருளாதார புத்தெழுச்சி, வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணிக்கு வழங்கப்பட்டுள்ளது.

செயலணி விடயத் துறைகளுக்கு ஏற்ப பகுதியாக பிரிந்து இலக்குமயப்பட்ட புதிய பொருளாதார திட்டங்களை தயாரித்து நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

மே 11 முதல் மீண்டும் வழமைநிலைக்கு கொண்டுவரப்படும் இயல்பு வாழ்க்கையுடன் பொருளாதாரத்தையும் கட்டியெழுப்பும் நோக்குடன் ஜனாதிபதி செயலணியுடன் இன்று (06) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற முதலாவது கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி அவர்கள் இதனை தெரிவித்தார்.

நாட்டின் பொருளாதாரத்திற்கு பெரும் பலமாக உள்ள ஆடை மற்றும் சுற்றுலா கைத்தொழிலை புதிய வடிவில் ஆரம்பிக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

கொவிட் 19 வைரஸை ஒழித்து எழுந்துள்ள நாடுகளை இலக்காகக் கொண்டு சுற்றுலா பயணிகளை அழைத்து வர முடியும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

கொவிட் 19 ஒழிப்புக்கு இலங்கை மேற்கொண்ட முறையான நடவடிக்கைகளை ஏனைய நாடுகளுக்கு எடுத்துக்கூறி சுதேச மற்றும் மேலைத்தேய சிகிச்சைக்காக சுற்றுலா பயணிகளை கவர்ந்தீர்க்க முடியும்.

சர்வதேச ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட சுகாதார சான்றிதழுடன் வீசாக்களை வழங்கி அதிகம் செலவிடக்கூடிய இயலுமையுள்ள சுற்றுலா பயணிகளை அழைத்துவர திட்டமிட வேண்டும்.

சில நாடுகளில் சுற்றுலா பயணிகள் குளிர் காலத்தில் நீண்ட காலத்திற்கு வேறு நாடுகளுக்கு செல்கின்றனர். அத்தகைய சுற்றுலா பயணிகளை இலக்காகக் கொண்டு நீண்ட கால சுற்றுலா பயணிகளை அழைத்து வந்து சுற்றுலா கைத்தொழிலை விரைவாக கட்டியெழுப்ப முடியும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

சுதேச சுற்றுலா வியாபாரத்தை ஊக்குவிப்பதற்கு அதிக கவனம் செலுத்தி ஹோட்டல் கைத்தொழிலை பாதுகாக்க கூடிய வாய்ப்புகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

துறைமுக நகரம் மற்றும் ஹம்பந்தோட்டை கைத்தொழில் வலயம் ஆகியவற்றை மையப்படுத்தி வெளிநாட்டு முதலீட்டாளர்களை கொண்டுவருவதற்குள்ள வாய்ப்புகள் குறித்தும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

வெளிநாட்டு கடனுக்கு பதிலாக முதலீட்டு வாய்ப்புகளுக்கு திட்டமிடும் பொறுப்பு அமைச்சுக்களின் செயலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
கடந்த சில வாரங்களாக பல புதிய ஆக்கங்கள் நாட்டில் உருவாகியுள்ளன. அவற்றை உலக சந்தைக்கு அறிமுகப்படுத்தி புதிய உற்பத்திகளை ஏற்றுமதி பொருளாதாரத்திற்கு பயன்படுத்திக்கொள்ளும் வாய்ப்புகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

ஜனாதிபதியின் நோக்கங்களை அடைந்துகொள்ளும் வகையில் புதிய தொலை நோக்கின் அடிப்படையில் செயற்படுவதற்கு ஜனாதிபதி செயலணிக்கு பலம் உள்ளதாக அதன் தலைவர் பசில் ராஜபக்ஷ குறிப்பிட்டார்.

புதிய வர்த்தகங்களை ஆரம்பிப்பதற்கும் தற்போது நடத்திச்செல்லப்படும் பாரிய, நடுத்தர, சிறிய அளவிலான வர்த்தகர்களுக்கு அரசாங்கத்தின் முழுமையான உதவியை பெற்றுக்கொடுக்க தனது செயலணி தலையிடும் என்றும் பசில் ராஜபக்ஷ மேலும் தெரிவித்தார்.

