Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொழும்பு விடுதிகளிலிருந்து 500 தமிழர்கள் கட்டாய வெளியேற்றம்

Featured Replies

By Simon Gardner

COLOMBO (Reuters) - Sri Lanka evicted hundreds of ethnic Tamils from the capital on Thursday citing security concerns, as troops battled Tamil Tiger rebels in jungles in the island's restive east.

Analysts decried the eviction as a shocking violation of human rights, with one likening it to a form of ethnic cleansing.

http://www.reuters.com/article/worldNews/i...07?pageNumber=1

  • Replies 70
  • Views 6.7k
  • Created
  • Last Reply

ரணில் நாடகமாடுகின்றார்

இன்று பாராளுமன்றத்தில் இது பற்றி எவ்வித பிரஸ்தாபத்தையும் ஐதேகா காட்டவில்லையே? வெறும் ஊடக அறிக்கைகள் மூலம் வெட்டுவீச்சுக்கள் விடுவது எல்லாம் சுத்த நடிப்பு.

அது தெரிந்த விடயம்தானே தூயவா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழர் தரப்பு ஆரம்பத்திலிருந்தே வலியுறுத்தி வந்த இரண்டு விடயங்களான,

1) தமிழரின் தாயகம் வடக்குக்கிழக்கு

2) சிங்களவரோடு இணைந்து தமிழர்களால் வாழ முடியாது

என்பவற்றை இன்று சிங்கள அரசு(எதிர்த் தரப்பு) இந்த நடவடிக்கை மூலம் பகிரங்கமாக ஏற்றுக்கொண்டுள்ளதை தொடர்ந்து, இருதரப்பு அங்கீகாரத்துடனான தமிழரின் தனிநாட்டை ஐ.நா உடனடியாக அங்கீகரிக்க முன்வரவேண்டும்!

அமைச்சர் டக்கிளஸ் மற்றும் ஆனந்தம் சங்கரி சித்தார்த் சித்தப்பா ஆகியோரிடம் இது பற்றி கதைத்த பின் நல்ல ஒரு முடிவுக்கு வரலாம்

நாய்கள் இப்போது எலும்புத்துண்டுகலோடு வழமை போல் பிஸியாக இருப்பதால் போல் வழமை போல்..

இதற்கும்

குரைப்பதாக இல்லை.. :lol:

தமிழீழம் உருவாகுவதற்கான அனைத்து முன்னேற்பாடுகளையும் இலங்கை அரசே செய்து தரும் போல இருக்கு.தமிழீழ தனியரசின் கொடி இந்த முறை வெல்க தமிழ் நடக்கும் பிரஸ்லஸில் வெகு விரைவில் பறக்கும்

ஈழ்ழவன் நிச்சையம் நடக்கும், இதற்க்கு மேலும் சர்வதேசம் மௌனம் சாட்திக்காது என்று நினைக்கிறேன், பொறுத்திருந்து பார்க்கலாம்

சர்வதேசம் சாக்கடை அது தனக்கு பிரியோசனம் இல்லாட்டி எதையும் செய்யாது இல்லாட்டி இவ்வளவு கொலைகளுக்கும் கேள்வி கேட்டிருக்குமே ஆனால் பிபிசியின் செய்தி நல்லவிதமாக எழுதப்பட்டிருக்கு

அமைச்சர் டக்கிளஸ் மற்றும் ஆனந்தம் சங்கரி சித்தார்த் சித்தப்பா ஆகியோரிடம் இது பற்றி கதைத்த பின் நல்ல ஒரு முடிவுக்கு வரலாம்

நீங்கள் நீங்களாகவே இருக்கலாம் ஆனால் மனிதன் மனிதத்தன்மையுடன் இருக்கவேண்டும்

கருத்து சுதந்திரம் என்பது ஒரு போராட்டத்தை நக்கல் பனன்னுவதுக்கு அல்ல

Edited by சாணக்கியன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

போராட்டத்தை தான் நக்கல் பன்னுவதா என்று கேட்டேன்

அதுக்காக எச்சில் கூட்டத்தையும் நக்கில் திண்ட கூட்டத்தையும் கூட்டி கொடுப்பவர்களையும் எமது போராட்டத்தோடு ஒப்பிடுவதா?

