Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரசியல் தீர்மானப்பிரகாரம் ஒரு அரசியல் கைதி கூட விடுவிக்கப்படவில்லை என்கிறது குரல் அற்றவர்களின் குரல்.!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அரசியல் தீர்மானப்பிரகாரம் ஒரு அரசியல் கைதி கூட விடுவிக்கப்படவில்லை என்கிறது குரல் அற்றவர்களின் குரல்.!

1595980682_0000.jpg

சிறைத் தடுப்பில் இருந்து இதுவரை வெளியேறிய அரசியல் கைதிகள் எவருமே அரசியல் தீர்மானப்பிரகாரம் விடுவிக்கப்படவில்லையென குரல் அற்றவர்களின் குரல் அமைப்பு தெரிவித்துள்ளது.

அரசியல் கைதிகளது விடுதலைக்காக போராட அமைக்கப்பட்டுள்ள குரலற்றவர்களின் குரல் அமைப்பு யாழ்.ஊடக அமையத்தில் இன்று நடத்திய ஊடக சந்திப்பில் இதனை தெரிவித்துள்ளது.

கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சாரங்களில் கடந்த நல்லாட்சி காலப்பகுதியில் தம்மால் பெருமளவு அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட்டதாக பிரச்சாரப்படுத்தப்பட்டுவருகின்றது.

இதனை முற்றாக மறுதலித்துள்ள அமைப்பு அரசியல் கைதிகளில்; தனிப்பட்ட ரீதியில் சட்டத்தரணிகளை அமர்த்தி வழக்காடி விடுதலை பெற்ற ஒருசிலரைத் தவிர ஏனையவர்கள் எப்படியாவது விரைவில் விடுதலைபெற்று குடும்பங்களுடன் இணைய வேண்டும் என்பதற்காக தம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களை வலிந்து ஏற்றுக்கொண்டு அதற்கான தண்டனைகளை அனுபவித்தே விடுதலை அடைந்துள்ளார்கள். மேலும், எவர் ஒருவரும் அரசியல் தீர்மானத்தின் அடிப்படையில் விடுவிக்கப்படவில்லை.

அதேவேளை சிறைக்கூடங்களில் அன்றாடம் செத்துக்கொண்டிருக்கும் அரசியல் கைதிகளின் விடுதலை விவகாரமானது மனிதாபிமான அடிப்படையில் ஆற்றவேண்டிய முதன்மைக் கருமமாகும் என்பதை சகலரும் புரிந்துகொள்ள வேண்டும்.

அவசரகால மற்றும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் 11 முதல் 25 வருடங்களாக தென்னிலங்கை சிறைச்சாலைகளில் சூழ்நிலைக் கைதிகளாக தொடர்ந்து தடுத்துவைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளுள்,

கொழும்பு புதிய மகஸீன் சிறைச்சாலையில் - 40 பேரும்,

அனுராதபுரம் சிறைச்சாலையில் - 26 பேரும்,

வெலிக்கடை ஆண்கள் சிறைச்சாலையில் - 03 பேரும்,

மகர சிறைச்சாலையில் - 02 பேரும்,

நீர்கொழும்பு சிறைச்சாலையில் - 02 பேரும்,

வெலிக்கடை பெண்கள் சிறைச்சாலையில் - 01 வரும்,

கண்டி தும்பறை சிறைச்சாலையில் - 01 வரும்,

கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் - 01 வரும்,

களுத்துறை சிறைச்சாலையில் - 01 வரும்,

பொலநறுவை சிறைச்சாலையில் - 01 வரும்,

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் - 01 வரும் என 79 கைதிகள் உள்ளனர்.

இவர்களில்,

விளக்கமறியல் கைதிகளாக – 35 பேரும்,

மேன்முறையீட்டு கைதிகளாக – 16 பேரும்,

தண்டனைக் கைதிகளாக – 26 பேரும்,

ஆயுள் தண்டனை உறுதிசெய்யப்பட்ட கைதிகளாக – 02 பேரும்,

என நான்கு வகையினர் அடங்குகின்றனர்.

