Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திருநங்கை வாழ்க்கை

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

திருநம்பி

நீயும் நன்றாக வாழ்ந்திட்டு, மற்றவனையும் வாழவிட்டுவிட்டுபோ.

ஒவ்வொருவரும் அவர்களின் உணர்வுப்படி வாழ்கின்றார்கள்

 

  • Replies 52
  • Views 7.4k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மலேசியாவில் திருநங்கையாக மாறுவதற்கு தடை

 

  • கருத்துக்கள உறவுகள்

திருநங்கை எனும் பதம் பொருத்தமானதா (நிகரானதா) Transgender எனும் ஆங்கில சொல்லிற்கு?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி ஆனந்த்பாபு

15959589802952.jpg

நாம் அன்றாட தினசரி வாழ்க்கையில் பிறருக்கு பல வழிகளில் உதவிடும் மனிதர்களைப் பார்க்கிறோம். அவர்கள் எந்தவித எதிர்பலனையும் பாராது அந்த உதவியைச் செய்துவருவதை கவனித்திருப்போம். திருநங்கைகளின் சுயதொழில் முயற்சிகளுக்கு கை கொடுக்கும் காவல் ஆய்வாளர் ஜி.ஆனந்த்பாபு. இப்படி எளிய மக்களுக்காக தனது உதவிக்கரங்களை நீட்டியவருக்கு ‘காட்பரி டெய்ரி மில்க்’ நன்றி கூற விரும்புகிறது. அது அவர்களின் சேவைப் பயணத்தை இன்னும் சுகமாக்கும், வலுப்படுத்தும்...

‘காவல்துறை உங்கள் நண்பன்’ என்ற சொல்வதைச் செயலில் காட்டுவதுபோல் காவல்துறையில் பதவியேற்ற நாளிலிருந்து இன்றுவரை வாழ்ந்து வருகிறார் சூளைமேடு காவல்நிலையத்தின் ஆய்வாளர் ஜி.ஆனந்த்பாபு. கடலூரைச் சேர்ந்த ஆனந்த்பாபு, கல்லூரியில் ஹாக்கி விளையாட்டு வீரர். தாத்தா ராணுவம், அப்பா விமானப் படை, மாமா காவல்துறை என இவரது குடும்பத்தினர் மக்கள் சேவைப் பணியில் இருந்தவர்கள். பிறந்ததிலிருந்தே காவல்துறை வேலை ஒரு பெருமை என்ற சூழலில் வளர்ந்த ஆனந்த்பாபுவும், அதே துறைக்குள் நுழைந்தார்.

2000-ஆம் ஆண்டு காட்டுமன்னார் கோயில் பகுதியில் உதவி ஆய்வாளராகத் தன் பணியை ஆரம்பித்தார். காட்டுமன்னார் கோயிலில் பணி செய்த காலத்தில் அங்குள்ள இளைஞர்களைத் திரட்டி அவர்களுக்கு காவல்துறை, ராணுவ வேலையில் சேருவதற்கான பயிற்சியும் ஊக்கமும் அளித்துள்ளார். இதன்மூலம் கிட்டத்தட்ட 100 பேருக்கு காவல்துறையில் வேலை கிடைத்திருக்கிறது.

2010–ஆம் ஆண்டு சென்னை மதுரவாயில் காவல்நிலையத்துக்குப் பதவி உயர்வில் ஆய்வாளராக வந்த ஆனந்த்பாபு, சூளைமேடு பகுதியில் இருக்கும் திருநங்கைகளுக்கு ஆனந்த்பாபு ஒரு உற்ற தோழனாகவே இருக்கிறார். அவர்களின் மறுவாழ்வு, மாற்றுத்தொழில் ஏற்பாடு என உதவி செய்து வருகிறார்.

தோழி, சகோதரன் உள்ளிட்ட அமைப்புகளோடு சேர்ந்து இவரது முன்னெடுப்பால், இதுவரை 6 திருநங்கைகள் தனியார் நிறுவனங்களில் வேலை பெற்றுள்ளனர். இன்னும் 6 பேருக்கு தள்ளுவண்டியில் சிற்றுண்டி கடை அமைத்துக் கொடுத்திருக்கிறார், இன்னும் சிலருக்கு டாடா ஏஸ் வண்டி வாங்கிக் கொடுத்து, அதன்மூலம் குடிநீர் கேன் வியாபாரம் அமைத்துக் கொடுத்திருக்கிறார்.

“கடைகள்ல அஞ்சுக்கும் பத்துக்கும் கைநீட்டிக்கிட்டு அசிங்கப் பட்டுக்கிட்டு இருந்தேன். ‘கைகால் நல்லாத்தானே இருக்கு’னு கேலி செய்வாங்க. அவமானப் பட்டு அழுதிருக்கேன். ஆனந்த்பாபு அய்யாக்கிட்டே என்னோட பிரச்சினையை எழுதி கொடுத்தேன். அய்யாவோட முயற்சியிலதான் தள்ளுவண்டி, பாத்திரம், அடுப்பு, 2 சிலிண்டர்னு இன்னிக்கி மானத்தோட சாப்பாட்டுக்கடை நடத்துறேன். திருநங்கையோட பிரச்சினைய புரிஞ்சுக்கிட்ட அந்த மகாராசன் நூறு வருசம் வாழணுங்க…” என்று நெகிழ்கிறார் பட்டினப்பாக்கத்தில் சாப்பாட்டுக் கடை நடத்திவரும் திருநங்கை மோகனா.

