Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிங்களவாதம் என்ற நாய்க்கு கல் எறிந்தால் இந்து பத்திரிகை என்ற சொறிநாய் குரைக்கிறது

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ் உணர்வின்மீது சிங்களவாதத்துக்கு மேலான வைரம்பாய்ந்த பகை கொண்டுள இந்துவுக்கு சிங்கள அரசுக்கு எதிராகவரும் கண்டனங்களைக் கண்டு பொறுக்கமுடியவில்லையாம்.

புதினத்தில் இப்படி இருக்கிறது...

என்னே! "இந்து" நாளிதழின் எல்லையில்லா சிங்கள விசுவாசம்!!

[சனிக்கிழமை, 9 யூன் 2007, 16:07 ஈழம்] [ப.தயாளினி]

தமிழ்நாட்டிலிருந்து வெளியாகும் ஆங்கில நாளேடான "இந்து"வின் சிங்கள விசுவாசம் எல்லையற்றதாக விரிந்து கொண்டிருக்கிறது.

இந்தியாவில் உள்ள தமிழ்நாட்டில் இந்தியக் குடிமகனால்தான் "இந்து" நடத்தப்பட்டாலும் அறிவிக்கப்படாத "தமிழ்நாட்டின் சிறிலங்கா தூதரகமாகத்தான்" அது செயற்பட்டு வருகிறது.

தமிழருக்கு எதிராக சிங்களவர்களைப் பாதுகாக்க தனது "ஊடக தர்மத்தை" முழுவீச்சில் பயன்படுத்தும் "இந்து" ஏடுதான் யோக்கிய சிகாமணியான "நடுநிலை"யாளர் என்று மார்தட்டிக் கொள்கிறது.

கொழும்பில் அரை மணித்தியால அவகாசம் கூட அளிக்காமல் தங்கியிருந்த 500-க்கும் மேற்பட்ட தமிழர்களை சிறிலங்கா அரசாங்கம் வெளியேற்றி பேரூந்துகளில் அனுப்பியது.

இரண்டாம் உலகப் போரில் ஹிட்லர் மேற்கொண்ட இனச்சுத்திகரிப்பு நடவடிக்கையை பின்பற்றி மகிந்த மேற்கொண்ட இந்த கொடுஞ்செயலை அனைத்துலகமும் கண்டனம் தெரிவித்தன.

சிறிலங்காவுக்கு ஆயுதங்களையும் தரும் அமெரிக்கா கூட-

சிறிலங்கா அரசாங்கம்தான் குற்றவாளியாக பல்வேறு நிகழ்வுகளில் இருந்தபோதும் தமிழீழ விடுதலைப் புலிகளையும் இணைத்தே குற்றம்சாட்டி சிறிலங்காவை பாதுகாத்து வரும் அந்த அமெரிக்காவும் கூட கொழும்பு கொடுஞ்செயலுக்காக சிறிலங்கா அரசாங்கத்துக்கு கண்டனம் தெரிவித்திருக்கிறது.

"நடுநிலை" அனுசரணையாளர் நோர்வேக்காரர்களும் இப்போதுதான் "கண்டனம்" என்ற சொல்லை உதிர்த்திருக்கிறார்கள். ஆனால் "இந்து" நாளேட்டின் "நடுநிலை" கண்களுக்கு "கண்டனம்" என்ற சொல் தெரியவில்லை போலும்.

கொழும்பு சம்பவம் என்பது மகிந்தவுக்குத் தெரியாமல் காவல்துறை மா அதிபர் விக்டர் பெரேரா தன்னிச்சையாக செய்துவிட்டார் என்பதுபோல் செய்தி வெளியிட்டுள்ள இந்து- (நாள்: 09.06.07)

அதன் உள்ளே

"Norway reaction" என்ற தலைப்பில் நோர்வேயின் அறிக்கை பற்றி எழுதுகிறது.

ஆனால் நோர்வே வெளியிட்ட அறிக்கையின் முதல் வரியாக உள்ள

"Norway condemns yesterday’s sudden and enforced removal of civilian Tamils from their dwellings in Colombo" என்பதை மட்டும் மிகக் கவனமாக நீக்கிவிட்டு சிங்களவர்களைப் பாதுகாக்கிறதாம் "இந்து".

அதேபோல்

அமெரிக்காவின் அறிக்கையிலும் சிறிலங்காவுக்கு அமெரிக்கா ஆதரவாகத்தான் இருப்பது போல தோற்றமளிக்கும் வகையில் செய்தி வெளியிட்டிருக்கிறது.

அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையிலும் முதல் வரியே

"The United States condemns the forced removal of Tamils from Colombo" என்பதுதான்.

ஆனால் "சிங்கள ரத்னா" விருது பெற்ற சிங்கள விசுவாச "இந்து"வுக்கு இதனை பிரசுரிக்க மனம் வருமா என்ன?

இலங்கைக்கான ஜப்பானின் சிறப்புத் தூதுவர் யசூசி அகாசி கொழும்பில் இன்று சனிக்கிழமை ஊடகவியலாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது பிரித்தானியா போல் சிறிலங்காவுக்கு ஜப்பான் நிதி உதவியை நிறுத்தாது என்று பதிலளித்துள்ளார்.

ஆனால் சிங்கள அடிவருடி "இந்து"வோ பிரித்தானியா போன்ற நாடுகள் நிதி உதவியை நிறுத்துவதற்கு ஜப்பான் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது என்பது போல் தலைப்பிட்டு சிங்களவர்களுக்கு ஆதரவைத் தேடித் தருகிறதாம்!

"சிங்கள இரத்னா" இந்துவே- தொடரட்டும் உன் விசுவாசம்!

<புதினம்>

  • Replies 124
  • Views 10k
  • Created
  • Last Reply

தமிழ் அப்பாவி மக்கள் உயிரோடும் வாழ்வோடும் விளையாடி வேட்டையாடும் சிங்கள நாய்களுக்கு

புகழாரம் சூட்டி மெய்யை பொய்யாகவும் பொய்யை பெரிதாகவும் எழுதும் இந்து நாளேடு..

பாவங்களில் பெரிய பாவத்தை செய்கிறது..

தமிழ் அப்பாவி மக்கள் உயிரோடும் வாழ்வோடும் விளையாடி வேட்டையாடும் சிங்கள நாய்களுக்கு

புகழாரம் சூட்டி மெய்யை பொய்யாகவும் பொய்யை பெரிதாகவும் எழுதும் இந்து நாளேடு..

பாவங்களில் பெரிய பாவத்தை செய்கிறது..

தமிழ் நாட்டு வலைப் பதிவு ஒன்றில் வெளிவந்த இந்தக் கட்டுரையை படித்தால் உண்மை புரியும்

மகாத்மா காந்தி 1919 இல் தமிழ்நாட்டுக்கு வந்த போது அவரையே ஆதரிக்க மறுத்த தமிழ்நாட்டுப் பிராமணர்களும், இந்து பத்திரிகையும் பிரபாகரனையும், ஈழவிடுதலைப் போராட்டத்தையும் வெறுப்பது ஒன்றும் வியப்புக்குரியதல்ல.

தமிழ்பேசும் தமிழ்நாட்டுப் பிராமணர்கள் எதற்காக பிரபாகரனையும், ஈழவிடுதலைப் போராட்டத்தையும் எதிர்க்கிறார்களென்ற கேள்விக்குப் பல தமிழர்கள் விடைகாண முயல்வதைக் காணலாம். நானும் கூட பல்வேறுபட்ட காரணங்களைக் கூறி அவற்றை நியாயப்படுத்தவும் முயன்றிருக்கிறேன்.

மகாத்மா காந்தி 1915 இல் தென்னாபிரிக்காவிலிருந்து இந்தியா திரும்பினார் அவர் அகமதாபாத்தில் சத்தியாக்கிரக ஆசிரமத்தை ஆரம்பித்த பின்பு 1919 இல் தமிழ்நாட்டுக்கு வந்தார்.

ஆனால் ஆரம்ப காலத்திலிருந்தே மகாத்மாவையும் அவரது சுதந்திரப் போராட்டத்தையும் ஆதரித்தவர்கள் தமிழர்கள் என்பதை இங்கு நினைவு கூர்வது தகும். தனது சுயசரிதையில் தமிழர்களைப் பற்றி இவ்வாறு குறிப்பிடுகிறார் மகாத்மா காந்தி:

"சத்யாக்கிரக ஆசிரமம் 1915 ஆம் ஆண்டு மே 25 இல் நிறுவப்பட்டது. அப்போது அதில் பதின்மூன்று தமிழர்கள் இருந்தனர். அதில் ஐந்து தமிழ் இளைஞர்கள் தென் ஆபிரிக்காவிலிருந்து என்னுடன் இந்தியா வந்தவர்களாவர். மீதிப்பேர் இந்தியாவில் உள்ள வேறு பகுதிகளில் இருந்து வந்தனர். மொத்தமாக 25 ஆண்களும் பெண்களுமாக சத்யாக்கிரக ஆசிரமத்தை அமைத்திருந்தோம். நாம் அனைவரும் ஒரே அடுப்பில் சமைத்து, ஒன்றாக உண்டு, ஒரே குடும்பமாக வாழ்ந்தோம்..." என்கிறார் அண்ணல் காந்தியடிகள்.

