Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறீதரனுக்கு தலைமை பதவி வழங்கினால் ஆதரவு கொடுப்பேன்! சுமந்திரன் அறிவிப்பு

Featured Replies

Just now, Kapithan said:

எண்ட பெருமாளே,  திரும்பவும் சுமந்திரனா 😤

ஏன் ஐயா, விக்கியரைக் குறிப்பிட்டீர்கள் சரிதான். அதற்குள் ஏன் Samsung ஐக் கொண்டுவருகிறீர்கள் 🙄 முடியல😤

உங்கள் பார்வையில் விக்கியரின் தகுதிகள் என்னவென்று குறிப்பிட்டீர்கள் என்றால் மேலும் தெளிவாக இருக்கும் 🙂

விக்கியரின் தகுதி.

அரசியலுக்கு கொண்டு வந்தவர்களின் முதுகில் குத்துவது.

எழுதி வாசிப்பது. பொது மேடைகளில் மூளையால் சிந்தித்து வாயால் பேச தெரியாது. கேள்வி கேடடால், என்ன பேசினேன் எண்டு பேப்பரை பார்த்துதான் பதில் சொல்லுவேன் எண்டு சொல்லுவது.

ஒண்ணுக்கும் உதவாத தீர்மானங்களை கூத்தாடிகளுடன் சேர்ந்து உருவாக்குவதும் பின்னர் குப்பை தொட்டியில் போடுவதும்.

மண்டையன்  குழு, கூத்தாடிகளுடன் கூட்ட்டமைப்பு அமைப்பது.

ஒரு வேலையும் செய்யாமல் வந்த பணத்தை திருப்பி அனுப்புவது. கேடடால் அதட்கான அதிகாரம் இல்லை எண்டு பொய்களை சொல்லுவது.

வடக்கில் தமிழ் தேசியம், தேடகில் சிங்கள தேசியம்.

கொலை கொள்ளை, கட்பளிப்பு வழக்கில் உள்ளவர்களை விடுதலை செய்ய வேண்டுமென்று இந்திய பிரதமரிடம் கோரிக்கை வைப்பது.

விசாரணைக்காக தற்போதைக்கு கோட்டுப்படி ஏறுவது.

இன்னும் வேணுமெண்டால் எழுதலாம்.

  • Replies 64
  • Views 5.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Robinson cruso said:

விக்கியரின் தகுதி.

அரசியலுக்கு கொண்டு வந்தவர்களின் முதுகில் குத்துவது.

எழுதி வாசிப்பது. பொது மேடைகளில் மூளையால் சிந்தித்து வாயால் பேச தெரியாது. கேள்வி கேடடால், என்ன பேசினேன் எண்டு பேப்பரை பார்த்துதான் பதில் சொல்லுவேன் எண்டு சொல்லுவது.

ஒண்ணுக்கும் உதவாத தீர்மானங்களை கூத்தாடிகளுடன் சேர்ந்து உருவாக்குவதும் பின்னர் குப்பை தொட்டியில் போடுவதும்.

மண்டையன்  குழு, கூத்தாடிகளுடன் கூட்ட்டமைப்பு அமைப்பது.

ஒரு வேலையும் செய்யாமல் வந்த பணத்தை திருப்பி அனுப்புவது. கேடடால் அதட்கான அதிகாரம் இல்லை எண்டு பொய்களை சொல்லுவது.

வடக்கில் தமிழ் தேசியம், தேடகில் சிங்கள தேசியம்.

கொலை கொள்ளை, கட்பளிப்பு வழக்கில் உள்ளவர்களை விடுதலை செய்ய வேண்டுமென்று இந்திய பிரதமரிடம் கோரிக்கை வைப்பது.

விசாரணைக்காக தற்போதைக்கு கோட்டுப்படி ஏறுவது.

இன்னும் வேணுமெண்டால் எழுதலாம்.

இவர் பதிவுகளை பார்த்தால் விக்கினேஸ்வரனை கரிச்சுக்கொட்டுவதிலேயே செலவிடுகிறார். இவர் மறு சுமந்திரனாய் அல்லது அவரின் அதி விசுவாசியாய் இருக்க வேண்டும். சுமந்திரனை விட விக்கினேஸ்வரனை இந்த அளவுக்கு வெறுப்பவர் யாருமில்லை.

