Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

முதல் பார்வை: சூரரைப் போற்று

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சூரரைப் போற்று: பின்னணி அரசியல்

 

கேள்வி -> தமிழர்கள் அயலான் மொழியான ஆங்கிலம் கற்றுக் கொள்வார்கள் ஆனால் நம் சொந்த நாட்டு மொழியான ஹிந்தியை கற்க மாட்டார்கள், என்னடா முட்டாள்தனம் இது? எனது பதில் -> ஆங்கிலம் எங்களை அடிமைகளாக மாற்றுகிறது ஆனால் அடையாளத்தை அழிப்பதில்லை, ஹிந்தி எங்கள் அடையாளத்தை அழிக்கும். என்றாவது ஒருநாள் அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெற்றுவிடலாம் ஆனால் அடையாழத்தை இழந்தால் நாம் அகதிகளாக திரிய வேண்டியதுதான். நாங்கள் ஆங்கிலம் பல ஆண்டுகளாக பேசி வருகிறோம் ஆனால் அது 'தமிழர்கள்' என்ற எங்கள் அடையாழத்தை அழிக்கவில்லை.
 
மகாராஷ்டிராவை சேர்ந்த மராத்தியர்கள் சில வருடங்கள்தான் ஹிந்தி பேசியிருப்பார்கள் அதற்குள் மகாராஷ்டிரா ஹிந்தி பேசும் மாநிலம் என்று மற்ற மாநிலத்தவர்கள் நினைக்கிறார்கள்(சில வருடங்கள் முன்பு வரை நானும் மகாராஷ்டிரா ஒரு ஹிந்தி மாநிலம் என்று தான் நினைத்திருந்தேன், மராத்தியர்களின் ஹிந்தி எதிர்ப்புக்கு பிறகுதான் எனக்கு மகாராஷ்டிரா ஒரு மராத்திய மொழி பேசும் மாநிலம் என்று தெரியவந்தது). ஹிந்தி ஆங்கிலத்தை விட பல ஆயிரம் மடங்கு ஆபத்தானது.
 
nglish doest not make us loose our identity instead it makes us slave for them but Hindi makes us loose our identity. We learned English for many years but still we are Tamils, we did not loose our Identity. Marathians learned Hindi for few years and they became Hindi Speaking people for other states people including me till few years back.After Marathian agitaion only I came to know Maharashtra is Marathi speaking state. English will not make us Englishmen or Brition but it makes us slave, we can get freedom from slavery but hindi makes us loose our identity. The best example is Maharashtra. Hindi is 100000 times dangerous than English.

 

 
  • கருத்துக்கள உறவுகள்
Image may contain: 1 person
 
டிக்கெட் 150ரூ, பாப்கார்ன் 150ரூ, பார்க்கிங் 50ரூ, பெட்ரோல் 50ரூ,
மொத்தம் 400ரூ செலவு பண்ணி, படம் பார்க்கப்   போனா...
படத்துல... 5ரூவா டாக்டர்,1ரூவா ப்ளைட்டு...😜

 

  • கருத்துக்கள உறவுகள்

 

 

சூரியாவும் நானும் சண்டை போட்டு சட்டையை கிழிச்சுக்கிட்டோம்

  • கருத்துக்கள உறவுகள்
125242124_764872060909408_896981764143692038_o.jpg?_nc_cat=104&ccb=2&_nc_sid=dbeb18&_nc_ohc=TBkKr_DPNO8AX_Nys8N&_nc_ht=scontent-frt3-1.xx&oh=3325f88f4291d70c17b4fc92b6c9f8c6&oe=5FDB348C
 
125316680_1959308314222644_2291778883806694431_o.jpg?_nc_cat=104&ccb=2&_nc_sid=730e14&_nc_ohc=D6ww3ZM4pp8AX_v7y14&_nc_ht=scontent-frt3-1.xx&oh=24ca33f6c25d77023994d84f1aa893a0&oe=5FDB1C15

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

84843068_2474827012767737_8920532831956893696_o.jpg?_nc_cat=106&cb=846ca55b-311e05c7&ccb=2&_nc_sid=8bfeb9&_nc_ohc=kSXfMswuXfcAX9mmNWn&_nc_ht=scontent-frt3-1.xx&oh=e7727ef9bdc878cda0cc7f7bb7bd8313&oe=5FDB905E

சூரரை போற்று படத்தில்  கூறியதை,  செய்து காட்டிய  சூர்யா.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"`சூரரைப் போற்று'- அப்பாகிட்ட பேச நிறைய போன் வருது, ஆனா அப்பா..."- கலங்கும் `உடுமலை கலாம்' குடும்பம்

உடுமலை கலாம்

உடுமலை கலாம்

"தான் நடிச்ச 'சூரரைப் போற்று' படத்தை தியேட்டர்ல குடும்பத்தோட போய் பார்க்கணும்னு, 6 மாசமா குழந்தை மாதிரி காத்திருந்தாரு. கடைசி வரைக்கும் அவரோட ஆசை நிறைவேறவே இல்லை..."

