Jump to content

தோனியாக நடித்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை: திரையுலகம் அதிர்ச்சி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தோனியாக நடித்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை: திரையுலகம் அதிர்ச்சி

bollywood-actor-sushant-singh-rajput-commits-suicide

 

தோனி பயோபிக்கில் நடித்த பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மும்பையில் அவரது இல்லத்தில் தற்கொலை செய்து கொண்டார். இவருக்கு வயது 34.

இவர் பாலிவுட்டில் Kai Po Che என்ற படம் மூலம் அறிமுகமானார். கடைசியாக சிச்சோர் படத்தில் நடித்தார். M.S. Dhoni: The
Untold Story படத்தின் மூலம் பிரபலமடைந்தார்.


இவரது "Dil Bechara" என்ற படம் மே 8ம் தேதி ரிலீஸ் ஆவதாக இருந்தது. கரோனா லாக்டவுன் காரணமாக ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டது.

 

1592126906298.jpg

 

ஏற்கெனவே இர்பான் கான், ரிஷிகபூரை இழந்து சோகத்தில் ஆழ்ந்துள்ள பாலிவுட் உலகம் தற்போது இவரைப்போன்ற ஒரு சிறுவயது நடிகரையும் இழந்து சோகத்தில் ஆழ்ந்துள்ளது.

இவரது தற்கொலை அதிர்ச்சி ஏற்படுத்திய சூழ்நிலையில் ஏன் தற்கொலை போன்ற விவரங்கள் இன்னும் தெரியவில்லை.

ரியா கபூரை இவர் காதலித்து வந்ததாக வதந்திகள் உள்ளன.

இந்நிலையில் இவர் தன் பந்த்ரா இல்லத்தில் தூக்கில் தொங்கியதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

திறமை வாய்ந்த இந்த நடிகரின் மறைவுக்கு பலதரப்புகளிலிருந்தும் இரங்கல்கள் குவிந்து வருகின்றன.

 

https://www.hindutamil.in/news/cinema/bollywood/559372-bollywood-actor-sushant-singh-rajput-commits-suicide-1.html

 

தற்கொலை செய்துகொண்ட ரீல் தோனி.... அதிர்ச்சியில் பாலிவுட்

 

தோனியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் ஹீரோவாக நடித்திருந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தற்கொலை செய்துகொண்ட ரீல் தோனி.... அதிர்ச்சியில் பாலிவுட்
சுஷாந்த் சிங் ராஜ்புட்
 
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் வாழ்க்கை வரலாற்று படமான "M.S. Dhoni: The Untold Story" படத்தில்  நடித்திருந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் தற்கொலை செய்துகொண்டுள்ளார். அவருக்கு வயது 34. மும்பை பாந்த்ரா பகுதியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் சுஷாந்த் சிங் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 
 
சுஷாந்த் சிங்கின் இந்த திடீர் மரணம் பாலிவுட் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தற்கொலைக்கான காரணம் இதுவரை தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் அப்பகுதியில் விசாரணை மேற்கொண்டுள்ளனர். கடந்த இரு தினங்களுக்கு முன்பு இவருடைய மேலாளர் தற்கொலை செய்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தோனி 'பயோபிக்' நாயகன்: சுஷாந்த் சிங் தற்கொலை!

spacer.png

மும்பையில் உள்ள தனது வீட்டில் பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் தற்கொலை செய்து கொண்டார்.

மும்பையில் உள்ள அவரது வீட்டில் சுஷாந்த் சிங் ராஜ்புட் இன்று காலை தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு வயது 34. பாலிவுட்டில் முன்னணி நடிகராக வளர்ந்து வந்துகொண்டிருந்த இவரது மரணம் எல்லோரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

 

சுஷாந்த் சிங் ராஜ்புட் சின்னத் திரையின் மூலம் அறிமுகமாகி சினிமாவில் வெற்றிக்கொடி நாட்டியவர். பவித்ரா ரிஷ்டா என்ற சீரியலின் மூலம் புகழ்பெற்ற இவர் சினிமாவில் நுழைந்தார். சேத்தன் பகத்தின் அதிகம் விற்பனையான புத்தகமாக கருதப்படும் 'தி த்ரீ மிஸ்டேக்ஸ் ஆஃப் மை லைஃப்' என்ற நாவலை அடிப்படையாகக் கொண்ட அபிஷேக் கபூரின் 'கை போ சே' படத்தின் மூலம் சுஷாந்த் சிங் அறிமுகமாகி ஒரே இரவில் புகழ் வெளிச்சத்துக்கு வந்தவர்.

2013 ஆம் ஆண்டு வெளியான 'கை போ சே'வுக்குப் பிறகு, சுஷாந்த் பரினிதி சோப்ராவுடன் 'ஷுத் தேசி ரொமான்ஸ்' படத்தில் பணியாற்றினார். பின்னர் பல படங்களில் நடித்த இவர், அமீர் கானுடன் 'பிகே', 'கேதார்நாத்' போன்ற மிகப்பெரிய வெற்றிப்படங்களை வழங்கினார். இன்றுவரை அவரது மிகப்பெரிய வெற்றியாக கருதப்படுவது 'எம்.எஸ். தோனி: தி அன்டோல்ட் ஸ்டோரி' ஆகும். திரையில் தோனியை கண்முன் கொண்டு வந்த இவர் இந்தியா முழுவதும் இப்படத்தின் மூலம் அறியப்பட்டார். அவர் கடைசியாக 'சிச்சோரி' என்ற படத்தில் ஷ்ரத்தா கபூருக்கு ஜோடியாக நடித்தார். இப்படமும் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், இன்று காலை சுஷாந்த் சிங் ராஜ்புட் தனது பாந்த்ரா வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார். அவரது தற்கொலைக்கான காரணம் எதுவும் தற்போதைய நிலையில் தெரியவில்லை.

கடந்த ஜூன் 3ஆம் தேதி, சுஷாந்த் இன்ஸ்டாகிராமில் தனது அம்மாவுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு சோகமான கீழ்கண்ட கவிதை வரிகளை எழுதியிருந்தார்: "கண்ணீர் துளிகளிலிருந்து மங்கலான கடந்த காலம் மறைவுறுகிறது/ முடிவில்லாத கனவுகள் புன்னகையின் வளைவைச் செதுக்குகின்றன/ அதிவேகமான ஒரு வாழ்க்கை/இருவருக்கும் இடையிலான உரையாடல்" என பதிவிட்டுள்ளார்.

spacer.png

ஆனால், இந்த பதிவுக்கு பின் அவர் மனதுக்குள் உள்ள அழுத்தமும், அவர் எடுக்கவிருந்த இந்த விபரீத முடிவும் யாரும் எதிர்பாராதது. முன்னணி பாலிவுட் நடிகர்கள், கலைஞர்கள் அவரது அதிர்ச்சிகரமான மரணத்திற்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்த கொரோனா காலகட்டத்தில் இர்ஃபான் கான், ரிஷி கபூர் ஆகியோரை தொடர்ந்து தற்போது சுஷாந்தின் மறைவு பாலிவுட்டை மீளாத்துயரில் ஆழ்த்தியுள்ளது.

 

https://minnambalam.com/entertainment/2020/06/14/45/sushant-singh-rajput-commits-suicide

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

`கடும் மனஅழுத்தம்; கைகொடுக்காத சிகிச்சை?!’ - 34 வயதில் விபரீத முடிவெடுத்த நடிகர் சுஷாந்த் சிங்

சுஷாந்த் சிங் ராஜ்புத்

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த்சிங் ராஜ்புத், மும்பையில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்டார். அவருக்கு வயது 34.

பாலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகரான சுஷாந்த், தோனியின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி எடுக்கப்பட்ட `எம்.எஸ்.தோனி: அண்டோல்டு ஸ்டோரி’ படம் மூலம் கவனம் பெற்றார். பாலிவுட் நடிகர்களில் டி.வியிலிருந்து பெரிய திரையில் சாதித்த மிகச்சிலரில் முக்கியமானவர் சுஷாந்த். 2012ல் வெளியான `Kai Po Che’ படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமான சுஷாந்த், அடுத்தடுத்த படங்கள் மூலம் கவனம் ஈர்த்தார். பிகே மற்றும் கேதர்நாத் உள்ளிட்ட படங்கள் அவரது கரியரில் முக்கியமான படங்கள். தோனியின் வாழ்க்கை வரலாற்றுப் படம் இவரது கரியரில் மிகப்பெரிய ஹிட் கொடுத்தது.

தோனியுடன் சுஷாந்த்
தோனியுடன் சுஷாந்த்
2019ல் ஷ்ரத்தா கபூரூடன் இணைந்து சுஷாந்த் நடித்திருந்த 'Chhichhore'படம் வணிகரீதியில் மட்டுமல்லாது விமர்சனரீதியிலும் இவருக்கு நல்ல பெயரைப் பெற்றுக்கொடுத்தது. முகேஷ் சாப்ரா இயக்கத்தில் சஞ்சனாவுடன் இவர் நடித்துள்ள 'Dil Bechara'படம் போஸ்ட் புரடக்‌ஷன் பணிகள் முடிந்து ரிலீஸுக்குத் தயாராக இருக்கிறது. தி ஃபால்ட் இன் அவர் ஸ்டார்ஸ் ஹாலிவுட் படத்தின் அதிகாரபூர்வ ரீமேக்காக அந்தப் படம் தயாராகியிருக்கிறது. கொரோனா வைரஸ் பிரச்னையால், அந்தப் படம் நேரடியாக ஓடிடி-யில் ரிலீஸாக இருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.


பாலிவுட்டில் தனக்கெனத் தனி இடத்தைப் பிடித்திருந்த சுஷாந்த், தனிப்பட்ட வாழ்க்கையில் பல்வேறு பிரச்னைகளைச் சந்தித்து வந்ததாகத் தெரிகிறது. இதனால், கடுமையான மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட அவர், அதற்காக மருத்துவரிடம் தொடந்து சிகிச்சை எடுத்து வந்திருக்கிறார். கொரோனா ஊரடங்கால் உலக அளவில் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டிருக்கும் நிலையில், பாலிவுட் திரையுலகமும் ஆட்டம் கண்டிருக்கிறது. நடிகர், நடிகைகள் முதல் தொழில்நுட்பக் கலைஞர்கள் வரையில் வீடுகளுக்குள் முடங்கியிருக்கிறார்கள். இந்தநிலையில், மும்பையின் பாந்த்ராவில் உள்ள சுஷாந்த்தின் வீட்டில், தூக்கில் தொங்கிய நிலையில், அவரை போலீஸார் சடலமாக மீட்டிருக்கிறார்கள். இதுதொடர்பாக மும்பை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

சுஷாந்த் 
சுஷாந்த்
தே.அசோக்குமார்
Vikatan
Also Read
”ஒரு நாளைக்கு 200 ஹெலிகாப்டர் ஷாட்ஸ்..!'' - ரீல் ’தோனி’ சுஷாந்த் சிங் ராஜ்புத் பேட்டி #Exclusive
சமீப நாள்களில் ரிஷி கபூர் மற்றும் இர்பான் கான் என இரு பெரிய நட்சத்திரங்களை இழந்த பாலிவுட், 34 வயதே ஆன இளம் நடிகர் சுஷாந்தின் தற்கொலை முடிவால் கலங்கியிருக்கிறது. அவரது மறைவுக்கு பாலிவுட் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். உடல் ஆரோக்கியத்தைப் போல் மன ஆரோக்கியத்தையும் பேணுங்கள் எனவும் நெட்டிசன்கள் தொடங்கி பிரபலங்கள் வரை பலரும் சமூக வலைதளங்களில் வலியுறுத்தி வருகிறார்கள்.

 

https://cinema.vikatan.com/bollywood/bollywood-actor-sushant-singh-rajput-commits-suicide

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட்டின் நிறைவேறாத ஆசைகள்

 
நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட்டின் நிறைவேறாத ஆசைகள்
 

நடிகர் சுஷாந்த் சிங்கிற்கும் வாழ்வில் 50 ஆசைகள் இருந்துள்ளது. ஆனால் அவை முழுமையாக நிறைவேறுவதற்குள் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
பதிவு: ஜூன் 15,  2020 08:53 AM
மும்பை

தோனியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நாயகனாக நடித்த சுஷாந்த் சிங் ராஜ்புட் மும்பையில் உள்ள அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவருக்கு வயது 34. அவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திரை உலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


இதுகுறித்து தெரிவித்த காவல்துறையினர், ‘ஆறு மாத காலமாக சுஷாந்த் சிங் மன அழுத்தத்துக்கான சிகிச்சையில் இருந்துவந்துள்ளார். அவருடைய உடல் பிரதே பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. முதற்கட்ட ஆய்வுகள் தற்கொலை என்பதை உறுதிப்படுத்துகிறது.

இதுவரையில், தற்கொலை கடிதம் எதுவும் கிடைக்கவில்லை. நாங்கள், அவரது உறவினர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களிடம் விசாரணை நடத்திவருகிறோம்’ என்று தெரிவித்துள்ளனர். சுஷாந்த் சிங் தற்கொலை செய்துகொண்ட நேரத்தில், சமையற்காரர்கள் இருவரும், வீட்டு வேலை செய்யும் நபர் ஒருவரும், அவருடைய நண்பர் ஒருவர் வீட்டில் இருந்துள்ளனர்

அவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திரை உலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

முன்னதாக, சுஷாந்த் சிங் ராஜ்புட்டிடம் முன்னாள் மேலாளராக இருந்தவர் திஷா சலியன். அவருக்கு வயது 25. கர்நாடகாவின் உடுப்பி பகுதியைச் சேர்ந்த அவர், மும்பையில் வசித்துவந்தார். திஷாவுக்கு ரோஹன் ராய் என்பவருடன் நிச்சயதார்த்தம் முடிந்திருந்தநிலையில் அவருடன் தான் வசித்து வந்தார். அவர், ஜூன் 8-ம் தேதி 14-வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார்.

இந்தச் சம்பவம் பாலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. திஷா தற்கொலை விவகாரம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்துவருகின்றனர். இந்தநிலையில், சுஷாந்த் சிங் ராஜ்புட்டும் தற்கொலை செய்துகொண்டது பாலிவுட் வட்டாரத்தில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பவித்ரா ரிஸ்தா என்ற சின்னத்திரை தொடர் மூலம் பிரபலமானவர் சுஷாந்த் சிங் ராஜ்புட், 2013ம் ஆண்டு வெளிவந்த கை போ ஜி படத்தின் மூலம் பாலிவுட்டில் காலடி எடுத்து வைத்தார். 2016ம் ஆண்டில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனியின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட  திரைப்படத்தில் அவரது நடிப்பு அனைவரையும் அசரவைத்தது. 

தோனியின் ஸ்டைஸ், சிரிப்பு, கிரிக்கெட் ஆட்ட முறை என்று அவரின் அனைத்தையும்  கண் முன்னே கொண்டுவந்திருப்பார். அப்படத்தில், வாழ்வில் இளைஞர்கள், தங்களது ஆசையையும் லட்சியத்தையும் அடைய கடுமையாக போராட வேண்டும் என இளைஞர்களுக்கு உணர்த்திய நடிகர் சுஷாந்த் சிங்கிற்கும் வாழ்வில் 50 ஆசைகள் இருந்துள்ளது. ஆனால் அவை முழுமையாக நிறைவேறுவதற்குள் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தற்கொலை செய்துகொண்ட நடிகர் சுஷாந்த் கடந்த 2019ம் ஆண்டு தனது வாழ்வின் 50 கனவுகளை டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்து அதனை நிறைவேற்றி கொள்ளப்போவதாக தெரிவித்திருந்தார். அதில், விமானத்தை இயக்க வேண்டும், சிறு குழந்தைகள் விண்வெளி குறித்து அறிந்துகொள்ள உதவ வேண்டும், கைலாய மலையில் தியானம் செய்ய வேண்டும், வெடிக்கும் எரிமலை அருகே படம்பிடிக்க வேண்டும், 1000 மரங்கள் நட வேண்டும், பண்ணை தொழில் செய்ய கற்க வேண்டும், லம்போர்கினி கார் வாங்க வேண்டும், விவேகானந்தர் குறித்து ஆவணப்படம் எடுக்க வேண்டும்,  இலவச புத்தகங்கள் கிடைக்க சேவை செய்ய வேண்டும், உள்ளிட்ட 50 கனவுகளை நடிகர் சுஷாந்த் வெளியிட்டு இருந்தார். 