நாளைக்கு சொல்லூவார்கள் ஒரினை சேர்க்கை ஆனந்த சங்கரியும் தன்னால் தான் தனிநாடு கிடைத்து என்றும்

500 Tamils expelled in 8 buses from Colombo (Adds details)

Around 500 Tamils were forcefully expelled from the lodges in Colombo Thursday morning by the Sri Lankan Police, and a further 300 are being detained in Pettah police station due to lack of transport. Persons lodged in Colombo for medical treatment, travel, family re-union, study and in search of jobs, were packed in 8 buses and sent out of Colombo to the east and Vavuniyaa with Police escort. Two buses were heading to Vavuniyaa and 5 buses were on their way to Batticaloa, according to the latest information from the Police. The destination of the remaining bus is not known. Remaining persons in lodges, irrespective of their travel and other needs, were told they would be arrested if they failed to vacate the lodges within 3 days. All the lodge owners were instructed not to lodge people for more than 3 days.

-Tamilnet-

Edited by யாழ்வினோ

வடக்கு கிழக்கு தமிழரின் தாயகம் என்று சொல்லாமல் சொல்லுகினம்.

இது நல்லதொரு ஆரம்பம் தான்.

ஆனால் ஒன்று இந்த நடவடிக்கையால புலிகள தலைநகரில் இருந்து விரட்டலாம் என்று நினைக்கிறது

முட்டாள்த்தனம்

பூனை கண்ணை மூடிக்கொண்டு பால்குடிக்குது பாவம் கண் திறக்கும்போது அடி பலமாக இருக்கும் என்பதை இன்னும் அறியேல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

இதற்குப்பிறகும் கொழும்பில் குண்டு வெடித்தா என்ன நடக்கும்?

பிளட்டுகளில் பல்கிப்பெருகி வாழும் கொழும்புத் தமிழரும் பஸ்சுகளில் கொண்டு செல்லப்பட்டு பாணந்துறையில் விடப்படுவார்களா?

அப்படி நடந்தால் போராட்டத்திற்குத் தோழ் கொடுக்காத கொழும்பு வாழ் தமிழர் என்ற பழிச்சொல் நிங்கும்!

கொழும்பில் குண்டு வெடித்தால் தமிழ் மக்களைத் துரத்தியடிப்பது என்பது எவ்வகை நியாயம்

சமீபத்தில் மகிந்த ராஜபக்சா கூட சிங்களப் புலியும் இருக்கின்றது என்றும், அவர்களும் இராணுவத்துக்கெதிரான தாக்குதலில் ஈடுபடுகின்றார்கள் என்றும் கூறியிருந்தார்.( அதனால் இதைத் தமிழர்களின் போராட்டம் என்று கூற முடியாது என்பது தான் அவரது வாதமாம்)

அப்படிச் சிங்களப் புலியிருப்பதற்காக கொழும்பில் வேலைவெட்டியில்லாமல் இருக்கின்ற முக்கியமாக சேரிப்புறங்களில் காலை தொடக்கம் மாலை வரை கரம்போட் அடித்தே நேரத்தைப் போக்காட்டும் சிங்கள மக்களை ஒரே இரவில் வெளியேற்றுவரா?

முடியாது. ஏன் என்றால் அது தான் சிங்கள தரப்பின் இனவாதம்.

Edited by தூயவன்

கொழும்பிலிருந்து தமிழர்களை வெளியேற்றியது பாரிய மனித உரிமை மீறல் - பல அமைப்புக்கள் கண்டனம்

வியாழன் 07-06-2007 20:48 மணி தமிழீழம் [தாயகன்]

கொழும்பில் தங்ககங்களில் தங்கியிருந்த சுமார் 800 வரையிலான தமிழர்கள் சிறீலங்காப் படையினரால் பலவந்தமாக வெளியேற்றப்பட்டு, ஒரு தொகுதியினர் தமிழர் தாயகப் பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

சிறீலங்கா அரசின் இந்த நடவடிக்கை பற்றி கருத்துத் தெரிவித்த மனித உரிமை அமைப்புக்கள், தொண்டு நிறுவனங்கள், ஊடக இயக்கங்கள், மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் தமது கடுமையான கண்டனத்தை வெளியிட்டுள்ளனர்.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு, ஐக்கிய தேசியக் கட்சி, மேலக மக்கள் முன்னணி உட்பட பல கட்சிகளும், அமைப்புகளும் சிறீலங்கா அரசைக் கண்டித்திருப்பதுடன், ஹிட்லர் பாணியில் தமிழ் மக்கள் அடிமைகள்போன்று நடத்தப்பட்டிருப்பது, அரசியல் யாப்பிற்கு முரணானது எனவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இன்று அதிகாலை கொழும்பிலுள்ள தங்ககங்களைச் சுற்றி வளைத்த சிறீலங்காப் படையினரால் கைது செய்யப்பட்ட சுமார் 800 தமிழர்களில் 500 பேர் மட்டுமே இதுவரை மட்டக்களப்பு, வவுனியா மாவட்டங்களுக்கு பலவந்தமாக காவல்துறை பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