காவல்துறையே மக்கள் பணி தான், அதையும் மீறி இதுபோன்ற சமூக சேவைகளைச் செய்வதற்கு நேரம் எங்கிருந்து கிடைக்கிறது என்று கேட்டால், “என்னோட வேலை நேரம் போக, ஓய்வு நேரத்துலதான் இது மாதிரியான சமூகப் பணிகளைச் செய்யிறேன். மேலும், பலரையும் ஒருங்கிணைச்சு, சில நேரங்கள்ல் போன் மூலமா இந்தப் பணிகளைச் செய்யிறதால பெரிய சுமையா தெரியலே, சந்தோஷம் தான்” என மிக எளிமையாகப் புன்னகைக்கிறார் ஆனந்த்பாபு.

https://www.hindutamil.in/news/brandhub/566975-thanks-police-inspector-anand-babu-dont-forget-goodness-noble-service-of-police-inspector-anand-babu.html

 

  • 4 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

திருநங்கை இல்லாத திருவிழாவிற்கு போக மாட்டோம்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Malaysia JB Temple issue

 

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இடைபாலினக் குழந்தைக்கு ஒரு மனிதநேயத் தாலாட்டு!

a-humane-lullaby-for-a-transgender-child

 

ஆங்கிலத்தில் இன்டர்செக்ஸ் என்று அழைக்கப்படும் இடைபாலினக் குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை செய்து அவர்களின் இயல்பான வாழ்க்கைக்கு இடையூறு செய்யக் கூடாது என கடந்த 2019-ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றம் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தீர்ப்பை அளித்தது.

ஓர் இடைபாலினக் குழந்தைக்குச் சட்டபூர்வமான பாதுகாப்பு கிடைப்பது அவசியம். அதேநேரம் அத்தகைய குழந்தைக்குச் சமூக அங்கீகாரம் கிடைப்பதற்கு முதலில் தேவைப்படுவது தாயின் அன்பும் நேசமும்தான். இதை வலியுறுத்தும் தாலாட்டுப் பாடலை திருநங்கைக் கவிஞரான விஜயராஜா மல்லிகா மலையாளத்தில் எழுதினார். அந்தப் பாடலை ஷினி அவந்திகா பாட, மோகினியாட்டக் கலைஞர் டாக்டர் சந்தியா இந்தப் பாடலுக்கான நடனத்தோடு கடந்த ஆகஸ்ட் 16 அன்று யூடியூபில் வெளியிட்டனர்.

இதற்குப் பெருத்த வரவேற்பு கிடைக்கவே இந்தப் பாடலின் தமிழாக்கத்தை பத்மகுமார் பரமேஸ்வரன் எழுத, பாடலுக்கு மெட்டமைத்துப் பாடியிருக்கிறார் கரும்புழா ராதா. நிலம்பூர் ஷாஜியின் வயலின் பாடலின் இடையே நிலவும் கனத்த மவுனத்தைத் தன் தந்திகளால் மொழிபெயர்க்கிறது.

இந்தப் பாடலைப் பாடியிருக்கும் பிரபல பின்னணிப் பாடகியான

15997222392484.jpg கரும்புழா ராதா

50 ஆண்டுகளுக்குப் பின் இந்தப் பாடலைப் பாடியிருக்கிறார். ஆகவே, அவரைப் பெருமைப்படுத்தும் விதமாக அவரின் 76-வது பிறந்த நாளான செப்டம்பர் 6 அன்று இந்தப் பாடல் யூடியூபில் வெளியிடப்பட்டிருக்கிறது.

“ஆண் அல்ல பெண் அல்ல; பொன்மணி நீ எனக்கு..” என்னும் தொடக்க வரியே அன்பையும் பாசத்தையும் தாலாட்டி மகிழ்கிறது. “நீ சாபமோ, பாவமோ அல்ல; என் வானின் அதிர்ஷ்டத் தாரகை” என்று நம்பிக்கை மொழியைத் தாலாட்டின் வழியாகக் கேட்கும் குழந்தை தன்னம்பிக்கையோடுதானே வளரும்!

“ஒரு குடும்பத்தில் ஓர் இடைபாலினக் குழந்தை பிறந்தால் யார் முதலில் ஏற்றுக்கொள்வது என்பதில் பிரச்சினை இருக்கிறது. ஆனால், என்னைப் பொறுத்தவரையில் தாய்தான் முதலில் ஏற்றுக்கொள்ள வேண்டும். தாயின் அன்பு அந்தக் குழந்தைக்குக் கிடைக்கும்பட்சத்தில் அந்தக் குழந்தையால் உலகத்தில் எந்தவிதமான பிரச்சினையையும் சவால்களையும் சந்திக்க முடியும் என்பதைத்தான் என் பாட்டில் கூறியிருக்கிறேன்.
அந்த அன்பு மட்டும் கிடைத்துவிட்டால், ஆண், பெண், இனம், சாதி, மதம் போன்ற பிரிவினைச் சட்டகத்துக்குள் சிக்காமல் சுதந்திரமாக அந்தக் குழந்தையால் வாழ முடியும்” என்றார் திருநங்கை விஜயராஜா மல்லிகா.

 

https://www.hindutamil.in/news/blogs/576783-a-humane-lullaby-for-a-transgender-child-1.html

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆண் அல்ல, பெண் அல்ல
பொன்மணி நீ எனக்கு
தேனமுதம் தான் கண்ணே தேனமுதம்

என் துயரத்தின் கண்ணீர் கண்டு 
காலம் தந்த செல்வம் நீயே 
(ஆண் அல்ல .....)

