Jump to content

கொஞ்சம் சிரிக்க ....


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of ‎2 people and ‎text that says '‎ஏங்க காககா கத்துது, இன்னைக்கு உங்க சொந்தகாரங்க வருவாங்கபோல? ك யாரே ரே ரே அடியேய் யய் வெளிய வந்துபாரு உன் தங்கச்சி வந்திருக்கா, அவதான் அக்கா அக்கான்னு கத்துனது உனக்கு காக்கா கத்துன மாதிரி கேட்டிருக்கு...‎'‎‎

ஏங்க…. காக்கா கத்துது, இன்னைக்கு உங்க சொந்தக்காரங்க வருவாங்க போல?

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 4 people and text that says 'புகை பிடித்தல் உயிருக்கு கேடு..!'

May be an image of text that says 'சிகரெட்டின் நுனியில் பஞ்சு இருப்பது... f/alwzsmle -யாரோ அதை தொடர்ந்து குடிப்பவர்களின் மூக்கில் வைப்பதற்கு தான்....!'

சிகரட்  நுனியில்... பஞ்சு,  ஏன் உள்ளது?

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
ஒரு வைத்தியரும் அவருடைய மனைவியும் காட்டில் நீண்ட நாட்களாக எதையோ தேடிக்கொண்டிருந்தனர்...
கணவர்என்ன தேடுகிறார் என்று மனைவிக்கு தெரியாது!
வையத்தியரும் சொன்னதில்லை!
மனைவியின் வேலை, அலைந்து திரிந்து வரும் கணவருக்கு உணவு சமைத்து வைப்பது, பரிமாறுவது, கைகால்கள் அமுக்குவது போன்ற பணிவிடைகள்தான்!
இப்படியே பல ஆண்டுகள் கழிந்து இருவருமே வயதாகி விட்டனர். ஆனாலும் தேடுவதை நிறுத்தவில்லை!
ஒருநாள் வைத்தியர் வழக்கம்போல காட்டுக்குள் அலைந்து திரிந்துவிட்டு வரும்போது அங்கே மனைவியைக் காணவில்லை.
மாறாக, இளம்பெண் ஒருத்தி நின்று கொண்டிருந்தாள். வைத்திரை பார்த்ததும் சாஸ்டாங்கமாக விழுந்து சேவித்தாள்.
வைத்தியருக்கு ஒன்றும்
புரியவில்லை.
யாரம்மா நீ என்று கேட்டார்.
அதற்கு அந்த யுவதி, நான்தான் உங்கள் மனைவி என்றாள்.
வைத்தியருக்கு மிகவும் குழப்பம்.
என்ன நடந்தது என்று கேட்க, மனைவி நடந்ததை சொல்ல ஆரம்பித்தாள்.
"உங்களுக்காக கூழ் காய்த்து கொண்டிருந்தேன். காய்ச்சிய கூழை கலக்கும் கரண்டி உடைந்து விட்டது. அதனால் அங்கே கிடந்த ஒரு குச்சியை எடுத்து கலக்கினேன். கூழ் மொத்தமும் கருப்பாகி விட்டது. அந்த கூழை இறக்கி வைத்து விட்டு வேறு கூழ் காய்ச்சினேன். நீங்கள் வர தாமதமானதும் கருகி கிடந்த கூழை நான் குடித்து விட்டேன்.
குடித்த அரை நாழிகையில் எனது முதுமை போய் இப்படி இளைம் பெண் ஆகிவிட்டேன்" என்றாள்...
வைத்தியர் பதறியடித்து போய், "எங்கே அந்த குச்சி? இதைதானே நான் இத்தனை ஆண்டாக தேடிக்கொண்டிருந்தேன்" என்று கேட்க, அதற்கு அந்த மனைவி, "அதைதான் நான் அடுத்த கூழ் காய்ச்சும்போது அடுப்பில் வைத்து எரித்து விட்டேனே? " என்றாள்...
வைத்தியர் நெஞ்சடைத்து மயங்கி சாய்ந்தார்!
*நீதி 1:*
*பெண்டாட்டிக்கு தெரியாமல் எதுவும் செய்யக்கூடாது..*
*நீதி 2:*
*அப்படி செஞ்சால் பொண்டாட்டிக்குதான் லாபம்...😂😂😂
Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.