Just now, satan said:

Just now, Robinson cruso said:

உண்மை சுடும். பதில் இருந்தால் வழங்குங்கள். பொய் என்றால் மறுத்துரையுங்கள். இப்படியாக மழுப்பி அதன் பின்னல் ஒழித்துக்கொள்ள வேண்டாம். நீங்கள் விக்கியின் சீசராக இருப்பதில் எனக்கு ஒரு பிரச்சினையும் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் அரைகுறையால் வருவது. இவர் நாற்பது வீதம், அவர் நூறு வீதமாக இருப்பதால் வந்த பயமாக இருக்கலாம். வேண்டாம் என்று விலத்திய கல்லே முதன்மைக்கல்லாய் அமைந்ததாம். நிலைமை மாறலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, satan said:

முகவரியே வில்லங்கமாய் இருக்கு, இதில உங்களை தேடிப்பிடிப்பது......? முள்முடி தரித்தவர், எல்லாம் வெளிப்படையாக, எல்லோருக்குமாக வாழ்ந்தவராயிற்றே  நீங்கள் இப்படி தலையை பிய்க்க  வைக்கிறீர்கள். பரவாயில்லை உங்கள் கேள்வியை தொடுத்துக்கொண்டே இருங்கள், பதில் தராமல் யாழ் களம் உறங்காது. அதில் நீங்கள் திருப்தி படுவீர்கள் என்பது சந்தேகமே. நீங்கள் ஒருவரை தெரிந்தபின் முடிவோடுதான் நிதானமாய் கேள்வி வைக்கிறீர்கள்.

அப்படியல்ல சாத்தான்,

கற்பித்தல் இருவகைப்படும், 

முதலாவது வகை - மாணாக்கருக்கு ஆசிரியர் கற்பித்தல் ஊடாக புகட்டுவது. இந்த வழிமுறைதான் பெரும்பாலான கல்வி நிலையங்களில் நடைபெறுவது ஆனால் (உண்மையான) பயன் குறைவு. 

இரண்டாவது வகை - மாணாக்கரைக் கொண்டே மாணாக்கருக்குப் புகட்டுவது. இங்கே ஆசிரியர் கேள்விகளை முன்வைப்பார். மாணாக்கர் அதற்கான பதிலை தேடிக் கண்டடைவர். தவறுகளிருப்பின் ஆசிரியர் திருத்தம் செய்வார். இந்த செய்முறை பலன் கூடியது. மாணவர்கள் தேடித் தேடிக் கற்பார்கள். 

இங்கே, இந்த இரண்டாவது வழி முறையை நான் பின்பற்றினேன். 

கவனித்துப்பாருங்கள். எம்மில் மிகப் பெரும்பாலானோரின் நேரம் அனைத்தும் சுமந்திரனை திட்டித் தீர்ப்பதிலேதான் கழிந்தது. ஆனால் வழிகாட்டியாகச் செயற்படத் தக்கவர் யார் என்ற கேள்விக்கு முழுமையான பதில் ஒன்றையும் இதுவரை காணோம். ஒருவர் கூட பதிலளிக்கவில்லை. சுமந்திரனை திட்டித் தீர்ப்பதற்கு எத்தனை மாதங்கள் செலவு செய்தோம். ஆனால் மிகச் சாதாரண சிறு கேள்விக்கு ஒருவரிடமும் முழுமையான பதில் இல்லை.

 ஏன் இந்த நிலை ? 

ஏனென்றால் எங்களிடம் சிறந்த தலைமை என்று கூறக் கூடிய ஒருவர் கூட இல்லை என்பதுதான் உண்மை. இதற்குள் சுமந்திரனும் உள்ளடங்குவார். 

