Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரஷ்யா ‘முதல்’ கொரோனா வைரஸ் தடுப்பூசியை உருவாக்கியுள்ளது – ஜனாதிபதி புடின்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ரஷ்யா ‘முதல்’ கொரோனா வைரஸ் தடுப்பூசியை உருவாக்கியுள்ளது – ஜனாதிபதி புடின்

 

covid-russia.jpg

உலகின் முதல் கொரோனா வைரஸ் தடுப்பூசிக்கு நாட்டின் சுகாதார அமைச்சு ஒப்புதல் அளித்துள்ளதாக ரஷ்யா ஜனாதிபதி விளாடிமிர் புடின் அறிவித்துள்ளார்.

மேலும் மனிதர்கள் மீதான பரிசோதனை வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளது என்றும் தனது மகளுக்கும் குறித்த தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்றும் அவர் அறிவித்துள்ளார்.

ரஷ்யாவின் முதல் கொரோனா வைரஸ் தடுப்பூசி கமலேயா ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு இணைந்து உருவாக்கியுள்ளது.

இன்று காலை, உலகில் முதல் முறையாக, கொரோனா வைரஸுக்கு எதிராக ஒரு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸுக்கு எதிரான முதல் தடுப்பூசியை கண்டுபிடிக்க பணியாற்றிய அனைவருக்கும் நன்றி தெரிவித்த புடின் மேலும் இது “உலகிற்கு மிக முக்கியமான படி” என்று குறிப்பிட்டுள்ளார்.

 by : Jeyachandran Vithushan

http://athavannews.com/ரஷ்யா-முதல்-கொரோனா-வைரஸ்/

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனாவுக்கு எதிரான முதலாவது தடுப்பூசி வெற்றி : தனது மகளுக்கும் செலுத்தியதாக புட்டின் அறிவிப்பு

கொரோனா வைரஸ் தடுப்பூசியை அறிமுகப்படுத்தியதுடன் அதில் வெற்றிபெற்றுள்ளதாகவும் கொரோனாவுக்கு எதிரான முதல் தடுப்பூசியை அறிமுகப்படுத்திய முதல் நாடாக ரஷ்யா திகழ்வதாகவும் அந்நாட்டின் ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தெரிவித்துள்ள அதேவேளை, அந்த தடுப்பூசியை தனது மகளுக்கும் செலுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசிக்கு அனுமதியை ரஷ்ய சுகாதாரத்துறை வழங்கியுள்ள நிலையில் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை வழங்கிய முதல் நாடாக ரஷ்யா உள்ளது.

பாதுகாப்பு மற்றும் செயல்திறனைச் சோதிப்பதற்கான மருத்துவ பரிசோதனைகளின் இறுதிக் கட்டம் தொடர்ந்தாலும், இந்த வளர்ச்சி ரஷ்யாவிலுள்ள மக்களில் பெரும்பாலானோருக்கு தடுப்பூசி போடுவதற்கு வழிவகுக்கிறது.

உலகில் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுதம் போது ரஷ்யா, தடுப்பூசியை வெளியிடுவதற்கான வேகம் ஒரு பயனுள்ள தயாரிப்புக்கான உலகளாவிய போட்டியில் வெல்வதற்கான அதன் உறுதியை எடுத்துக்காட்டுகிறது.

அத்துடன் ரஷ்யாவின் அறிவியல் மற்றும் பாதுகாப்பிற்கு சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளதுடன் தேசிய கெளரவத்தையும் ஏற்படுத்தக்கூடும்.

இந்நிலையில் கொரோனா தடுப்பூசி பந்தயத்தில் உலகின் அனைத்து நாடுகளையும் முந்த விரும்பிய ரஷ்யா, கொரோனா வைரஸ் தடுப்பூசியை வெளியிட்ட உலகின் முதல் நாடாக பதிவு செய்துள்ளது. ரஷ்ய ஜனாதிபதி புட்டின் இதை செய்தியாளர்களிடம் முறைப்படி இன்று அறிவித்தார்.

ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் கமலேயா ஆராய்ச்சி நிறுவனம் ஆகியன இணைந்து உருவாக்கியுள்ள இந்த தடுப்பூசி சோதனை கட்டமாக பொதுமக்களுக்கு இன்று முதல் வழங்கப்படுகின்றது.

மருத்துவ வல்லுநர்கள் மற்றும் வயோதிபர்களுக்கு முதலில் தடுப்பூசி போடப்பட உள்ளது. அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி பலப்படுத்தப்பட்ட பின்னர் தடுப்பூசியின் செயல்திறன் தீர்மானிக்கப்பட உள்ளதாகவும் அக்டோபரில் முழுமையாக மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்றும் ஏற்கனவே ரஷ்யா கூறியிருந்தது.