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டையைச் சேர்ந்தவர் ஷேக் மைதீன். இவர் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் உருவ தோற்றத்துடன் இருந்ததால் பெரிதும் பிரபலமானார். தோற்றத்தில் மட்டும் கலாமைப் போல் அல்லாமல் பள்ளி, கல்லூரிகளுக்குச் சென்று அப்துல் கலாமின் அறிவுரைகளை மாணவர்களிடம் பரப்பி வந்தார். ‘உடுமலை கலாம்’ எனப் பலராலும் அன்போடு அழைக்கப்பட்ட ஷேக் மைதீன், சமீபத்தில் சூர்யா நடிப்பில் வெளிவந்துள்ள 'சூரரைப் போற்று' திரைப்படத்தில் கலாம் வேடத்திலேயே நடித்துள்ளார். " ‘சூரரைப் போற்று' படம் வெளியானதும் குடும்பத்தோடு தியேட்டர்ல போய் பார்க்கணும்" என சொல்லி வந்த உடுமலை கலாம், படம் ரிலீஸாவதற்கு முன்பே மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். 'சூரரைப் போற்று' படத்தை பார்த்த பலரும் உடுமலை கலாமிற்கு வாழ்த்துச் சொல்ல ஃபோன் செய்தபோதுதான், அவர் உயிரிழந்த தகவலே பலருக்கும் தெரிய வந்திருக்கிறது.

பள்ளி மாணவர்கள் மத்தியில் உடுமலை கலாம்
 
பள்ளி மாணவர்கள் மத்தியில் உடுமலை கலாம்

உடுமலை கலாமின் மூத்த மகன் ஜெயிலானியிடம் பேசினோம். “அப்பா ஏழ்மையான குடும்பத்துல பிறந்து பெருசா படிக்கலைன்னாலும், கலாம் ஐயா மேலயும் அவரோட கொள்கைகள் மேலவும் தீவிர பற்றுள்ளவரா இருந்தாரு. பார்க்கிற குழந்தைங்ககிட்ட எல்லாம் ‘நான் படிக்காததால பெயின்டரா இருக்கேன். நீங்க நல்லா படிச்சி கலாம் ஐயா மாதிரி பெரிய ஆளா வரணும்’னு சொல்வாரு. கலாம் ஐயா மாதிரியே ஹேர்ஸ்டைலை மாத்திக்கிட்டு, மீசையை எடுத்துட்டு எங்க முன்னால ஒருநாள் வந்து நின்னாரு. நாங்களே அசந்து போயிட்டோம்.

 
 

அப்துல் கலாம் மாதிரியே இருந்ததால, அப்பா எங்க போனாலும் செல்ஃபி எடுக்க ஒரு கூட்டம் கூடிடும். சளைக்காம எல்லார் கூடவும் அப்பா போட்டோ எடுப்பார். பெயின்டர் வேலையில கிடைக்கிற காசுல குழந்தைகளுக்கு நோட்டு, புத்தகம்னு வாங்கிக் கொடுப்பாரு.

உடுமலை கலாம்
 
உடுமலை கலாம்

“ஒரு தடவை உடுமலைப்பேட்டை பக்கத்துல உள்ள கணியூர் ஸ்கூலுக்கு கலாம் ஐயா வராருன்னு தகவல் தெரிஞ்சு அப்பா அங்க போனாரு. அப்பாவைப் பார்த்திட்டு அங்க இருந்த போலீஸ்காரங்க எல்லாம் திகைச்சுப் போயிட்டாங்க. ‘என்ன சார் பாதுகாப்பில்லாம நீங்க தனியா வர்றீங்க’ன்னு போலீஸார் பதற, அப்புறம்தான் அப்பா விஷயத்தைச் சொல்லியிருக்கார். அந்த நிகழ்ச்சி முடிஞ்சதும் கலாம் அய்யாவை அப்பா சந்திச்சார். ‘என்னப்பா என்னை மாதிரியே இருக்க. ஆச்சர்யமா இருக்கே’ன்னு அப்பாவை பார்த்து சந்தோஷப்பட்டதோட, அப்பாவோட செயல்பாடுகளையும் கலாம் ஐயா பாராட்டுனாங்க. இதற்கிடையில் உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த குறும்பட இயக்குநர் சரவணனின் இயக்கத்தில், அப்துல் கலாமின் வேடத்தில் அப்பா நடிக்க, மேலும் பிரபலமானார். அதன் மூலமாகவே 'சூரரைப் போற்று' திரைப்படத்திலும் நடிக்க அப்பாவுக்கு வாய்ப்பு கிடைத்தது.

 
உடுமலை கலாமிற்கு அஞ்சலி செலுத்தும் ஊர் மக்கள்
 
உடுமலை கலாமிற்கு அஞ்சலி செலுத்தும் ஊர் மக்கள்

தனக்கு ரொம்ப புடிச்ச கலாம் வேஷத்துல சினிமாவுல நடிச்சிருக்கேன்னு அப்பா சொல்லி சொல்லி சந்தோஷப்படுவாரு. ஜனவரி, தமிழ்ப் புத்தாண்டு, கொரோனான்னு படம் ரிலீஸ் ஆகாம தள்ளிப்போயிடுச்சி. ‘படம் ரிலீஸ் ஆனதும் குடும்பத்தோட போய் பார்க்கணும்’னு சொல்லிக்கிட்டே இருந்தார். ஆனா, கடைசி வரை அப்பாவோட ஆசை நிறைவேறாமலேயே போயிடுச்சி. ஜூலை மாசம் 17-ம் தேதி அப்பா ஹார்ட் அட்டாக்ல இறந்து போயிட்டாரு. இப்ப படம் ரிலீஸ் ஆனதும் அப்பா உயிரோட இருக்காருன்னு நினைச்சு அவரை பாராட்ட நிறைய பேர் போன் பண்றாங்க. இந்தப் பாராட்டையெல்லாம் அப்பா கேக்காமலேயே போய் சேர்ந்துட்டாருன்னு நினைக்கிறப்ப சங்கடமா இருக்கு. 'சூரரைப் போற்று' படத்தைக் குடும்பத்தோட பார்த்தோம். கடைசி வரைக்கும் கலாம் ஐயா மாதிரியே எங்க அப்பா வாழ்ந்து மறைஞ்சிருக்காரு” என கலங்கினார்.