அதிகாரம் பெறுகின்ற அரசாங்கங்களும் சரி, அரசியல்வாதிகளும் சரி, அரசியல் கைதிகளை 'நாம் படிப்படியாக விடுத்துள்ளோம்' என்ற கூற்றை பாலபாடமாகக் கூறி வருகின்றனர். இது முற்றிலும் தவறானது. சிறைத் தடுப்பில் இருந்து இதுவரை வெளியேறிய அரசியல் கைதிகள் அனைவரும் தனிப்பட்ட ரீதியில் சட்டத்தரணிகளை அமர்த்தி வழக்காடி விடுதலை பெற்ற ஒருசிலரைத் தவிர ஏனையவர்கள் எப்படியாவது விரைவில் விடுதலைபெற்று குடும்பங்களுடன் இணைய வேண்டும் என்பதற்காக தம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களை வலிந்து ஏற்றுக்கொண்டு அதற்கான தண்டனைகளை அனுபவித்தே விடுதலை அடைந்துள்ளார்கள். மேலும், இங்கு எவர் ஒருவரும் அரசியல் தீர்மானத்தின் அடிப்படையில் விடுவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. (முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள், தமது அரசியல் காய்நகர்த்தலுக்காக ஒருவரை விடுவித்துள்ளார். இது ஒரு அப்பட்டமான அரசியல் நாடகம்)

குறிப்பாக, இன்று தமிழ்த் தலைமைகளில் பெரும்பாலானனோர் சட்டத்தரணிகள். ஆனால், இவர்கள் தமது சட்ட அறிவைப் பயன்படுத்தி கைதிகள் விடுவிப்பிற்கு அல்லது இந்தக் கைதிகள் விவாகாரம் அரசியல் பிரச்சினையாகப் பரிணாமம் பெறுவதற்கு உரிய சாத்தியமான செயற்பாடுகள் எதிலும் இவர்கள் பங்குகொள்ளாமல் இருக்கின்றார்கள் என்பதை நாம் இங்கு சுட்டிக்காட்டத்தான் வேண்டும். தமிழ்த் தலைமைகள் ஆளும் சிங்களத் தரப்பு அதிகார வர்க்கத்திற்கு ஏற்படக்கூடிய நெருக்கடிகளுக்கு மட்டும் தமது சட்ட அறிவைப் பயன்படுத்தி தீர்வுகள் கிடைக்கவும் பதவிகளைத் தக்கவைக்கவும் இவற்றுக்காக உழைக்கும் ஆர்வத்தை, முயற்சியை, தமிழ்க் கைதிகள் விவகாரம், காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம், நிலம் மீட்பு விவகாரம் உள்ளிட்ட எதிலும் அக்கறைப்படுவதில்லை, ஆர்வம் காட்டுவதில்லை.

இ;ந்த தமிழ்த் தலைமைகளுக்கு தமிழ் மக்களின் வாக்குகள் மட்டும் வேண்டும். இந்த அவலமும் துன்பமும் இன்னும் எத்தனை காலத்திற்கு நீடிக்குமோ! ஆம், நாம் சிந்தித்து செயலாற்ற வேண்டிய தருணம் இது.

எப்போதும்போல தேர்தல் என்று வருகின்ற வேளைகளில் அல்லது கைதிகள் உணவு தவிர்ப்பு போராட்டங்கள் மேற்கொள்கின்ற சந்தர்ப்பங்களில் மாத்திரம் அரசியல் கைதிகள் விவகாரத்தை கையில் எடுப்பதும் அதன் பின்னர் கைவிடுவதும் அரசியல்வாதிகளுக்கு பழகிப்போய்விட்டது. இந்த வகையில் திட்டமிட்டு ஏமாற்றப்பட்ட கைதிகள் உடல், உள ரீதியில் பாதிக்கப்பட்டு சிறைக் கூடங்களுக்குள் பரிதாபகரமாக மடிந்துபோனவர்கள் பலருள்ளனர். இதுபோக மீதமுள்ளவர்கள் நடைப்பிணங்களாக நாட்களை எண்ணிக்கொண்டிருக்கின்றனர். நம்பிக்கை இழந்த இவர்களால் இனிமேலும் உண்ணாவிரதப் போராட்டங்களை மேற்கொண்டு தற்கொலைக்கு ஒப்பான செயற்பாடுகளில் ஈடுபட முடியாது என்பதை சம்பந்தப்பட்டவர்கள் விளங்கிக்கொள்ள வேண்டும்.