தமிழர்களுக்கு மிகச் சிறந்த தலைமைகள் இருக்கக் கூடாதென்பது எதிரியின் நீண்டகாலத் திட்டம். எதிரி யார் என்று நீங்கள் கேட்கக் கூடாது. ஏனென்றால் எங்கள் உண்மையான எதிரி சிங்களம் அல்ல. 😡

மிகச் சிலராவது சிந்திக்கத் தலைப்பட்டிருப்பார்கள் என்பது எனது நம்பிக்கை.  👍

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Kapithan said:

எம்மில் மிகப் பெரும்பாலானோரின் நேரம் அனைத்தும் சுமந்திரனை திட்டித் தீர்ப்பதிலேதான் கழிந்தது.

அதற்கு காரணமில்லாமல் இல்லையே. ஒன்று,  தான் வெளியேற வேண்டும். இது மற்றவர்களை வெளியேற்றி, திறமையானவர்களை ஓரங்கட்டி சிக்கலில் விட்டிருக்குது. இது யாராலும் எடுக்க கூடிய சிக்கு இல்லை. பாருங்கள் தாங்கள் தான் பேரம் பேசும் தலைமை என்று கூவினார்களே! தமிழர் பிரச்சனையை விற்று வயிறு வளர்த்ததெல்லாம் தாம் தலைமை என்று சிங்களம் நிறுத்தியிருக்குது. இனி இந்த அரைகுறைகளோடுதான் சிங்களம் பேசும். என்ன விடிவு?எது முடிவு? கேட்டதற்கு பதில் சொல்லத் தெரியாததெல்லாம் ஆமா தலையாட்டும். இதுதான் அவர்களின் ராஜ தந்திரம். தலைக்கு மேலே வெள்ளம் போனால் சாண் ஏறினாலென்ன முழம் ஏறினாலென்ன? 

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, Kapithan said:

ஐயோ ரதி 😤

கருவாட்டைச் சுற்றிச் சுற்றி வரும் இலையான் போல அந்த ஆளைச் சுற்றிச் சுற்றி வருகிறீர்கள் 😤

நீங்கள் யாரை பிரேரிப்பீர்கள் 🤔 ஏன் 🤔

(😢தயவு செய்து திரும்பவும் சுமந்திரனை உள்ளே கொண்டுவராதீர்கள் 🙏 பிளீஸ்)

கற்பிதன், இப்ப கட்சியில் இருப்பவர்கள் என்றால் சும்மையும் சேர்த்து ஒருத்தரும் இல்லை...சாணக்கியனுக்கு திறமை இருக்கு..ஆனால் அவர் எப்படியும் அரசின் பக்கம் சாய்ந்து விடுவார் ..நிறைய இளைஞ்ர்கள் கட்சியில் இருக்கிறார்கள் ...ஆனால் அவர்கள் முன்னேற அவர்களது கட்சியே விடாது ...இனி வரும் காலத்தில் வரும் இளைஞ்ர்கள் அரசோடு சேர்ந்து இயங்க தான் பார்ப்பார்கள் ...என் அறிவுக்கு எட்டிய வரை ...இப்ப இருப்பவர்கள் எல்லோரும் இளைப்பாறினால் எதிர்கால தலைமுறை தாயகம் ,தேசியம் என்ற கோட்ப்பாட்டையே கை  விட்டு விடும் 
 
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 hours ago, Kapithan said:

ஏன் உங்கள் விருப்பத்தைக் கெடுப்பான். இதோ எனது தகுதி...😀

பெயர்: பகலவனின் மறு பெயர் ஆனால் சூரியன் அல்ல

பால்: பெண் பால் அல்ல பலர் பாலுமல்ல

உயரம்: முழு ஆணின் உயரம் 😎

இனம்: சிங்கை ஆரியனின் வழித் தோன்றி

கல்வி: தமிழ்ச் சமூகத்தில்  அரிதான துறையில் உயர் கல்வி, இதர பல.

தொழில்: முன்னையது-கேள்வி கேட்டே கொல்லுவது. பின்னையது- பிறரின் பணத்தில் இலாபம் பார்ப்பது

இருப்பிடம்: True North, Strong & Free

விளையாட்டு:  Mini Olympic ல் முதிரை பதித்தவன். 

