Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்பாணத் தமிழர் தெலுங்கு வந்தேறிகளே - ஆய்வாளர்

Featured Replies

18 minutes ago, Nathamuni said:

நானும் வைகோவில் மிக பெரிய மதிப்பு வைத்திருந்தேன். அவர் அடுத்த தமிழக தலைவராக வரவேண்டும் என்று சீமான் வளர்ந்து கொண்டிருக்கும் போதே இங்கே பதிய, நந்தன் வந்து, அது நடக்காது என்றார்.

இந்த ஒரு வீடியோ தான் வைகோவின் அரசியலையே கவுத்து போட்டது. உணர்ச்சி வசப்பட்டால் என்ன பேசுவது என்று தெரியாமல், தனது நீண்ட நெடிய அரசியலையே குழி தோண்டி புதைத்தார்.  

அவரே தனது 50 வருட அரசியலை , உழைப்பினை மதிக்காத போது, ஈழத்தமிழர் எப்படி மதித்து நம்ப முடியும்?

இந்த பேச்சினால், மக்களை சந்திக்க பயந்து, எந்த ஸ்டாலினை எதிர்த்தாரோ, அவர் காலடியில் விழுந்து ராஜ்ய சபை உறுப்பினர் ஆகி உள்ளார்.

இந்த பேச்சில் எந்த தவறும் இல்லை. தமிழ் தேசியம் என்று கூறி தமது சுயநல அரசியலுக்கு கிளம்பி இருக்கும்  சிலரை தான் அவர் விமர்சித்தார் அது தவறு அல்ல. 

இந்த பேச்சுக்கும் அவரது செல்வாக்கு குறைந்த‍த‍ற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.  அவரது தவறு எல்லாம் தனது கோப உணர்ச்சியால் கோபித்து கொண்டு மாறி மாறி கூட்டணி அமைத்த‍த்து தான்.  அதிக கோப உணர்ச்சியால் தனக்கு தானே மண் அள்ளி போட்டாரே தவிர ஈழத்தற்கு என்றும் உண்மையாய் இருந்தார். அவர் ஈழவிடுதலைக்கு செய்த உதவிகளை விலை மதிக முடியாதவை. 

அது தெரிந்துதான் தமிழ் தேசியம் பேசும் சுயநல கும்பல் அவர் மீது பழி போட்டு அவரை துரோகி என்று கத்தி திரிகிறது. 

  • Replies 269
  • Views 26.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, goshan_che said:

இது உங்களுக்கும் பொருந்தும்.

நான் இங்கே வரலாற்றை நிறுவவோ, படிப்பிக்கவோ வரவில்லை உங்கள் “நாயக்க” தியரி, இலங்கை தீவில் தமிழர் கொண்டுள்ள “claim” ற்கு, அதன் தொடர்சியாக தமிழ் தேசியத்துக்கு எவ்வளவு ஆபத்தானது என்பதை மட்டுமே சொல்ல வருகிறேன்.

உங்களுக்கு விளங்கி விட்டது என நினக்கிறேன். 

மிகுதி உங்கள் இஸ்டம்.

கோசன், நான் நேற்று சொன்னதை நீங்கள் கவனிக்கவில்லை ஐயா.

நான் நாயக்கர் குறித்து ஆய்வு கட்டுரை எழுதி, அதனை படித்த, ஒரு சிங்கள ராணுவத்தளபதி அதனை சிங்களத்தில் மொழி பெயர்த்து, வெளியிட்டார்.

இந்த விபரத்தினை சில மாதங்களுக்கு முன்னரே இங்கே பதிந்து இருக்கிறேன்.

இருவருமே வேறு பெயர்களில்...

உங்களுடன், இன்னும் ஆழமாக விவாதிக்கும் நிலைக்கே, இங்குள்ள திரி பதிவுகள் வரவில்லை என்பதாலே, நான் அதிகமாக விவாதிக்கவில்லை.

விவாதிக்கும் இடமும் இல்லை.

Edited by Nathamuni

2 hours ago, கிருபன் said:

இதுதான் நடக்கின்றது.

தூய தமிழினம் என்று பிளவுகளை உண்டாக்கி உட்சுருங்கி அழிக்கத்தான் பலர் தம்மையும் அறியாமல் செயற்படுகின்றனர்.