ஆகவே, அரசியல் கைதிகளின் சிறைச்காலத்தை தண்டனைக் காலமாகக் கருதி, அரசியல் அமைப்பின்படி ஜனாதிபதிக்கு இருக்கின்ற அதிகாரத்தைப் பயன்படுத்தி அரசியல் தீர்மானம் எடுத்து கைதிகளின் விடுதலைக்கு சிறந்த பொறிமுறையை விரைவாக முன்னெடுக்கவேண்டும். குறைந்த பட்சம் தமிழ்க் கைதிகள் விடயத்திலேனும் உரிய தீர்வை காண முடியாவிட்டால் வேறெந்தப் பிரச்சினைகளையும் அரசாங்கம் தீர்த்து வைக்குமா? ஆம் சிந்திக்க வேண்டும்.

தேர்தலில் வாக்களிப்பது நமது ஜனநாயக உரிமை. இதனை நாம் சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். மக்கள் ஆணையூடாக பெற்றுக்கொள்கின்ற மக்களவை அதிகாரத்தை பொது நலனுக்காகப் பயன்படுத்தும் சமூக அக்கறை கொண்ட சேவை மனப்பாங்காளர்களை நாம் சபையேறச் செய்யவேண்டும்.

இதுவரை நாம் அனுப்பிய பிரிதிநிதிகள் சாதித்தது என்ன... என்ன...? நாம் வெறுமனே வாக்காளர்களாக இருந்திருக்கின்றோமே ஒழிய சமூக பொறுப்புவாய்ந்த பிரஜைகளாக இல்லை. இந்த உண்மை தமிழ்த் தலைவர்களுக்கும் சிங்களத் தலைமைகளுக்கும் நன்கு புரிந்திருக்கின்றது. இதனால்தான் இவர்களால் தொடர்ந்தும் நாம் ஏமாற்றப்படுகின்றோம். இது தொடர வேண்டுமா.....?

தற்போது சிந்தித்து செயலாற்றவேண்டிய தருணம் இது. எவராலும் தொடர்ந்தும் ஏமாற்றப்படாமல் நாம் விழித்துக்கொள்வோம் என குரல் அற்றவர்களின் குரல் அமைப்பு தெரிவித்துள்ளது.

http://aruvi.com/article/tam/2020/07/29/14967/

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்
பிழை திருத்தம்

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

இதனை முற்றாக மறுதலித்துள்ள அமைப்பு அரசியல் கைதிகளில்; தனிப்பட்ட ரீதியில் சட்டத்தரணிகளை அமர்த்தி வழக்காடி விடுதலை பெற்ற ஒருசிலரைத் தவிர ஏனையவர்கள் எப்படியாவது விரைவில் விடுதலைபெற்று குடும்பங்களுடன் இணைய வேண்டும் என்பதற்காக தம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களை வலிந்து ஏற்றுக்கொண்டு அதற்கான தண்டனைகளை அனுபவித்தே விடுதலை அடைந்துள்ளார்கள்.

மீதம் இருப்பவர்கள் தண்டனை எதுவும் இல்லாமலா இருக்கிறார்கள்? சட்டத்தரணிகளும் வேண்டாம், மற்றவர்களை போல தண்டனைக்காலம் பெற்றுவிட்டு வெளியே போகவும் மாட்டோம், கூட்டமைப்பு வந்து விடுவித்தால் தான் போவோம் என்று பிடிவாதமாக இருந்தால், இருக்கட்டுமே? கேட்பது தானே கிடைக்கும்?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கற்பகதரு said:

மீதம் இருப்பவர்கள் தண்டனை எதுவும் இல்லாமலா இருக்கிறார்கள்? சட்டத்தரணிகளும் வேண்டாம், மற்றவர்களை போல தண்டனைக்காலம் பெற்றுவிட்டு வெளியே போகவும் மாட்டோம், கூட்டமைப்பு வந்து விடுவித்தால் தான் போவோம் என்று பிடிவாதமாக இருந்தால், இருக்கட்டுமே? கேட்பது தானே கிடைக்கும்?

கொஞ்சமாவது மனசாட்ட்சி உங்களுக்கு உறுத்தவில்லையா ?  சாப்பிடும்போது உயிருடன் இருந்து அல்லல் படுவதை ஒரு கனம்  நினைத்துக்கொள்ளுங்கள் .

