Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது (edited)

Picture1.png

ஓய்வு நேரத்தில் IBC-யில் வரும் இந்த "Tea கடை" நிகழ்ச்சியை அடிக்கடி பார்ப்பதுண்டு..!

இவ்வாரநிகழச்சியில் "சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்.." என்பதற்கு, பொன்னம்பலம் ஈஸ்வரன் (அம்மான்)சொல்லும் விளக்கம் ரசிக்கும்படி இருந்தது.

டிஸ்கி:

இம்மாதிரி சீரியல்களை நாங்கள் பார்க்க வெளிக்கிட்டமென்டால், நாங்களும் ஈழத்தமிழில் கதைச்சுடுவோமென்ட அச்சம் வருதுடாப்பா, கடவுளே..! 😝

 

Edited by ராசவன்னியன்
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

கதயுங்கோ வன்னியன்.

எனது சென்னை நண்பர் ஒருவர் அவரை அங்கு இருந்தே தெரியும், பின்னர் இங்கே வந்து என் உறவும், சுற்றமும் அவர் உறவுமாகி போய்விட்டது.

ஆனால் இன்றைக்கும் ஈழத்து பாசை கதைக்க டிரை பண்ணினால் தெனாலி படம் பார்த்த பீலிங்தான் வரும் 🤣

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஆனால் பாருங்கோ, இந்த "பாரணை" என்டால் என்னென்டு துண்டற விளங்கேல்ல..! :)

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

🤣 யாழ்பாணத்தில் “எணை”, எனவும் மட்டகளப்ப்பில் “மொனே” அல்லது “மனே” எனவும் வழங்கபடும் “மகனே” என்ற வாஞ்சை சொல்லின் (term of endearment) திரிபு  இது என நினைக்கிறேன்.

ஆனால் ஆண், பெண், வயது வித்தியாசம் இன்றி இது பாவிக்கபடும்.

” அம்மம்மா சத்தம் போடாமல் இரணை ( இரு அணை)”.

” யாரணை வாசலில் நிக்கிறது? பக்கத்து வீட்டு பொடியனே?”.

9 minutes ago, ராசவன்னியன் said:

ஆனால் பாருங்கோ, இந்த "பாரணை" என்டால் என்னென்டு துண்டற விளங்கேல்ல..! :)

 

நூலகம் டாட் காம் இல் செங்கை ஆழியன் நாவல்கள் உள்ளன வாசித்து பாருங்கள்.

யாழ்ப்பாண வட்டாரவழக்கு தெறிக்கும்.

Edited by goshan_che
  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 hours ago, ராசவன்னியன் said:

ஆனால் பாருங்கோ, இந்த "பாரணை" என்டால் என்னென்டு துண்டற விளங்கேல்ல..! :)

பாறணை என்றால் கந்தசஸ்டி விரதம் இருப்பவர்கள் ஏழாவது நாள் காலை மதிய உணவை சிறப்பாக உண்பது.

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
15 minutes ago, ஏராளன் said:

பாறணை என்றால் கந்தசஸ்டி விரதம் இருப்பவர்கள் ஏழாவது நாள் காலை மதிய உணவை சிறப்பாக உண்பது.

எனக்கும் இது ஏதோ விரதம் சம்மந்தமான சொல் என்றே தோன்றுகிறது.

food.jpg

 

விரதம் முடிந்து இப்படி சாப்பிட வேணும்..! :)



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.