Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பண்டாரவன்னியனின் 217வது நினைவு தினம் அனுஷ்டிப்பு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பண்டாரவன்னியனின் 217வது நினைவு தினம் அனுஷ்டிப்பு!

DSC01174-720x450-1.jpg?189db0&189db0

வன்னி இராட்சியத்தின் இறுதி மன்னன் பண்டாரவன்னியனின் 217வது நினைவு தினம் இன்று (25) வவுனியாவில் அனுஷ்டிக்கப்பட்டது.

வவுனியா நகர எபை மற்றும் விழாக் குழுவின் ஏற்பாட்டில் நகரசபை தலைவர் இ.கௌதமன் தலைமையில் இந்த நிகழ்வுகள் நடைபெற்றது.

இரு நிகழ்வுகளாக ஏற்பாடுசெய்யப்பட்ட குறித்த நிகழ்வுகள் காலை 8.15 மணிக்கு வவுனியா மாவட்ட செயலக முன்றலில் அமைந்துள்ள பண்டாரவன்னியனின் நினைவுத்தூபிக்கு ஜனாதிபதி சட்டத்தரணி மு.சிற்றம்பலம் மலர் மாலை அணிவித்து மலர்தூவி அஞ்சலி செலுத்தினார், அதனைத்தொடர்ந்து நகரசபை உறுப்பினர்கள், பொது அமைப்பினரும் சிலைக்கு மாலை அணிவித்து,மலரஞ்சலியும் செலுத்தினர்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பண்டாரவன்னியனின் நினைவு தினம் யாழிலும் அனுஷ்டிப்பு!

IMG-8788-960x720.jpg?189db0&189db0

பண்டாரவன்னியனின் 217வது நினைவு தினம் இன்று (25) யாழ்ப்பாணத்தில் அனுஷ்டிக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகில் உள்ள அம்மன்னனின் உருவச் சிலை முன்னால் தமிழ் தேசிய கட்சியால இந்நிகழ்வு அனுஷ்டிக்கப்பட்டது.

இதன்போது அங்குள்ள உருவச்சிலைக்கு முன்பாக அம்மன்னனின் உருவப்படம் வைக்கப்பட்டு, அதற்கும் உருவச் சிலைக்கும் மாலை அணிவித்து, மலர்களை தூவியும் அஞ்சலி செலுத்தப்பட்டது.

  • கருத்துக்கள உறவுகள்

அட, நம்மட வன்னி பண்டார 🤣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, goshan_che said:

அட, நம்மட வன்னி பண்டார 🤣

பள்ளிக்கூடத்திலை படிச்ச வரலாறுகளே பொய்யாப்போச்சுது. அடுத்தது தமிழினமே பொய் எண்ட வரலாறுதான் 🙃

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

பள்ளிக்கூடத்திலை படிச்ச வரலாறுகளே பொய்யாப்போச்சுது. அடுத்தது தமிழினமே பொய் எண்ட வரலாறுதான் 🙃

பல சோம்பேறித்தனமான வாரலாறுகள் என்பதையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
பண்டாரவன்னியன் எப்போது எங்கே இறந்தான் என்பது இப்போதும் உறுதியாக இல்லை 
கண்டியில் ஒரு சுற்றிவளைப்பில் போரிட்டு மரித்தான் என்று ப்ரிரிடிஸ் காரரின் 
எழுத்தில் இருப்பதே எமக்கு இருக்கும் ஒரே ஆதாரம். 

