Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

FUNNY BOY" எதிர்க்கப்படுவது ஏன்..?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

உடலும் மனதும் சார்ந்த ஒரு விளங்க முடியா கவிதை பாலியல் அடையாளம் (sexuality). ஆங்கிலத்தில் innate என்பார்கள். தமிழில் உள்ளார்ந்தது எனலாம். அதை அவர் அவர் மட்டும்தான் உணர முடியும்.


ஒரு ஓரினசேர்க்கையாளரை பிரச்சாரம் மூலம் மாற்றின சேர்க்கையாளராக மாற்ற முடியாது. அதே போல ஒரு மாற்றின சேர்க்கையாளரையும் ஓரின சேர்க்கையாளராய் மாற்ற முடியாது.

சூழவும் ஓரின சேர்க்கை வெறுப்பை உமிழும் சமூகத்தில், தன்னுள் எழும் உணர்சிகளை என்ன என இனம் பிரித்து அறிய முடியாமல் தவிக்கும் மனிதர்களுக்கு, நீங்கள் ஒன்றும் தப்பானவர்கள், தப்பி பிறந்தவர்கள், சாத்தானின் பிள்ளைகள் இல்லை, நீங்கள் பாலியல் சிறுபான்மையினர் மட்டுமே என்ற நம்பிக்கையை, மன நிம்மதியை இந்த படங்கள் கொடுக்கலாம்.

படம் பார்த்து மாறும் விடயமில்லை பாலியல் அடையாளம் (sexuality/sexual identity).

 

இது உங்களின் மேலோட்டமான பார்வை
நான் 10-15  வருடம் முன்பு  என்ன எண்ணி இருந்தேனோ 
நீங்கள் அப்படியே அதை  எழுதி இருக்கிறீர்கள் 
நீங்கள் இன்னமும் உள்ள இறங்கி பார்க்கவில்லை என்பதை உணர முடிகிறது 
மன பிராந்தியால் சிக்கி சிதறுண்டு போனவர்கள் ஆயிர கணக்கில் 
இருக்கிறார்கள் பெண்கள் ஆக இருந்து ... எனக்கு மார்பை பார்க்கவே 
பிடிக்கவில்லை என்று அறுவை சிகிச்சை செய்து அதனால் பல 
உடல் உபாதைக்கு ஆளாகி ... இப்போ தான் ஒரு பெண் என்று உணர்ந்தும் 
ஒரு பெண்ணாக முடியாத நிலையில் சீரழிந்து வாழ்கிறார்கள். 

இதில் உறுப்புகளை அகற்றும் மறு சீரமைக்கும் மருத்துவ 
துறைக்கும் கொஞ்சம் பங்கு உண்டு.

   க்கு நான் எதிரானவன் அல்ல 
ஆனால் பதின்ம வயது பிள்ளைகளை அவர்களின் 
கோர்மோன் மாறுதல்கள் உணர்ச்சி தூண்டுதலுக்கு ஆளாக்கி 
ஒரு மன பிராந்தியை உருவாக்குகிறது என்பதுக்கு எண்ணில் அடங்கா  
ஆதாரங்களை மருத்துவ சஞ்சிகைகள் வெளியிடுகின்றன. 

நீங்கள் எவ்வளவு தூரம் உள்ள சென்று பார்க்கிறீர்கள் என்பதை பொறுத்து 
இவற்றை அறிந்து கொள்ளலாம்  

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, Maruthankerny said:

இது உங்களின் மேலோட்டமான பார்வை
நான் 10-15  வருடம் முன்பு  என்ன எண்ணி இருந்தேனோ 
நீங்கள் அப்படியே அதை  எழுதி இருக்கிறீர்கள் 
நீங்கள் இன்னமும் உள்ள இறங்கி பார்க்கவில்லை என்பதை உணர முடிகிறது 
மன பிராந்தியால் சிக்கி சிதறுண்டு போனவர்கள் ஆயிர கணக்கில் 
இருக்கிறார்கள் பெண்கள் ஆக இருந்து ... எனக்கு மார்பை பார்க்கவே 
பிடிக்கவில்லை என்று அறுவை சிகிச்சை செய்து அதனால் பல 
உடல் உபாதைக்கு ஆளாகி ... இப்போ தான் ஒரு பெண் என்று உணர்ந்தும் 
ஒரு பெண்ணாக முடியாத நிலையில் சீரழிந்து வாழ்கிறார்கள். 