மூன்று, நான்கு தலைமுறைகளுக்கு முன்னர் வாழ்ந்த எமது முன்னோர்களின் வரலாறு தெரியாமல் இருக்கின்றோம். அவர்களின் முன்னோர்கள் பூர்வீக இயக்க, நாகர்களா, அல்லது வந்தேறிகளான தமிழரா, தெலுங்கரா, சேரநாட்டு மலையாளிகளா என்ற ஆராய்ச்சி எந்த பலனும் தராது. இப்போது இருப்பவர்கள் தங்களைத் தமிழராக உணர்கின்றார்கள். அதுதான் முக்கியம்.

உண்மை தான் கிருபன். பண்டாரவன்னியன் சமாதியில் அவனது பிறந்த திகதி இல்லை. இறந்த திகதி மட்டும் தான் உள்ளது. அதுவும் ஐரோப்பியருடன் போரிட்டு மடிந்த‍தால் இறந்த திகதியாவது கிடைத்த‍து. உள்ளூர் மன்னனிடம் தோற்றிருந்தால் அதுவும் கிடைக்காது. தூய தமிழினம் என்பது சாத்தியம் இல்லாத ஒன்று என்பது அதை சொல்லி திரியும் சீமான் என்பவருக்கே தெரியும். இருந்லும் அவரது  பதவி ஆசை அதை பேச சொல்கிறது. 

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, tulpen said:

இந்த பேச்சில் எந்த தவறும் இல்லை. தமிழ் தேசியம் என்று கூறி தமது சுயநல அரசியலுக்கு கிளம்பி இருக்கும்  சிலரை தான் அவர் விமர்சித்தார் அது தவறு அல்ல. 

இந்த பேச்சுக்கும் அவரது செல்வாக்கு குறைந்த‍த‍ற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.  அவரது தவறு எல்லாம் தனது கோப உணர்ச்சியால் கோபித்து கொண்டு மாறி மாறி கூட்டணி அமைத்த‍த்து தான்.  அதிக கோப உணர்ச்சியால் தனக்கு தானே மண் அள்ளி போட்டாரே தவிர ஈழத்தற்கு என்றும் உண்மையாய் இருந்தார். அவர் ஈழவிடுதலைக்கு செய்த உதவிகளை விலை மதிக முடியாதவை. 

அது தெரிந்துதான் தமிழ் தேசியம் பேசும் சுயநல கும்பல் அவர் மீது பழி போட்டு அவரை துரோகி என்று கத்தி திரிகிறது. 

இதையே தான் நான் சொன்னேன். நந்தன் சிரித்தார்....

இன்று அவர் சொன்னது சரி ஆகிவிட்டது.

வைகோ, மழையில் உப்பினையும், காத்தில் மாவினையும் விக்க கிளம்பும் விபரமில்லாத வியாபாரி.

அவர் ஈழத்தமிழர்களுக்காக செய்த வேலைகள் சிறப்பானவை. ஆனால் கூர்ப்புக் கொள்கை (ஜஸ்டின் ஐயா, இந்த பக்கம் இல்லை தானே) சொல்வது, தக்கன பிழைக்கும்.

வைக்கோ தன்னை தக்க வைக்கவில்லை. அதேவேளை, நன்றி இருந்தாலும் ஈழத்தமிழர் அவருக்காக காத்திருக்க முடியாதே.

Edited by Nathamuni

1 minute ago, Nathamuni said:

இதையே தான் நான் சொன்னேன். நந்தன் சிரித்தார்....

இன்று அவர் சொன்னது சரி ஆகிவிட்டது.

வைகோ, மழையில் உப்பினையும், காத்தில் மாவினையும் விக்க கிளம்பும் விபரமில்லாத வியாபாரி.

அவர் ஈழத்தமிழர்களுக்காக செய்த வேலைகள் சிறப்பானவை. ஆனால் கூர்ப்புக் கொள்கை (ஜஸ்டின் ஐயா, இந்த பக்கம் இல்லை தானே) சொல்வது, தக்கன பிழைக்கும்.

வைக்கோ தன்னை தக்க வைக்கவில்லை.

உண்மை. அது அவரது  சொந்த தவறு. அதற்கு நாம் ஒன்றும் செய்ய முடியாது. அதனால் எமக்கு நட்டமும் இல்லை. ஆனால் நாம் மனிதர்கள் என்றால்  அவர் எமக்கு செய்த உதவிகள் என்றுமே மறக்கமாட்டோம்.நன்றியுடன் நினைவில் வைத்திருக்க வேண்டியவை. அவரை துரோகி என்று வசைபாடும் கும்பலின் சுயநலத்தையும் அறிந்து நடக்க வேண்டும். தாயக தமிழர்கள் அதை அறிந்தே வைத்துள்ளார்கள்.  