விரும்புவது: இரைச்சல் அல்லாத இசை

பிடித்தது: யாழ் களம்

பிடிக்காதது: யாழில் உள்ள சாத்தான்களை 😜*

இலக்கு: முத்திரை பதிப்பது  (கேள்வியில் அல்ல)

சமயம்: முள் முடி தரித்தவர் 

தகுதி: நேர்மையும் துணிவும்😆

இது போதுமா ?  or இன்னும் கொஞ்சம் வேணுமா 😂

உங்கள் ஒருவரிடமும் பதில் இல்லை என்பதற்காக கேள்வி கேட்பவன் மீதே கோபம் கொள்வீரா 😂

(😜*  நகைச் சுவைக்குக் குறிப்பிட்டுள்ளேன்)

இஞ்சை என்ன PT மாஸ்டருக்கு ஆள் எடுக்கினமே? 😎

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

இஞ்சை என்ன PT மாஸ்டருக்கு ஆள் எடுக்கினமே? 😎

சேடம் இழுக்கிற மாவையரும், தள்ளு வண்டியில் போகிற சம்பந்தரும், மூச்சிரைக்கிற விக்கியரை விடவும் கப்பித்தானுக்கு ஆகக் குறைந்தது உடற் தகுதியாவது(உங்கள் பார்வையில்) இருக்கிறதே என்று மகிழ்ச்சியடையுங்கள் 😂

  • கருத்துக்கள உறவுகள்

எனது தெரிவு கஜேந்திரகுமாராக இருந்தாலும், இப்போதைய சூழ்நிலையில் கஜேந்திரகுமாரிடம் உள்ள தலைமைத்துவ பண்புகளையோ, மக்களிடம் அவருக்குள்ள நம்பிக்கையோ வளர்க்குமட்டும் அவரால் தனியாக ஒரு சிறிய டேவிட்டாக போராடமுடியாது.. 

அதேநேரம், கூட்டமைப்பில் சில சுத்திகரிப்புகளை செய்து இளையதலைமுறைக்கு கொஞ்சம் வழிவிடவேண்டும், ஏனெனில் இன்னமும் மக்கள் அவர்களை நம்புகிறார்கள், அந்த நம்பிக்கையை வீணாக்காது அவர்கள் கட்டாயம் செயற்படவேண்டும்..

ஆகவே விரும்பினாலும் விரும்பவிட்டாலும்  கஜேந்திரகுமார் இன்னொரு அணியுடன் சேர்ந்தே செயலாற்றவேண்டும்.. 

மனோ கணேசனின் மீதும் மக்களுக்கு ஒரளவு நம்பிக்கை உண்டு.. ஆனாலும் அவரைப்பற்றி ஒன்றும் கூறமுடியாதுள்ளது.. 

கூட்டமைப்பில் இருந்து கஞ்சா வியாபாரிகள் போகாமல் மற்றையவர்கள் சேருவார்களோ தெரியவில்லை.. 

கோலியாத்துடன் உள்ளவர்களையும் பிரிப்பது கடினம்.. 

பலங்களும் பலவீனங்களும் எல்லோரிடமும் உண்டு ஆனால் எங்களது உண்மையான எதிரி பக்கம் சாயாதவர்களாகவும் இருக்கவேண்டும்.. 
எங்களது மக்களின் பொருளாதார நிலையை அரசாங்கத்திடம் அதிகளவில் சாராமல் புலம்பெயர்ந்த மக்களின் உதவியுடன், சர்வதேச உதவிகளை அனுகி மேம்படுத்தவேண்டும்.. 
இன்னொரு முள்ளிவாய்க்கால் ஏற்படாதவாறு எங்களது தேசியத்தை பாதுகாக்கவேண்டும்.. 

இப்படி பல ஆனால் இவர்கள் சேர்ந்து செயலாற்றுவது நடைமுறைக்கு சாத்தியமா தெரியவில்லை,

கனவு மெய்ப்படவேண்டும்...

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

எங்களது மக்களின் பொருளாதார நிலையை அரசாங்கத்திடம் அதிகளவில் சாராமல் புலம்பெயர்ந்த மக்களின் உதவியுடன், சர்வதேச உதவிகளை அனுகி மேம்படுத்தவேண்டும்.. 

