Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொழும்பு விடுதிகளிலிருந்து 500 தமிழர்கள் கட்டாய வெளியேற்றம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பு விடுதிகளிலிருந்து 500 தமிழர்கள் கட்டாய வெளியேற்றம்

சிறிலங்கா தலைநகரான கொழும்பு, வெள்ளவத்தைப் பகுதியில் விடுதிகளில் தங்கியிருந்த 500-க்கும் மேற்பட்ட தமிழர்களை சிறிலங்கா காவல்துறையினர் பலவந்தமாக வெளியேற்றி உள்ளனர்.

வெள்ளவத்தையில் உள்ள 10-க்கும் மேற்பட்ட விடுதிகளை இன்று வியாழக்கிழமை காலை 6 மணியளவில் சுற்றிவளைத்த சிறிலங்கா காவல்துறையினர் அங்கு தங்கியிருந்த குழந்தைகள், முதியவர்கள் என அனைவரையும் வெளியேற்றினர்.

அதன் பின்னர் அனைவரையும் வெள்ளவத்தை சிறிலங்கா காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று அங்கிருந்து 7 பேரூந்துகளில் ஏற்றி கொழும்பு புறநகர் பகுதியான பேலியகொடவில் இறக்கிவிட்டனர்.

சிறிலங்காவின் இந்த கொடூர நடவடிக்கைக்கு மேலக மக்கள் முன்னணியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் உள்ளிட்ட மக்கள் கண்காணிப்புப் பிரதிநிதிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தும் மேலிடத்து உத்தரவு என்று சிறிலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தமிழீழப் பகுதிகளிலிருந்து கொழும்புக்கு வரும் தமிழர்கள் இனி தங்கக்கூடாது என்கிற வகையில் அரசாங்கத்தின் இந்நடவடிக்கை அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.

அதேபோல் மருதானை, புறக்கோட்டை ஆகிய இடங்களில் விடுதிகளில் உள்ள 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ் மக்களையும் சிறிலங்கா அரசாங்கம் வெளியேற்றக்கூடும் என்றும் கொழும்பு பகுதிகளிலிருந்து வெளியேற்றப்படும் தமிழர்களை வவுனியாவில் இறக்கிவிட திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

-புதினம்

  • Replies 70
  • Views 6.7k
  • Created
  • Last Reply

இவர்கள் எல்லோரையும் பஸ்ஸில் ஏற்றிக் கொண்டு கண்டிவீதியால் செல்கிறார்களாம். உள்ளே இருக்கும் அனைத்து மக்களும் கதறி அழுகின்றனராம்.

7 பேரூந்துகளில் ஏற்றி கொழும்பு புறநகர் பகுதியான பேலியகொடவில் இறக்கிவிட்டனர்.

பேலியகொடவில் அவர்களுக்கு ஏதேனும் தங்குமிட வசதிகள் செய்து கொடுக்கப்பட்டதா? அல்லது இடைத்தங்கல் முகாம் ஒன்றில் அடைக்கப்பட்டனரா? எதிர்காலத்தில் அவர்களின் நிலை பற்றி ஏதேனும் திட்டம் உள்ளதா? அதற்கு யார் பொறுப்பு? இரா சம்பந்தன் அவர்களை சென்று சந்தித்தாரா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சம்பந்தன் சந்தித்து என்ன செய்வது?

வெள்ளவத்தையில் இச்சம்பவம் நடக்கின்றபோது மகேஸ்வரன் வந்தார் என்று சொல்லுறாங்கள். அவரையும் வெளியால போகச் சொல்லித் துரத்தியடிச்சாங்களாம்.

இந்த லட்சணத்தில் எப்படி சம்பந்தன் வந்து ஏதாவது செய்றது?

சில இடங்களில் சில வீட்டுக்காரர்களையும் ஏற்றிக் கொண்டு சென்றுள்ளார்கள் அத்துடன் கொட்டகேனா பகுதியில் வீடுகளில் வாடகைக்கு இருப்பவர்களையும் எச்சரிக்கை விடுத்திருக்கின்றார்கள்.