தான் குறிப்பிட்ட 50ல் 12 கனவுகள் நிறைவேற்றிய நடிகர் சுஷாந்த் அது குறித்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு மகிழ்ந்துள்ளார். ஆனால் அதன் பின்னர் டுவிட்டரில் பதிவுகள் ஏதும் செய்யவில்லை. கடைசியாக 2019 டிசம்பர் 27ம் தேதியன்று புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். இந்நிலையில் அவரின் மீதி கனவுகளை நிறைவேற்றினாரா என்பதும், அவர் ஏன் தற்கொலை செய்துகொண்டார் என்பது ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

 

https://www.dailythanthi.com/News/TopNews/2020/06/15085338/Sushant-Singh-Rajputs-Bucket-List-Of-50-Dreams-Documented.vpf

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நடிகர் சுஷாந்த் சிங் கொலை செய்யப்பட்டு உள்ளார் ;விசாரணை வேண்டும் -உறவினர்கள் கோரிக்கை

நடிகர் சுஷாந்த் சிங் கொலை செய்யப்பட்டு உள்ளார் ;விசாரணை வேண்டும் -உறவினர்கள் கோரிக்கை

 

நடிகர் சுஷாந்த் சிங் கொலை செய்யப்பட்டு உள்ளார் விசாரணை நடத்த வேண்டும் என அவரது உறவினர்கள் கூறி உள்ளனர்.
பதிவு: ஜூன் 15,  2020 16:36 PM
மும்பை

தோனியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நாயகனாக நடித்த சுஷாந்த் சிங் ராஜ்புட் மும்பையில் உள்ள அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவருக்கு வயது 34. அவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திரை உலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


இதுகுறித்து தெரிவித்த காவல்துறையினர், ‘ஆறு மாத காலமாக சுஷாந்த் சிங் மன அழுத்தத்துக்கான சிகிச்சையில் இருந்துவந்துள்ளார். அவருடைய உடல் பிரதே பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. முதற்கட்ட ஆய்வுகள் தற்கொலை என்பதை உறுதிப்படுத்துகிறது.

இதுவரையில், தற்கொலை கடிதம் எதுவும் கிடைக்கவில்லை. நாங்கள், அவரது உறவினர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களிடம் விசாரணை நடத்திவருகிறோம்’ என்று தெரிவித்துள்ளனர். சுஷாந்த் சிங் தற்கொலை செய்துகொண்ட நேரத்தில், சமையற்காரர்கள் இருவரும், வீட்டு வேலை செய்யும் நபர் ஒருவரும், அவருடைய நண்பர் ஒருவர் வீட்டில் இருந்துள்ளனர்

அவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திரை உலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

அவரது உடல் நேற்று பிரேத பரிசோதனைக்காக டாக்டர் ஆர்.என். கூப்பர் நகராட்சி பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. பிரேத பரிசோதனை இப்போது நிறைவடைந்துள்ளதாகவும், பிரேத பரிசோதனை அறிக்கையில் இது தற்கொலை வழக்கு என்று கண்டறியப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுஷாந்தின் உறுப்புகளில் உள்ள நச்சுப் பொருளை கண்அறிய பகுப்பாய்வுக்காக ஜே.ஜே மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அறிக்கைகள் மேலும் தெரிவிக்கின்றன. சுஷாந்த்தின் இறுதி சடங்குகள் ஞாயிற்றுக்கிழமை இரவு பாட்னாவிலிருந்து மும்பைக்கு வந்து அவரது தந்தை மற்றும் குடும்ப உறுப்பினர்களால் செய்யப்படும்.

இந்த நிலையில் சுஷாந்த் மரணம் குறித்து பேசியுள்ள அவர் தாய் மாமா, அவர் தற்கொலை செய்து கொண்டார் என்று நாங்கள் நினைக்கவில்லை, அவரது மரணத்தின் பின்னணியில் ஒரு சதி இருப்பதாக தெரிகிறது. அவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்த வேண்டும் என கூறி உள்ளார்.

குறிப்பாக அவரது மாமனார் மற்றும் குடும்பத்துடன் நெருக்கமான பலர் அவரது மரணத்தில் ஒரு 'சதி' இருப்பதாக  குற்றம் சாட்டி உள்ளனர்.

https://www.dailythanthi.com/News/TopNews/2020/06/15163617/Sushant-Singh-Rajput-Autopsy-reports-confirm-suicide.vpf

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை: சோகத்தில் உயிரிழந்த சகோதரர் மனைவி

இந்தி திரைப்பட நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்துகொண்ட செய்தி திரையுலகில் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், அவரது மரணத்தைத் தாங்கிக்கொள்ள இயலாமல் அவரது அண்ணி ஒருவர் இறந்துள்ளார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் ஒன்று விட்ட சகோதரரின் மனைவி சுதா தேவி என்பவர், திங்களன்று சுஷாந்தின் இறுதிச்சடங்குகள் மும்பையில் நடைபெற்றுக்கொண்டிருந்த அதே சமயத்தில், அவரது சொந்த ஊரான பிகார் மாநிலம் பூர்ணியாவில் உயிரிழந்துள்ளார் என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.

சுஷாந்த் ஞாயிறன்று தற்கொலை செய்துகொண்ட தகவல் தெரிந்தபின் உணவு உட்கொள்வதை அவர் நிறுத்திக்கொண்டார் என்று அந்தச் செய்தி தெரிவிக்கிறது.

திரையுலகில் முதலில் நடனக் கலைஞராக தன் பயணத்தை தொடங்கினார் சுஷாந்த் சிங் ராஜ்புத். பின்னர் அவருக்கு 'கிஸ் தேஷ் மே ஹை மேரா தில்' என்ற தொலைக்காட்சி தொடரில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. பின்னர் 'பவித்ர ரிஷ்தா' என்னும் தொடரின் மூலம் அவர் பிரபலமடைந்தார்.

2006ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியின் தொடக்க விழாவில் ஐஸ்வர்யா ராய் பங்கேற்ற நடன நிகழ்ச்சி ஒன்றில் பின்னணி நடன கலைஞராக இருந்தார்.

'காய் போ சே' என்னும் படத்தின் மூலம் அறிமுகமான இவர் ஆமிர் கான் படமான பிகேவில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தின் மூலம் பரந்துபட்ட ரசிகர்களுக்கு இவர் அறிமுகமானார். சமீபத்தில் 'சிசோரே' என்னும் பாலிவுட் படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார் சுஷாந்த்.

அவரது இறப்புக்கான காரணம் இதுவரை தெரியவில்லை.

https://www.bbc.com/tamil/india-53059747

Link to comment
Share on other sites

நடிகர் தற்கொலைக்கு காரணம் இதுதான் – நடிகை குற்றச்சாட்டு!

By  

பாலிவுட் நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புட் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திரையுலகினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சுஷாந்த் சிங் மன அழுத்தத்தால் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. 34 வயதாகும் சுஷாந்தின் திடீர் மறைவுக்கு பிரபலங்கள் பலரும் டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் வாயிலாக இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் இன்ஸ்டாகிராமில் இதுகுறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அவர் பேசியுள்ளதாவது: ‘பாலிவுட் திரையுலகம் சுஷாந்தை முறையாக நடத்தவில்லை. அவருக்கு போதிய திறமை, நல்ல நடிப்பு, பாக்ஸ் ஆபிஸ் வெற்றிகள் கொடுத்த போதிலும், திரையுலகம் அவருக்கு முறையான அங்கீகாரத்தை கொடுக்கவில்லை.

அவரது முதல் திரைப்படமான கை போ சேவில் அவரது நடிப்பு ஏன் பெரிய அளவில் பேசப்படவில்லை? அவர் இறுதியாக நடித்த சிச்சோரே போன்ற ஒரு அற்புதமான படம் புறக்கணிக்கப்பட்டு, கல்லி பாய் போன்ற மோசமான படத்திற்கு அனைத்து விருதுகளும் வழங்கப்பட்டது ஏன்?

அதே போல் என்னுடைய படைப்புகளையும் ஆதரிக்க மறுப்பது ஏன்? சமூக வலைதளங்களில் சுஷாந்த் பற்றி தொடர்ந்து தவறான கருத்துக்களை முன்வைக்கப்பட்டு வந்தன. திறமை இல்லை என தன்னைப்பற்றி மற்றவர்கள் சொன்னதை சுஷாந்த் நம்பியது மட்டுமே அவர் செய்த மிகப்பெரிய தவறு’ என கூறியுள்ளார்.

http://kisukisu.lk/?p=37747

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுஷாந்தின் மரணமும்; பேசு பொருளான மும்பை சினிமாவின் இருண்ட பக்கங்களும்!

04655b34-af07-11ea-85aa-ecafd11ab70d.jpg?189db0&189db0

 

எம்.எஸ்.டோனி படத்தில் நடித்த பிரபல நடிகர் சுஷாந்த் சிங் சில நாட்களுக்கு முன்னர் தற்கொலை செய்து கொண்டமையானது சினிமா உலகில் பெரும் கேள்வியை எழுப்பியுள்ளதுடன், இவரின் தற்கொலைக்கு மும்பை சினிமாவின் இருண்ட பக்கங்கள் சிலவும் காரணமாக இருக்கலாம் என பல்வேறு பாலிவுட் பிரபலங்கள் தெரிவித்து வருகின்றனர்.

சுஷாந்த் சிங்கும் ஒரு எளிய பின்னணியிலிருந்து நடிக்க வந்தவர் தான்.கல்லூரியில் படிக்கும் போதே நடனம் கற்றுக்கொண்டு அதன் மூலம் பல விழாக்களில் நடனம் ஆட ஆரம்பித்து, பின்னர் நாடகம், தொலைக்காட்சி தொடர்களில் நடிக்கத் தொடங்கி சினிமாவுக்கு வந்தவர்.மிகுந்த திறமைசாலி.டோனியாக அவர் நடித்ததை யாரும் மறந்திருக்க முடியாது.அவரது `கை போ சே’, `டிடெக்டிவ் ப்யோம்கேஷ் பக்ஷி’, `சிச்சோரோ’ படங்கள் பெரும் வெற்றி பெற்றவை.அமிர் கான் நடித்த `பீகே’ படத்திலும் நடித்திருக்கிறார். இப்படிப் பட்டவர், கஷ்டப்பட்டு நடித்து ஒரு நட்சத்திரமாக மாறியவர், தன்னை பாலிவுட்டில் யாரும் எந்த கொண்டாட்டங்களுக்கும் அழைப்பதில்லை என்று கூட சொல்லியிருக்கிறார்.டுவிட்டர் சமூக வலைத்தளத்தில் ஒரு ரசிகையிடம், “உங்களையெல்லாம் தான் எனது குடும்பமாக நினைக்கிறேன்; நீங்களே என் படங்களைப் பார்க்காவிட்டால் நான் பாலிவுட்டில் எப்படிக் காலம் தள்ளுவது” என்றும் நகைச்சுவையாகக் குறிப்பிட்டிருக்கிறார்.

karan Johar, Akshay kumar, Rohit Shetty, Ranveer singh, Ajay Devghan karan Johar, Akshay kumar, Rohit Shetty, Ranveer singh, Ajay Devghan

மும்பையின் பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளரான கரண் ஜோஹரின் காஃபி வித் கரண் நிகழ்ச்சியில், ஒருமுறை பிரபல இயக்குநர் மகேஷ் பட்டின் மகளான அலியா பட் கரணிடம் பேசியபோது, சுஷாந்த் சிங் யாரென்றே தெரியாதவர்போல, `சுஷாந்த்தா? யாரது?’ என்று கேட்டதும் நடந்திருக்கிறது.அதே அலியா இப்போது சுஷாந்த்தின் இறப்புக்கு அஞ்சலி செலுத்துவதாகப் போட்ட டுடிட்டில் இதைச் சொல்லியே, அவரை ரசிகர்கள் ஏசிக் கொண்டிருக்கிறார்கள்.இதைச் சொல்வதற்குக் காரணம், பாலிவுட்டில் வாரிசு நடிகர்கள் வாய்ப்புகளுக்காகப் பெரிதாக எந்த சிரமமும் பட்டதில்லை.அவர்களுக்கு எப்போதுமே பிறர் என்றால் இளக்காரம் தான்.

எம்.எஸ்.டோனி படத்தின் போது ஒரு பேட்டியில், பிறரைக் கண்டு கொள்வது போல பாலிவுட் இன்னும் தன்னைக் கண்டு கொள்ளவில்லை என்று சொல்லி இருக்கிறார் சுஷாந்த்.2015 இலேயே, “இதற்கெல்லாம் நெப்போட்டிஸம், அதாவது வாரிசு அரசியல்தான் காரணம் என்று நினைக்கிறேன்; அப்படி இல்லை என்று சொல்பவர்கள் ஒன்று மிகப் பெரிய ஆசாமிகளாக இருக்க வேண்டும், அல்லது ஒன்றுமே தெரியாதவர்களாக இருக்கவேண்டும்” என்றும் பேசியிருக்கிறார் சுஷாந்த்.

Sushanth, Jaquline Fernandez Sushanth, Jaquline Fernandez

வாரிசுகள் ஒன்று சேர்ந்து, தங்களுக்குப் பிடித்த வாரிசுகளையோ நட்சத்திரங்களையோ மட்டுமே வைத்துப் படமெடுக்கும் நெப்போடிஸம் எனப்படும் வாரிசு அரசியல் பற்றி, உணர்ச்சி வசப்பட்ட நிலையில் 2017 இல் சுஷாந்த் பேசும் பேட்டி ஒன்று உண்டு.அதில், “நெப்போடிஸம் இருந்து விட்டுப் போகிறது.ஆனால் இந்த அரசியலால், பிற்காலத்தில் திறமைசாலிகள் உள்ளேயே வரமுடியாமல் போய்விடும் ஆபத்து உண்டு.அதுதான் இதன் மிகப்பெரிய பிரச்சினை’’ என்று சொல்லியிருப்பார். இதுதான் சுஷாந்த்தின் இறப்புக்குக் காரணம் என்று சொல்லவில்லை.இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.தன்னுடைய திறமைக்கான, கடின உழைப்புக்கான, அர்ப்பணிப்புக்கான அங்கீகாரம் கிடைக்காதபோது ஏற்படும் வலி என்ன என்பது நம் ஒவ்வொருவருக்குமே புரியும். அந்த வலிக்கு ஒரே ஆறுதல் அங்கீகாரம் மட்டுமே.

sushant_singh_rajput_rajinikanth_ms_dhon

சுஷாந்த் மட்டும் இல்லாமல், ராஜ்குமார் ராவ், தாப்ஸி, கங்கனா ரனாவத் ஆகியோரும் இந்த வாரிசு அரசியல் பற்றிப் பலமுறைகள் பேசியிருக்கின்றனர்.”நெப்போட்டிஸத்தின் மொத்த அடையாளம் நீங்கள்தான்” என்று கரன் ஜோஹரின் முகத்துக்கு நேராகவே கங்கனா, `காபி வித் கரண்’ நிகழ்ச்சியில் பேசியிருக்கிறார்.இப்போதும் கங்கனா நெப்போட்டிஸம் பற்றிப் பேசியிருக்கிறார்.

சுஷாந்தின் மரணம் மூலமாக ஒரு மிகப்பெரிய விவாதம் மறுபடியும் கிளம்பியிருக்கிறது.அதற்கான பதில் கிடைக்குமோ கிடைக்காதோ தெரியாது.ஆனால், பாலிவுட் மறுபடியும் தனது வாரிசுகளை வைத்துப் படங்கள் எடுக்க ஆரம்பிக்கும்.திறமையை விட, நட்சத்திரங்களுக்குள்ளான நட்பும் உறவுகளுமே மதிக்கப்படும்.இன்னும் பல பல வாரிசுகள் கிளம்பி வருவார்கள்.அவர்களுக்கு மத்தியில், சொந்த முயற்சியால் முன்னுக்கு வந்த சுஷாந்த் போன்ற திறமையாளர்கள், யாரிடம் பேசுவது என்றே தெரியாமல் தனித்து விடப்படுவார்கள் என்றே தோன்றுகிறது. இது மிகவும் கடினமானது என்று சில மும்பை பிரபலங்கள் தெரிவித்து வருகின்றனர்

 

https://newuthayan.com/நடிகர்-சுஷாந்தின்-த/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் அஸ்தி கங்கையில் கரைப்பு
sushant-singh-rajput-s-ashes-immersed-in-ganga

sushant-singh-rajput-s-ashes-immersed-in-ganga


மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் அஸ்தி, அவரது சொந்த ஊரான பாட்னாவில், புனித கங்கை நதியில் கரைக்கப்பட்டது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று சுஷாந்த் மும்பையில் தனது இல்லத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். மும்பையில் அவர் உடல் தகனம் செய்யப்பட்டு, அவரது சொந்த ஊரான பிஹார் மாநிலத்தின் பாட்னாவுக்கு அஸ்தி கொண்டுவரப்பட்டது.

