Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் தேசியத்திலிருந்து வழிமாறிச் செல்லாத முறைமையில் மக்களை வழிநடத்துவோம்; துரைராஜசிங்கம் நேர்காணல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் தேசியத்திலிருந்து வழிமாறிச் செல்லாத முறைமையில் மக்களை வழிநடத்துவோம்; துரைராஜசிங்கம் நேர்காணல்

August 24, 2020

thurai-1.png
 

மிழ் தேசியம் பேசப்பட வேண்டிய விடயம். மக்களுக்கு சில மாயைகள் ஊட்டப்பட்டிருக்கின்றன, தமிழ் தேசியம் மிகவும் முக்கியமானது. அந்த வகையிலே தமிழ் தேசியத்திலிருந்து மக்கள் வழிமாறிச் செல்லாத முறைமையில் மக்களை வழிநடத்துவோம் என, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும் கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கி.துரைராஜசிங்கம்; தினக்குரலுக்கு அளித்த நேர்காணலிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவரது நேர்காணல் வருமாறு;

கேள்வி :- நடந்து முடிந்த 2020, பாராளுமன்ற பொதுத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்ட நிலைமையினை எவ்வாறு பார்க்கின்றீர்கள் ?

 

பதில் :- தேர்தல் பிரசாரம் செய்தபோது மக்களின் வரவேற்பு ஆதரவு அமோகமாக இருந்தது. அந்த அடிப்படையிலேதான் நான்கு உறுப்பினர்களை பெறக்கூடியதாக இருக்கும் என்ற நம்பிக்கை இருந்தது, ஆனால் வாக்களிப்பு வீதமும் நன்றாக இருந்தது. வாக்கு எண்ணும் நிலையத்தில்தான், வாக்குச்சீட்டுக்களில் வாக்களித்த விதத்தை பார்க்கும்பொழுதுதான் ஏதோ நடந்திருக்கின்றது என்பது போல தெரிந்தது. அது எங்கு, எப்படி நடந்தது என்று எங்களுக்கு தெரியாது. இருந்தபொழுதிலும் கூட களத்தில் திடீரென்று மாற்றம் ஏற்பட்டது என்பது தொடர்பாக ஆராய வேண்டியிருக்கின்றது. நாங்கள் கூடுதலாக மக்களை அணுக வேண்டும். இப்பொழுது ஏற்பட்டிருக்கின்ற இந்த நிலைமையை விரைவில் மாற்றியமைக்கலாம். திடீரென்று ஏற்பட்ட மாற்றம் தொடர்பாக காரணங்களை ஆராய்ந்ததற்கு பிறகு முடிவு எடுப்போம்.

 

கேள்வி :- தேர்தலை தொடர்ந்து தமிழ் தேசிய கூட்டமைப்பு அபிவிருத்தி சார்ந்து செயற்படவுள்ளதாக அளவளாவப்படுகிறதே ?

பதில் :- மக்களின் தேவைகள் கருதி அபிவிருத்தி தொடர்பாக அக்கறை செலுத்துவோம். எங்களுடைய உரிமை தொடர்பான விடயங்கள் எப்பொழுதும் நிகழ்ச்சி நிரலிலே இருக்கும், எந்தவிதத்திலும் உரிமையை கைவிட்டு அபிவிருத்தி விடயத்திற்குள் போகமாட்டோம். மக்களுடைய மனதிலே ஏற்பட்டிருக்கின்ற மாற்றமா, மாயையா என்பது வெகு விரைவில் தெரியவரும். ஆகவே மக்கள் எங்களுடைய நிலைப்பாட்டை உணர்ந்து கொள்வார்கள் அல்லது தாங்கள் விட்டது தவறு என்பதை உணர்ந்துகொள்ளக்கூடிய காலம் விரைவில் வரும்.

 

கேள்வி :- கோட்டாபய அரசாங்கத்தில் சமஷ்டியை பெறுவதென்பது சாத்தியமில்லை தானே ?