இதில் உறுப்புகளை அகற்றும் மறு சீரமைக்கும் மருத்துவ 
துறைக்கும் கொஞ்சம் பங்கு உண்டு.

   க்கு நான் எதிரானவன் அல்ல 
ஆனால் பதின்ம வயது பிள்ளைகளை அவர்களின் 
கோர்மோன் மாறுதல்கள் உணர்ச்சி தூண்டுதலுக்கு ஆளாக்கி 
ஒரு மன பிராந்தியை உருவாக்குகிறது என்பதுக்கு எண்ணில் அடங்கா  
ஆதாரங்களை மருத்துவ சஞ்சிகைகள் வெளியிடுகின்றன. 

நீங்கள் எவ்வளவு தூரம் உள்ள சென்று பார்க்கிறீர்கள் என்பதை பொறுத்து 
இவற்றை அறிந்து கொள்ளலாம்  

மருதர் நான் சொல்லும் கருத்தை எப்படிப் பார்ப்பாரோ தெரியாது. 

நீங்கள் குறிப்பிடும் மனப்பிராந்தி என்பது sexual dysphoria எனப்படுகிறது. தான் உடலமைப்பியல் ரீதியில் தாங்கியிருக்கும் பால் அடையாளத்திற்கும் மன ரீதியில் உணர்கிற பால் அடையாளத்திற்கும் இடையேயான போராட்டம்.

இது பதின்ம வயதுப் பிள்ளைகளில் சாதாரணமாக ஹோர்மோன் மாறுதல்களால் நடப்பது என்பது சரியல்ல! அப்படியாயின் இது 70%, 80% ஆன பதின்ம வயதினரில் ஏற்பட வேண்டும். இது பற்றிய ஏராளமான மருத்துவ சஞ்சிகை ஆதாரங்கள் இருப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறீர்கள், எவையென்று சுட்டிக் காட்டுங்கள்.

மருத்துவ உலகம் ஏற்றுக்  கொண்டிருப்பது, இந்த ட்ரான்ஸ் (trans) , பால் அடையாளத்திற்குப் பணியாத (gender non-conforming) மனிதர்களில் மட்டுமே gender dysphoria இந்த ஏற்படுகிறது. 

 

Gender dysphoria வளர்ச்சியின் ஒரு நிலை அல்ல என்று சொல்லும் மருத்துவ தகவல்: https://www.childrens.health.qld.gov.au/blog-gender-dysphoria-in-children-and-adolescents-is-not-a-phase/ 

Gender dysphoria பற்றிய மனோவியல்  diagnostic guide DSM-V இன் வரைவிலக்கணம்: 

https://www.ncbi.nlm.nih.gov/books/NBK532313/

 

Edited by Justin
கீழ் இணைப்பு சேர்க்கப் பட்டது

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Maruthankerny said:

இது உங்களின் மேலோட்டமான பார்வை
நான் 10-15  வருடம் முன்பு  என்ன எண்ணி இருந்தேனோ 
நீங்கள் அப்படியே அதை  எழுதி இருக்கிறீர்கள் 
நீங்கள் இன்னமும் உள்ள இறங்கி பார்க்கவில்லை என்பதை உணர முடிகிறது 
மன பிராந்தியால் சிக்கி சிதறுண்டு போனவர்கள் ஆயிர கணக்கில் 
இருக்கிறார்கள் பெண்கள் ஆக இருந்து ... எனக்கு மார்பை பார்க்கவே 
பிடிக்கவில்லை என்று அறுவை சிகிச்சை செய்து அதனால் பல 
உடல் உபாதைக்கு ஆளாகி ... இப்போ தான் ஒரு பெண் என்று உணர்ந்தும் 
ஒரு பெண்ணாக முடியாத நிலையில் சீரழிந்து வாழ்கிறார்கள். 

இதில் உறுப்புகளை அகற்றும் மறு சீரமைக்கும் மருத்துவ 
துறைக்கும் கொஞ்சம் பங்கு உண்டு.