சுஷாந்தின் தந்தை, இரண்டு சகோதரிகள் ஆகியோர் வேத பண்டிதர்கள் முன்னிலையில் பாட்னாவில், திகாகாட் என்ற இடத்தின் வழியாக ஓடும் கங்கை நதியில் சுஷாந்தின் அஸ்தியை, படகில் சென்று கரைத்தனர். இதே இடத்தில்தான் அவரது அம்மாவின் அஸ்தியும் கரைக்கப்பட்டது என்றும் அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.

34 வயதான இளம் நடிகர் சுஷாந்தின் மரணம் தேசிய அளவில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரசிகர்களும், அரசியல் தலைவர்கள் சிலரும், சுஷாந்தின் மரணம் குறித்து சிபிஐ விசாரணை செய்யப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் சுஷாந்த் நடித்திருக்கும் கடைசி படமான 'தில் பெச்சாரா', ஓடிடி தளங்களில் வெளியாகக் கூடாது, திரையரங்கில்தான் வெளியாக வேண்டும் என்றும் பலர் கோரி வருகின்றனர்.

https://www.hindutamil.in/news/cinema/bollywood/560054-sushant-singh-rajput-s-ashes-immersed-in-ganga.html

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுஷாந்துக்கு நீதி வேண்டும்; கரண் ஜோஹர் படங்களைப் புறக்கணிப்போம்: ஹேஷ்டேக் ட்ரெண்டில் நெட்டிசன்கள் சினம்

justiceforsushant-trends-as-netizens-call-for-karan-johar-boycott

 

#JusticeForSushant (சுஷாந்துக்கு நீதி) என்கிற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. பாலிவுட்டின் வாரிசு அரசியலால் பாதிக்கப்பட்டுதான் சுஷாந்த் தற்கொலை செய்துகொண்டார் என்று குற்றம் சாட்டி இந்தத் தலைப்பின் கீழ் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.

அதே நேரத்தில் கரண் ஜோஹரின் திரைப்படங்களைப் புறக்கணிக்க வேண்டும் என்றும் இந்த ஹேஷ்டேகில் பலர் பகிர்ந்து வருகின்றனர். கரண் ஜோஹர் பெரிய நடிகர்களின் வாரிசுகளை மட்டுமே வைத்துப் படம் எடுத்து அவர்களை விளம்பரப்படுத்துவதையே பிரதானமாக வைத்திருப்பதாக பலரும் குற்றம் சாட்டியுள்ளனர்.


"கரண் ஜோஹர் மற்றும் கான்களின், அவர்கள் ஆதரவாளர்களின் படங்களைப் பார்ப்பதை நிறுத்திவிட்டேன். அது எவ்வளவு பெரிய பொழுதுபோக்குப் படமாக இருந்தாலும் சரி. அதைப் புறக்கணித்து இங்கு யார் தலைவன் என்பதைக் காட்டுங்கள். சுஷாந்தின் வெள்ளந்திப் புன்னகைக்கு நாம் செய்யக்கூடிய நியாயம் இதுவே" என ஒரு பயனர் பகிர்ந்திருந்தார்.

"ஒரு கொலைகாரனை, தேசத் துரோகியை, படிப்பறிவில்லாத ஒருவனை சூப்பர் ஸ்டார் ஆக்குவீர்கள். ஆனால், நன்கு படித்த, இயற்பியல் போட்டியில் வெற்றி பெற்ற ஒருவரை ஆக்கமாட்டீர்கள்" என்று இன்னொரு பயனர் கூறியிருந்தார்.

இதே ரீதியில் பலரும் ட்வீட் செய்து வர, சுஷாந்த் ரசிகர்கள் சிலர், அவரது கடைசிப் படமான 'தில் பெச்சாரா'வை திரையரங்கில் மட்டுமே வெளியிட வேண்டும், ஓடிடி வெளியீட்டுத் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். பலரும் #JusticeForSushant இந்த ஹேஷ்டேகில் கருத்துகளைப் பதிவிடவே, இந்த ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்டானது.

 

https://www.hindutamil.in/news/cinema/bollywood/559905-justiceforsushant-trends-as-netizens-call-for-karan-johar-boycott-1.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த வாரிசு கலாச்சாரம்  சினிமாவையும் விட்டு வைக்கவில்லை ...இன்னும் கொஞ்ச நாளில் தமிழ் திரையுலகத்திற்கு இது தான் நடக்கும் 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

9 hours ago, ரதி said:

இந்த வாரிசு கலாச்சாரம்  சினிமாவையும் விட்டு வைக்கவில்லை ...இன்னும் கொஞ்ச நாளில் தமிழ் திரையுலகத்திற்கு இது தான் நடக்கும் 
 

நினைக்கவில்லை தமிழன் வாந்தாரை வாழவைப்பான், அதுவும் வேற்றுமாநில பெண்கள் என்றால் தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவான், பின் அவர்களே தமிழனுக்கும் பாடமெடுப்பார்கள்,

இதுதான் தமிழ்நாட்டு சினிமா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, உடையார் said:

 

நினைக்கவில்லை தமிழன் வாந்தாரை வாழவைப்பான், அதுவும் வேற்றுமாநில பெண்கள் என்றால் தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவான், பின் அவர்களே தமிழனுக்கும் பாடமெடுப்பார்கள்,

இதுதான் தமிழ்நாட்டு சினிமா

நடிகைகளுக்கு பிரச்சனை இருக்காது ...ஆனால் புதிதாய் நடிக்க வரும் சினிமாத் துறை சாராத ஆண்களுக்கு பிரச்சனை இருக்கும் ...விஜயின் மகனும் நடிக்க போறாராம் 😁

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 21/6/2020 at 01:37, ரதி said:

நடிகைகளுக்கு பிரச்சனை இருக்காது ...ஆனால் புதிதாய் நடிக்க வரும் சினிமாத் துறை சாராத ஆண்களுக்கு பிரச்சனை இருக்கும் ...விஜயின் மகனும் நடிக்க போறாராம் 😁

 

ஆமா இருக்கும் 😀

Image

 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

நடிகை ரியா மீதான அமலாக்கத்துறை பிடி இறுகுகிறது-மீண்டும் நாளை ஆஜராக உத்தரவு

நடிகை ரியா மீதான அமலாக்கத்துறை பிடி இறுகுகிறது-மீண்டும் நாளை ஆஜராக உத்தரவு

 

பிரபல 34 வயது இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் 14-ந் தேதி மும்பை பாந்திராவில் உள்ள வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக மும்பை போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், பீகாரில் வசித்து வரும் சுஷாந்தின் தந்தை கொடுத்தபுகாரின் பேரில் பாட்னா போலீசார் சுஷாந்தின் காதலியும், நடிகையுமான ரியா சக்ரபோர்த்தி (வயது 28) மற்றும் அவரது குடும்பத்தினர் மீது தற்கொலைக்கு தூண்டுதல், பணமோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் பீகார் அரசு பரிந்துரையின் பேரில் வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்பட்டது.

8 மணி நேரம் விசாரணை

இந்த நிலையில் சுஷாந்தின் வங்கி கணக்கில் இருந்து ரூ.15 கோடி மாற்றப்பட்டு உள்ளது என்று அவரது தந்தை அளித்த தகவலின் அடிப்படையாக கொண்டு நடிகை ரியா உள்ளிட்டவர்களுக்கு பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. அதன்பேரில் சுஷாந்தின் ஆடிட்டரிடம் சமீபத்தில் அவர்கள் விசாரணை நடத்தினர். இந்த நிலையில் நேற்று முன்தினம் மும்பையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் நடிகை ரியா ஆஜரானார். அவருடன் அவரது தம்பி சோவிக்கும் ஆஜராகி இருந்தார்.

நடிகை ரியாவிடம் 8 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணையில் சுஷாந்தின் வங்கி கணக்கில் இருந்து பணம் மாற்றப்பட்டது குறித்து கேள்வி எழுப்பினர். அப்போது அவரது தம்பி சோவிக்கின் வங்கி கணக்குக்கு சிறிதளவு பணம் மாற்றப்பட்டது உண்மை தான் என்று அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது. மேலும் அவரது வருமானம், முதலீடு, தொழில் போன்றவை குறித்தும் கேள்வி கேட்டனர். நடிகை ரியா ரூ.14 லட்சம் வருமானத்துக்கு வரி கட்டி இருப்பதாக தெரிவித்தார். ஆனால் அவர் வருமானத்தை குறைத்து காட்டி இருப்பதாக அதிகாரிகள் கருதினர்.


மேலும் மும்பை கார் பகுதியில் நடிகை ரியாவுக்கு உள்ள சொத்து, அதை வாங்கியதற்கு எங்கிருந்து பணம் வந்தது என்பதும் குறித்தும் கேள்விகளை கேட்டனர். இந்த நிலையில் ரியாவின் வருமானம் மற்றும் செலவினம், முதலீடு இடையே வித்தியாசம்இருப்பதாலும், மேலும் தகவல்களை திரட்ட வேண்டியது இருப்பதாலும் மீண்டும் நாளை (திங்கட்கிழமை) ஆஜராக ரியாவுக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டனர். அதன்படி அவர் மீண்டும் ஆஜராக உள்ளார்.

இதற்கு மத்தியில் நடிகை ரியா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது பீகார் போலீசார் செய்த வழக்குப்பதிவின் அடிப்படையில் சி.பி.ஐ. போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். வழக்கு தொடர்பான ஆவணங்களை பீகார் போலீசார் சி.பி.ஐ. அதிகாரிடம் ஒப்படைத்தனர்.

இதனால் அமலாக்கத்துறை மற்றும் சி.பி.ஐ. போலீசாரின் பிடி நடிகை ரியா மீது இறுகி இருப்பது வழக்கில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

 

https://www.dailythanthi.com/News/India/2020/08/09054448/Only-property-of-Sushant-I-have-Rhea-Chakraborty-after.vpf

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

நடிகர் சுஷாந்த் சிங் மரணம்- சிபிஐ விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

நடிகர் சுஷாந்த் சிங் மரணம்- சிபிஐ விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் (வயது 34) மும்பையில் உள்ள குடியிருப்பில் கடந்த ஜூன் 14ம் தேதி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆனால் இது தற்கொலை அல்ல, கொலையாக இருக்கலாம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

சுஷாந்த் சிங் மரணம் தொடர்பாக அவரது சொந்த மாநிலமான பீகார் அரசும் விசாரணை நடத்தியது. சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்ட மகாராஷ்டிரா மாநில அரசும் விசாரணை மேற்கொண்டது.

ஒருகட்டத்தில் சுஷாந்த் சிங் மரண வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க பரிந்துரை செய்தது பீகார் அரசு. இதற்கு மகாராஷ்டிரா அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தது.

இதனிடையே சுஷாந்த் சிங்கின் காதலி நடிகை ரியா சக்கரவர்த்தி மீது, சுஷாந்த் சிங்கின் தந்தை பீகார் போலீசில் புகார் செய்தார். மேலும் ரியா சக்கரவர்த்தி மற்றும் அவரது குடும்பத்தினர் 3 பேர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. அமலாக்கப் பிரிவு முன்பும் ரியா விசாரணைக்கு ஆஜராகி இருந்தார்.

இந்நிலையில் தன் மீது பீகார் போலீசார் பதிவு செய்துள்ள வழக்கு மற்றும் சுஷாந்த் சிங் மரணம் தொடர்பான வழக்கை மும்பைக்கு மாற்றக் கோரி உச்சநீதிமன்றத்தில் ரியா மனுத் தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. அப்போது, சுஷாந்த் சிங் மரண வழக்கை சிபிஐ விசாரிக்கலாம் என்று உத்தரவிட்டது. மேலும் வழக்கு விவரங்களை சிபிஐ வசம் ஒப்படைக்கவும் மும்பை போலீசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2020/08/19114739/1801226/Supreme-Court-orders-CBI-investigation-in-Sushant.vpf

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நடிகர் சுஷாந்த் சிங் மரணம் சிபிஐ குழு விசாரணையை தொடங்கியது

நடிகர் சுஷாந்த் சிங் மரணம் சிபிஐ குழு விசாரணையை தொடங்கியது

மும்பை

பீகாரை பூர்விகமாக கொண்ட நடிகர் சுஷாந்த் சிங் கடந்த ஜூன் 14ஆம் தேதி மும்பை பாந்த்ராவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் சடலமாக மீட்கப்பட்டார். முதலில் இந்த வழக்கை மும்பை போலீசார் விசாரித்து வந்தனர். இந்நிலையில் சிபிஐ விசாரணைக்கு பீகார் அரசு பரிந்துரைத்தது. சுப்ரீம் கோர்ட் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது.

இதை தொடர்ந்து 10 பேர் கொண்ட குழு டெல்லியில் இருந்து வியாழக்கிழமை இரவு மும்பைக்கு சென்றனர். இந்த குழுவில் தடயவியல் நிபுணர்களும் இடம்பிடித்திருப்பதாக கூறப்படுகிறது.10 பேர் கொண்ட சிபிஐ அதிகாரிகள் குழு இன்று விசாரணையை தொடங்கியது.  மூன்று குழுக்களாக பிரிந்து சென்ற சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்துகின்றனர்.

சுஷாந்த் சிங் வழக்கில் உள்ள அனைத்து ஆதாரங்களையும் மும்பை காவல்துறை வெள்ளிக்கிழமை சிபிஐ சிறப்பு விசாரணைக் குழுவிடம் ஒப்படைத்தது. சிபிஐ குழு பாந்த்ரா காவல் நிலையத்தில்  இன்று ஆதாரங்களை சேகரித்தது. பதிவு செய்யப்பட்ட 56 அறிக்கைகள், தடயவியல் அறிக்கைகள் மற்றும் ஸ்பாட் பஞ்சனாமா அறிக்கையை மும்பை காவல்துறை இன்று சிபிஐக்கு ஒப்படைத்தது.

அறிக்கைகளுடன், சுஷாந்தின் பிரேத பரிசோதனை அறிக்கை, அவரது மூன்று மொபைல் போன்கள் மற்றும் லேப்டப்  ஆகியவை ஒப்படைக்கபட்டது. சுஷாந்த் சிங் வழக்கில் மும்பை காவல்துறையினர் சேகரித்த மற்ற சான்றுகள், அவரது உடல் தொங்கிய நிலையில் காணப்பட்டபோது அவர் அணிந்திருந்த உடைகள், அவரது படுக்கையில் இருந்த போர்வை மற்றும் பெட்ஷீட், அவர் கடைசியாக வைத்திருந்த குவளை ஆகியவை அடங்கும்  மொபைல் சிடிஆர் பகுப்பாய்வு, பாந்த்ரா போலீசாரின் வழக்கு நாட்குறிப்பு,  ஜூன் 13 முதல் ஜூன் 14 வரை கட்டிடத்தின் சிசிடிவி பதிவு ஆகியவையும் ஒப்படைக்கப்பட்டது.

சுஷாந்த் மரணமடைந்து சடலமாக கிடந்ததை முதலில் பார்த்த வீட்டு சமையல்காரர் நீரஜிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணையை தொடங்கியுள்ளனர். சுஷாந்த் இறந்ததும் அவர் வசித்து வந்த வீட்டில் இருந்த பொருட்களை சுஷாந்தின் உறவினர்கள் பீகாருக்கு எடுத்துச்சென்றதால் தடயங்கள் கிடைக்காத சூழல் நிலவுகிறது.

