Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாட்டை விட்டு வெளியேற அவுஸ்ரேலியர்களுக்கு டிசம்பர் மாதம் வரை தடை!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Australia-continues-ban-on-travel-through-mid-December-720x450.jpg

நாட்டை விட்டு வெளியேற அவுஸ்ரேலியர்களுக்கு டிசம்பர் மாதம் வரை தடை!

கொரோனா வைரஸ் தொற்றுநோயால் நாட்டை விட்டு வெளியேற குடியிருப்பாளர்களுக்கு டிசம்பர் 17ஆம் திகதி வரை தடையை நீடிப்பதாக அவுஸ்ரேலியாவின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மார்ச் 18ஆம் திகதி முதல் நடைமுறையில் இருந்த இந்த உத்தரவு இப்போது எதிர்வரும் டிசம்பர் 17ஆம் திகதி வரை தொடரும் என்று சுகாதார அமைச்சர் கிரெக் ஹன்ட் அறிவித்துள்ளார்.

‘அவசர காலத்தின் நீடிப்பு அவுஸ்ரேலிய சுகாதார பாதுகாப்பு முதன்மைக் குழு வழங்கிய சிறப்பு மருத்துவ மற்றும் தொற்றுநோயியல் ஆலோசனைகளால் தெரிவிக்கப்பட்டது’ ஹன்ட் கூறினார்.

இந்த காலத்தில், மற்ற நாடுகளில் வசிப்பவர்கள், கடல் சரக்கு மற்றும் படகுகள், அத்தியாவசிய தொழிலாளர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

http://athavannews.com/நாட்டை-விட்டு-வெளியேறும-2/

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டைவிட்டு மட்டுமல்ல, ஒரு Stateலிருந்து இன்னொரு Stateற்கு கூட போகமுடியாது.. அனுமதிபெற்றே போகமுடியும்.. 

விக்டோரியா, குயின்ஸ்லாந்து, மேற்கு அவுஸ்ரேலியா ஆகிய மூன்று States borders இன்னமும் திறக்கவில்லை.. Commonwealth government   எவ்வளவு அழுத்தங்களைக்கொடுத்தும் இந்த 3 Statesம் எல்லைகளை திறக்க மறுத்துவிட்டார்கள்.. இந்த 3 Statesலும் எதிர்கட்சியான தொழிற்கட்சியை சேர்ந்தவர்களே அதிகாரத்தில்( Premier) இருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

ஆனால், மாநில அரசாங்கங்கள் இப்படி எல்லைகளை மூடிவைப்பதற்கும் நியாயமான காரணங்கள் இருக்கின்றன. சில மாதங்களுக்கு முன்னர் மாநிலங்களுக்கிடையிலான எல்லைகளில் ஏற்படுத்தப்பட்டிருந்த கடுமையான சட்டங்கள் சில தளர்த்தப்பட்டதையடுத்து கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்ததென்பது நடந்தது. ஆகவே, மத்திய அரசு எவ்வளவுதான் அழுத்தம் கொடுத்தும் மாநில அரசுகள் அதைச் செவிமடுப்பதாய் இல்லை. உதாரணத்திற்கு நேற்று விக்டோரியா மாநிலத்தில் கொரோனா தொற்று இன்னும் எதிர்பார்த்தளவு குறைவடையவில்லை என்பதனால் அம்மாநில அரசு இன்னும் கடுமையான சட்டங்களை மத்திய அரசின் வேண்டுகோளினை உதாசீனம் செய்து நிறைவேற்றத் தீர்மானித்திருக்கிறது. மாநில அரசுகள் செயற்படும் முறை சரியானதென்பதால், மத்திய அரசினால் எதுவுமே செய்யமுடியவில்லை. அடுத்ததாக தத்தமது மாநில அரசுகளின் நடவடிக்கைகளை அம்மாநில மக்களும் ஆதரிப்பதால் மத்திய அரசு அதனை அமைதியாக ஆமோதிப்பதைத் தவிர வேறு வழியிருப்பதாகவும் தெரியவில்லை. 

