Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

என்ன செய்கிறார் சாந்தி

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

pg19.jpg

சாந்தி தமிழகம் மறக்க முடியாத பெண். டோஹாவில் நடந்த ஆசியப் போட்டியில் வெள்ளி வென்று, பிறக பாலியியல் பரிசோதனையில் பாதிக்கப்பட்டு பதக்கம் பறிக்கப்பட்டவர். மிக ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த போராடி ஆசியப் போட்டி அளவு உயர்ந்தவருக்கு அது பரிதாபமான முடிவு. இப்போது சாந்தி என்ன செய்கிறார்?

கத்தக்குறிச்சி கிராம்ம்மா... இந்த மாட்டை அங்க போய் கட்டுங்க என்றபடி தன்னிடமிருந்து மூக்கணாகயிறை தன் தாயிடம் நம்மிடம் தந்துவிட்டு பேசத்துங்கினார் சாந்தி. ஆசியன் கேம்ஸ்ல ஜெயிச்சா குல தெய்வ கோயிலுக்கு மொட்டை போடுறதா வேண்டியிருந்தேன். அது இப்பதான் நிறைவேறுச்சு’’ என்று தனது மொட்டைத் தலையில் தொப்பி அணிந்துக் கொள்கிறார்.

‘‘வளத்து... ஆளாக்குன தாய் தந்தைக்கு இத்தன நாள் செய்ய முடியாத உதவிகளை இன்னைக்கு பக்கதுலயிருந்து செஞ்சுட்டு இருக்கேன். பழைய சம்பவங்கள் எல்லாம் மறந்து போச்சு. இப்ப நானுண்டு; என் வீட்டு வேலையுண்டுன்னு நிம்மதியா இருக்கேன். ஞாபக சக்தியைப் போலவே மறதியும் எவ்வளவு முக்கியம்னு இப்ப தெரியுது. ஜெயிச்சது சந்தோஷம் ஆனா அதை மட்டும் ஞாபகம் வச்சுக்க முடியாதுல கூடவே நடந்த சம்பவங்களும் நினைவுக்கு வந்துருதுல’’ என்கிறார். அவர் குரலில் வருத்தம் எட்டி பார்க்கிறது.

‘‘அடுத்து என்ன பண்ணப் போறீங்க’’

‘‘பிஸினஸ்ல இறங்கப் போறேன். பணம் சம்பாதிக்கிறதுக்காக இல்ல, ஏழை எளியவர்களுக்கு உதவுற மாதிரி ஒரு பிஸினஸ். பால்ல இருந்து செய்யக்கூடிய ‘சீஸ்’ தயாரிக்கு பிஸினஸ் செய்ய போறேன். வெளிநாடெல்லாம் ... அங்க சாப்பிட ‘சீஸ்’ என்ற பாலாடை கட்டி தருவாங்க. அதுல சத்து ஜாஸ்தி. இங்க அந்த சீஸ் ரொம்ப விலை. தான் குறைஞ்ச விலைய தரப் போறேன். என்னைப் போல ஏழை தடகளப்போட்டி பயிற்சி பெறுபவர்களுக்கு ரொம்ப உதவியா இருக்கும். அப்புறம் தடகளப் பயிற்சி அகாடமி ஒண்ணும் ஆரம்பிக்கலாம்னு இருக்கேன்’’ என்று சொல்லும் சாந்தியின் கண்ணில் தன்னம்பிக்கை எட்டிப் பார்க்கிறது.

‘‘புதுக்கோட்டைக்கே சாந்தி பெருமைசேர்ந்துட்டாங்க. இவங்களைப் பார்த்துட்டு நிறைய இளைஞர்கள் இளைஞிகள் தடகளப் போட்டிகளில் சேர்றாங்க. பயிற்சி எடுக்கிறாங்க. அவங்க எங்க ஊர் ஹிரோயின்’’ என்கிறார் லோகநாதன். தடகள பயிற்சியாளர். இவரது மகள் சூர்யா

தேசிய சாம்பியனாக இருக்கிறார்.