இந்நிலையில் கொரோனோவுக்கு எதிரான உலகின் முதல் தடுப்பூசியை பதிவு செய்துள்ளோம் என ரஷ்ய அதிபர் புட்டின் அறிவித்துள்ளார். உடல் நிலை சரியில்லாமல் இருக்கும் தனது சொந்த மகளுக்கே புதிய கொரோனா வைரஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும் புட்டின் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

சுகாதார அமைச்சர் மிகைல் முராஷ்கோவிடம் தடுப்பூசி குறித்து தெரிவிக்கும்படி கேட்டுக்கொண்ட புட்டின். "இது மிகவும் திறம்பட செயல்படுகிறது" என்பதும், "நிலையான நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குகிறது" என்பதும் தனக்குத் தெரியும் என்றார்.

கொரோனா வைரஸ் தொற்றுநோயைத் தடுக்கும் முயற்சியில் 100 க்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் உலகம் முழுவதும் உருவாக்கப்படுகின்றன. இந்நிலையில் உலக சுகாதார ஸ்தாபனத்தின் தரவுகளின்படி, குறைந்தது நான்கு தடுப்பூசிகள் மூன்றாம் கட்ட மனித சோதனைகளில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.https://www.virakesari.lk/article/87856

  • கருத்துக்கள உறவுகள்

ரஷ்யாவின் கரோனா தடுப்பூசி இந்தியர்கள் உடலில் வேலை செய்தால் நாம் அதிர்ஷ்டசாலிதான் ; பாதுகாப்பானது இல்லை கவனம் தேவை: சிசிஎம்பி இயக்குநர் கருத்து

sans-proper-data-russian-covid-19-vaccines-efficacy-safety-unknown-ccmb-chief கோப்புப்படம்

ஹைதராபாத்


ரஷ்யா தயாரித்துள்ள கரோனா வைரஸ் தடுப்பு மருந்தின் எந்தவிதமான புள்ளவிவரங்களும் தெரியாத போது, அது செயல்படும்முறை, பாதுகாப்பு குறித்து யாராலும் கணிக்க முடியாது என்று சிஎஸ்ஐஆர் அமைப்பின் செல்லுலார் அன்ட் மாலிகுளர் பயாலஜி அமைப்பின் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

உலகையே அச்சுறுத்திவரும் கரோனா வைரஸுக்கு இதுவரை தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை. 100-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் அதற்கான முயற்சியில் ஈடுபட்டு பல்வேறு நிலையை எட்டியுள்ளன. ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம், அமெரிக்காவின் கேய்சர் போன்ற நிறுவனங்கள்தான் கரோனா தடுப்பு மருந்தின் 3-வது கட்டத்தில் நுழைந்து மனிதர்களுக்கான கிளினிக்கல் பரிசோதனையை தீவிரப்படுத்தியுள்ளன.

இந்த சூழலில் கரோனா வைரஸுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்துவிட்டதாக ரஷ்யா நேற்று அறிவித்தது. உகிலேயே முதல்நாடாக கரோனாவுக்கு தடுப்பு மருந்தை ரஷ்யா கண்டுபிடித்துள்ளதாக அந்நாட்டின் அதிபர் விளாதிமிர் புதின் அறிவித்தார்.

ரஷ்யாவின் கமலேயா தேசிய ஆய்வு மைம் மற்றும் தொற்றுநோய் தடுப்பு மற்றும் நுண்ணுயிரியல் பிரிவு ஸ்புட்னிக்-5 எனும் கரோனா தடுப்பு மருந்தை தயாரித்துள்ளது.

1597221668756.jpg

கரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டதாக ஒருபுறம் ஆறுதல் அடைந்தாலும், ரஷ்யா கண்டுபிடித்த தடுப்பு மருந்தின் நம்பகத்தன்மை, புள்ளிவிவரங்கள், எத்தனை கிளினிக்கல் பரிசோதனை நடத்தப்பட்டது, அதன் செயல்திறன் குறித்து யாருக்கும் தெரியாது.

இதுகுறித்து சிஎஸ்ஐஆர் அமைப்பின் செல்லுலார் அன்ட் மாலிக்ளர் பயாலஜி அமைப்பின் இயக்குநர் ராகேஷ் கே. மிஸ்ரா பிடிஐ நிருபருக்கு இன்று அளித்த பேட்டியில் கூறியதாவது:

“ ரஷ்யா தயாரித்துள்ள கரோனா தடுப்பு மருந்து இந்தியர்கள் உடலில் திறம்பட செயல்பட்டால் நாம் அதிர்ஷ்டசாலிதான்.

ரஷ்யா தயாரித்துள்ள கரோனா தடுப்பு மருந்தின் செயல்திறன், பாதுகாப்பு பற்றி இதுவரை யாருக்கும் தெரியாது. அந்நாட்டைச் சேர்ந்தவர்கள் முறையாக 3-வது கட்ட கிளினிக்கல் பரிசோதனையை மக்கள் மீது நடத்தவில்லை.