உங்களை அப்படி செயற்பட அரசாங்கமும், அதன் வருடிகளும் விடுவார்கள் என்றால், எப்பவோ அது தொடங்கப்பட்டிருக்கும். அபிவிருத்தி உங்களிடம், அதிகாரம் அவர்களிடம், நினைத்தவுடன் பிடுங்கப்படும்.  தெரியும் தமிழன் சும்மா இருக்கமாட்டான், ஏதோ முன்னேறிக்கொண்டே இருப்பான். முடிந்தவுடன் அதிகாரம் வேலை செய்யும். கொழும்பில் இருந்து விரட்டுவது, பின் திரும்ப வந்து கட்டியெழுப்புமட்டும் கொள்ளை அடித்ததை முழுங்கி விட்டு தூங்குவது. பின் எழும்பி விரட்டி விட்டு பொறுக்குவது. இதென்ன புதிதா இந்த நாட்டுக்கு? 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, satan said:

எங்களிற்கு இது ஒன்றும் புதிதல்லவே... அனுபவமிக்க அரசியல் தலைமைகள், உலக அரங்கில் நடைபெறும் மாற்றங்களை அவதானித்து, அதற்கேற்ப எங்களது நடவடிக்கைகளை செய்திருந்தால் மிகவும் நன்றாக இருந்திருக்கும்.. எங்களிடம் வளங்கள், ஆளுமைமிக்கவர்கள் இருந்தும், ஒற்றுமையின்மையால் எல்லாவற்றையும் இழந்து நிற்கிறோம்.. இது எல்லோருக்கும் நன்கு தெரிந்தவிடயம்.. 

ஆனால் அதற்காக போரினால் வாழ்வாதாரங்களை இழந்தும், போதைமருந்து போன்ற பழக்கவழக்கங்களுக்கு அடிமையாகி, ஒரு சுயமாக சிந்தித்து முன்னேறாமல் இருப்போரை அப்படியே இருக்கவிடலாமா? பின் அவர்கள் சலுகைகளுக்காக மாறுகிறார்கள் என எப்படி குறை கூறமுடியும்?

என்னைப்பொறுத்தவரை கல்வியில் முன்னேற வேண்டும், எங்களது சமூகம் பல மூடத்தனமான கொள்கைகளிலிருந்து விடுபடவேண்டும், பொருளாதார வளர்ச்சி ஊடாக அவர்களது வாழ்வாதாரம் ஸ்தரப்படுத்தப்படவேண்டும்..  சமூக அக்கறையுள்ள இளையவர்களை உள்வாங்கி ஒரு ஆரோக்கியமான அரசியலில் ஈடுபடவேண்டும்..

ஒவ்வொரு வருடமும் ஊருக்கு போகும் போது, நான் எனக்குள் எழுதிக்கொள்ளும் பல “ வேண்டும்” களில் இவை அடங்கும்..எழுதும் போதும், நினைக்கும் போதும் “முடியுமா?” என தோன்றும்

இப்போதைய சூழ்நிலையை உணர்ந்து, தமிழ் தலைமைகள் செயற்படுவார்கள் என நம்புகிறேன். இந்த தேர்தலும் வழமையாக ஒரு பாடத்தினை வழங்கிவிட்டுதான் சென்றுள்ளது.. பரீட்சையில் தேறுவார்களா? தெரியாது.. ஆனால் முயற்சிப்பார்கள் என நம்புகிறேன்.. 
 
Edited by பிரபா சிதம்பரநாதன்
எழுத்துப்பிழை

  • கருத்துக்கள உறவுகள்

மாவை சேனாதிராசா மனக்கிலேசமடைந்திருந்தால் நானும், சிறிதரனும் மனம் வருந்துகிறோம்: சரணடைந்தார் சுமந்திரன்.!

%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D.%E0%AE%8F.%E

மாவை சேனாதிராசாவின் கட்சி தலைமையை நாம் கைப்பற்ற முயலவில்லை. ஊடகங்களே அப்படியொரு செய்தியை உலாவவிட்டுள்ளன. இதனால் மாவை சேனாதிராசாவிற்கு மனவருத்தம் ஏற்பட்டிருந்தால் அதற்காக நானும், சிறிதரனும் மனம் வருந்துகிறோம் என தெரிவித்துள்ளார் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன்.

