Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆமைக்கறி, உடும்புக்கறி சாப்பிட்டேன்... உங்களுக்கு என்ன பிரச்சினை? - செந்தமிழன் சீமான்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

ஆறுமுகன் தொண்டைமான் மரணம் குறித்தும் எதிர்காலத்தில் புத்தகம் வரும்.

அம்மானும் அடக்கி வாசிக்கவேண்டும். இல்லையெண்டால், தங்கச்சிமார் கண்ணீர் அஞ்சலி செலுத்த வேண்டி இருக்கும்.

டக்ல்ஸ் மாமாவுக்கு தெரியும்.... எல்லைக்கோடு. அதிக அலம்பறை பண்ணுவதில்லை.  

அம்மான் இறுதிப் போருக்கு ஒரு வேண்டாத சாட்சி. சுருக்கு கயிறு இறுகினால், கதிர்காமரை சந்திக்கும் வாயப்பு அவருக்கு கிடைக்கும். மச்சாளை நினைச்சால் கண் கலங்குவதை தவிர்க்க முடியவில்லை. 👀🚶🏻‍♂️😁

  • Replies 777
  • Views 64.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, இசைக்கலைஞன் said:

அம்மான் இறுதிப் போருக்கு ஒரு வேண்டாத சாட்சி. சுருக்கு கயிறு இறுகினால், கதிர்காமரை சந்திக்கும் வாயப்பு அவருக்கு கிடைக்கும். மச்சாளை நினைச்சால் கண் கலங்குவதை தவிர்க்க முடியவில்லை. 👀🚶🏻‍♂️😁

ட‌ங்கு க‌வ‌லைப் ப‌ட‌ வேண்டாம் உங்க‌ட‌ ம‌ச்சாளுக்கு ஆறுத‌ல் சொல்ல‌ நாங்க‌ள் இருக்கிறோம் 😁

பைய‌னின் ஆறுத‌ல் வார்த்தை எப்ப‌டி இருக்கும் என்று ஒரு க‌ன‌ம் யோசிச்சு பாருங்கோ , எரியிற‌ வீட்டுக்கு என்னைய‌ ஊத்துவ‌து போல் இருக்கும்  ஹா ஹா 😁

12 minutes ago, இசைக்கலைஞன் said:

அம்மான் இறுதிப் போருக்கு ஒரு வேண்டாத சாட்சி. சுருக்கு கயிறு இறுகினால், கதிர்காமரை சந்திக்கும் வாயப்பு அவருக்கு கிடைக்கும். மச்சாளை நினைச்சால் கண் கலங்குவதை தவிர்க்க முடியவில்லை. 👀🚶🏻‍♂️😁

5 minutes ago, பையன்26 said:

ட‌ங்கு க‌வ‌லைப் ப‌ட‌ வேண்டாம் உங்க‌ட‌ ம‌ச்சாளுக்கு ஆறுத‌ல் சொல்ல‌ நாங்க‌ள் இருக்கிறோம் 😁

பைய‌னின் ஆறுத‌ல் வார்த்தை எப்ப‌டி இருக்கும் என்று ஒரு க‌ன‌ம் யோசிச்சு பாருங்கோ , எரியிற‌ வீட்டுக்கு என்னைய‌ ஊத்துவ‌து போல் இருக்கும்  ஹா ஹா 😁

 இப்படியாக உயிருடன் இருக்கும் ஒருவரின் மரணத்தில் அவரில் அன்பு கொண்டுள்ள கள உறவான ரதியை கவலையுற செய்வதான இந்த நக்கல் பதிவு மனித நாகரீகத்திற்கு புறம்பானது என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம்

 மனித நாகரீகத்திற்கு புறம்பானது என்ற காரணத்தால்  அது தமக்கில்லை என்ற ரீதியில்  சீமானின்  தம்பிகள்  அதை  தாரளமாக செய்யலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, tulpen said:

கதிர்காமரை சந்திக்கும் என்றால்.. அவரின் அரசியல் உயரத்தை இவரும் சந்திப்பார் என பொருள்படும் (பரிமேலழகர் உரை). 🚶🏻‍♂️🚶🏻‍♂️

  • கருத்துக்கள உறவுகள்

2 hours ago, இசைக்கலைஞன் said:

கதிர்காமரை சந்திக்கும் என்றால்.. அவரின் அரசியல் உயரத்தை இவரும் சந்திப்பார் என பொருள்படும் (பரிமேலழகர் உரை). 🚶🏻‍♂️🚶🏻‍♂️

அவர் நாய், பூனைக்கு சொல்லி போட்டு வாங்கோ எண்டுவார்....

அதால... அவர் சொல்லுறத சொல்லடுமன்.

அம்மான் மனித நாகரீகத்திற்கு புறம்பாக செய்த, செய்வித்த கொலைகள் மிக, மிக மோசமானவை. அவர் தன்னை படைத்தவனை சந்திக்கும் போது, பதில் சொல்ல வேண்டியவை ஏராளம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Nathamuni said:

ஊரில ரலி சைக்கிளை, கழுவி, துடைச்சு, கவட்டுக்க வைத்துக்கொண்டு திரிந்த பொடியளை கொண்டு பொய், ஆயுத பயிட்சி கொடுத்து, அவர்களுக்கு லோக்கலில் ஆதரவா இருக்குமாறு, கொழுதூர் மணி போன்றவர்களை செட் பண்ணி, பின்னர் தமக்குள்ள அடிபட வைத்து, வளர்ந்த ஒரு குறுப்பினை அழிக்க, ஆமியை அனுப்பி, சரி வரவில்லை எண்டோன்ன, சிங்களவனுக்கு முழு ஆதரவு கொடுத்து, இனத்தையே ஒட்டுமொத்தமாக அழித்த இந்தியா, இனி ஒரு தீர்வு என்று வரவே தேவையில்லை.

பிச்சை வேண்டாம், நாயை பிடி

தமிழரின் ஆயுதப்போராட்டம் பற்றிய உங்கள் புரிதல் புல்லரிக்க வைக்கின்றது நாதம்ஸ். ஆக மொத்தத்தில் ஒரு அரசியல் அறிவும் இல்லாமல் இந்தியாவின் கூலிப்படையாகத்தான் ஆயிரமாயிரம் போராளிகள் மாண்டுபோனார்கள்! அவர்களையெல்லாம் கேவலப்படுத்தும் கருத்து இது.

இப்படியான வரலாற்று அறிதலை வைத்துக்கொண்டுதான் சீமானின் அரசியலை அக்குவேறு ஆணிவேறாகப் புரிந்திருக்கின்றீர்கள்😂🤣

எமது போராட்ட வரலாற்றை அரிவரியில் சொல்லவேண்டியதில்லை. பல நூல்களும், ஏன் யாழ் களத்தில் பல திரிகளும், உள்ளன. எனவே யானை பார்த்த குருடர்களாக இருக்காதீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, கிருபன் said:

புல்லரிக்காமல் என்ன செய்யும், பின்ன?

நான் சொல்வது இந்தியர், செய்த பேருதவி பற்றி மட்டுமே.

அதனை குறித்தே சொல்லி இருக்கிறேன், இனி எந்த பேருதவியும் வேண்டாம் என்றும் சொல்கிறேன். சிங்களவர்களுடன் பார்த்துக் கொள்கிறோம்.

நீங்கள் மறு பக்கத்தால் வந்து நிற்கிறீர்கள்.

இலங்கைத் தீவில் கட்டுகதையாயினும் முன்னர் ராமனாலும், பின்னர் நேரு வம்சத்தாலும் உயரழிவுகள் பல. தமிழர் மட்டுமல்ல, சிங்கள, முஸ்லிமகள் கூட. 