மே 11 முதல் தனியார் நிறுவனங்களின் அலுவலகங்களை மு.ப 10.00 மணிக்கு ஆரம்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்த போதும் கைத்தொழில் நடவடிக்கைகளை தமது தேவையின் படி நடத்திச் செல்ல முடியும்.

அரச அல்லது தனியார் துறை தொழிலில் ஈடுபட்டுள்ள எவருக்கும் தொழில் வாய்ப்புகள் தவறிப்போக இடமளிக்காது நாட்டை முன்கொண்டு செல்வதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் பசில் ராஜபக்ஷ சுட்டிக்காட்டினார்.

உயர் கல்விக்காக மாணவர்கள் பெருமளவில் உலகின் பல நாடுகளுக்கு சென்றுள்ளமை நாட்டுக்கு வருகைதருவதற்காக முன்வைக்கப்படும் கோரிக்கைகளின் மூலம் தெரியவந்துள்ளது. அதன் மூலம் நாட்டிலிருந்து வெளிச்செல்லும் அந்நியச் செலாவணி அதிகமாகும். உயர் கல்வி நிறுவனங்களுக்கான முதலீட்டு வாய்ப்புகளை விரிவாக்கி அப்பணத்தை நாட்டில் வைத்திருப்பதற்கான வாய்ப்புகள் மற்றும் வெளிநாட்டு மாணவர்களை நாட்டுக்கு அழைத்து வருவதன் மூலம் பெருமளவு அந்நியச் செலாவணியை சம்பாதிக்க முடியும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

ஓவ்வொரு வருடமும் மருந்துப்பொருள் இறக்குமதிக்காக பெருமளவு அந்நியச் செலாவணி செலவிடப்படுகிறது. இவற்றில் பெரும்பாலான மருந்துகளை நாட்டில் உற்பத்தி செய்ய முடியும். அதற்குத் தேவையான பின்புலத்தை விரைவில் தயாரிக்கும் பொறுப்பும் ஜனாதிபதி செயலணிக்கு வழங்கப்பட்டுள்ளது.

விவசாயத் துறைக்கு தேவையான பல விதை வகைகளை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.
ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ. ஜயசுந்தர, பிரதமரின் செயலாளர் காமினி செனரத் ஆகியோர் உட்பட அமைச்சுக்களின் செயலாளர்கள், முன்னணி வர்த்தக நிறுவனங்களின் உரிமையாளர்களும் இக்கலந்துரையாடலில் பங்குபற்றினர்.

https://www.virakesari.lk/article/81503

  • தொடங்கியவர்
2 minutes ago, ampanai said:

ஜனாதிபதியின் நோக்கங்களை அடைந்துகொள்ளும் வகையில் புதிய தொலை நோக்கின் அடிப்படையில் செயற்படுவதற்கு ஜனாதிபதி செயலணிக்கு பலம் உள்ளதாக அதன் தலைவர் பசில் ராஜபக்ஷ குறிப்பிட்டார்.

நான் கொலை நோக்கம் என வாய் தடுமாறி வாசித்தேன் 😇

  • தொடங்கியவர்
18 minutes ago, ampanai said:

கொவிட் 19 நோய்த்தொற்று காரணமாக வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு முடியுமென ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

காலம் கடந்து விட்டதா? காரணம், தலைக்கு மேலான கடன் (ஊழல்).  

அன்று தந்தை செல்வா கூறினார், " தமிழரை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்" என 

இன்று கோத்தா கூற வருவது, " இலங்கையை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்" என 

Sri Lanka is bringing up the rear saddled with heavy foreign and domestic debt.

The Economist said that the last thirty countries in the ranking owe a total of US $17 Trillion.

Eighteen, of that thirty including Sri Lanka have had their ratings cut by Fitch.

The countries in the bottom thirty including Sri Lanka are “in distress or flirting with it,” the magazine said.

