Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

‘கஜேந்திரன்களின்’ எதேச்சதிகாரம்; முட்டுச்சந்துக்குள் முன்னணி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

‘கஜேந்திரன்களின்’ எதேச்சதிகாரம்; முட்டுச்சந்துக்குள் முன்னணி

புருஜோத்தமன் தங்கமயில்   / 2020 ஓகஸ்ட் 23

“நந்தவனத்தில் ஓர் ஆண்டி - அவன்  
நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி  
கொண்டு வந்தான் ஒரு தோண்டி - மெத்தக்  
கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி”
  
இப்படி ஆரம்பிக்கும் நாட்டார் பாடலொன்று தமிழில் மிகவும் பிரபலமானது. கடுவெளிச் சித்தர் எழுதியது. “...நீ விரும்பி, காத்திருந்து பெற்ற ஒரு விடயத்தை, தவறான வகையில் பயன்படுத்தி, வீணாக்கிக் கொள்கிறாய்...” என்பதுதான் இந்தப் பாடலின் எளிமையான பொருள்.   

இந்தப் பாடல், யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ, தமிழ் அரசியல் சூழலுக்கு எப்போதுமே பொருந்தும். மக்கள் ஆணையைப் பெற்ற தரப்புகளாக, தமிழ்த் தேசிய அரசியலில் மேலெழுந்த பல தரப்புகள் பொறுப்பின்மை, தன்முனைப்பு மனநிலை (ஈகோ) ஆகியவற்றால், விடயங்களைக் கோட்டை விட்டு தாங்களும் தோற்று, மக்களையும் தோற்கடித்த வரலாறுகள் உண்டு. அதன் அண்மைய உதாரணங்களாக, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் பேரவை போன்றவற்றைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.   

image_2341d9f17c.jpg

இந்தப் பத்தி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்குள் இடம்பெற்று வருகின்ற குளறுபடிகள், குழந்தைப் பிள்ளைத் தனங்கள், எதேச்சதிகாரப் போக்கு ஆகியவை பற்றிப் பேச விளைகின்றது. 

‘முன்னணி’ என்ற அடையாளத்தினூடாக, கடந்த 11 ஆண்டுகளாக, தேர்தல் அரசியல் வெற்றிக்காகப் போராடி வந்த அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ், இந்தப் பொதுத் தேர்தலில், இரண்டு நாடாளுமன்ற ஆசனங்களை வென்றிருக்கின்றது. கூட்டமைப்பின் மீதான அதிருப்தி, முன்னணி இளைஞர்கள் மீதான நம்பிக்கை ஆகியவற்றை முன்னிறுத்தி, வாக்களித்த மக்களின் விரலில் தீட்டப்பட்ட ‘மை’ அழிபடும் முன்னமே, முன்னணிக்குள் பெரும் குழப்பம் ஏற்பட்டிருக்கின்றது.  

கடந்த வியாழக்கிழமை (13) இரவு ‘Zoom’ செயலி மூலம், முன்னணியின் மத்திய குழு கூட்டப்பட்டது. இக்கூட்டத்தில், முன்னணியின் மூன்றாவது முக்கியஸ்தரான விஸ்வலிங்கம் மணிவண்ணன், அவர், வகித்துவந்த தேசிய அமைப்பாளர், பேச்சாளர் ஆகிய பதவிகளில் இருந்து நீக்கப்பட்டார். 

மணிவண்ணன், முன்னணியின் மத்திய குழு உறுப்பினராக இருந்த போதிலும், அந்தக் கூட்டத்துக்கு முதலிரண்டு முக்கியஸ்தர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராஜா கஜேந்திரன் ஆகியோரால், திட்டமிட்ட ரீதியில் அழைக்கப்பட்டிருக்கவில்லை. குறிப்பாக, அப்படியொரு கூட்டம் கூட்டப்படுவதாக, அவருக்குச் சொல்லப்படவுமில்லை; Zoom செயலி இணைப்பு வழங்கப்படவுமில்லை. 
இந்தக் கூட்டத்தில், மணிவண்ணனைப் பதவிகளில் இருந்து நீக்குவதற்கான காரணங்களாக, கொள்கைப் பிறழ்வும் கட்சியின் தீர்மானங்களை மீறியமையும் போன்ற காரணங்கள் கூறப்பட்டிருக்கின்றன.   

ஆனால், கடந்த தேர்தல் பிரசாரக் காலங்களிலேயே, மணிவண்ணன் முன்னணியில் இருந்து சீக்கிரமாக விலக்கப்பட்டுவிடுவார்; அல்லது, அவரே விலகிவிடுவார் என்கிற நிலைப்பாடு உருவாகியிருந்தது. 