எஞ்சிய தமிழர்களில் 300 பேர் போக்குவரத்து வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படாத நிலையில் தொடர்ந்தும் புறக்கோட்டை காவல் நிலையத்தில் அடிப்படை வசதிகள் அற்ற நிலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பு புறக்கோட்டை, கொட்டாஞ்சேனை, வெள்ளவத்தை, வத்தளை பகுதிகளிலுள்ள தங்ககங்களில் மருத்துவம், வெளிநாட்டு பயணம், வெளிநாட்டிலிருந்துவரும் குடும்பத்தவரைச் சந்திப்பதற்கு, கல்வி, தொழில்வாய்ப்பு போன்ற பல்வேறு காரணங்களுக்காக இந்த மக்கள் தங்கியிருந்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் தவிர மேலும் சில தங்ககங்களில் தங்கியுள்ளவர்கள் அடுத்த 3 நாட்களுக்குள் வெளியேறவில்லை என்றால், அவர்களும் கைது செய்யப்பட்டு கொழும்பைவிட்டு வெளியேற்றப்படுவார்கள் எனவும், சிறீலங்கா காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிறீலங்கா அரசின் திடீர் நடவடிக்கையால் பாதிக்கப்பட்டு, மட்டக்களப்பிற்கு 5 பேரூந்துகளிலும், வவுனியாவிற்கு 3 பேரூந்துகளிலும் பலவந்தமாகக் கொண்டு செல்லப்பட்ட மக்களிற்குரிய மனிதாபிமானப் பணிகளைச் செய்வதற்கு அங்குள்ள தொண்டு நிறுவனங்கள் ஏற்பாடுகளைச் செய்து வருகின்றன.

வவுனியா காமினி மகாவித்தியாலயத்தை சென்றடைந்துள்ள பேரூந்துகளில் பயணித்த மக்களிற்குரிய அடிப்படை வசதிகளைச் செய்து கொடுப்பதற்கு ஐக்கிய நாடுகள் சபை அகதிகளுக்கான நிறுவனம் முன்னேற்பாடுகளைச் செய்திருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=2&

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களச் சிறீலங்காவின் தலைநகரில் இருந்து தமிழர்கள் கட்டாயப்படுத்தி வெளியேற்றப்பட்டுள்ளமை குறித்து சர்வதேச ஊடகங்கள் செய்தி..!

_43019295_colomboeviction_afp.jpg

_43019297_srilankaeviction2_afp.jpg

_43019295_colomboeviction_afp.jpg

http://www.reuters.com/resources/r/?m=02&a...25071&w=450

இவர்கள் எல்லாம் புலிகள்.. அதாவது தமிழர்கள் புலிகள்..!

Police evict Tamils from Colombo

Human rights groups have condemned the evictions

Police in Sri Lanka have forced hundreds of the minority Tamil community out of the capital Colombo for what they say are security reasons.

They launched overnight raids in Tamil areas of the city and forced guests staying in budget hotels onto buses.

Police said that Tamils who were in the capital "without valid reasons" were made to board buses bound for the north and east of the island.

Police said that the move was necessary amid fears of renewed civil war.

http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/6729555.stm

--------------------------------

Sri Lanka battles rebels, evicts Tamils from capital

COLOMBO (Reuters) - Sri Lanka evicted hundreds of minority ethnic Tamils from the capital on Thursday and sent them back to the war-torn north citing security concerns, as the military battled Tamil Tiger rebels in the east.

http://www.reuters.com/article/worldNews/i...L26780920070607

தமிழனை அடித்து விரட்டியபோது வேதனையுடன் ஓடியது அந்தக்காலம்.

அதே அடியை வேறு விதமாக சிங்களத்திற்கு திருப்பிக் கொடுப்பது இந்தக்காலம்.

பொறுத்திருந்து பார்ப்போம்.

Sri Lanka police evict ethnic Tamils from capital (AFP News)

Sri Lankan police forced hundreds of ethnic minority Tamils out of the capital Colombo Thursday as part of an effort to clear the city of feared Tiger terror cells, officials and witnesses said.

Armed police stormed Tamil-majority areas of the capital under cover of darkness and frogmarched guests at low-budget hostels into buses at gunpoint, residents said.

One man who was forcibly removed told a local radio station by mobile phone that they were woken at 3.45am and moved while still wearing their night clothes.

