Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொண்டைக்கடலை சேர்த்த சில சலாட் வகைகள்

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 18/7/2020 at 05:00, தமிழ் சிறி said:

 

புளிப்புக்கு... எமது, தேசிக்காய் ஊறுகாய் இருக்க,
லெபனான் புளிப்பு... நமக்கு எதற்கு?😜 :grin:

தமிழ்சிறி அண்ணா, Kadancha கூறியது போல புளிப்பு என்பதை விட கயர்ப்பு சுவைக்காக அதை பாவிக்கலாம்.

தயிர் சாதத்திற்குதான் ஊறுகாய் பாவித்தால் மிகவும் நன்றாக இருக்கும்😊

Edited by பிரபா சிதம்பரநாதன்
எழுத்துப்பிழை

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

2- அடுத்ததாக Baby capsicum நீளவாக்கில் வெட்டவும்.

3- Zucchini மெல்லிய வட்டமாக வெட்டவும். 

4- வெட்டிய Zucchini, Capsicum வேண்டுமாயின் ovenல் போட்டு அதிக நேரம் வாட்டாமல் எடுத்து வைக்கவும். 

5- சிவப்பு முள்ளங்கியை மெல்லிய வட்டமாக வெட்டி ஒரு நிமிடம் கொதித்த நீரில் போட்டு எடுத்து வைக்கவும்.( அதிக நிமிடங்களுக்கு விட்டால் முள்ளங்கியின் சிவப்பு நிறம் போய்விடும்).

6- Cabanossi சிறிய வட்டங்களாக வெட்டி ovenல் போட்டு எடுத்து வைக்கவும் 

 

18 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

இது முதற்தடவை என்பதால் பொருட்களின் அளவை அண்ணளவாக பார்த்து பார்த்து போட்டேன். ஆனாலும் இந்த மரக்கறிகளின் இயல்பான தன்மை வித்தியாசமான சுவையை தந்தது. விரும்பினால் செய்து பாருங்கள்.

 

வேண்டிய அளவை வெட்டி விட்டு, சிறிய துண்டுகளாக வெட்டாமல், பெரிதான துண்டுகளாகவே grill / oven செய்து, பின்  சிறிய துண்டுகளாக வெட்டுவது மரக்கறிகள் texture / flavour ஐ பெருமளவில் (grill / oven) பண்ணுவதால் மாறுபடாமல் இருக்கும்.

அது போலவே சிவப்பு முள்ளங்கியை, வெட்டாமல் முழுமையாக கொதிநீரில் 1 நிமிடம் விட்டு எடுப்பது, சிறிய துண்டுகளாக வெட்டுவது.

 

tinned chick peas என்றால், 3-4 பேருக்கு,  1 ஆளுக்கு 1 tinned chick peas என்ற அளவில் ஏனைய மரக்கறிகளுடன்,   இந்த salad ஐ 15-20 நிமிடங்களில் செய்யலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி சத்தான மாலை உணவு செஞ்சா சூப்பரா இருக்கும்

 

  • கருத்துக்கள உறவுகள்
On 18/7/2020 at 20:47, Kadancha said:

MARTERN Salami ஐ தேடிப்பார்த்தேன், இங்கு UK இல் முன்பு விற்கப்பட்டது. நானும் உண்டதாக நினைவு.

ஆனால், இப்பொது இல்லை. 

Lidle இல் இருக்கின்றது. ஆனால் மிளகு போட்டது சில நேரம் வரும். சிலநேரம் இருக்காது.
 அதுக்கு ஈடானதா இதுவும் பரவாயில்லை.

Image may contain: food

இதைவிடவும் வேறு சில Morrisons யிலும் உண்டு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 20/7/2020 at 15:02, Kadancha said:

 

 

இருக்கலாம். 
முதலில் நான் இந்த மரக்கறிகளை (முள்ளங்கியை தவிர்த்து)grillல் போடாமல் salad dressingல் ஊறவைத்து செய்யவே..அத்துடன் நான் tin chickpea பாவிப்பது இல்லை, ஆகையால் அண்ணளவாகதான் போட்டு செய்தேன். அதிக நேரம் எடுக்காத salad..