மணிவண்ணனை எப்படியாவது வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் வட்டம், குறிப்பாக, யாழ். இந்துக் கல்லூரி இளைஞர் குழுவொன்று மும்முரமாக இருந்தது. அதேபோல, அவரைத் தோற்கடிக்க வேண்டும் என்பதில், முன்னணியின் ஒரு குழுவினர் மும்முரமாக ஈடுபட்டிருந்தனர். அது, விருப்பு வாக்குப் போட்டி என்கிற நிலையைத் தாண்டிய மோதலாக முன்னணிக்குள் எழுந்திருந்தது.

‘மணியுடன் பேசுவோம்’ என்று, தேர்தல் பிரசாரத்தின் இறுதி நாளன்று மணிவண்ணன் நடத்திய சந்திப்பும் அதில், அவர், தன்னை முன்னிறுத்திப் பேசிய விடயமும் ‘முன்னணி’ என்கிற கட்டமைப்புக்குள் எவ்வாறான பிளவு ஏற்பட்டிருக்கின்றது என்பதை உணர்த்தியது.   

முன்னணிக்குள் ஏற்பட்ட பிளவு என்பது, கஜேந்திரகுமார், கஜேந்திரன் ஆகியோரின் எதேச்சதிகாரப் போக்கினால் விளைந்தது என்பது, மணிவண்ணனின் ஆதரவாளர்களின் வாதம். 

‘கஜேந்திரன்களுக்கு’ (கஜேந்திரகுமார்+ கஜேந்திரன்) இருக்கிற முக்கிய பிரச்சினை, அவர்களது நிலைப்பாடுகளைக் கேள்விக்குட்படுத்தும் அனைவரையும் ‘துரோகி’ அடையாளம் சூட்டுதல் ஆகும். அது ஒரு கட்டத்தில், சொந்தக் கட்சி இளைஞர்களை நோக்கியதாகவும் மாறிவிட்டது. 

கடந்த ஒருசில தினங்களுக்கு முன்னர், முன்னணியின் யாழ். மாநகர சபை உறுப்பினரான பார்த்தீபன் வரதராஜன், தன்னுடைய தந்தையைப் பற்றி எழுதிய நினைவுக் குறிப்பொன்றில், சொந்தக் கட்சி உறுப்பினர்களை நோக்கி, துரோகி அடையாளம் சூட்டும் முன்னணிக்குள் எழுந்திருக்கின்ற ‘குணம்’ பற்றி, பெரும் கவலை வெளியிட்டிருந்தார். 

(தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆரம்பிக்கப்பட்ட தருணத்தில், அதன் தலைவராக இருந்து, 2013ஆம் ஆண்டளவில்,  அதிலிருந்து விலகிய பொருளியல் ஆசிரியர் அமரர் சி.வரதராஜனின் மகனே, பார்த்தீபன் ஆவார்.)   

கடந்த, ஜனாதிபதித் தேர்தல் காலத்தில், தேர்தலைப் புறக்கணிக்க மக்களைக் கோருவது என்று, ‘கஜேந்திரன்கள்’ முடிவெடுத்தமை குறித்து மணிவண்ணன், கட்சிக்குள் மாற்றுக் கருத்தை வெளியிட்டிருக்கின்றார். “மக்களது நிலைப்பாடுகளுக்கு எதிராக, தொடர்ச்சியாகக்  கட்சி முடிவெடுப்பது நல்லதல்ல” என்று அவர் வாதிட்டிருக்கின்றார். அது, வார்த்தைகள் தடிக்கும் நிலையைத் தோற்றுவித்திருக்கின்றது. ஒரு கட்டத்தில் மணிவண்ணன் கூட்டத்திலிருந்து வெளியேறியும் இருந்தார். 

ஆனால், கட்சிக்குள் தான் முன்வைத்த விடயங்கள் தொடர்பில், கட்சியின் நிலைப்பாட்டை மீறி, அவர் பொது வெளியில் பிரஸ்தாபித்திருக்கவில்லை. ஆனால், தடித்த வார்த்தைகள் தொடர்பில், தன் மீது கட்சி ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கலாம் என்று எண்ணியிருந்தார். ஆனால், அப்போது விடயம் கைவிடப்பட்டுவிட்டது. ஜனாதிபதித் தேர்தலில், முன்னணியின் நிலைப்பாடுகளுக்கு எதிராக நின்று, தமிழ் மக்கள் வாக்களித்திருந்தார்கள்.   

பத்து ஆண்டுகள் கடந்தும், முன்னணியை கட்சியாகப் பதிவு செய்யாமை தொடர்பில், பலரும் கேள்வி எழுப்பி வந்தார்கள். இந்தப் பத்தியாளரும் பலமுறை கேள்வி எழுப்பியிருக்கிறார். அவ்வாறான சூழலில், முன்னணியை கட்சியாகப் பதிவு செய்வது சார்ந்து, மணிவண்ணன் தரப்பு ஆர்வம் வெளியிட்டது; கட்சிக்குள் வலியுறுத்தவும் ஆரம்பித்தது. இதன் மூலம், கட்சியின் கட்டமைப்பை ஒழுங்குபடுத்திக் கொள்ளலாம் என்பது எதிர்பார்ப்பு. 

