Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வித்தியாதரன்: ஊருக்கே உபதேசம்… மற்றதெல்லாம் வியாபாரம்!

Featured Replies

இது தேர்தல்காலம்.

 

625.500.560.350.160.300.053.800.900.160.

 

அரசியல்வாதிகளும், தொண்டர்களும் பரபரப்பாக இருப்பதற்கு ஈடாக- இன்னும் சொல்லப் போனால் அதைவிடவும் அதிகமாக- பரபரப்பாக பத்திரிகையாளர்கள் இருப்பார்கள். மக்களை பரபரப்பாகவும், சுவாரஸ்யத்திற்கு குறைவில்லாமலும் வைத்திருக்க வேண்டியவர்கள் அவர்களல்லவா.

ஆகவே செய்திகளை தேடி ஓடிக் கொண்டிருப்பார்கள். வழக்கத்திற்கு மாறாக, அவர்களின் காலடி தேடியே செய்திகள் வந்து கொண்டிருக்கும் காலம்.

இவர்கள் ஒரு வகை பத்திரிகையாளர்கள்.

இன்னொரு வகை பத்திரிகையாளர்களும் இருப்பார்கள். அவர்கள் கல்லாப் பெட்டியை நிறைப்பதில் குறியாக இருப்பார்கள். சாம,தான, பேத, தண்ட முறைகளை பயன்படுத்தி அரசியல்வாதிகளிடமிருந்து பிடுங்குவதில் குறியாக இருப்பார்கள். எப்படியோ, ஒரு தேர்தலின் முடிவில் பெட்டியை நிறைத்து, சிறிது காலத்திற்கு செட்டில் ஆகிவிடுவது இலக்கு.

அரசியல்வாதிகள் தேர்தல் விளம்பரம் தரவில்லையென்றால், அவ்வப்போது ஒரு அடி கொடுக்க வேண்டும்… ஓடிவந்த விளம்பரம் தருவார்கள் என்பது அறப்பழசான ஒரு ஊடக உத்தி.

இன்றைய காலைக்கதிர் பத்திரிகையை படித்தபோது, இதை எழுத வேண்டுமென தோன்றியது.

உண்மையில் காலைக்கதிர் பத்திரிகை தமிழ் சூழலில் செல்வாக்கு செலுத்தவதாகவோ, வெற்றிகரமானதாகவோ அமையவில்லை. அப்படியானால், எதற்காக அது பற்றி எழுத வேண்டுமென தோன்றும்.

தன்னை ஊடக ஜாம்பவான் என சொல்லிக்கொள்ளும் வித்தியாதரன் அங்கிருக்கிறாரே! ஆகவே சில விடயங்களை பேச வேண்டும்.

தனக்கு அடையாளம் ஏற்படுத்தி தந்த உதயன் பத்திரிகை பற்றியும், அதன் உரிமையாளர் பற்றியும், தனக்கு ஆசனம் வழங்க மறுத்த மாவை சேனாதிராசா பற்றிய விமர்சனங்களையும் மட்டுமே செய்யும் பத்திரிகையாக தனது ஊடகத்தை மாற்றியிருந்தார்.

ஊடகவியலாளர்கள் பேனா போராளிகள் என்ற கருத்துருவாக்கத்தை வித்தியாதரனும் அங்கம் வகித்த உதயன் குழுமம், தமிழ் சமூகத்தில் அதிகம் உருவாக்கியது. ஆனால், வித்தியாதரன் போராளியாக இருக்கிறாரா என்பதே இதிலுள்ள சுவாரஸ்யமும், முரண்நகையும்.

அரசியல் பற்றியும், அரசியல் ஒழுக்கம் பற்றியும், தமிழ் தேசியம் பற்றியும் ஊடகத்தின் வாயிலாக விளாசும் வித்தியாதரனின், மறுபக்கம் தூயதா என்ற கேள்வியை இன்று எழுப்ப வேண்டியிருந்தது.

இன்றைய காலைக்கதிர் பத்திரிகையில், அவரது பத்தியில் வேட்பாளர் சரவணபவனின் உரையொன்றை முன்னிறுத்தி அவர் எழுதியுள்ள விடயமே இந்த கேள்வியை எழுப்புகிறது.