எமது பாட புத்தகத்த்தில் இருப்பது தவறானது 
பிரிட்டிஸ்காரன் பாண்டரவணியனுக்கு வைத்த கல்லிலில் தெளிவாக இருக்கிறது 
அவனை வென்ற திகதி என்பது ..... பண்டாரவன்னியன் உண்மையில் அதில் கொல்லபடவில்லை.
அவனது படையை மூன்று திசைகளில் இருந்து வந்து சுற்றிவளைத்து தாக்குதல் செய்து 
வெற்றிகொண்டு ... பண்டாரவன்னியன் அவர்களின் முல்லைத்தீவு கோடடையில் கைப்பற்றிய 
பீரங்கிகளை தாம் மீண்டும் கைப்பற்றியதாகவும்  சில குழுக்களுடன் பண்டாரவாணியன் 
பின்வாங்கி தப்பித்து கொண்டதாகவும் அவர்கள் தெளிவாக எழுதி வைத்திருக்கிறார்கள். 

இவர்கள் இந்த இடத்தில் பண்டாரவாணியன் இறந்தான் என்று எமக்கு கற்று தந்துகொண்டு இருகிறார்கள் 

Pandara Vanniyan - Alchetron, The Free Social Encyclopedia

பண்டாரவாணியன்தான் இலங்கையில் ஆடசியில் இருந்த இறுதி சோழ மன்னன் 
இதோடு சோழ ராஜ்ஜியம் முடிவுக்கு வருகிறது 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, goshan_che said:

அட, நம்மட வன்னி பண்டார 🤣

இவர்கள் வன்னிய குலத்தை சார்ந்த சோழர்கள் 
வீர பாண்டியனின் வீழ்ச்சியோடு பாண்டி நாட்டில் சிற்றரசர்களாக 
இருந்து பின்பு (ஆதித்ய சோழன்) சோழ அரசுடன் இணைந்தவர்கள் 
தமிழகத்திலும் இவர்களின் பெயரில் பண்டார  பாண்டியாரா  பாண்டியா 
என்ற பெயர்கள் இருந்து இருக்கிறது. இவர்கள் சிற்றூர் கொடிகளில் பின்பும் 
பெருமையோடு மீன் இருக்குமாம்.  
 
  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, Maruthankerny said:

இவர்கள் வன்னிய குலத்தை சார்ந்த சோழர்கள் 
வீர பாண்டியனின் வீழ்ச்சியோடு பாண்டி நாட்டில் சிற்றரசர்களாக 
இருந்து பின்பு (ஆதித்ய சோழன்) சோழ அரசுடன் இணைந்தவர்கள் 
தமிழகத்திலும் இவர்களின் பெயரில் பண்டார  பாண்டியாரா  பாண்டியா 
என்ற பெயர்கள் இருந்து இருக்கிறது. இவர்கள் சிற்றூர் கொடிகளில் பின்பும் 
பெருமையோடு மீன் இருக்குமாம்.  
 
ஓம் ஆனால் இவரை சிங்கள மயப்படுத்தும் வேலைகள் இப்போ தொடங்கி விட்டது. இன்னும் கொஞ்ச காலத்தில் சங்கிலியனே, சங்கிலிய பரராஜசேகர ஆகப்போறார்.

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, goshan_che said:

ஓம் ஆனால் இவரை சிங்கள மயப்படுத்தும் வேலைகள் இப்போ தொடங்கி விட்டது. இன்னும் கொஞ்ச காலத்தில் சங்கிலியனே, சங்கிலிய பரராஜசேகர ஆகப்போறார்.

உண்மையில் இவர் சிங்களவருடன் நிறைய தொடர்பு கொண்டவர்தான் 
போர்த்துக்கீசரை அடித்து விராட்ட வேண்டும் என்ற எண்ணம் சிங்கள தமிழ் 
இருவரிடமும் பொதுவாக இருந்து இருக்கலாம் என்பது காரணமாக இருக்கலாம்.

