Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தென்னை மரத்தில் ஏறி தேங்காய் பறித்த அமைச்சர் !

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தென்னை மரத்தில் ஏறி தேங்காய் பறித்த அமைச்சர் !

தெங்கு, கித்துல், பனை மற்றும் இறப்பர் செய்கை ஊக்குவிப்பு மற்றும் அது சார்ந்த கைத்தொழில், உற்பத்தி மற்றும் ஏற்றுமதி பல்வகைப்படுத்தல் இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோ, தேங்காய் பறிக்கும் உபகரணத்தைப் பயன்படுத்தி தங்கொட்டுவையிலுள்ள தனது வீட்டுத் தோட்டத்தில் வெள்ளிக்கிழமை (18) தேங்காய்களை பறித்துள்ளார்.

spacer.png

இவ்வாறு தென்னை மரத்தில் ஏறி தேங்காய்களை பறித்த இராஜாங்க அமைச்சர், தென்னை மரத்தில் இருந்தபடியே ஊடகங்களுக்கும் கருத்து தெரிவித்தார்.

இலங்கையில் உள்ள தொழிற்சாலைகள் மற்றும் உள்ளூர் நுகர்வோருக்கு தேங்காயின் தேவை அதிகமாக காணப்படுவதே நாட்டில் தேங்காய்க்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளமைக்கான காரணமாகும்.

வருடத்தில் 2.8 மில்லியன் தேங்காய் உற்பத்தி செய்யப்படுகிறது. 

இதில் 700 மில்லியன் தேங்காய்களை தொழிற்சாலைகள் கொள்வனவு செய்கின்றன. 

1.8 மில்லியன் தேங்காய்களையே நுகர்வோர் கொள்வனவு செய்கின்றனர்.

எனவேதான் தென்னை மரக் கன்றுகளை அதிகளவில் நடுவதற்கு எதிர்பார்த்துள்ளோம். 

தேங்காயின் விலை எவ்வளவுதான் அதிகரித்துக் காணப்பட்டாலும் அதை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கப்படமாட்டாது என்றும் இராஜாங்க அமைச்சர் கூறினார்.

வரக்காப்பொல மெனிக்கடவல பிரதேசத்தைச் சேர்ந்த உபுல் குமார என்பவர் தயாரித்த குறித்த தேங்காய் பறிக்கும் உபகரணத்தைப் பயன்படுத்தியே  இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோ தென்னை மரத்தில் ஏறி தேங்காய்களை பறித்தார்.

குறித்த உபகரணத்தை பயன்படுத்தி ஆண்கள் மாத்திரமின்றி, பெண்களும் மரத்தில் ஏறி தேங்காய்களை பறிக்க (அறுவடை) கூடிய வகையில் அந்த உபகரணம் அமைக்கப்பட்டுள்ளது. 

அடுத்த சில மாதங்களில் குறித்த உபகரணம் சந்தையில் விற்பனைக்காக அறிமுகப்படுத்தப்படவுள்ளது என்றும் இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
 

 

https://www.virakesari.lk/article/90233

Edited by கிருபன்

  • கருத்துக்கள உறவுகள்

உள்நாட்டு கண்டுபிடிப்புகள் ஊக்குவிக்கப்பட வேண்டும்.......!   👍

தேங்காய் விலையை மட்டுப்படுத்த புதிய திட்டம்

சடுதியாக விலை உயர்ந்து வரும் தேங்காய்கான விலையை மட்டுப்படுத்தும் நோக்கில் புதிய திட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

அதன்படி தேங்காய் உற்பத்தியை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும், அதனால் தேங்காய் விலையை மட்டுபடுத்த முடியாதென்றும் இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். 

அத்தோடு, தேங்காய் விலை அதிகரிப்பு தொடர்பாக அமைச்சரவையிலும் ஆராயப்பட்டதென அவர் தெரிவித்துள்ளார்.  

http://www.tamilmirror.lk/செய்திகள்/தஙக-ய-வலய-மடடபபடதத-பதய-தடடம/175-255611

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

வருடத்தில் 2.8 மில்லியன் தேங்காய் உற்பத்தி செய்யப்படுகிறது. 

இதில் 700 மில்லியன் தேங்காய்களை தொழிற்சாலைகள் கொள்வனவு செய்கின்றன. 

என்ன கணக்கு இடிக்குது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, vanangaamudi said:

என்ன கணக்கு இடிக்குது.


இடிக்குதுதான்!

To get the message across to people about the coconut shortage, Sri Lankan Minister of State for Coconut Arundika Fernando climbed a coconut tree and said the country was facing a shortage of 700 million coconuts due to high demand for local industry and domestic consumption.

 

 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, vanangaamudi said:

என்ன கணக்கு இடிக்குது.

கணக்கை கணக்க யோசிக்கப்படாது வணங்காமுடி & கிருபன் ஜி ..... 2.8 மில்லியனை பில்லியன் என்று வாசியுங்கள். எங்கேயும் இடிக்காது.....!  😎

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, suvy said:

கணக்கை கணக்க யோசிக்கப்படாது வணங்காமுடி & கிருபன் ஜி ..... 2.8 மில்லியனை பில்லியன் என்று வாசியுங்கள். எங்கேயும் இடிக்காது.....!  😎

பில்லியன்தான் சரியாம்!