ஆனால், முன்னணியை கட்சியாகப் பதிவு செய்ய வேண்டும் என்கிற கோரிக்கை, ‘கஜேந்திரன்களுக்கு’ குறிப்பாக, கஜேந்திரகுமாருக்கு உவப்பாக இருக்கவில்லை. ஏனெனில், முன்னணி என்கிற அடையாளத்துக்கு ஊடாக, காங்கிரஸை மீட்டெடுப்பதுதான் அவரின் ஒற்றை இலக்கு. அதற்குத் தடையாக, மணிவண்ணன் போன்றவர்கள் இருக்கிறார்கள் என்பது, அவருக்கு சிக்கலான விடயமாக மாறியது.   

அடுத்து, தங்களைத் தாண்டி, முன்னணிக்குள் மணிவண்ணனை நோக்கி இளைஞர் ஆதரவுத் தளமொன்று உருவாகி வந்தமை, ‘கஜேந்திரன்களால்’ கொஞ்சமும் இரசிக்கப்படவில்லை. அந்த ஆதரவுத் தளம், கேள்விகளுக்கு அப்பால் நின்று, ‘கஜேந்திரன்களை’ப் பின்தொடர்வதற்குத் தயாராக இருக்கவில்லை. 

வழக்கமாக ‘கஜேந்திரன்களின்’ ‘ஒற்றைவாதம்’ என்பது, கொள்கை மறுதலிப்பற்ற தரப்பு, தாங்கள் மட்டுமே என்பதாகும். ஆனால், அவர்களும் காலத்துக்குக் காலம், கொள்கைகளை மாற்றி வந்திருக்கிறார்கள். அதற்கு, வடக்கு மாகாண சபையின் கடந்த தேர்தலைப் புறக்கணித்தமையை ஓர் உதாரணமாகக் கொள்ளலாம். 

அதாவது, முன்னணியின் தலைவராக இருந்த வரதராஜன், வடக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று வலியுறுத்தினார். அப்போது ‘கஜேந்திரன்கள்’, “மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவது, 13ஆவது திருத்தச் சட்டத்தை ஏற்றுக்கொள்வதாக அமையும்” என்று கூறி நிராகரித்திருந்தனர். ஆனால், அந்த நிலைப்பாடுகளை மாற்றிக் கொண்டு, அடுத்த மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்குத் தயாராகிவிட்டார்கள்.   

ராஜபக்‌ஷக்களுக்குத் துதிபாடும் அரசியல் நெறியொன்று, தென் இலங்கையில் நிலைபெற்றிருக்கின்றது. அது, ராஜபக்‌ஷக்களைக் கேள்விகளுக்கு அப்பால் நின்று தொழுகின்றது. அப்படியானதொரு நிலையொன்றை, தங்களைச் சுற்றிக் கட்டமைக்கும் நிலைப்பாடுகளில், ‘கஜேந்திரன்கள்’ ஆர்வம் கொண்டிருக்கிறார்கள். தாங்கள் கூறுவதுதான் ‘வேதவாக்கு’ என்பதுதான் அவர்களின் எதிர்பார்ப்பு. 

இதனை, கடந்த ஒருவார காலமாக, முன்னணியின் ஆதரவாளர்களுக்கு இடையில் நடைபெற்றுவருகின்ற சமூக ஊடக உரையாடல்களைப் பார்க்கின்ற போது புரிந்து கொள்ள முடியும். அதனை இன்னமும் நேரடியாகச் சொன்னால், ‘மூளைச் சலவை’ செய்யப்பட்ட கூட்டமொன்றைக் கட்டி வளர்க்க வேண்டும் என்பதுதான், ‘கஜேந்திரன்களின்’ நினைப்பு.   

தமிழ்த் தேசிய அரசியலில் முன்னணியை ஒரு மாற்றாக நம்பி, அதன் பின்னால் சென்று, அதன் வெற்றிக்காக இரவு பகலாக உழைத்த இளைஞர்கள், ‘கஜேந்திரன்களின்’ எதேச்சதிகாரப் போக்கால், இன்று போக்கிடமின்றி நிற்கிறார்கள். கிட்டத்தட்ட, முட்டுச்சந்துக்குள் மாட்டிக் கொண்ட நிலையை ஒத்தது. 

ஒவ்வொரு தடவையும் மக்களால் நிராகரிக்கப்படும் போதும், அவர்கள் தாங்கி நின்ற வலியும் அவமானமும் பெரியது. அதனைத் தாண்டி, சிறிய வெற்றியொன்றைப் பெற்றிருக்கின்ற தருணத்தில், அதனை அப்படியே போட்டுடைப்பது என்பது, ஜீரணிக்க முடியாததுதான்.  