‘‘என்னைப் பார்த்து நிறைய பேர் இந்தத் துறைக்கு வராங்கனு சொல்றாங்க. அது ரொம்ப சந்தோஷம். அவங்க நிறைய பதக்கம் வெல்லணும். அந்தப்பதக்கம் அவங்க கையில தங்கனும்’’ என்று சொல்லும் சாந்தியின் வார்த்தைகளில் ஆயிரம் அர்த்தங்கள்.

pg19a.jpg

thatstamil

  • 3 months later...
  • கருத்துக்கள உறவுகள்

பிரபல தடகள வீராங்கனை புதுக்கோட்டை சாந்தி தற்கொலை முயற்சி

புதுக்கோட்டை: புதுக்கோட்டை, கத்தக்குறிச்சியைச் சேர்ந்தவர் சவுந்தரராஜன். இவரது மகள் சாந்தி. குடும்பம் வறுமையால் வாடிய நிலையில் பலரது உதவியுடன் உயர்கல்வியை முடித்தார். தடகளப் போட்டிகளில் சாதனைகள் புரிந்தார். ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஓட்டப் பந்தயத்தில் வெள்ளிப் பதக்கம் பெற்றார். அவரது திறமையைப் பாராட்டிய முதல்வர் கருணாநிதி, ரொக்கப்பரிசாக ரூ.15 லட்சம் வழங்கினார். பெரிய ஷடிவி' ஒன்றையும் தனது சொந்த பரிசாக கொடுத்தார். ஆசியப் போட்டியில் பதக்கம் பெற்ற அவரது உடற்கூறு தொடர்பாக கேள்வியை சில நாடுகள் எழுப்பின. மருத்துவ சோதனையில் அவரிடம் பெண் தன்மைக்கான ஹார்மோன் குறைவாக இருந்ததாக கூறப்பட்டது. இந்த நிலையில் வீராங்கனை சாந்தி மயங்கிய நிலையில் புதுக்கோட்டை அரசு தலைமை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரை சோதித்தபோது விஷம் தின்று தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. அவரது உடல் நிலை மிகவும் மோசமாக உள்ளது. தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நன்றி - தினமலர்

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக ஓட்ட வீராங்கனை சாந்தியின் பூர்வீகம் நாவலப்பிட்டி

அண்மையில் கட்டாரின் தலைநகர் டோஹாவில் நடந்து முடிந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று தமிழர்களுக்கு பெருமை சேர்த்துள்ளார் சாந்தி.

இந்தியா சார்பாக இப் போட்டியில் கலந்து கொண்ட சாந்தி, பதக்கம் பெற்ற முதல் தமிழக வீராங்கனை என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.இந்த பெருமையை கொண்டாடும் விதமாக தமிழக அரசு சாந்திக்கு 15 இலட்சம் இந்திய ரூபாக்களை பரிசாக அறிவித்துள்ளது.

சாந்தியின் சாதனை ?ஏழை மக்களின் எடுப்பான வரலாறு?? என்கிறார்கள் சாந்தியின் கிராமமான புதுக்கோட்டை கந்தக்குறிச்சியை சேர்ந்தோர். தமிழகம் புதுக்கோட்டையிலிருந்து அறந்தாங்கி செல்லும் வழியில் 13 கி.மீ. தூரத்திலுள்ளது கந்தக் குறிச்சி கிராமம்.

இந்த குக்கிராமத்தில் ஒரேயொருவரின் வீட்டில்தான் தொலைக்காட்சியுள்ளது. இரவு 7 மணியானால் முழு கிராமமுமே தொடர் நாடகம் பார்க்க இந்த வீட்டில் கூடி விடுமென தெரிவித்த கந்தக் குறிச்சியைச் சேர்ந்த ஒருவர், சாந்தியின் தந்தை சௌந்தரராஜன் தனது மகளின் சாதனையை பார்க்க துடித்த கதையை பின்வருமாறு கூறினார்.

கருவேல மரங்களும் குடிசை வீடுகளுமாக இருக்கும் அந்தக் கிராமத்தில் ஒரேயொருவரின் வீட்டில் தான் தொலைக்காட்சி இருக்கிறது.இரவு ஏழு மணியளவில் ஒட்டு மொத்த கிராமமுமே அந்த வீட்டில் கூடி தொடர் நாடகம் பார்க்க மூழ்கிக் கிடக்குமென கிராமவாசியொருவர் தெரிவித்தார்.