அதை விட ஈழத்தமிழர்களும் அவர்களின் தலைவர்களும், வெள்ளையர்களின் எதிர்ப்பையும் பொருட்படுத்தாது, மகாத்மா காந்தியை யாழ்ப்பாணம் வரவழைத்துப் பெரு வரவேற்பளித்து, யாழ்ப்பாணத்தின் பிரதான வீதிக்கு அவரது பெயரையுமிட்டு வெள்ளையர்களின் அரசைச் சீண்டிப் பார்த்ததால் தான் சோல்பரிப் பிரபு ஈழத்தமிழர்களின் நலன்களுக்கெதிரான, சிங்கள சார்பான அரசியலமைப்பை உருவாக்கினார் எனவும் கூறுவர்.

இந்தியாவை வெள்ளையர்களிடமிருந்து மீட்க வேண்டுமென்ற சுதந்திர வேட்கையுடன் பிரச்சாரம் செய்யச் சென்னைக்கு வந்த மகாத்மாவைப் பார்த்து, அப்போதைய சென்னை மாநிலத்தில் பத்திரிகைகளையும், சட்டத்துறையையும், காவல் துறை, நீதிமன்றம் போன்றவற்றைத் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்த பிராமண "Brown Sahibs" முகத்தைத் திருப்பிக் கொண்டார்களாம்.

அதற்குக் காரணம் மகாத்மா காந்திக்கு ஆதரவு தெரிவித்தால் வெள்ளையர்களுக்குப் பந்தம் பிடித்து வாழும் தமது சுகமான வாழ்க்கை பறிபோய் விடுமோ என்ற பயம் தானாம்.

அவர்கள் மகாத்மாவைப் பார்த்து முகத்தைத் கோணிக் கொண்டதற்கு முதல் காரணம், மாகாத்மா காந்தி பிராமணரல்ல, பிராமணர்களால் குறைந்த சாதி எனக் கருதப்படும் சாதியில் பிறந்தவர், அக் காலத்து தமிழ்நாட்டுப் பிராமணர்களுக்கு பிராமணரல்லாத தலைவரை நினைத்துப் பார்க்கக் கூட முடியவில்லை அது மட்டுமல்ல காந்தியின் வன்முறையற்ற வழியிலான போராட்டமும் மட்ராஸ் பார்ப்பனப் பத்திரிகைகளின் நகைப்புக்குள்ளாகியது.

1919 இல் தனது சட்ட மறுப்புப் போராட்டத்துக்கும், இந்திய சுதந்திரப் போராட்டத்துக்கு ஆதரவு தேடிச் சென்னை மாநிலத்துக்கு வருகை தந்த மகாத்மா காந்திக்கு நூற்றியிருபது பேர் மட்டுமே நிதியுதவியும், உணர்ச்சி பூர்வமான ஆதரவுமளித்தனர். அன்றைக்கு மகாத்மா காந்தியைப் பார்த்து மூக்கைச் சுழித்து, முகத்தைத் திருப்பிக் கொண்ட அதே பார்ப்பன நிறுவனமாகிய இந்து பத்திரிகை தான் இன்றைக்கு பிரபாகரனையும் வெறுக்கிறது, ஈழத்தமிழர்கள் சம்பந்தமான செய்திகளைத் திரித்து, சிங்கள இனவாத அரசுக்கு ஆதரவாகவும், ஈழத்தமிழர்களுக்கெதிராகவும் பொய்ப்பிரச்சாரம் செய்கிறது.

மார்ச் 17, 1919 இல் றோவ்லட் சட்டத்தை எதிர்த்துப் பிரச்சாரம் செய்வதற்காக மகாத்மா காந்தி சென்னைப் பட்டணத்துக்கு வந்தார்.அங்கிருந்து தனது சட்டமறுப்பு இயக்கத்துக்கு ஆதரவு தேடி, தஞ்சாவூர், திருச்சி, மதுரை, தூத்துக்குடி, நாகப்பட்டணம் போன்ற இடங்களுக்கும் சென்றார்.அவர் சென்னையை விட்டு மார்ச் 28ம் திகதி போகும் போது 120 பேர் மட்டும் அவருடைய சத்தியாக்கிரகப் போராட்டத்துக்கு ஆதரவளித்துக் கையெழுத்திட்டிருந்தார்கள். அப்போதைய தமிழ்நாட்டின் சனத்தொகை 20 மில்லியனில் 120 பேர் மட்டுமே காந்திக்கு ஆதரவளித்தனர்.

இன்று தமிழ்நாட்டில் பிரபாகரனுக்குள்ள ஆதரவுடன் ஒப்பிடும்போது, மகாத்மா காந்தியின் அன்றைய நிலைமையை விட பிரபாகரனின் நிலைமை பரவாயில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

டேவிட் ஆர்ணோல்ட் 1977 இல் எழுதிய தமிழ்நாட்டில் காங்கிரஸ் என்ற புத்தகத்தில் " சென்னையில் இருக்கும் போது தடை செய்யப்பட்ட புத்தகங்கள் அச்சிடப்பட்டு, சத்தியாக்கிரகிகள் அனைவருக்கும் சட்டமறுப்பின் அடையாளமாகக் கொடுக்கப்பட வேண்டுமென மகாத்மா காந்தி கருத்துத் தெரிவித்தார்.

அதற்கு இந்து பத்திரிகையின் உரிமையாளர்களான ஐயங்கார் பிராமணர்களை புத்தகங்களை அச்சிடுமாறு கேட்ட போது, தாம் ஒன்று அல்லது இரண்டு லட்சங்களை இந்து பத்திரிகையில் முதலீடு செய்திருப்பதாகவும் அது பறிமுதல் செய்யப்பட்டால், அவர்களின் வியாபாரம் அழிந்து விடும் என்றார்களாம்.

இப்படி மகாத்மா காந்திக்கு, இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் ஒத்துழைக்க மறுத்து தமது வியாபாரத்தைக் காக்கும் சுயநலத்துடன் இயங்கியவர்களெல்லாம், எத்தனையோ தமிழர்கள் தமது உடல், பொருள், ஆவி அனைத்தையும் அர்ப்பணித்து இந்தியாவுக்குச் சுதந்திரம் கிடைத்ததும், அந்த வெற்றியிலும், பதவிகளிலும் பங்கு போட முந்திக் கொண்டார்கள், அது மட்டுமல்ல பாரத ரத்னாவுமாகிக் கொண்டார்கள்.

பத்திரிகைகளைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டால் எப்படியும் கதை விட்டுக் கொள்ளலாம் என்பதற்கு பார்ப்பனப் பத்திரிகைகள் நல்ல எடுத்துக்காட்டாகும்.

டேவிட் ஆர்ணோல்ட் தனது புத்தகத்தில் பார்ப்பனப் பத்திரிகைகள் மகாத்மாவுக்கு எப்படி முதுகில் குத்தினார்கள் என்பதைத் தொடர்கிறார்.

"தமிழ்நாட்டில் காந்தீயவாதிகளுக்கு பத்திரிகைகளின் ஆதரவு மட்டுப்படுத்தப்பட்டதாக இருந்தது, 1920-1921 இல் அங்கிருந்த நான்குபத்திரிகைகளில்- Mail, Justice and New India ஆகிய மூன்று பத்திரிகைகளும் சட்டமறுப்பு, ஒத்துழையாமை இயக்கங்களுக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்தன.

அதில் நாலாவது, இந்து பத்திரிகை, அன்றைய வெள்ளையர்களின் அரசை எதிர்த்தால் வெள்ளையர் அரசாங்கத்தின் எதிர்ப்பைச் சம்பாதிக்க வேண்டி வரும், தமது தொழில் பறிமுதல் செய்யப்படலாமென்பதால் மகாத்மாவுக்கு ஒத்துழைக்க விரும்பவில்லை.

பார்த்தீர்களா, ஐயங்கார் பிராமணர்களின் பத்திரிகையான இந்து பத்திரிகை, சுயலாபத்துக்காக, இன்றைக்கு ஈழத்தமிழர்களுக்கெதிராக சிங்கள இனவாத அரசாங்கத்த்தின் அடிவருடிகளாக இயங்குவதைப் பற்றி யாராவது தமிழர்கள் மனம் நொந்தால், அதை விடுங்கள்.

கப்பலோட்டிய தமிழன் போன்ற பல தமிழர்களும் பல கோடி அடிமட்டத்திலுள்ள ஏழை இந்தியர்களும், இந்தியாவின் சுதந்திரத்துக்காக தமது தொழிலையிழந்து சிறையில் வாடியபோது , சுயநலத்துக்காக, தமது வியாபாரத்தைக் காப்பதற்காக, வெள்ளையர்களின் அரசுக்கு பந்தம் பிடித்து மகாத்மா காந்தியின் முதுகில் குத்திய நிறுவனம் தான் இந்து பத்திரிகையின் உரிமையாளர்களாகிய ஐயங்கார் பிராமணர்கள்.

இந்திய சுதந்திரப் போராட்டத்தின் போது சுயநலத்தையும், இலாபத்தையும் கருதியவர்களிடம் எப்படி தமிழீழப் போராட்டத்துக்கு ஆதரவை எதிர்பார்க்க முடியும்.

1920 இல் நாக்பூரில் நடந்த காங்கிரஸ் மாநாட்டின் பின்னாலாவது, "மிகவும் செல்வாக்குள்ள, சென்னை மாநிலத்தில் படித்தவர்களாலும், மேல் மட்டத்தவர்களாலும் படிக்கப்படும், தமிழ்நாட்டுப் பிராமணர்களை உரிமையாளர்களாகக் கொண்ட இந்து பத்திரிகை சட்டமறுப்பு இயக்கத்துக்கு ஆதரவளிக்குமென நம்பினார் மகாத்மா காந்தி" ஆனால் அவர்கள் அரை மனதுடன் தான் ஆதரவு தருவதாக நொந்து கொண்டாராம் மகாத்மா.