குறிப்பிட்டுச் சொல்வதென்றால் மத்திய அரசின் பொருளாதாரத்தினை மீளக் கட்டியெழுப்புதல் எனும் நோக்கம் மாநில அரசுகளின் மக்களைக் காப்பற்றுதல் என்னும் நோக்கொடு போட்டிபோட முடியாமல் பின்னிற்குத் தள்ளப்பட்டிருக்கிறதென்பதே உண்மை.

  • கருத்துக்கள உறவுகள்

9 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

நாட்டைவிட்டு மட்டுமல்ல, ஒரு Stateலிருந்து இன்னொரு Stateற்கு கூட போகமுடியாது.. அனுமதிபெற்றே போகமுடியும்.. 

விக்டோரியா, குயின்ஸ்லாந்து, மேற்கு அவுஸ்ரேலியா ஆகிய மூன்று States borders இன்னமும் திறக்கவில்லை.. Commonwealth government   எவ்வளவு அழுத்தங்களைக்கொடுத்தும் இந்த 3 Statesம் எல்லைகளை திறக்க மறுத்துவிட்டார்கள்.. இந்த 3 Statesலும் எதிர்கட்சியான தொழிற்கட்சியை சேர்ந்தவர்களே அதிகாரத்தில்( Premier) இருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது

ஆனா நாங்கதான்   very very strict 😂

கிளைவ் பால்மர் வழக்குப்போட்டும் இன்னும் திறக்கவில்லை, நிம்மதியாக இருக்கின்றோம் மத்திய அரசும் அவருக்கு ஆதரவு. 

Clive Palmer $30B Case Against WA: Everything You Need To Know So Far

https://soperth.com.au/clive-palmer-30b-case-against-wa-42357

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, ரஞ்சித் said:

குறிப்பிட்டுச் சொல்வதென்றால் மத்திய அரசின் பொருளாதாரத்தினை மீளக் கட்டியெழுப்புதல் எனும் நோக்கம் மாநில அரசுகளின் மக்களைக் காப்பற்றுதல் என்னும் நோக்கொடு போட்டிபோட முடியாமல் பின்னிற்குத் தள்ளப்பட்டிருக்கிறதென்பதே உண்மை

உண்மைதான் அடுத்த முதலமைச்சர் தேர்தலில் வெல்லவேண்டும் என்றால், பொருளாதார வளர்ச்சியும் ஒரு முக்கிய காரணமாக உள்ளது. தற்போதைய PM Scott Morrison பற்றி கடந்த வருடம் இடம்பெற்ற காட்டுதீ விஷயத்திலும், COVID ஆரம்பித்தபொழுது அதை கையாண்டவிடயத்திலும், பின்பு Jobseekers, Jobkeeper திட்டத்திலும் பல எதிரான கருத்துகள் உண்டு.. அடுத்த கோடைகாலமும் வர இருக்கிறது ஆனால் இன்னமும் கடந்த வருட பாதிப்பிலிருந்து மீளவில்லை.. இப்பொழுது இந்த 3 மாநில எல்லைகளும் மூடியுள்ளதால் பொருளாதாரத்தில் கணிசமான வீழ்ச்சி .. ஆகையால் Scott Morrisonனின் Liberals வெல்லவேண்டுமாயின் பழையபடி பொருளாதாரத்தை ஏதாவது வகையில் முன்னேற்றவேண்டும்.. அதற்கு இந்த 3 Labour கட்சி Premierகள் தடையாக இருப்பதால் அவர்களுக்கு அதிக அழுத்தங்களை கொடுக்கிறார்கள்.. ஆனாலும் இந்த 3 பேரும் தங்களுடைய முடிவுகளிலிருந்து  இப்போதைக்கு விலகுவார்களோ தெரியாது..

12 hours ago, உடையார் said:

கிளைவ் பால்மர் வழக்குப்போட்டும் இன்னும் திறக்கவில்லை, நிம்மதியாக இருக்கின்றோம் மத்திய அரசும் அவருக்கு ஆதரவு. 

உண்மையில் WA இன்றைய திகதியில் 0 COVID case..மிகவும் கட்டுப்பாடாக வைத்திருக்கிறார்கள்..

