Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"சிவாஜி திரைப்படத்தை புறக்கணியுங்கள்!"

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அண்மையில் Will Smith நடித்த "The Pursuit of Happyness" என்ற படம் பார்த்தேன், மிகவும் நல்ல படம். இது ஒரு உண்மைக்கதை! முதன் முதலாக Will Smith சோகமாக நடித்த படம் இதில் ஒரு சாதாரண விற்பனை பிரதிநிதியாக வாழ்க்கையை ஆரம்பிக்கும் ஒரு சம்சாரியை பற்றியது. The Pursuit of Happyness தவறாமல் இதனை பார்த்து விட்டு எப்படி இருந்தது என்று சொல்லுங்களேன்!

நானும் இந்த திரைப்படத்தை பார்த்தேன். திரையில் அல்ல திருட்டு விசிடியில். அருமையான படம்! அமைதியான கதை அமைப்பு. மனதை கொள்ளை கொள்ளும் பின்னனி இசை. படம் ஆரம்பம் தொடங்கி முடிவு வரை இருக்கையை விட்டு எழும்பவிடாமல் வைத்திருக்கும்.

  • Replies 217
  • Views 23.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"யாவும் கற்பனை இல்லை, பாதி உண்மை" என்று கூறி நான்தான் உங்களை குழப்பிவிட்டேன் என்று நினைக்கிறேன். மன்னிக்கவும்!

மேற்குறித்த கூற்று 100% உண்மை. கொஞ்சம் சுவை சேர்ப்பதற்காக சில சம்பவங்களை மாற்றி அமைத்தேன் அவ்வளவே!

அண்மையில் Will Smith நடித்த "The Pursuit of Happyness" என்ற படம் பார்த்தேன், மிகவும் நல்ல படம். இது ஒரு உண்மைக்கதை! முதன் முதலாக Will Smith சோகமாக நடித்த படம் இதில் ஒரு சாதாரண விற்பனை பிரதிநிதியாக வாழ்க்கையை ஆரம்பிக்கும் ஒரு சம்சாரியை பற்றியது. The Pursuit of Happyness தவறாமல் இதனை பார்த்து விட்டு எப்படி இருந்தது என்று சொல்லுங்களேன்!

<<

நம்மை எல்லாம் எப்படி நொந்து கொள்வது என்றே தெரியவில்லை. ஆங்கிலப்படத்தைப்பார்ப்போமா

யோவ் இன்னைக்கு நான் டிவிடி பாத்திட்டன்பா..Supero Super..

உண்மையோ சுண்டு உங்களிட்ட இருக்கோ..................... ;)

வெல்கம் லேடிஸ் அன்ட் ஜென்டில்மன்ஸ் இப்ப நான் சிவாஜி பற்றிய விமர்சனத்துடன் உங்கள் முன்........... சபாஷ் ஜமுனா, மிகத் துணிச்சலாக உண்மையை உறைக்கும் படி உரத்துச்சொன்னதுக்கு ஆங்காங்கே எழுத்துப்பிழைகள் கொஞ்சம் கவனத்தில் கொள்ளுங்கள்!இந்த விடயத்தில் நான் உங்கள் பக்கம்!. இப்போதும் அல்ல எப்போதுமே தென்னிந்திய நடிகர்களுக்கு அரசியல் சாயம் பூசுவதை நான் விரும்புவதில்லை!. உங்கள் கருத்து! வெகு சிறப்பு! :)

நன்றி அக்கா எழுத்து பிழையை கவனத்தில் கொள்கிறேன்!!!!!!!!!!!! :rolleyes:

Edited by Jamuna

சந்தர்ப்ப செவிடர்களாக இருந்தால் சாதிக்கலாம்: ரஜினி பேச்சு

சென்னை, ஜூன் 26: வாழ்க்கையின் பல சந்தர்ப்பங்களில் நாம் செவிடர்களாக இருந்தால்தான் சாதிக்க முடியும் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறினார்.

சென்னை சாந்தி திரையரங்கில் சந்திரமுகி தொடர்ந்து 804 நாள்கள் ஓடி சாதனை படைத்தது. இதையொட்டி சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற பிரம்மாண்டமான விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது:

இது ஒரு வித்தியாசமான விழா. இதுபோன்ற விழா இனி என் வாழ்வில் நடைபெறாது. ஏனென்றால் "ஹரிதாஸ்' படம் புரிந்த சாதனையை கிட்டத்தட்ட 52 வருடங்களுக்குப் பிறகே "சந்திரமுகி' அடைந்துள்ளது. இதுபோன்ற விழாவுக்கு முதல்வர் கருணாநிதி தலைமையேற்பது பெருமைக்குரிய விஷயம்.