They were not even allowed to use the toilet, the man said while his bus was being escorted by police and speeding out of Colombo.

The forced eviction came even as Japanese peace envoy, Yasushi Akashi, was visiting the island in a bid to try and revive the island's tattered peace process.

The local media rights group, the Free Media Movement (FMM) slammed the government action and said the eviction was "tantamount to ethnic cleansing."

"This reminds us of what Hitler did to the Jews," said FMM spokesman Sunanda Deshapriya.

The defence ministry confirmed the eviction, but said the move was necessary to prevent Liberation Tigers of Tamil Eelam (LTTE) bomb attacks. Nine people were killed in and around Colombo, a city of 600,000 people, in two blasts last month.

"Investigations have also confirmed that those responsible for these brutal killings have hatched their brutal plans and executed them from these 'lodgings'," the ministry said in a statement.

It said 376 people, including 85 women, were sent in seven buses to their homes in Vavuniya and Jaffna in the north and Batticaloa and Trincomalee in the east. Police sources, however, said nearly 50 buses were used.

It was not clear how the civilians would be taken to the Jaffna peninsula. There is no land access to Jaffna which has been cut off since August last year.

Police had last week announced they would provide transport for Tamils to return to their homes in the embattled northern and eastern regions unless they could prove they were employed in Colombo.

"This operation is a very bad example," Tamil political leader Dharmalingam Sithadthan said.

"It is OK for the LTTE to indulge in this sort of ethnic cleaning because they have no moral responsibility, but a government can't behave like this," he said.

He said the police move reminded him of how the Tamil Tigers had evicted thousands of minority Muslims from the northern peninsula of Jaffna in 1990.

Thousands of Tamils from revolt-hit areas arrive in the capital monthly in the hope of obtaining passports to travel abroad for employment or to secure political asylum overseas.

But Tamils are required to obtain permits from the police to travel to the rest of the country under a de facto visa system put in place to prevent Tiger rebels infiltrating the capital.

Official sources said restrictions were set to tighten, with the deployment of cameras to photograph anyone leaving the embattled north and east and travelling to the rest of the country.

The evictions reverberated in the national parliament, where ethnic Tamil lawmakers briefly held up proceedings to protest, officials said.

-AFP-

பாராளுமன்றத்தில் இன்று ஒத்திவைப்பு வேளையில் கொழும்பிலிருந்து தமிழ் மக்கள் பலவந்தமாக நாடுகடத்தப்பட்டது குறித்து விவாதம் இடம்பெற்றது:

மகேஸ்வரன் (ஐ.தே.க): - துயரம்

ஆடுமாடுகள் போல 150 பேர் வரையில் 40 சீட்டுகள் கொண்ட ஒரே பேருந்தில் அடைக்கப்பட்டு மக்கள் வெளியேற்றப்பட்டனர். இவர்களில் பலர் வெளிநாடு செல்வதற்காகவும் மருத்துவத் தேவைகளுக்காகவுமே தங்கியிருந்தனர். இவர்கள் கதறி அழுது தங்களை காப்பாற்றுமாறு முறையிட்டதாகவும் மேலும் சிரச ஊடக வலையமைப்பினை தொடர்பு கொண்டு மக்கள் வழங்கிய தகவல்களை ஆதரமாகவும் சுட்டிக்காட்டி பேசினார்.

சுரேஸ் பிரேமச்சந்திரன் (த.தே.கூ): - நன்றியுடன்

இந்த அரசிற்கும் அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்தார். இதுவரை காலமும் தாங்கள் தெரிவித்தது போல தமிழீழமே இதற்குத் தீர்வென்பதை இச்சம்பவம் மூலம் உறுதிசெய்யப்பட்டுள்ளதாக கூறினார்.

ரணில் விக்கிரமசிங்க (எதிர் கட்சித்தலைவர்): - கடமைக்காக

இலங்கை சட்டவிதிகளின் (இலக்கங்களை குறிப்பிட்டு) படி மக்களின் நடமாடுவதற்கான சுதந்திரம் பறிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

அனுர குமார திசாநாயக்க (ஜே.வி.பி): - குழந்தையையும் கிள்ளி

பாதுகாப்பிற்கு பங்கமென்றால் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும், அதை விடுத்து எம்பக்கம் இருக்கும் தமிழர்களை தண்டிப்பது புலிகளுக்கே லாபம். இதில் பலர் பிரபாகரனின் துப்பாக்கிகளுக்கு பயந்து இங்கு வந்தவர்கள். இது அரசின் முட்டாள்தனமான நடவடிக்கை என்றார்.