 

https://cinema.vikatan.com/tamil-cinema/the-story-of-udumalai-kalam-who-acted-in-soorarai-pottru

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

திரைக்கு வெளியேயும் வென்றுவிட்டாள் `பொம்மி'... மஞ்சுவுக்கும் நீலாம்பரிக்கும் நடந்தது என்ன?

சூரரைப்போற்று  `பொம்மி’
சூரரைப்போற்று `பொம்மி’

மாறனோடு பொம்மியும் இணைத்துப் போற்றப்படுகிறாள். இந்த இடத்துக்கு தமிழ் சினிமா அத்தனை சுலபமாக வந்து சேர்ந்துவிடவில்லை.

சூரரைப் பலரும் போற்றுகிறார்கள். செல்வமும் செல்வாக்கும் இல்லாத ஒரு கிராமத்து இளைஞன், சிவப்பு நாடாக்களையும் சதி வலைகளையும் முறித்துக்கொண்டு பறக்கிற கதை இது. நாயகன் மாறன் போற்றுதலுக்கு உரியவன்தான். தமிழ் சினிமா நாயகர்கள் இதற்கு முன்பும் பல முறை போற்றப்பட்டிருக்கிறார்கள். ஆனால், இந்த முறை நாயகனுடன் சேர்த்து நாயகியும் போற்றப்படுகிறாள். அதுதான் சிறப்பு.

பொம்மி... தமிழ் சினிமாவின் குறிஞ்சி!

மாப்பிள்ளையைப் பார்க்க, பெண் புறப்பட்டு வருகிற காட்சியோடுதான் படம் தொடங்குகிறது. நாயகிக்கான தனி அடையாளம் அங்கேயே தொடங்கிவிடுகிறது.

பறக்கும் கனவுடன் ஒவ்வொரு கதவாக நாயகன் தட்டிக்கொண்டிருக்கும்போது, குடும்பம் மனைவியின் வருமானத்தில்தான் நடக்கிறது. ஒரு காட்சியில் எச்சிலைக்கூட்டி விழுங்கிக்கொண்டு மனைவியிடம் கடன் கேட்கிறான் கணவன். பல குடும்பங்களில் பல கணவன்மார்கள் மனைவியிடம் கடன் வாங்கியிருப்பார்கள். என்றாலும் உத்தியோகம் இல்லாத கணவன், மனைவியிடம் காசு கேட்கிற காட்சியை இதற்கு முன்பு தமிழ்த்திரை பரீட்சித்துப் பார்த்திருக்கிறதா தெரியவில்லை. இப்போது அப்படியான காட்சி திரையேறியபோது, ஆகாயமும் பூமியும் அதனதன் இடத்திலேயே இருந்தன. ரசிகர்கள் எந்த ஒவ்வாமையையும் வெளிப்படுத்தவில்லை. மாறனோடு பொம்மியும் இணைத்துப் போற்றப்படுகிறாள். இந்த இடத்துக்கு தமிழ் சினிமா அத்தனை சுலபமாக வந்து சேர்ந்துவிடவில்லை.

 
 

`பொம்பள' பன்ச் டயலாக்குகள்! 

பொதுவாகத் திரையில் பெண் கதாபாத்திரங்கள் இரண்டு வட்டத்துக்குள்தான் நிறுத்தப்படுவார்கள்.

அமைதியான, அடக்கமான `நல்ல' பெண்.

மற்றும் `திமிர்ப்பிடித்த' பெண்.

`திமிர்ப்பிடித்த' பெண் கேரக்டர் என்றால், அவரை ஹீரோ அடக்கி வெற்றிகொள்வதுதான் கதை என்பதை எளிதாகச் சொல்லிவிடலாம்.

`மன்னன்' விஜயசாந்தி,

`சிங்காரவேலன்' குஷ்பு,

`படையப்பா' ரம்யாகிருஷ்ணன்...

உங்கள் நினைவுகளில் இந்த வரிசை ஹீரோயின்கள் இன்னும் பலர் எழக்கூடும்.

20 ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான `படையப்பா'வில் நாயகன் பேசிய வசனம் இது:

`அதிகமா ஆசைப்படுற ஆம்பளையும், அதிகமா கோவப்படுற பொம்பளையும் நல்லா வாழ்ந்ததா சரித்திரமே இல்ல.'

வசனம் வெகுவாக சிலாகிக்கப்பட்டது. அது பஞ்ச் டயலாக் ஆனது. அதில் வியப்படைய ஒன்றுமில்லை. தமிழ்த்திரையின் `திமிர்ப்பிடித்த' பெண் வட்டத்துக்குள் நீலாம்பரி நிற்கவைக்கப்பட்டது, இதுபோன்ற ஹீரோயிஸ டயலாக்குகளுக்குத்தானே? `பெண்கள் ஆண்களுக்கு அடங்கியிருக்க வேண்டும்' என்ற பொதுபுத்திக்கு எளிதாகத் தீனிபோட்டு கைதட்டல்கள் வாங்க, நீலாம்பரிகள் இயக்குநர்களுக்கு அவ்வப்போது தேவைப்படுகிறார்கள்.

சூரரைப்போற்று
 
சூரரைப்போற்று

திரையரங்குகளில் உடைக்கப்பட்ட பெஞ்சுகள்! 