நன்மையும் தீமையும் 
வகையீடு செய்து நீ 
எல்லைகள் தாண்டி வளர்ந்திடவே 
பொருளின் எதிரொலியாகவே நீ 
நீயாகத்தான் நிறைந்திடு 
ராரி...ராரோ...ராராரோ... (2)

மகனல்ல மகளல்ல வானவில்லே (2)  
மார்போடு சேர்த்துவைத்தேன் நான் உன்னையே 
உச்சி மீது முத்தங்கள் பொழிந்திடுவேன்
என் வாழ்க்கை சாதனையின் முத்தங்கள் 

தளராது செழிக்கட்டும் உன் கனவுகள் 
பிறர்க்காதரவாய் மாறவேண்டும் உன் வாழ்வு 
(ஆண் அல்ல ....)

சாபம் அல்ல, பாவம் அல்ல அன்பே நீ 
என் வாழ்க்கை வானிலுதித்த அதிர்ஷ்ட தாரகை,
முதற்தாரகை, முதற்தாரகை நீ.
ராரி...ராரோ...ராராரோ...(2)

 

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

திருநங்கைகள் உணவகம்

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பட்டு புடவையில் தனுஜா சிங்கம்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆண்களே உங்கள் வேட்டிகள் கவனம் இனிமேல் 🤣😂

 

 

  • கருத்துக்கள உறவுகள்
On 26/7/2020 at 14:31, நியாயத்தை கதைப்போம் said:

திருநங்கை எனும் பதம் பொருத்தமானதா (நிகரானதா) Transgender எனும் ஆங்கில சொல்லிற்கு?

ஆங்கிலம் பிறக்க முன்னரே 
பல சமூகங்கள் இதற்கு முகம் கொடுக்க தொடங்கிவிட்டன
ஆகவே ஆங்கில பதம் எல்லா இடத்திலும் அர்த்தம் கொடுக்காது. 

உதாரணத்துக்கு வெள்ளைக்காரர் முதன் முதலில் இந்தியா வந்த போதுதான் 
ஆட்கள் குளிப்பதை பார்த்து இருக்கிறார்கள். அத பின்புதான் ஐரோப்பிய மொழிகளில் 
குளித்ததலுக்கு உரிய சொல் உருவாகி இருக்கிறது.

"குளித்தல்" என்பதே பிழையானது சரியானது குளிர்த்தல் குளிர்வித்தல் அல்லது முழுக்கு.
அழுக்கை போக்குவதை   இரண்டாம் பட்ஷமாகத்தான் எமது முன்னோர்கள் 
பார்த்து இருக்கிறார்கள் உடல் வெப்பத்தை சீராக்குவதுக்குத்தான் நீர் நிலைகளில் மூழ்கி 
இருக்கிறார்கள். புறநானுற்று புரட்டுகளிலேயே குளிப்பது பற்றி இருக்கிறது 
எமது சமூகம் 3000 ஆண்டுகளாக நீராடி வருகிறது.

இதை ஏன் எழுதுகிறேன் என்றால் நாம் என்ன செய்கிறோம் ஏன் செய்கிறோம் என்பதை 
தொலைப்பதால் மறப்பதால்தான் பல இரசாயனங்களால் எமது குளியலறையை சோடித்து 
வீணான வில்லங்கங்களை விளக்கு வாங்கி கொள்கிறோம்.    

விலைக்கு  வாங்கி கொள்கிறோம்.   

  • 4 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தன்னம்பிக்கை தம்பதிகளின் India's 1st வல்லாரை Mojito | Transgender Food Shop | Tamil Food Review

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நர்த்தகி நடராஜ்: தடைகளைத் தகர்த்த நாட்டிய கலைஞர் - சாதித்த கதை

  • முரளிதரன் காசிவிஸ்வநாதன்
  • பிபிசி தமிழ்
24 அக்டோபர் 2020
நர்த்தகி நடராஜ்
 

(பல்வேறு துறைகளில் சாதனை படைத்த தமிழகத்தைச் சேர்ந்த பெண்கள் பலரும் அந்த உச்சத்தை தொடும் முன்பு, பல தடங்கல்களையும் சவால்களையும் எதிர்கொண்டிருக்கிறார்கள். அத்தகைய பெண்களில் குறிப்பிடத்தக்கவர்கள், தங்களின் வாழ்க்கை பயணத்தை பகிர்ந்து கொள்ளும் தொடரை பிபிசி தமிழ் வழங்குகிறது. அதில் நான்காவது கட்டுரை இது.)

பத்ம ஸ்ரீ விருதுபெற்ற, தேசத்தின் சிறந்த நடன கலைஞர்களில் ஒருவரான நர்த்தகி நடராஜ், கடும் போராட்டங்களுக்கு மத்தியில் அந்த உயரத்தை அடைந்தவர். சமூகம் விதித்த அனைத்து தடைகளையும் தகர்த்தெறிந்தவர். வாழ்வின் தடைகளைத் தகர்க்க நினைப்பவர்களுக்கு இவரது வாழ்க்கை ஒரு உதாரணம்.

தமிழ்நாட்டில் பரத நாட்டியத்திற்காக பத்ம ஸ்ரீ விருது, கலைமாமணி விருது, சங்கீத நாடக அகாடமியின் புரஸ்கார் விருது, கௌரவ டாக்டர் பட்டம் உள்ளிட்ட அங்கீகாரங்களைப் பெற்ற பரதநாட்டியக் கலைஞரான நர்த்தகி நட்ராஜ், சிறு வயதிலிருந்தே நடனத்தின் மீது தீராத காதல் கொண்டவர். தற்போது இந்தியாவின் முக்கியக் கலைஞர்களின் ஒருவரான நர்த்தகியின் கலைப் பயணம், யாருக்கும் உத்வேகமூட்டக் கூடியது.

"நடனத்தை நான் தேர்வுசெய்தேன் என்பதை விட, நடனம்தான் என்னைத் தேர்வுசெய்தது. ஆணாகப் பிறந்த நான், பெண்ணாக என்னை உணர்ந்த அந்தத் தருணத்தில், என் பெண்மையை வெளிப்படுத்த அது உகந்த கலையாக இருந்தது.