இலங்கைத்தீவு ஒரேயொரு விசயத்தில் முற்று முழுவதாக ஒற்றுமையாக நம்புவது, எக்காரணம் கொண்டும் இந்தியர்களை நம்ப கூடாது என்பதில் தான்.

உங்கள், சிந்தனை ஓட்டமும், அதன் வீச்சும்.... புரிந்து கொள்ள முனைகிறேன். 

Edited by Nathamuni

19 minutes ago, Nathamuni said:

அவர் நாய், பூனைக்கு சொல்லி போட்டு வாங்கோ எண்டுவார்....

அதால... அவர் சொல்லுறத சொல்லடுமன்.

அம்மான் மனித நாகரீகத்திற்கு புறம்பாக செய்த, செய்வித்த கொலைகள் மிக, மிக மோசமானவை. அவர் தன்னை படைத்தவனை சந்திக்கும் போது, பதில் சொல்ல வேண்டியவை ஏராளம்.

அம்மான் மட்டுமா மனித நாகரீகத்திற்கு புறம்பாக கொலை செய்தார். இவை பற்றி விரிவாக  பேச புறபட்டடால்   நல்லவர்கள் என்று நாம் இப்போதும் நம்பும் பலரின் உண்மை முகங்கள் வெளிவரும்.   ஆனால் நீங்கள் அது பற்றி பேச மாட்டீர்கள். ஏதாவது அம்புலிமாமா கதை சொல்லுவீர்கள். அது பற்றி எல்லாம் பேசுவது உண்மையான  போராளிகள் மாவீர‍ர்களையும் கறை படிய வைக்கும் என்பதால் தவிர்க்கிறேன். 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, tulpen said:

அம்புலிமாமா கதை சொல்லுவீர்கள். 

உங்களுக்கு அம்புலிமாமா கதை என்று நினைத்தால் ஏன் கஷ்ட்டப்பட்டு வாசிக்கவேணும் ஐயா.

நான் என்னை மாதிரி ஐந்து அறிவுகள் கொண்டதுகளுக்கு எழுத்திறன். 

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, Nathamuni said:

அவர் நாய், பூனைக்கு சொல்லி போட்டு வாங்கோ எண்டுவார்....

அதால... அவர் சொல்லுறத சொல்லடுமன்.

அம்மான் மனித நாகரீகத்திற்கு புறம்பாக செய்த, செய்வித்த கொலைகள் மிக, மிக மோசமானவை. அவர் தன்னை படைத்தவனை சந்திக்கும் போது, பதில் சொல்ல வேண்டியவை ஏராளம்.

உண்மை தான் நாதா , க‌ருணாவின் துரோக‌த்தால் எவ‌ள‌வு உயிர்க‌ள் போன‌து ,

தெரியாம‌ல் செய்தா த‌வ‌று தெரிந்து செய்தா அத‌ற்கு ம‌ன்னிப்பே கிடையாது , 2003ம் ஆண்டு க‌ட‌சியில் இருந்து 2005 வ‌ர‌ க‌ருணாவின் துரோக‌ செய‌ல்க‌ள் அதிக‌ம் ,

ம‌ண்ணோடு ம‌ண்ணா க‌ருணா போனா நேர‌டியா ந‌ர‌க‌த்துக்கு தான் போவார் , 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Nathamuni said:

புல்லரிக்காமல் என்ன செய்யும், பின்ன?

நான் சொல்வது இந்தியர், செய்த பேருதவி பற்றி மட்டுமே.

அதனை குறித்தே சொல்லி இருக்கிறேன், இனி எந்த பேருதவியும் வேண்டாம் என்றும் சொல்கிறேன். சிங்களவர்களுடன் பார்த்துக் கொள்கிறோம்.

நீங்கள் மறு பக்கத்தால் வந்து நிற்கிறீர்கள்.