தமிழ்நாட்டுப் பிராமணர்களும், அவர்களின் பத்திரிகையாகிய "இந்து"வும் மகாத்மாவின் வன்முறையற்ற போராட்டத்துக்கே, தமது சுயநலம் கருதி ஆதரவு கொடுக்காது முதுகில் குத்தினார்கள் என்றால் ஈழத்தமிழர்களின் போராட்டத்துக்கு எப்படி ஆதரவளிப்பார்கள்.

சோ இராமசாமிக்கும், இந்து ராமுக்கும் சிங்கள அரசுக்கு ஆதரவளித்துப் பொய்ப்பிரச்சாரம் செய்வது தான் வருமானத்தைக் கொடுக்கும். இந்து பத்திரிகை பிரபாகரனை எதிர்க்கிறது ஏனென்றால் பிரபாகரன் ஆயுதமேந்தி வன்முறையில் போராடுகிறார் என்பது தான் காரணமென வைத்துக் கொள்வோம், அப்படியென்றால் அவர்கள் எதற்காக வன்முறையற்ற வழியில் போராடிய மகாத்மாவுக்கு ஆரம்ப காலத்தில் ஆதரவளிக்க மறுத்தார்கள்?

அறிவானந்தா சுவாமிகள்

http://www.tamilnadutalk.com/portal/index.php?showtopic=6673

தமிழ் அப்பாவி மக்கள் உயிரோடும் வாழ்வோடும் விளையாடி வேட்டையாடும் சிங்கள நாய்களுக்கு

புகழாரம் சூட்டி மெய்யை பொய்யாகவும் பொய்யை பெரிதாகவும் எழுதும் இந்து நாளேடு..

பாவங்களில் பெரிய பாவத்தை செய்கிறது..

அபச்சாரம் அபச்சாரம் பச்சைத் தமிழரான 'இந்து' ராம் தமிழ் ஈழ இந்துக்களுக்கு துரோகம் இழைப்பாரா?

கன்னட வெறியன் பெரியார் வழி வந்த திராவிடத் தமிழர் அல்லவா ஈழத் தமிழரின் துரோகிகள்.

இந்துக்களின் தானைத் தமிழன் பச்சைத் தமிழன் ,பார்ப்பனத் தமிழன் 'இந்து ராம்' வாழ்க ,வளர்க. :lol::lol:

உள்நாட்டு நாய்களான தேனீ நெருப்பு தாயகம் அதிரடி மேலும்பல இதைவிட மும்மரமாக குலைக்கும்பொழுது பக்கத்துநாட்டு சொறிநாய் குரைப்பது ஒன்றும் ஆச்சரியம் இல்லை

இந்து நாளேடு செய்வது பத்திரிகை விபச்சாரம். பத்திரிகை தர்மம் தெரிந்தவர்கள் அவர்கள் போல் பொய்களை செய்தியாக விற்க முடியாது. மனித தர்மம் தெரிந்தவர்கள் அது போன்ற பத்திரிகை விபச்சாரத்தை ஏற்றுக்கொள்ளவும் முடியாது

அபச்சாரம் அபச்சாரம் பச்சைத் தமிழரான 'இந்து' ராம் தமிழ் ஈழ இந்துக்களுக்கு துரோகம் இழைப்பாரா?

கன்னட வெறியன் பெரியார் வழி வந்த திராவிடத் தமிழர் அல்லவா ஈழத் தமிழரின் துரோகிகள்.

இந்துக்களின் தானைத் தமிழன் பச்சைத் தமிழன் ,பார்ப்பனத் தமிழன் 'இந்து ராம்' வாழ்க ,வளர்க. :lol::lol:

கொம்பாய் மாறிய "இந்து"வின் குடுமி தந்தை பெரியார் "மொடெர்ன் ரேசனலிஸ்ட்" என்கிற ஆங்கில பத்திரிக்கை துவங்கியகாலம் அதற்கென தனித்த ஆசிரியர் நியமிக்காத காரணத்தால் குடியரசு ஏட்டின் துணை ஆசிரியர் ஒருவர் அடுத்த நாளுக்கான தலையங்கம் உள்ளிட்ட விடயங்களுக்காக அய்யாவிடம் சென்று "அய்யா நாளைக்கு எதைப்பற்றி தலையங்கம் எழுதுவது" என்று வினவ. கூட்டத்திற்கு அவசரமாக கிளம்பிக்கொண்டிருந்த பெரியார் "இன்றைய இந்து பத்திரிக்கையை எடுத்துக்கோ அவன் எழுதுன தலையங்கத்தை தப்புன்னு எழுது, எதெல்லாம் சரின்னு எழுதிருக்கானோ அதையெல்லாம் தப்புன்னு எழுது " என்றபடி கிளம்பிப்போனார். வெளிப்பார்வைக்கு ஒரு நிகிலிசவாதியின் போக்கினை போல் இது தென்பட்டாலும் இது எவ்வளவு உண்மை என்று காலம் உணர்த்தியபடியே வந்துள்ளது.

அகிலமே யாழ் இடப்பெயர்வு குறித்து கவலையும் வேதனையும் தெரிவித்துக்கொண்டிருந்த வேளையில் சிங்களப்பாட்டாளிகளும் தமிழ்ப்பாட்டாளிவர்க்கமும் இணைந்து ஈழத்தில் பாட்டாளிவர்க்க புரட்சி கொண்டுவரவேண்டும் என கோழி இறகில் காது குடைந்து கொண்டே "ரோசனை" தெரிவித்துக்கொண்டிருந்தார்

உள்நாட்டு நாய்களான தேனீ நெருப்பு தாயகம் அதிரடி மேலும்பல இதைவிட மும்மரமாக குலைக்கும்பொழுது பக்கத்துநாட்டு சொறிநாய் குரைப்பது ஒன்றும் ஆச்சரியம் இல்லை

iஇது 2ம் ஒரே நாய் அதாவது டெ ன்மார்க்கில் இருக்கும் கோவணப்புகழ் குமாரதுரையும் தங்கத்துரையின் வாரிசுமாகிய[குமாரதுரையின் மகன் என உத்தியோகபூர்வம் ஆனால் உண்மை] ,மதிவதனன் பொன்றோரால் நடச்த்த படுகின்றது அதுமட்டுமல்ல அதிசயம் குலைகிற நாய்களை அதிகரிச்சு காட்ட 8 இணையங்களை இவ்விருவருமே நடத்தீனம் ஒரே செய்திகளுடன்

என்ன கொடுமை சார் என்ன கொடுமை

Ram.jpg

  • கருத்துக்கள உறவுகள்

அவர்கள் மகாத்மாவைப் பார்த்து முகத்தைத் கோணிக் கொண்டதற்கு முதல் காரணம், மாகாத்மா காந்தி பிராமணரல்ல, பிராமணர்களால் குறைந்த சாதி எனக் கருதப்படும் சாதியில் பிறந்தவர், அக் காலத்து தமிழ்நாட்டுப் பிராமணர்களுக்கு பிராமணரல்லாத தலைவரை நினைத்துப் பார்க்கக் கூட முடியவில்லை அது மட்டுமல்ல காந்தியின் வன்முறையற்ற வழியிலான போராட்டமும் மட்ராஸ் பார்ப்பனப் பத்திரிகைகளின் நகைப்புக்குள்ளாகியது.

வழமையான ஆரியவெறுப்பின் அங்கம். மெளரியர்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் கீழ் வாழ்ந்த பிராமணர்கள் ஒரு இந்துக்கு கீழே வாழமாட்டார்கள் என்று இவர்கள் புனையும் திராவிடப் பற்றை எண்ணி எங்கனம் பூரிப்பது.

இந்து ராம் சரியானவன் என்று சொல்லவில்லை. அந்த ஈழத்தமிழ் எதிரிக்கு மதிப்புக் கொடுக்க என்றைக்கும் இடமில்லை. ஆனால் தமிழர்களில் இருந்து ஒதுக்கி வைத்தவர்கள் தான் அந்த நபரின் செயற்பாட்டிற்கும் பொறுப்புக் கூற வேண்டும். தாங்களாகப் பிரச்சனை உருவாக்கி அவர்களைத் தமிழர்களுக்கு எதிரிகளாக்கி விட்டு, இப்போது வாயில் விரலை வைத்துக் கண்ணீர் வடிக்கின்ற ஏமாற்றுவேலை எதற்கு?

இப்போது அபச்சாரம், அபச்சாரம் என்று மார்பில் அடிக்கின்றார்களாம். நன்றாக நடிக்கின்றார்கள்.. தனிக்காட்டு ராசா ஆகிவிட்டார்கள் தானே. அதனால் இருக்கலாம்.

அறிவானந்தா சுவாமிகள்

http://www.tamilnadutalk.com/portal/index.php?showtopic=6673

அறிவானந்தா என்பவர் சுவாமிகள் கிடையாது. அவர் முன்பு அத்தளத்தில் பகுத்தறிவு என்ற பெயரில் எழுதிய திராவிடக்கும்பலின் இளம் பற்றாளரே. குறித்த நண்பர் ஒரு பிள்ளைக்குத் தந்தை வேறு என நினைக்கின்றேன். பெயரை அப்படி மாற்றினால் சாமியார் ஆக்குவதா?

Edited by தூயவன்

இப்போது அபச்சாரம், அபச்சாரம் என்று மார்பில் அடிக்கின்றார்களாம். நன்றாக நடிக்கின்றார்கள்.. தனிக்காட்டு ராசா ஆகிவிட்டார்கள் தானே. அதனால் இருக்கலாம்.