அந்தப் பருவத்தில் இருந்த இடர்களில் இருந்து சாய்ந்து கொள்ள ஒரு தோளாக அந்தக் கலை இருந்தது. ஒரு ஆணாகப் பிறந்து பெண்ணாக மாறியதால் ஏற்பட்ட பிரச்சனைகளைக் கடக்க, இது வாகனமாக இருந்தது. நல்ல துணையாக இருந்தது. அப்படித்தான் நடனத்தின் மீது ஈர்ப்புக்கொள்ள ஆரம்பித்தேன்" என்கிறார் நர்த்தகி.

மதுரை அனுப்பானடி பகுதியில், வசதியும் அரசியல் செல்வாக்கும் மிகுந்த குடும்பத்தில், அவரது பெற்றோருக்கு ஐந்தாவது குழந்தையாகப் பிறந்தவர் நடராஜ். ஆனால், 5-6 வயதிலேயே தான் மற்றவர்களைப் போல அல்ல என்று உணர ஆரம்பித்தார். எதிர்பார்த்தபடியே அவரது வீட்டினருக்கு இது பெரும் அதிர்ச்சியாக இருந்தது.

நர்த்தகி நடராஜ்
 

அனுப்பானடியில் உள்ள தியாகராசர் முன்மாதிரிப் பள்ளியில் படித்த நடராஜ், மிகச் சிறந்த மாணவர். இருந்தபோதும், உடலில் இருந்த மாற்றங்கள் அவரைத் தொந்தரவு செய்து கொண்டே இருந்தன.

வீட்டிலும் வெளியிலுமாக தங்கியிருந்தபடி, 12ஆம் வகுப்புவரை படித்த நடராஜ், அதற்குப் பிறகு பள்ளிக்கூடத்திற்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இந்த நிலையில்தான் நடனம் என்ற கலை அவரை முழுமையாக ஆக்கிரமித்தது. அவரைப் போலவே உணர்ந்த பாஸ்கரும் (இப்போது சக்தி) நடராஜும் செவ்வியல் நடனத்தை நோக்கி வெகுவாக ஈர்க்கப்பட்டார்கள்.

திரைப்படங்கள்தான் அவரது முதல் நடன குருவாக இருந்தன. அதில் நாயகிகள் ஆடிய நடனங்களைப் பார்த்தே, நடனத்தையும் அவர்கள் பேசிய வசனங்களைக் கேட்டு மொழியையும் செழுமைப்படுத்திக் கொண்டார் நடராஜ். அதற்குப் பிறகு, கோவில் திருவிழாக்களில் தொடர்ந்து ஆடிவந்தார்.

ஆனால், முறைப்படி நடனம் கற்க வேண்டுமென்ற ஆசைமட்டும் தீரவில்லை. அந்தக் காலகட்டத்தில் தஞ்சாவூர் பாணி பரதக்கலையில் மிக உயர்ந்த இடத்தில் இருந்த பி. கிட்டப்பா பிள்ளையிடம் பரதம் கற்க முடிவுசெய்தார் நடராஜும் அவரது தோழியான பாஸ்கரும்.

நர்த்தகி நடராஜ்

பட மூலாதாரம்,NARTHAKI NATRAJ

 

"யாமினி கிருஷ்ணமூர்த்தி, சுதாராணி ரகுபதி போன்ற இந்தியாவின் மிகப் பெரிய பரதநாட்டியக் கலைஞர்களின் குரு அவர். தஞ்சாவூருக்குச் சென்று எங்களுக்கும் பரதம் கற்றுத்தரும்படி தொடர்ந்து வேண்டினோம். அவர் செல்லும் இடங்களுக்கெல்லாம் செல்வோம். ஒரு வருடக் காத்திருத்தலுக்குப் பிறகு அவர் எங்களை ஏற்றுக்கொண்டார். அது ஒருபெரிய பல்கலைக்கழகத்தில் படிக்கக் கிடைத்த வாய்ப்பு போல இருந்தது," என்கிறார் நர்த்தகி.

பரத நாட்டியத்தில் புகழ்பெற்ற தஞ்சை நால்வரில் ஒருவரான சிவானந்தத்தின் பரம்பரையைச் சேர்ந்தவர்தான் கிட்டப்பா பிள்ளை.

17வது வயதில் கிட்டப்பா பிள்ளையிடம் சேர்ந்த நடராஜும் பாஸ்கரும், அதற்கு அடுத்த 15 வருடங்கள் அவருடனேயே இருந்தனர். தொடர்ச்சியாக நட்ராஜுக்கும் பாஸ்கருக்கும் கற்பித்தார் கிட்டப்பா பிள்ளை. நட்ராஜிற்கு நர்த்தகி என்று பெயர் சூட்டியவரும் அவர்தான்.

சாதித்தே ஆக வேண்டுமென்பதுதான் அவரது இலக்காக இருந்தது. "குடும்ப ஆதரவு, சமூக ஆதரவு போன்ற எதுவுமே இல்லை. ஆகவே நடனத்தை வெறித்தனமாகக் காதலிக்க ஆரம்பித்தேன். எதிர்ப்புகள், அவமானங்கள் ஆகியவை தொடரவே செய்தன. ஆனால், வெற்றியடைய வேண்டும் என்ற கொள்கை மட்டுமே என்னை நடத்திச் சென்றது" என நினைவுகூர்கிறார் நர்த்தகி.

நர்த்தகி நடராஜ்
 

தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் துணைப் பேராசிரியராக சில காலம் பணிபுரிந்த நர்த்தகி, புத்தாயிரத்தின் துவக்கத்தில் சென்னையில் குடியேறினார்.

