Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தக்காளி சோறு, வெங்காயத்தாள் ஆம்லெட், சுட்ட மிளகாய் சாலட்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, Nathamuni said:

அவோவுக்கு இதெலாம் கடலைக்கொட்டை வருமானம். (peanuts)

உங்க அங்கோர் வாட் பார்கபோகேக்கை சும்மா டிப்ஸ் எறிஞ்ச வகையிலேயே, ஒரு £10,000 போயிருக்கும்.

சும்மா குறைச்சு ஆளை மதிப்பிடாதீங்கோ.... இப்போ ஊரிலை வீடு கேஷ் இன் ஹாண்டோட பார்த்துக்கொண்டெல்லே இருக்கிறா.

இன்னுமோர் அக்கா.... அது பாவம்.... அம்மான்.... எண்ட அண்ணர் எண்டு கொண்டு திரியுறா.... கையில பசை இருக்கும் எண்டு நினைக்கிறியலோ?

நான் நினைக்கேல்லை அந்தளவுக்கு இருக்குமெண்டு.....:grin:

நாதர்! தெரியாமல் கேக்கிறன். எங்கடை யாழ்களத்திலை நான் கூப்பன் முத்திரை மாதிரி கொஞ்ச பச்சை புள்ளி சேர்த்து வைச்சிருக்கிறன். அதை வைச்சு ஏதாலும் செய்யலாமே? :cool:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

நான் நினைக்கேல்லை அந்தளவுக்கு இருக்குமெண்டு.....:grin:

நாதர்! தெரியாமல் கேக்கிறன். எங்கடை யாழ்களத்திலை நான் கூப்பன் முத்திரை மாதிரி கொஞ்ச பச்சை புள்ளி சேர்த்து வைச்சிருக்கிறன். அதை வைச்சு ஏதாலும் செய்யலாமே? :cool:

ஓமோம், அதுக்கும் அலுவல் இருக்குது...

எல்லாம், இரவு... போத்திலை திறந்து வச்சுப்போட்டு சொல்லுறன். :grin:

  • கருத்துக்கள உறவுகள்
On 9/6/2020 at 12:40, குமாரசாமி said:

உந்த வருமான விசயம் எங்கடை பிரிட்டிஷ் அக்காவுக்கு தெரியுமோ? 😎

தெரிஞ்சு என்ன பண்ணுறது. லைக் செய்யுங்கோ எண்டு கேட்டும் இரண்டுபேர்தான் யாழ்  செய்தது. அதோட அது சின்னப் பெட்டை.  எல்லாரும் ஆவெண்டு பாம்பினம். சரி எனது ஒரு பதிவாக இருக்கட்டும் என்று இதுக்கு என்று செய்யாமல் சமைக்கும் போது எடுத்துக் போடுவது.

On 9/6/2020 at 12:52, Nathamuni said:

அவோவுக்கு இதெலாம் கடலைக்கொட்டை வருமானம். (peanuts)

உங்க அங்கோர் வாட் பார்கபோகேக்கை சும்மா டிப்ஸ் எறிஞ்ச வகையிலேயே, ஒரு £10,000 போயிருக்கும்.

சும்மா குறைச்சு ஆளை மதிப்பிடாதீங்கோ.... இப்போ ஊரிலை வீடு கேஷ் இன் ஹாண்டோட பார்த்துக்கொண்டெல்லே இருக்கிறா.

நல்லா வாயில வருதுகண்டியளோ 😂

On 9/6/2020 at 16:23, குமாரசாமி said:

நான் நினைக்கேல்லை அந்தளவுக்கு இருக்குமெண்டு.....:grin:

நாதர்! தெரியாமல் கேக்கிறன். எங்கடை யாழ்களத்திலை நான் கூப்பன் முத்திரை மாதிரி கொஞ்ச பச்சை புள்ளி சேர்த்து வைச்சிருக்கிறன். அதை வைச்சு ஏதாலும் செய்யலாமே? :cool:

உந்தப் பச்சையை வச்சு புளியங்கொட்டை கூட  வாங்க ஏலாது.😎

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

தெரிஞ்சு என்ன பண்ணுறது. லைக் செய்யுங்கோ எண்டு கேட்டும் இரண்டுபேர்தான் யாழ்  செய்தது. அதோட அது சின்னப் பெட்டை.  எல்லாரும் ஆவெண்டு பாம்பினம். சரி எனது ஒரு பதிவாக இருக்கட்டும் என்று இதுக்கு என்று செய்யாமல் சமைக்கும் போது எடுத்துக் போடுவது.

நல்லா வாயில வருதுகண்டியளோ 😂

அக்கோய்,

முதலில் சின்ன பெட்டை கதையை விடுங்கோ.

https://www.youtube.com/channel/UCw_YGMGfV36IO_pQFw3E96Q

இந்த சேனல் நடத்துபவர் இன்றுவரை முகத்தினை காட்டவில்லை. இரண்டு மில்லியன் subscribers. 