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/கஜேந்திரன்களின்-எதேச்சதிகாரம்-முட்டுச்சந்துக்குள்-முன்னணி/91-254648

  • கருத்துக்கள உறவுகள்

மணிவண்ணனுக்குப் பின்னால் திரிந்தவர்களில் ஆவாக்குழுவின் பிரசன்னாவின் அண்ணண், டக்ளசது பினாமியாகச் செயற்பட்டு யாழ் மாவட்டத்தில் பல சாராய பார்களை நடாத்தும் ஒருவரது எடுபிடிகள் மிகுதிப்பேர் இதை யாழில் வசிக்கும் அனைவருக்கும் தெரியும் இந்த ரெளடிக்கூட்டம்தான் இப்போ மணிவண்ணனைச் சுத்தித்திரியுது. மணிவண்ணனுக்கும் இது தெரியும் ஆனால் இதுகளாலதான் அவரது வருமானமும் இதுகளும் இதுகளுடன் தொடர்பில இருக்கிற அனைத்துக் களிசடைகளையும் நீதிமன்றத்தில் பிணை எடுக்கிறது என வருமானம் பார்கிறது மணிவண்ணந்தான். 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Elugnajiru said:

நான் முதலும் கேட்டேன் உங்களிடம் பதில் இல்லை ...திரும்பவும் கேட்க்கிறேன் மணி இப்படிப்பட்ட ஆள் என்று தெரிந்தால் என் அவரை தேர்தல் வரைக்கும் வைத்திருந்தார்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

ரதி அவர்களுக்கு வணக்கம்.

இன்னுமொரு இடுகையில் நீங்கள் கருணா ஆதரவாளர் என உங்களை நீங்களே கூறியுள்ளீர்கள் ஆகவே நீங்கள் எல்லா விடையங்களிலும் விதண்டாவாதமாகவே கருத்துக் கூறுவீர்கள். உங்களது கருத்துகளுக்கு என்னால் பதில் தரமுடியாது.

58 minutes ago, ரதி said:

நான் முதலும் கேட்டேன் உங்களிடம் பதில் இல்லை ...திரும்பவும் கேட்க்கிறேன் மணி இப்படிப்பட்ட ஆள் என்று தெரிந்தால் என் அவரை தேர்தல் வரைக்கும் வைத்திருந்தார்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

நான் முதலும் கேட்டேன் உங்களிடம் பதில் இல்லை ...திரும்பவும் கேட்க்கிறேன் மணி இப்படிப்பட்ட ஆள் என்று தெரிந்தால் என் அவரை தேர்தல் வரைக்கும் வைத்திருந்தார்கள்?

அவர் பதில் தர முடியாது என்றதால் நான் முயற்சிக்கிறேன் அக்காச்சி.

உங்களுக்கு விளக்கம் தர கொஞ்சம் பின்னோக்கி போக வேண்டும். TMVP யில் இருந்து கருணாவை தூக்கி பிள்ளையான் வெளியே போட்ட போது இருவரும் ஆள் மேல் ஆள் பாரிய குற்றச்சாட்டுகளை முன் வைத்தனர்.

பலகாலமாக ஒன்றாக இணைந்து, புலிகளை எதிர்த்து போராடி, அரசோடு இயங்கி, பின் தனி கட்சியும் காணும் வரை இவர்களுக்கு ஆளையாள் தெரியவில்லையா? இப்போ ஏன் சொல்கிறார்கள் என்ற நியாயமான கேள்வி உங்களை போலவே எனக்கும் ஏற்பட்டது.

பின்னர் நான் புரிந்து கொண்டேன், அவர்கள் இருவரும் இணைந்து வேலை செய்தார்கள், பின்னர் தமக்குள் பிளவு என்றதும் ஆளை ஆள் போட்டு கொடுக்கிறார்கள் என்பது.

அதை போலதான் இதுவும். 

இது மட்டும் அல்ல, பன்னெடுங்காலமாக  இருந்த சகிக்க முடியாத யாழ் மையவாததை “திடீரென்று”  ஒரு நாள் கருணா அடையாளம் கண்டு, அதற்கெதிராக கிளர்ந்து எழுந்ததும் இப்படியே. 

நமக்கு வசதி படும் போது, நரம்பில்லாத நாக்கால் முன்னாள் நண்பர்களை தூற்றுவது எல்லா சுயநலமி மனிதர்களும் செய்வதுதான்.

அப்படி செய்பவர்களைதான் “அரசியல்வாதி” என்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Elugnajiru said:

ரதி அவர்களுக்கு வணக்கம்.

இன்னுமொரு இடுகையில் நீங்கள் கருணா ஆதரவாளர் என உங்களை நீங்களே கூறியுள்ளீர்கள் ஆகவே நீங்கள் எல்லா விடையங்களிலும் விதண்டாவாதமாகவே கருத்துக் கூறுவீர்கள். உங்களது கருத்துகளுக்கு என்னால் பதில் தரமுடியாது.

இந்த பதில் எழுதினத்திற்கு பதிலாய் பிஞ்ச  செருப்பால் உங்களை நீங்கள் அடித்திருக்கலாம் 

1 hour ago, goshan_che said:

அவர் பதில் தர முடியாது என்றதால் நான் முயற்சிக்கிறேன் அக்காச்சி.