எந்தத் தருணத்திலும் நர்த்தகியும் சக்தியும், தாங்கள் திருநங்கைகள் என்பதைச் சொல்லி வாய்ப்புகளைப் பெறக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தனர்.

"ஆகவே பேய்த் தனமாக உழைத்தோம். என் கலையை, கஷ்டங்களைக் காதலித்தோம். அடுத்தடுத்த வெற்றிகள் எனக்கு நல்ல நம்பிக்கையை கொடுத்தன. எனக்கு வெற்றிகள் மிகத் தாமதமாகக் கிடைத்தன, ஆனால், கிடைத்தன. நான் கடந்த வந்த பாதையைப் பார்த்தால், நான் மிக பிரம்மாண்டமான வெற்றியைப் பெற்றிருக்கிறேன். ஆனால், என்னுடைய திறமைகளுக்குக் கிடைக்கும் அங்கீகாரத்தை ஒரு திருநங்கை என்பதால் கிடைத்த அங்கீகாரமாகச் சொல்லும் போக்கு வலிக்கிறது. பத்ம ஸ்ரீ விருது எனக்குத் தரப்பட்டபோதுகூட, அது எனது கலைக்காகத் தரப்பட்டது என சொல்லப்பட்ட நிலையிலும் ஒரு திருநங்கைக்கு பத்ம ஸ்ரீ, ஒரு திருநங்கைக்கு பத்ம ஸ்ரீ என்றுதான் குறிப்பிட்டார்கள்" என்கிறார் நர்த்தகி.

நர்த்தகியின் அனைத்துப் பயணங்களிலும் துணையாக இருக்கிறார் சக்தி. "சக்தி என்னோடு இருப்பது என்பது, தெய்வம் என்னோடு இருப்பதைப் போல. தன்னலமற்றவர். அவரிடம் சிறிது நேரம் பேசினாலும் அந்தப் பேச்சு என்னைப் பற்றித்தான் இருக்கும். ஒரு நாணயத்தின் முன் பக்கம் நான். பின் பக்கம் அவள்," என்கிறார் நர்த்தகி.

நர்த்தகி நடராஜ்
 

வெள்ளியம்பலம் என்ற தன்னுடைய நடனப் பள்ளியை வெள்ளியம்பலம் அறக்கட்டளை என்ற பெயரில் அறக்கட்டளையாக்கியிருக்கிறார். "எங்களுடைய வாழ்க்கை முறை வெற்றியடைந்த வாழ்க்கை முறை. நிறைய திருநங்கைகளுக்கு அதை நாங்கள் சொல்லிக்கொடுத்துக் கொண்டிருக்கிறோம். இது அவர்கள் வாழ்க்கையை மாற்றும் என நம்புகிறோம்" என்கிறார் அவர்.

 

https://www.bbc.com/tamil/india-54648023

  • கருத்துக்கள உறவுகள்
On 23/9/2020 at 12:09, Maruthankerny said:

ஆங்கிலம் பிறக்க முன்னரே 
பல சமூகங்கள் இதற்கு முகம் கொடுக்க தொடங்கிவிட்டன
ஆகவே ஆங்கில பதம் எல்லா இடத்திலும் அர்த்தம் கொடுக்காது. 

உதாரணத்துக்கு வெள்ளைக்காரர் முதன் முதலில் இந்தியா வந்த போதுதான் 
ஆட்கள் குளிப்பதை பார்த்து இருக்கிறார்கள். அத பின்புதான் ஐரோப்பிய மொழிகளில் 
குளித்ததலுக்கு உரிய சொல் உருவாகி இருக்கிறது.

"குளித்தல்" என்பதே பிழையானது சரியானது குளிர்த்தல் குளிர்வித்தல் அல்லது முழுக்கு.
அழுக்கை போக்குவதை   இரண்டாம் பட்ஷமாகத்தான் எமது முன்னோர்கள் 
பார்த்து இருக்கிறார்கள் உடல் வெப்பத்தை சீராக்குவதுக்குத்தான் நீர் நிலைகளில் மூழ்கி 
இருக்கிறார்கள். புறநானுற்று புரட்டுகளிலேயே குளிப்பது பற்றி இருக்கிறது 
எமது சமூகம் 3000 ஆண்டுகளாக நீராடி வருகிறது.

இதை ஏன் எழுதுகிறேன் என்றால் நாம் என்ன செய்கிறோம் ஏன் செய்கிறோம் என்பதை 
தொலைப்பதால் மறப்பதால்தான் பல இரசாயனங்களால் எமது குளியலறையை சோடித்து 
வீணான வில்லங்கங்களை விளக்கு வாங்கி கொள்கிறோம்.    

விலைக்கு  வாங்கி கொள்கிறோம்.   

உண்மைதான்.

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவில் பத்மஸ்ரீ விருது பெற்ற முதல் திருநங்கையான தமிழகத்தைச் சேர்ந்த நர்த்தகி நடராஜன் தனது வாழ்க்கைப் பயணத்தை பகிர்ந்து கொள்கிறார்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கா தேர்தல்: வரலாற்றில் முதல்முறையாக திருநங்கை வெற்றி

அமெரிக்கா தேர்தல்: வரலாற்றில் முதல்முறையாக திருநங்கை வெற்றி

 

வாஷிங்டன்

அமெரிக்கா தேர்தலில் நான்கு மாகாணங்களில் வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டு உள்ளது. பென்சில்வேனியா, விஸ்கோன்சிஸ், ஜார்ஜியா, மிக்சிகன் மாகாணங்களில் வாக்கு எண்ணிக்கை நிறுத்தமென தகவல் வெளியாகி உள்ளது.