பதில் :- எமது கட்சியினுடைய தொடக்ககால இலட்சியம் சமஷ்டி. 1976 களில் ஏற்பட்ட சூழ்நிலைக்கு நாங்கள் தனித் தமிழீழத்தை கோரியிருந்தோம். பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில் புலிகள் ஒஸ்லோ உடன்படிக்கையில் சமஷ்டி கட்டமைப்பை பரிசீலிப்பதாக கூறியிருந்தார்கள். இந்த நிலையிலே 2010 பிற்பட்ட காலப்பகுதியில் இடம்பெற்ற ஒவ்வொரு தேர்தல் விஞ்ஞாபனத்திலும் நாங்கள் ஒருமித்த நாட்டுக்குள் பிராந்தியங்களுக்கு அதி உச்சமான அதிகாரங்கள் வழங்கப்பட்ட சமஷ்டியை வலியுறுத்திக்கொண்டு வருகின்றோம்.

 

சமஷ்டி என்பது ஒரு நாட்டுக்குள்ளே அதிகாரங்களை பங்கீடு செய்கின்ற ஒரு செயற்பாடே அல்லாமல் பிரிவினை கிடையாது. தொடர்ச்சியாக சிங்கள மக்கள் மத்தியிலே சமஸ்டியை பிரிவினையென்று போதித்து வருகின்ற கபடத்தனமான செயற்பாடு இலங்கை நாட்டின் வளர்ச்சிக்கு எந்த விதத்திலும் உகந்ததல்ல. எந்த ஒரு சமஸ்டி நாடும் சீரழிந்து போனதாக வரலாறு கிடையாது. மாறாக பன்மைத்துவம் கொண்ட நாட்டிற்கு சமஷ்டிதான் சிறந்த அரசியல் திட்டம் என்பதனை அரசியல் திறனாய்வாளர்களும், நடைமுறையிலும் செய்துகாட்டப்பட்டுள்ளது.

 

ஆகவே வடக்கு கிழக்கை பிரித்துக்கொண்டு தனியாட்சி அமைப்பதற்கு சிங்கள மக்கள் ஒத்துழைக்கமாட்டார்கள், அதை நாங்கள் எதிர்ப்போம் என்று ஜனாதிபதியோ மஹிந்தவோ சொல்லுவது, முற்றிலும் சிங்கள மக்களை இருட்டிலே தள்ளிவிட்டு தமிழ்மக்கள் தொடர்பான பீதியை ஏற்படுத்தி ஒரு நியாயமற்ற முறையிலே நடந்துகொள்வது மிகவும் கண்டிக்கத்தக்கது. நாங்கள் சாத்வீக வழியைப் பின்பற்றுபவர்கள். ஜனநாயக முறையில் சமஷ்டியைப் பெறுதல் தொடர்பான விடயங்களை கையாண்டு கொண்டிருக்கின்றோம். நாங்கள் தொடர்ச்சியாக சமஷ்டியைத் தான் வலியுறுத்திக் கொண்டிருக்கின்றோம். சமஷ்டி பிரிவினை வாதமல்ல என இலங்கை உயர்நீதிமன்றமும் தீர்ப்பு வழங்கியிருக்கின்றது.

மாதுலுவெவ சோபித தேரர் தலைமையில் உருவாக்கப்பட்ட இயக்கம் உள்ளிட்ட பெரும்பான்மைத் தரப்பினரில் உள்ள நடுநிலைவாதிகளும் சமஷ்டி தொடர்பில் சாதகமான பார்வையை வைத்துள்ளனர். இந்நிலையிலே ஒரு சில பௌத்த துறவிகளினுடைய இத்தகைய கூற்றுக்கள் எங்களுடைய செயற்பாட்டை எவ்விதத்திலும் தடுக்க முடியாது.

கேள்வி :- வடக்கு கிழக்கில் தமிழ் தேசிய கூட்டமைப்பு எவ்வாறு பயணிக்கும் ?