  • கருத்துக்கள உறவுகள்
Just now, tulpen said:

ஈழத்தமிழர்கள் பெரும் பசியுடன் இருக்கிறார்கள். நேற்று சோறு போட்டவருக்கு நன்றி சொல்லலாம்.

இன்று பசிக்குதே?

1 minute ago, Nathamuni said:

ஈழத்தமிழர்கள் பெரும் பசியுடன் இருக்கிறார்கள். நேற்று சோறு போட்டவருக்கு நன்றி சொல்லலாம்.

இன்று பசிக்குதே?

அதற்கு தான் அங்கஜனையும், டக்லசையும், பிள்ளையானையும் மக்கள் தெரிவு செய்துள்ளார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
Just now, tulpen said:

அதற்கு தான் அங்கஜனையும், டக்லசையும், பிள்ளையானையும் மக்கள் தெரிவு செய்துள்ளார்கள். 

இருக்கலாம்...

மக்கள், செயல் இல்லாமல், இருப்பவர்களை தூக்கி எறிகிறார்கள்.

விக்கியர், கஜன் போடும் போட்டில், அரண்டு போன செல்வம் எழும்பி பேச வேண்டிய நிலைமை.

Just now, Nathamuni said:

இருக்கலாம்...

மக்கள், செயல் இல்லாமல், இருப்பவர்களை தூக்கி எறிகிறார்கள்.

விக்கியர், கஜன் போடும் போட்டில், அரண்டு போன செல்வம் எழும்பி பேச வேண்டிய நிலைமை.

அது நல்லது தானே.  அதில் தவறு இல்லையே. 

  • கருத்துக்கள உறவுகள்
Just now, tulpen said:

அது நல்லது தானே.  அதில் தவறு இல்லையே. 

அதுவேதான் தமிழக அரசியலில் வைகோ விசயத்தில் நடக்கிறது.

தமிழ் தேசியத்தினை குத்தம் சொல்வது தவறு. அது காகம் இருக்க பனம் பழம் விழுந்த கதை.

அரசியலை விட்டு விட்டு பாருங்கள் ஒரு விசயத்தினை.

சிறையில் 18 மாதம் வீறாப்பாய் இருந்த மனிதர் வைகோ, வெளியில் வந்து அதனை முதலீடாக மாத்தாமல், சிறையில் வைத்த ஜெயலலிதாவுடன் கூட்டு வைத்த போதே, தனது அரசியல் வாழ்வுக்கு சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொண்டார்.

சிறையில் 6 மாதம் வீறாப்பாய் இருந்த மனிதர் சீமான்,  வெளியில் வந்து அதனை முதலீடாக மாத்தி, சிறையில் வைத்த கருணாநிதியினை எதிர்த்ததால் தனது அரசியல் வாழ்வினை ஏறுமுகத்தில் அமைத்துக் கொண்டார்.

வைகோவின் புத்திசாலித்தனம் அற்ற அரசியல் தெரிந்தது தான்.  1987 ல் இருந்த எமக்கு உதவி செய்த வைகோ அதை அரசியல் முதலீடாக மாற்ற முடியாமல் இருக்க அவரின் நேர்மையையை தனது முதலீட்டாக்கிய சீமானின் நரி தந்திரம் பாராட்டபடவேண்டியது தான். ஏதோ வீழ்ந்த ஈழதமிழரை வைத்து அரசியல் செய்து ஏதோ உழைத்து போகட்டும். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, Nathamuni said:

கோசன், நான் நேற்று சொன்னதை நீங்கள் கவனிக்கவில்லை ஐயா.

நான் நாயக்கர் குறித்து ஆய்வு கட்டுரை எழுதி, அதனை படித்த, ஒரு சிங்கள ராணுவத்தளபதி அதனை சிங்களத்தில் மொழி பெயர்த்து, வெளியிட்டார்.

இந்த விபரத்தினை சில மாதங்களுக்கு முன்னரே இங்கே பதிந்து இருக்கிறேன்.

இருவருமே வேறு பெயர்களில்...

உங்களுடன், இன்னும் ஆழமாக விவாதிக்கும் நிலைக்கே, இங்குள்ள திரி பதிவுகள் வரவில்லை என்பதாலே, நான் அதிகமாக விவாதிக்கவில்லை.

விவாதிக்கும் இடமும் இல்லை.

அதையும் வாசித்தேன்.

உங்களுக்கான இந்த பதிலை விரிவாக எழுதி, பின் அழித்து விட்டேன்.