சட்ட விதிகளை மீறி போலீஸ் எப்படி சுஷாந்தின் உறவினர்களை பொருட்களை எடுத்துச்செல்ல அனுமதித்தனர் என சிபிஐ அதிகாரிகள் போலீசிடம் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும் இந்த வழக்கில் சுஷாந்த் மரணமடைந்த பின்னர் மும்பை போலீசார் எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோ ஆதாரங்களை வைத்து, தத்ரூபமாக சில காட்சிகளை சிபிஐ அதிகாரிகள் நடித்துக்காட்டி அவற்றை பதிவு செய்ய உள்ளனர்.

https://www.dailythanthi.com/News/TopNews/2020/08/21172553/Sushant-Singh-Rajput-death-case-Mumbai-Police-hands.vpf

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுஷாந்த் சிங் தற்கொலை : நடிகை ரியா சக்கரபோர்த்தியிடம் சிபிஐ விசாரணை

சுஷாந்த் சிங் தற்கொலை : நடிகை ரியா சக்கரபோர்த்தியிடம் சிபிஐ  விசாரணை

 

 

சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை  விசாரணை தொடர்பாக நடிகர் ரியா சக்ரபோர்த்திக்கு சிபிஐ சம்மன் அனுப்பியது. இதை தொடர்ந்து இன்று காலை 10.40 மணியளவில் ரியா டிஆர்டிஓ விருந்தினர் மாளிகையில் சிபிஐ குழு முன் ஆஜரானார். சக்ரபோர்த்தியின் கூட்டாளியான சாமுவேல் மிராண்டாவும் சிபிஐ குழு முன் ஆஜரனார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுஷாந்த் சிங் தற்கொலை: நடிகை ரியா சக்ரபோர்த்தியிடம் சிபிஐ அதிகாரிகள் 10 மணி நேரம் விசாரணை

சுஷாந்த் சிங் தற்கொலை: நடிகை ரியா சக்ரபோர்த்தியிடம் சிபிஐ அதிகாரிகள் 10 மணி நேரம் விசாரணை

 

மும்பை

சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை விசாரணை தொடர்பாக நடிகை ரியா சக்ரபோர்த்திக்கு சிபிஐ சம்மன் அனுப்பியது. இதை தொடர்ந்து நேற்று காலை 10.40 மணியளவில் ரியா டிஆர்டிஓ விருந்தினர் மாளிகையில் சிபிஐ குழு முன் ஆஜரானார்.சிபிஐ  அதிகாரிகள் அவரிடம் தொடர்ந்து 10 மணி நேரத்திற்கும் அதிகமாக விசாரணை நடத்தினார்கள்.

 



1. சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் குறித்து அவருக்கு தகவல் கொடுத்தவர் யார்? அவர் எங்கே இருந்தார்?

2. மரணம் கேள்விப்பட்டதும், அவர்  சுஷாந்துடைய பாந்த்ரா வீட்டிற்குச் சென்றாரா? இல்லையென்றால், ஏன், எப்போது, எங்கே அவர் உடலைப் பார்த்தார்?

3. ஜூன் 8 அன்று அவர் ஏன் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் வீட்டை விட்டு வெளியேறினார்?

4. ஏதேனும் சண்டைக்குப் பிறகு அவர் நடிகரின் வீட்டை விட்டு வெளியேறினாரா?

6. அந்த நாட்களில் சுஷாந்த் சிங் ராஜ்புத் அவருடன் தொடர்பு கொள்ள முயற்சித்தாரா? அவர் சுஷாந்துடைய அழைப்புகளையும் செய்திகளையும் புறக்கணித்தாரா? அப்படியானால், ஏன்?

7. சுஷாந்த் சிங் ராஜ்புத் தனது குடும்ப உறுப்பினர்களில் யாரையும் அணுக முயற்சித்தாரா?

8. சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் உடல்நலப் பிரச்சினைகள் மற்றும் அவர் எடுத்துக்கொண்ட சிகிச்சை பற்றிய விவரங்கள். மருத்துவர்கள், மனநல மருத்துவர்கள் மற்றும் மருந்துகளின் விவரங்கள்.

9. சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் குடும்பத்துடன் ரியா சக்ரவர்த்தியின் உறவு என்ன?

10. மரணம் குறித்து சிபிஐ விசாரணைக்கு அவர் ஏன் கேட்டார்?

உள்பட பல கேள்விகளை அதிகாரிகள் ரியாவிடம் எழுப்பினர். மீண்டும் அவரிடம் விசாரணை நடத்த சம்மன் அனுப்பி உள்ளனர்.

 

https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2020/08/29062733/Rhea-Chakraborty-Questioned-For-More-Than-10-Hours.vpf

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

சுஷாந்த் சிங் தற்கொலை : ஊடக பிணந்தின்னிகள் !

மும்பையில் உள்ள பாந்த்ரா புறநகர் பகுதியில் தான் பாலிவுட் நடிகர்கள், கிரிக்கெட் வீரர்கள் மற்றும் தொழிலதிபர்கள் உள்ளிட்ட பெரும் பணக்காரர்களின் பங்களாக்கள் அமைந்துள்ளன. இந்தப் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தான் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் வசித்து வந்தார். ஜூன் 14ம் தேதி சுஷாந்த் சிங்கின் பிரேதம் அவரது வீட்டுக் கூரையில் உள்ள மின் விசிறியில் தூக்கிட்டு தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்படுகிறது. சுஷாந்த் சிங் மன அழுத்தத்தின் விளைவாக தற்கொலை செய்து கொண்டதாக போலீசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரிய வந்தது. பின்னர் செய்யப் பட்ட பிரேத பரிசோதனை  முடிவுகளும் அந்த மரணம் ஒரு தற்கொலை என்பதையே உறுதிப் படுத்தின.

சுஷாந்தின் மரணம் ஊடகங்களில் அடிபடத் துவங்கிய ஆரம்ப நாட்களில் அதில் சதிக் கோட்பாடுகள் எதுவும் இருப்பதாக யாரும் சந்தேகிக்கவில்லை. சுஷாந்த் கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை வரலாற்றுப் படம் ஒன்றில் நடித்திருந்தார் என்பதால் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் விவாதிக்கப்பட்டது; தவிர, பொதுவாக மன அழுத்தம் மற்றும் தற்கொலை எண்ணங்களை தடுப்பது குறித்த விவாதமாகவும் நடந்து வந்தது.

sushanth.jpgஜூன் மாத இறுதி இரண்டு வாரங்களிலும், ஜூலை மாத மத்தியில் வரை,  சுஷாந்த்தின் தயாள குணம், எப்படி பீகாரின் நடுத்தர குடும்பத்தில் இருந்து பாலிவுட்டில் முன்னேறினார், அவரது நடிப்பாற்றல் போன்றவைகள் குறித்த செய்திகள் வந்த வண்ணம் இருந்தன. ஒரு நடிகர் என்பதால் அவரது மரணம் குறித்த செய்திக்கு இருந்த “சந்தை மதிப்பை” ஊடகங்கள் உணர்ந்து கொண்ட பின் விவாதம் வேறு திசைகளுக்கு நகரத் துவங்கியது.

பாலிவுட்டில் திறமையாளர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்றும், பாலிவுட்டை கட்டுப்படுத்தும் சிலர் தங்களுக்குத் தெரிந்தவர்களுக்கே வாய்ப்புகளை வழங்குகின்றனர் (nepotism) என்றும், இதன் காரணமாக சுஷாந்த் சிங் போன்ற திறமையானவர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்றும், அப்படி பாதிக்கப்பட்டதன் காரணமாகவே சுஷாந்த் சிங் மன அழுத்தத்திற்கு ஆளாகி பின் தற்கொலை செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார் என்றும் செய்தித் தொலைக்காட்சிகள் பேசத் துவங்கின.

குறிப்பாக ரிபப்ளிக் மற்றும் அதைத் தொடர்ந்து டைம்ஸ் நௌ ஆகிய சேனல்கள் இந்த திசையில் விவாதத்தை நகர்த்திச் சென்றன.

இதையடுத்து, பாரதிய ஜனதாவின் முக்கிய புள்ளிகள் இந்த விசயத்தை கையில் எடுத்தனர். குறிப்பாக சுப்பிரமணியன் சுவாமி, பாலிவுட்டில் கான் கும்பலின் (khan gang – Sharuk Khan, Salman Khan & Aamir Khan) கொட்டம் அதிகரித்து விட்டது என்றும் அவர்களை அடக்க வேண்டிய நேரம் வந்து விட்டது என்றும் நேரடியாக எழுத துவங்கினார்.  இதையடுத்து இந்துத்துவத்தின் இணையக் கூலிகள் சுஷாந்த் சிங்கின் ‘ரசிகர்களாக’ அவதாரம் எடுத்து ‘நீதி’ கேட்டு சமூக ஊடகங்களில் எழுதத் துவங்கினர். (தமிழகத்தில் பாரதிய ஜனதாவின் இணையக் கூலிகள் நேரடியாக மோடி ஆதரவாளர்களாக வருவதை விட ரஜினி ரசிகர்களாக காட்டிக் கொள்ளவே முனைப்பு காட்டுகிறார்கள் என்பதை இங்கே பொருத்தி புரிந்து கொள்ளலாம்)

ஜூலை மாதம் முழுவதும் ரிபப்ளிக், டைம்ஸ் நௌ போன்ற ஆங்கில சேனல்களும் வட இந்திய இந்தி சேனல்களும் கான் கேங்கின் ‘சதிகள்’ குறித்து விவாதங்கள் நடத்த துவங்கின. இந்தப் போக்கு ஜூன் மாத இறுதி வாரத்தில் துவங்கி ஜூலை மாதம் முழுவதும் நீடித்தது. இந்த சமயத்தில் பாரதிய ஜனதாவின் ஆதரவாளரான நடிகை கங்கனா ரனாவத் தொடர்ச்சியாக நெப்போடிசம் குறித்து சமூக ஊடகங்களில் எழுதவும், தொலைக்காட்சிகளில் பேட்டியளிக்கவும் துவங்கினார்.

media-circus-300x169.jpgகொரோனா, பொருளாதாரம் உள்ளிட்ட அனைத்து பிரச்சினைகளையும் தூரத் தள்ளி வைத்த ஊடகங்கள் இதை முழுநேரமாக கையிலெடுக்கத் துவங்கின வட இந்திய ஊடகங்கள். கான் கும்பலுக்கு இருக்கும் ‘துபாய்’ தொடர்பு, நிழல் உலக தாதாக்கள் தொடர்பு, போதை மருந்து பார்ட்டிகள் துவங்கி இவர்கள் எப்படி மொத்த பாலிவுட்டையும் கட்டுப்படுத்துகிறார்கள் என்ற திசையில் நகரத் தொடங்கியது. இந்த சமயத்தில் பாலிவுட்டை புறக்கணிப்போம் (#Boycotbollywood) என்கிற ஹேஷ்டேக் சமூக ஊடகங்களில் வைரலானது. சுஷாந்த் சிங் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதாலும், பீகார் மாநிலத் தேர்தல் நெருங்கி வருவதாலும் ‘கான் கும்பல்’ விசயத்தை ஊடகங்கள் முக்கிய பேசு பொருளாக்கின. சுஷாந்துக்கு நீதி (#justice4sushant) என்பதே ஊடகங்களின் முழக்கமாக இருந்தது. அதாவது பீகாரில் இருந்து வந்த ஒரு திறமையான இளைஞனை பாலிவுட்டை கைப்பற்றி வைத்துள்ள இசுலாமிய கும்பல் திட்டமிட்டு புறக்கணித்து மரணம் நோக்கி தள்ளி விட்டதாகவும், அதற்கு நீதி வேண்டும் என்பதே மொத்த கூச்சல்களின் சாரம். இதை சமூக ஊடகங்களில் வைரலாக்கும் வேலையை பாரதிய ஜனதாவின் இணைய கூலிப்படை திறம்பட மேற்கொண்டது.ஜூலை மாத இறுதி வாக்கில் இந்த கூச்சல் மெல்ல மெல்ல சலித்துப் போனதை அடுத்து ரியா சக்ரபர்த்தி முன்னுக்கு வருகிறார்.

காட்சி 1:

ஆகஸ்டு மாத இறுதியில் ஒரு நாள் டைம்ஸ் நௌ navika-300x169.jpgசெய்திச் சேனலில் விவாதம் ஒன்று நடந்து கொண்டிருந்தது. ராகுல் சிவஷங்கர் விவாதத்தை ஒருங்கிணைத்துக் கொண்டிருந்தார். ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரிகள், பத்திரிகையாளர்கள், வழக்கறிஞர்கள் உள்ளிட்டோர் அந்த விவாதத்தில் விருந்தினர்களாக கலந்து கொண்டிருந்தனர். விவாதம் சுஷாந்த் சிங் மரணம் தொடர்பாக நடந்து கொண்டிருந்தது. திடீரென விவாத அரங்கினுள் மூச்சிறைக்க ஓடி வருகிறார் அவரது சக நெறியாளரான நாவிகா குமார்.

“எல்லாவற்றையும் நிறுத்துங்கள், எல்லாவற்றையும் நிறுத்துங்கள். என்னிடம் வெடிகுண்டைப் போன்ற அதிர்ச்சித் தகவல்கள் உள்ளன. உடனே எல்லா கேமராவையும் இங்கே திருப்புங்கள்” என கூச்சலிடுகிறார். ராகுல் சிவஷங்கர் அதிர்ச்சியடைந்தது போன்ற முகபாவனையை காட்டுகிறார். உடனே நாவிகா, “கேமராவைத் திருப்புங்கள். என்னிடம் பை நிறைய ஆவணங்கள் உள்ளன” என்கிறார். அவரது கையில் நிஜமாகவே ஒரு பை இருக்கிறது; அதில் சில தாள்கள் துறுத்திக் கொண்டு தெரிகின்றன. உடனே எல்லா கேமராக்களும் நாவிகாவை நோக்கி திருப்ப படுகின்றன.

நாவிகா தனது பையை பிரிக்கிறார். அதனுள் அடக்கி கொண்டு வந்த தாள்களை நோக்கி கேமராக்கள் குவிக்கப்படுகின்றன. அவை மூன்றாண்டுகளுக்கு முன் ரியா சக்ரபர்த்திக்கும் அவரது தோழிகளுக்கும் இடையே வாட்சப்பில் நடந்த சில உரையாடல்களின் பிரிண்ட் அவுட். அந்த உரையாடல்களில் ரியா பார்ட்டிகளைக் குறித்து பேசியிருக்கிறார், விடுமுறை தின கேளிக்கைகள் குறித்து பேசியிருக்கிறார், எங்கே தரமான கஞ்சா கிடைக்கும் என்பது குறித்து பேசியிருக்கிறார். இதையெல்லாம் வரிக்கு வரி வாசித்துக் காட்டிய நாவிகா, ரியாவுக்கு போதைப் பழக்கம் இருந்ததாகவும், அவருக்கு ‘துபாய் தொடர்பு’ இருந்ததாகவும் (இங்கே துபாய் தொடர்பு என்பதை மும்பை நிழல் உலக தாதாக்களோடு -குறிப்பாக D கம்பெனி எனப்படும் தாவூத் கும்பலோடு –  தொடர்பு என புரிந்து கொள்ள வேண்டும்) தனது புலனாய்வில் கண்டுபிடித்து விட்டதாகவும், எனவே சுஷாந்த்தையும் போதைப் பழக்கத்துக்கு அவர் அடிமை ஆக்கினார் என்பதற்கு இதுவே ஆதாரம் எனவும் முடிக்கிறார் நாவிகா.

காட்சி 2:

ஆகஸ்ட் 31-ம் தேதி டைஸ் நௌ தொலைக்காட்சியில் பாரதிய ஜனதாவின் செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா உள்ளிட்டோர் கலந்து கொண்ட ஒரு விவாத நிகழ்ச்சி. விவாதத்தில் சுமந்த் சி ராமனும் கலந்து கொள்கிறார். சுஷாந்த் சிங் மரணம் தொடர்பாக மகாராஷ்டிர மாநில போலீசாரை குறிவைக்கும் கேள்வி ஒன்றை சுமந்த்ராமனிடம் கேட்கிறார் நெறியாளர் ராகுல் சிவஷங்கர். தான் பதிலளிக்கத் துவங்கும் முன் தேசத்தின் ஜி.டி.பி வீழ்ச்சியடைந்த ஒரு நாளில் இப்படி ஒரு விவாதத்தில் கலந்து கொள்வது அசிங்கமாக இருக்கிறது என ஏதோ சொல்ல முற்படுகிறார் சுமந்த்ராமன். உடனே பெருங்குரலோடு குறுக்கிடும் ராகுல் சிவஷங்கர், “பேசுவதாக இருந்தால் சுஷாந்த் சிங் பற்றி பேசு, ஜிடிபி பற்றி தெரிந்து கொள்ள ஆசை என்றால் நாளிதழ்களை பார், தேசத்தின் பொன்னான நேரத்தை ஜிடிபி பற்றி பேசி வீணடிக்காதே, அப்படியே ஜிடிபி பற்றி விவாதிக்க வேண்டுமென்றால் நான் உன்னை கூப்பிட மாட்டேன், அதைப் பற்றி உனக்கு ஒன்றும் தெரியாது” என கூச்சலிடுகிறார் (https://twitter.com/TimesNow/status/1300449612621205504). திகைத்துப் போன சுமந்த்ராமன் முகத்திலடிக்கப்பட்ட சாணியை வழித்துக் கொண்டு சுஷாந்த் சிங் வழக்கு பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு ஏதோ பதிலளித்து தொடர்ந்து செல்கிறார்.