அமெரிக்க வரலாற்றில் முதல் முறையாக திருநங்கை சாரா மெக்.பிரைட் டெலாவேரில் வெற்றி பெற்று உள்ளார். இவர் ஜோ பிடனின் ஜனநாயக கட்சியை சேர்ந்தவர் ஆகும். வழக்கறிஞரான 31 வயதாகும் திருநங்கை சாரா மெக் பிரைட் ஒரின சேர்க்கையாளர் விவகாரத்தில் ஆதரவாக செயலாற்றியுள்ளார். 

இந்த தேர்தல் வெற்றி குறித்து தெரிவித்துள்ள சாரா மெக் பிரைட், நாம் செய்து முடித்து விட்டோம். அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுவிட்டோம். வாக்களித்தவர்கள் அனைவருக்கும் நன்றி நன்றி என தெரிவித்துள்ளார்.

அமெரிக்க பிரதிநிதிகள் சபைக்கு ஜனநாயக கட்சியை சேர்ந்த இந்திய வம்சாவளியினரான டாக்டர்.அமி பெரா, பிரமிளா ஜெயபால், ரோ கண்ணா மற்றும் ராஜா கிருஷ்ணமூர்த்தி ஆகிய 4 பேர் மீண்டும் தேர்வு!

அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் மோசடி நடைபெற்றுள்ளது; உச்சநீதிமன்றத்தை அணுகி வாக்கு எண்ணிக்கையை நிறுத்த உள்ளதாக டொனால்ட் டிரம்ப் மிரட்டி உள்ளார்.

மிசவுரி மாகாணத்தில் அமைக்கபட்ட டிரைவ் த்ரூ வாக்குச்சாவடி அமெரிக்க அதிபர் தேர்தலில் கொரோனா நோயாளிகள் வாக்களிக்க ட்ரைவ் த்ரூ வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட்டிருந்தன. மிசவுரியில் உள்ள செயின்ட் லூயிஸ் பகுதியில் சாலையோரமாக அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடிக்கு காரில் வந்த கொரோனா நோயாளிகள் வாக்களித்தனர். பாதுகாப்பு கவச உடையுடன் வந்திருந்த பணியாளர்கள் காரில் வருவோருக்கு வாக்குச்சீட்டுகளை வழங்கி வாக்களிக்க உதவினர்.

தேர்தல் தினத்தன்று அமெரிக்காவில் பலருக்கு வந்த மர்ம தொலைபேசி அழைப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிட்டத்தட்ட ஒரு கோடி பேருக்கு இந்த மர்ம அழைப்புகள் வந்ததாக கூறப்படுகிறது. இந்த தானியங்கி அழைப்பில் ஒலித்த குரல்” வீட்டிலேயே இருங்கள்.. பாதுகாப்பாக இருங்கள்” என்று நம் ஊர் கொரோனா வைரஸ் ரிங்டோன் போல கூறிய பின் அழைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. தேர்தல் நாளில் வன்முறைகள் நிகழலாம் என்ற அச்சுறுத்தல் இருக்கும் நிலையில் பலருக்கு வந்த இந்த மர்ம தொலைபேசி அழைப்பால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த அழைப்பில் கிருமிப்பரவல் பற்றியோ, அதிபர் தேர்தல் பற்றியோ குறிப்பாக எதுவும் சொல்லப்படவில்லை என்றபோதும் தேர்தல் நாளில் வந்ததால், இது குறித்து அமெரிக்க மத்திய புலனய்வுத்துறைவிசாரணை நடத்தி வருகிறது.

 

https://www.dailythanthi.com/News/TopNews/2020/11/04152844/US-election-2020-Sarah-McBride-creates-history-becomes.vpf

  • 4 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

திருநம்பியாக மாறினார் பிரபல ஹொலிவூட் நடிகை எலன் பேஜ்!

ஜூனோ திரைப்படத்திற்காக ஒஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட பிரபல ஹொலிவூட் நடிகை எலன் பேஜ்(Ellen-Page)  தன்னை திருநம்பியாக அடையாளப்படுத்தி கொண்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

கனடாவைச் சேர்ந்த எலன் பேஜ், ஜூனோ, இன்செப்சன், டூ ரோம் வித் லவ் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

Ellen-Page-new.jpg

கடந்த  2014ஆம் ஆண்டு தன்னை தற்பாலின ஈர்ப்பாளராக அடையாளப்படுத்திக்கொண்ட எலன், எம்மா என்ற பெண்ணை திருமணம்செய்து கொண்டார்.

மேலும் LGBTQ சமூகத்துடன் இணைந்து அவர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்து வந்தார்.

இந்நிலையில், தற்போது தாம் திருநம்பியாக மாறிவிட்டதாகவும், தனது பெயரை எலியட் பேஜ் என்று மாற்றிக்கொண்டுள்ளதாகவும் சமூக வலைதளத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.

 

https://thinakkural.lk/article/94610

  • கருத்துக்கள உறவுகள்
On 23/9/2020 at 17:09, Maruthankerny said:

ஆங்கிலம் பிறக்க முன்னரே 
பல சமூகங்கள் இதற்கு முகம் கொடுக்க தொடங்கிவிட்டன
ஆகவே ஆங்கில பதம் எல்லா இடத்திலும் அர்த்தம் கொடுக்காது. 

உதாரணத்துக்கு வெள்ளைக்காரர் முதன் முதலில் இந்தியா வந்த போதுதான் 
ஆட்கள் குளிப்பதை பார்த்து இருக்கிறார்கள். அத பின்புதான் ஐரோப்பிய மொழிகளில் 
குளித்ததலுக்கு உரிய சொல் உருவாகி இருக்கிறது.