சில விசயங்களை சொல்ல முடியவில்லை.

ஒன்றை மட்டும் சொல்கிறேன் - 

எம்மை அறியாமலே எம் விரலை எடுத்து எம் கண்ணை குத்த கூடாது.

விளங்கும் என நம்புகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, tulpen said:

வைகோவின் புத்திசாலித்தனம் அற்ற அரசியல் தெரிந்தது தான்.  1987 ல் இருந்த எமக்கு உதவி செய்த வைகோ அதை அரசியல் முதலீடாக மாற்ற முடியாமல் இருக்க அவரின் நேர்மையையை தனது முதலீட்டாக்கிய சீமானின் நரி தந்திரம் பாராட்டபடவேண்டியது தான். ஏதோ வீழ்ந்த ஈழதமிழரை வைத்து அரசியல் செய்து ஏதோ உழைத்து போகட்டும். 

அதையேன் நரித்தந்திரம் என்கிறீர்கள்?

நாட்டின் அதி உயர் ஜனாதிபதி பதவி. மகிந்தா, அந்த பதவியில் இருந்து இறங்கி, அரசியலில், மக்களுடன் இருக்கும் நோக்கில், எம்பி ஆனார்.

அதனை நரித்தந்திரம் என்று சொல்ல முடியுமா?

இன்று அவரை தொடர்ந்து மைத்திரியும் எம்பி ஆகியுள்ளார். ஆனாலும் சுதந்திர கடசி தலைவராக நின்றால் தோல்வி நிஜம் என்று, மகிந்தா கடசியில் நின்று வென்றுள்ளார்.

மகிந்தா முதுகில் குத்திய ஒருவரின் இந்த சுஜ நல அரசியல்.

இதுதான் கேவலமான நரித்தந்திரம். 

4 minutes ago, goshan_che said:

அதையும் வாசித்தேன்.

உங்களுக்கான இந்த பதிலை விரிவாக எழுதி, பின் அழித்து விட்டேன்.

சில விசயங்களை சொல்ல முடியவில்லை.

ஒன்றை மட்டும் சொல்கிறேன் - 

எம்மை அறியாமலே எம் விரலை எடுத்து எம் கண்ணை குத்த கூடாது.

விளங்கும் என நம்புகிறேன்.

இவ்வாறு அங்கே செய்யும் முட்டாளும் நான் இல்லை என்று நீங்கள் நம்பலாம் 🙏

5 minutes ago, Nathamuni said:

அதையேன் நரித்தந்திரம் என்கிறீர்கள்?

நாட்டின் அதி உயர் ஜனாதிபதி பதவி. மகிந்தா, அந்த பதவியில் இருந்து இறங்கி, அரசியலில், மக்களுடன் இருக்கும் நோக்கில், எம்பி ஆனார்.

அதனை நரித்தந்திரம் என்று சொல்ல முடியுமா?

இன்று அவரை தொடர்ந்து மைத்திரியும் எம்பி ஆகியுள்ளார். ஆனாலும் சுதந்திர கடசி தலைவராக நின்றால் தோல்வி நிஜம் என்று, மகிந்தா கடசியில் நின்று வென்றுள்ளார்.

மகிந்தா முதுகில் குத்திய ஒருவரின் இந்த சுஜ நல அரசியல்.

இதுதான் கேவலமான நரித்தந்திரம். 

இவ்வாறு அங்கே செய்யும் முட்டாளும் நான் இல்லை என்று நீங்கள் நம்பலாம் 🙏

நிச்சயமாக நரி தந்திரம் தான்.  வைகோ ஈழ விடுதலைக்கு நீண்ட கால பங்களிப்பு செய்தவர் என்று அறிந்திருந்தும் அவரை துரோகி , தெலுங்கன் என்று தனது விசிலடிச்சால் குஞ்சுகளுக்கு கூறிய சீமான் தான் தனது தலைவன் என்று  அடிக்கடி கூறும் பிரபாகரனை இந்தியாவுக்கு கொண்டு வந்து தூக்கில் இட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றிய சபாநாயகர் காளிமுத்துவை கண்டித்து ஒரு வார்த்தை பேசவில்லை. ஜெயல‍லிதாவுக்காக அவர் செய்தார் என்று சப்பு கொட்டு கொட்டினாலும் வைகோவை திட்டிய வாயால் அவரை மெதுவான கண்டனதை கூட செய்ய விரும்பவில்லை. அது நரித்தந்திரம் தான். 