0o0

சுஷாந்த் சிங் மரணித்த இரண்டே நாளில் தன்னைப் பற்றி அங்கும் இங்கும் கிசுகிசுக்கப்படுவதை உணர்ந்த ரியா சக்ரபர்த்தி, அவரது ட்விட்டர் பக்கத்தில் தன்னுடைய காதலனின் மரணத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் கோரிக்கை வைக்கிறார். (https://twitter.com/Tweet2Rhea/status/1283694478465748994)

ஜூன் 14-ம் தேதி சுஷாந்த் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட பின் ஏறத்தாழ 45 நாட்கள் கழித்து ஜூலை 28-ம் தேதி பீகாரில் உள்ள சுஷாந்த் சிங்கின் குடும்பத்தினர் அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக புகார் எழுப்பினர். சுஷாந்தின் தந்தை பாட்னாவில் உள்ள காவல் நிலையம் ஒன்றில் இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகள் 341 (சட்டவிரோதமாக கட்டுப்படுத்துதல்), 342 (சட்டவிரோதமாக அடைத்து வைத்தல்), 380 (திருட்டு), 406 (ஏமாற்றுதல்), 420 (மோசடி) மற்றும் 306 (தற்கொலைக்கு தூண்டுதல்) உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் தனது புகாரை பதிவு செய்கிறார். சுஷாந்தின் தந்தை அளித்த புகாரில் எதிரியாக சுஷாந்தின் காதலியும், நடிகையுமான ரியா சக்ரபர்த்தியை குறிப்பிட்டிருந்தார்.

riya-300x176.jpgசுஷாந்த் மரணம் ஊடகங்களில் விவாதப் பொருளாகி ஓரிரு சுற்றுகள் முடிந்த பின் (அதாவது கான் கும்பல் தொடர்பாக துவைத்து காயப்போட்ட பின்) ஜூலை இறுதியில் இருந்து ஆகஸ்டு மாதம் முழுவதும் ரியா சக்ரபர்த்தியை விவாதப் பொருளாக கொண்டு வருகின்றன ஊடகங்கள். இந்த கட்டத்திற்கு பின் இது ஊடக விசாரணை (media trial) என்பதைத் தாண்டி வேறு பரிமாணங்களை எடுக்கிறது. “சுஷாந்த் சிங்கிற்கு சூனியம் வைத்தாரா ரியா?”, “சுஷாந்தின் உழைப்பில் ரியா குடும்பம் உல்லாசம்”, “சுஷாந்தின் காதல் தான் ரியாவின் ஆயுதம்”, “ரியாவின் ஆட்டம் முடிந்தது”, “ரியா என்றொரு சூனியக்காரி” – இவைகள் எல்லாம் ரியா தொடர்பாக ஊடகங்கள் நடத்திய விவாதங்களுக்கு இடப்பட்ட தலைப்புகளின் ஒரு சில மாதிரிகள் மட்டுமே.

இந்தி தொலைக்காட்சிகளில் வரும் மாமியார் மருமகள் அக்கப்போர் மெகா சீரியல்களின் கதை – திரைக்கதைகளை அப்படியே வரித்துக் கொண்ட ஊடகங்கள், கிட்டத்தட்ட ஒரு மெகாதொடர் நாடகத்தை அரங்கேற்றி வருகின்றன. ரிபப்ளிக், டைம்ஸ் நௌ, இந்தியா டுடே, நியூஸ் எக்ஸ், நியூஸ் 18 போன்ற ஆங்கில செய்திச் சேனல்களும் அனேகமாக எல்லா இந்தி செய்திச் சேனல்களும் முன்வைக்கும் திரைக்கதையை கீழ் கண்டவாறு சுருக்கமாக சொல்லலாம்:

“பாலிவுட் நடிகைகளை பார்ட்டிகளில் கலந்து கொள்ள வைத்து அங்கே வரும் அரசியல்வாதிகளுக்கும், தொழிலதிபர்களுக்கும், நிழல் உலக தாதாக்களுக்கும் விருந்தாக்குகிறார்கள் கான் கும்பலைச் சேர்ந்தவர்கள். அப்படி ஒரு பார்ட்டியில் சுஷாந்தின் முன்னால் மேலாளர் திஷா சாலியன் என்கிற பெண்ணை சிவசேனா தலைவரின் குடும்பத்தைச் சேர்ந்த வாரிசு ஒருவர் (ஆதித்ய தாக்ரேவை மறைமுகமாக குறிப்பிடுகிறார்கள்) பாலியல் வல்லுறவு செய்து கொன்று விட்டார் (உண்மையில் தொழில் முதலீடுகள் நட்டமானதால் திஷா தன் வீட்டு மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார் என்பது போலீசாரின் விசாரணை முடிவு). திஷா பாலியல் வல்லுறவு செய்து கொல்லப்படும் முன் சுஷாந்துக்கு தொலைபேசியில் எல்லா உண்மைகளையும் சொல்லி விட்டார். சுஷாந்த் அந்த உண்மைகளை வெளியிட முடிவு செய்தார். இந்நிலையில் ஏற்கனவே ரியா சக்ரபர்த்தி, சுஷாந்தை சூனியத்தின் மூலமும் போதைப் பழக்கத்திற்கு ஆட்படுத்தியதன் மூலமும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்ததை நிழல் உலக தாதாக்கள் அறிந்து கொள்கிறார்கள். எனவே ரியாவின் மூலம் சுஷாந்த்தை மிரட்டி பணிய வைக்க முயற்சிக்கிறார்கள். அது முடியாமல் போகவே சுஷாந்தின் மன அழுத்தம் தொடர்பான மருத்துவ சிகிச்சை விவரங்களை ரியாவின் மூலம் வெளியிடுவதாக மிரட்டுகிறார்கள். ஏற்கனவே கான் கும்பலால் தொழில் வாய்ப்புகள் இன்றி தவித்து வந்த சுஷாந்த், இந்த மருத்துவ குறிப்புகள் வெளியே தெரிந்தால் தனது திரை வாழ்க்கை முடிந்து போய் விடும் என அஞ்சுகிறார். இதன் விளைவாகவே அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்”

ரியா சக்ரபர்த்தியை சூனியக்காரியாக நிலைநாட்டிய ஊடகங்கள், அவரது வீட்டின் அருகே முகாமிட்டு அடித்து வரும் கூத்துகள் ஆபாசத்தையும் விஞ்சிய அருவெறுப்பின் உச்சம். நியூஸ் லாண்ட்ரி இணையதளத்தைச் சேர்ந்த பத்திரிகையாளர் ப்ரதீக் கோயல் அங்கே நடக்கும் சர்க்கசை தனது நேரடி ரிப்போர்ட்டில் துல்லியமாக பதிவு செய்துள்ளார். அதிலிருந்து சில காட்சிகளை மட்டும் பார்த்து விட்டு மேலே தொடர்வோம்.

0o0

“அதே போகிறான் பாருங்கள், அவன் தான் ரியாவின் உளவாளி” எனக் கூச்சலிடுகிறார் ரிபப்ளிக் தொலைக்காட்சியின் பெண் நிருபர். உடனே, காமெரா அந்த வயதான மனிதரை நோக்கி ஜூம் செய்யப் படுகின்றது. உண்மையில் அவர் ரியா வசிக்கும் அடுக்கு மாடி குடியிருப்பின் காவலாளி. அவரை மைக்குகள் சகிதம் மொய்த்துக் கொள்ளும் செய்தியாளர்கள் மாற்றி மாற்றிக் கேள்விகள் கேட்டு திணறடிக்கிறார்கள். “ஏன் ரியாவை போலீசார் பாதுகாக்கிறார்கள்?”, “இங்கே பாலிவுட் நடிகர்கள் வருவதுண்டா?”, “ஏன் எங்களை உள்ளே அனுமதிக்க மறுக்கிறீர்கள்?” அவர் எந்தக் கேள்விக்கும் பதில் அளிக்காமல் நகர முற்படுகிறார். அவரைச் சூழ்ந்து கொள்ளும் ‘செய்தியாளர்கள்’ “ஏன் எங்களுக்கு பதிலளிக்க மறுக்கிறீர்கள்?” “எதை மறைக்கப் பார்க்கிறீர்கள்?” “ஏன் குற்றவாளிக்கு உடந்தையாக இருக்கிறீர்கள்?”

ஒருவாறாக அந்த கும்பலிடம் இருந்து தப்பிய அந்த வயதான காவலாளி, தான் செய்தியாளர்களால் மிரட்டப்படுவதாக அப்பார்ட்மெண்ட் நிர்வாகத்திடம் தெரிவிக்கிறார் – அவர்கள் போலீசாரிடம் புகாரளிக்கின்றனர். உடனே, நேரலையில் “குற்றவாளிக்கு உதவுகின்றது சிவசேனையின் மும்பை போலீசு” என கூச்சலிடுகின்றனர் செய்தியாளர்கள். இது நடந்து கொண்டிருக்கும் போதே ரியாவின் தந்தை அந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் இருந்து ஒரு காரில் வெளியேறுகிறார். அவருடன் ஒரு போலீசு கான்ஸ்டபிளும் இருக்கிறார். உடனே அந்தக் காரை சூழ்ந்து கொள்ளும் ‘செய்தியாளர்கள்’ அதை நகர விடாமல் தடுக்கிறார்கள். காரின் ஜன்னல் வழியே அந்த வயதானவரின் முகத்தில் மைக்குளை திணிக்கின்றனர்.

திகைத்துப் போன அவர் கார் ஓட்டுநரிடம் மேலே செல்லுமாறு கேட்கிறார். உடனே ரிபப்ளிக் பெண் செய்தியாளர் ஓட்டுநரை நோக்கி “எங்கள் கேள்விக்கு பதிலளிக்காமல் ஒரு அடி கூட நகர விட மாட்டேன்” என மிரட்டுகிறார். ஒரு வழியாக போலீசு கான்ஸ்டபிள் தலையிட்டதால் கார் மெல்ல ஊர்ந்து செல்கிறது. இன்னொரு செய்தியாளர் கூட்டத்தில் இருந்து துள்ளிக் குதித்து தன் முஷ்டியால் காரின் பானெட்டின் மீது குத்துகிறார்.

சிறிது நேரம் கழித்து ஒரு காவலரும் காவல்துறை ஆய்வாளரும் அங்கே வருகின்றனர். உடனே அவரைச் சூழ்ந்து கொள்ளும் ‘செய்தியாளர்’ பட்டாளம் கேள்விகள் கேட்டு திணறடிக்கின்றனர். “ஏன் வந்தீர்கள்?” “ரியாவை கைது செய்ய போகிறீர்களா?” “ஏன் இன்னும் கைது செய்யவில்லை” “குற்றப்பத்திரிகை வழங்கி விட்டீர்களா?”. காவல் ஆய்வாளர் கைகூப்பி இறைஞ்சுகிறார், கொரோனா பிரச்சினை இருப்பதால் கொஞ்சம் தள்ளி நின்றாவது கேளுங்களேன் என்கிறார். அந்த கூப்பாடு யார் காதிலும் ஏறவில்லை. “ஏன் வந்தீர்கள்?”. ஆய்வாளர் கடைசியில் தான் வந்த காரணத்தை தெரிவிக்கிறார்: செய்தியாளர்கள் தங்கள் குடும்பத்தினரை மிரட்டுவதாக ரியா புகாரளித்ததை விசாரிக்கவே தான் வந்ததாக குறிப்பிடுகிறார். கூட்டம் பெரும் ஆரவாரத்தோடும் போலீசுக்கு எதிரான முழக்கங்களோடும் கலைந்து போகிறது.

இந்த கூத்துகள் நடந்து கொண்டிருக்கும் போது ஒரு கார் அந்த இடத்தைக் கடந்து போகிறது. அதன் ஓட்டுநர் ஒரு கணம் வேகத்தை மட்டுப்படுத்தி வெளியே கூடி நின்றும் பத்திரிகை கும்பலைப் பார்க்கிறார். பின் தலையில் அடித்துக் கொண்டே அந்த இடத்திலிருந்து நகர்ந்து போகிறார். நியூஸ் லாண்ட்ரியின் செய்தியாளர் ப்ரதீக் கோயல் தன்னருகே நின்றிருந்த ஆஜ் தக் ரிப்போர்டரிடம் அந்தக் கார் ஓட்டுநரின் செய்கையைக் குறித்துக் கேட்கிறார். “இப்போதெல்லாம் பத்திரிகையாளர்களுக்கு மதிப்பே இல்லை” என்று சலித்துக் கொண்ட ஆஜ்தக் ரிப்போர்ட்டர், ரிபப்ளிக் தொழிலுக்கு வந்த பின் பத்திரிகையாளர்களின் பெயர் தாறுமாறாக நாறி விட்டது என்கிறார். “கொஞ்சம் டிராமா இருந்தால் பரவாயில்லை, ஆனால் இவர்களோ (ரிபப்ளிக்) எல்லா மட்டத்தையும் கடந்து கிழே இறங்கி விட்டார்கள். இவர்கள் அடிக்கும் கூத்துகளால் எங்களுக்கும்  அழுத்தம் அதிகரித்து விட்டது” என குறிப்பிடுகிறார் ஆஜ்தக் நிருபர்.

இந்த உரையாடலை கவனித்துக் கொண்டிருந்த ஆஜ் தக்கின் கேமராக்காரர், “ரியா பற்றி வரும் 80 சதவீத செய்திகள் பொய்கள் தான். இப்ப பாருங்க, ரியாவின் வீடு இங்கேயே இல்லை. நாம் நிற்கும் இடத்திற்கு நேர் எதிர் பக்கம் தான் இருக்கிறது. ஆனால், ரிபப்ளிக் டீ.விகாரன் இங்கே இடம் வசதியாக இருக்கிறது என்பதற்காக கேமராவை செட் செய்து இங்கே இருந்து பார்த்தால் ரியா வீட்டு சமையலறையின் பின் பகுதி தெரிகிறது பாருங்கள் என்று நேரலையில் சொல்லி விட்டான்” எனச் சொல்கிறார். அதைத் தொடர்ந்து ரிபப்ளிக்கின் கேமரா கோணத்தை மற்ற சேனல்களும் காப்பியடித்தாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு அந்தந்த சேனல் நிர்வாகங்கள் தங்கள் களச் செய்தியாளர்களையும் நேரலை வாகனங்களையும் அதே இடத்தில் முகாமிடச் சொல்லி இருக்கிறார்கள்.

ரிபப்ளிக் தனது ‘தொழிலை’ ஆரம்பித்த சில ஆண்டுகளிலேயே எல்லா செய்திச் சேனல்களும் அதன் பாணியை நகலெடுக்கத் துவங்கியுள்ளன. செய்திகள் சொல்வது செய்திச் சேனல்களின் வேலை என்பதை ரிபப்ளிக் மாற்றியமைத்துள்ளது. நேயர்களுக்கு பரவசமூட்டும் ஒரு காட்சி இன்பத்தை (entertainment) வழங்குவதை முதன்மை நோக்கமாக மாற்றியதில் ரிபப்ளிக் தொலைக்காட்சியின் பங்கு மிக முக்கியமானது.

செய்திகள் மற்றும் செய்திகளைக் குறித்த விவாதங்கள் முக்கியமல்ல – இரசிகர்களின் பரவச உணர்ச்சியே முக்கியம். அதைத் தூண்டுவதற்கு என்னவெல்லாம் தேவையோ அவையனைத்தையும் செய்யலாம் என்கிறது அர்னாபின் ‘தொழில் தர்மம்’. எனவே இந்தப் புதிய சூழலில் ‘உண்மை’ என்பது பொருளற்றுப் போய் விட்டது; செய்திச் சேனல்கள் ஒரு குறிப்பிட்ட நிகழ்வை பின் தொடர்ந்து அதை தொடர்ச்சியாக நேயர்களுக்கு முன்வைக்கும் போது ஒரு ‘திரைக்கதை’ வந்து விழுகிறது. இந்த திரைக்கதையானது அந்த குறிப்பிட்ட நிகழ்வின் உண்மையான வளர்ச்சிப் போக்கை ஒட்டியும், ஒட்டாமலும், பொய்கள் சேர்ந்தும், அரசியல் உள்நோக்கங்கள் சேர்ந்தும் போகிற போக்கில் வளர்ந்து கொண்டே செல்கின்றது.

