Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ந‌ல்ல‌ ஒரு திரி உடையார் அண்ணா ,

சின்ன‌னில் கேட்ட‌ ப‌க்தி பாட‌ல்க‌ள் மீண்டும் கேக்க‌ யாழ்ப்பாண‌த்து பொருமாள் கோயில் நினைவு தான் வ‌ருது 🙏

  • Replies 2.9k
  • Views 225.3k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • உடையார்
    உடையார்

  • Maruthankerny
    Maruthankerny

    இணைப்புக்கு நன்றி உடையாரண்ணா  இவரின் குரலில் சில இஸ்லாமிய பாடல்கள்  மனதையே கொள்ளை கொண்டுவிடும்  சில வருடங்கள் முன்பு ஒரு யூஸ்பி யில் பதிந்து வைத்திருந்தேன்  எங்கோ தவற விட்டுவிட்ட்டேன் ... ம

  • உடையார்
    உடையார்

    யேசுவே எனக்கு என்று யாருமேயில்லை   

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மாமதீனா பேரரசே... மாநிலத்தின் தீன் முரசே || முகவை முரசு S.A.சீனி முஹம்மது

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கலங்காதே கலங்காதே
கர்த்தர் உன்னை கைவிடமாட்டார்

1. முள்முடி உனக்காக
இரத்தமெல்லாம் உனக்காக
பாவங்களை அறிக்கையிடு
பரிசுத்தமாகிவிடு – நீ

2. கல்வாரி மலைமேலே
காயப்பட்ட இயேசுவைப் பார்
கரம் விரித்து அழைக்கின்றார்
கண்ணீரோடு ஓடி வா – நீ

3. காலமெல்லாம் உடனிருந்து
கரம்பிடித்து நடத்திச் செல்வார்
கண்ணீரெல்லாம் துடைப்பார்
கண்மணி போல் காத்திடுவார் – உன்னை

4. உலகத்தின் வெளிச்சம் நீ
எழுந்து ஒளி வீசு
மலைமேல் உள்ள பட்டணம் – தம்பி (நீ)
மறைவாக இருக்காதே

5. உன் நோய்கள் சுமந்து கொண்டார்
உன் பிணிகள் ஏற்றுக்கொண்டார்
நீ சுமக்கத் தேவையில்லை
விசுவாசி அது போதும்

6. உலகம் உன்னை வெறுத்திடலாம்
உற்றார் உன்னைத் துரத்திடலாம்
உன்னை அழைத்தவரோ
உள்ளங்கையில் ஏந்திடுவார்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சீரங்க ரங்க நாதனி்ன் பாதம் வந்தனம் செய்யடி!
சீதேவி ரங்க நாயகி நாமம் சந்ததம் சொல்லடி!

இன்பம் பொங்கும் தென்கங்கை நீராடி,
தென்றல் போல நீ ஆடடி!
மஞ்சள் குங்குமம் மங்கை நீ சூடி, 
தெய்வ பாசுரம் பாடடி!
(சீரங்க)

கொள்ளிடம் நீர்மீது நர்த்தனம் ஆடும்;
மெல்லிய பூங்காற்று மந்திரம் பாடும்;
செங்கனி மீதாடும் மாமரம் யாவும்;
ரங்கனின் பேர்சொல்லி சாமரம் வீசும்;

அந்நாளில் சோழ மன்னர்கள் - ஆக்கி வைத்தனர் ஆலயம்
அம்மாடி என்ன சொல்லுவேன் - கோவில் கோபுரம் ஆயிரம்
தேனாக நெஞ்சை அள்ளுமே - தெய்வப் பூந்தமிழ்ப் பாயிரம்
(சீரங்க)

கன்னடம் தாய்வீடு என்றிருந்தாலும்
கன்னி உன் மறுவீடு தென்னகமாகும்!
கங்கையின் மேலான காவிரி தீர்த்தம்
மங்கல நீராட முன்வினை தீர்க்கும்!