இவர் வன்னியில் இருந்து தப்பி கண்டி போனது சிங்கள அரசர்கள் உதவியுடன்தான் 

முல்லைத்தீவு கோடடையை சிங்கள மன்னர்களுடன் சேர்ந்து அவர்கள் படைகளையும் 
பாதுகாப்பில் வைத்து கொண்டுதான் தாக்குதல் செய்து வென்று இருக்கிறார்கள் 
இரண்டு நாளிலேயே ஆனையிறவு வரை கைப்பற்றுவது என்பது எண்ணிப்பார்க்க முடியாத வெற்றி 
அந்த காலத்தில் செய்தார்கள் என்றால் அது சிங்கள தமிழ் மன்னர்கள் இணைந்து செய்தது என்பதுதான் உண்மை 
 
  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Maruthankerny said:

அது மட்டும் இல்லை. தற்போதைய அனுராதபுர மாவட்டத்தில் முன்னர், 400 தமிழ் கிராமங்கள் இருந்தன. ஆகவே வன்னியர்களில் ஒரு சாரர் இரெண்டு பக்கமும் திருமணம் முடித்த ஒரு bilingual சமுதாயமாக இருந்திருக்க கூடும்.

இலங்கையின் பல மன்னர்கள் இப்படி dual heritage தான் ஆனால் எல்லாவற்றையும் தனியே சிங்கள மயபடுத்தியது போல் விரைவில் இவருக்கும் நடக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

அது மட்டும் இல்லை. தற்போதைய அனுராதபுர மாவட்டத்தில் முன்னர், 400 தமிழ் கிராமங்கள் இருந்தன. ஆகவே வன்னியர்களில் ஒரு சாரர் இரெண்டு பக்கமும் திருமணம் முடித்த ஒரு bilingual சமுதாயமாக இருந்திருக்க கூடும்.

பணடரவன்னியன் தங்கை மணம் முடித்தது சிங்கள மன்னனின் மகனை 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
45 minutes ago, Maruthankerny said:

32 minutes ago, goshan_che said:

காக்கைவன்னியனைப்பற்றியும் ஏதாவது சொல்லுங்கப்பா....😄

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, குமாரசாமி said:

காக்கைவன்னியனைப்பற்றியும் ஏதாவது சொல்லுங்கப்பா....😄

எங்களையே வச்சுகொள்ளட்டாம் இலவசமா தந்தாலும் வேண்டாமாம், அவர் தமது இனத்தை விட எமது இனத்துக்கே பொருத்தமானவராம்🤣

2 hours ago, Maruthankerny said:

பல சோம்பேறித்தனமான வாரலாறுகள் என்பதையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
பண்டாரவன்னியன் எப்போது எங்கே இறந்தான் என்பது இப்போதும் உறுதியாக இல்லை 
கண்டியில் ஒரு சுற்றிவளைப்பில் போரிட்டு மரித்தான் என்று ப்ரிரிடிஸ் காரரின் 
எழுத்தில் இருப்பதே எமக்கு இருக்கும் ஒரே ஆதாரம். 

எமது பாட புத்தகத்த்தில் இருப்பது தவறானது 
பிரிட்டிஸ்காரன் பாண்டரவணியனுக்கு வைத்த கல்லிலில் தெளிவாக இருக்கிறது 
அவனை வென்ற திகதி என்பது ..... பண்டாரவன்னியன் உண்மையில் அதில் கொல்லபடவில்லை.
அவனது படையை மூன்று திசைகளில் இருந்து வந்து சுற்றிவளைத்து தாக்குதல் செய்து 
வெற்றிகொண்டு ... பண்டாரவன்னியன் அவர்களின் முல்லைத்தீவு கோடடையில் கைப்பற்றிய 
பீரங்கிகளை தாம் மீண்டும் கைப்பற்றியதாகவும்  சில குழுக்களுடன் பண்டாரவாணியன் 
பின்வாங்கி தப்பித்து கொண்டதாகவும் அவர்கள் தெளிவாக எழுதி வைத்திருக்கிறார்கள். 