"குளித்தல்" என்பதே பிழையானது சரியானது குளிர்த்தல் குளிர்வித்தல் அல்லது முழுக்கு.
அழுக்கை போக்குவதை   இரண்டாம் பட்ஷமாகத்தான் எமது முன்னோர்கள் 
பார்த்து இருக்கிறார்கள் உடல் வெப்பத்தை சீராக்குவதுக்குத்தான் நீர் நிலைகளில் மூழ்கி 
இருக்கிறார்கள். புறநானுற்று புரட்டுகளிலேயே குளிப்பது பற்றி இருக்கிறது 
எமது சமூகம் 3000 ஆண்டுகளாக நீராடி வருகிறது.

இதை ஏன் எழுதுகிறேன் என்றால் நாம் என்ன செய்கிறோம் ஏன் செய்கிறோம் என்பதை 
தொலைப்பதால் மறப்பதால்தான் பல இரசாயனங்களால் எமது குளியலறையை சோடித்து 
வீணான வில்லங்கங்களை விளக்கு வாங்கி கொள்கிறோம்.    

விலைக்கு  வாங்கி கொள்கிறோம்.   

மருதர்,

இங்கிலாத்தில் Bath என்று ஒரு ஊர் ஊள்ளது. அதே போல் Leamington Spa இப்படி பல காரணப் பெயர் உள்ள ஊர்கள் உண்டு. இவை எல்லாம் ரோம சாம்ராஜ்ஜியத்தின் ஆட்சியின் கீழ் இங்கிலாந்து இருந்த போது, பொது குளியல் வசதிகளுடன் கட்ட பட்ட ஊர்கள் என்பதாலேயே இந்த பெயர்கள் வந்தது.

 

https://www.independent.co.uk/travel/news-and-advice/complete-guide-spa-towns-5334588.html 

சங்க இலக்கியங்களில் அல்லது சங்கமருவிய இலக்கியங்களில் திரு நங்கைகள் எப்படி அழைக்கப்படார்கள்? என்பது யாருக்காவது தெரியுமா?

ஏனென்றால் கருணாநிதிதான் திருநங்கை என்ற சொல்லை உருவாக்கியவராம். 

https://www.vikatan.com/news/politics/133471-transgender-grace-banu-recalls-her-golden-moments-with-karunanidhi 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

மருதர்,

இங்கிலாத்தில் Bath என்று ஒரு ஊர் ஊள்ளது. அதே போல் Leamington Spa இப்படி பல காரணப் பெயர் உள்ள ஊர்கள் உண்டு. இவை எல்லாம் ரோம சாம்ராஜ்ஜியத்தின் ஆட்சியின் கீழ் இங்கிலாந்து இருந்த போது, பொது குளியல் வசதிகளுடன் கட்ட பட்ட ஊர்கள் என்பதாலேயே இந்த பெயர்கள் வந்தது.

 

https://www.independent.co.uk/travel/news-and-advice/complete-guide-spa-towns-5334588.html 

சங்க இலக்கியங்களில் அல்லது சங்கமருவிய இலக்கியங்களில் திரு நங்கைகள் எப்படி அழைக்கப்படார்கள்? என்பது யாருக்காவது தெரியுமா?

ஏனென்றால் கருணாநிதிதான் திருநங்கை என்ற சொல்லை உருவாக்கியவராம். 

https://www.vikatan.com/news/politics/133471-transgender-grace-banu-recalls-her-golden-moments-with-karunanidhi 

துருக்கியில் ஹமாம் என்று ஆயிரம் வருட முந்திய ஸ்பா முறைமை பற்றியெல்லாம் 
இருக்கிறது என்று வாசித்து இருக்கிறேன் எல்லாம் அரச மன்னர்களின் ஆடம்பரமாகவே 
இருந்து இருக்கிறது .......... எல்லோரும் குளிக்கவேண்டும்  அதில் உடல் ஆரோக்கியம் இருக்கிறது 
என்ற அடைப்படை எண்ணம் இருக்கவில்லை. அதுக்கான வசதிகளும் இருக்கவில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, Maruthankerny said:

துருக்கியில் ஹமாம் என்று ஆயிரம் வருட முந்திய ஸ்பா முறைமை பற்றியெல்லாம் 
இருக்கிறது என்று வாசித்து இருக்கிறேன் எல்லாம் அரச மன்னர்களின் ஆடம்பரமாகவே 
இருந்து இருக்கிறது .......... எல்லோரும் குளிக்கவேண்டும்  அதில் உடல் ஆரோக்கியம் இருக்கிறது 
என்ற அடைப்படை எண்ணம் இருக்கவில்லை. அதுக்கான வசதிகளும் இருக்கவில்லை. 

அப்படி இல்லை மருதர்.

இங்கே ஹேட்ரியன் வால் என்று ஒன்று உள்ளது. நான் போய் பார்த்துள்ளேன். கிட்டதட்ட தற்போதைய இங்கிலாந்தின் எல்லை வரை நீண்ட ரோமப்பேரரசு, அதற்க்குமேல வாழ்ந்தவர்களை மிலேச்சர்கள் என வர்ணித்து கிழக்கு மேற்காக கட்டிய மதில். 

இந்த மதிலின் ஒவ்வொரு குறிப்பிட்ட தூரத்திலும் ஹோம்ஸ்டெட்ஸ் என கொத்தளங்கள் அமைத்து சிறிய முகாம் போல வாழ்ந்துள்ளார்கள் அதில் மலசல கூடம், குளியல் அறை எல்லாம் இருந்திருக்கிறது.

அதே போல் பாத் நகருக்கும் போய் ரோமன் பாத்சை பார்த்துள்ளேன், சாதாரண குடிகளும் குளிக்கும் படிதான் அமைத்துள்ளார்கள்.