உங்களுக்கு விளக்கம் தர கொஞ்சம் பின்னோக்கி போக வேண்டும். TMVP யில் இருந்து கருணாவை தூக்கி பிள்ளையான் வெளியே போட்ட போது இருவரும் ஆள் மேல் ஆள் பாரிய குற்றச்சாட்டுகளை முன் வைத்தனர்.

பலகாலமாக ஒன்றாக இணைந்து, புலிகளை எதிர்த்து போராடி, அரசோடு இயங்கி, பின் தனி கட்சியும் காணும் வரை இவர்களுக்கு ஆளையாள் தெரியவில்லையா? இப்போ ஏன் சொல்கிறார்கள் என்ற நியாயமான கேள்வி உங்களை போலவே எனக்கும் ஏற்பட்டது.

பின்னர் நான் புரிந்து கொண்டேன், அவர்கள் இருவரும் இணைந்து வேலை செய்தார்கள், பின்னர் தமக்குள் பிளவு என்றதும் ஆளை ஆள் போட்டு கொடுக்கிறார்கள் என்பது.

அதை போலதான் இதுவும். 

இது மட்டும் அல்ல, பன்னெடுங்காலமாக  இருந்த சகிக்க முடியாத யாழ் மையவாததை “திடீரென்று”  ஒரு நாள் கருணா அடையாளம் கண்டு, அதற்கெதிராக கிளர்ந்து எழுந்ததும் இப்படியே. 

நமக்கு வசதி படும் போது, நரம்பில்லாத நாக்கால் முன்னாள் நண்பர்களை தூற்றுவது எல்லா சுயநலமி மனிதர்களும் செய்வதுதான்.

அப்படி செய்பவர்களைதான் “அரசியல்வாதி” என்பார்கள்.

கோசான் இன்டைக்கு இரவு உங்கட  வீட்டில  என்ன சாப்பாடு
பக்கத்து வீட்டில பீசா மணக்குது  😄

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ரதி said:

இந்த பதில் எழுதினத்திற்கு பதிலாய் பிஞ்ச  செருப்பால் உங்களை நீங்கள் அடித்திருக்கலாம் 

கோசான் இன்டைக்கு இரவு உங்கட  வீட்டில  என்ன சாப்பாடு
பக்கத்து வீட்டில பீசா மணக்குது  😄

அதான் நீங்கள் அடிசிட்டிங்களே🤣

எங்கட வீட்ல - கீரி மீன் சொதி, வெள்ளை இடியப்பம். நாவக்குடா ஸ்டைலில கூனிப்பிரட்டல். 

நீங்கள் என்ன மாரி?

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, ரதி said:

கோசான் இன்டைக்கு இரவு உங்கட  வீட்டில  என்ன சாப்பாடு
பக்கத்து வீட்டில பீசா மணக்குது  😄

தமிழ் தேசிய மக்கள் முன்னணி என்ற அமைப்பும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு என்ற அமைப்பும்   இன்னும் பதிவு செய்யப்படாமல் இருப்பதும் ஒருவிதமான சுயநல அரசியலுக்குக்காவே என்பதை எல்லோரும் அறிவார்கள்

மணிவண்ணனை மக்கள் முன்னணி வெளியேற்றக் காரணம் என்ன என்பது உண்மையிலேயே இரு கஜன்களுக்குமே தெரிந்த உண்மை
அந்த உண்மையைப் பலராலும் புரிந்துகொள்ளமுடியவில்லை .சொன்னால்தானே தெரியும் .
பசப்பான காரணங்களை சொல்லித் தப்பிக்க முடியாது .மணிக்கும் விக்கியருக்கும் இடையிலும் ஒரு டீல் உள்ளது பலருக்கும் தெரியாது .
விக்கியர் அடுத்த தேர்தலில் இன்னும் பலம்பெறுவார் என்ற நம்பிக்கையும் இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்
எல்லாவற்றிற்கும் மேலாக முன்னணியில் வெளியாட்களுக்கு எதிர்காலம் நம்பிக்கையற்றதாக இருக்கின்றது .

வாரிசு அரசியலிலிருந்து முன்னணி வெளி வராவிட்டால் அவர்களுடைய எதிர்காலமும் கேள்விக்குறியாகும் .
2010  தேர்தலின் பின்னர் இதை உணரக்கூடியதாக இருந்தது .
முன்னணி தங்கள் அமைப்பில் புதியவர்களை உள்வாங்குவதற்கான சந்தர்ப்பத்தில் மிக அவதானமாக இருக்கின்றனர்
தங்களைவிட ஒருவரும் வளர்ந்துவிடக்கூடாது என்பதிலும் கவனமாக இருக்கின்றனர் 2010  இல் கூட முன்னாள் பா ஊ க்கள் ஒரு சிலரை அவர்கள் உள்வாங்கத் தயக்கம் காட்டினார் காரணம் சுயநலம்