முந்தைய பகுதியில் சுஷாந்த் சிங் மரணம் குறித்து செய்திச் சேனல்கள் முன்வைக்கும் சதிக்கோட்பாடு என்னவென்று விவரிக்கப்பட்டிருக்கும் பத்தியை மீண்டும் ஒரு முறை பார்த்து விடுங்கள் – அந்த சதிக்கோட்பாடு ஒரு மெகா சீரியலின் திரைக்கதை ‘வளர்க்கப்படுவதை’ போல், வளர்க்கப்பட்ட ஒன்று.

0o0

ரிபப்ளிக்கின் செயல்களால் எங்களுக்கும் அழுத்தம் அதிகரித்து விட்டது” என்று ஆஜ்தக் நிருபர் சொன்ன வார்த்தைகளில் பல அர்த்தங்கள் உள்ளன.

ரிபப்ளிக் தொலைக்காட்சி 2017-ம் ஆண்டு துவங்கப்பட்டது. ஆரம்பித்த முதல் மாதத்திலேயே அர்னாப் கோஸ்வாமி கையிலெடுத்த விவகாரம், முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூரின் மனைவில் சுனந்தா புஷ்கரின் மரணம். ஏறத்தாழ ஒவ்வொரு நாளும் சுனந்தாவின் மரணத்தில் சசி தரூருக்கு தொடர்பு இருப்பதாக நேரடியாகவும் மறைமுகமாகவும் தனது ஸ்டுடியோவில் இருந்து கூச்சலிட்டார் அர்னாப்.

இரண்டு வாரங்களில் மட்டும் சசி தரூருக்கு எதிராக அர்னாப் துவங்கிய ஹேஷ்டேக் பிரச்சாரங்களின் பட்டியல் இவை : #SunandaMurderTapes #SunandaNoteOut, #SunandaFreshExpose, #FreshSunandaExpose #Tharoorcharged. இவை தவிர ரிபப்ளிக்கின் யூடியூப் பக்கத்தில் சுனந்தா மரணம் தொடர்பாக தனி பிளேலிஸ்ட் ஒன்றும் உள்ளது ( “Sunanda Pushkar’s murder case”).

இதில் உச்சகட்டமாக கேரளாவில் உள்ள சசி தரூரின் வீட்டை தனது நிருபர்கள், கேமராமேன்கள் மற்றும் லைவ் கேரவன் வாகனங்களைக் கொண்டு முற்றுகையிடச் செய்தார் அர்னாப் கோஸ்வாமி. தரூரின் வீட்டிற்கு செல்பவர்களை மறிப்பது, வெளியேறிச் செல்பவர்களை மறித்து மைக்கை முகத்துக்கு நேராய் நீட்டுவது என சில நாட்கள் சென்றது. ஆரம்பத்தில் பொறுத்துப் பார்த்த சேட்டன்கள் கடைசியில் ‘நிருபர்களை’ வசமாக கவனித்து விட்டார்கள்.

Shashi-Tharoor--300x187.jpgஅதன் பின் சசி தரூர் தில்லி உயர் நீதிமன்றத்தில் அர்னாபுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார். சுனந்தாவின் மரணம் குறித்து ரிபப்ளிக் ஏதும் செய்தி வெளியிட்டால் அதில் தரூரின் தரப்பையும் கேட்டு அதையும் வெளியிட வேண்டும் என்று அந்த வழக்கில் தீர்ப்பானது. தனது தீர்ப்பின் ஒரு இடத்தில் நீதிபதி பின் வருமாறு குறிப்பிடுகிறார்:

The ‘culture of thrusting a microphone’ in the face of a person needs to be deprecated. TV viewers who want to watch action films should not watch TV debates on current affairs on the ground that it contains more action and violence than any action film. (தீர்ப்பை வாசிக்க – https://www.scribd.com/document/366093070/Shashi-Tharoor-v-Arnab-Goswami-Anr-Watermark#from_embed)

சுனந்தா மரணம் தொடர்பாக ரிபப்ளிக் அடித்த கூத்துகள் பற்றி மேலும் வாசிக்க – (https://www.altnews.in/one-month-republic-tv-fare/  & https://scroll.in/article/879066/arnab-goswami-says-its-an-oddity-that-sunanada-pushkar-chargesheet-fails-to-mention-murder )

தனது “இரை” எதுவென்று தீர்மானித்துக் கொண்ட மிருகம் அதை படிப்படியாக வீழ்த்த திட்டமிடுவதைப் போல் தான் ரிபப்ளிக் இயங்குகின்றது. அன்றைய பொழுதில் யாரை வில்லனாக காட்ட வேண்டும் என்று அர்னாப் தீர்மானிக்கிறாரோ அவர் குறிப்பிட்ட நபரை (அல்லது அந்த அபலைக்கு வேண்டப்பட்ட யாராவது அப்பாவியை) பொது இடத்தில் கேமரா சகிதம் சூழ்ந்து கொள்ளும் ரிபப்ளிக் நிருபர்கள் ஏறத்தாழ கெரோ செய்வார்கள். வாய்க்குள் மைக்கை நுழைக்க முயற்சிப்பது, மறித்து நிறுத்துவது, கேள்விக்கு தாங்கள் விரும்பிய பதில் கிடைக்காவிட்டால் தடுத்து நிறுத்துவது என அங்கே அரங்கேறும் வன்முறைக் காட்சிகளை கேமராக்கள் பதிவு செய்து கொள்ளும்.

அன்று மாலை அர்னாப் ஆரவாரத்துடன் அறிவிப்பார் “ரிபப்ளிகின் கேள்விகளைக் கண்டு ஓடி ஒளியும் ______”

ரிபப்ளிக்கின் இந்த கோமாளிக் கூத்துகள் சமூக வலைத்தளங்களில் ஒரு பிரிவினரால் எள்ளி நகையாடப்பட்டன. ஆனால், ஆகப் பெரும்பான்மையான அதன் நேயர்கள் இந்த வன்முறையை இரசித்தனர். இந்த வழிமுறைகளைப் பின்பற்றியதால் ரிபப்ளிக்கின் டி.ஆர்.பி ஆரம்பித்த ஒரு சில வாரங்களிலேயே முதலிடத்திற்கு வந்தது. அதைப் பார்த்த பிற சேனல்களும் உடனடியாக ‘விழித்துக்’ கொண்டன. மெல்ல மெல்ல ரிபப்ளிக்கின் பாணியை நகலெடுக்கத் துவங்கின.

0o0 

SushantSinghRajput-300x225.jpgதேசிய செய்திச் சேனல்கள் என்று சொல்லப்பட்டாலும், அவற்றின் பேசு மொழி ஆங்கிலமாக இருந்தாலும் அவற்றின் நேயர்கள் பெரும்பாலும் வட இந்தியாவைச் சேர்ந்த படித்த மேல் தட்டு வர்க்கத்தினர் தான். இவை தவிற மத்திய தர மற்றும் அடித்தட்டு மக்களின் தேவைகளை இந்தி பேசும் செய்தித் தொலைக்காட்சிகள் பூர்த்தி செய்கின்றன. சில ஆண்டுகளுக்கு முன் இந்தி சேனல்களில் இதைப் போன்ற கூத்துகள் சர்வ சாதாரணமாக நடந்து வந்தன.

டைம்ஸ் நௌவில் இருந்து அர்னாப் பிரிந்து வந்து ரிபப்ளிக் தொலைக்காட்சியை ஆரம்பிப்பதற்கு சற்று முன் அளித்த பேட்டி ஒன்றில், ஆங்கில செய்திச் சேனல்கள் இந்தி பேசும் சந்தையின் எதிர்பார்ப்புகளை சரிவர பூர்த்தி செய்யவில்லை எனவும், தனது புதிய சேனல் அந்த பிரிவினரின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வதையே பிரதான நோக்கமாக கொண்டிருக்கும் எனவும் குறிப்பிட்டார். அப்போது அந்த பேட்டியை படித்த போது ரிபப்ளிக் சார்பாக ஒரு இந்தி சேனலை களமிறக்கப் போவதைத் தான் அவர் குறிப்பிடுவதாக நாம் புரிந்து கொண்டோம். ஆனால், உண்மையில் அர்னாப் “இந்தி பேசும் சந்தையின் எதிர்பார்ப்பை” அப்படியே ஆங்கில ஊடகங்களுக்கும் கடத்தி வரத் திட்டமிட்டுள்ளார். இப்போது வெற்றியும் பெற்று விட்டார்.

மாட்டுவளைய மாநிலங்களில் நிலவும் பிற்போக்கான கலாச்சாரம், பார்ப்பனியக் கண்ணோட்டம், இந்துத்துவ ஆதரவு மனப்பாங்கு போன்றவை அந்த சமூகங்களில் இருந்து படித்து வரும் மேல் தட்டுப் பிரிவினரிடையேயும் நிலவுவதில் நமக்கு எந்த ஆச்சரியமும் இல்லை – எனவே அதில் ஒரு தொழில் வாய்ப்பு இருப்பதை அர்னாப் கண்டு பிடித்திருப்பதிலும் ஆச்சர்யம் இல்லை.

எப்படி WWF மல்யுத்தம் என்பது உண்மையில் ஒரு  விளையாட்டு அல்லவோ, எப்படி அது சில கதைவரிசைகளை (storyline) மையப்படுத்தி இருக்குமோ அப்படி செய்திச் சேனல்களும் செய்திகளோடு மெகா சீரியல் பாணி சதிக்கோட்பாடுகளை கலந்து கட்டி அடிக்கின்றன.

சுஷாந்த் சிங் மரணத்தை ஒட்டி ரிபப்ளிக் தொலைக்காட்சியின் டி.ஆர்.பி கணிசமாக உயர்ந்திருப்பதை எப்படி புரிந்து கொள்வது? இந்தியா போன்ற ஒரு பின் தங்கிய நாட்டில், அதுவும் பார்ப்பனிய கண்ணோட்டம் கலாச்சார ரீதியில் கோலோச்சும் ஒரு சமூகத்தில், மக்களின் அடிப்படை இச்சைகளைத் தூண்டி கல்லா கட்டுவது எளிது. சரியாக சொல்ல வேண்டுமென்றால், எரியத் தயாராக உள்ள வனத்தில் தான் காட்டுத் தீ வேகமாக பரவும்.

vanitha-lakshmi-kasthuri-300x156.jpgதற்போது சுஷாந்த் சிங் மரணம் தொடர்பான விவாதங்களின் தரத்திற்கு தங்களை இறக்கிக் கொள்ள தமது நேயர்களை செய்தித் தொலைக்காட்சிகள் மெல்ல மெல்ல பழக்கியுள்ளன. போர்னோகிராபிக்கு பழகுபவர்கள் ஆரம்பத்தில் மெல்லிய உணர்வுகளைத் தூண்டும் படங்களைப் பார்க்கிறார்கள்; ஒரு கட்டத்தில் அது அலுப்பூட்டுகிறது. போதுமான கிளர்ச்சியை அது தராத நிலையில் மேலும் மேலும் வக்கிரங்களை தேடிப் போகிறார்கள். சில ஆண்டுகளில் எல்லா வகையான ஆபாசங்களும் கிளர்ச்சியடைய வைக்காத நிலையில் கடைசியில் குழந்தைகள் வல்லுறவு மற்றும் ஸ்னஃப் எனப்படும் வல்லுறவு-கொலை தொடர்பான வீடியோக்களைப் பார்க்கும் நிலைக்குச் சென்று விடுகிறார்கள்.

இப்போது சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் தொடர்பாக ’தேசிய’ செய்தித் தொலைக்காட்சிகளில் அரங்கேறி வரும் காட்சிகள், ஸ்னஃப் வகை போர்னோகிராஃபி காட்சிகளுக்கு எந்த வகையிலும் குறைவில்லாதவை. இதை நுகர்பவர்களின் மனநிலையை நன்கு அறிந்திருப்பதால்தான், பொருளாதார பிரச்சினைகளை பேச முற்பட்ட சுமந்த்ராமனைப் பார்த்து ராகுல் சிவஷங்கர் “எனது நேரத்தையும், நேயர்களின் நேரத்தையும், தேசத்தின் நேரத்தையும் வீணடிக்காதே” என்று சொல்ல முடிகிறது.

வட இந்திய செய்திச் சேனல்களின் இவ்வாறான பண்பாட்டுத் தரமும்,   மாட்டுவளைய மாநிலங்களில் நிலவும் பிற்போக்கான கலாச்சாரம்,  மேட்டுக்குடி வர்க்கத்தின் பார்ப்பனியக் கண்ணோட்டம் ஆகியவையும் அங்கே நிலவும்  இந்துத்துவ ஆதரவும்  இயல்பாகவே ஒன்றோடொன்று தொடர்புள்ளவை. எண்பதுகளின் திரைப்பட வில்லன்களைப் போல், அமித்ஷா ஒரு பெட்டி நிறைய பணத்தை அடைத்து, அர்னாபை ஒரு மறைவான இடத்திற்கு வரச் சொல்லி, அவர் கையில் அந்தப் பெட்டியைக் கொடுத்து, இன்னின்ன மாதிரியெல்லாம் மக்களை முட்டாளாக்கும் வேலையைப் பார் – என்று உத்தரவிடத் தேவையில்லை.

அர்னாப்களின் நிகழ்ச்சிகள் மோடி & கோ-வின்  எதிர்பார்ப்பை இயல்பாகப் பூர்த்தி செய்கின்றன. இந்தக் கேவலங்களை இயல்பாக அங்கீகரிக்கும் அளவுக்கு நேயர்களும் பழகியிருக்கின்றனர். செய்திச் சேனல்களின் ஆபாசமும் இந்துத்துவ பாசிசமும் இயற்கையான கூட்டாளிகளாக உள்ளனர்.

வடக்கை ஒப்பிட்டால் தெற்கு கொஞ்சம் மேம்பட்டது தான்.  சங்கிகளின் “கந்த சஷ்டி கவசத்தை” தமிழகம் தோற்கடித்து விட்டது. ஆனால், வனிதா விஜயகுமாரின் வெற்றி? அதை நினைத்தால் கொஞ்சம் அச்சமாகத்தான் இருக்கிறது.