Clive Palmerற்கு வழக்குகள் போடுவதே வாடிக்கையாகிவிட்டது.. Iron Ore வழக்கு முடிந்துவிட்டதா???

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

உண்மையில் WA இன்றைய திகதியில் 0 COVID case..மிகவும் கட்டுப்பாடாக வைத்திருக்கிறார்கள்..

Clive Palmerற்கு வழக்குகள் போடுவதே வாடிக்கையாகிவிட்டது.. Iron Ore வழக்கு முடிந்துவிட்டதா???

இல்லை இன்னும் முடியவில்லை,

இந்தாளுக்கு வாய் மட்டுமே, உருப்படியாக நல்ல சிந்தனையில்லை, அடுத்த ட்ரம்ப், பணத்திமிர், விரைவில் அழிவார் 

  • கருத்துக்கள உறவுகள்
On 8/9/2020 at 22:03, பிரபா சிதம்பரநாதன் said:

உண்மைதான் அடுத்த முதலமைச்சர் தேர்தலில் வெல்லவேண்டும் என்றால், பொருளாதார வளர்ச்சியும் ஒரு முக்கிய காரணமாக உள்ளது. தற்போதைய PM Scott Morrison பற்றி கடந்த வருடம் இடம்பெற்ற காட்டுதீ விஷயத்திலும், COVID ஆரம்பித்தபொழுது அதை கையாண்டவிடயத்திலும், பின்பு Jobseekers, Jobkeeper திட்டத்திலும் பல எதிரான கருத்துகள் உண்டு.. அடுத்த கோடைகாலமும் வர இருக்கிறது ஆனால் இன்னமும் கடந்த வருட பாதிப்பிலிருந்து மீளவில்லை.. இப்பொழுது இந்த 3 மாநில எல்லைகளும் மூடியுள்ளதால் பொருளாதாரத்தில் கணிசமான வீழ்ச்சி .. ஆகையால் Scott Morrisonனின் Liberals வெல்லவேண்டுமாயின் பழையபடி பொருளாதாரத்தை ஏதாவது வகையில் முன்னேற்றவேண்டும்.. அதற்கு இந்த 3 Labour கட்சி Premierகள் தடையாக இருப்பதால் அவர்களுக்கு அதிக அழுத்தங்களை கொடுக்கிறார்கள்.. ஆனாலும் இந்த 3 பேரும் தங்களுடைய முடிவுகளிலிருந்து  இப்போதைக்கு விலகுவார்களோ தெரியாது..

தேசங்களின் எல்லைகளை மூடுவதால் பொருளாதார சரிவு ஏற்பட்டுள்ளது என்பது அரசியல் பிரச்சாரம் என்பதாக நான் கருதுகிறேன் ( எனது சொந்த கருத்து மட்டுமே) சுற்றுலா துறை சார் வருமான இழப்பு 51% விகிதம், ஆண்டு ஒன்றிற்கு ஏறத்தாழ 50 பில்லியன் மொத்த தேசிய உற்பத்தியில் பங்கு வகிக்கிறது, ஆனால் உற்பத்தி துறை அதனை விட இரண்டு மடங்கு மொத்த தேசிய உற்பத்தியில் பங்கு வகிக்கிறது, உற்பத்தித்துறை 31% விகிதம் வீழ்ச்சியடைந்துள்ளது. தேசங்களிடையான உல்லாச பயணிகளின் வருகை இன்மையால் மட்டும் அத்துறை பாதிப்படையவில்லை அதனுடன் மறைமுக தொடர்புடைய மற்றதுறைகளின் வீழ்ச்சி பாவனையாளர் நுகர்வோர் உறுதியின்மையை அதிகரித்து விட்டுள்ளது, போக்குவரத்து துறை 85% சரிவு கண்டுள்ளது இதற்கு மூல காரணம் தேசங்களிடையான நுழைவு கட்டுப்பாடல்ல நாடுகளிடியேயான போக்குவரத்து கட்டுப்பாடே காரணம். 