நீர் வண்ணம் எங்கும் மேவிட - நஞ்சை புஞ்சைகள் பாரடி
ஊர் வண்ணம் என்ன கூறுவேன் - தெய்வ லோகமே தானடி
வேறெங்கு சென்ற போதிலும் - இந்த இன்பங்கள் ஏதடி
(சீரங்க)

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முருகா முருகா முருகா முருகா ... அரகரோகரா
மால் மருகா மருகா மருகா மருகா ... அரகரோகரா...

தணிகாசலனே தவமா மணியே ... அரகரோகரா
வானவர் போற்றும் தீனதயாளா ... அரகரோகரா

கதிர்காமத்துரை கதிர்வேல் முருகா ... அரகரோகரா
கந்தா கடம்பா கார்த்திகேயா ... அரகரோகரா

செந்திலாண்டவா செங்கல்வராயா ... அரகரோகரா
சிவஷண்முகனே சேனைத் தலைவா ... அரகரோகரா

அக்கினிகர்பா ஆறுபடை வீடா ... அரகரோகரா
ஆவினங்குடிவாழ் அழகிய வேலா ... அரகரோகரா

மயில் வாகனனே மாதவக் கொழுந்தே ... அரகரோகரா
பழனியம் பதிவாழ் பாலகுமாரா ... அரகரோகரா

சேவற் கொடியோய் செங்கதிர் வேலா ... அரகரோகரா
சிவனார் மகனே செந்திலாதிபா ... அரகரோகரா

முருகா முருகா முருகா ... அரகரோகரா
மால் மருகா மருகா மருகா மருகா ... அரகரோகரா

சாமிநாதா சக்தி வேலா ... அரகரோகரா
மூவர் முதல்வா முத்துக் குமாரா ... அரகரோகரா

வள்ளி மணாளா வானவர் வேந்தே ... அரகரோகரா
வடிவேல் முருகா திருமால் மருகா ... அரகரோகரா...

முருகா முருகா முருகா முருகா ... அரகரோகரா
மால் மருகா மருகா மருகா மருகா ... அரகரோகரா...

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆடு மயிலே கூத்தாடு மயிலே
கதிர்காமக் கந்தனைக் கூத்தாடு மயிலே
அருகினில் நின்று அருள் புரியும் குகன் கந்தன்
அருமையாய் அந்தரங்கத் திருக்கும் குகன்
கருவிழி வள்ளி மானுக்குகந்த குகன் கந்தன்
திருவடி தாங்கி நின்றே ஆடு மயிலே

ஆடு மயிலே கூத்தாடு மயிலே
கதிர்காமக் கந்தனைக் கூத்தாடு மயிலே

துள்ளித் துள்ளி விளையாடும் பால முருகன் கந்தன்
அள்ளி அள்ளி அருள் தரும் சீல முருகன்
வள்ளியின் கரம் பிடித்த வேலன் முருகன் கந்தன்
திருவடி தாங்கி நின்றே ஆடு மயிலே

ஆடு மயிலே கூத்தாடு மயிலே
கதிர்காமக் கந்தனைக் கூத்தாடு மயிலே

மனமது கனிந்திடில் மருவும் குகன் கந்தன்
கனவிலும் கண்சிமிட்டிக் காக்கும் குகன்
தனதெனத் தான் பரிந்து பேசும் குகன் கந்தன்
தனதெனத் தான் பரிந்து பேசும் குகன் கந்தன்
திருவடி தாங்கி நின்றே ஆடு மயிலே

ஆடு மயிலே கூத்தாடு மயிலே
நீ ஆடு விளையாடு கூத்தாடு மயிலே
விளையாடு மயிலே

ஆடு மயிலே கூத்தாடு மயிலே
கதிர்காமக் கந்தனைக் கூத்தாடு மயிலே

அருகினில் நின்று அருள் புரியும் குகன் கந்தன்
ஆறுமுகம் கொண்ட சரவண முருகன்
கூறுமடியார்கள் வினை தீர்க்கும் முருகன் கந்தன்
கூறுமடியார்கள் குறை தீர்க்கும் முருகன் கந்தன்
திருவடி தாங்கி நின்றே ஆடு மயிலே