The Economist predicts “the damage to exports will be acute. Thanks to low oil prices, Gulf oil exporters will suffer a current-account deficit of over 3% of GDP this year, the IMF reckons, compared with a 5.6% surplus last year. When exports fall short of imports, countries typically bridge the gap by borrowing from abroad. But the reversal of capital inflows has been matched by higher borrowing costs.”

https://economynext.com/economist-magazine-ranks-sri-lanka-among-countries-in-economic-distress-69481/

  • கருத்துக்கள உறவுகள்

கொரனோ  கொரனோ  என்று உதவி  பிச்சை எடுத்த பணத்தை என்னங்கடா  பண்ணிநீங்க  அண்ணனும் தம்பியுமா ?

எல்லாருக்கும் கனவுகள் உண்டு சிறுபான்மை இன  மக்களின் அடிப்படை பிரச்சனைகள் தீர்க்கப்படாமல் சொறிலங்காவில்  அபிவிருத்தி என்பது பூசலார்நாயனார் கதை  போல்கனவில்தான்  நடக்க கூடிய விடயம்  .

Edited by பெருமாள்

  • தொடங்கியவர்
28 minutes ago, ampanai said:

சில நாடுகளில் சுற்றுலா பயணிகள் குளிர் காலத்தில் நீண்ட காலத்திற்கு வேறு நாடுகளுக்கு செல்கின்றனர். அத்தகைய சுற்றுலா பயணிகளை இலக்காகக் கொண்டு நீண்ட கால சுற்றுலா பயணிகளை அழைத்து வந்து சுற்றுலா கைத்தொழிலை விரைவாக கட்டியெழுப்ப முடியும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

ஒன்று, பலரிடம் பணமில்லை.
இரண்டு, விமானங்கள் பறக்க நாளாகும் 
மூன்று, அவனவன் தனது நாட்டில் பணத்தை செலவழித்து பொருளாதாரத்தை கட்டி எழுப்ப விரும்புவான் 

31 minutes ago, ampanai said:

கொவிட் 19 ஒழிப்புக்கு இலங்கை மேற்கொண்ட முறையான நடவடிக்கைகளை ஏனைய நாடுகளுக்கு எடுத்துக்கூறி சுதேச மற்றும் மேலைத்தேய சிகிச்சைக்காக சுற்றுலா பயணிகளை கவர்ந்தீர்க்க முடியும்.

ஆகா, 2மூன்றாம் சிங்கள கேசி 😛

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, பெருமாள் said:

கொரனோ  கொரனோ  என்று உதவி  பிச்சை எடுத்த பணத்தை என்னங்கடா  பண்ணிநீங்க  அண்ணனும் தம்பியுமா ?

எல்லாருக்கும் கனவுகள் உண்டு சிறுபான்மை இன  மக்களின் அடிப்படை பிரச்சனைகள் தீர்க்கப்படாமல் சொறிலங்காவில்  அபிவிருத்தி என்பது பூசலார்நாயனார் கதை  போல்கனவில்தான்  நடக்க கூடிய விடயம்  .

அவர்கள் இதை வைத்துதானே அரசியல் நடத்த முடியும், இன்னும் பல ஆண்டுகளுக்கு. நாடு முன்னேறுவதைவிட தமிழைரை எப்படி அடக்கி வைத்திருக்கலாம் எனதான் அவர்கள் சிந்திப்பார்கள்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ampanai said:

கொவிட் 19 ஒழிப்புக்கு இலங்கை மேற்கொண்ட முறையான நடவடிக்கைகளை ஏனைய நாடுகளுக்கு எடுத்துக்கூறி சுதேச மற்றும் மேலைத்தேய சிகிச்சைக்காக சுற்றுலா பயணிகளை கவர்ந்தீர்க்க முடியும்.

முதல்ல கொரோனாவை முடிவுக்கு கொண்டு வாங்க சார்.

அடுத்த 2 வருடத்துக்கு சுற்றுலாதுறையை விட்டுட்டு வேற துறையைப் பாருங்க.