தடுப்பு மருந்தின் செயல்திறனை அறிய வேண்டுமானால், மிகப்பெரிய மக்கள் கூட்டத்தில் அந்த மருந்தை செலுத்தி 2 மாதங்களாவது காத்திருக்க வேண்டும். தடுப்பூசி செலுத்தப்பட்ட மக்கள் எவ்வாறு இருக்கிறார்கள், நோய்தொற்றுக்கு ஆளாகிறார்களா, இல்லையா, வேறு ஏதாவது பாதிப்பு வருகிறதா என்பதை கண்டறிய வேண்டும்.

ரஷ்யா தாங்கள் தயாரித்த கரோனா தடுப்பு மருந்தை மிகப்பெரிய அளவில் மக்களுக்கு கொடுத்து பரிசோதித்தார்களா எனத்தெரியாது. அவ்வாறு பரிசோதித்திருந்தால், புள்ளிவிவரங்கள் கிடைக்க வேண்டும். எதையும் ரகசியமாக வைத்துக்கொண்டு மருந்துகளை வெளியிட முடியாது.

ரஷ்யா தயாரித்துள்ள கரோனாதடுப்பு மருந்தை நாம் மிகவும் கவனத்துடன் மதிப்பீடு செய்துதான் மக்களுக்கு வழங்க முடியும். எந்த நாடும், எந்த நிறுவனமும் கரோனா தடுப்பு மருந்து அறிமுகம் செய்யும் புள்ளிவிவரங்களை வெளியிடாமல் இருந்தால் அது மோசமானதாக இருக்கும்.

1597221680756.jpg

ரஷ்ய கரோனா தடுப்பு மருந்து பாதுகாப்பானது அல்ல. கிளினிக்கல் பரிசோதனையின் 3 கட்டங்கள்வரை தடுப்பு மருந்து பரிசோதிக்கப்படாமல் எந்த நாடும் தடுப்பு மருந்தை அனுமதிப்பதில்லை.

கடந்த 2 மாதங்களுக்கு முன் ரஷ்யா அரசு ஒரு சட்டத்தை இயக்கிறது. அதன்படி மிகவிரைவாக கரோனா தடுப்பு மருந்தை தயாரிக்க வேண்டும் என்று தீர்மானித்தது.

இந்தியாவில் தயாரிக்கப்படும் கரோனா தடுப்பு மருந்துகளின் கிளினிக்கல் பரிசோதனையில் முதல் மற்றும் இரண்டாம் கட்ட புள்ளிவிவரங்கள் இன்னும் வெளியாகவி்ல்லை. ஆகஸ்ட் இறுதி அல்லது செப்டம்பர் முதல்பாதியில் வெளியாகும் என்று நம்புகிறேன்.

முதல்கட்டம் மற்றும் 2-ம் கட்ட பரிசோதனையின் முடிவுகள் வரவேற்கக்கூடியதாக இருக்கும் என்பதில் எனக்கு வியப்பேதும் இல்லை. ஏனென்றால், பல தடுப்பு மருந்துகள் 2 கட்டங்களைக் கடந்து விட்டன. தற்போது 3-வது கிளினிக்கல் பரிசோதனையில் இருக்கிறோம்.

இவ்வாறு ராகேஷ் தெரிவித்தார்

 

https://www.hindutamil.in/news/india/569492-sans-proper-data-russian-covid-19-vaccines-efficacy-safety-unknown-ccmb-chief-3.html

  • கருத்துக்கள உறவுகள்

அரசியல் நோக்கங்களுக்காகவே தடுப்பு ஊசியை அவசரமாக வெளியிட்டு பரிசோதிக்கப்படவிருப்பதாகதான் இந்த வானெலி உரையாடலில் சொல்கிறார்கள்..
2-BAC6113-BEF4-425-D-86-EE-0-CA32-EE649-

Image:

Pexels (Retha Ferguson)

Russia first in the world to officially register a coronavirus vaccine

On RN Breakfast with Fran Kelly

Share

Download Russia first in the world to officially register a coronavirus vaccine (7.68 MB)

Download 7.68 MB

Russia has become the first country in the world to officially register a coronavirus vaccine and declare it ready for use.

The vaccine developed by Moscow's Gamaleya Institute has been granted regulatory approval after less than two months of human testing.

Russian President Vladimir Putin says the vaccine is safe and one of his daughters has already been inoculated.

But there are international concerns that Moscow has rushed approval for political purposes, while cutting corners on safety.

Guest:

Lawrence Gostin, Director of the World Health Organization Collaborating Centre on National Global Health Law and Professor of global health law at Georgetown University in Washington DC

Producer: Linda LoPresti

Duration: 8min 23sec

Broadcast: Wed 12 Aug 2020, 7:50am

 

https://www.abc.net.au/radionational/programs/breakfast/russia-first-to-officially-register-a-coronavirus-vaccine/12548490

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.