ஆடு விளையாடு கூத்தாடு மயிலே கூத்தாடு மயிலே

ஆடு மயிலே கூத்தாடு மயிலே
கதிர்காமக் கந்தனைக் கூத்தாடு மயிலே
 

 

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, உடையார் said:

ஆடு மயிலே கூத்தாடு மயிலே
கதிர்காமக் கந்தனைக் கூத்தாடு மயிலே
 

 

இனிமையான.... ஒரு பக்திப் பாடலை கேட்ட படி, வெள்ளிக்கிழமை காலை ஆரம்பம். ❤️

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வானனை(ம்), மதி சூடிய மைந்தனை,
 தேனனை, திரு அண்ணாமலையனை,
 ஏனனை, இகழ்ந்தார் புரம்மூன்று எய்த
 ஆனனை,-அடியேன் மறந்து உய்வனோ?

பாடல் எண் :1108
 வீரனை, விடம் உண்டனை, விண்ணவர்-
 தீரனை, திரு அண்ணாமலையனை,
 ஊரனை, உணரார் புரம் மூன்று எய்த
 ஆரனை,-அடியேன் மறந்து உய்வனோ?

 

4 minutes ago, தமிழ் சிறி said:

இனிமையான.... ஒரு பக்திப் பாடலை கேட்ட படி, வெள்ளிக்கிழமை காலை ஆரம்பம். ❤️

எத்தனை மணிக்கு படுக்கின்றனீர்கள்.. இவ்வளவு விடிய எழும்பிவிட்டீர்கள்

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, உடையார் said:

எத்தனை மணிக்கு படுக்கின்றனீர்கள்.. இவ்வளவு விடிய எழும்பிவிட்டீர்கள்

வேலை நாட்களில்.... இரவு 9 மணிக்கு படுத்து,  விடிய இரண்டு மணிக்கு (மனிசியின்  குறட்டை சத்தத்தில்😂)  எழும்பி விடுவேன். 😁

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, தமிழ் சிறி said:

வேலை நாட்களில்.... இரவு 9 மணிக்கு படுத்து,  விடிய இரண்டு மணிக்கு (மனிசியின்  குறட்டை சத்தத்தில்😂)  எழும்பி விடுவேன். 😁

😂🤣; ஓ அப்படியா, என்னால முடியாதப்பா இப்படி படுத்து எழும்ப நல்ல குறட்டைவிட்டு 8 மணித்தியாலத்துக்கு மேல் படுத்திருப்பேன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கையேந்தி கேளுங்கள் இறைவனிடத்திலே || முகவை முரசு S.A.சீனி முஹம்மது

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நெஞ்சே நீ கலங்காதே; 
சீயோன் மலையின்
இரட்சகனை மறவாதே;
நான் என் செய்வேனென்று.

வஞ்சர் பகை செய்தாலும்,
வாரா வினை பெய்தாலும் — நெஞ்சே

1. வினைமேல் வினை வந்தாலும் - பெண்சாதிப் பிள்ளை
மித்துரு சத்ரு ஆனாலும்
மனையோடு கொள்ளை போனாலும்
வானம் இடிந்து வீழ்ந்தாலும் - நெஞ்சே

2. பட்டயம், பஞ்சம் வந்தாலும், – அதிகமான
பாடு நோவு மிகுந்தாலும்,
மட்டிலா வறுமைப் பட்டாலும்,
மனுஷர் எல்லாம் கைவிட்டாலும் — நெஞ்சே

3. கள்ளன் என்று பிடித்தாலும், – விலங்கு போட்டுக்
காவலில் வைத் தடித்தாலும்,
வெள்ளம் புரண்டு தலை மீதில்
அலைமொதினாலும் — நெஞ்சே

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மடு மாதா

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளிக்கிழமை மாவிளக்கு

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்


என்னப்பனே ... என் அய்யனே ... கந்தப்பனே கந்தக் காருண்யனே (x2)

பன்னிருகை வேலவனே (x4)

கன்னி வள்ளி மணவாளனே

வேல் வேல் வேல் வேல் ... வேல் முருகா வேல் ... வேல்
  வேல் வேல் வேல் வேல் ... வேல் முருகா வேல்