பருத்தித்துறையில், தனது தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டவர்களுடன் நடந்த கலந்துரையாடலில் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கட்சி தலைவர் இதனால் எந்த மனச்சஞ்சலமும் பட வேண்டியதில்லை. கட்சித் தலைவர் இதனால் வருத்தப்பட்டால் நானும் சிறிதரனும் இதனால் வருத்தப்படுகிறோம். தலைவரை கட்சித் தலைமையிலிருக்கு நீக்குவதாக சொல்லப்படவில்லை, அப்படியொரு எண்ணமுமில்லை, இப்பொழுது தலைமையில் மாற்றம் தேவையில்லையென்றுதான் சொல்லப்பட்டுள்ளது. ஆனால் ஊடகங்கள் அதற்கு எதிர்மாறான கருத்தையே ஊடகங்கள் சொன்னதால், அதனால் தலைவருக்கு எதாவது மனவருத்தம் ஏற்பட்டால் அதற்கு மனவருத்தத்தை தெரிவித்து கொள்கிறென்.

மாவை சேனாதிராசா எமது கட்சியின் தலைவர். கட்சி பின்னடைவை சந்திக்கின்ற போது தலைமையிலிருப்பவர்கள் தோற்பது வழக்கம். அது ஒரு அறிகுறி. அதனால் அவர் தோற்றிருக்கிறார். எங்களுடைய பொதுச்செயலாளரும் 6வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். இது எங்களிற்கு பெரிய தோல்வி. 10 ஆசனங்கள் கிடைத்தது என்பது எமக்கு பெரிய தோல்வி.

மாவை சேனாதிராசாதான் என்னை அரசியலுக்கு இழுத்தவர். பலர் சொல்வது- சம்பந்தன்தான் என்னை அரசியலுக்கு இழுத்ததாக. அதில் சிறிய உண்மையுண்டு. 2004ஆம் ஆண்டு தொடக்கம் 2010 ஆம் ஆண்டு வரையான நாடாளுமன்றத்தில் 2 முறை நாடாளுமன்ற ஆசனம் காலியானது. அந்த இரண்டு முறையும் அந்த இடத்திற்கு என்னை நியமிக்க மாவை சேனாதிராசா முயற்சித்தார். நான் இணங்கவில்லை.

ஆனால் போர் முடிந்த பின்னர் நாம் சில சட்ட வரைபுகளில் ஈடுபட்டதால், 2010இல் சரத் பொன்சேகாவுடனான இணக்கப்பாட்டை வரைவதில் ஈடுபட்டதால், அதன் பின்னர் சம்பந்தனும், மாவவையும் என்னை அழைத்தார்கள். அப்போது மறுத்தேன். பின்னர் சம்பந்தன் தனியாக பேசிய பின்னர் ஒத்துக் கொண்டேன்.

மூன்று முறையும் மாவை சேனாதிராசாதான் என்னை அழைத்தார். தேசியப்பட்டியல் எம்.பியான பின்னர், பியசேன கட்சி மாறியதால், என்னை அம்பாறையை பார்க்கும்படி சொல்லியிருந்தார். என்னை அம்பாறைக்கு அழைத்து சென்று, அங்குள்ளவர்களை அறிமுகம் செய்தார்.

சென்ற பாராளுமன்ற தேர்தலில் சேனாதிராசாதான் எனக்காக அதிகம் பிரச்சாரம் செய்தார். இன்று எங்கள் இருவருக்குமிடையில் பெரிய சர்ச்சையிருப்பதை போல ஊடகங்கள் மூலம் கொடுக்கப்பட்டுள்ளது தவறு. அப்படியான ஒரு போட்டியோ, சர்ச்சையோ கிடையாது.