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, tulpen said:

நீங்கள் அரசியலில் கடும் உழைப்புக்கும், நரித்தந்திரத்துக்கும் உள்ள வித்தியாசத்தினை தவறாக புரிந்து கொண்டுளீர்கள் என்றே நினைக்கிறேன். உங்கள் தனிப்பட்ட அபிப்பிராயங்களை ஒரு நிமிடம் வைத்து விட்டு, தெளிவாக சிந்தித்து பாருங்கள். 

(இப்போது என்னுடன் ஜேன் வால்கெர் இருக்கிறா... அதால... நல்ல தெளிவா இருக்கிறன்)

கருணாநிதியிடம் இரண்டும் இருந்தன.

மைத்திரியிடம், அதிஷ்ட்டத்துடன், நரித்தந்திரம் இருந்தது.

ரணிலிடம் நரித்தந்திரம் மட்டுமே இருந்தது.

மகிந்தவிடமும், பிரபாகரனிடமும் அதேபோல சீமானிடமும்  கடும் உழைப்பு இருந்தது.

ராஜிவிடம், எடப்பாடியிடம்  அதிஷ்டம் இருந்தது. 

ராகுலிடம் எதுவுமே இல்லை. 

Edited by Nathamuni

1 minute ago, Nathamuni said:

நீங்கள் அரசியலில் கடும் உழைப்புக்கும், நரித்தந்திரத்துக்கும் உள்ள வித்தியாசத்தினை தவறாக புரிந்து கொண்டுளீர்கள் என்றே நினைக்கிறேன். உங்கள் தனிப்பட்ட அபிப்பிராயங்களை ஒரு நிமிடம் வைத்து விட்டு, தெளிவாக சிந்தித்து பாருங்கள். 

(இப்போது என்னுடன் ஜேன் வால்கெர் இருக்கிறா... அதால... நல்ல தெளிவா இருக்கிறன்)

கருணாநிதியிடம் இரண்டும் இருந்தன.

மைத்திரியிடம், அதிஷ்ட்டத்துடன், நரித்தந்திரம் மட்டுமே இருந்தது.

ரணிலிடம் நரித்தந்திரம் மட்டுமே இருந்தது.

மகிந்தவிடமும், பிரபாகரனிடமும் அதேபோல சீமானிடமும்  கடும் உழைப்பு இருந்தது.

ராஜிவிடம் அதிஷ்டம் இருந்தது.

ராகுலிடம் எதுவுமே இல்லை. 

நான் கேட்ட கேள்விக்கு பதிலளிக்காமல் மழுப்புகிறீர்கள். 1987 ல் இருந்து ஈழத்தி்காக நேர்மையுடன் எத்தனையோ உதவிகளை செய்து வரும் வைகோவை  இன வெறுப்புடன் தெலுங்கம் என்றும், துரோகி என்றும் திட்டியது ஏன்? ஈழத்தை உண்மையாக சீமான் நேசித்திருந்தால் வைகோவை அவ்வாறு கூற மனம் இருந்திருக்காது. ஈழத்தி்ற்கு நேர்மையாக இருந்த வைகோ மீது இப்படி பழி போட்ட சீமான்  காளிமுத்துவை செய்த‍து தவறு என்று ஒரு வார்த்தை கூட கூறாத‍து ஏன்? இதற்கு பெயர் தான் நரி தந்திரம். பிரபாகரனிடம் உழைப்பு இருந்த‍து. ஆனால் சீமானிடம் மற்றவரின் உழைப்பை முதலிடும் நரி தந்திரம் தான் இருந்தது இருக்கிறது. 

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, tulpen said:

நீங்கள் அதிகமாக குழப்பிக் கொள்கிறீர்கள்.

ஈழத்தமிழர் அரசியல் வேறு. தமிழக அரசியல் வேறு.

இரண்டையும் போட்டுக் குழப்பாதீர்கள். நாம் தெளிவாக இருக்க வேண்டும்.

ஈழ தமிழர் பிரச்சனையை அரசியலுக்கு பயன்படுத்தியதில் முதல் தடம் பதித்தவர்கள் கருணாநிதி, எம்ஜிஆர்.

பின்னர், ராஜிவ் பிரச்சனையில் அமைதியாகி, மீண்டும் எழுந்திருக்கிறது.

இம்முறை சீமானும், ஏனையோரும் பயன்படுத்திக்கின்றனர்.