வேல் முருகா மாப்பழனி ... வேல் முருகா வேல் வேல் (x2)

பார்வதியாள் பாலகனே (x4)

பக்தர்களுக்கு அனுகூலனே

வேல் வேல் வேல் வேல் ... வேல் முருகா வேல் (x2)

வேல் முருகா மாப்பழனி ... வேல் முருகா வேல் வேல் (x2)

எட்டுக்குடி வேலவனே (x4)

சுட்டப் பழம் தந்தவனே ... ஔவைக்கு ... சுட்டப் பழம் தந்தவனே

வேல் வேல்

வேல் முருகா மாப்பழனி ... வேல் முருகா வேல் வேல் (x2)

கால்களில் பொற் சிலம்பு ... முருகன் ... கைகளில் பொற் சதங்கை (x2)

கல் கல் கல் ... என வருவான்

வேல் வேல் வேல் வேல் ... வேல் முருகா வேல்

வேல் முருகா மாப்பழனி ... வேல் முருகா வேல் வேல்.

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

(1) கங்கை அணிந்தவா! 
கண்டோர் தொழும் விலாசா!
சதங்கை ஆடும் பாத விநோதா! 
லிங்கேஸ்வரா!
நின் தாள் துணை நீ தா!
.

(2) தில்லை அம்பல நடராஜா
செழுமை நாதனே பரமேசா தில்லை அம்பல நடராஜா
செழுமை நாதனே பரமேசா 

(3) அல்லல் தீர்த்தாண்டவா வா வா
அமிழ்தானவா வாஅல்லல் தீர்த்தாண்டவா வா வா
அமிழ்தானவா வாதில்லை அம்பல நடராஜா
செழுமை நாதனே பரமேசா 
.
(4)எங்கும் இன்பம் விளங்கவே........)எங்கும் இன்பம் விளங்கவே
அருள் உமாபதேஎங்கும் இன்பம் விளங்கவே
அருள் உமாபதே

(5) எளிமை அகல வரம் தா வா வா
வளம் பொங்க வா.எளிமை அகல வரம் தா வா வா
வளம் பொங்க வாதில்லை அம்பல நடராஜா
செழுமை நாதனே பரமேசா 


 
(6) பலவித நாடும் கலையேடும்
பணிவுடன் உனையே துதிபாடும்பலவித நாடும் கலையேடும்
பணிவுடன் உனையே துதிபாடும்

(7) கலையலங்கார பாண்டிய ராணி நேசாகலையலங்கார பாண்டிய ராணி நேசா
மலை வாசா! மங்கா மதியானவாதில்லை அம்பல நடராஜா
செழுமை நாதனே பரமேசா 
தில்லை அம்பல நடராஜா
செழுமை நாதனே பரமேசா

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஓம் பிரணவ பொருளே

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 வெண்ணை உண்ணும்  என் வேணுகான

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யா நபியே.., எம் மாநபியே.., எங்கள் ரசூல் நன் நபியே

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜீவனாம் எந்தன் இயேசுவே
ஜீவனீந்து நீர் காப்பாயே
கலங்கும் ஆத்மாவில் தென்றல் வீசவே
நிழலைப் போல் எந்தன் கூட நீர்
வருவதடியேனின் புண்ணியமே
ஜீவனாம் எந்தன் இயேசுவே
ஜீவனீந்து நீர் காப்பாயே

1. (திருமுகத்தை நான் நோக்கி நிற்கவே
இருதயத்திற்குள் ஆனந்தம்) - 2
(திருவிலாவிலே குருதி சொரிந்து நீர்
துயரமென்னும் இருள் நீக்கிடும்) - 2
எந்தன் மனசுக்குள் நாதனாய் வாழும்.
ஜீவனாம் எந்தன் இயேசுவே
ஜீவனீந்து நீர் காப்பாயே.