இப்பபொழுதும் வெள்ளவத்தை இராமகிருசுனா வீதியில் இருந்து ஏற்றிக் கொண்டு செல்கிறார்கள்.

SL Police expel Tamils from Colombo lodges

Despite the assurances by the Sri Lankan Government Information department last week citing the Head of the state, Mahinda Rajapaksa, that all citizens would be treated equally, Sri Lankan Policemen in Colombo Thursday launched search operations and entered the private lodges to forcefully evacuate the Tamil tenants, initial reports from Colombo said. A large number of policemen have been deployed on duty since 4:00 a.m. on the roads in Wellawatte and Pettah areas.

Hundreds of civilians have been packed in busses to be sent away, initial reports said. The Police raid was going on in four police divisions, Wellawatte, Kotahena, Pettah (Peaddai) and Wattala. 47 Tamils were forcefully taken from a single lodge located in Station Road in Wellawatte. Another lodge in the area reported 35 persons were taken away by the Police. Many lodges have been raided in all the four police divisions.

Eyewitnesses said four buses full of Tamil civilians from NorthEast were parked in front of Kotahena Police Station.

Reports further said more than 3 buses were to be sent to Vavuniyaa and a similar number of buses to the east port town.

Last Thursday, the Police Officer-in-Charge (OIC) of Pettah Police division, Chief Inspector Jayaratne, summoned lodge owners and gave instructions to immediately expel around 5000 Tamil tenants from Northeast and Upcountry staying in 68 lodges in Pettah Police division.

Later, the Information department of the Sri Lanka Government denied the reports of the instructions reportely given by the Police OIC.

The Sri Lankan Police IGP Victor Perera who launched a new Tourist Police Unit last week had said everyone having a valid reason to stay in lodges were free to stay.

-Tamilnet-

  • கருத்துக்கள உறவுகள்

யூதமக்களை நாசிப்படைகள் நச்சுக்கூடத்துக்கு ரெயின்களில் ஏற்றிச் சென்ற சம்பவத்தை இது மீண்டும் ஞாபகப்படுத்துகின்றது. இப்போதும் கூட கொழும்பில் இருந்து சுட்டுக் கொல்வது கடினமென்பதால் வவுனியாவிற்கும், திருமலைக்கும் கொண்டு சென்று தினக்கொலை செய்து இன்பம் காண மகிந்த சிந்திக்கின்றார் போலும்.

சம்பந்தன் பேசி ஆகப்போவது ஒண்டுமில்லை, ஆனால் இதற்குக் கூட வெளியில் வராமல் அரசியல் நடத்தும் இவர் கருணாநிதியிடம் தான் அரசியல் கற்றாரோ? வீரத்தளபதிகளான ஜோசப் பரராஜசிங்கம், ரவிராஜ் போன்றோரை பலி கொடுத்த பின் இப்போது அவர் களமிறங்கும் முறை! செய்வாரா அவர்?

இதற்குப்பிறகும் கொழும்பில் குண்டு வெடித்தா என்ன நடக்கும்?

பிளட்டுகளில் பல்கிப்பெருகி வாழும் கொழும்புத் தமிழரும் பஸ்சுகளில் கொண்டு செல்லப்பட்டு பாணந்துறையில் விடப்படுவார்களா?

அப்படி நடந்தால் போராட்டத்திற்குத் தோழ் கொடுக்காத கொழும்பு வாழ் தமிழர் என்ற பழிச்சொல் நிங்கும்!

வினாச காலே விபரீத புத்தி என்பார்கள்!

இதை தமிழில் "கெடு குடி சொல் கேளாது" என்றும் சொல்வார்கள்.

அந்த நிலைக்கு சிறிலங்காவின் இனவெறி பிடித்த சிங்கள அரசு வந்து விட்டது என்பதற்கு இது ஒரு உச்சகட்ட ஆதாரம். விடுதலைக்கு இன்னும் கொஞ்ச காலமே தான்! சந்தேகமில்லை.