நீங்கள் சொல்வது சரியானால், கருணாநிதியையும் அவ்வாறே திட்ட  முடியுமே. தவிர சீமான் தெலுங்கன் என்னடா தமிழனை ஆள்வது என்றாரே ஒழிய, வைகோ தெலுங்கர் என்று ஒருபோதும் சொல்லவில்லை.

சீமான் அடுத்தவரின் உழைப்பினை எடுத்ததாக தெரியவில்லை. மாறாக மக்களின் வாக்குகள் அதிகரிக்க, வைகோவிடம் இருந்து அரசியல் செய்ததே வேஸ்ட் என்று அவரது மிக பெரிய தொண்டராக இருந்த இன்னோவா சம்பத் சொல்கிறார்.

Edited by Nathamuni

2 minutes ago, Nathamuni said:

நீங்கள் அதிகமாக குழப்பிக் கொள்கிறீர்கள்.

ஈழத்தமிழர் அரசியல் வேறு. தமிழக அரசியல் வேறு.

இரண்டையும் போட்டுக் குழப்பாதீர்கள். நாம் தெளிவாக இருக்க வேண்டும்.

ஈழ தமிழர் பிரச்சனையை அரசியலுக்கு பயன்படுத்தியதில் முதல் தடம் பதித்தவர்கள் கருணாநிதி, எம்ஜிஆர்.

பின்னர், ராஜிவ் பிரச்சனையில் அமைதியாகி, மீண்டும் எழுந்திருக்கிறது.

இம்முறை சீமானும், ஏனையோரும் பயன்படுத்திக்கின்றனர்.

நீங்கள் சொல்வது சரியானால், கருணாநிதியையும் அவ்வாறே திட்ட  முடியுமே. தவிர சீமான் தெலுங்கன் என்னடா தமிழனை ஆள்வது என்றாரே ஒழிய, வைகோ தெலுங்கர் என்று ஒருபோதும் சொல்லவில்லை.

நானும் அதையே தான் கூறுகிறேன். ஈழத்தமிழர் பிரச்சனை வேறு. தமிழக அரசியல் வேறு. தமிழகம் சிறிய உதவிகளை செய்யலாமே ஒழிய அதற்கு மேல் ஒன்றும் செய்ய முடியாது.  கருணாநிதி எம்ஜியாரை போல் சீமானும்  அதை பயன்படுத்துவதாக ஒத்து கொண்டதற்கு நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, tulpen said:

அதுக்கு அப்பால் போவது பிரயோசனம் இல்லை என்று தானே சொல்கிறேன்.

தமிழ் தேசியம் பேசுவது பிழை, தெலுங்கர் மீதான வெறுப்பரசியல் பிழை என்று சொல்வது எமக்கு தேவையில்லை என்கிறேன்.

நமக்கே சிங்களவனுடன் வாய்க்கால் வரம்புத் தகராறு.

அதுக்குள் அடுத்த வீட்டு பிரச்சனை எமக்கு எதுக்கு என்று தானே சொல்கிறேன்.

நம்ம வீடு கூரை பிச்சுக்கிட்டு ஒழுகுது... அதனை நிறுத்த வழியில்லை.

அடுத்தவன் வீட்டில், கூரையை தலைகீழா போடுகினம்.... மழை பெய்து ஒழுகப்போகிறது என்று கத்துவது, தேவையா என்கிறேன்.

அவர்கள் எமது நிலைமையினை அரசியலுக்கு பயன்படுத்துவது, அறிஞர் அண்ணா காலத்தில் 1958ல் கலவரத்துடன் மெதுவாக ஆரம்பித்து இன்றும் தொடர்கிறது.... நாம் என்ன செய்ய முடியும்?

நாம அதிகப்பிரசங்கித்தனம் பண்ணினால், சரிதான் போய்யா, போயி ஓன்னாட்டில சிங்களவனுடன் சேர்ந்து அரசியல் பண்ணி, அவனது வெறுப்பரசியலை நிறுத்திப்புட்டு, எங்களுக்கு புத்தி சொல்ல வாய்யா என்றால் என்ன நிலை?

Edited by Nathamuni

12 minutes ago, Nathamuni said:

அதுக்கு அப்பால் போவது பிரயோசனம் இல்லை என்று தானே சொல்கிறேன்.

தமிழ் தேசியம் பேசுவது பிழை, தெலுங்கர் மீதான வெறுப்பரசியல் பிழை என்று சொல்வது எமக்கு தேவையில்லை என்கிறேன்.

நமக்கே சிங்களவனுடன் வாய்க்கால் வரம்புத் தகராறு.