உங்களது பல தகவல்களுக்கு நன்றிகள்

  • 6 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கொண்டைக்கடலையும் couscousம்....

DF47-D87-D-9947-44-DC-B0-B5-CCEDDEB4-FBB

இது இன்னொருவகையான சலாட் செய்முறை.. இன்று பரீட்சித்து பார்த்தேன், மிகவும் நன்றாக இருந்தது என்பதால் உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.
கீரை, கொண்டைக்கடலை மற்றும் couscousம் போன்றவை இருப்பதால் ருசியானது மட்டுமல்ல சத்தானதும், இலகுவாக செய்யக்கூடியதுமாகும்.. 

தேவையான பொருட்களும் செய்முறையும்

சலாட்டிற்கு தேவையானது:
1 கப்- மிகமிகச் சிறியளவில் நறுக்கிய கேல்(Kale) கீரை

3/4 கப்- சமைத்த couscous(செய்முறை கீழே இணைக்கப்பட்டுள்ளது)

2/3 கப்- அவித்த கொண்டைக்கடலை

4 மேசைக்கரண்டி- பசில் வினிகிரெட்(Basil Vinaigrette)(செய்முறை கீழே இணைக்கப்பட்டுள்ளது)

436-C6805-53-DA-4-A49-9-DFE-569-BC9-E354

Couscous சமைக்கும் முறை: 

2/3 கப்- தண்ணீர்
1/2 கப்- couscous 

ஒரு சமைக்கும் பாத்திரத்தில் 2/3 கப் தண்ணீரை ஊற்றி நல்ல கொதிநிலைக்கு வரும்பொழுது couscous சேர்த்து கிளறிக்கொண்டு நெருப்பை குறைத்தபின், மூடியால் மூடி நெருப்பை நிறுத்திவிட்டு, பாத்திரத்தை அடுப்பிலிருந்து எடுக்கவும்.. ஒரு 4 அல்லது 5 நிமிடங்களின் பின், பட்டர் தடவிய முள்கரண்டியால் கிளறிவிடவும்..இப்படி செய்யும் போது couscous கட்டிகளாக இல்லாமல் தனித்தனியே வரும்..

790-E85-F2-683-E-499-E-970-E-77392-B0016


Basil வினிகிரெட் செய்யும் முறை: 

1- சிறிய வெங்காயம்
1/2 கப் Basil இலைகள்(சுத்தம் செய்த)
1/4 கப் ஓலிவ் எண்ணெய்
3 மேசைக்கரண்டி- சிவப்பு வைன் வினிகர்
2 தேக்கரண்டி- தேன்
2 தேக்கரண்டி- டிஜோன் கடுகு
1/2 தேக்கரண்டி- மிளகு
1/4 தேக்கரண்டி- உப்பு


சிறிய வெங்காயம், Basil இலைகள், ஓலிவ் எண்ணெய், சிவப்பு வைன் வினிகர், தேன், டிஜோன் கடுகு, மிளகு மற்றும் உப்பு எல்லாவற்றையும் சேர்த்து பிளென்டரில் நன்றாக, மென்மையாக வருமளவிற்கு அரைக்கவும். நீங்கள் 4 மேசைக்கரண்டியளவை சலாட்டிற்கு எடுத்து வைத்துவிட்டு மிகுதியை ஒரு சிறிய போத்தலில் ஊற்றி குளிர்சாதனபெட்டியில் வைத்தால் மீண்டும் பாவிக்கலாம் ஆனால் 4 நாட்களுக்கு மேல் வைத்து பாவிப்பது நல்லதல்ல..

3-E664-F68-D1-C4-4-B6-B-8481-69-D3-A37-E

சரி இனி, சலாட் செய்முறை.. மிக மிக இலகு...