ஆனந்த சங்கரி (பொழுது போக்கு): - என்னை மறந்திடாதீங்க!

வழக்கம் போல ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் இந்த நடவடிக்கையை உடனடியாக நிறுத்துமாறு கோரியுள்ளார். கொழும்பிலுள்ள புலிகள் சரியான ஆவனங்களை போலியா செய்து வைத்துள்ளனர் என்றும், இதனால் பாதிக்கப்படுவது அப்பாவிகள் என்றும், புலிகளின் தாக்குதல்களே இவற்றிற்கு காரணம் என்றும் பரிந்துரைத்துள்ளார்.

கெகெலிய ரம்புக்வெல்ல (பாதுகாப்பு பேச்சாளர்): கெகெலியவா கொக்கா?

தனது பாணியில் "மக்களின் விருப்பத்தின் பேரில் 200 தமிழர்கள் அவர்களின் சொந்த இடங்களுக்கு அனுப்பபட்டனர்" என்றார்.

பிரியதர்சன யாப்பா (ஊடக அமைச்சர்): - ஒன்றும் தெரியாத பாப்பா

தனக்கு இது பற்றி ஒன்றும் தெரியாதெனவும், ஆகவே இது பற்றி அறிந்து கொண்டு பின்னர் கருத்துக் கூறுவதாகவும் கூறினார்.

மூலம்: சக்தி செய்திகள்.

Edited by சாணக்கியன்

கெகெலிய ரம்புக்வெல்ல (பாதுகாப்பு பேச்சாளர்):

தனது பாணியில் "மக்களின் விருப்பத்தின் பேரில் 200 தமிழர்கள் அவர்களின் சொந்த இடங்களுக்கு அனுப்பபட்டனர்" என்றார்.

ரம்புக்குவல AFP News, BBC English News, Reuters News இதெல்லாம் வாசிப்பதில்லையா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதே செய்தியை குறிப்பாக சுரேஸ் பிரேமச்சந்திரனின் ஆவேசப் பேச்சை சக்தியில் காட்டினார்கள் ஆனால் MTV ஆங்கில செய்தியில் சங்கரிக்கு முன்னிடம் சுரேஸ்சின் பேச்சுக்கு வெட்டு வாழ்க மகாராஜாவின் நடுநிலமை

தமிழர் நாடுகடத்தப்பட்டமையும் கொழும்பு அரசியல் நாடகமும்.

  • ஒரு வாரத்திற்கு முன் விடுதி உரிமையாளர்களுக்கான கூட்டம் ஒன்றில் 24 மணிநேரத்தினுள் விடுதிகளில் உள்ள மக்கள் வெளியேற வேண்டும் என்ற மிரட்டல் விடுக்கப்பட்டது
  • பின்னர் இவ்வாறு ஊடகங்களில் வெளியிடப்பட்ட செய்து உண்மைக்கு புறம்பானது என ஜனாதிபதி செயலகம் அறிக்கை.
  • மறுநாள் "கொழும்பில் காரணம் இன்றி விடுதிகளில் தங்கியுள்ள தமிழர்கள் சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவர்" என்று காவல் மா அதிபர் விக்ரர் பெரெரொ.
  • இன்று ஆண்கள், பெண்கள், குழந்தைகள், முதியார்கள், நோயார்கள் என அனைவரும் இரவு உடுத்த உடையுடன் எவ்வித செவிமடுப்புமின்றி, வவுனியா, திருகோணமலை, மட்டக்களப்பு என தரம் பிரிக்கப்பட்டு விடுதி பதிவுகளின் படி ஒரு வாரத்திலும் கூடுதலாக தங்கியிருந்த காரணத்திற்காக ஒரே நாளில் நாடு கடத்தப்படுகின்றனர்.

Edited by சாணக்கியன்

46474736kd0.jpg

72334197lx6.jpg

34354496sk9.jpg

படங்கள்: பதிவு

  • கருத்துக்கள உறவுகள்

லொட்ஜ்களில் இருந்து தமிழர்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டமை பாரிய மனித உரிமை மீறல்

வீரகேசரி நாளேடு

கொழும்பிலுள்ள லொட்ஜ்களிலிருந்து நேற்றுக்காலை பலவந்தமாக பஸ் வண்டிகளில் தமிழர்கள் பொலிஸாரினால் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டமை பாரிய மனித உரிமை மீறல் என்று தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் நேற்று சபையில் கண்டனம் தெரிவித்தனர். இதனையடுத்து தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களுக்குமிடையே கடும் வாக்குவாதமும் அமளிதுமளியும் ஏற்பட்டது.