அந்த வீட்டு இளைஞனிடம் தம்பி கொஞ்ச நேரம் சனல மாத்துவீங்களா? என் பொண்ணு கலந்துக்கிற ஓட்டப்பந்தயத்தை டி.டி. ஸ்போட்ஸ் சனலில காட்டுறாங்களாம். அதைப் பார்க்கணும். ஆசையா இருக்கு தம்பி கொஞ்சம் ஒத்தாசை பண்ணுங்க எனக் கெஞ்சுகிறார். சாந்தியின் தந்தை தங்கள் கிராமத்துப் பெண் செய்திருக்கும் சாதனையின் மகத்துவம் அறியாத அந்தக் கிராமத்தினர் நாடகம் பார்க்கணும் என்ற ஆர்வத்தில் அதெல்லாம் மாத்த முடியாது போய்யா! என்று கடுகடுக்கின்றனர். ஆனாலும், அந்த வீட்டு இளைஞர், ்அட இருங்கப்பா. நம்ம ஊரு பொண்ணு ஓடறதைப் பார்க்க கொடுத்து வைச்சிருக்கணும், என அமைதிப்படுத்திவிட்டு சனலை மாற்றுகிறார்.

பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப்போட்டி.... ஐந்தாறு பெண்கள் அணிவகுத்து நிற்க, அதில் தன் மகள் சாந்தி எங்கே என்று ஆர்வத்தோடு தேடுகிறார் பார்வை மங்கிப்போன அந்தப் பெரியவர். அதற்குள் ஓட்டம் தொடங்கி விடுகிறது. அதோ நான்காவதாக வந்திட்டு இருக்கே அதாய்யா உம் பொண்ணு என்று யாரோ ஒருவர் சுட்டிக்காட்ட பெரியவர் பரபரப்பாகி சாந்தி- கண்ணம்மா தம்பிடிச்சு வாடா.... முந்துடா... முந்துடா என நெஞ்சைப் பிடித்துக் கொண்டு கத்துகிறார்.

அந்தப் பெரியவரின் ஆசையும் ஆவேசமும் கலந்த குரல் சாந்தியின் காதுகளில் விழுந்ததோ என்னவோ நாலாவதாக ஓடிவந்து கொண்டிருந்த சாந்தி இருவரைப் பின்னுக்குத் தள்ளி இரண்டாவது இடத்தைப் பிடிக்கிறார். ஆஹா எம் பொண்ணு ஜெயிச்சுட்டா. எஞ்சாமி மனசு வச்சுட்டான் எனக் குதூகலமும் பெருமிதமுமாக அந்தப் பெரியவர் விம்மியழ, கிராமமே எழுந்து அவரை அணைத்துக் கொண்டது. செங்கல் சூளையில் வேலை பார்த்தும் செங்கல் வைத்துக் கட்ட வழியின்றி வெறும் மண்ணை குழைத்து வீடு கட்டியிருக்கிறார்கள் சாந்தியின் குடும்பத்தினர்.

் அறுத்துப் போடுற கல்லுமேல காட்டுற அக்கறையைக் கூட நாங்கள் எம் பொண்ணு மேல காட்டல சாமி. உடம்பு பலப்பட அவளுக்குப் பச்சை முட்டை கூட உடச்சி கொடுக்க வழியற்ற குடும்பம் சாமி என் குடும்பம். ஒரு நாளைக்கு ஆயிரம் கல் அறுத்தா 22 ரூபா கூலி கிடைக்கும். இதை வெச்சி ஏழுபேர் எப்படித் தம்பி வயித்தக் கழுவ முடியும்? அவளுக்கு ஒரு வேளைக் கூட கஞ்சி ஊத்துனது கிடையாது. என்னை விட நோஞ்சானா இருக்கிற எம் பொண்ணு சாதிச்சிருக்கு. உடம்பை அம்பு மாதிரி வச்சியிருக்கிறதால தான் சாந்தி அப்படியொரு பாய்ச்சல் வேகத்தில் ஓடி வெள்ளிப் பதக்கம் ஜெயிச்சானு எல்லோரும் சொல்லுறாங்க...ஐயா சாமி அது பயிற்சியால் வந்த உடம்பு இல்லீங்க. பட்டினியால் இளைச்சது. நல்லா விளையாடுற காலத்தில் முட்டை, கொண்டைக்கடலை எல்லாம் வாங்கிக் கொடுத்து உடம்பை தேத்தக் கூட எனக்கு வழியில்லங்க. நெஞ்சி தெறிக்கிற மாதிரி உயிரைக் கையில் புடிச்சுகிட்டு எம்பொண்ணு ஓடி வந்ததை நெனக்க நெனக்க அழுகையா வருது. என்றார்.