என்றாலும் இந்த விதியை மீற, அவ்வப்போது சில இயக்குநர்கள் முயன்றார்கள். அவர்களுள் ஒருவர் ருத்ரைய்யா. அவரின் நாயகி மஞ்சு, சுதந்திரமானவள். 1978-ம் ஆண்டு மஞ்சு திரைக்கு வந்தாள். அவளை ரசிகர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. ஏனெனில், `அவள் அப்படித்தான்'. புரியாவிட்டால்கூடப் பரவாயில்லை, அவர்களை அவள் கலவரப்படுத்தவும் செய்தாள்.

ஒரு காட்சியில் தன் பாஸை மஞ்சு கன்னத்தில் அறைந்துவிடுவாள். படம் வெளியானது தீபாவளி நாளில். பெரிய நடிகர்களின் பெயர்களைப் பார்த்த ரசிகர்கள், மதுரை கல்பனா திரையரங்கை நிறைத்திருந்தனர். மஞ்சுவின் திமிரை ஒரு கட்டம் வரை சகித்துக்கொண்டும் இருந்தனர். ஆனால், அவள் ஓர் ஆண்மகன் மீது, அதுவும் தங்கள் அபிமான நட்சத்திரத்தின் மீது கை நீட்டினால்... அவர்கள்தான் எப்படிப் பொறுப்பார்கள்? அரங்கில் பெஞ்சுகளை உடைத்தார்கள். படம் சுருண்டுகொண்டது.

 

மாற்றத்தை ஏற்றுக்கொண்டுதானே ஆக வேண்டும்?!

மஞ்சுவின் காலத்தில்தான் பெண்கள் படிக்கக் கிளம்பியிருந்தார்கள். அங்கொன்றும் இங்கொன்றுமாக வேலைக்குப்போகத் தொடங்கியிருந்தார்கள். என்றாலும், இவையெல்லாம் ஆண்களின் அனுமதி கிடைத்ததாலேயே. அந்தக் காலகட்டத்தில், ஒரு பெண் சுதந்திரமாக நிற்பதெல்லாம் செரித்துக் கொள்ளக்கூடியதாய் இல்லை... அது திரையாக இருந்தாலும். எனவே, மஞ்சு அன்றைய காலகட்ட ஆண்களால் சகித்துக்கொள்ள முடியாதவளாக இருந்தாள்.

நீலாம்பரியின் காலத்தில் பெண்கள் பரவலாக வேலைக்குப்போகத் தொடங்கிவிட்டார்கள். சொந்தமாகச் சம்பாதிக்கவும் செய்தார்கள். குரல் உயர்த்தினார்கள். கோபப்பட்டார்கள். அதனாலேயே, `அதிகமா கோபப்படுற பொம்பள' டயலாக்குகளுக்கு அதிக வரவேற்பும் கிடைத்தது.

மஞ்சுவிற்கான தண்டனை திரைக்கு வெளியே வழங்கப்பட்டது. ரசிகர்கள் வழங்கினார்கள். நீலாம்பரிக்கான தண்டனை திரைக்குள்ளேயே வழங்கப்பட்டது. படையப்பா வழங்கினார்.

மஞ்சுவும் நீலாம்பரியும் ஒன்றா என்றால், நிச்சயமாக அவர்கள் நேர்கோட்டில் வைக்கப்பட வேண்டிய ஒப்புமை அல்ல. அடிப்படையில் இருவரும் மாறுபடுகிறவர்கள். இருவேறு விதமாகப் படைக்கப்பட்டாலும், `ஒரு பொம்பள இப்படி இருக்கக் கூடாது' என்ற பொது புத்தியை வினையாற்ற வைக்கும் புள்ளியில் அவர்களையும், அவர்களுடன் தமிழ் சினிமாவின் பயணத்தையும் இணைத்துப் பார்க்கலாம்.

காலம் மாறி வருகிறது. மஞ்சுவை ஏற்றுக்கொள்ளாத, நீலாம்பரிக்கு சாபமிட்ட சமூகம், இப்போது `பொம்மி'யைப் போற்றுகிறது. வரவேற்கப்பட வேண்டிய விஷயம். மாறன் ஒரு காட்சியில், `என் மனைவி நல்லா சம்பாதிக்கிறாங்க; நான் உட்கார்ந்து சாப்பிடலாம்' என்று பேசுவதாக ஒரு வசனம் வரும். இது தமிழ்த் திரைக்குப் புதிது.

ரம்யா கிருஷ்ணன்
 
ரம்யா கிருஷ்ணன்

திரையை விட்டு இறங்கி, இப்போது கொஞ்சம் நிஜத்துக்கு வருவோம்.

பெண்கள் வேலை, தொழில் என்று போகத் தொடங்கிவிட்டார்கள். அவர்கள் ஊதியம் பல குடும்பங்களுக்கு அவசியமாகவும் இருக்கிறது. ஆயினும், பெண் கணவனைவிடக் குறைவாகச் சம்பாதிக்க வேண்டும். அதுவே நன்று.

தற்காத்து, தற்கொண்டான் பேணி, பொருளீட்டி, வீடு பெருக்கி, விளக்கேற்றி, துணி மணிகள் துவைத்து, சின்ன குழந்தைக்குச் சிங்காரப் பாட்டிசைத்து, பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லி, பெரியவர்களையும் பேணி, சோர்வு இல்லாதவளாக இருப்பவளன்றோ பெண்?

 

இல்லத்தரசன், வீட்டச்சன்... பெட்டிக்கோட் ஹஸ்பண்ட்! 