Parliament adjourned, Tamil MPs protest against expelling of Tamils.

The Sri Lankan Parliament was adjourned after Tamil parliamentarians demanded a debate over the forceful expelling of Tamil inmates from the lodges in Colombo and its suburbs Thursday morning.

SL opposition leader Ranil Wickramasinghe reacted against the expelling of Tamils and called for a debate.

The Chief Government Whip Jeyaraj Fernandopulle refused to debate with Tamil National Alliance parliamentarians.

The UNP Tamil MP for Colombo, T. Maheswaran removed his shirt and throwed it in the well of the house.

Jaffna MP S. Kajendran tore a copy of the SL constitution apart.

The house was adjourned at 10:00 a.m

-Tamilnet-

Edited by யாழ்வினோ

கொழும்பு தமிழர்கள் வெளியேற்றம்: விவாதம் நடத்த த.தே.கூ கோரிக்கை- நாடாளுமன்றம் ஒத்திவைப்பு.

கொழும்பில் தமிழர்கள் கட்டாயமாக வெளியேற்றப்பட்டதைக் கண்டித்து சிறிலங்கா நாடாளுமன்றத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இன்று முடக்கினர்.

கொழும்பு மற்றும் கொழும்பு புறநகர்ப் பகுதிகளில் இன்று வியாழக்கிழமை காலை முதல் விடுதிகளி தங்கியிருந்த பெருந்தொகையான தமிழர்கள் கட்டாயமாக வெளியேர்றப்பட்டனர்.

இது தொடர்பாக சிறிலங்கா நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இன்று வலியுறுத்தினர்.

தமிழர்கள் கட்டாயமாக வெளியேற்றப்படுவதற்கு எதிர்க்கட்சித் தலைவரான ரணில் விக்கிரமசிங்கவும் எதிர்ப்புத் தெரிவித்தார்.

ஆனால் இது தொடர்பாக விவாதம் நடத்த முடியாது என்று அரசாங்க தலைமை கொறாடா நிரகாரித்துவிட்டார்.

இதனையடுத்து ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டி. மகேஸ்வரன், தனது மேற்சட்டையை கழற்றி நாடாளுமன்றத்துக்குள் வீசினார்.

சிறிலங்கா அரசியல் யாப்பை யாழ்ப்பாண நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். கஜேந்திரன் கிழித்தெறிந்தார்.

இதனைத் தொடர்ந்து நாடாளுமன்றம் முற்பகல் 10 மணியளவில் ஒத்திவைக்கப்பட்டது.

-Puthinam-

அச்சுறுத்தல்கள் விடுதியில் வாழும் தமிழர்களால் அல்ல

அரசுக்குள் உள்ள அசுமாந்திரக்காரர்களால் என்பது விரைவில் புரியும்..

விடுதலைப்புலி விடுதியில் தங்குமாங்கிறேன்..

தமிழர் தரப்பு ஆரம்பத்திலிருந்தே வலியுறுத்தி வந்த இரண்டு விடயங்களான,

1) தமிழரின் தாயகம் வடக்குக்கிழக்கு

2) சிங்களவரோடு இணைந்து தமிழர்களால் வாழ முடியாது

என்பவற்றை இன்று சிங்கள அரசு(எதிர்த் தரப்பு) இந்த நடவடிக்கை மூலம் பகிரங்கமாக ஏற்றுக்கொண்டுள்ளதை தொடர்ந்து, இருதரப்பு அங்கீகாரத்துடனான தமிழரின் தனிநாட்டை ஐ.நா உடனடியாக அங்கீகரிக்க முன்வரவேண்டும்!

தமிழரின் தாயக பிரதேசத்தில் அத்துமீறீயிருக்கும் மிருகங்களை முதலில் வெளியேற்றவேண்டும் அவர்களை வெளியேற்றி எமது தாய்மண்ணை மீட்டு தனிநாடக்கும் மட்டும் இந்த அராஜக போக்காளர்களின் செயல்கள் தொடரும்.