  • தொடங்கியவர்

நீண்ட காலமாக புரையோடிப்போயிருக்கும் இனபிரச்சனையை சிங்கள தலமைகள் தீர்த்து இருந்தால், இவ்வாறான பொருளாதர இக்கட்டான நிலைமைகள் ஏற்படும்பொழுது அவற்றில் இருந்து மீண்டு எழுவது இலகுவாக இருந்திருக்கும். 

மாறாக, தமிழர் பொருளாதரத்தை அழிப்பது, இல்லை அவர்களின் பொருளாதர மேம்பாட்டை சீர்குலைப்பதையே சிங்களம் குறியாக கொண்டுள்ளது. தமது ஊழல்களை மறைப்பதற்கும் சிங்கள மக்களின் வாழ்வியலில் கூட கொள்ளையடிப்பதற்கும் இனப்பிரச்சனையை என்றுமே கையில் வைத்துள்ளார்கள். 

10 hours ago, ஈழப்பிரியன் said:

முதல்ல கொரோனாவை முடிவுக்கு கொண்டு வாங்க சார்.

அடுத்த 2 வருடத்துக்கு சுற்றுலாதுறையை விட்டுட்டு வேற துறையைப் பாருங்க.

அதை வைச்சு நிறைய காலம் ஓட்டியாச்சு! உடன அதை விட்டு வெளிவர சொறிலங்காவுக்கு கஷ்டம் தான்.

ராஜபக்ச கோஷ்டியின் ஊழல் கமிஷன் உலகறிஞ்சது. எனவே வேற பெரிய முதலீடுகளுக்கு வாய்ப்புகள் குறைவு.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ampanai said:

நீண்ட காலமாக புரையோடிப்போயிருக்கும் இனபிரச்சனையை சிங்கள தலமைகள் தீர்த்து இருந்தால்,

இவர்கள் எப்படி அரசியல் செய்வது? மக்களை முட்டாளாக்குவது? சுரண்டுவது? 

11 hours ago, ampanai said:

நீண்ட காலமாக புரையோடிப்போயிருக்கும் இனபிரச்சனையை சிங்கள தலமைகள் தீர்த்து இருந்தால், இவ்வாறான பொருளாதர இக்கட்டான நிலைமைகள் ஏற்படும்பொழுது அவற்றில் இருந்து மீண்டு எழுவது இலகுவாக இருந்திருக்கும். 

மாறாக, தமிழர் பொருளாதரத்தை அழிப்பது, இல்லை அவர்களின் பொருளாதர மேம்பாட்டை சீர்குலைப்பதையே சிங்களம் குறியாக கொண்டுள்ளது. தமது ஊழல்களை மறைப்பதற்கும் சிங்கள மக்களின் வாழ்வியலில் கூட கொள்ளையடிப்பதற்கும் இனப்பிரச்சனையை என்றுமே கையில் வைத்துள்ளார்கள். 

உங்கள் நம்பிக்கை மிகப்பெரியது। நீங்கள்  இனப்பிரச்சினை இருக்குதென்று நினைக்கிறீர்கள்। அப்படி ஒன்றும் இல்லை என்றுதான் ராஜபக்சேக்கள் சொல்லுகிறார்கள்। என்னைப்பொறுத்தவரைக்கும் அடுத்த 20 வருடங்களுக்கு இந்த கதையை அவர்கள் எடுக்கப்போவதில்லை। அவர்களைப்பொறுத்தமட்டில் அபிவிருத்தி என்பதை வைத்தே நகரப்போகின்றது। எல்லாப்பகுதிகளையும் அபிவிருத்தி செய்வது।அப்படி நடக்குமா என்பது வேறு விடயம்। 

வெளிநாடுகள் தமிழர்களுக்கு உதவி செய்வார்கள் என்று நம்பினாலும் அதை தீர்மானிப்பதட்கு நிறைய அரசியல் காரணங்கள் இருக்கின்றன। இன்று உலக கடடமைப்பு விரைவாக மாறிக்கொண்டு போகின்றது। இவை எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டால் இனப்பிரச்சினை என்பது இப்போதைக்கு எடுபடுமா என்பது சந்தேகமே। அப்படி எதாவது நடந்தால் இலங்கை தமிழ் மக்களுக்கு நல்லதுதான்। 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.