அவர்கள் அன்றிலிருந்து இன்றுவரை தேசியம் என்ற பாதையில் நடந்தாலும் தேசியத்தின் தலைமையாக தாங்கள் மட்டுமே இருக்கவேண்டும் என்று விரும்புகின்றனர். இதுவும் சுய நலமே
மக்கள் முன்னணி என்ற போர்வையில் மேமக்கள் தாங்கள் மட்டுமே என்ற வழியில் சென்றால் அடுத்த தேர்தலில் படுதோல்வி அடைவது உறுதி

இப்போதும் சர்வாதிகார போக்கில் செல்லும் கூட்டமைப்புக்கு கூட சரியான தலைமையின் கீழ் வளர்ச்சி  அடையும் சந்தர்ப்பம் உள்ளது
ஆனால் முன்னணி சரியான நேரத்தில் எடுக்கும் பிழையான முடிவுகளால் அழிந்தேவிடும்

இன்னும் காலம் கடந்துவிடவில்லை தெளிவான முடிவுகள் எடுத்து
இளையோர்களை அரவனைத்துச் செல்லும் பக்குவத்துடன் அடுத்த காலடியை எடுத்துவைக்கவேண்டும்

முன்னணி மக்கள்மயப்படுத்தப்படவேண்டுமென்றால் சுயநல அரசியலைத் தவிர்த்து பன்முக ஆழுமைகளைக் கொண்ட இளையோர்கள் உள்வாங்கப்பட்டு அவர்களை தேசிய அரசியலில் இணைக்க வேண்டும்..
முன்னணியில் பொறுப்புக்கள் பகிர்ந்தளிக்கப்பாடாதவரைக்கும்
அவர்களுக்கு இப்போது கிடைத்த வெற்றியை வெற்றியாகக் கொள்ளமுடியாது கஜேந்திரனும் கஜேந்திரகுமாருமே முன்னணி என்றால் அவர்கள் இருவரின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பது விரைவில் தெரியவரும்.

ரதி
மணிவண்ணனின் வாக்குவங்கியைக் கணக்கில் வைத்தே தேர்தல்வரைக்கும் அவரை வெளியேற்றவில்லை என்பது என் கணிப்பு
இதேபோக்கில் சென்றால் அடுத்து இப்போது மக்கள் முன்சென்று வளர்ந்துவரும் சுகாஸ் இவர்களது இலக்காக இருக்கும்
 
  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Elugnajiru said:

மணிவண்ணனுக்குப் பின்னால் திரிந்தவர்களில் ஆவாக்குழுவின் பிரசன்னாவின் அண்ணண், டக்ளசது பினாமியாகச் செயற்பட்டு யாழ் மாவட்டத்தில் பல சாராய பார்களை நடாத்தும் ஒருவரது எடுபிடிகள் மிகுதிப்பேர் இதை யாழில் வசிக்கும் அனைவருக்கும் தெரியும் இந்த ரெளடிக்கூட்டம்தான் இப்போ மணிவண்ணனைச் சுத்தித்திரியுது. மணிவண்ணனுக்கும் இது தெரியும் ஆனால் இதுகளாலதான் அவரது வருமானமும் இதுகளும் இதுகளுடன் தொடர்பில இருக்கிற அனைத்துக் களிசடைகளையும் நீதிமன்றத்தில் பிணை எடுக்கிறது என வருமானம் பார்கிறது மணிவண்ணந்தான். 

Criminal வழக்கறிஞர் தன்னுடைய தொழிலைச் செய்வதில் பிழை உண்டோ 🤔

  • கருத்துக்கள உறவுகள்

அதென்னவோ.. தெரியல்ல.. தமிழ் தேசியத்தில் என்ன நிகழ்ந்தாலும்.. பெரும் பூதாகாரமாக்கி.. குட்டையை குழப்புதல் நிகழுது.

இதே ஒட்டுக்குழுக்களுக்குள் நிகழ்ந்தால்.. எம்மவர்களும் சரி எதிரிகளும் சரி கப் சிப்.

இதில மைய வாதம்.. பக்க வாதம் என்று விளக்கங்கள் வேற. தமிழ் தேசிய உச்சரிப்பே.. வெறுப்பாய் இருந்தால்.. ஒரு குவளை தண்ணீரை அருந்துவிட்டு குப்பிறக் கிடக்கிறது. 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, வாத்தியார் said:

தமிழ் தேசிய மக்கள் முன்னணி என்ற அமைப்பும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு என்ற அமைப்பும்   இன்னும் பதிவு செய்யப்படாமல் இருப்பதும் ஒருவிதமான சுயநல அரசியலுக்குக்காவே என்பதை எல்லோரும் அறிவார்கள்

மணிவண்ணனை மக்கள் முன்னணி வெளியேற்றக் காரணம் என்ன என்பது உண்மையிலேயே இரு கஜன்களுக்குமே தெரிந்த உண்மை
அந்த உண்மையைப் பலராலும் புரிந்துகொள்ளமுடியவில்லை .சொன்னால்தானே தெரியும் .
பசப்பான காரணங்களை சொல்லித் தப்பிக்க முடியாது .மணிக்கும் விக்கியருக்கும் இடையிலும் ஒரு டீல் உள்ளது பலருக்கும் தெரியாது .
விக்கியர் அடுத்த தேர்தலில் இன்னும் பலம்பெறுவார் என்ற நம்பிக்கையும் இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்
எல்லாவற்றிற்கும் மேலாக முன்னணியில் வெளியாட்களுக்கு எதிர்காலம் நம்பிக்கையற்றதாக இருக்கின்றது .