இலங்கைத் தீவில் கட்டுகதையாயினும் முன்னர் ராமனாலும், பின்னர் நேரு வம்சத்தாலும் உயரழிவுகள் பல. தமிழர் மட்டுமல்ல, சிங்கள, முஸ்லிமகள் கூட. 

இலங்கைத்தீவு ஒரேயொரு விசயத்தில் முற்று முழுவதாக ஒற்றுமையாக நம்புவது, எக்காரணம் கொண்டும் இந்தியர்களை நம்ப கூடாது என்பதில் தான்.

உங்கள், சிந்தனை ஓட்டமும், அதன் வீச்சும்.... புரிந்து கொள்ள முனைகிறேன். 

நல்ல சப்பைக்கட்டு நாதம்ஸ்.😁

இது நீங்கள் எழுதியது. அதன் அர்த்தம் புரியாததல்ல.

Quote

ஊரில ரலி சைக்கிளை, கழுவி, துடைச்சு, கவட்டுக்க வைத்துக்கொண்டு திரிந்த பொடியளை கொண்டு பொய், 

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, tulpen said:

அம்மான் மட்டுமா மனித நாகரீகத்திற்கு புறம்பாக கொலை செய்தார். இவை பற்றி விரிவாக  பேச புறபட்டடால்   நல்லவர்கள் என்று நாம் இப்போதும் நம்பும் பலரின் உண்மை முகங்கள் வெளிவரும்.   ஆனால் நீங்கள் அது பற்றி பேச மாட்டீர்கள். ஏதாவது அம்புலிமாமா கதை சொல்லுவீர்கள். அது பற்றி எல்லாம் பேசுவது உண்மையான  போராளிகள் மாவீர‍ர்களையும் கறை படிய வைக்கும் என்பதால் தவிர்க்கிறேன். 

நாதா சொல்லுவ‌து நித‌ர்ச‌ உண்மைக‌ள் , இதை போய் கேலியும் கிண்ட‌லுமா அம்புலிமாமா க‌தை என்று ந‌க்க‌ல் பாணியில் சொல்லுறீங்க‌ள் /

க‌ண‌க்க‌ வேண்டாம் க‌ருணா எத‌ற்கா எம் த‌லைவ‌ருக்கு துரோக‌ம் செய்தார் என்ப‌த‌ எழுதுங்கோ பாப்போம் ,

மீதியை நீங்க‌ள் வைக்கும் க‌ருத்துக்கு பிற‌க்கு விவாதிப்போம் துல்ப‌ன் 😉

Edited by பையன்26

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, கிருபன் said:

நல்ல சப்பைக்கட்டு நாதம்ஸ்.😁

இது நீங்கள் எழுதியது. அதன் அர்த்தம் புரியாததல்ல.

நீங்கள் தான் சப்பைக்கட்டு கட்டுறியல் ஏனெனில், அடிப்படையில், இந்தியாவும், தமிழகமும் தரும் ஆதரவில் இருந்து தான், எமக்கான தீர்வு கிடைக்கும் என்று தீரவிரமாக நீங்கள் நம்புவதனால்.

அதுவே நீங்கள் சீமானை எதிர்க்கும் அடிப்படை காரணமும்.

Edited by Nathamuni

9 minutes ago, Nathamuni said:

உங்களுக்கு அம்புலிமாமா கதை என்று நினைத்தால் ஏன் கஷ்ட்டப்பட்டு வாசிக்கவேணும் ஐயா.

நான் என்னை மாதிரி ஐந்து அறிவுகள் கொண்டதுகளுக்கு எழுத்திறன். 

தாராளமாக அதை செய்யுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, tulpen said:

தாராளமாக அதை செய்யுங்கள்.

அதைத்தானே ஐயா செய்து கொண்டிருக்கிறன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Nathamuni said:

நீங்கள் தான் சப்பைக்கட்டு கட்டுறியல் ஏனெனில், அடிப்படையில், இந்தியாவும், தமிழகமும் தரும் ஆதரவில் இருந்து தான், எமக்கான தீர்வு கிடைக்கும் என்பதனால்.