குளிப்பது என்பது மிக இயல்பானது. உடுத்துவது, இறைச்சியை சுட்டு உண்ணுவது போல.

ஒரு மனிதன் சேற்றில் தவறி விழுந்து விட்டால் அருகில் உள்ள நீர்நிலையில் முக்கி எழுந்திருப்பான். அப்படியே சேற்றுடனா திரிந்திருப்பான்?

ஆகவே நாம்தான் அவர்களுக்கு குளியலை கற்று கொடுத்தோம் என்பது வரலாற்று தகவல் அடிப்படையில் மட்டும் அல்ல, லொஜிக்கலாகவும் எனக்கு படவில்லை.

சிலசமயம் எங்களை போல், ஒவ்வொரு நாளும் குளிக்கும்பழக்கம் இல்லாமல் இருக்கலாம்.

அது இப்போதும் இங்கே பலருக்கு இல்ல்லைத்தானே 🤣

  • கருத்துக்கள உறவுகள்

அட, அப்ப குளியலையும் நாங்களே உலகத்துக்கு அறிமுகம் செய்திருக்கிறம்? 🤔

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

அப்படி இல்லை மருதர்.

இங்கே ஹேட்ரியன் வால் என்று ஒன்று உள்ளது. நான் போய் பார்த்துள்ளேன். கிட்டதட்ட தற்போதைய இங்கிலாந்தின் எல்லை வரை நீண்ட ரோமப்பேரரசு, அதற்க்குமேல வாழ்ந்தவர்களை மிலேச்சர்கள் என வர்ணித்து கிழக்கு மேற்காக கட்டிய மதில். 

இந்த மதிலின் ஒவ்வொரு குறிப்பிட்ட தூரத்திலும் ஹோம்ஸ்டெட்ஸ் என கொத்தளங்கள் அமைத்து சிறிய முகாம் போல வாழ்ந்துள்ளார்கள் அதில் மலசல கூடம், குளியல் அறை எல்லாம் இருந்திருக்கிறது.

அதே போல் பாத் நகருக்கும் போய் ரோமன் பாத்சை பார்த்துள்ளேன், சாதாரண குடிகளும் குளிக்கும் படிதான் அமைத்துள்ளார்கள்.

குளிப்பது என்பது மிக இயல்பானது. உடுத்துவது, இறைச்சியை சுட்டு உண்ணுவது போல.

ஒரு மனிதன் சேற்றில் தவறி விழுந்து விட்டால் அருகில் உள்ள நீர்நிலையில் முக்கி எழுந்திருப்பான். அப்படியே சேற்றுடனா திரிந்திருப்பான்?

ஆகவே நாம்தான் அவர்களுக்கு குளியலை கற்று கொடுத்தோம் என்பது வரலாற்று தகவல் அடிப்படையில் மட்டும் அல்ல, லொஜிக்கலாகவும் எனக்கு படவில்லை.

சிலசமயம் எங்களை போல், ஒவ்வொரு நாளும் குளிக்கும்பழக்கம் இல்லாமல் இருக்கலாம்.

அது இப்போதும் இங்கே பலருக்கு இல்ல்லைத்தானே 🤣

இது நான் எழுதியது இல்லை 
ஒரு பிரிட்டிஸ்காரர் தனது சொந்த அனுபவத்தை எழுதியது 
தான் இந்தியா வந்தபோதுதான் முதன் முதலில் எல்லோரும் 
ஏரிகள் குளம்கள் சென்று நாள் தோறும் குளிப்பதை பார்த்தேன் என்று 
குறிப்பாக பெண்கள் குளிப்பது உடுத்துவது என்பதை சிரமமாக செய்துவந்தார்கள் 
என்று எழுதி இருக்கிறார் 

கிறிஸ்த்தவர்களின் பாப்டிசம் என்பது நீரில் மூழ்கி எடுப்பதுதானே?
ஆனால் இது எல்லாம் கி.பி 350க்கு பிறகு தோன்றியதுதான் 
நீங்கள் கூறும் இடங்கள் எல்லாம்வற்றிலும் 6 மாத குளிர் காலத்தில் என்ன செய்தார்கள்?

மாதவிடாய் முடிந்த நாட்களில் பெண்கள் என்ன செய்தார்கள்?
என்ற கேள்விகள் எனக்குள்ளும் உண்டு  ஆனால் சாராசரியாக குளித்தார்கள் 
என்பதுக்கு எந்த ஆதாரமும் இல்லை 
நீங்கள் கூறியதுபோல சேற்றில் விழுந்தால் கழுவது போன்ற மாதிரியான முறைமைதான் 
அவர்களிடம் இருந்து இருக்கிறது 

இந்தியர்கள்தான் முதன் முதலாக குளிக்க தொடங்கினார்கள் என்பதை நீங்கள் தேடினால் கண்டு கொள்வீர்கள். இந்தியர்களை அடுத்து சீனர்கள் என்றுதான் ஆதார அடிப்படையிலேயே இருக்கிறது 

bath (n.)

Old English bæð "an immersing of the body in water, mud, etc.," also "a quantity of water, etc., for bathing," from Proto-Germanic *badan (source also of Old Frisian beth, Old Saxon bath, Old Norse bað, Middle Dutch bat, German Bad), from PIE root *bhē- "to warm" + *-thuz, Germanic suffix indicating "act, process, condition" (as in birth, death). The etymological sense is of heating, not immersing.

The city in Somerset, England (Old English Baðun) was so called from its hot springs. Bath salts attested from 1875 (Dr. Julius Braun, "On the Curative Effects of Baths and Waters"). Bath-house is from 1705; bath-towel is from 1958.

  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

A DAY WITH திருநங்கை அனுஷியா

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.