வாரிசு அரசியலிலிருந்து முன்னணி வெளி வராவிட்டால் அவர்களுடைய எதிர்காலமும் கேள்விக்குறியாகும் .
2010  தேர்தலின் பின்னர் இதை உணரக்கூடியதாக இருந்தது .
முன்னணி தங்கள் அமைப்பில் புதியவர்களை உள்வாங்குவதற்கான சந்தர்ப்பத்தில் மிக அவதானமாக இருக்கின்றனர்
தங்களைவிட ஒருவரும் வளர்ந்துவிடக்கூடாது என்பதிலும் கவனமாக இருக்கின்றனர் 2010  இல் கூட முன்னாள் பா ஊ க்கள் ஒரு சிலரை அவர்கள் உள்வாங்கத் தயக்கம் காட்டினார் காரணம் சுயநலம்

அவர்கள் அன்றிலிருந்து இன்றுவரை தேசியம் என்ற பாதையில் நடந்தாலும் தேசியத்தின் தலைமையாக தாங்கள் மட்டுமே இருக்கவேண்டும் என்று விரும்புகின்றனர். இதுவும் சுய நலமே
மக்கள் முன்னணி என்ற போர்வையில் மேமக்கள் தாங்கள் மட்டுமே என்ற வழியில் சென்றால் அடுத்த தேர்தலில் படுதோல்வி அடைவது உறுதி

இப்போதும் சர்வாதிகார போக்கில் செல்லும் கூட்டமைப்புக்கு கூட சரியான தலைமையின் கீழ் வளர்ச்சி  அடையும் சந்தர்ப்பம் உள்ளது
ஆனால் முன்னணி சரியான நேரத்தில் எடுக்கும் பிழையான முடிவுகளால் அழிந்தேவிடும்

இன்னும் காலம் கடந்துவிடவில்லை தெளிவான முடிவுகள் எடுத்து
இளையோர்களை அரவனைத்துச் செல்லும் பக்குவத்துடன் அடுத்த காலடியை எடுத்துவைக்கவேண்டும்

முன்னணி மக்கள்மயப்படுத்தப்படவேண்டுமென்றால் சுயநல அரசியலைத் தவிர்த்து பன்முக ஆழுமைகளைக் கொண்ட இளையோர்கள் உள்வாங்கப்பட்டு அவர்களை தேசிய அரசியலில் இணைக்க வேண்டும்..
முன்னணியில் பொறுப்புக்கள் பகிர்ந்தளிக்கப்பாடாதவரைக்கும்
அவர்களுக்கு இப்போது கிடைத்த வெற்றியை வெற்றியாகக் கொள்ளமுடியாது கஜேந்திரனும் கஜேந்திரகுமாருமே முன்னணி என்றால் அவர்கள் இருவரின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பது விரைவில் தெரியவரும்.

ரதி
மணிவண்ணனின் வாக்குவங்கியைக் கணக்கில் வைத்தே தேர்தல்வரைக்கும் அவரை வெளியேற்றவில்லை என்பது என் கணிப்பு
இதேபோக்கில் சென்றால் அடுத்து இப்போது மக்கள் முன்சென்று வளர்ந்துவரும் சுகாஸ் இவர்களது இலக்காக இருக்கும்
 
வணக்கம் வாத்தியார் அண்ணா,

சிவியையும் முண்ணனியையும் இணைக்க இரு தரப்புக்கும் நெருக்கமான ஒரு அமெரிக்க தமிழ் தரப்பு முயன்று வெறுத்து போன கதை அவர்கள் வாயாலே கூற கேட்டுள்ளேன். 

100% கொள்கை ஒற்றுமை இருக்கும் போது ஒரு குறைந்த பட்ச திட்டத்தில், சேர்ந்து ஒரு அணியாக செயல்பட முடியவில்லை. காரணம் - சுரேஸ் இங்காலே இருந்து அங்காலே போனதால்🤦‍♂️.

ஆனானப்பட்ட புலிகளே, அத்தனை வெறியாட்டத்துக்கும் பின்னும் சுரேசை, செல்வதை மன்னித்து ஏற்றார்கள். இவர்களால் முடியாதாம். கட்சியிலா சேர்க சொல்கிறார்கள்? ஒரு கூட்டணியில்தானே? ஏதோ காதல் விடயம் மாரி இதை கஜன்ஸ் கையாள்கிறார்கள்.