  • பா. சாரதி

https://www.newslaundry.com/2020/08/31/media-circus-a-day-with-reporters-outside-rhea-chakrabortys-house

https://thewire.in/women/rhea-chakraborty-sushant-singh-rajput-trial-by-media

https://thewire.in/media/editorial-rhea-chakraborty-tv-channels

https://www.newslaundry.com/2020/08/14/how-republic-passed-off-a-muddle-of-contradictions-as-news-about-disha-salians-death

https://www.newslaundry.com/2020/08/31/sushant-singh-rajput-case-what-does-the-law-say-about-the-ongoing-media-trial

https://www.indiatoday.in/movies/bollywood/story/sushant-singh-rajput-death-twitter-lashes-out-at-karan-johar-and-alia-bhatt-for-fake-tears-1689273-2020-06-15

இடைவெளி

 

http://inioru.com/சுஷாந்த்-சிங்-தற்கொலை-ஊட/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதுவரை போட்டியில் கலந்துகொண்டவர்கள்  1) goshan_che 2)பாலபத்ர ஓணாண்டி 3)புரட்சிகர தமிழ்த்தேசியன் 4)சுவி 5)நிழலி 6)கிருபன் 7)ஈழப்பிரியன் 8)தமிழ்சிறி 9)கந்தையா57 10)வாத்தியார்
    • பிற்சேர்க்கை III வெஸ்டேர்ன் மெடிசின் Vs வெதமாத்தையா  அடுத்த பாகத்தை கொடுக்க பிந்தியமைக்கு மன்னிக்கவும். படங்களை போட்டது திரியை எழுத்தில் இருந்து படங்கள் நோக்கி திருப்பி விட்டது. ————— இலங்கை போவதில் ஒரு வசதி - கொஞ்சம் காசை செலவழித்து ஒரு புல் மெடிக்கல் செக்கப் செய்துகொண்டு வரலாம். அதுவும் நவலோக்க, டேர்டன்ஸ், ஆசிரி, லங்கா ஹொஸ்பிட்டல் போன்ற முதல் தர வைத்தியசாலைகளிலேயே £230 க்குள் ஒரு டோட்டல் மெடிக்கல் செக்கப்பை செய்துகொள்ளலாம்.. முன்னர் ஒரு காலம் இருந்தது யூகே NHS என்றால் உலகிற்கே முன்மாதிரி, ஆனால் இப்போ அப்படி இல்லை. எல்லாம் 14 வருட வலதுசாரி மகாராசாக்களின் ஆட்சி தந்த “முன்னேற்றம்”. இப்போதெல்லாம் ஜீ பி யிடம் அப்பாயின்மெண்ட் வாங்குவதை விட நோயில் சாகலாம் என்ற நிலை. அப்படியே ஜி பி யை சந்திக்க முடிந்தாலும், அவர் refer பண்ணி ஒரு ஸ்கான் எடுப்பதற்குள் சித்திரகுப்தன் சீட்டை கிழிக்க ரெடியாகி விடுவார். அத்தோடு இலவசம் என்பதால் கண்ட மாதிரி speculative டெஸ்டுகளும் எடுக்க refer பண்ண மாட்டார்கள். முதலில் தண்ணீர் குடியுங்கள், ரெஸ்ட் எடுங்கள் என்றே சொல்லி அனுப்புவார்கள். ஆகவே உடனடி கவனிப்பு தேவை எனில், ஒன்றில் கணிசமான அளவு பணத்தை கட்டி யூகேயில் தனியார் ஹெல்த் இன்சூரன்ஸ் எடுத்து வைக்க வேண்டும்.  அல்லது….இலங்கை அல்லது இந்தியா (பல்லு கட்ட போலந்து, துருக்கி) போன்ற நாடுகளுக்கு போய் இப்படி ஒரு செக்கப்பை செய்து வரலாம். இந்த ரிப்போர்ட்டுகள் எல்லாம் எடுக்க ஒரு நாள் செலவாகும். பின்னர் இதை வைத்து ஒரு கன்சல்டண்டுடன் உங்களுக்கு அப்பாயின்மெண்ட்டும் தருவார்கள். இதில் நன்மை என்னவென்றால் - இந்த டெஸ்டுகளில் ஏதாவது கோளாறாக கட்டினால் - அதை நேரடியாக இங்கே ஜி பி யிடம் காட்டும் போது - நோயின் தார்பரியம் அறிந்து வேலை கட…. கட…. என நடக்கும். எனக்கு தெரிந்த சிலர் முன்பே இவ்வாறு செய்திருந்தாலும், இதுவரை நான் செய்ததில்லை. இந்த முறை வயதும் 45 இன் அடுத்த பக்கத்துக்கு போய் விட்டதாலும், கடந்த 3 வருடத்தில் ஜி பி க்கள் தந்த அனுபவத்தினாலும் - ஒரு டெஸ்டை செய்ய முடிவு செய்தேன். இந்தியா போல் அல்லாது, இலங்கையில் health tourism த்தின் பெறுமதி இன்னும் வடிவாக அறியப்படவில்லை. விலைகளும் உள்ளூர் ஆட்களை குறிவைத்தே உள்ளன (வடை, கொத்து, சிகிரியா டிரிக்ஸ் இன்னும் இங்கே வரவில்லை).  ஒவ்வொரு ஆஸ்பத்திரியும், பல வகை வகையான packages வைத்திருக்கிறார்கள்.  ஒன்றிற்கு மூன்றாக தெரிந்த வைத்தியர்களிடம் கதைத்து - ஒரு package ஐ நானும் ஒரு முண்ணனி வைத்தியசாலையில் தெரிந்து கொண்டேன். டெஸ்ட் எடுக்கும் நாள் அதிக நிகழ்வுகள் இன்றி கழிந்தது. ஒவ்வொரு உடல் பகுதிக்குமுரிய இடத்துக்கு அந்த டெஸ்டுக்காக போகும் போது, அவை உள்ளூர் வாசிகளால் நிரம்பியே இருந்தது. எந்த நாட்டிலும், எந்த நிலையிலும் உணவுக்கு அடுத்து நல்ல பிஸினஸ் மருத்துவம் என்பது புரிந்தது. எல்லாம் முடிந்து கன்சல்டேசன் போனால் -கன்சல்டன் - எடுத்த எடுப்பிலேயே எந்த நாடு என்று கேட்டார் - டாக்டரிடம் பொய் சொல்ல கூடாதாமே? ஆகவே எனது “யாழ்பாணம்/மாடகளப்பு/வன்னி/இந்தியா” உத்தியை கைவிட்டு யூகே என உண்மையை சொன்னேன். கண்ணாடிக்கு மேலால் ஒரு பார்வை பார்த்து விட்டு, நான் அங்கேதான் மேற்படிப்பு படித்தேன், “இப்படி ஒரு முழுமையான டெஸ்டை அங்கே உன்னால் செய்யவே முடியாது அல்லவா”, என அவருக்கு ஏலவே தெரிந்த விடயத்தை என்னிடம் உறுதி செய்தார். என்ன இருந்தாலும் என் குஞ்சல்லவா? விட்டு கொடுக்க முடியாதே? ஆம், ஆனால் இங்கும் அரச வைத்தியசாலையில் இப்படி ஒரு முழுமையான டெஸ்டை செய்யமாட்டீர்கள்தானே என்றேன். உனக்கு வாயில் கொலஸ்டிரோல் கூட என்பதை போல் ஒரு பார்வை பார்த்து விட்டு, ரிப்போர்ட்டுக்கான வியாக்கியானத்தை ஆரம்பித்த வைத்தியர். 40 நிமிட கன்சல்டேசனின் பின், ஏலவே தெரிந்த விடயங்களை தவிர வேறு ஏதும் கோளாறு இல்லை என்பது நிம்மதியாக இருந்தாலும்…. இவ்வளவு செலவழித்துள்ளேனே…ஒன்றும் இல்லையா என இன்னொரு மனம் மொக்குத்தனமாய் ஒரு கணம் சிந்திக்கவும் செய்தது🤣. கடைசியாக…எனி அதர் குவெஸ்சன்ஸ் க்கு வைத்தியர் வர, என் நெடுநாள் உபாதையான சயாடிக்கா கால் வலியை பற்றி சொன்னேன். அக்கம் பக்கம் பார்த்த வைத்தியர், மெல்லிய குரலில் “இதுக்கு இங்கே உள்ள வெதமாத்தையாதான் சரி” என கூற, யாரையாவது ரெக்கெமெண்ட் பண்ண முடியுமா என நான் அவரை விட மெல்லிய குரலில் கேட்டேன். கன்சல்டேசன் அறையை விட்டு கிளம்பும் போது எனது போனில் ஒரு பிரபல வெதமாத்தையாவின் தொடர்பிலக்கமும், விலாசமும் சேமிக்கப்பட்டிருந்தது. ———————- ஆவலோடு காத்திருங்கள்! பிற்சேர்க்கை IV வெதமாத்தையாவும் ஆவா குரூப்பும்
    • 1994 இல் மயிலாப்பூர் சட்டமன்றத்துக்கும் இன்னுமொரு சட்டமன்றத்துக்கும் இடைக்கால தேர்தல் நடைபெற்றது.  யாராவது MLA காலமானால் அல்லது வேறு சில காரணங்களுக்காக இடைக்கால தேர்தல் நடைபெறும். தமிழகம் முழுவதும் தேர்தல் நடைபெறாமல் ஒன்று இரண்டு தொகுதிகளுக்கு மட்டும் தேர்தல் நடைபெறுவதினால் முக்கிய தலைவர்களை இத்தொகுதிகளில் அடிக்கடி காணலாம். நான் அடையார் , Besant நகர் பகுதியில் எனக்கு தெரிந்தவர்கள் வீடுகளுக்கு செல்வதுண்டு. அப்பொழுது பல தலைவர்களை பார்த்திருக்கிறேன். பாட்டாளி மக்கள் தலைவர் இராமதாஸ் சென்ற வாகனத்தில் மன்சூர் அலிகானை வந்திருந்தார். ‘ பிரபாகரன் கிரேட், இராவணன் கிரேட்’ என்று அவர் உரையாற்றினார்.  வைகோவுடன் எஸ் எஸ் சந்திரன் வந்திருந்தார்.  நடிகர் எஸ் எஸ் சந்திரன் மதிமுகவில் அப்பொழுது இருந்தார் கலைஞ்சர் கருணாநிதிஐக்கண்டதும் பல ஆதரவாளர்கள் தங்கள் குழந்தைகளுக்கு பெயர் சூட்ட சொன்னார்கள். ஒரு பிள்ளைக்கு ‘ கனிமொழி’ என்று பெயர் சூட்டினார். இன்னுமொரு பிள்ளைக்கு ‘இளவரசன்’ என்று பெயர் சூட்ட, ‘இவர் பெண் குழந்தை’ என்று குழந்தையின் தகப்பனார் சொல்ல ‘இளவரசி’,என்று கலைஞர் பெயர் சூட்டினார்.  ‘அவர்கள் லட்டினுள் மோதிரம் வைத்து குடுக்கிறார்கள் ( அதிமுக கட்சி) . வாங்குங்கள் . ஆனால் வாக்குகளை எமக்கு அளியுங்கள்’ என்றார். பெசன்ட் நகர் பேருந்து நிலையத்தருகில் துவிச்சக்கரவண்டியில் வரும்போது காவல்துறையினர் என்னையும் சேர்ந்து பலரை மறித்து நிறுத்தினார்கள். சில நிமிடங்களில் ‘அதோ அந்த பறவை போல’  பாடலை Band குழு ஒன்று இசை அமைக்க வாகனம் ஒன்று வந்தது. பின்னால் வந்த இன்னுமொரு வாகனத்தில் ஜெயலலிதா அவர்கள் துப்பாக்கிகள் ஏந்திய பாதுகாப்பு படைகளுடன் வந்து உரையாற்றினார். காங்கிரஸ் தலைவர்களில் ஒருவர் வாழப்பாடி ராமமூர்த்தியின் வீட்டின் அருகே செல்லும் போது எப்போதும்கண்டும் காணாமல் மாதிரி செல்வார்.  ஆனால் தேர்தல் என்றதினால் கை குப்பி என்னை பார்த்து வணங்கினார். தமிழக பத்திரிகைகளில் தேர்தல் செய்திகள் வாசிப்பதுண்டு. இதனால் ஓரளவு ஆர்வம்
    • "மாற்றம்" [யாழ்ப்பாணத்து மருத்துவ மாணவனின் கதை]   துடிப்பான நகரமான யாழ்ப்பாணத்தில், இலங்கையின் வடபகுதியில், பரபரப்பான தெருக்களுக்கும், யாழ்ப்பாணக் கடல் நீரேரியின் [கடற்காயல் அல்லது வாவி] அமைதியான கடற்கரைக்கும் நடுவே, குறளரசன் என்ற இறுதியாண்டு மருத்துவ மாணவர் வாழ்ந்து வந்தான். தீவின் வரலாற்றில் வேரூன்றிய நீண்ட பரம்பரையுடன் ஒரு தமிழ் குடும்பத்தில் பிறந்த குறளரசன், பல நூற்றாண்டுகளின் பாரம்பரியத்தின் எடையையும் 'மாற்றத்திற்காக' ஏங்கும் மக்களின் அபிலாஷைகளையும் [ஏக்கம் கலந்த எதிர்பார்ப்பையும்] தனக்குள் சுமந்தான். குறளரசன் மருத்துவம் படிக்கும் மாணவன் மட்டுமல்ல; அவன் தனது தமிழ் சமூகத்தின் உரிமைகள் மற்றும் அங்கீகாரத்திற்காக ஒரு தீவிர சமூக உழைப்பாளியாகவும் இருந்தான். தமிழரின் வாழ்வில் ஏற்பட்ட பின்னடைவுகள் மற்றும் ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராட்டத்தின் வரலாற்று கதைகளிலும் மற்றும் இன்று நடைபெறும் அரசியல் அழுத்தங்களிலும் வளர்க்கப்பட்ட அவன், ஒரு அரசியல் 'மாற்றம்' தேவை என்பதை விரும்பியது  மட்டுமல்ல, தனது மக்களின் வாழ்வு மற்றும் செழிப்புக்கு அது இன்றியமையாதது என்றும்  நம்பினான். குறளரசன் மருத்துவப் படிப்பைத் தொடர்ந்த யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம், இலங்கை வாழ் தமிழ் இளைஞர்களின், சமூகத்தின்  நம்பிக்கையின் விளக்காக நின்றது. இங்குதான் சிங்கள வம்சாவளியைச் சேர்ந்த, அனுராதபுரத்தை பிறப்பிடமாகக் கொண்ட,  முதலாம் ஆண்டு மருத்துவ மாணவியான ருவனிக்காவை [Ruwanika] அவன் முதல் முதல் சந்தித்தான். அவர்களின் நட்பு இனம் மற்றும் மொழியின் தடைகளைத் தாண்டி ஆழமான ஒன்றாக மலர்ந்தது. ஆனால் அவர்களின் பாசத்தின் அரவணைப்பில் கூட, குறளரசனால் அவர்களது சமூகத்தை ஆட்கொண்ட ஆழமான வேரூன்றிய பிளவுகளின் நிழலை மறக்க  முடியவில்லை. அவன் அதில் உறுதியாக நின்றான்.  குறளரசன் தனது படிப்பில் ஆழமாக இருந்தாலும், தன் இலங்கை மக்களின் வரலாற்றை சரியாக அறிவதிலும் முழுமையாக தன் கவனத்தை செலுத்தினான். தமிழ் சிறுபான்மை யினருக்கும் சிங்கள பெரும்பான்மை அரசாங்கத்திற்கும் இடையிலான உறவில், அரசாங்க தலைவர்களால் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளையும், பின் அவ்வாற்றில் முக்கியமான ஒன்றையேனும் நிறைவேற்றாமல் உடைக்கப்பட்டு கிடங்கில் போட்டத்தையும் மற்றும் ஒவ்வொரு முறையும் தமிழர்களின் சுதந்திரம், கல்வி, உரிமைகள், காணிகள், வழிபாடுகள் மேலும் மேலும் பறிக்கப்படத்தையும், மறுக்கப்படத்தையும் அதனால் ஏற்பட்ட விளைவுகளையும் தொல்லைகளையும்  சிதைந்த கனவுகளையும் பற்றி அவன் அடிக்கடி சிந்தித்தான். 1957 பண்டாரநாயக்கா - செல்வநாயகம் உடன்படிக்கையில் இருந்து தொடர்ந்து பல தசாப்தங்களில் அரசியலமைப்பு சீர்திருத்தத்திற்கான தோல்வியுற்ற முயற்சிகள் வரை, குறளரசன் காட்டிக்கொடுப்பு மற்றும் ஏமாற்றங்களின் தொடர்ச்சிகளைக் கண்டான்.  ஆனாலும், விரக்தியின் மத்தியில், புத்தரின் உண்மையான போதனைகளில் குறளரசன் ஆறுதல் கண்டான். ஞானம் பெற்றவர் போதித்த இரக்கம், சகிப்புத்தன்மை, புரிதல் ஆகிய கொள்கைகளை அவன் நம்பினான். இனம் மற்றும் மதத்தின் தடைகளைத் தாண்டி, இந்த விழுமியங்களை மக்கள் ஏற்றுக் கொள்ளும் ஒரு சமூகத்திற்காக அவன் ஏங்கினான். நீண்ட காலமாக தனது மக்களை ஒடுக்கிய ஒரு மகாவம்சம் என்ற புராண கதையின் கனத்துடனும் போராடினான். குறிப்பாக புத்த சமயத்தை போதிக்கும் துறவிகள், உண்மையில் இலங்கையில் முறையாக பின்பற்றுகிறார்களா என்று தனக்குத் தானே கேள்வி கேட்டான்?   