அதுவே நீங்கள் சீமானை எதிர்க்கும் அடிப்படை காரணமும்.

நான் இணைக்கும் அரசியல் கட்டுரைகளை நீங்கள் படிப்பதில்லை என்று தெரியும்.😀

ஆனால் அதை எழுதும் ஆய்வாளர்கள் சரியான விளக்கங்களை தர்க்கரீதியாக வைப்பவர்கள். ஆனால் எமது போராட்டத்தின் அடிப்படை பற்றிய புரிதல் இல்லாமல்,  ரலி சைக்கிளை கழுவித் துடைச்சுக்கொண்டிருந்தவர்கள் இந்தியாவின் பேருதவியால் சண்டைக்கு போனவர்கள் என்று சொல்லும் உங்களால், ஆறுதலாகப் படிக்கமுடியாது. ஆனால் முயற்சி செய்தால் தமிழர்களின் அரசியல் தீர்வை தமிழகத்தின், இந்தியாவின் ஆதரவின்றி அடையமுடியாது என்பது விளங்கும்.😎

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
11 minutes ago, பையன்26 said:

நாதா சொல்லுவ‌து நித‌ர்ச‌ உண்மைக‌ள் , இதை போய் கேலியும் கிண்ட‌லுமா அம்புலிமாமா க‌தை என்று ந‌க்க‌ல் பாணியில் சொல்லுறீங்க‌ள் /

க‌ண‌க்க‌ வேண்டாம் க‌ருணா எத‌ற்கா எம் த‌லைவ‌ருக்கு துரோக‌ம் செய்தார் என்ப‌த‌ எழுதுங்கோ பாப்போம் ,

மீதியை நீங்க‌ள் வைக்கும் க‌ருத்துக்கு பிற‌க்கு விவாதிப்போம் துல்ப‌ன் 😉

உண்ண்மைகளை விளங்கிக்கொள்ளாதவர்களிடம் மேற்கொண்டு எதை எதிர்பார்க்கின்றீர்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, கிருபன் said:

நான் இணைக்கும் அரசியல் கட்டுரைகளை நீங்கள் படிப்பதில்லை என்று தெரியும்.😀

ஆனால் அதை எழுதும் ஆய்வாளர்கள் சரியான விளக்கங்களை தர்க்கரீதியாக வைப்பவர்கள். ஆனால் எமது போராட்டத்தின் அடிப்படை பற்றிய புரிதல் இல்லாமல்,  ரலி சைக்கிளை கழுவித் துடைச்சுக்கொண்டிருந்தவர்கள் இந்தியாவின் பேருதவியால் சண்டைக்கு போனவர்கள் என்று சொல்லும் உங்களால், ஆறுதலாகப் படிக்கமுடியாது. ஆனால் முயற்சி செய்தால் தமிழர்களின் அரசியல் தீர்வை தமிழகத்தின், இந்தியாவின் ஆதரவின்றி அடையமுடியாது என்பது விளங்கும்.😎

1983ல் இருந்து கிடைக்குதே ஆதரவு.... என்ன குறைச்சல்...

முதலில், கனவுலகில் இருந்து வெளியில வாருங்கோ....

பிரச்னை இந்தியாவின் கையிலிருந்து, சீனா, அமெரிக்கா கைகளில் போய் நீண்ட காலம்.

முக்கியமாக, உங்கள் தமிழ் அலம்பறை திரிகளை விட்டு வெளியே வாருங்கள்.

உங்களுக்கு விருப்பமாயின், ஆக்கபூர்வமான ஆங்கில திரிகளை பகிர்வேன். அதிலே, இலங்கையின் தமிழ், சிங்கள, இஸ்லாமிய புத்தி ஜீவிகளுடன் கலந்துரையாடலாம்.