பதில் :- உரிமையோடு கூடிய அரசியல் என்ற ரீதியிலே பயணிக்கும். அதே நேரத்தில் மக்களின் அன்றாட தேவைகள் தொடர்பிலே மக்களோடு மக்களாக நிற்க வேண்டும் என்ற விடயத்தினை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வலியுறுத்துவோம். பாராளுமன்ற அமர்வை அடுத்து நடைபெறுகின்ற பாராளுமன்ற குழுக்கூட்டத்திலே சொல்லப்பட்ட விடயங்களை மக்களுக்கு எடுத்துச் செல்வதும், மக்களோடு சேர்ந்து வேலைத்திட்டங்களை மேற்கொள்வதும் ஆகிய விடயங்களை பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்களது மாவட்டங்களுக்குச் சென்றதும் செய்விக்கக்கூடிய செயற்திட்டங்களை ஏற்படுத்துவோம்.

கேள்வி :- கடந்த எழுபது வருட காலமாக உரிமை கிடைக்காத நிலையில் கூட்டமைப்பு பேரம் பேசும் அரசியலை ஏன் செய்யக்கூடாது ?

பதில் :- உரிமைப் போராட்ட வரலாறுகளை வாசித்தறியாதவர்கள் வெறும் கால எண்ணிக்கையைக் காட்டி விடுதலை முயற்சியை முறியடிக்க நினைப்பது ஒரு அறியாமையாகும். எழுபது வருட கால எமது போராட்டம் இல்லாதிருந்திருந்தால் புத்தளம், சிலாபம், நீர்கொழும்பு, காலி, கதிர்காமம் போன்ற இடங்களிலே வாழ்ந்த தமிழர்கள் எவ்வாறு அடையாளமற்றுப் போனார்களோ அவ்விதமே வடகிழக்குத் தமிழர்களும் அடையாளத்தை இழந்திருப்பார்கள். இந்நிலையில் எமது போராட்டம் முழுமையாக வெற்றியடையவில்லை என்பதற்காக நாங்கள் எதையும் சாதிக்கவில்லை என்று சொல்வது மதிப்பீட்டாளர்களின் குறைபாட்டையே காட்டுகின்றது.

எமது மொழியுரிமையைப் பாதுகாத்துள்ளோம், குடியேற்றங்களைத் தடுத்துள்ளோம், நிருவாகத்திலே சிங்கள பௌத்த ஆதிக்கத்தை இயன்றவரையிலே தடுத்திருக்கின்றோம், நீதிமன்ற மொழியாக வடகிழக்கிலே தமிழை செயற்பட வைத்துள்ளோம், தமிழர் பிரதிநிதிகளை மக்கள் தொடர்ச்சியாகப் பாராளுமன்றம் உள்ளுராட்சி மன்றங்களுக்குத் தெரிவு செய்யும் நிலையைத் தக்கவைத்துள்ளோம். இந்நிலையிலே, அடைவுகள் எதுவும் அற்ற விதத்திலே எமது உரிமை சார் செயற்பாடு வலுவிழந்துள்ளதாகக் குறிப்பிடுவதிலே எந்தவித அர்த்தமும் இல்லை. பேரம்பேசுதல் என்பது உரிமை சார் செயற்பாட்டில் இடம்பெறக் கூடாத ஒரு அம்சமாகும். நாங்கள் எந்த விடயத்தையும் உரிமை அடிப்படையிலேதான் பெற்றுக் கொள்வோமே தவிர உரிமையை அடகு வைத்து பேரம் பேசுவதற்கு எம்மை வழிப்படுத்த மாட்டோம்.

கேள்வி :- தமிழ்த்தேசியம் பேசுவதனால் அனைத்தையும் சாதிக்க முடியுமா ?

பதில் :- தமிழ் தேசியம்தான் பேசப்பட வேண்டிய விடயம். மக்களுக்கு சில மாயைகள் ஊட்டப்பட்டிருக்கின்றன, தமிழ் தேசியம் மிகவும் முக்கியமானது. அந்த வகையிலே தமிழ் தேசியத்திலிருந்து மக்கள் வழிமாறிச் செல்லாத முறைமையில் மக்களை வழிநடத்துவோம்.

கேள்வி :- கூட்டமைப்பின் அரசியல் கருத்துக்களும் அறிக்கைகளுமே தவிர செயலளவில் எதுவுமில்லை என மக்கள் மத்தியில் அளவளாவப்படுகிறதே ?