தென்னை மரத்தில் ஏறிய இலங்கை அமைச்சர் அருந்திக்க பெர்ணான்டோ

19 செப்டெம்பர் 2020
sri lanak coconut
 

இலங்கையில் வழமையாக நடத்தப்படும் ஊடகவியலாளர்கள் சந்திப்புக்களை தாண்டி வித்தியாசமான ஊடகவியலாளர் சந்திப்பொன்றை இலங்கை ராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்ணான்டோ நடத்தியிருந்தார். 

புத்தளம் - தங்கொட்டுவை பகுதியில் தென்னை மரமொன்றின் மீதேறி இந்த ஊடகவியலாளர் சந்திப்பு நடத்தப்பட்டது. 

தென்னை, பனை, கித்துல் ராஜாங்க அமைச்சர் என்ற விதத்திலேயே, அருந்திக்க பெர்ணான்டோ இந்த ஊடக சந்திப்பை நடத்தியிருந்தார்.

உலக சந்தையில் தென்னை மற்றும் அதன் சார்ந்த உற்பத்தி பொருட்களுக்கான தட்டுப்பாடு அதிகரித்துள்ள நிலையில், இந்த ஊடக சந்திப்பு நடத்தப்பட்டிருந்தது. 

இலங்கையிலும் தென்னை மற்றும் அதன் சார்ந்த உற்பத்தி பொருட்களுக்கான கேள்வி அதிகரித்துள்ளதாக அருந்திக்க பெர்ணான்டோ கூறியுள்ளார். 

தங்கொட்டுவை பகுதியிலுள்ள அவரது வீட்டுத் தோட்டத்திலுள்ள தென்னை மரமொன்றின் மீதேறி, அருந்திக்க பெர்ணான்டோ தேங்காய்கள் சிலவற்றை பறித்துள்ளார். 

இதையடுத்து, குறித்த மரத்திலிருந்து அவர் ஊடக சந்திப்பை நடத்தினார். 

தென்னை மரமொன்றிற்கு ஏறும் ஒருவருக்கு 100 இலங்கை ரூபாய் வழங்கப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். 

தேங்காய் பறித்தல் மற்றும் தென்னங் கள் உற்பத்தி ஆகியவற்றிற்கு தற்போது பணியாளர்களை தேடிக்கொள்வது கூடி கடினமான விடயம் என அவர் கூறியுள்ளார். 

குறிப்பாக தென்னங் கல்லு உற்பத்தி செய்வோர் இலங்கையில் தற்போது குறைவடைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். 

மரத்தில் ஏறுவதற்கும், இரு மரங்களுக்கு இடையில் கயிற்றின் உதவியுடன் செல்வதற்கும் காணப்படுகின்ற அச்ச நிலைமையும் இந்த தொழில்துறை வீழ்ச்சி அடைந்துள்ளமைக்கான காரணம் என அவர் குறிப்பிடுகின்றார். 

இலங்கை மக்களின் பயன்பாட்டிற்காக வருடாந்தம் சுமார் 2.8 பில்லியனுக்கும் அதிகமான தேங்காய் உற்பத்தி இந்த நாட்டில் காணப்படுவதாகவும் அவர் கூறுகின்றார்.

எனினும், அந்த 700 மில்லியன் தொழில்துறையில் தட்டுப்பாடு காணப்படுவதாக கூறும் ராஜாங்க அமைச்சர், வருடாந்த பயன்பாட்டிற்காக 1.8 பில்லியன் தேங்காய்கள் தேவைப்படுவதாகவும் அவர் குறிப்பிடுகின்றார். 

இதனால் தென்னை செய்கையை மேம்படுத்தி, பாரியளவிலான அந்நிய செலாவணியை நாட்டிற்குள் கொண்டு வர நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்துள்ளார். 

தேங்காய் விலையை குறைப்பதற்காக தற்போதைய சூழ்நிலையில், தற்காலிக தீர்வுகள் சிலவற்றை எடுக்க முயற்சித்து வருவதாகவும், தேங்காய் விலையை அதிகரிக்காதிருக்க எதிர்காலத்தில் நீண்ட கால திட்டமொன்றை வகுக்கவுள்ளதாகவும் அவர் கூறுகின்றார். 

இந்த நிலையில், தேங்காயின் விலை எவ்வளவு அதிகரித்தாலும், வெளிநாடுகளிலிருந்து தேங்காய் இறக்குமதி செய்யப்படாது என அமைச்சர் உறுதியளித்துள்ளார். 

அருந்திக்க பெர்ணான்டோ எவ்வாறு மரத்தில் ஏறினார்?