நடைமுறையில் உள்ள பிரட்ச்சனை தெரியாமல் ஏகத்துக்கு குழறி வைக்கிறியால் முதலாவது சட்டத்தரணி வைக்குமளவுக்கு பணவசதி இல்லாதவர்கள்தான் அவ்வாறு உள்ளனர் அப்படியான  அவர்களில் நண்பன் ஒருத்தன் இங்கிருந்து  பணத்தை உள்ளே இருப்பவரின் தமையனார் பெயரில் அனுப்பிவிட்டு வேலைகளை  கவனித்து ஆள் வெளியில் வர ஒரு கிழமை இருக்கையில் தமையனாரின் வீட்டுக்கு போலீஸ் போய்  அந்த பணம் எப்படி வந்தது என்று விசாரிக்கின்றது காரணம் நாலு லட்ச்சம் பணம் சிலவழிந்து போயுள்ளது தமையனார் வீடு என்பது சிறு கொட்டில் போலீஸ் கேட்ட கேள்வி வெளிநாட்டு புலிகளின் காசில் இவ்வளவு சிலவும் நடந்து உள்ளது என்று சொல்லி அந்த நாலு லட்ஷமும்  போய்  தமையனார் வாரம் ஒருமுறை  சைன் பண்ணனும் உள்ளூர் காவல் நிலையத்தில் .(உண்மையான நபர் விபரம் தெரியக்கூடாது என்பதுக்காக  சில விடயங்கள் மாற்றி உள்ளேன் ) இப்போ சொல்லுங்கள் யார் இதில் தலையிடனும் என்று ?

அதைவிட  தேர்தல் அறிக்கையில் ஓவ்வொரு முறையும் கூத்தமைப்பு அரசியல்கைதிகள் விடுதலை சம்பந்தமாக நடவடிக்கை எடுப்பதாக சொல்லித்தான் வோட்டு வாங்கிற  உங்களுக்கு வெற்றி பெற்ற பின் நாக்கில் நரம்பில்லாமல் உங்களை போல் கேட்க கூத்தமைப்பின் செம்புகளால் மாத்திரமே முடியும் என்பதையும் காட்டி விட்டிர்களே ?

இலங்கை அரசு சொல்வதென்னவென்றால் அரசியல் கைதிகள் யாருமே இல்லயாம்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, பெருமாள் said:

அதைவிட  தேர்தல் அறிக்கையில் ஓவ்வொரு முறையும் கூத்தமைப்பு அரசியல்கைதிகள் விடுதலை சம்பந்தமாக நடவடிக்கை எடுப்பதாக சொல்லித்தான் வோட்டு வாங்கிற  உங்களுக்கு வெற்றி பெற்ற பின் நாக்கில் நரம்பில்லாமல் உங்களை போல் கேட்க கூத்தமைப்பின் செம்புகளால் மாத்திரமே முடியும் என்பதையும் காட்டி விட்டிர்களே ?

உங்களுடை செம்பு எப்படி நிறைகிறது என்று எவரும் இன்னும் விசாரிக்கவில்லையா?

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, கற்பகதரு said:

உங்களுடை செம்பு எப்படி நிறைகிறது என்று எவரும் இன்னும் விசாரிக்கவில்லையா?

எங்களுக்கு தாராளமாகவே ஆண்டவன் கொடுக்கிறான் ஓவொரு முறையும் அரசியல் கைதிகளை  விடுதலை செய்கிறம்  என்றுதானே வாக்கு கேட்டு வெற்றியடைந்தபின் 

 

5 hours ago, கற்பகதரு said:

கூட்டமைப்பு வந்து விடுவித்தால் தான் போவோம் என்று பிடிவாதமாக இருந்தால், இருக்கட்டுமே? கேட்பது தானே கிடைக்கும்?

மேலே உள்ளவாறு நக்கலும் நையாண்டியுமாய் உங்களால் மாத்திரமே கேட்க்க முடியும் .