பதில் :- அவ்வாறு நிலவுகின்ற விடயமே மாயை. திடீரென ஏற்பட்ட நெருக்குவாரங்கள் இல்லாத நிலைமை. நெருக்குவாரங்கள் இல்லை என்றதும் தனியே வாழ்வாதாரம் மட்டும்தான் என்ற அடிப்படையில் மக்கள் செல்கிறார்கள். விடுதலையை நோக்கி செல்லுகின்ற மக்களுக்கு இவ்வாறான சவால்கள் வரலாற்றில் எல்லா இடங்களிலும் காணப்படுகின்றது. அந்த வரலாற்றுப் பாடங்களை எங்களுடைய மக்களுக்கு சொல்ல வேண்டியவர்களாக இருக்கின்றோம். உலக நாடுகளிலே தங்களது விடுதலைக்காக போராடிக்கொண்டிருந்த எல்லா இனங்களுக்கும் இவ்வாறான சோதனைகள் ஏற்பட்டிருக்கின்றன. அவ்வாறான சோதனைகளில் ஒன்றாக இவ்விடயம் அமைகிறது. இந்த விடயம் மக்களுக்கு தெளிவுபடுத்தப்படும், அரசாங்கத்தின் நடைமுறைகள் மக்களை சிந்திக்க வைக்கும்.

கேள்வி :- மாகாண சபையில் மொட்டும் படகுமே ஆட்சியமைக்கவுள்ளதாக கூறப்படுகிறதே ?

பதில் :- ஒவ்வொருவரும் ஒவ்வொரு குறிப்பிட்ட காலங்களில் திட்டங்களை வைத்துக் கொள்வது வழக்கம்தான். அந்த வகையிலே இப்பொழுது ஏற்பட்ட வெற்றி பெருமிதத்திலே அவ்வாறு கூறிக்கொண்டு இருக்கின்றார்கள். நாங்கள் அதற்கேற்ற விதத்திலே வியூகங்களை அமைப்போம்.

கேள்வி :- அம்பாறை மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் இருப்பு எதிர்வரும் காலங்களில் பாதுகாக்கப்படுமா ?

பதில் :- கூட்டமைப்பின் தேசிய பட்டியல் நிலைமை இப்பொழுது சரிசெய்யப்பட்டுள்ளது. சரிசெய்யும் முகமாக தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக த.கலையரசனை அம்பாறையில் நியமித்திருக்கின்றோம். அதே நேரத்தில் அம்பாறையில் கருணாவுக்கு பின்னால் அணிதிரண்டவர்கள் கலையரசனுக்கு பின்னால் வரத்தொடங்கியிருக்கின்றார்கள். இந்த மாற்றத்தை முறையாக ஒருமுக வழிநடத்தி தேசியத்தின் பால் நடப்பதற்கேற்பவான வழிவகைகளை செய்வோம்.

கேள்வி :- இலங்கை தமிழ் அரசுக்கட்சியின் தலைவர் மற்றும் பொதுச்செயலாளர் தோற்கடிக்கப்பட வேண்டும் என கூட்டமைப்பினர் எதிர்பார்த்ததாக கூறப்படுகிறதே ?

பதில் :- தோல்வி என்பது ஒரு காலமும் நிகழாத சம்பவமல்ல. அந்த வகையிலே எங்களுக்கு தோல்வி கிடைத்திருக்கின்றது, எந்தெந்த பார்வையிலே அந்த தோல்வி கிடைத்திருக்கின்றது என்கின்ற விடயம் தொடர்பாக ஆராயவுள்ளோம். வடக்கிலே தலைவர் மற்றும் கிழக்கிலே பொதுச்செயலாளர் தோற்றதற்கு என்ன மூல காரணங்கள் என்று ஆராய்ந்து அதற்கேற்ற விதத்திலே எங்களுடைய செயற்பாடுகளை முன்னெடுப்போம்.

கேள்வி :- தேர்தலையடுத்து மட்டக்களப்பு மாவட்ட தமிழ் மக்களுக்கு கூற விழைவது ?