"ஹரிதாஸ்' தியாகாரஜ பாகவதர் நடித்த படம் என்றே பலருக்குத் தெரியும். அந்தப் படத்தின் தயாரிப்பாளர் யார்? இயக்குநர் யார்? என்பது பற்றியெல்லாம் பலருக்குத் தெரியாது. ஆனால் "சந்திரமுகி'யைப் பொருத்தவரை சிவாஜி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பு, பி.வாசுவின் இயக்கம், அதில் ரஜினி நடித்தார் என்றே பேசப்படும்.

இந்தப் படத்தின் வெற்றிக்குக் காரணம் பி.வாசுதான். நான் வெறும் நடிகன் மட்டுமே. இயக்குநர்கள்தான் படைப்பாளர்கள். இந்தப் படத்தின் வெற்றிக்குக் காரணம் இதில் காமெடி, சென்டிமெண்ட், காதல், குரோதம், சிருங்காரம் என பல அம்சங்கள் இருந்ததுதான்.

"சந்திரமுகி' ரிலீஸýக்கு முன்பு படத்தைப் பற்றி பல செய்திகள் வந்தன. ஏற்கெனவே மலையாளத்திலும், கன்னடத்திலும் வெளிவந்ததைப் பார்த்துவிட்டு "படம் நாலு வாரம்தான் போகும், படத்தில் என்ன இருக்கிறது?' என பலர் பல மாதிரியாகப் பேசினார்கள்.

இந்தச் சமயத்தில் நான் ஒரு கதையை நினைவுபடுத்த விரும்புகிறேன். ஒரு பெரிய மலை இருந்தது. அதில் மூன்று தவளைகள் ஏற முயற்சித்தன. அப்போது கீழே இருந்த மற்ற தவளைகள் எல்லாம் அங்கே பாம்பு இருக்கிறது; ஆபத்தான உயிரினங்கள் இருக்கின்றன. கூர்மையான கற்கள் இருக்கின்றன; நீங்கள் ஏறுவது சிரமம் எனக் கூறின.

ஆனாலும் தவளைகள் மலை மீது ஏறின. மேலே போய்க்கொண்டிருந்தபோது ஒரு 100 அடியில் ஒரு தவளை கீழே விழுந்து இறந்துவிட்டது; இன்னும் சிறிது உயரம் போன பிறகு மற்றொரு தவளை விழுந்துவிட்டது. ஆனால் இன்னொரு தவளையோ மலை உச்சிக்குச் சென்றுவிட்டது. அந்தத் தவளை மட்டும் எப்படி உயரே சென்றது என்ற கேள்வி எழுந்தது. அப்போதுதான் தெரிய வந்தது அந்தத் தவளைக்குக் காது கேட்காது என்று! நானும் அதுபோலத்தான். தேவையில்லாத விஷயங்களைக் கேட்கும்போது செவிடன் ஆகிவிடுவேன்.

முதல்வர் கருணாநிதி இந்த அளவுக்கு உயர்ந்திருக்கிறார் என்றால் அதற்குக் காரணமும் அதுதான். அவரைப் பற்றி எத்தனை பேர் எத்தனை விதமாகப் பேசியிருப்பார்கள்? அவற்றையெல்லாம் கேட்டு அதற்கு அவர் நேரம் ஒதுக்கியிருந்தால் அவ்வளவுதான்.

நம்மைப் பற்றிப் பிறர் பேசும்போது எதை எடுக்க வேண்டுமோ அதை மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றவை பற்றி கவலைப்படக்கூடாது. வாழ்க்கையில் பல சந்தர்ப்பங்களில் நாம் செவிடர்களாக இருந்தால்தான் சாதிக்க முடியும்; இல்லாவிட்டால் வாழ்க்கையே வீணாகிவிடும்.

இவற்றையெல்லாம் நானாகச் சொல்லவில்லை; சிவாஜிகணேசன், என்.டி.ஆர்., ராஜ்குமார், கலைஞர் என பல பெரியவர்களிடம் இருந்து கற்றுக்கொண்டதுதான் என்றார் ரஜினிகாந்த்.