இந்தியாவில் இருக்கும் இவருக்கு அண்ணளவாக மாத வருமானம் £2,200 - £35,100

முக்கியமா Youtube ல  லைக் வேற, subscribers வேற.

இரண்டாவது தான் முக்கியம். 2,000 subscribers வந்தபிறகுதான் காசு வர தொடங்கும். அதுவரைக்கும் இரவு பகலா கஸ்டப்பட்டு வீடியோ போடணும்.

நீங்கள் ஆரம்பத்தில் இருந்தே சீரியஸ் இல்லையக்கா.

  • கருத்துக்கள உறவுகள்

முதல்ல நான் போட்ட பிரியாணியைப் போய்ப்  பாருங்கோ 🤣

உண்மையைச் சொல்லப்போனால் இதில் பணம் ஈட்டிடவேண்டும் என்னும் ஆர்வம் எனக்கு இன்னும் வரவில்லை. அடுத்தது இதற்காக வீடியோ செய்யாது நான் ஏதும் செய்யும்போது ஆர்வம் இருந்தால் எடுப்பது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

இப்ப கூட நேரம் போகேல.

சும்மா, காசுக்காக செய்யவில்லை என்று பீலா விடாமல், வடிவா இருந்து பிளான் பண்ணி செய்யுங்கோ.

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, Nathamuni said:

இப்ப கூட நேரம் போகேல.

சும்மா, காசுக்காக செய்யவில்லை என்று பீலா விடாமல், வடிவா இருந்து பிளான் பண்ணி செய்யுங்கோ.

என் நன்மைக்குத்தான் சொல்கிறீர்கள் என்று விளங்குது. நன்றி நாதமுனி. ஆனால் எனக்கு எப்பிடியதைவிடச் செய்வது என்று தெரியவில்லை. பிள்ளைகளிடம் கேட்டுச் செய்யவும் பொறுமை இல்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

என் நன்மைக்குத்தான் சொல்கிறீர்கள் என்று விளங்குது. நன்றி நாதமுனி. ஆனால் எனக்கு எப்பிடியதைவிடச் செய்வது என்று தெரியவில்லை. பிள்ளைகளிடம் கேட்டுச் செய்யவும் பொறுமை இல்லை.

நான் அடிச்சு சொல்கிறேன். . சோசியல் மீடியாவில் வியாபாரம் செய்வது குறித்து, இங்கு வளரும்  பிள்ளைகளுக்கு தெரியாது.

அவர்களுக்கு தெரிந்தது எல்லாம், முகப்புத்தகத்தில் லைக், யூடூப்பில் அது, இது பார்ப்பது.

இது வேறு உலகம்.... அங்கே இந்தியாவில் இருக்கும் பெண்களுக்கு இந்த உலகம் புரியுமாயின், பிரித்தானியாவில் இருக்கும் உங்களுக்கு என்ன பிரச்சனை?

முதலில், வீட்டுக்காரருடன் பேசுங்கள். அவரது ஒத்துழைப்பு முக்கியம். அடுத்து பிள்ளைகள் தாமாக வருவார்கள்.

மேலதிக விளக்கங்கள், வழிகாட்டுதலுக்கு.... நாம் தான் இருக்கிறோமே... பிறகென்ன?

அடிச்சு நொறுக்குங்க.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, Nathamuni said:

நான் அடிச்சு சொல்கிறேன். . சோசியல் மீடியாவில் வியாபாரம் செய்வது குறித்து, இங்கு வளரும்  பிள்ளைகளுக்கு தெரியாது.

அவர்களுக்கு தெரிந்தது எல்லாம், முகப்புத்தகத்தில் லைக், யூடூப்பில் அது, இது பார்ப்பது.

இது வேறு உலகம்.... அங்கே இந்தியாவில் இருக்கும் பெண்களுக்கு இந்த உலகம் புரியுமாயின், பிரித்தானியாவில் இருக்கும் உங்களுக்கு என்ன பிரச்சனை?

முதலில், வீட்டுக்காரருடன் பேசுங்கள். அவரது ஒத்துழைப்பு முக்கியம். அடுத்து பிள்ளைகள் தாமாக வருவார்கள்.

சரியாச்சொன்னியள் நாதர்!  இப்ப இருக்கிற சின்னனுகளுக்கு பாசையள் ஒழுங்காய் தெரியுமே தவிர நெளிவு சுழிவுகள் எண்டது துண்டற தெரியாது. இப்ப நான் என்ன சொல்ல வாறனெண்டால் எங்கடை பிரிட்டிஷ் அக்காவுக்கு இன்ரெஸ்ட் இருக்குமெண்டால் சரியாய் மினக்கெடலாம்.
உவ கிரேக்கம்,அங்கொட சாரி அங்கோர்வார்ட் போனதையெல்லாம் வீடியோ பயணக்கட்டுரைமாதிரி செய்திருந்தால் கொஞ்ச காசு பாத்திருக்கலாம்.உப்பிடியான வீடியோக்களை சனமும் விரும்பி பாக்கும்.