தமிழகத்திலும் பார்க்க, கனடாவில், ஐரோப்பவில், ஆஸ்திரேலியாவில், பிரிட்டனில் வாழும் நமது பலம் கூடுதலானது என்பதை நம்புங்கள். அடுத்தவனை நம்பியது போதும், எம்மை நம்புவோம்.

அதுகுறித்தது தான் சிங்களவன் பயப்படுகிறான். (நான் தமிழனாக அங்கே கருத்து பதிவதில்லை)

இந்த இந்தியர்களுக்கு தண்ணி காட்டுவது எப்படி என்று அவனுக்கு நன்கு தெரியும்.

நிழலிக்கு ஒரு பதிவு அனுப்பி இருந்தேன். இந்த திரியிலேயே அந்த விபரம் உள்ளது.

அதாவது, தமிழர்கள் படுகொலை வாரம் அனுஷ்ட்டிக்க சிங்களவர்கள் எதிர்ப்பு. அதற்கு ஒரு ஒன்லைன் பெட்டிஷன் திறந்து 12,000 பேர் கையெழுத்து போட்டிருந்தார்கள்.

எனக்கு அனுப்பியவர்கள் லிவர்பூல் பல்கலைக்கழக தமிழ் மாணவர்கள். தாம் கனடா  வாட்டேலோ யூனிவர்சிட்டி தமிழ் மாணவர்களுடன் சேர்ந்து ஒரு பெட்டிஷன் திறந்து விட்டதாயும் கையெழுத்து போடுமாறும் அனுப்பினார்கள். அதுதான் நமது பலம்.  

அடுத்த தலைமுறை மிக வேகமாக உள்ளது.

சனிக்கிழமை இரவுகளில் zoom மீட்டிங்கில் பல்கலைக்கழக தமிழ் மாணவர்கள் ஈழ வரலாறு, தாம் செய்ய வேண்டியது குறித்து கலந்துரையாடுகின்றார்கள்.

நம்பிக்கை தருகின்றது.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, கிருபன் said:

நான் இணைக்கும் அரசியல் கட்டுரைகளை நீங்கள் படிப்பதில்லை என்று தெரியும்.😀

ஆனால் அதை எழுதும் ஆய்வாளர்கள் சரியான விளக்கங்களை தர்க்கரீதியாக வைப்பவர்கள். ஆனால் எமது போராட்டத்தின் அடிப்படை பற்றிய புரிதல் இல்லாமல்,  ரலி சைக்கிளை கழுவித் துடைச்சுக்கொண்டிருந்தவர்கள் இந்தியாவின் பேருதவியால் சண்டைக்கு போனவர்கள் என்று சொல்லும் உங்களால், ஆறுதலாகப் படிக்கமுடியாது. ஆனால் முயற்சி செய்தால் தமிழர்களின் அரசியல் தீர்வை தமிழகத்தின், இந்தியாவின் ஆதரவின்றி அடையமுடியாது என்பது விளங்கும்.😎

ஐயா கிருபன், சொல்லுறன் எண்டு கோவிக்கப்படாது,

என்னைப் பொறுத்தவரை, இந்தியனிண்ட உதவியோட தமிழீழம் கிடைச்சு அவனுக்கு கூஜா தூக்கி சந்தோசமா வாழுறத விட, நான் சிங்களவனுக்குக் கீழ அடிமையா இருந்து கஸ்ரப்பட்டு சாகிறத பெருமையா கருதுவன். 

6 minutes ago, கிருபன் said:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Nathamuni said:

உங்களுக்கு விருப்பமாயின், ஆக்கபூர்வமான ஆங்கில திரிகளை பகிர்வேன். அதிலே, இலங்கையின் தமிழ், சிங்கள, இஸ்லாமிய புத்தி ஜீவிகளுடன் கலந்துரையாடலாம்.