அண்மையில் அவுஸ்திரேலிய அரசு இரண்டு நிறுவனங்களுடன் கொரோனா தடுப்பூசிக்காக ஒப்பத்தம் செய்துள்ளது அதில் ஒன்று பன்னாட்டு நிறுவனம் அதன் அவுஸ்திரேலிய கிளை ஆண்டு ஒன்றிற்கு 100 மில்லியன் டொலருக்கு  அதிகமான வருவாயை சீனாவிற்கு மருந்து பொருளை ஏற்றுமதி செய்வதனால் ஈட்டி வந்தது, தறபோது 65%  சீன வருவாயை இழந்துள்ளது அந்த நிறுவனம், இந்த ஆண்டின் ஆரம்பத்தில்  அவுஸ்திரேலிய காட்டுத்தீயுனைத்தொடர்ந்து  உலக மாசடைதலுக்கெதிராக 105 மில்லியன் செலவில் 25 மில்லியன் மரம் நடும் திட்டத்தை அவுஸ்திரேலியாவில் செலவிட்டுள்ளது, ஆனால் அவுஸ்திரேலிய அரசின் பூகோள அரசியலினால் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தேசங்களிடியேனான கட்டுப்பாடு அவுஸ்திரேலிய பொருளாதாரத்திற்கு நன்மையே அதிகம் எனநினைக்கிறேன் , அவுஸ்திரேலியாவின் அண்டை நாடான நியூசிலாந்தின் கொரோனா தடுப்பு கொள்கையை கடும்போக்கு என்று குற்றம் சாட்டிய அவுஸ்திரேலிய அரசியல் வாதிகள், அவுஸ்திரேலியாவின் பொருளாதார சரிவு பற்றி பேசும் இக்காலத்தில் நியுசிலாந்து பொருளாதர வளர்ச்சி பற்றிப்பேசுகிறது, இத்தனைக்கும் இரண்டு நாட்டிலும் ஆரம்பத்தில் ஒரே விகிதத்திலேயே கொரோனா பரவியிருந்தது, பரவல் விகிதம் கூட 3.3% (உத்தேச கணிப்பு) ஒன்றாகவிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அவுஸ்திரேலிய பொருளாதார மீட்சியென்பது நுகர்வோர் உறுதித்தன்மை ஏற்படுத்துதலில் தங்கியுள்ளது, வருமான வரி தளர்வு ,நாணய வட்டி விகித இறக்கம, பொருளாதார தூண்டல், தேசிய கட்டுமான அதிகரிப்பு, தேசிய பிணைப்பணம் (அரச பொண்ட்) மீள வாங்குதல் மூலம் ஏற்படுத்தலாம். முக்கியமாக அவுஸ்திரேலிய வெளிவிவகாரக்கொள்கையில் நாட்டின் பொருளாதாரத்தினடிப்படையில் ஏற்படுத்த வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
On 12/9/2020 at 07:20, vasee said:

தேசங்களிடியேனான கட்டுப்பாடு அவுஸ்திரேலிய பொருளாதாரத்திற்கு நன்மையே அதிகம் எனநினைக்கிறேன்

முக்கியமாக அவுஸ்திரேலிய வெளிவிவகாரக்கொள்கையில் நாட்டின் பொருளாதாரத்தினடிப்படையில் ஏற்படுத்த வேண்டும்

எப்படி?

அவுஸ்ரேலியவின் ஏற்றுமதிகளின் பெரும்பங்கு வகிப்பது சீனா(கிட்டதட்ட 45%) ஆனால் இப்பொழுது இருநாடுகளுக்குமிடையே சுமூகமான நிலை இல்லை.. நான் நினைக்கிறேன் அவுஸ்ரேலிய மாட்டிறைச்சி இறக்குமதி தடை தொடங்கி, Barley தொடங்கி தற்பொழுது Australian Wineவிற்கும் பிரச்சனை கொடுக்கிறார்கள். இதனால் பல உள்ளூர் உற்பத்தியாளர்கள் பாதிக்கப்படுகிறார்கள்..ஆகையால் சீனாவைத்தவிர்த்து மாற்றுஇறக்குமதியாளரை கண்டுபிடிக்கவேண்டும்..அது இலகுவான காரியமில்லை. 