இஞ்சை இதிலை பாருங்கோ  இவ எத்தினை சுய ஆக்கங்கள் செய்திருக்கிறா எண்டு!!!! உவ்வளத்தையும் வீடியோவாய் செய்து யூ ரியூப்பிலை ஏத்தி விட்டால் சனங்கள் கட்டாயம் விழுந்தடிச்சு பாக்குங்கள்.

https://yarl.com/forum3/profile/9496-மெசொபொத்தேமியா-சுமேரியர்/content/?type=forums_topic

பேஸ்புக்கிலையும் பூக்கள் புஸ்பங்கள் எண்டு மினைக்கடுறா......அதையும் வீடியோவாய் எடுத்து குயில் குரலாலை இரண்டு பாட்டும் பாடி விட்டா எண்டா ஒரே அமர்களமாய் இருக்குமெல்லோ..:cool:

மற்றது கொத்தாரோடை இவ என்னத்தை ஆலோசிக்கிறது.அக்கா விரல் அசைச்சால் காணுமே கொத்தார் எண்ணையாய் நிப்பார்.👆🏽    பாலுமகேந்திரா ரேஞ்சுக்கு படமும் எடுப்பார்.🎥

இஞ்சை பாருங்கோ இந்த பிள்ளையை லண்டனிலை இருக்கிறாவாம். எப்பிடியான வீடியோக்கைளை யூரியூப்பிலை ஏத்தி உழைக்கிறா எண்டு பாருங்கோ. ரெஸ்கோவுக்கு போய் சாமான் சக்கட்டையள் வாங்கினதை கூட வீடியோவாய் போட்டு விளையாட்டு காட்டியிருக்கிறா🎩

யூரியூப்பாலை எவ்வளவு வருமானம் எண்டதை விளங்கப்படுத்துறா....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தனிமடலில் இந்த பெண்ணின் வீடியோவை, அவோக்கு அனுப்பி வைத்தேன். நீஙகளும் போட்டுள்ளீர்கள்.

கிரேக்க, கம்போடிய கொலீடே படங்களை வீடீயோவாக்கி, யூரியூப்பில ஏத்தலாம். நல்ல ஜடியா.

முதலில் எம்மவர்கள், தொழில் முணைவோராக வர தமது மனதை தயாராக்கவேண்டும்.

பாருங்கள், இவோ ஒவ்வொரு தடவையும் நாம் சொல்லும் போது, தன்நம்பிக்கை இல்லாத படியால், அதை பெரிதாக எடுக்க மறுக்கிறார். நாமளும் அவோவை விடுவதாயில்லை. 😀

இம்முறை சிந்திப்பார், என்று நிணைக்கிறேன்.

தொழில் என்றவுடன், கடை... இடம் என்று... ரிஸ்க் கூடின வழியில் சிந்திக்கிறார்கள்...

மாறாக.... இன்று தொழில்நுட்பம், பெரும், பெரும் கொம்பனிகளை, படுக்கையறையில் இருந்து வேலை செய்யும் தனிமனிதன் வேலைகள் அசைத்து விழுத்துகின்றது.

உதாரணம் தாமஸ் குக். 

Edited by Nathamuni

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

மற்றது கொத்தாரோடை இவ என்னத்தை ஆலோசிக்கிறது.அக்கா விரல் அசைச்சால் காணுமே கொத்தார் எண்ணையாய் நிப்பார்.👆🏽    பாலுமகேந்திரா ரேஞ்சுக்கு படமும் எடுப்பார்.🎥

🤑

Get Cool with both Custom and Default WordPress Smilies and Emoticons

அதில்லை விசயம்...

உதவி செயாட்டிலும், உபத்திரவம் செய்யக்கூடாது.

உனக்கு வேற வேலை இல்லையோ. உதில மினக்கெட்டு கொண்டு நிக்கிராயப்பா. வேற பிரயோசனமான வேலையை போய் பாரு, எண்டால் கதை முடிஞ்சுது.

அதால தான், அத்தார் சப்போர்ட் கட்டாயம் வேணும். 

இவ்வளவு புத்தகம் எழுதி, வெளியிட்டு இருக்கிற ஆளே இப்படி தயங்குறா எண்டால், மத்த பொம்பிளையளை பத்தி.... நினைக்கவே ஏலாது.

Edited by Nathamuni

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

இலைக்கஞ்சி (கொழ கந்த) - கல்கிசை சந்தியில் கடைக்கு பின்னுக்கு ஒரு கடையில் விற்கின்றவர்கள். நல்ல சுவை, அடிக்கடி அங்குதான் குடிப்பது வழக்கம்,

அத்துடன் நன்னாரி வேரும் அவித்து வைத்திருப்பார்கள் (இரமொசு)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.