உலக நாடுகள். தூவர்கள் எல்லாம் என்னத்த **** புடுங்கிட்டு இருக்கிறார்கள்...........?

கொழும்பு, வெள்ளவத்தைப் பகுதியில் தமிழர்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

வெள்ளவத்தையில் உள்ள 10-க்கும் மேற்பட்ட விடுதிகளை இன்று காலை 6 மணியளவில் சுற்றிவளைத்த சிறிலங்கா காவல்துறையினர் அங்கு தங்கியிருந்த குழந்தைகள், முதியவர்கள் என விடுதிகளில் தங்கியிருந்த 500-க்கும் மேற்பட்ட தமிழர்களை சிறிலங்கா காவல்துறையினர் பலவந்தமாக வெளியேற்றி உள்ளனர்.

அதன் பின்னர் அனைவரையும் வெள்ளவத்தை சிறிலங்கா காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று அங்கிருந்து 7 பேரூந்துகளில் ஏற்றி கொழும்பு புறநகர் பகுதியான பேலியகொடவில் இறக்கிவிட்டனர். சிறிலங்காவின் இந்த கொடூர நடவடிக்கைக்கு மேலக மக்கள் முன்னணியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் உள்ளிட்ட மக்கள் கண்காணிப்புப் பிரதிநிதிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தும் மேலிடத்து உத்தரவு என்று சிறிலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தமிழீழப் பகுதிகளிலிருந்து கொழும்புக்கு வரும் தமிழர்கள் இனி தங்கக்கூடாது என்கிற வகையில் அரசாங்கத்தின் இந்நடவடிக்கை அமைந்துள்ளதாக கூறப்படுகிறது அதேபோல் மருதானை, புறக்கோட்டை ஆகிய இடங்களில் விடுதிகளில் உள்ள 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ் மக்களையும் சிறிலங்கா அரசாங்கம் வெளியேற்றக்கூடும் என்றும் கொழும்பு பகுதிகளிலிருந்து வெளியேற்றப்படும் தமிழர்களை வவுனியாவில் இறக்கிவிட திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

-Sankathi-

தமிழர் தரப்பு ஆரம்பத்திலிருந்தே வலியுறுத்தி வந்த இரண்டு விடயங்களான,

1) தமிழரின் தாயகம் வடக்குக்கிழக்கு

2) சிங்களவரோடு இணைந்து தமிழர்களால் வாழ முடியாது

என்பவற்றை இன்று சிங்கள அரசு(எதிர்த் தரப்பு) இந்த நடவடிக்கை மூலம் பகிரங்கமாக ஏற்றுக்கொண்டுள்ளதை தொடர்ந்து, இருதரப்பு அங்கீகாரத்துடனான தமிழரின் தனிநாட்டை ஐ.நா உடனடியாக அங்கீகரிக்க முன்வரவேண்டும்!

சிங்களவர் இந்த 2 விடயங்களையும் ஏற்றுக்கொள்லவில்லை. மாறாக ஒற்றையாட்சி பற்றியும் ஐக்கிய இலங்கை பற்றியும் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

அத்துடன் தமிழர்களுக்கு இலங்கையில் சம உரிமை உண்டு என்பதையும் ஏற்றுக்கொள்ளவில்லை.

Police evict Tamils from Colombo (BBC World News)

Police in Sri Lanka have forced hundreds of the minority Tamil community out of the capital Colombo for what they say are security reasons.

They launched overnight raids in Tamil areas of the city and forced guests staying in budget hotels onto buses.

Police said that Tamils who were in the capital "without valid reasons" were made to board buses bound for the north and east of the island.

Police said that the move was necessary amid fears of renewed civil war.

'Bad example'

They say that the crackdown is part of continuing efforts to stop the Tamil Tigers infiltrating the city of 600,000 people.

They also say the measure is also being taken for the safety of the Tamil community amid a rash of abductions across Colombo blamed on the rebels and the security forces.