பெண்கள் மட்டும் சம்பாதிக்கிற வீடுகளில் கணவன்மார்களுக்கு முன்பொரு பெயர் இருந்தது. அது அகராதியில் இடம் பெறவில்லை. அந்தப் பெயர் ஆண்களுக்குள்ளேயே புழக்கத்தில் இருந்தது. இதை நான் அறிய நேர்ந்தது 1995-ல். ஹாங்காங்கில் ஒரு விருந்தின்போது, ஒரு நண்பர் அவரது அலுவலகத்தில் பணியாற்றும் ஓர் இளம் பெண்ணை எனக்கு அறிமுகம் செய்வித்தார். பெண்ணின் கணவரும் உடன் இருந்தார். அந்த இளைஞர் சமீபத்தில்தான் ஹாங்காங் வந்திருப்பதாகச் சொன்னார். தம்பதி அகன்றதும் நண்பர் என்னிடத்தில் கிசுகிசுப்பாக, `பெட்டிக்கோட் ஹஸ்பண்ட்' என்றார். எனக்குப் புரியவில்லை. அந்த இளைஞருக்கு வேலை இல்லையாம், மனைவியின் சம்பாத்தியத்தில்தான் ஜீவிக்கிறாராம். அப்படியான கணவர்களுக்கு அதுதான் பெயராம்.

வீட்டை நிர்வகிக்கும் பெண்ணுக்குத் தமிழ் கூறும் நல்லுலகில் `இல்லத்தரசி' என்று பெயர். `இல்லத்தரசன்' என்று தேடினால் சொல் வங்கியில் கிடைக்காது. ஏனெனில், ஆண் வீட்டை நிர்வகிப்பதை தமிழர்களால் நினைத்துப் பார்க்க முடியாது. ஆகவே அப்படியொரு சொல்லுக்கு அவசியம் நேரவில்லை. மலையாளத்திலும் வீட்டம்மை உண்டு. வீட்டச்சன் இல்லை. ஆனால், ஆங்கிலத்தில் வீட்டச்சன் உண்டு. முன்பு House husband என்று சொன்னார்கள். பின்னாளில் Stay-at-home-dad எனும் சொல்லால் பதிலீடு செய்தார்கள்.

அபர்ணா பாலமுரளி
 
அபர்ணா பாலமுரளி

அமெரிக்காவே ஆனாலும் வொர்க்கிங் வுமன் குற்றவுணர்வு கொள்ளத்தான் வேண்டும்! 

2015-ம் ஆண்டில் அப்படி ஒரு Stay-at-home-dad திரைக்கு வந்தார். படம் Intern. கதை கணவனைப் பற்றியதல்ல, மனைவியைப் பற்றியது. அவள் பெயர் ஜூல்ஸ். ஸ்டார்ட் அப் நிறுவனமாக அவள் தொடங்குகிற ஆன்லைன் ஆயத்த ஆடை நிறுவனம் கிடுகிடுவென்று வளரும். கணவன், வீட்டையும் பிள்ளைகளையும் பார்த்துக்கொள்வான். ஒரு காட்சியில் கணவனுக்கு ஏதோ வேலை வந்துவிடும். ஜூல்ஸ் பிள்ளைகளை அழைத்துவரப் பள்ளிக்குப் போவாள். அங்கு காத்திருக்கும் பிற வீட்டம்மைகளோடு அவளுக்குப் பேசுவதற்குப் பொதுவாக எந்தச் செய்தியும் இராது. ஒரு கட்டத்தில், தான் குடும்பத்தைக் கவனிக்கவில்லையோ என்று உள்ளுக்குள் குமைவாள். அதாவது, சுற்றி இருப்பவர்கள் அப்படியான குற்ற உணர்வு அவளுக்கு வரும்படி பார்த்துக் கொள்வார்கள். இத்தனைக்கும் கதை நடக்கும் காலத்தில் அமெரிக்காவில் சுமார் 20 லட்சம் Stay-at-home-dad இருந்தார்கள். அங்கேயே அதுதான் நிலை.

 

பொம்மியைப் போற்றத் தொடங்கியிருக்கிறோம்! 

ஆணாதிக்க மனோபாவம் இன்றும் நம் வீடுகளில் இருக்கிறதுதான். ஆனால், காலம் காலமாக இறுகிப்போய்க் கிடக்கும் அதன் அடுக்குகள் இப்போது கொஞ்சம் கொஞ்சமாகக் கரைக்கப்பட்டு வருகின்றன. சுதா, பொம்மியைப் படைத்தது அந்த மாற்றத்தின் மீது நம்பிக்கை வைத்துதான். மாறிவரும் இந்தச் சூழலில் மாறனும் பொம்மியும் தமிழ்த் திரையில் புதிய காற்றாக வீசுகிறார்கள்.

அபர்ணா பாலமுரளி
 
அபர்ணா பாலமுரளி

படத்தில் ஒரு கட்டத்தில் மாறனுக்கும் பொம்மிக்கும் பிணக்கு வரும். அப்போது மாமனார் வீட்டார் மாறனைக் குத்திக் காட்டுவார்கள்... மனைவியின் சம்பாத்தியத்தில் வயிறு வளர்ப்பவனென்று. ஆனால், மாறனும் பொம்மியும் அதனால் பாதிக்கப்படுபவர்களாகப் படைக்கப்படவில்லை. பிணக்கு நீங்கியதும் இலக்கை நோக்கி ஓட்டத்தைத் தொடர்வார்கள். இப்போது ஓடுதளத்தின் இருபுறமும் ரசிகர்கள் கரவொலி எழுப்புகிறார்கள். அவர்கள் சூரனைப் போற்றுகிறார்கள். சூரம்மாவைப் போற்றுகிறார்கள். பாலினம் ஏதும் பாராது, சூரரைப் போற்றுகிறார்கள்!