அறிவானந்தா என்பவர் சுவாமிகள் கிடையாது. அவர் முன்பு அத்தளத்தில் பகுத்தறிவு என்ற பெயரில் எழுதிய திராவிடக்கும்பலின் இளம் பற்றாளரே. குறித்த நண்பர் ஒரு பிள்ளைக்குத் தந்தை வேறு என நினைக்கின்றேன். பெயரை அப்படி மாற்றினால் சாமியார் ஆக்குவதா?

அறிவானந்தா யாழுக்கும் வாறவர் அறிவானந்தா சுவாமிகள் என எழுதப்பட்டதை பார்த்தால் தலையில் அடிச்சு கதற மாட்டாரா :P :P :P

Today again it put a front page article with the title "Evicted `jobless' Tamils return to Colombo ". The whole article white washes Sri Lanka's action and by giving the word "jobless" to the evicted tamils Hindu tries to justify the SL government Terrorism. It completely blackout the hardships the people went through or the way they were evicted and also the international condemination.

My blood really boiling when I read this article

http://www.hindu.com/2007/06/10/stories/2007061006090800.htm

Front Page

Evicted `jobless' Tamils return to Colombo

B. Muralidhar Reddy

As all links to Jaffna are cut off

-------------------------------------------------------------------------------

Allegations of forced eviction because of misunderstanding and misinterpretation

"Found no evidence" of forceful expulsion: police chief

--------------------------------------------------------------------------------

COLOMBO: In yet another twist to the eviction of "jobless" Tamils from lodges of the national capital, 186 of the 376 evacuees returned to Colombo from Vavuniya in the north on Saturday as they could not proceed to Jaffna peninsula as all links are cut off.

Colombo Range Deputy Inspector of Police (DIG) Rohan Abeywardene told The Hindu, "Since road links to Jaffna peninsula are cut off and those who had earlier agreed to voluntarily leave Colombo expressed reservations in crossing into the peninsula via the sea route, the authorities have facilitated their return to Colombo. Now these 186 people are back in the lodges that they vacated on Thursday."

Separately, Inspector-General of Police (IGP) Victor Perera rejected the allegations made by "certain political elements" that the police had forcibly evicted Tamil people from Colombo lodges. Sri Lanka Supreme Court on Friday temporarily stayed the evictions.

In a statement here the IGP said, after a special discussion held with the Colombo police chiefs at the Police headquarters, that people who are making these allegations have either misunderstood the process or deliberately misinterpreting the truth.

The IGP further said that he had summoned all the inspectors-in-charge of Colombo police stations and inquired into the matter but "found no evidence" of such forceful expulsion.

President Mahinda Rajapaksa on Friday ordered a special inquiry on the manner of eviction of "jobless Tamils."

The IGP maintained that the government provided "safe transportation to 376 people out of over 20,000 Tamil lodgers" living in Colombo to their homes in North and East. The IGP said that these people had expressed "consent" to go home if free transportation was provided.

"Innocent people"

According to him some lodgers had indicated that they would have to pocket out at least Sri Lanka Rs. 15,000 as transport cost for them and for their belongings. He said the government had to take this decision for the safety of millions of "innocent people" living in Colombo and its suburbs.

The IGP said that the Island Capital has been targeted for terrorist attacks since the LTTE began its bloody campaign in 1983. IGP Victor Perera said that recent events had shown that the LTTE terrorists were operating "without much difficulty" within Colombo.

The IGP claimed that the on going police investigations into many terrorist activities also showed that the perpetrators of such attacks had been operating from lodges.

"Thus, the growing security concerns have compelled the police to focus its attention on lodgers who are having extended stay for no valid reason and those who could not prove their identity."

A report posted by on the Defence Ministry website said that Police taking similar security measures to reduce potential terrorist threats to a country's capital is nothing "uncommon or unusual" for any country.

"Particularly, after the two bomb attacks at Pettah and Rathmalana that killed seven innocent civilians and three security forces' personnel, no government can be expected to further delay stringent defensive action against terrorism.

"The shocking discovery of the lorry bomb carrying over 1,000 kg of high explosive at Nikaweratiya last week shown the extent of brutality that the LTTE was planning to bring in to the South", it said.

The IGP said the police had the authority to arrest any person under the Public Security Ordnance who cannot prove his /her identity. Earlier, the police have conducted "many search and arrest operations" without harassing any of the Tamil civilians permanently living in the Colombo city. "The suspects were detained and questioned at Boossa camp and those who found innocent were later released."

Separately, Sri Lanka Democracy Forum (SLDF), a voluntary organisation, unreservedly condemned what it termed as "indiscriminate rounding up and forcible mass expulsion" of members of the Tamil community from Colombo and their transport against their consent to the north and east of the country.

"Insensitive manner"

Calling for the immediate return of the evicted Tamil citizens to Colombo, the SLDF said: "This internal deportation represents a collective punishment upon the Tamil community and manifests the insensitive and inconsiderate manner in which the present regime has been conducting itself under the dubious claim of national security".

It said unlike those Tamils who are able to afford setting up permanent homes in flats or houses, most of the Tamils who live in the lodges and guesthouses in Colombo are relatively poor and do so having fled from the North and East in order to escape from the intolerable conditions there.

The SLDF said military operations in the North and East for the last several months resulted in the displacement of over 300,000 people. "But now the government is manifesting its hypocrisy by seeking to drive the Tamils living in Colombo back into the arms of the Tigers".

It said while the LTTE continued to cynically use the presence of the Tamil community in escalating tensions and violence in Colombo, the government had been abominable in its response and its military solution approach continued to alienate Tamils from the Sri Lankan State.

LTTE in a statement said the "forced eviction" is yet another human rights violation against the Tamils in the on going `program of ethnic genocide' of Tamils. Tamil Tigers said the instance should demonstrate to the international community the Sri Lankan Government's "true stance on the issue of the human rights of Tamils."

`Hope and optimism'

Winding up his five-day visit to the island the Japanese envoy, Yasushi Akashi told a news conference, "I am going back with a certain amount of hope and optimism for the future of this country."

Describing the prevailing situation as "rather heavy, depressed, with a serious crisis and tension in the country," Mr. Akashi said Japan had no immediate plans to slash aid to Sri Lanka or freeze assets of Tamil Tigers although international human rights groups have been lobbying Tokyo to exert pressure to stem spiralling violence.

Edited by rajcan

இந்துக்களின் தானைத் தமிழன் பச்சைத் தமிழன் ,பார்ப்பனத் தமிழன்

இந்த தலைப்பிற்கு சம்பந்தம் இல்லாவிட்டாலும் ஒன்றை கூற விரும்புகிறேன்.

100% திராவிடர் என்றோ 100% ஆரியர் என்றோ எவரையும் கூற முடியாது. இது சிலர் செய்த அரசியல் பம்மாத்து. பாரதியாரும் பல்வேறு பழந்தமிழ் ஏடுகளை அச்சில் ஏற்றிய தமிழ் தாத்தா என்று அழைக்கப்பட்ட உ.வே. சுவாமிநாத ஐயரும் அந்தணர் தான். இன்றைய இந்த பிளவு தேவையில்லாமல் திராவிட வாதம் பேசும் மூடர்களால் வந்தது.

சரி இவர்கள் திராவிடர்களையாவது ஒன்றாக சேர்த்தார்களா என்றால் அதுவும் இல்லை. கேரள, கர்நாடக, ஆந்திர திராவிட மாநிலங்கள் தண்ணீர் கூட தர முரண்டு பிடிக்கும் அளவுக்கு தான் திராவிட ஒற்றுமை இருக்கிறது.

சரி இந்த பகுத்தறிவாளர்கள் சாதியையவது ஒழித்தார்களா? தேர்தலில் வேட்பாளர்கள் நிறுத்துவதற்கே சாதி பார்க்க வேண்டிய நிலையை தோற்றுவித்து வைத்திருப்பது தான் இந்த பகுத்தறிவு பேசும் ஆட்சியாளர்களின் சாதனை.

சமதர்மம் என்பது சாதி என்ற தத்துவத்தை அறவே அழிப்பதால் தான் மலரும். அதைவிட்டு விட்டு ஒரு மக்கள் கூட்டத்தை பார்ப்பான் என்பதும் பதிலுக்கு அவனும் இன்னொருவனை பார்த்து பறையன் என்பதும், இப்படி ஒருவரை ஒருவர் கடித்து குதற தூண்டுவதால் சமூக ஒற்றுமை வரப்போவதில்லை.

இது தங்கள் அரசியல் வியாபாரத்திற்காக திராவிடன் என்னும் வார்த்தையை பயன்படுத்தியவர்கள் செய்து விட்ட சூழ்ச்சி. இந்த வியாபாரம் அமோகமாக நடந்தேறியதால் தான் திருக்குவளையில் இருந்து வந்த ஒரு தமிழ் பெருமகன் 50 வருட காலங்களில் 2000 கோடிக்கு அதிபதியாக முடிந்திருக்கிறது. ஆமாம் ஒப்புக்கொள்கிறேன் இவர்கள் தமிழனை ஏமாற்றுவது எப்படி என்று நன்றாக பகுத்து அறிந்து வைத்து இருக்கிறர்கள்.

தாழ்ந்த சாதி என்று ஒருவனை தீண்டத்தகாதவன் ஆக்குவது எவ்வளவு குற்றமோ அது போல் உயர்ந்த சாதி என்று ஒரு மக்கள் கூட்டத்தை பிரித்து ஒதுக்குவதும் குற்றச்செயல் தான்.