There has so far been no immediate comment from the government or the rebels about the move, but mainstream Tamil political leaders have condemned it.

"This operation is a very bad example," Tamil political leader Dharmalingam Sithadthan told the AFP news agency.

"It is OK for the Tamil Tigers to indulge in this sort of ethnic cleaning because they have no moral responsibility, but a government can't behave like this," he said.

'Serious violation'

Officials told the Reuters news agency that 291 men and 85 women were sent in seven buses, six towards the northern district of Vavuniya - in the front line of recent fighting - and one busload to the eastern district of Batticaloa.

"Some people who had no valid reasons to be in Colombo and are just hanging around, they have been requested to leave and told they had better get back to their own villages," Colombo Inspector General of police Rohan Abeywardene told Reuters.

Correspondents say that hundreds of Tamils, many from impoverished rural areas, live in boarding houses in Colombo while they seek work at home or abroad.

Many ethnic Tamils complain they have been deliberately targeted by the security forces, detained and searched.

One man forced to board one of the buses called the private local radio station Sirisa FM from a mobile phone.

"The police came and took us and put everyone on the bus," he said, saying the bus was about 32km (20 miles) outside the capital, heading northeast.

"We don't know where we are being taken."

Human rights campaigners and other observers say they are shocked at what they say is a serious violation of human rights.

"This is almost like a variation of ethnic cleansing," Paikiasothy Saravanamuttu of the independent Centre for Policy Alternatives think-tank told Reuters.

-BBB News-

வெள்ளவத்தை பம்பலப்பிட்டி விடுதிகளில் தங்கியிருந்த 300 ற்கும் மேற்ப்பட்ட தமிழர்கள் வெளியேற்றப்பட்டனர்.

இன்று காலை 7 மணிக்கு சுமார் 5 ற்கும் மேற்ப்பாட்ட பஸ்களில் பம்பலப்பிட்டி வெள்ளவத்தை பகுதியில் உள்ள விடுதிகள் (lodge) தங்கியிருந்த தமிழர்கள் பொலிஸாரின் உதவியுடன் பலவந்தமாக வெளியேற்றப்பட்டுள்ளனர். இன்று அதிகாலை 12 மணியளவில் இன்று பார்ய தேடுதல் நடவடிக்கையில் இராணுவத்தினர், பொலிஸார் கூட்டமாக ஈடுப்பட்டனர்.

இதன் போது பல விடுதிகள் சல்லடை போட்டு தேடுதல் நடாத்திய போது விடுதிகளில் தங்கியிருந்தவர்கள் வயது வேறுப்பாடு இன்றி வெள்ளைவத்தை பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர் பின்னர் இவர்கள் பெட்டி படுக்கைகளுடன் பலவந்தமாக ஏற்றப்பட்டு வவுனியா கொண்டு செல்லப்பட்டுள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன. பஸ்களில் ஏற்றப்பட்டவர்கள் பொலிஸ் பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

-Virakesari-

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பேலியகொடவில் அவர்களுக்கு ஏதேனும் தங்குமிட வசதிகள் செய்து கொடுக்கப்பட்டதா? அல்லது இடைத்தங்கல் முகாம் ஒன்றில் அடைக்கப்பட்டனரா? எதிர்காலத்தில் அவர்களின் நிலை பற்றி ஏதேனும் திட்டம் உள்ளதா? அதற்கு யார் பொறுப்பு? இரா சம்பந்தன் அவர்களை சென்று சந்தித்தாரா?

இல்லை ஈபிடிபி தலைவர் டக்கு போய் எல்லாரையும் கூட்டி கொண்டு போய் வீட்டில் வைத்து இருக்கீறார் அதில வயது குறைந்த கொஞ்ச பெடியலை ஆனந்தம் சங்கரி கூட்டி கொண்டு போய் வைச்சு இருக்கார்.