கேகாலை - வரகாபொல பகுதியிலுள்ள புதிய கண்டுபிடிப்பாளர் ஒருவரினால் கண்டுபிடிக்கப்பட்ட மரம் ஏறும் உபகரணமொன்றை பயன்படுத்தியே அருந்திக்க பெர்ணான்டோ தென்னை மரத்தில் ஏறினார். 

குறித்த உபகரணத்தை பயன்படுத்தி நாளொன்றிற்கு சுமார் 100 உயரமான தென்னை மரங்களில் ஏற முடியும் என அவர் குறிப்பிடுகின்றார். 

இந்த உபகரணத்தை பயன்படுத்தி மரமொன்றிற்கு ஏறுவதற்கு 100 ரூபாய் அறவிடப்படுமேயானால், நாளொன்றில் 10 ஆயிரம் ரூபாயை தனிநபர் ஒருவரினால் உழைக்க முடியும் எனவும் அவர் கூறியுள்ளார். 

இந்த உபகரணமானது 19 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படவுள்ளதுடன், அதனை மிக விரைவில் இலங்கை சந்தைக்கு கொண்டு வர அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் எனவும் அருந்திக்க பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். 

தென்னை செய்கையாளர்களில் பதில்

இலங்கை வரலாற்றில் முதல் முறையாக தேங்காய் ஒன்றின் விலை 100 ரூபாய் வரை அதிகரித்துள்ளதாக தென்னை உற்பத்தி மற்றும் செய்கையாளர்கள் சங்கத்தின் உப தலைவர் ஜயரத்ன ஜயசேகர தெரிவிக்கின்றார்.

தேங்காய் விற்பனையின் ஊடாக குறைந்த இலாபத்தை கூட பெற்றுகொள்ள முடியவில்லை என அவர் கூறினார்.

இலங்கையில் தேங்காய் செய்கையாளர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுக்கின்றார்

 

https://www.bbc.com/tamil/sri-lanka-54219909

  • கருத்துக்கள உறவுகள்

சுவி நீங்கள் சொல்வது சரி.

இலங்கை தெங்கு அபிவிருத்தி அதிகாரசபையின் தகவலின்படி 2019 இல் இலங்கையின் மொத்த தேங்காய் உற்பத்தி அண்ணளவாக 3.1 பில்லியன் தேங்காய்கள். இதில் உள்ளூர் நுகர்வோர் தேவைகளுக்கு 1.8 பில்லியன் தேங்காய்கள் பயன்படுத்தியதுபோக மீதி பல்வேறு உற்பத்திப்பொருட்களுக்கும் ஏற்றுமதிக்கும் பயன்படுத்தப்படுகிறது.

2018 இல் உற்பத்தி 2.6 பில்லியன்கள். 2017 இல் 2.5 பில்லியன் அதற்கு முதல் 2016 இல் 3.0 பில்லியன்கள். உலக தேங்காய் உற்பத்தியில் இலங்கை 5 ஆம் இடத்தில் உள்ளது.

Edited by vanangaamudi

  • கருத்துக்கள உறவுகள்

ஹா....ஹா..... இப்படி ஏகப்பட்ட திறமைகள் என்னிடம் தேங்கிக் கிடக்கு.....போறவழியில அப்பப்ப இப்படி ஒன்றிரண்டை எடுத்து விடுவேன்......!   🤣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தேங்காய் கூடாது எண்டு சனம் காட்டுக்கத்து கத்திக்கொண்டிருக்கு......இஞ்சை என்னடா எண்டால் மில்லியன்,பில்லியன்  கணக்கிலை தேங்காய் புடுங்கீனமாம்......
அது சரி புண்ணாக்கு,கலியாணவீட்டுக்கு கோலம் போட தேங்காய்ப்பூ வேணுமெல்லே...😎

  • கருத்துக்கள உறவுகள்

119457810_1900682636751879_2988629640587835500_n.png?_nc_cat=106&_nc_sid=730e14&_nc_ohc=ge8WEqJbYA4AX_I4YYk&_nc_ht=scontent-frt3-1.xx&oh=1ade5886152adfc0c423cddc3b21dcdc&oe=5F8D3EA0

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, கிருபன் said:

தென்னை மரமொன்றிற்கு ஏறும் ஒருவருக்கு 100 இலங்கை ரூபாய் வழங்கப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். 

 

8 hours ago, கிருபன் said:

குறிப்பாக தென்னங் கல்லு உற்பத்தி செய்வோர் இலங்கையில் தற்போது குறைவடைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். 

 

7 hours ago, குமாரசாமி said:

தேங்காய் கூடாது எண்டு சனம் காட்டுக்கத்து கத்திக்கொண்டிருக்கு......இஞ்சை என்னடா எண்டால் மில்லியன்,பில்லியன்  கணக்கிலை தேங்காய் புடுங்கீனமாம்......
அது சரி புண்ணாக்கு,கலியாணவீட்டுக்கு கோலம் போட தேங்காய்ப்பூ வேணுமெல்லே...😎

மரத்திற்கு 100 ரூபாய் கொடுத்தால் இலங்கை விலைவாசிப்படி கள்ளுக்கு கட்டுபடி ஆகுமா தோழர்.? 😢

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.