2. (இயேசுநாயகா சத்யரூபனே
சுகம் கொடுப்பவனே சிநேகிதா) - 2
(கடலலைகளில் அலையும் என் தோணி
கரையிலேற்றணுமே தெய்வமே) - 2
நான் இன்று கேட்கின்றேன் ஆசையோடு நாதா
ஜீவனாம் எந்தன் இயேசுவே
ஜீவனீந்து நீர் காப்பாயே
கலங்கும் ஆத்மாவில் தென்றல் வீசவே
நிழலைப் போல் எந்தன் கூட நீர்
வருவதடியேனின் புண்ணியமே
ஜீவனாம் எந்தன் இயேசுவே
ஜீவனீந்து நீர் காப்பாயே
 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அவிதிதவிஷயாந்தரச்சடாரே
ருபநிஷதாமுபகாநமாத்ரபோக

அபிசகுணவஸாத் ததேகஸேஷீ
மதுரகவிர் ஹ்ருதயே மமாவிரஸ்து

வேறொன்றும் நானறியேன் வேதம் தமிழ்செய்த
மாறன் சடகோபன் வண்குருகூர் ஏறு எங்கள்

வாழ்வாமென் றேத்தும் மதுரகவி யார்எம்மை
ஆள்வார் அவரே யரண்

கண்ணி நுண் சிறுத் தாம்பினால் கட்டு உண்ணப்
பண்ணிய பெரு மாயன் என் அப்பனில்

நண்ணித் தென் குருகூர் நம்பி என்றக்கால்
அண்ணிக்கும் அமுது ஊறும் என் நாவுக்கே

நாவினால் நவிற்று இன்பம் எய்தினேன்
மேவினேன் அவன் பொன்னடி மெய்ம்மையே

தேவு மற்று அறியேன் குருகூர் நம்பி
பாவின் இன்னிசை பாடித் திரிவனே

திரிதந்து ஆகிலும் தேவபிரான் உடைக்
கரிய கோலத் திருவுருக் காண்பன் நான்

பெரிய வண் குருகூர் நகர் நம்பிக்கு ஆள்
உரியனாய் அடியேன் பெற்ற நன்மையே

நன்மையால் மிக்க நான்மறையாளர்கள்
புன்மை ஆகக் கருதுவர் ஆதலில்

அன்னையாய் அத்தனாய் என்னை ஆண்டிடும்
தன்மையான் சடகோபன் என் நம்பியே

நம்பினேன் பிறர் நன்பொருள் தன்னையும்
நம்பினேன் மடவாரையும் முன் எலாம்

செம்பொன் மாடத் திருக் குருகூர் நம்பிக்கு
அன்பனாய் அடியேன் சதிர்த்தேன் இன்றே

இன்று தொட்டும் எழுமையும் எம்பிரான்
நின்று தன் புகழ் ஏத்த அருளினான்

குன்ற மாடத் திருக் குருகூர் நம்பி
என்றும் என்னை இகழ்வு இலன் காண்மினே

கண்டு கொண்டு என்னைக் காரிமாறப் பிரான்
பண்டை வல் வினை பாற்றி அருளினான்

எண் திசையும் அறிய இயம்புகேன்
ஒண் தமிழ்ச் சடகோபன் அருளையே

அருள் கொண்டாடும் அடியவர் இன்புற
அருளினான் அவ் அரு மறையின் பொருள்

அருள்கொண்டு ஆயிரம் இன் தமிழ் பாடினான்
அருள் கண்டீர் இவ் உலகினில் மிக்கதே

மிக்க வேதியர் வேதத்தின் உட்பொருள்
நிற்கப் பாடி என் நெஞ்சுள் நிறுத்தினான்

தக்க சீர்ச் சடகோபன் என் நம்பிக்கு ஆட்
புக்க காதல் அடிமைப் பயன் அன்றே

பயனன்று ஆகிலும் பாங்கலர் ஆகிலும்
செயல் நன்றாகத் திருத்திப் பணிகொள்வான்

குயில் நின்றார் பொழில் சூழ்  குரு கூர்நம்பி
முயல்கின்றேன் உன்தன் மொய்கழற்கு அன்பையே