சிங்களவர் இந்த 2 விடயங்களையும் ஏற்றுக்கொள்லவில்லை. மாறாக ஒற்றையாட்சி பற்றியும் ஐக்கிய இலங்கை பற்றியும் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

அத்துடன் தமிழர்களுக்கு இலங்கையில் சம உரிமை உண்டு என்பதையும் ஏற்றுக்கொள்ளவில்லை.

சொல்லளவில் தான் அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லையே தவிர, அவர்களின் இந்தச் செயற்பாடு மேற்படி முடிவுகளையே எதிர் மறையாக வலியுறுத்தி நிற்கின்றது. இதனை சான்றாகக் கொண்டு பல விடயங்களை நிருபிக்க முடியும்!

சர்வதேச மட்டத்திற்கு இச்சம்பவம் எடுத்துச் செல்லப்பட வேண்டும்!

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டை பிரிவு படுத்துவதில் சிங்களம் மும்முரமாக இறங்கியுள்ள வேளையில் அதாவது தமிழ்ர்களை துரதத்தியடிக்கும் நடவடிக்கையில் ஈடுபடும்போது,தமிழர்கள் மட்டும் வாழாவிருக்காமல் தமிழீழ எல்லையில் குடியேற்றப்பட்ட சிங்கள காடைய குடியேற்றவாசிகளை ஒரு சில செல்களை அடிப்பதன் மூலம் அடித்து விரட்டப்பட வேண்டும்.இது தான் இக் காடைத்தனத்துக்கு சரியான பதிலடி.இவர்கள் அடி மட்டுமே மருந்து.சர்வதேசம் என்பது பம்மாத்து.யாரிடம் வலுவுள்ளதோ அவர்கள் பக்கம் சாய்வார்கள்.

பழமொழிகளிலேயே மிகவும் சிறந்த பழமொழி

"அடி உதவுவது போல் அண்ணன் தம்பியும் உதவ மாட்டான்" என்பது தான்.

ஆனாலும் தமிழர்கள் தரப்போவது இப்படியான தரங்கெட்ட அடிகள் அல்ல.

ஒவ்வொரு அடியும் இடி போல் இருக்கும். அது அப்பாவிகளை பாதிக்காத விதத்திலும் இருக்கும்

விடுதலைபுலிகள் மட்டுமே தமிழர்களின் பாதுகாவலர்கள் என்று சிங்கள அரசு சொல்லாமல் சொல்லிவிட்டது.

டக்ளஸ், ஆனந்த சங்கரி போன்றவர்கள் இவற்றையும் தென் ஆபிரிக்காவுக்கும், தங்கள் இந்திய எஜமான்களுக்கும் போய் சொல்லட்டும். வெட்கம் கெட்டவர்கள். இதை விட பிச்சை எடுத்து வாழலாம்.

Edited by vettri-vel

சொந்த நாட்டில் தமிழர்கள் வெளியேற்றப்படுகின்றனர் : ரணில் விக்கிரமசிங்க.

கொழும்பில் விடுதிகளில் தங்கியிருக்கும் தமிழர்கள் என்ன பாவம் செய்ததற்காக கைது செய்து வெளியேற்றப்படுகிறார்கள் என்று கேள்வி எழுப்பியிருக்கும்; ரணில் விக்கிரமசிங்க, சொந்த நாட்டில் ஓரிடத்தில் சுதந்திரமாகத் தங்கியிருப்பதற்குக்கூட தமிழ் மக்களுக்கு உரிமை மறுக்கப்படுவதாகவும் கண்டித்துள்ளார். தலைநகரில் சோதனை என்ற பெயரில் (லொட்ஜ்) விடுதிகளில் தங்கியிருக்கும் இளைஞர், யுவதிகள் உட்பட தமிழ் மக்கள் கைது செய்யப்படுகின்றனர்.