தமிழீழ போராட்டம் சாதிமுறைமைக்கு எதிரான தமிழ் மக்களின் நல்வாழ்வுக்கான ஒரு சமதர்ம போராட்டம். அதற்கு பிராமணன் என்றும் பிறசாதியார் என்றும் பேதம் பார்க்க தெரியாது. கடவுள் இல்லை என்று கோவில் மதில்களில் மட்டும் எழுதி வைத்து விட்டு மசூதிகளுக்கு போய் ஒரு குல்லாவும் போட்டு கொண்டு கஞ்சி குடிக்கும் போலி மதசார்பின்மையும் அதற்கு தெரியாது.

தமிழுக்காக, தமிழர் நல்வாழ்விற்காக நடத்தப்படும் தமிழீழ போராட்டத்திற்கு தேவையற்ற பகுத்தறிவு(?!) சாயம் பூசி கொச்சை படுத்தாதீர்கள். இந்த ஆரிய திராவிட மாயை பற்றி பிறிதொரு சந்தர்ப்பத்தில் இன்னும் விளக்கமான கட்டுரை எழுதலாம் என்று இருக்கிறேன்.

சாதி இரண்டொழிய வேறில்லை - சாற்றுங்கால்

இட்டார் பெரியார் இடாதார் இழிகுலத்தார்

Edited by vettri-vel

[ஐயா தமிழ் தேசியம் என்றாலே அது பயங்கரவாதம் என்றும் இந்திய ஒருமைப்பாட்டுக்கு எதிரானது என்றும் விடுதலைப்புலிகள் இந்தியாவும் எப்போதுமே ஆபத்தானவர்கள் என்றும் இன்றுவரை எந்தப் பகுத்தறிவாளனும் சொல்லவில்லை! பார்ப்பணியர்கள் தான் வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு கத்துகிறார்கள். அது தான் இந்திய பெரு நாட்டின் வெளிவிவகாரக் கொள்கை என்று நிறுவுகிறார்கள்.

இன்றுவரை தமிழிழும் என்ற நாடு அமைவதற்கு தடையாக இருப்பது சிறிலங்கா அரசோ சிங்களவர்களோ அல்ல.இந்திய அரசின் கொள்கை வகுப்பாளர்களாகவும் ரோ அமைப்பின் செயற்பாட்டாளர்களாகவும் இருக்கும் பார்ப்பனியர்கள் தான்.;

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உந்தக் கருத்தில் எனக்கு உடன்பாடில்லை கண்டியளோ.

றோவில் இருப்பதும், மத்திய அரசில் இருப்பது எல்லாம் பார்ப்பானி என்று எப்படிக் கண்டு பிடிச்சியள். இப்ப முன்னாள் கேரள முதல்வர் அந்தோனி தான் பாதுகாப்புச் செயலாளராக இருக்கின்றார். உவர் என்ன பார்ப்பானியா?

மற்றவர்களை முட்டாள் ஆக்காதிங்கோ சரியா

உந்தச் சண்டையைப் பிடியுங்கோ. விடாதிங்கோ. தமிழனின் மானமே சண்டை பிடிக்கின்றதில் தான் கிடக்கு. ஆனா கருத்தாடலில் வசனம் கிடைக்காட்ட உவன் என்ன சாதி என்று மற்றவர்களைப் போட்டுத் தாக்குவதில் தான் 2 பேரும் ஈடுபடுறியள்.

[ஐயா தமிழ் தேசியம் என்றாலே அது பயங்கரவாதம் என்றும் இந்திய ஒருமைப்பாட்டுக்கு எதிரானது என்றும் விடுதலைப்புலிகள் இந்தியாவும் எப்போதுமே ஆபத்தானவர்கள் என்றும் இன்றுவரை எந்தப் பகுத்தறிவாளனும் சொல்லவில்லை! பார்ப்பணியர்கள் தான் வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு கத்துகிறார்கள். அது தான் இந்திய பெரு நாட்டின் வெளிவிவகாரக் கொள்கை என்று நிறுவுகிறார்கள்.

இன்றுவரை தமிழிழும் என்ற நாடு அமைவதற்கு தடையாக இருப்பது சிறிலங்கா அரசோ சிங்களவர்களோ அல்ல.இந்திய அரசின் கொள்கை வகுப்பாளர்களாகவும் ரோ அமைப்பின் செயற்பாட்டாளர்களாகவும் இருக்கும் பார்ப்பனியர்கள் தான்.;

ஈழக்கொள்கைக்கு ஆதரவாளர்கள் என்பதால் அவர்களின் பகுத்தறிவு வாதம் செய்திருக்கும் சீரழிவுகளை மூடி மறைக்க முடியாது. வங்கத்தை பிரித்துக் கொடுக்க யோசிக்காத இந்தியா, ஈழத்திற்கு எதிராக நிற்பதே இந்த போலி திராவிடம் பேசுபவர்களின் கடந்த கால பிரிவினை கூச்சல்கள் தான். சரி அதிலாவது உறுதியாக இருந்தார்களா? ஆட்சி சுகம் கண்டதும் அதையும் அம்போ என்று விட்டு விட்டார்கள். பின் மாநில சுயாட்சி என்றார்கள். இப்போது டெல்லி என்ன சொல்கிறதோ அது தானாம் இவர்கள் கொள்கையும். கேட்டால் இந்திய தாயின் ஒருமைப்பாடு என்றால் இவர்களுக்கு உயிராம்.

பிராமணர்கள் செய்வதெல்லாம் சரியென்று சொல்ல வரவில்லை. இந்த திராவிட திலகங்களுக்கு முதுகெலும்பிருந்தால் இவர்களுக்குள் மரணப்படுக்கை வரை பதவி வேண்டும் என்னும் சுயநலம் இல்லாமல் இருந்தால் எந்த பிராமணனால் என்ன செய்து விட முடியும். ஆறு கோடி மக்கள் ஒன்று சேர்ந்து அறைகூவல் விட்டால் எந்த வல்லரசால் என்ன செய்து விட முடியும் இந்திய அரசாட்சியும் உளவுத்துறையும் பிராமணர்களின் கையில் இருக்கிறது என்பதெல்லாம் மாயை. ஏ.கே. அந்தோனி, சிவசங்கர் மேனன், எம்.கே.நாராயணன் இவர்கள் எல்லாம் பிராமணர்களா என்ன?

இந்த திராவிட திலகங்களின் புரட்சி பிராமணர்களையும் மற்ற தமிழர்களையும் தமிழால் இணைத்து ஒரு இனக்குழுமமாக உரிமைக்காக போராட செய்யும் விதமாக இருந்திருக்க வேண்டும். இவர்கள் செய்து விட்ட சதி செயல்களால் தான் ஒரு கேரளாவிலோ, கர்நாடகாவிலோ அல்லது இந்தியாவின் வேறு எந்த மாநிலங்களிலும் இல்லாத அளவுக்கு தமிழன் பிராமணன் என்றும் அல்லாதவன் என்றும் பிரிந்து நிற்கிறான். ஆனால் இவர்கள் மட்டும் பிராமணர்களுடன் திருமண சம்பந்தமும் வைத்துக் கொண்டு பூட்டிய அறைக்குள் ஓம குண்டங்களும் வளர்க்கிறார்கள். ஏமாந்தவன் தெருவோரத்து ஏழைத்தமிழன் தான். பிராமணன் என்று சொல்லிக் கொள்ளும் எவனும் இன்று பிராமணனாக வாழவில்லை. பிராமணன் என்பது பிறப்பால் வருவதாக நான் கற்ற வேதங்களும் சொல்லவில்லை.

Edited by vettri-vel

உந்தக் கருத்தில் எனக்கு உடன்பாடில்லை கண்டியளோ.

றோவில் இருப்பதும், மத்திய அரசில் இருப்பது எல்லாம் பார்ப்பானி என்று எப்படிக் கண்டு பிடிச்சியள். இப்ப முன்னாள் கேரள முதல்வர் அந்தோனி தான் பாதுகாப்புச் செயலாளராக இருக்கின்றார். உவர் என்ன பார்ப்பானியா?

மற்றவர்களை முட்டாள் ஆக்காதிங்கோ சரியா

உந்தச் சண்டையைப் பிடியுங்கோ. விடாதிங்கோ. தமிழனின் மானமே சண்டை பிடிக்கின்றதில் தான் கிடக்கு. ஆனா கருத்தாடலில் வசனம் கிடைக்காட்ட உவன் என்ன சாதி என்று மற்றவர்களைப் போட்டுத் தாக்குவதில் தான் 2 பேரும் ஈடுபடுறியள்.

மத்திய அரசு என்பது வேறு அதை இயக்ககிற அதற்க ஆலோசனை வழங்குகின்ற சவுத் பிளாக் எனப்படும் கொள்கை வகுப்பு பிரிவு என்பது வேறு மத்திய அரசு ம் அதிலுள்ள மந்திரிகளும் மாறுவார்கள். ஆனால் சவத் பிளக் அதிகாரிகள் தொடாந்தும் பல அரசாங்கங்களுடன் பணியாற்றுவார்கள். நாராயணன். மேனன் போன்றவர்கள் இதற்கு உதாரணம். நான் அறிந்தவரை 22 பேர் கொண்ட இந்த வெளிவிவகார கொள்கை விவகாரத்துறையில் 2 பேர் மட்டுமே பார்ப்பணியர்கள் அல்லாதவர்கள்.நாங்கள் பார்ப்பணியர்கள் என்று சொல்வது ஒரு மக்கள் கூட்டத்தை அல்ல.சாதி வெறியை தங்கள் பிறப்புரிமையாக கொண்ட கொள்கையாளர்களையே. பௌத்த சிங்கள பேரினவாதிகளைப் போலத் தான் இவர்களும்.இந்திய கொள்கை வகுப்புத்துறையில் இந்திரா காந்தி காலத்தில் இருந்த ஜி.பார்த்தசாரதி வெங்கடேஸ்வரன் ஆகிய தமிழர்கள் (இவர்கள் பார்பணியவெறிதனமற்ற பிராமணர்கள்) தழிழீழதேசம் உருவாகவேண்டியது வரலாற்றுக் கட்டாயம் என்று வலியுறுத்தி வந்ததற்காக ராஜிவ் காந்தியின் ஆட்சிக்காலத்தில் ஓரங்கட்டப்பட்டதாக அறிந்திருக்கிறேன். 1984ம் ஆண்டு பார்த்தசாரதி அவர்களை எனது தந்தை சந்தித்த போது தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் சோழர்கள் பயன்படுத்திய புலிக் கொடியைவைத்திருப்பது சவுத்பிளக்கிலுள்ள பார்ப்பணியர்களுக்கு பிடிக்கவில்லை என்றும் இந்திய வரலாற்றில் அயல்நாடுகளை கைப்பற்றி பரந்துவிரிந்த மாபெரும் சாம்ராட்சித்தை வைத்திருந்த ஒரு அரச பரம்பரையினராக தமிழர்களான அவர்கள் இருந்தது இவர்களுக்கு அலர்ச்சி தரும் விடயம் என்றும் கூறியிருக்கிறார்.

இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஆந்தோனி கொள்கை வகுப்பாளர்கள் வகுத்தரும் கொள்கையை செயற்படுத்தும் ஒரு மனிதர் மட்டுமே .வலிமை ஆளுமையும் மிக்க கொள்கை வகுப்புத்துறையை மிறி அந்தோனி மட்டுமல்ல தமிழக அமைச்சர்கள் கூட எதுவும் செய்துவிட முடியாது. தமிழக முதல்வர் கருணாநிதியைவிட மத்திய அமைச்சர்களான சிதம்பரம் வேலு ராஜா முதலானவர்களை விட மத்திய கொள்கை வகுப்புத்துறையிலுள்ள தமிழின விரோதியான நாராயணன் பலம்பொருந்தியவர்

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஆந்தோனி கொள்கை வகுப்பாளர்கள் வகுத்தரும் கொள்கையை செயற்படுத்தும் ஒரு மனிதர் மட்டுமே .வலிமை ஆளுமையும் மிக்க கொள்கை வகுப்புத்துறையை மிறி அந்தோனி மட்டுமல்ல தமிழக அமைச்சர்கள் கூட எதுவும் செய்துவிட முடியாது. தமிழக முதல்வர் கருணாநிதியைவிட மத்திய அமைச்சர்களான சிதம்பரம் வேலு ராஜா முதலானவர்களை விட மத்திய கொள்கை வகுப்புத்துறையிலுள்ள தமிழின விரோதியான நாராயணன் பலம்பொருந்தியவர்

மதவாதிகள் சாதி வெறியர்கள் என்று ஒப்பாரி வைப்பதை விட, உங்களின் சாதி வெறித்தனமான கருத்துக்களைப் பார்க்கின்றபோது, உங்களுக்குத் தான் அதிக சாதி வெறி இருக்கின்றது என்பது தெளிவாகத் தெரிகின்றது.

அவ்வாறே

இங்கே எழுதும் ஒரு சில சைவ சற்சூத்திர வெறியர்களிடம் நீங்கள் ஏன் 'ஈழத் தமிழர்களே மன்னியுங்கள்' என்று மன்னிப்புக் கேட்கிறீர்கள்?

என்று எம் மீது ஐாதி வெறியைத் திணித்த விதங்களை எல்லாம் பார்க்கின்றபோது, மனசு எல்லாம் ஐாதி வெறியோடு அலைகின்ற கும்பல் நீங்கள் தான். முதலில் உங்களின் சாதி வெறியை நீக்கிவிட்டு ஊருக்கு உபதேசம் செய்யலாமே!

நாராணயன் தமிழ் விரோதி என்றால் அதைச் சொல்லுங்கள். அதை விட்டுவிட்டு ஒட்டுமொத்த சாதி வகுப்பை ஏன் திட்டி உங்களின் சாதி வெறியைக் காடடுகின்றீர்கள். ஈழத்தில் டக்ளஸ் தேவானந்தா துரோகி என்றால் அவரின் சாதி வகுப்பைத் திட்டுவீர்களா? அல்லது சித்தாத்தன், கருணா, ஆனந்தசங்கரி, லக்ஸ்மன் கதிர்காமர் என்று எல்லோருடைய சாதி வகுப்பையும் திடட்டுகின்றீர்களா? இல்லை ஏன் என்றால் இவர்கள் ஒருத்தரும் பார்ப்பானிகள் கிடையாது. உங்களின் சாதி வெறிப் பார்வைக்குள் இவர்கள் அடங்காததால் சாதிவெறியை உங்களால் கக்கமுடியவில்லை.

தமிழீழப்போராட்டத்திற்கு என்ன தடையாகின்றது என்பது பற்றிக் கதைக்கப்போனால் நாம் தயார். தடைக்கான மூலம் எங்கிருந்து ஆரம்பித்தது என்பது பற்றிக் கதைக்கத் தயார்.

வங்கத்தைப் பிரித்துக் கொடுத்த இந்தியா, அதுவும் முஸ்லீம்நாடகப் பிரிந்து போன வங்கத்தைக் கூடப் பிரித்தது ஆனால் தமிழ்நாட்டில் ஏன் முடியவில்லை என்றால், அது அங்கே சில மோமாளிகள் தலைமை வகித்தது தான்.

உப்படியே மற்றவர்களுக்கு சாதி வெறி என்று பட்டம் சூட்டி, நீங்கள் உங்களின் சாதிவெறியைக் கக்கிக் கொள்ளுங்கள். அது இல்லாவிட்டால் உங்களின் பிழைப்பு பூச்சியம் தான்.

Edited by தூயவன்

இந்த தலைப்பிற்கு சம்பந்தம் இல்லாவிட்டாலும் ஒன்றை கூற விரும்புகிறேன்.

100% திராவிடர் என்றோ 100% ஆரியர் என்றோ எவரையும் கூற முடியாது. இது சிலர் செய்த அரசியல் பம்மாத்து. பாரதியாரும் பல்வேறு பழந்தமிழ் ஏடுகளை அச்சில் ஏற்றிய தமிழ் தாத்தா என்று அழைக்கப்பட்ட உ.வே. சுவாமிநாத ஐயரும் அந்தணர் தான். இன்றைய இந்த பிளவு தேவையில்லாமல் திராவிட வாதம் பேசும் மூடர்களால் வந்தது.

சரி இவர்கள் திராவிடர்களையாவது ஒன்றாக சேர்த்தார்களா என்றால் அதுவும் இல்லை. கேரள, கர்நாடக, ஆந்திர திராவிட மாநிலங்கள் தண்ணீர் கூட தர முரண்டு பிடிக்கும் அளவுக்கு தான் திராவிட ஒற்றுமை இருக்கிறது.

சரி இந்த பகுத்தறிவாளர்கள் சாதியையவது ஒழித்தார்களா? தேர்தலில் வேட்பாளர்கள் நிறுத்துவதற்கே சாதி பார்க்க வேண்டிய நிலையை தோற்றுவித்து வைத்திருப்பது தான் இந்த பகுத்தறிவு பேசும் ஆட்சியாளர்களின் சாதனை.

சமதர்மம் என்பது சாதி என்ற தத்துவத்தை அறவே அழிப்பதால் தான் மலரும். அதைவிட்டு விட்டு ஒரு மக்கள் கூட்டத்தை பார்ப்பான் என்பதும் பதிலுக்கு அவனும் இன்னொருவனை பார்த்து பறையன் என்பதும், இப்படி ஒருவரை ஒருவர் கடித்து குதற தூண்டுவதால் சமூக ஒற்றுமை வரப்போவதில்லை.

இது தங்கள் அரசியல் வியாபாரத்திற்காக திராவிடன் என்னும் வார்த்தையை பயன்படுத்தியவர்கள் செய்து விட்ட சூழ்ச்சி. இந்த வியாபாரம் அமோகமாக நடந்தேறியதால் தான் திருக்குவளையில் இருந்து வந்த ஒரு தமிழ் பெருமகன் 50 வருட காலங்களில் 2000 கோடிக்கு அதிபதியாக முடிந்திருக்கிறது. ஆமாம் ஒப்புக்கொள்கிறேன் இவர்கள் தமிழனை ஏமாற்றுவது எப்படி என்று நன்றாக பகுத்து அறிந்து வைத்து இருக்கிறர்கள்.

தாழ்ந்த சாதி என்று ஒருவனை தீண்டத்தகாதவன் ஆக்குவது எவ்வளவு குற்றமோ அது போல் உயர்ந்த சாதி என்று ஒரு மக்கள் கூட்டத்தை பிரித்து ஒதுக்குவதும் குற்றச்செயல் தான்.

தமிழீழ போராட்டம் சாதிமுறைமைக்கு எதிரான தமிழ் மக்களின் நல்வாழ்வுக்கான ஒரு சமதர்ம போராட்டம். அதற்கு பிராமணன் என்றும் பிறசாதியார் என்றும் பேதம் பார்க்க தெரியாது. கடவுள் இல்லை என்று கோவில் மதில்களில் மட்டும் எழுதி வைத்து விட்டு மசூதிகளுக்கு போய் ஒரு குல்லாவும் போட்டு கொண்டு கஞ்சி குடிக்கும் போலி மதசார்பின்மையும் அதற்கு தெரியாது.