உள்ளூர் நுகர்வை அதிகரிக்க வழிமுறைகள் செயற்படுத்தவேண்டும்.. மாநிலங்களுக்கிடையான எல்லைகள் மூடப்பட்டதால், Queensland சுற்றுலாதுறை பாதிக்கப்பட்டுள்ளது.. அதிகளவு வெளிநாட்டு மாணவர்கள் வந்து கல்விகற்கும் மாநிலமான Victoria COVID-19வினால் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை வீழ்ச்சி. வீடுகளின் விற்பனை, கட்டுமான வேலைகள் வீழ்ச்சி.. இதற்கிடையில் Jobseekers allowancesவை குறைப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. 

அடுத்த வரவு செலவுதிட்டத்தினை சமர்ப்பிக்கும் பொழுதே உண்மை நிலவரம் இன்னமும் தெரியவரும். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன உங்கை கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிராய் ஆர்ப்பாட்டம் செய்த ஆக்களுக்கு அடிதடியாமே? 200 பேருக்கு மேலை ஆக்களை உள்ளுக்கு  போட்டாச்சாமே? இஞ்சை ரேடியோ ரிவியிலை பெரிசாய் சொல்லுறாங்கள்....😁

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, குமாரசாமி said:

என்ன உங்கை கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிராய் ஆர்ப்பாட்டம் செய்த ஆக்களுக்கு அடிதடியாமே? 200 பேருக்கு மேலை ஆக்களை உள்ளுக்கு  போட்டாச்சாமே? இஞ்சை ரேடியோ ரிவியிலை பெரிசாய் சொல்லுறாங்கள்....😁

விக்டோரியா மாநிலத்தில்தான் அந்த சம்பவம் நடந்தது. 74 பேர்வரைதான் கைதுசெய்திருக்கிறார்கள். அவுஸ்ரேலியாவிலேயே COVIDவினால் அதிகளவு மக்கள் பாதிக்கப்பட்டது அங்கேதான். Stage 4 restriction அமுல்படுத்தப்பட்டு கடந்த சில வாரங்களாக இரவு 8 மணிக்கு பின் ஊரடங்கும் அமுலில் உள்ளது.. நாளையிலிருந்து இரவு 9 மணி வரை வெளியே நடமாடலாம் என கொஞ்சம் தளர்த்தியுள்ளார்கள்..

https://www.google.com.au/amp/s/amp.theage.com.au/national/victoria/police-arrest-74-and-fine-176-after-vic-market-protest-20200912-p55v1z.html

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

எப்படி?

அவுஸ்ரேலியவின் ஏற்றுமதிகளின் பெரும்பங்கு வகிப்பது சீனா(கிட்டதட்ட 45%) ஆனால் இப்பொழுது இருநாடுகளுக்குமிடையே சுமூகமான நிலை இல்லை.. நான் நினைக்கிறேன் அவுஸ்ரேலிய மாட்டிறைச்சி இறக்குமதி தடை தொடங்கி, Barley தொடங்கி தற்பொழுது Australian Wineவிற்கும் பிரச்சனை கொடுக்கிறார்கள். இதனால் பல உள்ளூர் உற்பத்தியாளர்கள் பாதிக்கப்படுகிறார்கள்..ஆகையால் சீனாவைத்தவிர்த்து மாற்றுஇறக்குமதியாளரை கண்டுபிடிக்கவேண்டும்..அது இலகுவான காரியமில்லை. 

உள்ளூர் நுகர்வை அதிகரிக்க வழிமுறைகள் செயற்படுத்தவேண்டும்.. மாநிலங்களுக்கிடையான எல்லைகள் மூடப்பட்டதால், Queensland சுற்றுலாதுறை பாதிக்கப்பட்டுள்ளது.. அதிகளவு வெளிநாட்டு மாணவர்கள் வந்து கல்விகற்கும் மாநிலமான Victoria COVID-19வினால் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை வீழ்ச்சி. வீடுகளின் விற்பனை, கட்டுமான வேலைகள் வீழ்ச்சி.. இதற்கிடையில் Jobseekers allowancesவை குறைப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. 