நடிகர் கமல்ஹாசன்: ரஜினிகாந்த் -என்னுடைய உடன்பிறவா சகோதரர், நண்பர், போட்டியாளர், ரசிகர், தக்க சமயங்களில் அறிவுறுத்துபவர். எங்களுடைய நட்பு கே.பாலசந்தர் என்ற விருட்சத்தின் நிழலில் வளர்ந்தது. ஒரு கட்டத்தில் நானும் அவரும் இணைந்து நடிப்பதில்லை என்ற முடிவை எடுத்தோம். அதனால்தான் அவருக்கென ஒரு தயாரிப்பு வட்டமும், எனக்கென ஒரு தயாரிப்பு வட்டமும் உருவானது. ரஜினி அவர் வழியிலும், நான் என் வழியிலும் செல்ல இது உதவியது. திரையுலகுக்கும் இது நன்மை பயத்தது.

இந்த விழாவில் பங்கேற்பது பெருமை என்று சொல்வதை விட இது என் கடமை என்றுதான் சொல்வேன். இதுபோன்ற விழா இனி அமையாது என இங்கு கூறப்பட்டது. ஆனால் என் நண்பர் ரஜினியைப் பொருத்தவரை இதுபோன்ற சாதனை விழாக்கள் இன்னும் தொடரும்.

எங்களுடைய நட்புக்கு முன்னோடியாக இருந்து வழிகாட்டியது சிவாஜிகணேசன்-கருணாநிதி ஆகியோரது நட்புதான். என்னை குழந்தையாகப் பார்த்தவர்கள் இருக்கிறார்கள்; இளைஞனாகப் பார்த்தவர்கள் இருக்கிறார்கள். பெரிய மனிதனாகப் பார்ப்பவர்கள் இருக்கிறார்கள்; ஆனால் இன்றும் என்னைக் குழந்தையாகவே பார்ப்பவர்களில் ஒருவர்தான் என் நண்பர் ரஜினிகாந்த்' என்றார் கமல்ஹாசன்.

http://www.dinamani.com/NewsItems.asp?ID=D...ZLm&Topic=0

  • கருத்துக்கள உறவுகள்

ஜாhh டி.வி.டி இருக்கு....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கன்னட வெறியன் ரஜனிகாந்தின் சிவாஜி படத்தை இணையத்தளங்கள் ஊடாகவும், திருட்டு வீசிடிக்கள் மூலமாகவும் கண்டுகளியுங்கள்!

ரஜினி மராத்தி... நாட் கன்னடா...

ஜாhh டி.வி.டி இருக்கு....

சுண்டு கீழே டயலக் மாற்றியாச்சோ குடி இல்லாத நேரம் யாரப்பா வந்தது சொல்லவே இல்லை???

B)

  • கருத்துக்கள உறவுகள்

அது குடையப்பா குடிக்கிறதிலையே நில்லுங்கோ...

என்ன நக்கலா எழுத்து பிழையா போச்சு அது சரி யார் வந்தது என்று சொல்லவே இல்லை..........சிவாஜி புறகணிப்பு எப்படி

:):rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

யாரு புறகணிச்சா........? நாங்க தானே first show la நிண்டது...

அப்படி போடுங்கோ அரிவாள......................நாம யாரும் சொல்லி எப்ப தானே கேட்டு இருகிறோம்!!!!!!

:):rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

ஆமா புறகணிச்சா போல சிட்னியில ஒடமா தானே போக போது... பேசமா 10 ஒட 11 ஆ இருந்து பாத்திட்டு வாறதுக்கு...

பின்னே நாம புறகணிச்சா படம் ஓடிடுமா சிட்னியில ஆனா நாம தானெ புறகணிக்கவில்லையே அது சரி 10 ஓட 11 என்று விளங்கவில்லை அது தான் குடை மட்டரோ

:P ;)

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் சிவாஜிக்கு புலம்பெயர்ந்த நாடுகளில் ஓசி விளம்பரம் செய்தவர்கள் தமிழ் தேசியத்துக்கு ஆதரவாக கட்டுரை எழுதுபவர்களும், எங்களை போல் களம், வலைப்பூக்களில் எழுதுபவர்களுமே.