தமிழுக்காக, தமிழர் நல்வாழ்விற்காக நடத்தப்படும் தமிழீழ போராட்டத்திற்கு தேவையற்ற பகுத்தறிவு(?!) சாயம் பூசி கொச்சை படுத்தாதீர்கள். இந்த ஆரிய திராவிட மாயை பற்றி பிறிதொரு சந்தர்ப்பத்தில் இன்னும் விளக்கமான கட்டுரை எழுதலாம் என்று இருக்கிறேன்.

சாதி இரண்டொழிய வேறில்லை - சாற்றுங்கால்

இட்டார் பெரியார் இடாதார் இழிகுலத்தார்

நகைப்புக்கிடமாக இருக்கிறது உங்கள் பல கருத்துக்கள். நீங்கள் சொன்னவற்றில் பார்ப்பனீயம் என்பதை பவுத்த பேரின வாதாம் என்றும் திராவிடர் என்பதை தமிழர் என்றும் பார்ப்பனர் என்பதி சிங்களவர் என்றும் போட்டால், ஹேல உறுமைய சொல்லும் 'தமிழர்களுக்கு இங்கு எந்தப்பிரச்சினையும் இல்லை, இங்கு புலிகளின் பயங்கரவாதாம் தான் பிரச்சினை' என்பதற்கும் அதிக வித்தியாசம் இருக்காது.

முதலில் ஒன்றைப்புரிந்து கொள்ளுங்கள், பெரியாரும் திராவிட இயக்கங்களும் தோன்ற முதல் தமிழ் நாட்டை ஆட்சி செய்தவர்கள் பார்ப்பனர்கள்,அரச அதிகாரம் இருந்தது பார்ப்பனர்கள் கையில்.கல்வி வேலை வாய்ப்பு எல்லாமுமே பார்ப்பனர்கள் மயமாக இருந்தது.சனத்தொகையில் மூன்று சத வீதமானவர்கள் பொருளாதரத்தில் தொண்ணூறு சதவீதத்தை ஆக்கிரமித்து இருந்தனர்.பார்ப்பனீயம் இல்லாது விட்டால் திராவிடம் தோன்றி இருக்காது.எவ்வாறு சிங்களப்பேரினவாதாம் இல்லாமல் தமிழ் தேசியம் தோன்றி இருக்காதோ, அதே போல்.

திராவிடம் என்பது இப்போதையை தமிழத் தேசியத்தைப்போல்.பார்ப்பனீயம

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாரதர் போராட்டத்தையும் திராவிட கொள்கைகளையும் ஒன்றாக போட்டு குழப்பவேண்டாம்

அதோடு தூயவனை வீணாக் வம்புக்கு இழுப்பதிழும் குறியாக இருக்கிறிங்கள்

ஏதோ இந்து ராம் தூய்வனிடம் கேட்டு தான் போராட்டத்தை கொச்சை படுத்துவது போல.......

இங்கே எந்தளவுக்கு நீங்கள் சாதியம் இல்லை பார்ப்பனீயம் இல்லை என்று சொல்கிறீர்களோ ,இன்னொரு பக்கத்தில் அதையே உதாரணமாக் காட்டி, பார்த்தீர்களா யாழ்ப்பாண வேளாளரின் தமிழ்த் தேசியத்தை என்று சொல்லி, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தமிழ்த் தேசியத்தால் விடுதலை கிடைக்காது, அவர்கள் தங்களை 'தலித்துக்கள்' என்று அடையாளம் காட்டி ,'பவுதர்களாக' மாற வேண்டும் என்று சொல்லும் ஒரு அரசியல் நிலைப்பாடும் வளர்ந்து வருவதையும் கவனியுங்கள்.

சாதிய மத வேறுபாடுகளைக் கடந்த ஒன்று பட்ட கோட்பாடகவே 'திராவிடம்' என்கிற கோட்பாட்டை பெரியார் வளர்த்தார்.அவர் பின்னால் வந்தவர்கள் அதனை உயர் சாதியினரின் எகபோக அரசியற் உடமையாக மாற்றி விட்டனர்.அதனாலையே இன்று 'தலித்தியம்' என்னும் கோட்பாடாக தாழ்த்தப்பட்ட மக்களின் அரசியற் சக்திகள் , திரவிடம், தமிழ்த் தேசியம் என்னும் அடையாளங்களைத் துறந்து ,வளர்ந்து வருகின்றன.

நீங்கள் எவ்வளவுக்கு எவ்வளவு சைவ வேளாளத்தை தூக்கிப் பிடிக்கிறீர்களோ அவ்வளவுக்கு அவ்வளவு தலித்தியமும் வளர்ந்து வருகிறது என்பது தான் இன்றைய அரசியல் நிலை.தமிழ்த் தேசிய அடையளாத்தை கோட்பாட்டு ரீதியாக நிலைத்து வைத்திருக்க வேண்டும் என்றால், அதனை சாதிய மத ரீதியான அடையாளத்திற்கு அடிபணியாத ஒரு அரசியற் கோட்பாடாக அடையாளமாக இனங்காணுவது அவசியம்.

திராவிடத்திற்க்கு நிகழ்ந்த சீரழிவு தமிழத்தேசியத்திற்க்கும் நிகழமால் இருக்க வேண்டும் என்றால், தமிழ்த் தேசியம் என்பது சாதிய சமய பிரதேச வாதங்களைக் கடந்த ஒரு அரசியற் கோட்பாடாக , அரசியற் சக்தியாக இருக்க வேண்டும்.இதற்கு முன் நிபந்தனையாக இருப்பது சைவ வேளாளத்தையும் நாவலரின் சற் சூத்திர சைவத் தமிழ் அடையாளத்தையும் அதன் எச்ச சொச்சங்களையும் தமிழ்த் தேசியத்தில் இருந்து பிரித்து எறிந்து விடுவதே.

எவ்வாறு தமிழர்களுகுப் பிரச்சினைகள் ஒடுக்கு முறைகள் இருக்கின்றன என்பதை ஏற்றுக் கொள்வது தமிழ்த் தேசியத்திற்கான முன் நிபந்தனையாக இருக்கிறதோ , அதே போல் தாழ்த்தப்பட்ட மக்கள் ஈழத்தில் அடக்கப்பட்டனர் என்பதையும், பிரதேச ரீதியான பாகுபாடுகள் யாழ்ப்பாணத்தவரால் நிகழ்த்தப்பட்டன என்பதையும் ஏற்றுக்கொண்டு இவற்றை அகற்றுவதற்கான ஒரு விடுதலைக் கோட்பாடாக தமிழ்த் தேசியம் இருக்கிறது என்பதை நிலை நிறுத்துவது, தமிழ்த் தேசியத்தைப் பாதுகாப்பதற்கான முன் நிபந்தனையாக இருக்கிறது.

இவ்வாறு அரசியல் ரீதியாக்ச் சிந்திச்சு செயலற்றாமல் வெறுமனே 'சோபா சக்தியையோ' ,'அ மாக்சயோ' துரோகிகள் என்று அழைப்பதாலோ, தனி நபர்கள் மேல் வசை மாறிப் பொழிவதாலோ , தமிழ்த் தேசியத்தைப் பாதுகாக்க முடியாது என்பதே அரசியல் நிதர்சனம்.அரசியல் ரீதியான கோட்பாட்டின் பிழைகளே அரசியல் இயக்கங்களை வளர்க்கின்றன.

குறுந் தேசிய இன வேறி சமய வெறிகளைக் கடந்து அனைத்து தமிழ் மக்களுக்குமான விடுதலையைத் தரும் கோட்பாடாக தமிழ்த் தேசியத்தை நீங்கள் பார்க்காதவரை, அதற்கு எதிரான அரசியற் சக்திகள் காலம் காலமாக வளர்ந்து வரும்.வரலாற்று இயங்கியல் என்பது அதுவே.யாழ்க்களத்தில் சிலரால் எழுதப்படும் எழுத்துக்கள் தமிழ்த் தேசியத்தை ஒரு இன வெறிக் கோட்பாடாகவும், யாழ் உயர் சாதியினரின் போரட்டாமாகவுமே காட்ட உதவும்.இவர்கள் வரலாற்றையும், அரசியலையும் கற்றலே இவர்களை இவ்வாறான குறுகிய பார்வையிகளில் இருந்து விடுவிக்கும்.அதற்கு வாசிப்பும், வாசிப்பதை உள்வாங்கும் அடிப்படை குணாம்சியம் அவசியம்.தாம் பிடிச்ச முயலுக்கும் மூன்று கால் என்னும் விதண்டா வாதமும், மத வெறியின் மயக்கமும், சிறு வயது முதல் புகட்டப்பட்ட கோட்பாடுகளையே உண்மை என்று எண்ணும் மூட நம்பிக்கையும் இருக்கும் இடத்து சுய சிந்தனை என்பதுவோ அறிவுத் தேடலோ ,பகுத்து அறிவதோ இல்லமலையே இருக்கும்.

ஈழத்தில் கிழக்கில் மிகுதியாக வாழும் இஸ்லாமியர்களின் தாய்மொழி என்ன???

அவர்கள் தமிழர்களா???

அவர்கள் ஏன் தங்களை தமிழர் என்று கூறிக்கொள்ளாமல் தனி இனமாக பார்க்கிறார்கள்???

ஈழ இஸ்லாமியர் தமிழுக்கு தொண்டாற்றியதுண்டா??

வங்கப்பிரிவினை இந்தி ஆதிக்க வெறியர்களால் ஆதரிக்கப்பட்டது.... ஏனென்றால் இந்திக்கு அடுத்தபடியாக பெரும்பான்மை மக்கள் பேசிய மொழி வங்க மொழி....