அடுத்த வரவு செலவுதிட்டத்தினை சமர்ப்பிக்கும் பொழுதே உண்மை நிலவரம் இன்னமும் தெரியவரும். 

நிச்சயமாக தேசங்களிடையேயான தடை பொருளாதாரத்தைப்பாதிக்கும் ஆனால் கடுங்கட்டுப்பாடு சமூகப்பரவலைக்கட்டுப்படுத்தும் ( பரவல் தடயமற்ற பரவலை), நியூசிலாந்து பரவல் ஆரம்பமான முதல் மாதம் 4 வாரங்களிற்கு இவ்வாறான தடையை அறிமுகப்படுத்தியது, ஆனால் அரசுகள் கடும் கட்டுப்பாடுகள் தேசத்தின் பொருளாதாரத்தினைப்பாதிக்கும் என்பதால் கடுமையற்ற கொள்கைகளை அமுல் படுத்தின ஆனால்  அது பலனளிக்கவில்லை இந்த காலாண்டிற்கான மொத்த தேசிய உற்பத்தி அமெரிக்கா -9% , பிரித்தானியா -20% மற்றும் அவுஸ்திரேலியா -7% என்று செல்கிறது, சீனா இம்மாத முதலாம் திகதி முதல் முற்று முழுதாக தடைகளை நீக்கி சாதாரண வாழ்க்கைக்குத்திரும்புகிறது அங்கு அவர்கள் வலயங்கள் முதலாக வேறுபடுத்தப்பட்ட கடுமையான கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தியிருந்த்தனர்.

அவுஸ்திரேலியா பொருளாதார நலனையே முதன்மைப்படுத்தி மென்போக்கான கொள்கையைக்கடைப்பிடித்தது அது நீண்டகால பொருளாதார நெருக்கடிக்குள்ளேயே தள்ளும் ஏனெனில் நோயிற்கு தடுப்பூசி கண்டுபிடித்துவிடலாம் என்ற நம்பிக்கையில் எடுக்கப்பட்ட முடிவு.

சீன மாணவர்களின் வருகை இன்மையால் 11 பில்லியன் இழப்பு ஏற்பட்டுள்ளது அதற்குக்காரணம் அவுஸ்திரேலியரின் இனத்துவேசம் என்ற வகையான செய்திகள் சீனாவில் வெளியிடப்பட்டது, அதில் ஓரளவு உண்மையும் உண்டு.

எந்த கடுமையான முடிவுகளையும் எடுக்கும் போது மக்கள் நலன் சார்ந்தே எடுக்கவேண்டும் பொருளாதாரமா மக்கள் உயிரா என்றால் மக்கள் உயிர் தான் முக்கியம், நியுசிலாந்து எப்படி நோயிற்க்கெதிராகக்கடும் கட்டுப்பாடை பிறப்பித்து துணிகரமான முடிவெடுத்ததோ அதே போல் தற்சமயம் பணத்திற்கான வட்டி விகிதத்தினை (0.25%) 75 புள்ளிகளால் குறைத்து -0.5 ஆக்க முடிவெடுத்துள்ளதாக வதந்தி உலவுகிறது சுவீடன் மற்றும் ஜப்பானுடன் நியுசிலாந்தும் இணைகிறது, பொருளாதார வளர்ச்சியிலும் அவர்கள் துணிகரமான முடிவெடுக்கிறார்கள். 

வீடுகளின் விலை வீழ்ச்சியில் அதிக பங்கு வகிப்பது சீனர்களின் பங்கு கடந்த ஆண்டுகளில் 14% இலிருந்து இவ்வாண்டில் 2% மாகக்குறைந்துள்ளது ஒரு முக்கிய காரணம்

Edited by vasee

  • கருத்துக்கள உறவுகள்

 WA இல்லாவிட்டால் மற்ற மாநிலங்களுக்கு வருமானமில்லை😁

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.