மகாவம்சம், பாளி மொழியில் எழுதிய, புத்தமதத்தை முன்னிலைப்படுத்திய வரலாற்றின் புராணக் கதையாகும். மகாவிஹரா துறவிகள் கி பி 5ம் அல்லது கி பி 6ம் நூற்றாண்டில், புத்த மதத்தை பின்பற்றும் அரசனின் ஆதரவுடன், புத்த மதத்தை பின்பற்றும் வெவேறு இனக்குழுக்களை ஒருங்கிணைத்து ஒரு இனமாக, புராண விஜயனை பின்பற்றுபவர்களாக, சிங்கத்தின் வழித்தோன்றலாக, உருவாக்க முன், இலங்கையில் ஒரு சிங்கள இனம் என்று ஒன்றும் இருக்கவில்லை என்பது வரலாற்று உண்மையாகும். அதனை  முதல் வில்ஹெய்ம் கெய்கர் பாளி மொழியில் இருந்து ஜெர்மன் மொழிக்கும் பின்னர், 1912ல் ஆங்கிலத்திற்கும் மொழிப்பெயர்ப்பு செய்தனர், அதன் பின்பு தான் சிங்கள மொழிபெயர்ப்பு வந்தது, அதுவரை இலங்கையில் சிங்கள - தமிழ் வேறுபாடுகிடையாது, அதன் பின் தமிழருக்கு எதிரான கருத்துக்கள் தீவின் மீது நீண்ட நிழலைப் போட்டு இன்றைய நிலைக்கு இட்டுச் சென்றது. எனவேதான் குறளரசன் மற்றும் தமிழ் சமூகத்திற்கு, மகாவம்சம் ஒரு வரலாற்று புராண நூல் மட்டுமல்ல; அது ஒடுக்கு முறைக்கான ஒரு கருவி, ஓரங்கட்டப்படுதல் மற்றும் பாகுபாடுகளை நியாயப்படுத்த பயன்படுத்தப் பட்ட ஆயுதம் ஆக அது தென்பட்டது, அதனால் தான் பொய்யான புராண கதையில் இருந்து உண்மையான தொல்பொருள் மற்றும் வரலாறுச் சான்றுகள் கூடிய இலங்கை வரலாறு 'மாற்றம்' காணவேண்டும், உண்மையின் அடிப்படையில், இரண்டாயிரம் ஆண்டுகளாக தமிழ் பேசி வாழும் இலக்கை தமிழர்களின் மேல் அரசு கொண்டு இருக்கும் நிலையில் 'மாற்றம்' வேண்டும், எல்லாவற்றுக்கும் மேலாக புத்தரின் போதனைகளை போதிப்பவர்கள், அவர் வழியில் தங்கள் வாழ்க்கையை அமைக்கும்  'மாற்றம்' தேவைப்படுகிறது. இந்த மூன்று மாற்றங்களையும் தான் குறளரசன் காணத் துடித்தான்.   சிறுவயதிலிருந்தே, மகாவம்சத்தின் உண்மைத் தன்மையை கேள்விக்குள்ளாக்கும் பல வரலாற்று உண்மைகளை கற்றுக் கொண்டான், உண்மையை மறைக்கும் கட்டுக்கதைகள் மற்றும் பிரச்சாரத்தின் அடுக்குகளையும் அது முன்வைக்கும் ஆபத்தான முறையில் தவறாக வழிநடத்தும், வெறும் பக்கச்சார்பான விவரிப்புகளையும் அறிந்தான். இது சிங்கள புத்த  தலைமுறைகளின் மனதை விஷமாக்கும் பொய்கள் என்பதை அவன் உண்மையான சான்றுகளுடன் அறிந்தான். அதனால்த் தான் 'மாற்றம்' உடனடியாகத் தேவை என்கிறான்!  ஆனால் மகாவம்சத்தின் வஞ்சகத்தால் பாதிக்கப்பட்டது தமிழர்கள் மட்டும் அல்ல. இந்த வரலாற்று சூழ்ச்சிக்கு சிங்கள சாமானிய மக்களும் எப்படி பலியாகினர் என்பதை குறளரசன் இலங்கையின் இன்றைய நிகழ்வுகளில் நேரில் கண்டான். மற்ற சமூகங்களின் பங்களிப்புகள் மற்றும் இருப்பை அழிக்கும் அரசியல் மற்றும் மத தலைவர்களின் செயல்களில்! அது தான் 'மாற்றத்துக்காக' ஏங்குகிறான்!  புத்தர், ஞானம் பெற்றவர், இரக்கம் மற்றும் அகிம்சையின் செய்தியைப் போதித்தார், ஆனால் அவரது போதனைகள் அதிகாரத்தில் இருப்பவர்களின் நிகழ்ச்சி நிரல்களுக்கு சேவை செய்ய திரிக்கப்பட்டன. உலகளாவிய அன்பு மற்றும் புரிதல் கொள்கைகளின் அடிப்படையில் உருவாக்கப் பட்ட ஒரு மதம், மற்றவர்களை ஒதுக்கி வைப்பதையும் ஒடுக்குவதையும் நியாயப்படுத்த எப்படி இன்று ஒத்துழைக்கப்பட்டது என்று குறளரசனால் ஆச்சரியப்படாமல் இருக்க முடியவில்லை. குறளரசனும் ருவனிக்காவும்  தங்களின் உறவின் சிக்கல்களை சிலவேளை எதிர் கொள்ளவேண்டி இருந்தது. அவர்கள் தங்களைச் சுற்றியுள்ள தப்பெண்ணங்கள் மற்றும் பாரபட்சங்களை அடிக்கடி எதிர்கொண்டனர். கடந்த காலத்தின் பாவங்கள் ஒப்புக்கொள்ளப்பட்டு, திருத்தப்பட்டு, மன்னிப்பு கேட்டு, அனைத்து சமூகங்களும் நல்லிணக்கத்துடனும், பரஸ்பர மரியாதையுடனும் இணைந்து வாழக்கூடிய எதிர்காலத்தை, இவ்வாறான அதி முக்கிய 'மாற்றத்தை' இருவரும் எதிர் பார்த்தனர்.  "இருஇனம் வாழும் ஒரு நாட்டில்  இருக்கையை பிடுங்கி எடுத்து தனதாக்கி இறுமாப்புடன் வரலாற்றையும் திருத்தி எழுதி இதயமற்று நசுக்குவது பெருமை அல்ல? "  "இச்சை படுத்துவதை உணர்ந்து நிறுத்தி  இணக்கம் கண்டு இதயம் பரிமாறி  இன்று நேற்று செய்த அநியாயங்களுக்கு  இனியாவது மன்னிப்பு கேள் நாடுமுன்னேறும்! " இந்த 'மாற்றம்' தான் அவன் சுருக்கமாக எதிர்பார்ப்பது. எது எப்படியானாலும்,  அவர்களின் காதல் ஒரு இணக்கமான சகவாழ்வு சாத்தியம் என்பதற்கு ஒரு சான்றாக இருந்தது, கருத்து வேறுபாடு இலங்கையில் நிலவினாலும், அவர்களின் வாழ்க்கை என்ற கடலில், நம்பிக்கை கலங்கரை விளக்காக இருந்தது. வருடாந்த ஜெனிவா தலையீடுகள் குறளரசனுக்கும் அவரது சமூகத்திற்கும் ஒரு நம்பிக்கையை அளித்தன. இலங்கையில் ஏற்பட்டுள்ள மனித உரிமை மீறல்கள் மற்றும் அமைப்பு ரீதியான அநீதிகளுக்கு தீர்வு காண சர்வதேச சமூகம் இங்குதான் கூடுகிறது. குறளரசன் அர்த்த முள்ள 'மாற்றத்திற்காகவும்', தனது கடமைகளை மதிக்கும் மற்றும் அனைத்து குடிமக்களின் கண்ணியத்தை நிலைநிறுத்தும் ஒரு அரசாங்கத்திற்காகவும் உருக்கமாக பிரார்த்தனை செய்தான். அவனுடன் அவனின் காதலி ருவனிக்காவும்  இணைந்து கொண்டாள். என்றாலும் குறளரசனும் ருவனிக்காவும் பாவத்தில் இருந்து இலங்கையை மீட்பதற்கான பாதை தடைகள் நிறைந்தது என்பதை உணர்ந்தனர். மேலும் 'மாற்றம்' எளிதில் வராது என்பது  குறளரசக்குத் தெரியும். அறியாமை மற்றும் தப்பெண்ணத்தின் தூக்கத்திலிருந்து ஒரு நாள் முழு சமூகமும் விழித்து, கடந்த கால தவறுகளை உணர்ந்து, நல்லிணக்கம் மற்றும் நீதியை நோக்கி ஒரு புதிய பாதையை உருவாக்குமா? அல்லது அனைத்து குடிமக்களின் உரிமைகளையும் கண்ணியத்தையும் அங்கீகரிக்கும் அதிகாரங்களை கட்டாயப்படுத்த சர்வதேச சமூகத்தின் இடைவிடாத அழுத்தம் தேவைப்படுமா?. அவன் மனம் அலை பாய்ந்தது. இந்த கவலையிலும், மற்றும் படிப்பாலும், அவன் சிலவேளை தனிமையை விரும்பினான். இதனால் அவன் ருவனிக்காவை சந்திப்பதும் குறையத் தொடங்கியது. இது அவளுக்கு ஒரு தவிப்பைக் கொடுத்தது.  ஒரு நாள் அவள், அவனின் காதில் விழக்கூடியதாக தன் தவிப்பை ஒரு சிங்கள பாடலை முணுமுணுத்து எடுத்துக் காட்டினாள். 'සිහිනෙන් වගේ ඇවිදින් ආයෙත් සැගවී හිටියේ කොහෙදෝ? මදකින්  පෙනී නොපෙනී ගියේ මේ ආදරේ හැටිදෝ  ?' 'නෙත සනසනා නුඹගේ සිනා මා රැය පුරා එය සිහි කලා නිදි දෙවු දුවත් අද නෑ ඇවිත් ඈතින් ඉදන් සරදම් කලා.'. 'නෙතු වෙහෙසිලා  දහවල  පුරා නුඹ සොය සොයා සිත දුර ගියා  මදකින්  පෙනී නොපෙනී ගියේ මෙ ආදරේ හැටිදෝ  ?'   குறளரசன் மௌனமாக கண்ணீர் சிந்தி, அதே பாடலை தமிழில் முணுமுணுத்தான். "மீண்டும் வருவாயோ கனவில் அணைப்பாயோ? எங்கே மறைந்தாய் ? எந்தத் தொலைவில் ? திடீரெனத் தோன்றுவாய்? சடுதியாக மறைவாய்? உண்மைக் காதலா?, வெறும் நாடகமா?" "சோர்ந்த கண்களுக்கு புன்னகை தைலம் இரவின் மடியில் முகத்தைக் காண்கிறேன்  இரவுதேவதை என்னைத் தழுவ மறுக்கிறாள்?  தூர விலகி கிண்டல் செய்கிறாள்?." "பகலில் கண்கள் சோர்வு அடையுதே  இதயம் அலைந்து உன்னைத் தேடுதே!  கண்ணுக்குள் அகப்படாதா காதலா இது? கணப்பொழுதில் கடக்கும் கனவின் மகிழ்ச்சியா ?" குறளரசன் தனது மருத்துவப் பயிற்சியின் இறுதி நாட்களை நெருங்கிக் கொண்டிருந்தபோது, அவன் நம்பிக்கைக்கும் விரக்திக்கும் இடையே கிழிந்துக் கொண்டு இருந்தான். முன்னோக்கி, செல்லும் நேரிய பாதை சவால்கள் நிறைந்ததாக இருந்தது, ஆனால் அவன் ஒரு சிறந்த நாளைய கனவுகளை என்றும் கைவிட மறுத்துவிட்டான். கல்வி, சுறுசுறுப்பு மற்றும் அன்பு ஆகியவற்றின் சக்தியை அவன் நம்பினான். பிளவு மற்றும் அவநம்பிக்கையால் பிளவுபட்ட சமூகத்தின் குழப்பங்களுக்கு மத்தியில் அவர்களின் காதல் மலர்ந்தது. யாழ்ப்பாண பல்கலைக்கழக முற்றங்களில் மற்றும் மாலை நேர உலாக்களில் அவர்கள் ஒருவருக்கொருவர் கைகளில் ஆறுதலைக் கண்டார்கள், அவர்களின் காதல் வெளியில் வீசும் புயல்களிலிருந்து ஒரு தற்காலிக அடைக்கலமாக இருந்தது.  "மாலை நேர தென்றல் என்ன பாடுதோ என் மன்னன் எங்கே எங்கே என்று தேடுதோ மஞ்சள் வண்ண வெய்யில் என்று தோணுதோ என் மங்கை மேனி தங்கம் என்று நாணுதோ?" "பூ விரிந்த சோலை என்ன எண்ணுதோ இந்த பூவைப்போல மென்மை இல்லை என்றதோ தங்க நிற கலசம் எடுத்து நடக்கும் தேரோடு பக்கம் வந்து மெதுவாய் பதமாய் இதமாய் உறவாடு?" ஒரு சிங்கள குடும்பத்தின் மகளான ருவனிக்காவுக்கு, குறளரசனை நேசிப்பது என்பது பிறப்பிலிருந்தே அவளிடம் சூழ்நிலை காரணமாக வேரூன்றியிருந்த தப்பெண்ணங்கள் மற்றும் பக்கசார்புககளின் தாக்கங்களை கலையத் தொடங்கியது. குறளரசனின் தமிழ் மக்கள் சமூகத்தின் விளிம்புநிலையில் நலிந்தபோது, எழுபத்தி ஆறு ஆண்டுகளாக, சலுகை மற்றும் அதிகாரத்தால் பயனடைந்த ஒரு சமூகத்தைச் தான் சேர்ந்தவர் என்ற குற்ற உணர்வுடன் அவள் சிலவேளை மல்யுத்தம் செய்தாள். ஆனால் குறளரசனிடம், அவள் ஒரு காதலியாக மட்டுமல்ல, நீதி மற்றும் சமத்துவத்திற்கான போராட்டத்தில் ஒரு பங்காளியாகவும் இருந்தாள். ஒன்றாக, காதல் இனம் மற்றும் மொழியின் தடைகளைத் தாண்டிய எதிர்காலத்தை கற்பனை செய்யத் துணிந்தனர், அங்கு கடந்த கால பாவங்கள் ஒப்புக் கொள்ளப்பட்டு பரிகாரம் செய்யப்பட்டன. அவர்கள் வாழ்க்கையில் ஒரு புதிய அத்தியாயத்தின் வாசலில் நிற்கும் போது, குறளரசனும் ருவனிக்காவும் ஒருவரையொருவர் ஒட்டிக்கொண்டனர், அவர்களின் காதல் இருள் கடலில் நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக இருந்தது. ஏனென்றால், அவர்களின் கூட்டணியில், மகாவம்சத்தின் எதிரொலிகள் மௌனமாகி, ஒற்றுமை, சமத்துவம் மற்றும் புரிந்துணர்விற்காக அழைப்பு விடுக்கும் குரல்களின் சேர்ந்திசையால் [கோரஸால்] பதிலீடு செய்யப்பட்ட எதிர்காலம் பற்றிய வாக்குறுதி இருந்தது. யாழ்ப்பாணத்தின் மையப்பகுதியில், குழப்பமான கடந்த காலத்தின் எதிரொலிகள் மற்றும் நிச்சயமற்ற எதிர்காலத்தின் கிசுகிசுக்களின் மத்தியில், குறளரசன் தனது மக்களுக்கு நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக உயர்ந்து நின்றான். மாற்றத்திற்கான சாத்தியக்கூறுகள் பற்றிய அவனது அசைக்க முடியாத நம்பிக்கையில், ஒரு நாள், தமிழர்களின் குரல்கள் கேட்கப்படும், அவர்களின் கனவுகள் நனவாகும், 'மாற்றம்' கட்டாயம் நிகழும் என்ற நம்பிக்கை, மற்றும் இரவீந்தரநாத் தாகூரின் கீதாஞ்சலி பாடல் [“Where the mind is without fear and the head is held high; Where knowledge is free;] அவனின் போராட்டத்தைத் தொடர ஊக்கம் & கொடுத்தது.  வலிமையைக் கொடுத்தது. "இதயம் எங்கே அச்சமின்றி உள்ளதோ, எங்கே தலை நிமிர்ந்து நிற்கிறதோ, அறிவு வளர்ச்சிக்கு எங்கே பூரண விடுதலை உள்ளதோ, குடும்பத்தின் குறுகிய தடைப்பாடுகளால் வெளி உலகின் ஒருமைப்பாடு எங்கே  உடைபட்டுத் துண்டுகளாய்ப் போய்விட படவில்லையோ, வாய்ச் சொற்கள் எங்கே மெய்நெறிகளின் அடிப்படையிலிருந்து வெளிப்படையாய் வருகின்றனவோ, விடாமுயற்சி எங்கே தளர்ச்சி யின்றி பூரணத்துவம் நோக்கி தனது கரங்களை நீட்டுகிறதோ, அடிப்படை தேடிச் செல்லும் தெளிந்த அறிவோட்டம்  எங்கே பாழடைந்த பழக்கம் என்னும் பாலை மணலில் வழி தவறிப் போய்விட வில்லையோ, நோக்கம் விரியவும், ஆக்கவினை புரியவும் இதயத்தை எங்கே வழிநடத்திச் செல்கிறாயோ,  அந்த விடுதலைச் சுவர்க்க பூமியில் எந்தன் பிதாவே! விழித்தெழுக என் தேசம்!" [கீதாஞ்சலி / தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா] நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]        
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.