இலங்கை தான் எங்களுக்குப் பூர்வீகம். எங்க அப்பா முத்தையா, விளையாட்டில் பெரிசா சாதிச்சவர். கிரிக்கெட் அணியிலும் விளையாடியிருக்கிறார். இன்னைக்கும் இலங்கையில் நாவலப்பிட்டி கதிரேசன் மத்திய கல்லூரிக்கு,போய் பார்த்தீங்கனா அப்பாவோட பெரிய படம் மாட்டியிருக்கும்....நாங்க 1974 ஆம் ஆண்டு இங்கு வந்தோம். எனக்கு பின்னால் யாருமே விளையாடல . ஆர்வம் இல்லாம போயிருச்சினு அப்பா ரொம்ப கவலைப்பட்டார். உன்னோட பையனுக்காச்சினும் நான் விளையாட்டு கத்துக் கொடுக்கனும்டானு அடிக்கடி சொல்லுவாரு. ஆனா, எனக்கு வரிசையாக பொறந்தது நாலு பொண்ணுங்க. கடைசியாகத்தான் பையன் பொறந்தான். சரி ஆணா இருந்தா என்ன பொண்ணா இருந்தா என்னன்னு என்னோட மூத்த பொண்ணு சாந்திக்கு எல்லா விளையாட்டும் கத்துக் கொடுத்தேன்.?? என்கிறார் சௌந்தரராஜன்.

்வீட்டில் அக்கா, ஒலிம்பிக்கில் நான் கண்டிப்பாக ஒரு நாள் சாதிப்பேனு சொல்லிகிட்டே இருக்கும். பி.ரி.உஷாவைப் பத்தின செய்தியையும் அக்கா நிறைய கட் பண்ணி வச்சிருக்கு. பி.ரி.உஷாவோட சாதனை தான் அக்காவை ஆர்வப்படுத்துச்சு. ஒன்றரை வருஷத்துக்கு முன்னாள் தென்கொரியாவில் நடந்த ஆசிய தடகளப் போட்டியில் அக்கா வெள்ளிப் பதக்கம் வாங்கினாங்க. ஜாம்ஷெட்பூரில் நடந்த போட்டியில் 800, 1,500 மீற்றர் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கம் வாங்கி ஷைனி வில்சனோட 15 வருட ரெக்கோட்டை அக்கா முறியடிச்சா.

அப்போது முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா அம்மா அக்காவை பாராட்டி ஒரு இலட்சம் ரூபா கொடுத்தாங்க. அதை அப்படியே எங்க படிப்புக்கு கொடுத்துட்டாங்க? என்றார் சாந்தியின் தங்கைகள்.

அப்புறம் வெள்ளிப் பதக்கம் வாங்கியிருக்கிதைப் பத்தி இன்னும் அக்கா எங்களுக்கு போன் பண்ணவே இல்லை. அக்காவோட சந்தோஷக் குரலைக் கேட்கத் தான் போன்கிட்டயே எல்லோரும் உட்காந்து இருக்கிறோம் என்கிறார்கள் சாந்தியின் தங்கைகள்.

்சாந்தி ஆறாவது, ஏழாவது படிச்சப்ப, வீட்டில சின்னஞ் சிறுசுகளை வச்சுக்கிட்டு ரொம்ப அல்லாடுவேன். அப்போ சாந்தி வீட்டுக்குள்ள வந்தா எங்கேயாச்சும் போயிட்டுப் புள்ளைங்க தூங்கினதுக்கு அப்புறம் வாம்மான்னுவேன். சாப்பாடு நேரத்துல கூட நீ பள்ளி கூடத்துல சாப்புட்டுக்கனு அனுப்பிவிடுவேன். மூத்த பொண்ணா பொறந்ததால சாந்தி வீட்ல ஒரு நிமிடம் கூட நிம்மதியா இருக்க முடியாம கஷ்டப்பட்டா என சாந்தியின் தாய் மணிமேகலை கவலையுடன் கூறினார். தமிழர்களுக்கு பெருமை சேர்த்துள்ள சாந்தியை சோதனைகள் விட்டதாகத் தெரியவில்லை. போட்டியின் பின்னர் சாந்தியிடம் மேற்கொள்ளப்பட்ட பால் நிலை மருத்துவ பரிசோதனைகள், சாந்தியிடம் ஆண்களின் அதிகளவில் சுரக்கும் ஓமோன்கள் அதிகளவில் காணப்படுவதாக கூறுகின்றன. இதனால் சாந்தியும் அவரது குடும்பமும் துடியாய் துடித்துப் போயுள்ளனர்.