அதைவிட சிவாஜி படத்தை பெருமையாக ஓட வைத்த பெருமை யாழ்கள உறுப்பினர்களையே சாரும் என்று சொன்னால் மிகையாகாது. அதிலும் சைக்கில் கப்பில் ராங்க் ஓட்டும் வசம்புதான் அந்த குழுவுக்கு லீடர் எண்டால் அதைவிட மிகையாகாது. :D :P

மக்கள் சந்தோசம் தான் அரசன் சந்தோசம் எண்டு பழமொழிகள் இருக்கு, சிவாஜி படம் ஓடும் தீயேட்டர்களிற்க்குபோய் பாருங்க சிறுசுகள் தொடக்கம் பெரிசுகள் வரை சிரிச்சு மகிழ்கிறார்கள், (இளைஞர் கூட்டம் ஸ்ரேயாவை பார்த்து ஜொள்ளு விடுது அது வேற விசயம்). :angry:

Edited by Danklas

நம்மை எல்லாம் எப்படி நொந்து கொள்வது என்றே தெரியவில்லை. ஆங்கிலப்படத்தை பார்ப்போமாம்! தென்னிந்திய அதுவும் ரஜினி படத்தைப் புறக்கணிப்போமாம்!

வேண்டாம் நொந்து கொள்ள வேண்டாம். அதான் ஆகப்போவது எதுவுமில்லை!

ஆனால் கொஞ்சம் சிந்திக்கலாம் வாங்க!

பிரபு, அஜீத், கார்த்திக், விஜய், சிரஞ்சிவி, சிவக்குமார் என்று ஏராளம் நடிகர்கள் இருக்கிறார்கள். இதில் ரஜனியோடு மட்டும் என்ன கோபம்! ஓரு முகாமைத்துவத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தி மனுவை யாரிடம் கொடுப்பார்கள்? அலுவலக உதவியாளர், கணக்காளர், வரவேற்பாளர் என்று பலர் இருக்க ஏன் முகாமையாளரிடம் கொடுக்கின்றனர்? அவர்தான் முதன்மையானவர். அந்தவகையில் எங்களிடம் தன் பொருளை விற்க வருபவரிடம் எங்கள் மனக்குறையை சொல்கிறோம்.

சரி சொல்லி என்ன ஆகப்போகிறது? இவரா எங்கள் உணர்வுகளை புரிந்து எங்களுக்காக தென்னிந்தியாவின் மிகப்பலம் வாய்ந்த சினிமா என்ற ஊடகத்தினூடாக குரல் கொடுக்கப் போகிறார்? எதற்காக ஜனநாயக போர்வைக்குள் இருக்கும் சர்வாதிகார சர்வதேச சமுகத்திடம் தமிழ் மக்கள் "வெல்க தமிழ்" என்ற நிகழ்வின் மூலம் வேண்டுகோள் விட்டனரோ அதே நம்பிக்கையில்தான் இந்தச் செயற்பாடும் உள்ளது. அது வெற்றி பெற்றதா, ஈழத்தமிழர்களின் ஆதங்கங்கள் உரிய இடத்தை சென்று சேர்ந்ததா என்பதை காலம் தீர்மாணிக்கும். இப்போதே அது வெற்றியா தோல்வியா என்று கணிப்பிட முடியாது.

காதல், கட்டைப்பஞ்சாயத்து, பழிவாங்கல், கடவுள்கதை என்ற வட்டத்தையே சுற்றிச் சுற்றி வரும் வெற்றிப்படங்களின் பிதாமகன்களே,

1) உங்கள் அண்டை வீட்டில் நடக்கும் கொடூரத்தையும், அதை எதிர்த்து உங்கள் இரத்த உறவுகள் நடத்தும் விடுதலை வேள்விகளையும் நீங்கள் கொண்டாடும் ஜனநாயக வரம்புக்குள் நின்று எடுத்துக் கூறுங்கள்.

2) எவ்வாறு தணிக்கை தடைகளை எல்லாம் தாண்டி ரசிகர்கள் கேட்கிறார்கள் என ஆபாசத்தை புகுத்துகின்றீர்களோ, அப்படியே இந்த ரசிகர்களுக்காகவும் வைரமுத்துவின் வைரவரிகள் கொண்டு வரிந்து விடுங்கள்! எங்கள் சாதனைகளையும், சாகசங்களையும் சங்கரைக் கொண்டு பிரமிக்க வையுங்கள். எங்கள் துயரங்களை ரகுமானின் ராகத்தில் இழைய விடுங்கள்.