இவர்கள் இந்த இடத்தில் பண்டாரவாணியன் இறந்தான் என்று எமக்கு கற்று தந்துகொண்டு இருகிறார்கள் 

Pandara Vanniyan - Alchetron, The Free Social Encyclopedia

பண்டாரவாணியன்தான் இலங்கையில் ஆடசியில் இருந்த இறுதி சோழ மன்னன் 
இதோடு சோழ ராஜ்ஜியம் முடிவுக்கு வருகிறது 

இதை 2009 இல் ஆமி உடைத்து பின் மீள நிறுவிய ஞாபகம். 

இது பழைய கல்லா? புதிய கல்லா?

பழைய கல்லை என்னவென்றே விளங்கியும் விளங்காத வயதில் போய் பார்துள்ளேன்.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 minute ago, goshan_che said:

எங்களையே வச்சுகொள்ளட்டாம் இலவசமா தந்தாலும் வேண்டாமாம், அவர் தமது இனத்தை விட எமது இனத்துக்கே பொருத்தமானவராம்🤣

எட.....அதுவே விசயம்...
என்னடா எங்களுக்கை ஒரே காக்கைவன்னியன் வம்சமும் வாரிசுகளும் கூடிப்போச்சுதே எண்டு பாத்தன்😂

  • கருத்துக்கள உறவுகள்

இதையும் ஒரு எட்டு போய் பாருங்கள்

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

காக்கைவன்னியனைப்பற்றியும் ஏதாவது சொல்லுங்கப்பா....😄

க வில் பெயர் தொடங்குதெல்லோ?
பெண் பிரச்சனைதான்.

பண்டாரவன்னியன் தங்கை நல்லநாச்சாளை மணம் முடிக்க 
ஒற்றை காலில் நின்றார். ஆனால் நல்ல நாச்சியார் ஒரு சிங்கள சிற்ரசரின்  
மகன் இவருக்கு ஓவிய கலைகளை கற்றுக்கொடுக்க வந்தபோது இருவருக்கும் 
காதல் ஆகி போகிறது. 
பண்டாரவன்னியன் காக்கைவன்னியன் பெண்கேட்டு வந்தபோது மறுத்துவிட்டார் 
தனது தங்கை விரும்பியதுபோலவே அந்த சிங்கள அரசரின் மகனை மனம் முடித்து கொடுக்கிறார். 

போர்த்துக்கீசரும் பிரிட்டிஸ்காரரும் சேர்ந்து பண்டாரவன்னியனை வீழ்த்த திடடம் 
வகுத்த போது கற்சிலைமடுவில்தான் இவர்கள் கோடடை உங்களிடம் எடுத்த பீரங்கி எல்லாம் 
அங்குதான் வைத்திருக்கிறார்கள் என்று போட்டு கொடுத்துவிடுகிறார். 
அதுக்கு முன்பும் பலமுறை பிரிடிஷ் காரருடன் சேர்ந்து பண்டாரவன்னியனை போட முயற்சி செய்து 
கைகூடவில்லை அவர் வெட்டி வீழ்த்திவிட்டு தப்பி விடுவார். 
அவர்கள் மன்னார் திருகோணமலை யாழ்ப்பாணம் என்று மூன்று பக்கத்திலும் இருந்து மும்முனை தாக்குதல் 
லெப். வோன் டிறிபேர்க் தலைமையில் செய்து கற்சிலைமடுவை கைப்பற்றி  ... பண்டாரவாணியனிடம் இருந்த பீரங்கிகளையும்  கைப்பற்றினார்கள்.
அப்போதும் பண்டாரவன்னியன் சிலருடன் தப்பி தனது மனைவி ஊருக்கு சென்றுவிடுகிறார். 
பின்பு கண்டியிலும் ஒரு காட்டிகொடுப்பால் சுற்றிவளைப்புக்குள் சிக்கி காயங்களுடன் தப்பித்தாலும் 
அந்த காயங்கள் காரணமாக பின்பு 1810 செப்ட்ம்பர் அளவில் இறந்ததாக பிரிடிஷ் காரர்கள் பதிந்து வைத்திருக்கிறார்கள். 