அதுக்குள் அடுத்த வீட்டு பிரச்சனை எமக்கு எதுக்கு என்று தானே சொல்கிறேன்.

நம்ம வீடு கூரை பிச்சுக்கிட்டு ஒழுகுது... அதனை நிறுத்த வழியில்லை.

அடுத்தவன் வீட்டில், கூரையை தலைகீழா போடுகினம்.... மழை பெய்து ஒழுகப்போகிறது என்று கத்துவது, தேவையா என்கிறேன்.

அவர்கள் எமது நிலைமையினை அரசியலுக்கு பயன்படுத்துவது, அறிஞர் அண்ணா காலத்தில் 1958ல் கலவரத்துடன் மெதுவாக ஆரம்பித்து இன்றும் தொடர்கிறது.... நாம் என்ன செய்ய முடியும்?

சீமான் பேசும் வெறுப்பு துவேச அரசியலை எதிரத்து கருத்து சொல்வது எமக்கு தேவையற்றது  என்பது உங்கள் வாதம். அப்படியானால் எவனோ அடுத்த நாட்டுக்காரன் சீமானின் வெறுப்பு துவேஷ  அரசியலை இங்கு பகிர்ந்து  அதற்கு ஆதரவாக கருத்திடுவதும் தேவையற்றது தானே. 

  • கருத்துக்கள உறவுகள்
Just now, tulpen said:

சீமான் பேசும் வெறுப்பு துவேச அரசியலை எதிரத்து கருத்து சொல்வது எமக்கு தேவையற்றது  என்பது உங்கள் வாதம். அப்படியானால் எவனோ அடுத்த நாட்டுக்காரன் சீமானின் வெறுப்பு துவேஷ  அரசியலை இங்கு பகிர்ந்து  அதற்கு ஆதரவாக கருத்திடுவதும் தேவையற்றது தானே. 

அது அவர்கள் கருத்து சுதந்திரம். ஒவொருவரின் ரசனை. எனக்கு பரத நாட்டியம் பிடிக்காது என்பதற்க்காக, இங்கே யாரும் இணைக்க கூடாது என்று சொல்லும் உரிமை எனக்கிலேயே.

அதுக்கும், நாம் மூக்கினை நுழைத்து கருத்து சொல்வதற்கும் வித்தியாசம் உண்டு. 

தமிழ் சினிமா போல அதுவும் ஒரு ரசனை தானே. படம் பார்க்கிறோம், அவ்வளவு தான். அதேபோல அங்குள்ள அரசியலை அறிகிறோம்.

இன்னும் கொஞ்ச நாளில் அமெரிக்க தேர்தல் அறுவைகளை இங்கே இணைப்பார்கள். அதுவும் தவறாகுமா? ட்ரம்பரின் இனத்துவசே பேச்சுகள் பதிய கூடாதோ?

  • கருத்துக்கள உறவுகள்

ஜேன் வால்கெர்... கவுப்பத்துக்கு முன்னம், ஒரு விடயத்தினை சொல்லி விடை பெற போகிறேன். நல்ல உரையாடல். உங்கள் நேரத்துக்கு நன்றி.

முக்கியமாக இன்னொரு கோணத்தினையும் பாருங்கள்.

நான் தமிழராக நமது நாட்டில் சிங்களவர்களிடம் இருந்து விடுபட போராடுகிறோம். அதே போல, அவர்கள் திடீரென விழித்து, திராவிடத்திடம் இருந்து மீள போராடுகிறார்கள்.

ஒரு அடிமை, இன்னோரு அடிமையின் போராட்டம் தவறு என்று சொல்ல முடியுமா? அதுவே எனது ஆதரவுக்கு காரணம். அதனை விடுத்து அவர்கள் எமக்கு உதவுவார்கள் என்று எதிர்பார்க்கவில்லை. தமக்கு உதவிக்கொண்டாலே போதுமானது.

அதுபோல, தமிழகத்தின் சகலரது ஆதரவும் எமக்கும் தேவை என்று சொல்வதையும் நான் ஏற்றுக் கொள்ளப்போவதில்லை.

பசிக்கும் போது (2009ல்) பாண் துண்டு எறியாதவன், நாளை புரியாணி தருவான் என்று நம்ப நான் தயாரில்லை. சிலர் அப்படி கருத்துக் கொண்டுள்ளனர்.

இந்தியாவினால் அழிவினை தவிர வேறு எதுவுமே எமக்கு கிடைக்கவில்லை. மீண்டும் அவர்கள் வருவர்களாயின் தமது நலன்களை கருத்தில் கொண்டே வருவார்கள். ஆகவே வரவே தேவையில்லை என்கிறேன்.