தமிழ் மக்கள் இவ்வாறு பஸ் வண்டிகளில் பலவந்தமாக ஏற்றப்பட்டமை குறித்து சபையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எம்.பி.க்களும், ஐக்கிய தேசியக் கட்சி எம்.பி.க்களும் மற்றும் மனோகணேசன் எம்.பி. யும் எதிர்ப்பு தெரிவித்து அமைச்சர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதையடுத்து சபையில் பெரும் அமளிதுமளி ஏற்பட்டது.

இதையடுத்து நிலைமையை கட்டுப்படுத்த சபையை நேரம் குறிப்பிடாது சபாநாயகர் ஒத்தி வைத்தார்.

பாராளுமன்றம் சபாநாயகர் வி.ஜே.மு. லொக்குபண்டார தலைமையில் நேற்றுக்காலை 9.30 மணியளவில் கூடியது. எம்.பி.க்களுக்கான வாய்மூல கேள்வி நேரம் முடிவடைந்ததும் ஐக்கிய தேசிய கட்சியின் கொழும்பு மாவட்ட எம்.பி. மகேஸ்வரன் ஒழுங்குப் பிரச்சினை ஒன்றை முன்வைத்தார். கொழும்பில் குறிப்பாக கொட்டாஞ்சேனை, ஆமர்வீதி, வெள்ளவத்தை, பம்பலப்பிட்டி உட்பட பல இடங்களிலுள்ள விடுதிகளிலிருந்து தமிழர்கள் பலவந்தமாக 45 பஸ் வண்டிகளில் ஏற்றிச் செல்லப்பட்டதாகவும் இது பாரிய மனித உரிமை மீறல் என்றும் தெரிவித்தார். ஆகவே இது தொடர்பாக விவாதம் ஒன்றை நடத்துவதற்கு இன்று (நேற்று) அனுமதி தர வேண்டும் எனவம் சபாநாயகரிடம் வேண்டுகோள் ஒன்றை விடுத்திருந்தார்.

சபாநாயகர் மறுப்பு

ஆனால் அதற்கு சபாநாயகர் உடனடியாக நீங்கள் நினைத்தபடி இன்று (நேற்று) விவாதம் நடத்த அனுமதி தர முடியாது எனவும் உங்கள் கட்சித் தலைவரால் எனக்கு முன்கூட்டியே அறிவிக்கப்பட வேண்டும் என்றும் கூறினார். அப்போது ஆத்திரமடைந்த மகேஸ்வரன் எம்.பி. சபாநாயகருடன் தர்க்கப்பட்டார். அந்த வேளை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எம்.பி.க்களும் தமது ஆசனங்களிலிருந்து எழுந்து சபாநாயகருடன் தர்க்கப்பட்டனர்.

அமைச்சர் ஜெயராஜ்

இந்த சர்ச்சைக்கு மத்தியில் எழுந்த அரசாங்கத்தின் பிரதம கொறடாவும், அமைச்சருமான ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே விவாதம் நடத்த அனுமதிக்க முடியாது அவ்வாறு விவாதம் நடத்துவதாக இருந்தால் ஐக்கிய தேசிய கட்சி எம்.பி.க்கள் மாத்திரம் விவாதத்தில் உரையாற்றலாம். அந்தப் பக்கம் இருக்கின்ற 22 எம்.பி. க்களும் (தமிழ்த் தேசிய கூட்டமைப்பு) உரையாற்ற முடியாது என்றார்.

சுரேஷ் பிரேமச்சந்திரன்

அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே அவ்வாறு கூறியதனால் ஆத்திரமடைந்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எம்.பி.க்கள் அரச தரப்புடன் கடுமையான வாய்த் தர்க்கத்தில் ஈடுபட்டனர். அப்போது எழுந்த சுரேஷ் பிரேமச்சந்திரன் எம்.பி. கொழும்பு விடுதிகளிலிருந்து தமிழ் மக்களை பலாத்காரமாக பஸ் வண்டிகளில் வவுனியாவுக்கு ஏற்றிச் செல்வதாக இருந்தால் வடக்கு கிழக்கிலிருந்து இராணுவ வீரர்கள் அனைவரையும் கொழும்புக்கு கொண்டு வாருங்கள். இங்கிருக்கின்ற தமிழர்கள் அனைவரும் அங்கு செல்வார்கள். ஏன் என்றால் வடக்கு கிழக்கு தமிழர் தாயகம். ஆகவே நாங்கள் அனைவரும் அங்கு செல்கிறோம் என்றார்.