அது போர்த்துகீசர் அல்ல ஒல்லாந்தர் 
நான் அவசரத்தில் எழுதிவிட்டேன் சண்டைக்கு வராதீர்கள் 

  • கருத்துக்கள உறவுகள்

117610171_201064284778120_8068669098454378679_n.jpg?_nc_cat=103&_nc_sid=8bfeb9&_nc_ohc=_AYPzA3wCakAX_wv70i&_nc_ht=scontent.ffcm1-1.fna&oh=6b00317b5bb3de854af9dceffb187e82&oe=5F6B9EC7

  • கருத்துக்கள உறவுகள்

117968323_201064458111436_5325998399576778321_n.jpg?_nc_cat=103&_nc_sid=8bfeb9&_nc_ohc=NLsk39I_mUgAX-FOlaZ&_nc_ht=scontent.ffcm1-1.fna&oh=0347d3ecd739404c4fd2530613d25cf6&oe=5F6CDBF1

118196295_201064478111434_4664172079755120939_n.jpg?_nc_cat=108&_nc_sid=8bfeb9&_nc_ohc=8ecbainLNssAX-5f8ol&_nc_ht=scontent.ffcm1-2.fna&oh=bba5c4ad859406a1e1a722c4d9bc1638&oe=5F6A4BAD

118123480_201064558111426_8025815749699471545_n.jpg?_nc_cat=108&_nc_sid=8bfeb9&_nc_ohc=ABZDXN7tAV0AX9ErlQN&_nc_ht=scontent.ffcm1-2.fna&oh=b71aad651e20b2f28b057e5f4a194000&oe=5F6D1A61

  • கருத்துக்கள உறவுகள்

117718527_201064794778069_2875712310729334993_n.jpg?_nc_cat=103&_nc_sid=8bfeb9&_nc_ohc=RJPGmKTkB_0AX9be2j1&_nc_ht=scontent.ffcm1-1.fna&oh=c14c1bc79a2b738525de5ac2943feb30&oe=5F69C7B2

118150911_201064811444734_8177988525190689923_n.jpg?_nc_cat=108&_nc_sid=8bfeb9&_nc_ohc=8--5i-9mUv4AX-8FwYH&_nc_ht=scontent.ffcm1-2.fna&oh=909e905cc8747bab4ac0e63521974885&oe=5F6A63AD

117641703_201064848111397_1685323253062868536_n.jpg?_nc_cat=106&_nc_sid=8bfeb9&_nc_ohc=CGdx6nrA-rMAX_DKyiY&_nc_ht=scontent.ffcm1-2.fna&oh=52891588da89196ad2df0906196a6e1b&oe=5F6998C2

117901142_201064931444722_8179061787851587582_n.jpg?_nc_cat=105&_nc_sid=8bfeb9&_nc_ohc=qK31R4L_y1QAX-JvPFr&_nc_ht=scontent.ffcm1-1.fna&oh=19da1fe4e2f5a08f72bd4e947520ca90&oe=5F6A6073

118083143_201065038111378_5444084723948641869_n.jpg?_nc_cat=102&_nc_sid=8bfeb9&_nc_ohc=dk2kkCwypAcAX9-ecQm&_nc_ht=scontent.ffcm1-2.fna&oh=aab56f353bdedfcbfab04df933dd8d60&oe=5F6D6040

  • கருத்துக்கள உறவுகள்

117870049_201065324778016_4168014024295285933_n.jpg?_nc_cat=109&_nc_sid=8bfeb9&_nc_ohc=GOlZYY780tkAX8sBjaJ&_nc_ht=scontent.ffcm1-1.fna&oh=396c1ca195901400927ab3018e2fae4f&oe=5F6D40B1