இந்தியை விட பழமையானதும் இலக்கண செறிவும் உடையது.... இந்திய தேசிய கீதம் வங்க மொழிப்பாடலேயாகும்

தேசிய கீதத்திற்கு நிகரான வந்தே மாதரம் பாடலும் வங்க மொழிப்பாடலே....

இன்று சுமார் 50% க்கும் குறைவான மக்களே இந்தியாவில் இந்தியை தாய்மொழியாக க்கொண்டவர்கள்...

வங்கம் பிரிக்கப்பட்டு பாகிஸ்தானிடம் கொடுக்கப்ப்டாமல் இருந்திருந்தால் இந்தி இந்தியாவில் ஏகபோக ஆதிக்கம் செலுத்த முடியாது போயிருக்கும் ... எனவே தான் தந்திரமாக வங்கத்தை தாரை வார்த்த போது இந்தி ஆதிக்க தலைவர்கள் பெரிய எதிர்ப்புகள் காட்டவில்லை..

பின்னர் வங்கம் பாகிஸ்தானிடமிருந்து பிர்க்கப்பட்டது பாகிஸ்தான் இரண்டு புறமாக கொடுத்த குடைச்சலை தடுப்பதற்காகவே.

இந்திய சிவில் சர்வீஸ் அதிகாரிகள் மிகப்பெரும்பான்மையினர் பார்ப்பனர்களே அவர்களே பல முக்கிய பதவிகள் வகிக்கின்றனர்.... எந்த பார்ப்பனனும் தமிழ் பேசும் பார்ப்பனனாக இருந்தாலும் சரி அல்லது பிற மொழி பார்ப்பனனாக இருந்தாலும் சரி அவர்கள் தமிழை வடமொழிக்கு எதிரியாகவே பார்த்தனர் ..எனவே அவர்கள் தமிழ் கோலோச்சும் ஒரு நாடு உருவாவதை எதிர்த்தனர்...

எனவே தான் ஈழம் உருவாகாமல் தடுத்து நஞை விதைத்தார் பார்ப்பனர் தீட்சித்.

அவர் வழியை பின்பற்றுகிறார் பார்ப்பனர் நாராயணன்..

தமிழகத்தில் ஈழ விடுதலைப்போரை 90% பார்ப்பனர் எதிர்க்கின்றனர்.... அவர்களில் துக்ளக் சோ...

இந்து ராம் ...தினமலர் லக்ஷ்மிபதி போன்றோர் முக்கியமானவர்கள்...

தூயவன் அவர்களே பார்ப்பனர்களை பெரியார் அன்னியப்படுத்தினார் என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது...... அவர்களே தமிழர்களிலிருந்து அன்னியப்பட்டார்கள்......

பார்ப்பனீயத்தை எதிர்த்த பாரதியாரை தரக்குறைவாக நடத்தினர்...

இப்பொழுதும் தமிழ் ஓதுவார் ஒருவர் சிதம்பரம் சன்னிதியில் தேவாரம் பாட இயலுமா???

கை தான் ஒடியும்!!!

ஈழத்தமிழர் பார்ப்ப்பனர்களின் நச்சுத்தன்மையை அறியாமல் இருப்பது வேதனை அளிக்கிறது...

தேவதாசி முறை பார்ப்பனர்களாலேயே ஆதரிக்கப்பட்டு வளர்க்கப்பட்டது ..... வரலாறு தெரியுமா தூயவன் அவர்களே.... அவர்கள் தான் கோவிலுக்கு தொண்டு செய்த பெண்களை ஆசை நாயகிகளாக்கி ஆட்சியாளர்களோடு பகிர்ந்து கொண்டனர்...

தமிழகத்தில் சட்டசபையில் சுதந்திரத்துக்கு முன்பு தேவதாசி ஒழிப்பு தொடர்பாக விவாதம் நடந்த போது காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தி பாரம்பரியமான முறை ஒழிக்கப்படக்கூடாது என்றார் ... அதற்கு அந்த வம்சத்தை சேர்ந்த பெண் உறுப்பினர் அய்யா அப்படியே ஆகட்டும் இனி நீங்கள் உங்கள் சாதிப்பெண்ணை தேவதாசியாக அனுப்புங்கள் என்றதும் அமைதியாகி அமர்ந்தவர்.

முன்பு சதி என்னும் பழக்கம் கணவன் இறந்தால் ..மனைவியை தீயில் தூகிப்பொடுவது ...அவாறு கொலை செய்தது பார்ப்பனர்களே...குழந்தைத்திர

மதனராசா .... அந்தோணி பாதுகாப்பு செயலர் அல்ல அவர் பாதுகாப்பு இணை அமைச்சரே....

முக்கியமான செயலர்கள் எல்லாம் இது நாள் வரை பார்ப்பனர்களே ஆக்கிரமித்துள்ள இடமாக உள்ளது

நாரதர் போராட்டத்தையும் திராவிட கொள்கைகளையும் ஒன்றாக போட்டு குழப்பவேண்டாம்

அதோடு தூயவனை வீணாக் வம்புக்கு இழுப்பதிழும் குறியாக இருக்கிறிங்கள்

ஏதோ இந்து ராம் தூய்வனிடம் கேட்டு தான் போராட்டத்தை கொச்சை படுத்துவது போல.......

முதலில் எமது போராட்டம் என்ன என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.எமது போராட்டம் ஒரு அரசியல் விடுதலைக்கான போராட்டம். அது போலவே திராவிடப் போராட்டமும் அடக்கப்பட்ட மக்களின் உருமைகளுக்கான ஒரு அரசியற் போராட்டம்.உங்களுக்கு உங்களது போராட்டமும் அதன் தலமையும் எவ்வளவு முக்கியமோ அதே போல் தமிழ் நாட்டு மக்களுக்கும் அவர்களின் அரசியற் போராட்டமும் அதனை நிகழ்த்திய அவர்களின் தலைவர்களும் முக்கியமானவர்கள்.ஒரு அரசியற் போராட்டத்தையும் அதன் தலமையையும் கொச்சைப் படுத்தும் போது அந்த அடக்கு முறைக்கு ஆளான மக்கள் எவ்வளவு துயரப்படுவார்களோ அதே துயரம் உங்களுக்கும் புரிய வேண்டும் என்பதற்காகவே இரண்டையும் ஒப்பு நோக்கினேன்.அப்போதாவது உங்களுக்கு விளங்கும் என்பதற்காக. போதிய விளக்கம் இன்று அரசியற் போராட்டங்களின் வரலாறோ அவற்றால் பாதிக்கப்படவர்களின் வலிகளைத் தெரியாமால் ஒவ்வொரு வரும் தமது சொந்த நிலைகலில் இருந்து பெரியாரையும் திராவிடப் போராட்டத்தையும் கீழத் தரமான வகையில் எழுதுவது, யாரை நாங்கள் எமது நேச சக்திகளாக தமிழ் நாட்டில் கருதுகிறோமோ அவர்களை வெறுப்படையவே வைக்கும். நாம் இவர்களுக்காக இங்கே பாடுபடுகிறோம் ஆனால் இவர்களோ எமது தந்தையை தலைவனை கன்னடன் வெறியன் என்று எழுதுகிறார்களே என்று நினைக்க மாட்டர்களா?

மேலும் ஒருமையில் எழுதுவது கள விதிகளுக்கு முரணானதாக இருக்கும் இடத்து இப்படி எழுதுவது இங்கு எவ்வாறு தொடர்ந்து அனுமதிக்கப்படுகிறது?

பெரியார் கொள்கைகளையும் ஈழப்போராட்டத்தையும் போட்டுக்குழப்பிக்கொள்ள வேண்டாம்....

ஈழப்போராட்டம் இன விடுதலைப்போராட்டம்......

பெரியார் துவக்கியது சமுதாய விழிப்புணர்வு............ இரண்டும் வெவ்வேறானது ஆனால் முக்கியமானது

தயவு செய்து பெரியாரை வசைபாட வேண்டாம்

நகைப்புக்கிடமாக இருக்கிறது உங்கள் பல கருத்துக்கள். நீங்கள் சொன்னவற்றில் பார்ப்பனீயம் என்பதை பவுத்த பேரின வாதாம் என்றும் திராவிடர் என்பதை தமிழர் என்றும் பார்ப்பனர் என்பதி சிங்களவர் என்றும் போட்டால், ஹேல உறுமைய சொல்லும் 'தமிழர்களுக்கு இங்கு எந்தப்பிரச்சினையும் இல்லை, இங்கு புலிகளின் பயங்கரவாதாம் தான் பிரச்சினை' என்பதற்கும் அதிக வித்தியாசம் இருக்காது.

முதலில் ஒன்றைப்புரிந்து கொள்ளுங்கள், பெரியாரும் திராவிட இயக்கங்களும் தோன்ற முதல் தமிழ் நாட்டை ஆட்சி செய்தவர்கள் பார்ப்பனர்கள்,அரச அதிகாரம் இருந்தது பார்ப்பனர்கள் கையில்.கல்வி வேலை வாய்ப்பு எல்லாமுமே பார்ப்பனர்கள் மயமாக இருந்தது.சனத்தொகையில் மூன்று சத வீதமானவர்கள் பொருளாதரத்தில் தொண்ணூறு சதவீதத்தை ஆக்கிரமித்து இருந்தனர்.பார்ப்பனீயம் இல்லாது விட்டால் திராவிடம் தோன்றி இருக்காது.எவ்வாறு சிங்களப்பேரினவாதாம் இல்லாமல் தமிழ் தேசியம் தோன்றி இருக்காதோ, அதே போல்.

திராவிடம் என்பது இப்போதையை தமிழத் தேசியத்தைப்போல்.பார்ப்பனீயம

Edited by vettri-vel

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.