சரவணபவன் நேற்று பேசிய பேச்சொன்றை மையமாக வைத்து வித்தியாதரன் தனது கருத்துக்களை எழுதியுள்ளார்.

யுத்தகாலத்தில் அரசுடன் இருந்த தரப்புக்களிற்கு வாக்களிக்கப் போகிறீர்களா என சரவணபவன் எழுப்பிய கேள்விதான் விவகாரம்.

சரா எந்த தரப்பையும் குறிப்பிடாத போதும், அவர் ஈ.பி.டி.பியை குறிப்பிடுவதை போல புளொட்டை அடிக்கிறார் என சொல்லி, தனது கற்பனை குதிரையையும் தட்டிவிட்டு, மானே தேனே போட்டு எழுதியுள்ளார்.

விடுதலைப் புலிகள் ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்பை இணைத்தபோதும் புளொட்டை இணைக்கவில்லையென ஒரு தவறான தகவலை எழுதியிருந்தார்.

தமிழ் சமூகத்தின் புத்திஜீவிகள், பத்திரிகையாளர்கள் என குறிப்பிடுபவர்களின்- விடுதலைப் புலிகள் பற்றிய மிகப்பெரிய பலவீனமே இதுதான். அவர்கள் நினைப்பார்கள் விடுதலைப் புலிகளை பற்றி தாமே அதிகமாக தெரிந்திருப்போம் என. ஆனால், புலிகளின் கட்டமைப்பை புரிந்தவர்களிற்கு, அவர்கள் சிறு துளியென்பது தெரியும்.

புலிகளின் அரசியல்துறை பிரமுகர்களிற்கு இயல்பாக விழுந்த ஊடக வெளிச்சம் காரணமாக, அவர்கள் அமைப்பின் முடிவெடுக்கவல்ல பிரதிநிதிகள் என பொதுப்புத்தியில் அபிப்பிராயம் தோன்றும். ஆனால், அமைப்பின் கட்டமைப்பு ரீதியாக- உள்ளார்ந்த விபரங்களை அறிந்தவர்களாக- இருக்க மாட்டார்கள்.

வன்னியிலிருந்த அரசியல் ஆய்வாளர்களிற்கும், வன்னிக்கு வெளியிலுள்ள பத்திரிகையாளர்களிற்கும் நேர்ந்த விபத்திது. அதில் வித்தியாதரனும் விதிவிலக்கல்ல. அவர் தனது விடுதலைப் புலிகள் தொடர்பு பற்றி பேசிவது, சீமானிற்கு அடுத்ததாக புலிகளை பற்றி அடித்து விடுவது அவராகத்தான் இருக்கும் என தோன்றுகிறது.

தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவாக்கப்பட்டபோது, புளொட்டையும் இணைக்க புலிகள் முயன்றார்கள். ஆனால் புளொட் அப்போது அதற்கு சம்மதிக்காததற்கு வேறு காரணமிருந்தது. விடுதலைப் புலிகள் ஏக பிரதிநிதிகள் என்ற கோசத்தை முன்னிறுத்தாத தமிழ் தேசிய கூட்டமைப்பை புளொட் கோரியது. ஒருவகையில், இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பு வந்தடைந்துள்ள இடமும் அதுதான். அப்படிப் பார்த்தால் இன்றைய கூட்டமைப்பில்- புத்திசாலித்தனமான- நடைமுறை சாத்தியமான அணுகுமுறையை கையாண்ட தரப்பாக புளொட் இருந்தது என்பதல்லவா உண்மை!

அதன் பின்னரும் புளொட் அமைப்பிற்கும், புலிகளிற்குமான பல்வேறு தொடர்புகள் இருந்தன. அதையெல்லாம் “விசயமறிந்தவர்கள்“ அறிவார்கள். இப்பொழுது, புளொட் ஏன் கூட்டமைப்பிற்குள் வரவில்லை, புளொட் என்ன செய்தது என்பதை விளக்குவதல்ல நமது நோக்கு. அந்த தேவையும் நமக்கில்லை.

அதைச் சொல்ல வித்தியாதரனிற்கு தகுதியுண்டா என்பதே கேள்வி!

நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் புளொட் சார்பில் போட்டியிட ஆசனம் தருமாறு, அந்த கட்சியினரை விரட்டி விரட்டி கேட்டார் என்பதை பொறுப்புடன் பதிவு செய்கிறோம்.

கலாநிதி ஆறுதிருமுருகனிற்கும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தனிற்கும் நல்ல உறவுண்டு. அதை பயன்படுத்தி, ஆறுதிருமுருகனை அணுகி, புளொட்டில் தற்போது கஜதீபனிற்கு வழங்கப்பட்டுள்ள ஆசனத்தை தனக்கு ஒதுக்கித் தருமாறு வித்தியாதரன் கேட்டார். வெற்றியடைந்தால் எந்த சந்தர்ப்பத்திலும் கட்சி மாறி தமிழ் அரசு கட்சியிடமோ அல்லது வேறு கட்சிகளிடமோ போக மாட்டேன் என்றும் உத்தரவாதம் கொடுத்தார். ஆறு திருமுருகனும் அந்த கோரிக்கையை சித்தார்த்தனிடம் தெரிவித்தார். எனினும், கட்சிக்குள்ளிருந்த வளர்க்கப்பட்ட கஜதீபனிற்கு ஆசனம் வழங்குவதில் உறுதியாக இருந்தார் சித்தார்த்தன்.

வித்தியாதரன் அத்துடன் நிற்கவில்லை.

யாழ்ப்பாணத்தில் இயங்கும் முக்கிய ஊடகமொன்றின் முதலாளியிடம் ஓடினார். (அவரது பெயரை அவர் விரும்பாமல் வெளியிடுவது முறையல்ல என்பதால் முதலாளி என்பதுடன் நிறுத்தி விடுகிறோம். ஆனால், அந்த முதலாளி யாரென்பது வித்தியாதரனிற்கு தெரியும்) புளொட் அமைப்பின் இரண்டாவது ஆசனத்தை தனக்கு தருமாறு சித்தார்த்தனிடம் பேசிப்பார்க்குமாறு கேட்டுக் கொண்டார்.

இவையெல்லாம் 90களில் நடந்ததல்ல. 3,4 மாதங்களின் முன்னர் நடந்தது. புளொட் மீது வித்தியாதரன் வைத்த விமர்சனங்கள் எல்லாம் அந்த 3,4 மாதங்களின் பின்னர் நடந்ததா?

வித்தியாதரன் அரசியல் பதவியொன்றை பெற ஆலாய் பறக்கும் துயர வரலாறு நெடியது. அது கிட்டாத மனக்கிலேசம் அவது எழுத்துக்களில் தெரிகிறது. ஒரு பத்திரிகையை அச்சிட்டு, தனது மனக்கிலேசங்களை கொட்டிக் கொண்டிருப்பது தமிழ் சமூகத்திற்கு நல்லதல்ல.

வித்தியாதரன், தனது நாடாளுமன்ற தேர்தல் வேட்பாளர் வாய்ப்பை சரவணபவன் தட்டிப்பறித்து விட்டார் என கூறுவது உண்மையில்லாதது. அதை அண்மையில் மாவை சேனாதிராசாவே பகிரங்கமாக தெரிவித்திருந்தார். “மச்சானை வேட்பாளராக போடுவதில் எனக்கு ஆட்சேபணையில்லை“ என வித்தியாதரன் தன்னிடம் சொன்னதை மாவை சேனாதிராசா பகிரங்கமாகவே தெரிவித்திருந்தார்.

சரவணபவனிற்கும்- வித்தியாதரனிற்குமான பிரச்சனை எம்.பி ஆசனமல்ல. அப்படி வெளியில் சொல்லிக் கொண்டாலும், உண்மையதுவல்ல.

2010ஆம் ஆண்டு சரவணபவன் நாடாளுமன்ற தேர்தலில் களமிறங்கியபோது, வித்தியாதரன் அதை ஆதரித்தார். சரவணபவன் அரசியலுக்குள் நுழைந்தால், உதயன் நிறுவனம் தன்னிடம் வருமென ஒரு கணக்குப் போட்டார். அது நடக்கவில்லை. அதுதான் இரு தரப்பிற்குமான மோதல்.