118012522_201065364778012_1710653422282870333_n.jpg?_nc_cat=109&_nc_sid=8bfeb9&_nc_ohc=2annGAHp6KkAX9IPtru&_nc_ht=scontent.ffcm1-1.fna&oh=a2d9bb35e6685cea6b5c4f62747af8ad&oe=5F6D5ADC

  • கருத்துக்கள உறவுகள்

      70 களில் கோப்பாய் கிறீஸ்தவ கல்லூரியில் சீன கம்யூனிஸ்ட் தோழர்களால் பண்டாரவன்னியன் நாடகம் போடப்பட்ட போது நானும் ஓரிரு நிமிட பாத்திரமேற்று நடித்திருந்தேன்.
      இப்போது எண்ணவும் சிரிப்பாக இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

118192174_201065678111314_3444831743631282040_n.jpg?_nc_cat=111&_nc_sid=8bfeb9&_nc_ohc=uSTq76RFUrQAX8z8OJA&_nc_ht=scontent.ffcm1-1.fna&oh=a6eea559ac546e6359340d65b4ed049b&oe=5F6BD61C

117963838_201065721444643_4238742468041675930_n.jpg?_nc_cat=101&_nc_sid=8bfeb9&_nc_ohc=jAK1_xA3IJgAX-KjFkF&_nc_ht=scontent.ffcm1-2.fna&oh=35df9e7066addce20c1ab55e41103699&oe=5F69BE09

117946546_201065784777970_6228521563341727000_n.jpg?_nc_cat=102&_nc_sid=8bfeb9&_nc_ohc=ATOwR372mtIAX8G2Q4K&_nc_ht=scontent.ffcm1-2.fna&oh=fb40de450124899cc6f4d94d786d0382&oe=5F69ED23

  • கருத்துக்கள உறவுகள்

118282954_201066171444598_774100223044343110_n.jpg?_nc_cat=101&_nc_sid=8bfeb9&_nc_ohc=29CEap2PrdkAX-rcxmB&_nc_ht=scontent.ffcm1-2.fna&oh=d2c6b18e94c8e0485b0717e772704763&oe=5F6A232D

117954445_201066258111256_5719917925994673204_n.jpg?_nc_cat=111&_nc_sid=8bfeb9&_nc_ohc=wEFEthGcFmQAX_Qfyww&_nc_ht=scontent.ffcm1-1.fna&oh=5fc5074cee094c75ec65363785aaadf5&oe=5F6A3F1C

  • கருத்துக்கள உறவுகள்

பொழுதுபோகாவிடில் வாசியுங்கள் 
ஒல்லாந்தர் காலத்து இலங்கையில் தமிழர்கள் ஆதிக்கம்  எங்குவரை 
இருந்தது என்பது தெரியும் 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Maruthankerny said:

பொழுதுபோகாவிடில் வாசியுங்கள் 
ஒல்லாந்தர் காலத்து இலங்கையில் தமிழர்கள் ஆதிக்கம்  எங்குவரை 
இருந்தது என்பது தெரியும் 

அற்புதம் மருதர்,

பொழுதை உருவாக்கி வாசிக்க வேண்டிய விடயம்.

4 hours ago, ஈழப்பிரியன் said:

      70 களில் கோப்பாய் கிறீஸ்தவ கல்லூரியில் சீன கம்யூனிஸ்ட் தோழர்களால் பண்டாரவன்னியன் நாடகம் போடப்பட்ட போது நானும் ஓரிரு நிமிட பாத்திரமேற்று நடித்திருந்தேன்.
      இப்போது எண்ணவும் சிரிப்பாக இருக்கிறது.

அப்போ ஜெயசிக்குரு எதிர் சமர் காலம்- நாங்களும் ஒரு பண்டாரவன்னியன் நாடகம் போட்டோம் - எல்லா வசனங்களுமே இரு அர்த்தம் பொதிந்து இருக்கும். கூட்டத்தில் செம ரெஸ்பான்ஸ்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.