பதில் :- இப்பொழுது ஏற்பட்டிருக்கின்ற ஆசன எண்ணிக்கை தொடர்பான நிலைமையிலே மக்கள் குழம்பிய நிலையில் காணப்படுகின்றார்கள். அபிவிருத்தி தொடர்பாக அதிக அக்கறை இருக்கின்றதென்பதும் எங்களுக்கு தெரிகின்றது, ஆனால் தமிழ் தேசியத்தை விட்டு அபிவிருத்திற்குள் செல்வது                    தமிழ் மக்களின் அழிவுக்கான முதற்படி என்பதை மக்கள் விளங்கிக்கொள்ள வேண்டும். அந்த விடயத்தை மக்களுக்கு கட்சி சார்பில் நாங்கள் தெளிவூட்டுவோம்.

நேர்காணல் : பா.மோகனதாஸ்
 

 

http://thinakkural.lk/article/64229

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, கிருபன் said:

அவ்வாறு நிலவுகின்ற விடயமே மாயை. திடீரென ஏற்பட்ட நெருக்குவாரங்கள் இல்லாத நிலைமை. நெருக்குவாரங்கள் இல்லை என்றதும் தனியே வாழ்வாதாரம் மட்டும்தான் என்ற அடிப்படையில் மக்கள் செல்கிறார்கள். விடுதலையை நோக்கி செல்லுகின்ற மக்களுக்கு இவ்வாறான சவால்கள் வரலாற்றில் எல்லா இடங்களிலும் காணப்படுகின்றது.

கூத்தமைப்பு கூத்தமைப்புதான் 
கொஞ்சம் விட்டால் இந்த ஆளே தங்கள் வெல்லவேண்டுமென்று  கொழும்பிற்கு போய் ராணுவத்தை கூட்டிவந்து, நெருக்குவாரங்களுக்கு துணை போவார் போல இருக்கே, உங்கள் கலையரசானால் சும்மா பாராளுமன்றத்திலிருந்து கூவுவதை தவிர ஒன்றுமே புடுங்க முடியாது, இம் முறை மஹிந்த கோத்தா கொடுக்கும் ட்ரீட்மெண்ட்டில்  வடமாகாணமும் திருந்தும்  

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கேள்விகள் மழப்பான பதில்கள்.எப்படியோ தேர்தல் முடிவு கொஞ்சமாவது சிந்திக்க வைத்திருக்குது.பார்ப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, அக்னியஷ்த்ரா said:

கூத்தமைப்பு கூத்தமைப்புதான் 
கொஞ்சம் விட்டால் இந்த ஆளே தங்கள் வெல்லவேண்டுமென்று  கொழும்பிற்கு போய் ராணுவத்தை கூட்டிவந்து, நெருக்குவாரங்களுக்கு துணை போவார் போல இருக்கே, உங்கள் கலையரசானால் சும்மா பாராளுமன்றத்திலிருந்து கூவுவதை தவிர ஒன்றுமே புடுங்க முடியாது, இம் முறை மஹிந்த கோத்தா கொடுக்கும் ட்ரீட்மெண்ட்டில்  வடமாகாணமும் திருந்தும்  

அடேய் இந்த ஆளையும் கழட்டி விட போறாங்கள் என்ற்ய் செய்தி உள்ளால அடிபடுது 

பேச்சும் எடுபடாது பேட்டியும் எடுபடாது 

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 25/8/2020 at 17:56, தனிக்காட்டு ராஜா said:

அடேய் இந்த ஆளையும் கழட்டி விட போறாங்கள் என்ற்ய் செய்தி உள்ளால அடிபடுது 

பேச்சும் எடுபடாது பேட்டியும் எடுபடாது 

கழட்டியே விட்டார்கள். கரி நாக்கு முனி உங்களுக்கு🤣

  • கருத்துக்கள உறவுகள்
On 11/9/2020 at 22:58, goshan_che said:

கழட்டியே விட்டார்கள். கரி நாக்கு முனி உங்களுக்கு🤣

நமக்கு உள்வீட்டு விவகாரங்கள் கொஞ்சம் காதுக்கு வரும் 😊

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.