நான் தமிழ் அலப்பறைக்குள் மட்டும்தான் இருக்கின்றேன் என்று நினைக்கவேண்டாம். 
சிங்கள, முஸ்லிம் புத்திஜீவிகள் எத்தகைய நிலைப்பாட்டில் உள்ளனர் என்பதையும் அவர்களின் கட்டுரைகளைப் படித்து ஓரளவு அறிந்து வைத்திருக்கின்றேன்.

பிரச்சாரம் இல்லாத “நடுநிலையான” கட்டுரைகள் https://groundviews.org இல் வருகின்றன.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, கிருபன் said:

😁 - grinning face with smiling eyes emoji | What does 😁 mean?

:grin:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Kapithan said:

ஐயா கிருபன், சொல்லுறன் எண்டு கோவிக்கப்படாது,

என்னைப் பொறுத்தவரை, இந்தியனிண்ட உதவியோட தமிழீழம் கிடைச்சு அவனுக்கு கூஜா தூக்கி சந்தோசமா வாழுறத விட, நான் சிங்களவனுக்குக் கீழ அடிமையா இருந்து கஸ்ரப்பட்டு சாகிறத பெருமையா கருதுவன். 

அரசியல் தீர்வு = தமிழீழம் 

இந்த சமன்பாடு தீர்க்கமுடியாத சமன்பாடு. தமிழர்களுக்கான அரசியல் தீர்வு தமிழீழம் என்று நம்பிய காலம் மலையேறிப்போய்விட்டது. 

எனவே, இந்தியாவுக்கு கூஜா தூக்கவேண்டிய தேவை உங்களுக்கு இருக்காது.😀

நான் இந்திய ஆதரவாளன் இல்லை. ஒருபோதும் காங்கிரஸின் அல்லது இந்துத்துவ பிஜேபியின் கொள்கைகளை ஏற்றுக்கொண்டதுமில்லை. எனினும் இந்தியாவை வெட்டி விளையாடி தமிழர்கள் ஒரு தீர்வை அடையமுடியாது. அதனால் அவர்களைப் பிடிக்காவிட்டால்கூட அவர்களின் அரசியல், இராஜதந்திர உதவியின்றி தமிழர்களுக்கு ஒன்றும் கிடைக்காது என்பதில் தெளிவாக இருக்கின்றேன். இந்தியாவை வெட்டியோட வெளிக்கிட்ட புலிகளின் தோல்வியில் இருந்து ஒரு படிப்பினைகூட எடுக்காமல் இருந்தால் தமிழர்களைக் “கடவுள்”கூட காப்பாற்றமாட்டார்.

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, Kapithan said:

ஐயா கிருபன், சொல்லுறன் எண்டு கோவிக்கப்படாது,

என்னைப் பொறுத்தவரை, இந்தியனிண்ட உதவியோட தமிழீழம் கிடைச்சு அவனுக்கு கூஜா தூக்கி சந்தோசமா வாழுறத விட, நான் சிங்களவனுக்குக் கீழ அடிமையா இருந்து கஸ்ரப்பட்டு சாகிறத பெருமையா கருதுவன். 

அருமையான கருத்து

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, கிருபன் said:

அரசியல் தீர்வு = தமிழீழம் 

இந்த சமன்பாடு தீர்க்கமுடியாத சமன்பாடு. தமிழர்களுக்கான அரசியல் தீர்வு தமிழீழம் என்று நம்பிய காலம் மலையேறிப்போய்விட்டது. 