கைது செய்வதற்கான காரணம் கூட தெரிவிக்கப்படுவதில்லை. கைது செய்த இந்த தமிழ் மக்கள் கட்டாயத்தின் பேரில் கொழும்பிலிருந்து வெளியேற்றப்படுகின்றனர். அப்பாவித் தமிழ் மக்கள் காரணமின்றி கைது செய்யப்படுகின்றனர். விசாரிக்கப்பட்ட பின்னர் எக்காரணமும் கூறப்படாமல் உடனடியாகவே கொழும்பிலிருந்து வெளியேற்றப்படுகின்றனர். சொந்த நாட்டில் ஓரிடத்தில் சுதந்திரமாக நடமாடக் கூட தமிழர்களுக்கு உரிமை மறுக்கப்படுகின்றது.

இந்த நிலையில் நாட்டில் அடிப்படை மனித உரிமை பாதுகாக்கப்படுவதாகக் கூறுவது வியப்பை அளிக்கின்றது. அப்பாவித் தமிழ் மக்கள் என்ன பாவம் செய்ததற்காக இவ்வாறு தண்டிக்கப்படுகின்றனர் எனக் கேட்க விரும்புகின்றேன். கைது செய்யப்பட வேண்டிய, தண்டிக்கப்பட வேண்டிய பசில் ராஜபக்ஸ, பி.பி ஜயசுந்தர, லலித் வீரதுங்க போன்றோர் சுதந்திரமாகவும் உயர் பாதுகாப்புடனும் நடமாடுகின்றனர். ஒரு பாவமும் அறியாத அப்பாவி மக்கள் இன்னல்களுக்குள்ளாக்கப் படுகின்றனர்.

உண்மையைச் சொன்ன குற்றத்துக்காக டிரான் அலஸ் கைது செய்யப்பட்டார். குற்றச்சாட்டுக்குள்ளாக்கப் பட்டோருக்கு உயர் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. ராஜபக்ஸ அரசின் ஜனநாயகம் இதுதானா? என்றும் ரணில் கேள்வி எழுப்பியுள்ளார. ஐக்கிய தேசியக்கட்சி தலைமையகமான சிறி கொத்தாவில் நேற்று இடம்பெற்ற கட்சி அமைப்பாளர்களின் கூட்டத்தில் உரையாற்றும்போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்திருக்கின்றார்.

ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு தெரிவித்து 12 மணித்தியாலங்கள் கடப்பதற்கு முன்னரே 500 ற்கும் மேற்பட்ட தமிழர்கள் இன்று வியாழக்கிழமை பலவந்தமாக பேருந்துகளில் எற்றப்பட்டு கொழும்பிலிருந்து வெளியேற்ப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

-Sankathi-

Edited by யாழ்வினோ

  • கருத்துக்கள உறவுகள்

ரணில் நாடகமாடுகின்றார்

இன்று பாராளுமன்றத்தில் இது பற்றி எவ்வித பிரஸ்தாபத்தையும் ஐதேகா காட்டவில்லையே? வெறும் ஊடக அறிக்கைகள் மூலம் வெட்டுவீச்சுக்கள் விடுவது எல்லாம் சுத்த நடிப்பு.

பலவந்தமாக பஸ்களில் ஏற்றப்பட் ஒருவர் உள்ளுர் பண்பலை வானொலி சிரசவிற்கு தனது கைத்தொலைபேசியில் இருந்து எடுத்த அழைப்பில்,"காவல்துறையினர் வந்து எங்கள் அனைவரையும் பஸ்களில் ஏற்றிச் செல்கின்றனர். எங்கே கொண்டு செல்கின்றனர் என்று தெரியவில்லை, கொழும்பிலிருந்து 32 கிலோமீட்டரில் நிற்கின்றோம், வடக்கு நோக்கி அழைத்துச் செல்லப்படுகின்றோம் என்று கூறினார்.

மனித உரிமை ஆர்வலர்கள் இந்த நடவடிக்கை குறித்து அதிர்ச்சி தெரிவித்துள்ளனர்.

இது இன அழிப்பின் ஒரு வடிவம் என பாக்கியசோதி சரவணமுத்து தெரிவித்துள்ளார்.

- பீபீசி உலக செய்தி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.