  • கருத்துக்கள உறவுகள்
On 13/11/2020 at 21:22, ராசவன்னியன் said:

அமேசான் ப்ரைமில் தான் 12 ந் திகதி நள்ளிரவில் 1080p தரத்தில் பார்த்தேன்.

பார்த்த சில நிமிடங்களில் அப்படியொன்றும் சுவாரசியம் இல்லாததால், அப்படியே தூங்கிவிட்டேன்..! :)

படமா, டாக்குயூமென்ரியா என்ற குழப்பம் வந்தது.

தூங்காமல் பார்த்தேன். எப்படா முடியும் என்று இருந்தது!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, கிருபன் said:

படமா, டாக்குயூமென்ரியா என்ற குழப்பம் வந்தது.

தூங்காமல் பார்த்தேன். எப்படா முடியும் என்று இருந்தது!

மேட்டுகுடிகளுக்கு அப்படிதானிருக்கும்

ஒருத்தன் முன்னேறுவதை இவர்கள் என்றுமே சகித்து கொள்ளமாட்டார்கள்

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, உடையார் said:

மேட்டுகுடிகளுக்கு அப்படிதானிருக்கும்

ஒருத்தன் முன்னேறுவதை இவர்கள் என்றுமே சகித்து கொள்ளமாட்டார்கள்

படம் இழுவையாக இருந்ததால் சகிக்கமுடியவில்லை. 

ஆனால் நிஜ வாழ்க்கையில் கோபிநாத் ஐயங்கார் டெக்கான் எயார்லைன்ஸை விஜய்  மல்லையாவிற்கு (RCB owner ஆக இருந்தவர்) விற்று மேட்டுக்குடியாகிவிட்டார்!

விஜய் மல்லையா இப்போது இலண்டனில் ஒளிந்திருக்கின்றார் என்று நினைக்கின்றேன்

Edited by கிருபன்

  • கருத்துக்கள உறவுகள்

பல நூறு கோபினாத்கள் காணாமல் போயிருக்கிறார்கள் பாரிய பண முதலீட்டு முதலாளிகளால் 

இலங்கையில் குறிப்பாக கிழக்கில் வியாபாரம் செய்வது தமிழர்களால் முடியாமல் இருக்கிறதும் பாரிய சவாலாக இருக்கிறதும் உதாரணம் 

நம்மவர்கள் பொரு ட் களை இறக்கி 10 ரூபாய்க்கு விற்றால் பெரிய முதலாளீகள் 5 ரூபாய்க்கு விற்று மக்களை திருப்பி விடுகிறார்கள்


படம் படத்துக்காக பார்க்கலாம் வசனங்களும் நன்று

  • அடிதடி வன்முறையென்றால் நீங்கள் என்ன மயித்துக்கு எனக்கு அடிச்ச நீங்கள் அப்பாவிடம் கேட்பது 
  • வானம் என்ன உங்க அப்பன் வீட்டு சொத்தா  சிறப்பாக இருந்திச்சு 

குறிப்பு  திருட்டு சீடில தான் கைகுவாலிட்டிலதான் பார்த்தேன் என்பதை சொல்ல கடமைப்பட்டுள்ளேன்

  • கருத்துக்கள உறவுகள்

 

"நிஜமாவே ஒரு Pilot இப்படி செஞ்சாரு.. Machine Gun-னோட சுத்தி வளச்சுடுவாங்க"- Captain Ashokan பேட்டி

 

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, கிருபன் said:

படம் இழுவையாக இருந்ததால் சகிக்கமுடியவில்லை. 

இந்த படத்தை பற்றி நீங்களும் ராசவன்னியன் அவர்களும் தான் நேர்மையான விமர்சனத்தை இங்கே வைத்தவர்கள் 👍
இந்தியாவில் சாதாரண மக்கள் முன்னேறுவதற்கு பிராமண சாதியினர் எவ்வளவு தடையாக உள்ளனர் என்று இந்த படம் விளக்குகின்றதாம் என்று விளம்பரம் செய்கிறார்கள் ஆனால் இந்த பட கதையே கோபிநாத் என்ற பிராமண சாதியை சேர்ந்தவரின் வாழ்கை கதை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒளிரும் நட்சத்திரம்: புதுப்பித்துக்கொள்ளும் கலைஞன்!

glowing-star  

மக்கள் மத்தியில் நட்சத்திரமாக அங்கீகாரம் பெற்றுவிட்ட ஒரு நாயக நடிகர், கதாபாத்திரங்களைத் தேடி அலைவது அரிதாகி வரும் காலம் இது. தனது படத்தைப் பார்க்கும் ரசிகனின் மனதில் நாயகத்தன்மை ஆதிக்கம் செலுத்தாமல் கதாபாத்திரம்தான் மனதில் நிற்க வேண்டும் என எண்ணும் நடிகர், ஒரு நட்சத்திரமாகவும் இருந்துவிட்டால் அற்புதம் நிகழ்வது எளிதாகிவிடுகிறது.