எனவே, இந்தியாவுக்கு கூஜா தூக்கவேண்டிய தேவை உங்களுக்கு இருக்காது.😀

நான் இந்திய ஆதரவாளன் இல்லை. ஒருபோதும் காங்கிரஸின் அல்லது இந்துத்துவ பிஜேபியின் கொள்கைகளை ஏற்றுக்கொண்டதுமில்லை. எனினும் இந்தியாவை வெட்டி விளையாடி தமிழர்கள் ஒரு தீர்வை அடையமுடியாது. அதனால் அவர்களைப் பிடிக்காவிட்டால்கூட அவர்களின் அரசியல், இராஜதந்திர உதவியின்றி தமிழர்களுக்கு ஒன்றும் கிடைக்காது என்பதில் தெளிவாக இருக்கின்றேன். இந்தியாவை வெட்டியோட வெளிக்கிட்ட புலிகளின் தோல்வியில் இருந்து ஒரு படிப்பினைகூட எடுக்காமல் இருந்தால் தமிழர்களைக் “கடவுள்”கூட காப்பாற்றமாட்டார்.

இந்தியாவின் பங்களிப்பு, தமிழ் இளைஞர்களை பயிற்றுவிப்பதுடன் தொடங்கி, முள்ளி வாய்க்காலுடன் நிறைவு அடைந்து விட்டது.

இப்போது சீனா தென்பகுதியில் புகுந்து விட்டது...

அதனாலேயே, தனது குடிமகனான கோத்தபாயவினை களமிறக்கி, ஜனாதிபதி ஆக்கி உள்ளது அமெரிக்கா. அவரது மகன், மனைவி அமெரிக்க குடியுரிமையாளர்கள். (ஒரு சிங்களவர் பெருமையாக சொன்னார், அமெரிக்காவில் இரு first ladies இருக்கினமாம், இருவரும் அமெரிக்காவில் பிறக்கவில்லையாம்)

இந்த நிலையில், மைதானம், இந்தியர்கள் இல்லாத நிலையில், அமெரிக்கா + பிரிட்டன் எதிர் சீனா + ரசியா என்று மாறி விட்டது.

இந்தியா பக்கத்தில் இருந்து விசில் அடிக்க வேண்டியது தான். அதாவது பறவை பறந்த பின்னர் வலை விரித்து பயன் இல்லை.

ஒரு பொருளாதாரவிடயத்தினை புரிந்து கொள்ளுங்கள். ஹாங்காங் எனும் பெரும் பொருளாதார மையத்தினை மேற்கு சீனாவிடம் இழந்து விட்டது.

சிங்கப்பூர் 72% சீனர்கள். மலேசியா, இந்தோனேசியா முஸ்லீம் நாடுகள். தென் கொரியா, வட கொரியாவினால்   பாதுகாப்பு இல்லை. தாய்லாந்து அரசியல் உறுதிப்பாடு இல்லை. Asian economic tigers out.

இஸ்ரேல் மத்தியகிழக்கு பகுதியில் ஒரு உறுதியான மேற்கு சார்பான நாடு... காரணம் அவர்களில் பெரும் பகுதியானோர், திரும்பிச் சென்ற அகதிகள், மேலை நாடுகளின் குடியுரிமை வைத்துள்ளவர்கள்.

இதுவே, ஈழத்துக்கான அடிப்படையும், அவர்கள் ஆசியாவில் தேடும் ஒரு பொருளாதார மையத்துக்கான தேடுதலும் இணையும் மையம். சிங்களவர்கள் இணைத்திருந்தால் அவர்களுக்கு நல்லது.

இதில் இந்திய வகிபாகம் எதுவுமே இல்லை.

ஐந்தறிவான எங்களுக்கு புரியும் என்று நினைக்கிறன். துல்பன் ஐயாவுக்கு அம்புலிமாமா கதை.  😀

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
36 minutes ago, Kapithan said:

ஐயா கிருபன், சொல்லுறன் எண்டு கோவிக்கப்படாது,

என்னைப் பொறுத்தவரை, இந்தியனிண்ட உதவியோட தமிழீழம் கிடைச்சு அவனுக்கு கூஜா தூக்கி சந்தோசமா வாழுறத விட, நான் சிங்களவனுக்குக் கீழ அடிமையா இருந்து கஸ்ரப்பட்டு சாகிறத பெருமையா கருதுவன். 

சரியாக சொன்னீர்கள்.👍🏽

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.