  • கருத்துக்கள உறவுகள்

அப்பாவிகளை  பிடித்து வைத்து விட்டு

அதைச்செய்தாய்

இதைச்செய்தாய் என  எவன் எவன் செய்ததையெல்லாம் 

தம் தலையில் போட்டால் விடுதலை  என்றால்

அதை  ஏற்க எல்லோரும் தயாராக  மாட்டார்கள்

ஏனெனில் அவையே  பின்னர் இவர்களுக்கு ஆப்பாகலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

கூத்தமைப்பால் வேலைவாய்ப்பும் அரசியல்கைதி  விவகாரமும் முன்னிலைப்படுத்தினால் அரசியல் தீர்வுக்கு பழுதாகிவிடும் என்று சொன்ன சம்பந்தரால் கொழும்பில் அரசு மாளிகை வீடு அன்பளிப்பாக கொடுக்கும்போது இல்லை வேண்டாம் எமக்கு முதலில் தீர்வுதான் முக்கியம் என்று சொல்ல முடியவில்லை .

1 minute ago, விசுகு said:

அப்பாவிகளை  பிடித்து வைத்து விட்டு

அதைச்செய்தாய்

இதைச்செய்தாய் என  எவன் எவன் செய்ததையெல்லாம் 

தம் தலையில் போட்டால் விடுதலை  என்றால்

அதை  ஏற்க எல்லோரும் தயாராக  மாட்டார்கள்

ஏனெனில் அவையே  பின்னர் இவர்களுக்கு ஆப்பாகலாம்.

அது அவர்களுக்கு விளங்குதில்லை விளங்கினாள் அவர்களுக்கு காவடி எடுத்துக்கொண்டு இரு க்கமாட்டினம் .

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, கற்பகதரு said:

மீதம் இருப்பவர்கள் தண்டனை எதுவும் இல்லாமலா இருக்கிறார்கள்? சட்டத்தரணிகளும் வேண்டாம், மற்றவர்களை போல தண்டனைக்காலம் பெற்றுவிட்டு வெளியே போகவும் மாட்டோம், கூட்டமைப்பு வந்து விடுவித்தால் தான் போவோம் என்று பிடிவாதமாக இருந்தால், இருக்கட்டுமே? கேட்பது தானே கிடைக்கும்?

மிகவும் தவறான

கண்டிக்கத்தக்க எழுத்து மற்றும் சிந்தனை😢😢😢

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, பெருமாள் said:

அது அவர்களுக்கு விளங்குதில்லை விளங்கினாள் அவர்களுக்கு காவடி எடுத்துக்கொண்டு இரு க்கமாட்டினம் .

பரந்தனில் இருந்து   பிரான்சுக்கு வந்த  ஒருவரை  சந்திக்கும் வாய்ப்புக்கிடைத்தது

அவரது  கையில் இருந்த பெருத்த எரி காயமே அவருடன் பேசத்தூண்டியது

கேட்டபோது

சியைில் கிடைத்த  பரிசு

உடல் பூராக இருக்கு காட்டமுடியாது என்றார்

இந்த  காலப்பகுதியில் இவ்வளவு பணம் கொடுத்து எதுக்கு இங்க  வந்து

இந்த வேலையை  செய்கிறீர்கள் அங்கு இருந்திருக்கலாமே  என்றதும் அழத்தொடங்கிவிட்டார்

சிறையில் குற்றத்தை ஒப்புக்கொள் விடுதலை தருகின்றோம் என்றார்கள்

மறுத்து மறுத்து கடைசியில்இரு பெண் பிள்ளைகளும் வளர்ந்து விட்டதால்

அவர்களது  பாதுகாப்புக்காகவாவது நான் இருக்கணும் என்பதற்காக 

குற்றத்தை  ஒப்புக்கொண்டு குற்றப்பணம் செலுத்தி தண்டனை  பெற்று சீர்  திருத்தம்  முடித்து

வெளியில் வந்தால்

குற்றம் செய்தபடியால் தானே ஒப்புக்கொண்டாய் தண்டனைப்பணம் செலுத்தினாய்?

எமக்கும்  கப்பம் கொடு என நாளுக்கு  நாள் ஒவ்வொரு ஆமியாய் வீட்டுக்குள் வருகிறார்கள்

எத்தனை  தரம்  கொடுப்பது

எத்தனை  பேருக்கு  கொடுப்பது?

பெண் பிள்ளைகளின்  பாது காப்புக்காக வெளியில் வந்தேன்

ஆனால் நான் வீட்டில் இருப்பதே என் பிள்ளைனகளுக்கும் மனைவிக்கும் ஆபத்தாகியதால் வந்தேன் ஐயா  என்றார்

என்  கண்களிலும்  அழுவதைத்தவிர????

Edited by விசுகு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.