அப்படி ஒரு கதாபாத்திரத்துக்காக இயக்குநரிடம் தன்னை ஒப்புக்கொடுக்கும் நடிகனைக் காலமும் ரசிகர்களும் கைவிடுவதே இல்லை. நெடுமாறன் ராஜாங்கமாக தன்னை முழுமையாக முன்னிறுத்திய ‘சூரரைப் போற்று’ சூர்யாவை உலகம் முழுவதும் வாழும் தென்னிந்திய ரசிகர்கள் உச்சிமுகர்ந்து கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். அந்தப் படத்தில் உள்ளடக்கம் கையாளப்பட்ட விதம் குறித்து எதிர் விமர்சனங்கள் இருந்தபோதும், அவற்றிலும்கூட சூர்யாவின் ‘கூடு பாயும்’ நடிப்பைக் குறிப்பிட்டுக் காட்டியிருக்கிறார்கள்.

இந்த நடிப்பின் உச்சத்தை சூர்யா அவ்வளவு சுலபமாக அடைந்துவிடவில்லை. படித்துவிட்டு, ஆயத்த ஆடைகள் தயாரிப்புத் துறையில் கவனம் செலுத்திய சூர்யா, விருப்பப்பட்டுத் திரைத் துறைக்குள் நுழையவில்லை. ஒரு விபத்து போலத்தான் அவரது திரை அறிமுகம் நிகழ்ந்தது. தொடக்கத்தில் நடித்த அரை டஜன் படங்களும் சூர்யா என்ற இளைஞரின் இருப்பைப் பதிவுசெய்ய மட்டுமே பயன்பட்டன. அதற்காக அவர் நம்பிக்கையை இழக்கவில்லை. தொடர்ந்து தன்னைத் தகுதிப்படுத்திக்கொண்டார்.

மறக்க முடியாத 3 இயக்குநர்கள்

சூர்யாவுக்குள் இருக்கும் நடிகரைக் கண்டுகொண்டு, அவரை அவருக்கே அடையாளப்படுத்தியது இயக்குநர் பாலாவின் ‘நந்தா’. 6 படங்களில் நடித்தும் நிகழாத மேஜிக், பாலா படத்தின் மூலம் சூர்யாவுக்கு நடந்தது. தமிழ் சினிமா சூர்யாவை ஆச்சரியத்துடன் திரும்பியும் விரும்பியும் பார்த்தது. நடிப்பின் முக்கியப் பரிமாணம் நகைச்சுவை உணர்வு. அதை ‘பிதாமக’னில் வெளிப்படுத்தி பிரம்மிக்க வைத்தார். பாலா அவரை முழுமையாக அடையாளம் காட்ட முயன்றார்.

கௌதம் மேனன், ‘காக்க காக்க’ படத்தில் அன்புச்செல்வன் ஐபிஎஸ் ஆக சூர்யாவைக் கச்சிதமாக வார்த்தார். மிடுக்கான தோற்றத்தில் கம்பீரமான நடிப்பில் கவனஈர்ப்பை ஏற்படுத்தியவர், ‘வாரணம் ஆயிரம்’ படத்தில் ‘நான் இதைச் சொல்லியே ஆகணும். நீ அவ்ளோ அழகு’ என ரொமான்ஸில் சொக்க வைத்தார். அதில் சூர்யாவின் இரட்டை வேடங்கள் அப்ளாஸ் அள்ளின.

சூர்யாவை இப்போதும் கௌதம் மேனன் பதிப்பு, ஹரி பதிப்பு என இரண்டு வகையாகப் பிரிக்கலாம். உயர்தட்டு நவீன இளைஞனோ அல்லது தரை லோக்கல் ரவுடியோ, மாஸான காவல் அதிகாரியோ இரண்டு விதங்களிலும் பிரித்து மேய்வதில் விற்பன்னர் சூர்யா. அவரால் அன்புச்செல்வன் ஐபிஎஸ் ஆகவும் அதிரடி காட்ட முடிந்தது. ‘ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயிட்டுடா. பார்க்கறியா’ என பன்ச் வசனம் பேசி, துரைசிங்கமாக சிலிர்த்தெழவும் முடிந்தது. இந்த இருவித பாணியிலான நடிப்புதான் அவரை கமர்ஷியல் ஹீரோவாக சாகசம் புரியவைத்தது. அதன் பலனாய் ‘சிங்கம் 2’ படத்தின் வசூல் ரூபாய் 100 கோடி கிளப்பில் இணைந்து.

16064495912006.jpg

தேடினால் கிடைக்கும்

இன்னொரு பக்கம் ‘பேரழகன்’, ‘மாயாவி’, ‘கஜினி’, ‘மாற்றான்’, ‘பசங்க -2’, ‘ஏழாம் அறிவு’, ‘24’ என கமர்ஷியல் கலந்த பரிசோதனை முயற்சிகளிலும் பக்காவாகப் பொருந்தினார். ‘உன்னை நினைத்து’, ‘மௌனம் பேசியதே’, ‘சில்லுனு ஒரு காதல்’ போன்ற படங்களிலும் வெகுஜன மக்களைக் கவர்ந்தார். சினிமாவில் முன்னணியில் இருக்கும் நடிகர்கள் அனைவரும் நடிப்பில் சிறந்து விளங்குவார்கள் என்று சொல்லிவிடமுடியாது. அவர்கள் மார்க்கெட்டைத் தக்கவைத்துக் கொள்வதற்காக ஒரே மாதிரியான கதையமைப்பில், ஒரே மாதிரியான நடிப்பில் தங்களை ஈடுபடுத்திக்கொள்கிறார்கள் என்று வேண்டுமானால் சொல்லலாம். இதனால் புதுமை, வித்தியாசம், பரிசோதனை முயற்சிகளுக்குப் பலர் இடம் கொடுப்பதில்லை.