தனிப்பட்ட விவகாரங்களை எழுதுவது முறையல்ல. ஆனால், குடும்பரீதியாக சரவணபவன் செய்த உதவிகளும், கடமையும் மிகப்பெரியது.

உதவி செய்வதையும் சரியானவர்களிற்கு செய்ய வேண்டுமென்பதை சரா இப்பொழுது புரிந்திருப்பார்.

ஆனால், வடக்கு முதலமைச்சர் பதவி போன்ற பதவிகளை வித்தியாதரன் எதிர்பார்ப்பது நியாயமல்ல. அதற்கு பொருத்தமானவர்களையே நியமிக்கலாம். தன்னை முதலமைச்சராக்கவில்லையென்றும், மாவையில் அவர் காய்வது நியாயமற்றது.

ஆனால், இன்று சம்பந்தன் புராணம் பாடும் வித்தியாதரனின் கதிரை கனவை உண்மையில் கலைத்தவர் சம்பந்தன்தான். இந்த தேர்தலில் வித்தியாதரனை களமிறக்கலாமென, சீ.வீ.கேயும் மாவையும் திருகோணமலைக்கு சென்று சம்பந்தனிடம் சொன்னார்கள். “அவருக்கு அதற்கான தகுதியில்லை“ என சம்பந்தன் ஒரே வசனத்தில் கதையை முடித்தபோது, பக்கத்தில் எம்.ஏ.சுமந்திரனும், துரைராசசிங்கமும் மௌனமாக இருந்தார்கள். ஒரு வார்த்தை பேசவில்லை.

2010 நாடாளுமன்ற தேர்தலில் ஆசனம் கிடைக்கவில்லை, 2013 மாகாணசபை தேர்தலில் ஆசனம் கிடைக்கவில்லை, 2015 நாடாளுமன்ற தேர்தலில் ஆசனம் கிடைக்கவில்லை. இந்த துயர வரலாறு தொடர்ந்த கடந்த உள்ளூராட்சிசபை தேர்தலில் யாழ் மாநகரசபையிலும் ஆசனம் கிடைக்கவில்லை.

இதைதவிர, அவர் ஆசனத்திற்காக ஒரே கட்சியில் போட்டியிட முயற்சித்தவருமல்ல.

விக்னேஸ்வரன் அணியில் தலைகீழாக நின்று பார்த்தார். ரில்கோ விடுதியில் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் அங்குரார்ப்பண நிகழ்வு. விக்னேஸ்வரனிற்கு அருகில் காலியாக இருந்த கதிரையில் உட்கார்ந்த வித்தியாதரன், “ஐயா.. நாங்களும் இப்பிடியே எவ்வளவு நாளுக்கு எழுதிக் கொண்டிருக்கிறது. இதுக்குள்ள (அரசியலுக்குள்) வர வேண்டாமா? ஏதாவது வாய்ப்பிருந்தால் சொல்லுங்கள்“ என தெரிவித்தார். விக்னேஸ்வரன் சிரித்து சமாளித்து விட்டார்.

பின்னர், தனக்கு நெருக்கமானவர்களிடம், “ஐயாவை சந்தித்தேன். இப்படியே எழுதிக் கொண்டு இருக்கப் போகிறீர்களா? அரசியலுக்கு வாருங்கள்“ என அழைத்தார் என சொல்லித்திரிந்தார். விக்னேஸ்வரனிடமிருந்து எந்த சமிக்கையும் வராததையடுத்து, விக்னேஸ்வரனிற்கு நெருக்கமான ஒருவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, விக்னேஸ்வரன் தன்னை அரசியலுக்கு அழைத்தார், இப்பொழுது எனக்கு வாய்ப்பு தருவாரா என கேட்டுச் சொல்லுங்கள் என்றார்.

அந்த இடைத்தொடர்பாளரும் விக்னேஸ்வரனை அழைத்து, அவரை அரசியலுக்கு அழைத்தீர்களா?, அவர் காத்திருக்கிறார் என்றார்.

விக்னேஸ்வரன் பெரிதாக சிரித்துவிட்டு, “ஐயா.. நாங்களும் இப்பிடியே எவ்வளவு நாளுக்கு எழுதிக் கொண்டிருக்கிறது. இதுக்குள்ள (அரசியலுக்குள்) வர வேண்டாமா? ஏதாவது வாய்ப்பிருந்தால் சொல்லுங்கள்“ என வித்தியாதரன் கேட்டதை குறிப்பிட்டார்.