சலாட்டிற்கு தேவையானது:
1 கப்- மிகமிகச் சிறியளவில் நறுக்கிய கேல்(Kale) கீரை
3/4 கப்- சமைத்த couscous
2/3 கப்- அவித்த கொண்டைக்கடலை
4 மேசைக்கரண்டி- பசில் வினிகிரெட்(Basil Vinaigrette)

ஏற்கனவே தயார் செய்து வைத்திருப்பதை, மேலே கூறிய அளவுகளில் ஒரு கிண்ணத்தில் போட்டு கலந்தால் சலாட் தயார்....

மீதமாக உள்ளதை ஒரு containerல் போட்டு நன்றாக மூடி குளிர்சாதனபெட்டியில் வைத்தால் அடுத்த நாளைக்கு வேலைக்கும் கொண்டுபோகலாம் 😊 

- நன்றி. 
 

  • கருத்துக்கள உறவுகள்

ம் இந்த சலாட் சாப்பிட்டிருக்கிறேன்.நன்றாக இருந்தது.
இணைப்புக்கு நன்றி பிரபா.

  • 5 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இது இன்னொரு வகையான கொண்டைக்கடலை சேர்த்த சலாட்.. இதற்கு தேவைப்படும் பொருட்களும் இலகுவில் கிடைக்கும்..

தேவையான பொருட்கள்
அவித்த கொண்டைக்கடலை -கொஞ்சம்
சிறிய தக்காளி 2 அல்லது 3(ஊர்த்தக்காளியாயின் பாதி)
வெட்டிய சிவப்பு Capsicum - சில துண்டுகள் 
Cucumber - 1 அல்லது பாதி
வெங்காயம் - சிறிதளவு
வெட்டிய பச்சை அப்பிள் - சில துண்டுகள்
பாதி அவகாடோ
அன்னாசி பழம் - சில துண்டுகள்
Walnuts- சிறிதளவு


Salad dressing 
ஓலிவ் எண்ணெய்
முளைகட்டிய தானியங்கள் - 1 மேசைக்கரண்டி அளவு
மூலிகை கலவை (Mixed herbs)
உள்ளி - 1 ( நன்றாக அரைத்து பசைபோல எடுத்து வைக்கவும்) 
சிறிதளவு உப்பும் மிளகும்
 

10140-C2-A-EF12-41-EC-BF0-B-94-AA7-A30-F

முதலில் ஓலிவ் எண்ணெயில், மூளைகட்டிய தானியங்கள், mixed herbs, உப்பு, மிளகு மற்றும் அரைத்த உள்ளி போட்டு ஊற வைக்கவும்


பின்பு சிவப்பு capsicum, cucumber, தக்காளி, வெங்காயம், பச்சை அப்பிள், அவகாடோ, அன்னாசி பழம் போன்றவற்றை சிறு துண்டுகளாக வெட்டி ஒரு கிண்ணத்தில் போட்டு வைக்கவும்.. இதற்குள் அவித்த கொண்டைக்கடலையை போடவும், இறுதியாக walnuts மற்றும் salad dressingயும் போட்டு முள்ளூக்கரண்டியால் கலந்துவிட்டால், இலகுவான, சுவையான அதே நேரம் சத்தான salad தயார்.. 

7-C3-AB681-8-E49-43-B4-9-B01-D9448-C06-D


Salad dressing உங்களுக்கு பிடித்த மாதிரி தனியே ஓலிவ் எண்ணெயோ, அல்லது மிளகு, லெமன் சேர்த்தோ செய்யலாம்

அதே போல walnuts பதிலாக பூசணி விதைகள், வறுத்த சூரியகாந்திபூ விதைகள் போன்றவையும் பாவிக்கலாம்..

மேலும், முளைகட்டிய தானியங்களை வீட்டிலேயே செய்தும் கொள்ளலாம்.. 

- நன்றி
 

  • நியானி changed the title to கொண்டைக்கடலை சேர்த்த சில சலாட் வகைகள்
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

@நியானிமிக்க நன்றி..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.