மகேஸ்வரன் எம்.பி.

இதற்கிடையே தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எம்.பி.க்கள் சபை நடுவாக நடந்து வந்து சபாநாயகர் ஆசனம் முன்பாக நின்று அரசுக்கும் இராணுவத்தினருக்கும் எதிராக கோஷமிட்டனர். மனோ கணேசன் எம்.பி.யும் சபை நடுவாக வந்து நின்று சத்தமிட்டார். அதேவேளை மகேஸ்வரன் எம்.பி. தனது மேலாடையை கழற்றி எறிந்து கையில் வைத்திருந்த நிலையியற் கட்டளை சட்டப் புத்தகத்தை கிழித்து எறிந்தார்.

சபையில் பெரும் குழப்பம்

இதையடுத்து சபையில் பெரும் குழப்பம் ஏற்பட்டது. அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் ஆகியோர் கூட்டமைப்பு எம்.பி.க்களை பார்த்து காரசாரமாக ஏசினார்கள். ஐ.தே.க. எம்.பி.க்களான ரவி கருணாநாயக்க, ஜோசப் மைக்கல் பெரேரா, தயாசிறி ஜயசேகர ஆகியோர் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எம்.பி.க்கள் சார்பாக அமைச்சர்களுடன் வாதிட்டனர். இந்நிலையில் சபையில் அமைதி காக்குமாறு சபாநாயகர் வேண்டுகோள் விடுத்த போதும் அதற்கு எவரும் செவிசாய்க்கவில்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பில் தற்காலிக விடுதிகளில் தங்கியிருந்த வடகிழக்கு தமிழர்கள் பலவந்தமாக வெளியேற்றம்

சிறிலங்கா பொலிஸார் சுமார் 300ற்க்கும் மேற்பட்ட இலங்கைகள் பகுதியை சேர்ந்த தமிழர்களை பலவந்தமாக கொழும்பில் இருந்து வெளியேற்றியுள்ளனர்.

பயங்கரவாத நடவெடிக்கைகளை குறைக்கும் முகமாக இந்த நடவெடிக்கை எடுக்கப்பட்டதென பொலிஸார் தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன . ஆயுதம் தாங்கிய நூற்றிற்கும் மேற்ப்பட்ட பொலிஸார் கொழும்பின் பம்பலபிட்டி வெள்ளவத்தை புறக்கோட்டை , கொட்டாஞ்சேனை போன்ற பகுதியில் காணப்படும் நாள் வாடகை அறவிடும் விடுதிகள் தற்காலிக தங்குமிடங்களில் தேடுதலை நேற்றிரவு முதல் மேற்கொண்டனர் துப்பாக்கி முனையிலேயே தங்கள் பலவந்த மாக ஏற்றி சென்றனர் என பாதிக்கப்பட்ட தமிழர் தனது பெயர் சொல்லவிரும்பல் தெரிவித்த்ர்

காலை 4 மணி போல் இருக்கும் அறை கதவை தட்டும் சத்தம் கேட்டு திறந்தேன் ஆயுதம் தாங்கிய படையினர் உள்ளே நுழைந்து ஏன் கொழும்பில் இருக்கிறீர்கள் உங்கள் சொந்த ஊர் எது உடனே கேள்வி கேட்டும் தம்மை விரட்டினார்கள் என அவர் மேலும் தெரிவித்தார் . பெண்கள் ,ஆண்கள் குழந்தைகள் வயோதியர்கள் என பாகுபாடுயில்லாமல் இரவு நேர உடையுடன் தம்மை கிளம்ப சொன்னாதாகவும் மலசலகூடம் செல்லக்கூட தம்மை அனுமதிக்கவில்லை எனவும் அந்த நபர் தெரிவித்தார் . பஸ்ஸில் தம்மை தர தர வென ஏற்றினார் எங்கு போறோம் எதற்காக கூட்டி போகிறார்கள் என அவர்களுக்கு தெரிந்திருக்கவில்லை

விரைவு பஸ் போக்குவரத்து ஏற்பாடு செய்யப்பட்டு ஓவ்வொருவரும் பிரதான பொலிஸ் நிலையத்திற் இறக்கப்பட்டு விசாரிக்கப்பட்டனர் . எனவும் பின்னர் பஸ்கள் வவுனியா திருகோணமலை வீதீகள் சென்றநாக தகவல்கள் தெரிவிக்கின்றன யப்பானிய விசேட சமாதான தூதர் யசூசி அகாசி தற்போது நாட்டில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இது தொடர்பாக சுதந்தி ஊடக அமைப்பின் தலைவர் அனந்த தேசிப்பிரிய கருத்து தெரிவிக்கயில் யூதரர்சனுக்கு எதிராக ஹிட்டலர் என்ன செய்தாரோ எந்த நடவெடிக்கை ஞாபத்திற்க்கு வருகிறது என்றார்.