ஆனால், சூர்யா இதில் விதிவிலக்கு. கதாபாத்திரத்தை மெருகூட்ட, மிகச்சிறந்த நடிப்பைக் கொடுக்க ஒவ்வொரு படத்துக்கும் மெனக்கெடுகிறார். கமர்ஷியல் நாயகனாக நடிக்கும் அதேநேரம் நல்ல கதாபாத்திரங்களையும் தேடியலையும் அரிதான நட்சத்திர நாயகனாக இருக்கிறார். இந்தத் தேடலே அவரிடம் ‘நெடுமாறன் ராஜாங்கம்’ போன்ற கதாபாத்திரங்களைக் காலம் அவரது கையில் கொண்டுவந்து ஒப்படைத்துச் செல்கிறது.

புதுப்பிக்கப்பட்ட நடிப்பு

‘சூரரைப் போற்று’ படத்தில் தன் இலக்கை அடையக் கடைசிவரை போராடும் நெடுமாறன் ராஜாங்கம் என்கிற இளைஞனாக சூர்யா நடித்துள்ளார். ஒரே ஷாட்டில் ஹீரோ ஆகிற, கதாபாத்திரம் இல்லை. நெஞ்சை நிமிர்த்தி சவால்விட்டு எதிரியைத் தோற்கடிக்கிற நாயக பிம்பமும் இல்லை. ஏன்… தனக்கு எதிராகச் சதி செய்பவர்களைப் புரட்டி எடுக்கும் ஒரு சண்டைக் காட்சிகூட இல்லை. இறுதியில் வெற்றிப் பெருமிதத்துக்கான புன்முறுவல் அறவே இல்லை. படம் முழுக்க இறுக்கமான, உறுதியான, தீவிரமான சூர்யாவைப் பார்க்கலாம். ஆனால், சிரிக்கும் சூர்யாவை மட்டும் பார்க்க முடியாது. முந்தைய படங்களில் தன் உடல்மொழி, முக பாவனைகள் உள்ளிட்ட எந்த நடிப்புச் சாயலையும் இதில் சூர்யா பிரதிபலிக்கவில்லை. மாறாக, தன் நடிப்பைப் புதுப்பித்துக்கொண்டார்.

தந்தை மரணப்படுக்கையில் இருக்கும்போது விமானப் பயணம் போகக் காசில்லாமல் அங்கு உள்ள சக பயணிகளிடம் கெஞ்சி, அழுது, பிச்சையெடுக்கும் காட்சியில் நடிப்பது மிகச் சவாலானது. தான் என்கிற ஈகோவை அழித்து கதாபாத்திரமாகவே மாறும்போதுதான், அந்தக் கையறு நிலையை மிக இயல்பாக வெளிப்படுத்த முடியும். அதில், பார்ப்பவர்கள் கண்ணீர் சிந்தும் அளவுக்கு சூர்யா தேர்ந்த நடிப்பை வழங்கியுள்ளார். ஊருக்குச் சென்று தந்தைக்கு இறுதிச்சடங்கு செய்ய முடியாமல் தாமதமாக வந்த தவிப்பை, ஊர்வசியின் கால்களில் விழுந்தபடி சொல்லும்விதம் சூர்யா நடிப்பில் பதித்திருக்கும் புதுத் தடம்.

16064496092006.jpg

நாயகத்தன்மையை முன்னிறுத்தாமல், சுய பிரக்ஞைக்கு இடம் கொடுக்காமல், கதாபாத்திரத்தின் உணர்வை முதன்மைப்படுத்தும் நடிகராலேயே இதுபோன்ற கூடுபாயும் நடிப்பை வழங்க முடியும். அந்த வரம் சூர்யாவுக்கு வாய்த்திருக்கிறது.

கமர்ஷியல் படங்களே போதும் என்று திருப்திப்பட்டுக் கொண்டிருக்காமல், புதுப்புது முயற்சிகளுக்காக தன்னை உந்தித்தள்ளும் மிகச் சிறந்த நடிகராக சூர்யா திகழ்கிறார். எந்தப் படத்திலும் நடிகராகத் தன் பங்களிப்பில் அவர் சமரசம் செய்துகொள்ளவில்லை. அப்படிப் பார்த்தால் இந்த 23 ஆண்டு நடிப்புப் பயணம் சூர்யாவுக்கு நிறைவாகவே உள்ளது. அவருடைய நடிப்பு முறையில் ஏற்பட்ட மாற்றமும், பரிணாம வளர்ச்சியுமே அதற்கான சாட்சி.

கலைக்காக பரிசோதனை முயற்சி மேற்கொள்ளும் படங்கள், நாயக அம்சத்துக்காக கமர்ஷியல் படங்கள் என்று இரட்டைச் சவாரியில் சூர்யா துணிச்சலுடன் பயணம் செய்கிறார். ஒருவகையில் பார்த்தால் இவர் கமலின் 2.0 வெர்ஷன் என்றுகூடச் சொல்லலாம். வெற்றிமாறனின் ‘வாடிவாசல்’ சூர்யாவை அடுத்தகட்டப் பாய்ச்சலுக்குத் தயார்படுத்தும் என்று நம்பலாம். அதுவரை நெடுமாறன் ராஜாங்கம், ரசிகர்களுக்கான மாற்றில்லா உந்துசக்தியாக, உயர்ந்த ரசனைக்கான வானூர்தியாக இருப்பார் என்பது நிஜம்.

தொடர்புக்கு: nagappan.k@hindutamil.co.in

படங்கள் உதவி: யுவராஜ்

 

https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/605728-glowing-star-4.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.