அதிலும் பார்க்க சிங்களவனுடன் காலில் விழுந்தாவது சமாதானமாக போகலாம்.

எமக்கு மட்டுமல்ல சிங்கள மக்களுக்கும் அழிவு தான் கிடைத்தது.

இறந்த ராணுவத்தினரும் ஒரு தாய் பெத்த பிள்ளை தான்.

இந்த உணர்வு சிங்களத்துக்கும் வருகிறது. நாம் எதுவுமே கொடுக்காவிடில், சர்வதேசத்திடம் சிக்கிக் கொள்வோம் என்று மகிந்தா நினைக்கிறார் என்று சிங்கள அறிவு ஜீவிகள் சொல்கின்றனர்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, tulpen said:

நிச்சயமாக நரி தந்திரம் தான்.  வைகோ ஈழ விடுதலைக்கு நீண்ட கால பங்களிப்பு செய்தவர் என்று அறிந்திருந்தும் அவரை துரோகி , தெலுங்கன் என்று தனது விசிலடிச்சால் குஞ்சுகளுக்கு கூறிய சீமான் தான் தனது தலைவன் என்று  அடிக்கடி கூறும் பிரபாகரனை இந்தியாவுக்கு கொண்டு வந்து தூக்கில் இட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றிய சபாநாயகர் காளிமுத்துவை கண்டித்து ஒரு வார்த்தை பேசவில்லை. ஜெயல‍லிதாவுக்காக அவர் செய்தார் என்று சப்பு கொட்டு கொட்டினாலும் வைகோவை திட்டிய வாயால் அவரை மெதுவான கண்டனதை கூட செய்ய விரும்பவில்லை. அது நரித்தந்திரம் தான். 

வைகோ அண்ணாவின் தமிழ் தேசியம் சார்ந்த பேச்சு வரும் வரை சீமான் அவரை மரியாதையுடன் நடத்தினார் என்றே நினைக்கிறேன்

9 hours ago, Nathamuni said:

அது அவர்கள் கருத்து சுதந்திரம். ஒவொருவரின் ரசனை. எனக்கு பரத நாட்டியம் பிடிக்காது என்பதற்க்காக, இங்கே யாரும் இணைக்க கூடாது என்று சொல்லும் உரிமை எனக்கிலேயே.

அதுக்கும், நாம் மூக்கினை நுழைத்து கருத்து சொல்வதற்கும் வித்தியாசம் உண்டு. 

தமிழ் சினிமா போல அதுவும் ஒரு ரசனை தானே. படம் பார்க்கிறோம், அவ்வளவு தான். அதேபோல அங்குள்ள அரசியலை அறிகிறோம்.

இன்னும் கொஞ்ச நாளில் அமெரிக்க தேர்தல் அறுவைகளை இங்கே இணைப்பார்கள். அதுவும் தவறாகுமா? ட்ரம்பரின் இனத்துவசே பேச்சுகள் பதிய கூடாதோ?

பரதநாட்டியம் போன்ற Entertainment ஐயும் அரசியல் கருத்துக்களையும்  ஒன்றாக கூறுகிறீர்களே! 

தனக்கு பிடித்த இனவெறி அரசியலை இங்கு இணைப்பது அதை ஆதரிப்பது கருத்து சுதந்திரம் என்றால்  அதனை எதிர்ப்பதும் கருத்து சுந்ந்திரம் தான். 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, tulpen said:

பரதநாட்டியம் போன்ற Entertainment ஐயும் அரசியல் கருத்துக்களையும்  ஒன்றாக கூறுகிறீர்களே! 

தனக்கு பிடித்த இனவெறி அரசியலை இங்கு இணைப்பது அதை ஆதரிப்பது கருத்து சுதந்திரம் என்றால்  அதனை எதிர்ப்பதும் கருத்து சுந்ந்திரம் தான். 

அதுதான் சொன்னேனே, இனவெறி அரசியல் என்ற நிலையில், டிரம்ப், சரத் பொன்சேகா, ஆனந்த வீரசேகரா, விமல் வீரவன்ச, மகிந்த என்று எதுவுமே இணைக்க முடியாது. ஓகேயா ?

எதிர்பதில் தவறு என்று யார் சொன்னது? அந்த எதிர்புக்காக வைக்கிற காரணங்களை பற்றி தானே மேலே விவாதித்தோம்.

Edited by Nathamuni

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.