நாவலப்பிட்டியைச் சேர்ந்த மலையக மக்களும் நாவலப்பிட்டி கதிரேசன் மத்திய கல்லூரி பழைய மாணவர்கள், அதிபர், ஆசிரியர்கள், நலன்விரும்பிகள் மற்றும் இந்து சமய அமைப்புகள் போன்றன மன நிறைவோடு வாழ்த்துகின்றனர். அத்துடன், இக்கட்டான சூழ்நிலைகளுக்குள் தள்ளப்பட்டுள்ள சாந்திக்காக நாவலப்பிட்டி மக்கள் இறைவனை வேண்டுகின்றனர்,.

http://www.viduppu.com/sports/index.php

  • கருத்துக்கள உறவுகள்

அபாய கட்டத்தைத் தாண்டினார் சாந்தி!

வியாழக்கிழமை, செப்டம்பர் 6, 2007

தஞ்சாவூர்:

பூச்சி மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றதாக நேற்று புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தடகள வீராங்கனை சாந்தி, தற்போது தஞ்சை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் அபாய கட்டத்தைத் தாண்டி விட்டதாக தஞ்சை மாவட்ட ஆட்சித் தலைவர் விஜயராஜ்குமார் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் தட்டக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் சாந்தி. தடகள வீராங்கனையான இவர் கடந்த ஆண்டு நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் 800 மீட்டர் ஓட்டப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

இதையடுத்து அவருக்கு தமிழக அரசு ரூ. 15 லட்சம் ரொக்கப் பரிசு மற்றும் ரூ. 1 லட்சம் மதிப்பிலான டிவியைப் பரிசாக அறிவித்தது. இந்த நிலையில் பெண்மைக்குரிய ஹார்மோன் சாந்தியிடம் இல்லை என்று புதிய சர்ச்சை எழுந்தது. இதன் தொடர்ச்சியாக சாந்தியின் பதக்கமும் பறிக்கப்பட்டது.

இருப்பினும் சாந்தியின் திறமையை அங்கீகரித்த முதல்வர் கருணாநிதி அவருக்கு அறிவிக்கப்பட்ட பரிசுத் தொகையை வழங்கி சாந்தியை கெளரவித்தார். பாலின சர்ச்சைக்குப் பின்னர் அதிக வெளியுலக நடமாட்டம் இல்லாமல் இருந்து வந்தார் சாந்தி.

இந்த நிலையில் நேற்று புதுக்கோட்டையில் உள்ள ஒரு தடகள வீரர் வீட்டுக்கு சாந்தி சென்றிருந்தார். பின்னர் திரும்பிய அவர் பூச்சி மருந்தை சாப்பிட்டு விட்டார்.

இதையடுத்து ஆபத்தான நிலையில் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சாந்தி சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் டாக்டர்கள் ஆலோசனைப்படி அவர் தஞ்சை அரசினர் சரபோஜி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

தஞ்சை மருத்துவனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரை நேற்று மாவட்ட ஆட்சித் தலைவர் விஜயராஜ்குமார் நேரில் பார்த்து ஆறுதல் கூறினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் விஜயராஜ்குமார் பேசுகையில், மருத்துவர்களின் தீவிரக் கண்காணிப்பில் சாந்தி உள்ளார். தற்போது முழுமையாக உடல் நலம் தேறி வருகிறார். சிறப்பு டாக்டர்கள் குழு அவருக்கு சிகிச்சை அளித்து வருகிறது. நல்ல நிலையில் அவர் தற்போது இருக்கிறார் என்றார்.

இதற்கிடையே, சாந்தி தற்கொலைக்கு முயன்றதற்கான காரணம் குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

http://thatstamil.oneindia.in/news/2007/09...-imporving.html

கவலை தரும் செய்தி!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தியாவில் கிரிக்கட்டிற்கு காட்டும் கவனத்தை அரசாங்கங்கள் ஏனைய விளையாட்டுக்களிலும் காட்டியிருந்தால் இவர் போல் இன்னும் நிறையப்பேர் உருவாகலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உண்மையிலேயே இந்திய அரசு தனது சகல விளையாட்டு வீரர்களுக்கும் உரிய முறையில் ஊக்குவிக்குமேயானால் அமெரிக்க ஐரோப்பிய நாட்டு வீர வீராங்கணையினருக்கு ஒரு சவாலாக இவர்கள் ஒரு சவாலாக அமைந்திருப்பர்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.