நான் அவர் மீது வைத்துள்ள ஒரேயொரு குற்றச்சாட்டு மற்ற வேட்பாளர்கள் தேர்தல் காலத்தில் எனக்கு எதிராக பிரச்சாரம் செய்தபோது, நான் அவரது கவனத்திற்கு கொண்டு வந்தேன். அவர் நடவடிக்கை எடுக்கவில்லையென்பதே எனது குறை. ஒரேயொரு முறை- விமலேஸ்வரி குற்றச்சாட்டு சுமத்தியபோது நடவடிக்கையெடுத்தார். ஏனைய சந்தர்ப்பங்களில் நடவடிக்கையெடுக்கவில்லை.

தேர்தல் காலத்தில் நான் இதை சொல்லவில்லை. தேர்தல் காலத்தில் சுமந்திரனை தோற்கடிப்போம் என பத்திரிகையொன்றில் செய்தி வெளியானபோது, அந்த பத்திரிகை பிரதிகளை கொள்வனவு செய்து விநியோகித்தேன். வேறு ஒன்றும் சொல்லவில்லை. பத்திரிகை உரிமையாளர் சக வேட்பாளர் என்பதால் பேசாமலிருந்தேன். கே.வி.தவராசா என்பவரின் பெயர் எமது தேசியப்பட்டியில் இருந்ததால், அவர் என்னைப்பற்றி பொய்யான செய்திகளை சொன்னபோதும், நான் பேசாமல் இருந்தேன்.

ஏனெனில், அவர்கள் செய்யும் தவறுகளை நானும் செய்யக்கூடாது என்பதில் கவனமாக இருந்தேன். தேர்தல் முடிந்த பின்னர் நான் சொல்கிறேன். தேர்தலிற்காக பேசாமல் இருந்தேன். இது சம்பந்தமாக முறைப்பாடுகள் செய்யப்பட்டும், அவர் நடவடிக்கையெடுக்கவில்லையென்றே தெரிவித்தேன். அவர் எனக்கு எதிராக செயற்பட்டார் என சொல்லவில்லை.

தேசியப்பட்டியல் விவகாரம் சம்பந்தமாக 7ஆம் திகதி இரவு நானும், சிறிதரனும் மாவையை சந்தித்து பேசினோம். தேசியப்பட்டியல் பற்றி சிறிதரன் கேட்டார். அதற்கு அவர், பெண் பிரதிநிதித்துவம் தொடர்பாக சசிகலா ரவிராஜை யோசிக்கலாம் என்றார். அதைத்தான் சம்பந்தனிடம் சொல்லியுள்ளதாகவும் தெரிவித்தார்.

தேர்தலின் முன்னர் நியமன குழுவில், முதலாவது ஆசனம் திருகோணமலையை சேர்ந்த குகதாசனிற்கு வழங்கப்பட வேண்டுமென தீர்மானிக்கப்பட்டிருந்தது. என்னுடைய நிலைப்பாடு- எடுக்கப்பட்ட தீர்மானம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமென்பது.

ஆனால் அப்படி நடக்கவில்லை. அம்பாறையின் தேவையென்பது மிக முக்கியமானது. நான் அறிந்தபடி, 1931ஆம் ஆண்டின் பின் அம்பாறையில் ஒரு தமிழ் பிரதிநிதியும் தெரிவாகவில்லை. அதை குறித்து சிந்தித்து கட்சி தலைவர் ஒரு நிலைப்பாட்டை எடுத்திருக்கலாம். ஆனால், என்னுடைய நிலைப்பாடு எடுத்த தீர்மானத்தின்படி நாம் ஒழுக வேண்டுமென்பதுதான். அதை தொடர்ந்து தேவையற்ற சர்ச்சைகள் அவசியமில்லை.

பங்காளிக்கட்சிகளின் தலைவர்கள் தம்முடன் பேசவில்லையென சொல்லியுள்ளனர். நான் கட்சி தலைவர் அல்ல. பங்காளிக்கட்சிகளின் தலைவர்களுடன் நான் பேச வேண்டிய அவசியமில்லை. அது பற்றி சம்பந்தன் ஐயா பேசியிருப்பார் என நினைக்கிறன். அது பற்றி மேலதிக விளக்கமெதுவும் நான் கொடுக்க முடியாது என்றார்

http://www.pagetamil.com/139949/

  • கருத்துக்கள உறவுகள்
On 11/8/2020 at 23:15, satan said:

அதற்கு காரணமில்லாமல் இல்லையே. ஒன்று,  தான் வெளியேற வேண்டும். இது மற்றவர்களை வெளியேற்றி, திறமையானவர்களை ஓரங்கட்டி சிக்கலில் விட்டிருக்குது. இது யாராலும் எடுக்க கூடிய சிக்கு இல்லை. பாருங்கள் தாங்கள் தான் பேரம் பேசும் தலைமை என்று கூவினார்களே! தமிழர் பிரச்சனையை விற்று வயிறு வளர்த்ததெல்லாம் தாம் தலைமை என்று சிங்களம் நிறுத்தியிருக்குது. இனி இந்த அரைகுறைகளோடுதான் சிங்களம் பேசும். என்ன விடிவு?எது முடிவு? கேட்டதற்கு பதில் சொல்லத் தெரியாததெல்லாம் ஆமா தலையாட்டும். இதுதான் அவர்களின் ராஜ தந்திரம். தலைக்கு மேலே வெள்ளம் போனால் சாண் ஏறினாலென்ன முழம் ஏறினாலென்ன? 

பாருங்கள் சாத்தன், 

இங்கேயும் நீங்கள் சுமந்திரனைத்தான் குறை கூறுகிறீர்கள். ஆனால் எனது எழுத்தின் சாரம் சுமந்திரன் அல்லவே ☹️

தமிழர்களுக்கு தகுதியான தலைமை யார் என்பதுதான் எனது கேள்வியாக இருக்கிறது. யாழ் களத்திலுள்ள ஒருவர்கூட தமிழர்களுக்கு  இவர்தான் தகுதியானவர் என அடையாளம் காட்ட முடியவில்லை. ☹️

சுமந்திரன் TNA யில் இருந்து தமிழ்த் தேசியத்தை நீக்கம் செய்துவிடுவார் என கலவரமடையும் நாமெல்லோரும், TNA யில் இருந்து சுமந்திரனை அகற்ற வேண்டும் என்பதில் குறியாயிருக்கிறோம். ஆனால் அவரை அகற்றியபின்னர்  TNA யின் தலைமை   வழிநடாத்த தகுதியானவர் யார் எனக் கேட்டால் ஒருவரிடமுமே பதிலில்லை. இங்குதான் நாம் சிந்திக்கத் தவறுகிறோம். 

முள்ளிவாய்க்காலில் எமது ஆயுதப் போராட்டம் அழிக்கப்பட்ட பின்னர், அந்த இடத்திலிருந்து எங்களை அந்த அழிவிலிருந்து (தலைமை, அழிவு) எங்களை வெளியே இழுத்துவந்து முன்னோக்கி கூட்டிச் செல்வதற்கு எங்கள் ஒரே ஒரு நம்பிக்கையாயிருந்த TNA யை சுக்கு நூறாக உடைப்பதில் எங்கள் உண்மையான எதிரி வெற்றியடைந்து வருகிறான்.

தமிழர்கழை சிறு சிறு குழுக்களாகப் பிரித்து, எங்களுக்குள் நாங்களே அடிபட வைத்து தேசியம் என்கின்ற ஒன்றையே மறக்கடித்துவிட்டான். எல்லோருடைய பேசுபொருளும் சுமந்திரனை திட்டித் தீர்ப்பதுதான்.

ஆனால் எங்கள் எல்லோரினதும் கரிசனையாக இருக்க வேண்டியது ...

முள்ளிவாய்க்காலில் இருந்து எங்களை வெளியே கொண்டுவருபவர் யார் ? எங்களை வழிநடாத்திக் கூட்டிச் செல்பவர் யார் என்பதாகத்தான் இருக்க வேண்டும். 

அதற்குத் தகுதியான நபர் யார் 🤔

2 minutes ago, Kapithan said:

ஈழம் கிடைக்குமென்றால் நன்றாக ஆசைதீர திட்டி தீர்க்கட்டும். இதெல்லாம் இயலாமையின் வெளிப்பாடு. பாவம் அவர்கள் அப்படியாவது சந்தோசப்படட்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.