இதேவேளை, இன்னொரு தொடர்பாளர் மூலம் விக்னேஸ்வரன் வடமாகாணசபை முதலமைச்சர் வேட்பாளராகவும், தான் கிழக்கு மாகாணசபை முதலமைச்சர் வேட்பாளராகவும் போட்டியிடும் ஐடியாவையும் வித்தியாதரன் கொடுத்தனுப்பினா்.

ஆனால், விக்னேஸ்வரன் அணியில் வித்தியாதரனிற்கு கதவு திறக்கவில்லை.

மீண்டும் இப்பொழுது தமிழ் தேசிய கூட்டமைப்பில்- சுமந்திரன் அணியாக- செயற்பட்டு வருகிறார்.

இடையில் கோட்டாவின் சிலந்தியாக- ஜனநாயக போராளிகள்- செயற்பட்டது ஊரறிந்தது.

இன்றைய பத்திரிகையில், ஈ.பி.டி.பி கொலைகளை புரிந்தது என நினைத்து சரா பேசியதாக, சரா சொல்லாத சொல்லுக்கு அர்த்தம் கண்டுபிடித்திருந்தார் வித்தியாதரன்.

ஈ.பி.டி.பி- வித்தியாதரன் பற்றிய சுவாரஸ்ய தகவல்களுமுள்ளது.

காலைக்கதிர் அச்சிடப்பட்ட அச்சு இயந்திரம் ஈ.பி.டி.பியினுடையது. தினமுரசு பத்திரிகை நிறுத்தப்பட்ட பின்னர், அந்த அச்சு இயந்திரம் சும்மா இருந்தது. வித்தியாரன் அதை வாங்குவதாகவும், குறிப்பிட்ட தவணையில் பணம் தருவதாகவும் கூறி, சுமார் 75 இலட்சம் ரூபா மதிப்புள்ள காசோலையை கொடுத்தார். இது நடந்து வருடங்கள் கழிந்து விட்டது. ஒரு சதம் பணம் கொடுக்கப்படவில்லை. டக்ளஸ் தேவானந்தா கேட்கவுமில்லை. அந்த காசோலை இன்னமும் டக்ளசிடமே உள்ளது.

எல்லா தமிழ் அரசியல்வாதிகள் மீதும் ஏதோவொரு விமர்சனமுள்ளது. டக்களஸ் தேவானந்தா மீதும் உள்ளது. ஆனால், தமிழ் அரசியல்வாதிகளில் ஆயுத இயக்கங்களின் வழிவந்த அரசியல் தலைவர்களிடம் மட்டுமே உள்ள இயல்பு- உதவி தேவைப்படுபவர்களிற்கு பிரதியுபகாரம் பாராமல் வழங்குவது. அது டக்ளசிடமும் உள்ளது. சித்தார்த்தனிடமும் உள்ளது. பலருக்கு கசப்பென்பதால், உண்மை இல்லாமலாகி விடாதல்லவா.

இன்றைய வலம்புரி பத்திரிகைக்கும் டக்ளஸ் உதவினார். அதேபோல, வித்தியாதரனிற்கு பிறிதொரு உதவியும் செய்தார்.

தனக்கு வாழ்க்கை நெருக்கடியாக இருப்பதாக இன்னொரு சந்தர்ப்பத்தில் டக்ளசை அணுகினார் வித்தியாதரன். அப்போது டக்ளஸ் ஆளுந்தரப்பில் இல்லை. தனது கையறு நிலையை சொன்னார். அதைவிட சோகக்கதையை வித்தியாதரன் சொன்னார்.