3) நீங்கள் எத்தனை பேர் என கேட்காதீர்கள்? இன்று நாங்கள் பழக்கப்பட்டுப் போன பாழாய் போன சினிமா மோகத்தை விட்டு வெளிவர முடியாமல் விழி பிதுங்குகிறோம். ஆனால் நாங்கள் மானமுள்ளவர் பரம்பரை. உரிமைக்காக உயிரை துறக்கத்துணிந்தவர் பரம்பரை. இங்கொன்றும் அங்கொன்றுமாய் கேட்கும் குரல்கள் இனி வரும் காலங்களில் வானதிர உலகமெங்கும் கேட்கும்!

ஈழத்தமிழர் துன்பம் நித்திய துன்பம் தானே என்றிராது, எங்கள் துயர வாழ்வின் நீட்சியை குறைக்க உதவுங்கள்.

அன்றைய ஆங்கிலேயன் தமிழரிடம் ஆட்சியைக்கொடுக்காத காரணமே தமிழன் தங்களை மிஞ்சி விடுவான் என்றுதான் 'மோட்டுச் சிங்களவனிடம் கொடுத்து இன்று அவன் இரத்த வெறி ஆடுகின்றான்"!!

இந்தக் கூற்று எங்கள் இனத்தின் மீது நாங்கள கொண்ட பெருமையை காட்டுகிறது. ஆங்கிலேயர் சிங்களவரிடம் கொடுத்தார்களா, தமிழர்களிடம் கொடுத்தார்களா ஏன் கொடுத்தார்கள் என்று பல வியாக்கியானங்கள் உண்டு!

வல்லரசாக வல்லூறாக அனைத்து நாடுகளின் நிம்மதியைக்குலைக்கும் அமெரிக்க, லண்டன் ஆங்கிலப்படங்களை நாம் பார்த்தே ஆகவேண்டும்!!...! நாம் எல்லாம் எப்ப அண்ணா திருந்தப்போறோம்?

இந்தக் கூற்று எங்கள் சுயநலவாதத்தின் எடுத்துக்காட்டு!

அறிவுக்கும், தொழில் நுற்பத்திற்கும், ஆட்சிமுறைக்கும், அகதி வாழ்க்கைக்கும் ஆங்கிலமும் இங்கிலாந்தும் தேவைப்படுகின்றது. இந்த கணணிக் கல்விக்குக்கூட ஆங்கிலம் தேவைப்படுகின்றது. யுனிகோட் என்பதற்கு கூட தமிழ் மொழி பெயர்பைதான் நீங்கள் தரமுடியும், தமிழ் மொழி வழக்கை அல்ல! இதற்காகவெல்லாம் ஆங்கில மொழி உயர்வானது தலையில் வைத்துக் கொண்டாடுங்கள் என்று கூறவரவில்லை. தூற்றுவதற்கு என்ன உரிமை இருக்கிறது எமக்கு?

கருநாநிதிக்காக தமிழை நாங்கள் புறக்கணிக்க முடியுமா? இந்தியாவுக்காக இந்தியை நாங்கள் வெறுக்க வேண்டுமா?

ஆங்கிலம் மட்டுமல்ல பிரஞ்சு, ஜேர்மன் ஏன் சிங்களத்தில் கூட நல்ல தரமான படங்கள் வருகின்றன. நல்லவை எங்கிருந்து வந்தாலும் அதனை பாரட்ட, விரும்பி ஏற்க வேண்டும். உலக சினிமா தொழிற் துறையில் தென்னிந்திய சினிமா எத்துனை சிறியது? தென்னிந்திய சினிமாக்களில் எத்தனை தரமான சமுகநல நோக்கம் கொண்ட அறிவியல் சார்ந்த,யதார்த்தமான, சர்வதேச சினிமாக்களை பிரதி பண்ணாத சினிமாக்கள் வருகின்றன? தென்னிந்திய சினிமா வட்டத்தை தாண்டி நாங்கள் போகக் கூடாதா? பின்னர் உலகத்தரமான தமிழ் சினிமாக்களை படைக்கக் கூடாதா?

ஆகவே களஉறவுகளே நீங்கள் பார்த்து விட்டீர்களா பறவாயில்லை, குற்றஉணர்ச்சி வேண்டாம்! அதனை மூடி மறைக்கும் முயற்சியும் வேண்டாம். நாம் சாதித்தது என்ன என்று சிந்திப்போம். ஜனாதிபதித் தேர்தலை வடக்கு கிழக்கு மக்கள் ஒட்டு மொத்தமாக புறக்கணித்ததால் அதிர்ந்து போன சர்வதேசத்தை சிந்தித்துப் பாருங்கள். விடை கிடைக்கும். அடுத்த முறை ஒற்றுமையாக மனவடக்கத்துடனும் தெளிந்த சிந்தனையுடனும் நின்று புரியவைப்போம்.