அன்பன் தன்னை அடைந்தவர்கட்கு எல்லாம்
அன்பன் தென் குருகூர் நகர் நம்பிக்கு

அன்பனாய் மதுரகவி சொன்ன சொல்
நம்புவார் பதி வைகுந்தம் காண்மினே

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆயிரம் கண்களை கொண்டவள் 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உள்ளத்திலே நீயிருக்க 
உன்னை நம்பி நானிருக்க
வெள்ளி மலையான் மகனே வேலைய்யா....
என் வாழ்வு வளம்காண
கடைக்கண் பாரய்யா 
உள்ளத்திலே நீயிருக்க
உன்னை நம்பி நானிருக்க
வெள்ளிமலையான் மகனே
வேலைய்யா..என் வாழ்வு வளம்காண
கடைகண் பாரய்யா..
பள்ளம் நோக்கி பாய்ந்து வரும்
வெள்ளம் என அருள்படைத்த
வள்ளலே நீ நினைத்தால் போதுமே
இன்பம் வந்து என்னை சேர்ந்துகொள்ள தேடுமே..
உள்ளத்திலே நீயிருக்க
உன்னை நம்பி நானிருக்க
வெள்ளிமலையான் மகனே
வேலைய்யா.. என் வாழ்வு 
வளம் காண கடைகண் பாரய்யா
தென்பழனி மலைமேலே 
தண்டபாணி கோலத்திலே
கண்குளிர கண்டுவிட்டால் போதுமே
என்றும் கருத்தில் உந்தன் 
அருள்வடிவம் தோன்றுமே...
தென்பழனி மலைமேலே
தண்டபாணி கோலத்திலே
கண்குளிர கண்டுவிட்டால் போதுமே
என்றும் கருத்தில் உந்தன் 
அருள்வடிவம் தோன்றுமே. ..
உள்ளத்திலே நீயிருக்க
உன்னை நம்பி நானிருக்க
வெள்ளிமலையான் மகனே
வேலைய்யா... என் வாழ்வு 
வளம் காண கடைகண்
பாரய்யா...
ஆடிவரும் மயில்மேலே 
அமர்ந்து வரும் பேரழகே
நாடி உன்னை சரணடைந்தேன்
கந்தைய்யா....வாழ்வில் நலம்
அனைத்தும் பெற அருள்வாய்
முருகைய்யா.....
உள்ளத்திலே நீயிருக்க 
உன்னை நம்பி நானிருக்க
வெள்ளிமலையான் மகனே
வேலைய்யா ...
என் வாழ்வு வளம் காண
கடைக்கண் பாரய்யா!!!!!!!!!

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் பாடும் இடமெல்லாம் உன் திருப்புகழ்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நபிகளின் பொன்மொழி கேளாயோ

நபிகளின் பொன்மொழி கேளாயோ கேளாயோ அன்பும் அறமும் கொண்ட இன்ப வாழ்வு தரும் -பொன்மொழி கேளாயோ (நபிகளின்)

மானிடர் யாவருக்கும் தெய்வம் ஒன்றே எனும் மார்க்கமதே இஸ்லாம் . தேனினும் இனிமை தரும் மது வாயினும் தீண்டாதே என்றுரைத்தார் (நபிகளின்)

வாழ்க்கையிலே ஒருபோதும் நீ வட்டி வாங்காதே என்றுரைத்தார். வீழ்ந்து சமாதிகள் பூஜைகள் செய்வதை விட்டொழி என்றுரைத்தார்.(நபிகளின்)


விதவைக்கு மறுமணம் செய்திடல் -இங்கு வேண்டுமென்றே உரைத்தார் பொதுவாக ஆணுக்கும் கற்புண்டு என்பதை புதிதாகவே உரைத்தார்........(நபிகளின்)

கல்விக்கு உயிர் த்தந்தோர் சாவதில்லை என்று காலமெல்லாம் உரைத்தார் நல்லறம் செய்திட நாள் நட்சத்திரமில்லை நம்புக வேன்றுரைத்தார்......(நபிகளின்)

பாவத்தைப் போக்கிடும் தொழுகையை தவறாது பேணிடவே பகர்ந்தார் சோபிதமோங்கிடும் செம்மல் முஹம்மது சிந்தனை செய்துரைத்தார் (நபிகளின்)...

அந்த அருமையான பாடல் தங்கள் செவிகளுக்கு....

 

Edited by உடையார்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.