பாதுகாப்பு அமைச்சர் விடுதி தமிழர்களின் வெளியேற்றித்தினா உறுதி செய்துள்ளதுடன் தமிழீழ விடுதலைப்புலிகலின் குண்டு தாக்குதல்கள் முறியடிக்கும் ஒரு பாதுகாப்பு நடவெடிக்கை எனவும் கடந்த மாதத்தில் கொழும்பில் இரண்டு குண்டுகள் வெடிஹ்துள்ளன என காரணம் தெரிவித்தன குண்டு வெடிப்பு விசாரணைகல்ளின் போது இத்தகை குண்டுத்தாக்குதல் நடத்த திட்டமிடும் இடங்கல் இந்த லொட்ஜ்களின் (விடுதிகளில் ) என பாதுகாப்பு அமைச்சு தனது அறிக்கையி தெரிவித்துள்ளது.

85 பெண்கள் உள்ளடங்களாக 376 பொதுமக்கள் 7 பஸ் வண்டிகள் ஏற்றப்பட்டு அவர்களது சொந்த இடங்களை யாழ்ப்பாணம் வவுனியா திருகோணமலை , மட்டக்களப்பு கொண்டு செல்லப்படுகின்றனர் எனுனும் 50 பஸ்கள் இந்த நடவெடிக்கைக்கு பயண்படுத்தப்பட்டன என பொலிஸார் தெரிவிததனர் . இன்னும் விடுவிக்கப்படாத பாதுகாப்பு உத்தரவாத இல்லாத இடங்கள் யாழ்ப்பாணத்தில் பெரும்பாலான இடங்கள் உள்ளன என்பதும் கடந்த ஆகஸ்ட் மாதம் யாழ் செல்லும் எ9 பாதை துண்டிகள்பட்டுள்ளது குறிப்பிட்டத்தக்கது

கடந்த வாரமோ நாம் அவர்களுக்கு அறிவித்திருந்தோம் கொழும்பில் தொடர்ந்து இருப்பதற்கு வலுவான ஆதாரம் வேண்டும் எதாவது தொழில் ரீதியாகவோ, மருத்துவ ரீதியாகவோ தெரிவித்திருக்கவேண்டும் .

காரணமின்றி இருப்பவர் போக்குவரத்து வசதி தரப்பட்டு அவர்கலது சொந்த இடங்களுக்கு அல்லது அவர்களின் பாதுகாப்பான இடங்களும் கொண்டு செல்லப்டுவர் என அறிவித்திருந்தேன என்றனர் பொலிஸார் இந்த நடவெடிக்கை ஒரு கெட்ட உதாரணம் என அரசியில் பிரமுகர் தர்மலங்காம ஏஎப்பி தெரிவித்தார்.

-வீரகேசரி

----------------------------------------------------------------------------------------------------------------------------------

வெள்ளவத்தை பம்பலப்பிட்டி விடுதிகளில் தங்கியிருந்த 300 ற்கும் மேற்ப்பட்ட தமிழர்கள் வெளியேற்றப்பட்டனர்.

இன்று காலை 7 மணிக்கு சுமார் 5 ற்கும் மேற்ப்பாட்ட பஸ்களில் பம்பலப்பிட்டி வெள்ளவத்தை பகுதியில் உள்ள விடுதிகள் (lodge) தங்கியிருந்த தமிழர்கள் பொலிஸாரின் உதவியுடன் பலவந்தமாக வெளியேற்றப்பட்டுள்ளனர். இன்று அதிகாலை 12 மணியளவில் இன்று பார்ய தேடுதல் நடவடிக்கையில் இராணுவத்தினர், பொலிஸார் கூட்டமாக ஈடுப்பட்டனர்.

இதன் போது பல விடுதிகள் சல்லடை போட்டு தேடுதல் நடாத்திய போது விடுதிகளில் தங்கியிருந்தவர்கள் வயது வேறுப்பாடு இன்றி வெள்ளைவத்தை பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர் பின்னர் இவர்கள் பெட்டி படுக்கைகளுடன் பலவந்தமாக ஏற்றப்பட்டு வவுனியா கொண்டு செல்லப்பட்டுள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.பஸ்களில் ஏற்றப்பட்டவர்கள் பொலிஸ் பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

-வீரகேசரி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.