வெல்லும் தமிழ்!

அன்புடன்,

Edited by சாணக்கியன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வேண்டாம் நொந்து கொள்ள வேண்டாம். அதான் ஆகப்போவது எதுவுமில்லை!

ஆனால் கொஞ்சம் சிந்திக்கலாம் வாங்க!

பிரபு, அஜீத், கார்த்திக், விஜய், சிரஞ்சிவி, சிவக்குமார் என்று ஏராளம் நடிகர்கள் இருக்கிறார்கள். இதில் ரஜனியோடு மட்டும் என்ன கோபம்! ஓரு முகாமைத்துவத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தி மனுவை யாரிடம் கொடுப்பார்கள்? அலுவலக உதவியாளர், கணக்காளர், வரவேற்பாளர் என்று பலர் இருக்க ஏன் முகாமையாளரிடம் கொடுக்கின்றனர்? அவர்தான் முதன்மையானவர். அந்தவகையில் எங்களிடம் தன் பொருளை விற்க வருபவரிடம் எங்கள் மனக்குறையை சொல்கிறோம்.

சரி சொல்லி என்ன ஆகப்போகிறது? இவரா எங்கள் உணர்வுகளை புரிந்து எங்களுக்காக தென்னிந்தியாவின் மிகப்பலம் வாய்ந்த சினிமா என்ற ஊடகத்தினூடாக குரல் கொடுக்கப் போகிறார்?

அதுதான் என் கேள்வியும் அப்படியே அந்தக்கேள்வியை நீங்கள் உங்களை நோக்கிக் கேட்டுக்கொள்ளுங்கள். ஈழத்தில் என்ன நடக்கின்றது என்றே தெரியாத ஒருவரை முதன்மையாளர் என்கின்ற நிலையில் தூக்கி வைக்காதீர்கள். ரஜினிக்கு ரசிகனாக இருப்பவன் அஜீத்துக்கும் ரசிகனாக இருக்கலாம். இதனால் ஆதரவை ரஜினி தர வேண்டும் என்பதில்லை எந்த நடிகரும் வெளிப்படையாகச்சொன்னால்...அப்

நானும் இந்த திரைப்படத்தை பார்த்தேன். திரையில் அல்ல திருட்டு விசிடியில். அருமையான படம்! அமைதியான கதை அமைப்பு. மனதை கொள்ளை கொள்ளும் பின்னனி இசை. படம் ஆரம்பம் தொடங்கி முடிவு வரை இருக்கையை விட்டு எழும்பவிடாமல் வைத்திருக்கும்.

இது போன்ற தரமான வேறு படங்கள் யாராவது பார்த்திருந்தால் அதை எங்களுடன் பகிர்ந்து கொள்ளலாமே?

அதைவிட சிவாஜி படத்தை பெருமையாக ஓட வைத்த பெருமை யாழ்கள உறுப்பினர்களையே சாரும் என்று சொன்னால் மிகையாகாது. அதிலும் சைக்கில் கப்பில் ராங்க் ஓட்டும் வசம்புதான் அந்த குழுவுக்கு லீடர் எண்டால் அதைவிட மிகையாகாது. :) :P
ஐயையோ டண்ணு என்னை அதிகமாய் புகழாதீங்க. எனக்குக் கூச்சமாயிருக்குது. சைக்கில் கப்பில் ராக்கட்டே ஓட்டும் உங்கள் முன்னால் நான் எம்மாத்திரமுங்க?? :D:D
நானும் இந்த திரைப்படத்தை பார்த்தேன். திரையில் அல்ல திருட்டு விசிடியில். அருமையான படம்! அமைதியான கதை அமைப்பு. மனதை கொள்ளை கொள்ளும் பின்னனி இசை. படம் ஆரம்பம் தொடங்கி முடிவு வரை இருக்கையை விட்டு எழும்பவிடாமல் வைத்திருக்கும்.
:D:lol:என்ன ஆங்கிலப் படத்திற்கு திருட்டு வீசிடியா?? அட்ரா ........அட்ரா.......... :):)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.