ஆனால் மணி விடயத்தின் பின், ஒன்று தெளிவாக தெரிகிறது, கஜன்ஸ் சீவியுடன் சேர முடியாமைக்கு சுரேஸ் ஒரு நொண்டி சாட்டுத்தான். உண்மைகாரணம் தானே எல்லாமாகவும் இருக்க வேண்டும் எனும் கஜேந்திர குமாரின் “பொன்னம்பலப் புத்தி”. எப்படியும் அந்த கூட்டணியில் பெரிய கை சீவிதான். அதை கஜேந்திரகுமாரால் ஏற்க முடியவில்லை.

கஜேந்திரனின் தலைமைக்கு ஒரு போதும் சவாலாக வரமுடியாத கஜன் போன்றோரை வைத்தே அவர் கட்சியை நடத்த விழைகிறார்.

மணியை இப்போ அவசரமாக கழட்டி விட்ட காரணம் வரும் மாகாணசபை தேர்தல். 2 வது ஆசனம் தேசியபட்டியல் மூலம் வரும் என்பதை இவர்கள் எதிர்பார்க்கவில்லை. 

கஜேந்திரகுமா எம்பி ஆகினால், முதல்வர் வேட்பாளர்  கஜன் என்பதுதான் திட்டம். இப்போ இருவரும் எம்பி எனும் போது, அடுத்த வாய்ப்பு மணிக்கு. அது கஜேந்திரகுமாருக்கு ஆபத்து. ஏற்கனவே முண்ணனியை பதிய சொல்லி கேட்கிறார். வடமாகாண எதிர்கட்சி தலைவர் அல்லது கூட்டணியாக வடமாகாண  அரசில் பதவி என்றாகினால் முண்ணனிக்குள் மணி ஒரு மாற்று அதிகாரமையமாகுவார்.

அதற்காகவே மணி அகற்றப்பட்டு அங்கே சுகாஸ் கொண்டு வரப்படுகிறார்.

மணிக்கு என்ன சிக்கல் என்றால் - இப்போ சீவியிடம் போனால் - அங்கே ஏற்கனவே, சுரேஸ், சிவாஜி, அருந்தவபாலன், சிறீகாந்தா, சிவாஜி என்று ஒரு சீனியர் கூட்டம் இருக்கிறது. கூட்டமைப்பிடம் போனால்- சுமந்திரன் தேத்தண்ணி போடும் வேலைதானும் கொடார்😂. தனியே நிற்கவும் முடியாது.

ஈபிடிபி, மொட்டு, டெலிபோனில் சேர்ந்தால் credibility படுத்துவிடும்.

அதுதான் இத்தனை அவமானப்படுத்தியும். அலுவலுகத்தை பூட்டி வெளியே விட்டும் போக்கிடம் இல்லாமல் நிக்கிறார். ஆனால் முண்ணனியில் வாழ்கை இல்லை என்றான பின், எப்படியும் வேறு இடம் தேடித்தான் ஆக வேண்டும் அல்லது அரசியலுக்கு முழுக்கு போட வேண்டும். 

முண்ணனி- இவர்களை நிச்சயம் இலங்கை அரசு வெட்டியாடும். இவர்கள் பாராளுமன்றத்தில் பேசிவிட்டு, ஜெனிவாவில், வெளிநாட்டுக்கு வந்து தம் ஆதரவாளர் மத்தியில் பேசி, ஊரில் தமது வாக்கு வங்கியையும், வெளிநாட்டில் தம் போசகர்களையும் குசிபடுத்துவதை தவிர வேறு எதையும் செய்யபோவதில்லை.

5 வருட முடிவில், ஒரு நாடு இரு தேச திசையிலோ, போர்குற்ற விசாரணை திசையிலோ இவர்களால் ஒரு அங்குலம் கூட நகர்ந்திருக்க முடியாது. ஆனால் தீரமான சில பேச்சுகள் பேசி இருப்பர்.

அடுத்த தேர்தலில் இன்னொரு சீட்டை, கஜேந்திரகுமாருக்கு தக்க வைக்க அது போதுமாயிருக்கும்.

அவருக்கும் அது போதுமாயிருக்கும்.

கஜேந்திரகுமார் விசயம் தெரிந்த மனிதர். தான் செய்வது politics of protest என்பதும். தான் சொல்லும் இலக்கு அடையவே முடியாதது, ஆனால் அதை அடையும் வரை ஒரு ஆசனம் கரண்டி என்பதை நன்கே அறிந்து, அதற்காகவே மட்டும் செய்யபடும் அரசியல் முண்ணனியுடையது.

ஒன்றை யோசித்து பாருங்கள் -கூட்டமைப்பை ஒரு கட்சியாக பதிய தமிழரசு தடுக்கிறது என்று சொல்லி கதறியவர்கள்தான் கஜன்ஸ்🤣

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.