யாழ் நகரத்தில் கஸ்தூரியார் வீதியில் கட்டப்பட்ட மாடிக்கட்டட தொகுதியில் ஒரு கடையை வித்தியாதரனிற்கு டக்ளஸ் வழங்கினார். அதை வேறு யாரும் வெளியாருக்கு நீண்ட வாடகைக்கு வழங்காமல், குறுகிய வாடகைக்கு விட்டு, அதில் வரும் பணத்தை வாழ்க்கைச் செலவிற்கு பயன்படுத்தும்படி. அவ்வளவுதான். டக்ளஸ் அதன்பின்னர் அந்த விடயத்தில் தலையிடவில்லை. ஓரிரு மாதத்தில், வித்தியாதரன் அந்த கடையை 99 வருட குத்தகைக்கு வழங்கிய தகவல்தான் டக்ளசிற்கு வந்தது!

இப்படி நீண்ட கதைகள் உள்ளன.

அண்மையில் வடக்கு ஆளுனர் பதவியை பெற முயன்றது லேட்டஸ்ட் தகவல். ஜனாதிபதி தேர்தல் வரை கோட்டா புரளியை பத்திரிகையில் செய்து கொண்டிருந்து விட்டு, தேர்தல் முடிவு வெளியான ஓரிரு நாளில் வடக்கு ஆளுனர் பதவியை குறிவைத்தார். ஆளுனர் பட்டியலில் தனது பெயரும் உள்ளதாக ஒரு செய்தியை அவரே உலாவவிட்டு, அதை மஹிந்தரின் கவனத்திற்கு கொண்டு சென்றார். இதற்காக கோட்டாவை சந்திக்க முயன்றது, கூட்டமைப்பு பிரமுகர் தூது சென்றதெல்லாம் பெரிய கதைகள்.

இன்னும் சுவாரஸ்யமாக, ஹால்டனிலிருந்து மாதாந்தம் வந்த பணம் தொடக்கம் இப்போது பாயும் பணம் வரையான தகவல்களும் உள்ளன.

சரவணபவனின் பெயர் குறிப்பிடாமல் ஊடக வியாபாரியென வித்தியாதரன் குறிப்பிடுவதுண்டு. ஆனால், உண்மையான ஊடக வியாபாரி யார்?

 

http://www.pagetamil.com/137537/

  • கருத்துக்கள உறவுகள்

சரவணபவன் ஊடக வியாபாரி இல்லை எனச் சொல்ல வருகிறதா pagetamil ?😀

இந்தக் கட்டுரை மட்டும் என்ன ஊடக தர்மம் கருதி எழுதப்பட்டதா 

😏

  • கருத்துக்கள உறவுகள்

வித்திக்கு எதிராக எழுதும் போர்வையில், 

புளொட்டிற்கும் வெள்ளையடிச்சாசு டக்கிளசுக்கும் அடிச்சாச்சு...

புளொட் 2009 வரை இராணுவ கைக்கூலியாக ஒட்டுக்குழுவாக செயற்பட்டது   அனைவருக்கும் தெரிந்ததே.

புளொட் விடுதலை புலிகளை ஏக பிரதிநிதிகள் என்று ஏற்க மாட்டினம் ஆனால் புலிகளுடன் பல்வேறு தொடர்பில்...  அதை வியசமறிந்தவர்கள் வேறு அறிவார்கள்..

யாருக்கையா காது குத்துகிறீர்கள்

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, MEERA said:

வித்திக்கு எதிராக எழுதும் போர்வையில், 

புளொட்டிற்கும் வெள்ளையடிச்சாசு டக்கிளசுக்கும் அடிச்சாச்சு...

புளொட் 2009 வரை இராணுவ கைக்கூலியாக ஒட்டுக்குழுவாக செயற்பட்டது   அனைவருக்கும் தெரிந்ததே.

புளொட் விடுதலை புலிகளை ஏக பிரதிநிதிகள் என்று ஏற்க மாட்டினம் ஆனால் புலிகளுடன் பல்வேறு தொடர்பில்...  அதை வியசமறிந்தவர்கள் வேறு அறிவார்கள்..

யாருக்கையா காது குத்துகிறீர்கள்

இப்ப புலிகள்  நல்லவர்களா  கெட்டவர்களா?

புலிகள்  செய்தது சரியா பிழையா?

புலிகள் ???

புலிகள் ???

இது  தான் கேள்விகளாக

மற்றவர்கள்  அனைவரும்  புனிதர்கள்

காவல்  தெய்வங்கள்

அவை தான் அப்பவே  சொல்லிட்டினம்  இல்ல???

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.