   க்கு நான் எதிரானவன் அல்ல 
ஆனால் பதின்ம வயது பிள்ளைகளை அவர்களின் 
கோர்மோன் மாறுதல்கள் உணர்ச்சி தூண்டுதலுக்கு ஆளாக்கி 
ஒரு மன பிராந்தியை உருவாக்குகிறது என்பதுக்கு எண்ணில் அடங்கா  
ஆதாரங்களை மருத்துவ சஞ்சிகைகள் வெளியிடுகின்றன. 

நீங்கள் எவ்வளவு தூரம் உள்ள சென்று பார்க்கிறீர்கள் என்பதை பொறுத்து 
இவற்றை அறிந்து கொள்ளலாம்  

மருதர்,

வாழ்க்கை விசித்திரமானது இல்லையா மருதர்.

25 வருடங்களுக்கு முன் “இவர்களை கல்லால் அடித்து கொல்ல வேண்டும்” என்று என் நண்பர்களோடு ஒரு டியூசன் வகுப்பு முடிந்ததன் பின்னாக பீச்சில் இதை பற்றி கதைக்கும் போது கூறிய ஆள் நான் மருதர் 🤣.

2011 வரை கூட இதே மனோநிலையில்தான் இருந்தேன். பின் வேலையில் வேறு வழி இன்றி இதனோடு முகம் கொடுக்க வேண்டி வந்து, தனி மனிதர்களை சந்தித்து, அவர்கள் வாழ்வின் ஒவ்வொரு தருணங்களையும் ஆராயும் நிர்பந்தம் ஏற்பட்ட பின்பு, இது சம்பந்தமாக மேலும் வாசித்து அறிந்து இது “தேர்வு” (choice) இல்லாமல் மனிதருக்குள் தானாக  வரும் விடயம் இது என்ற புரிதலை அடைந்தேன்.

ஹோர்மொன்கள்தான் மனிதரின் வாழ்வின் உணர்வு சம்பந்தமான பல விடயங்களில் ஆளுகை செலுத்துகிறது. 

16 வயதில் நம் எல்லாரையும் டூயட் பாடல்களை பார்த்தே பரவச நிலைக்கு கொண்டு சென்றதும் ஹோர்மோன்கள்தான் 🤣.

நாம் எல்லாரும் ஆர்னோல்ட் சுவாஸ்நேகர் படத்தை ஆர்வமாக பார்க்க மிக சிலருக்கு மட்டும் எமக்கு சிம்ரனின் டூயட்டை பார்த்த அதே உணர்வு டேர்மினேட்டர் படத்தை பார்த்து உருவாவதுதான் மேட்டர்.

மனித வாழ்வின் எல்லா அங்கங்களும் nature மற்றும் nurture இன் பாதிப்புக்கு உள்ளானதே, அதில் இதுவும் விதி விலக்கல்ல.

ஆனால் எத்தனை படத்தை போட்டு காட்டினாலும் எனக்கு இந்த உந்துதல் வராது.

அதை போல் எந்த உந்துதலும், தூண்டலும் இல்லாமலும் ஒரு பையன் ஈரானின் குக்கிராமம் ஒன்றில் இதை வெளிபடுத்தி கல்லால் அடித்து கொல்லபடுவதும் நடக்கிறது.

ஆகவே இதில் nurture ( சூழலின் ?) பங்கு புறக்கணிக்க தக்கதே என்பது எனது முடிவு மட்டும் அல்ல, இதை பற்றிய ஏற்று கொள்ள கூடிய உளவியல், மருத்துவ, மரபணுவியல், சமூகவியல் ஆய்வாளர்களின் கருத்தும்.

நாம் வாதாடுவது இந்த படத்தின் கருவை ஒட்டியே ஆகினும், இந்த திரி படத்தை தமிழர் புறக்கணிப்பது பற்றியது.

ஆகவே திரியை திசை திருப்ப விரும்பாததாலும், நமது முன்னைய சம்பாசணைகள் போல் இதுவும் ஜவ்வு போல வாரக்கணக்கில் இழுக்க கூடாது என்பதாலும் 🤣 இத்துடன் முடிக்கிறேன்.

Let’s agree to disagree. 

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Maruthankerny said:

"1982 இல் வெளிவந்த காந்தி திரைப்படம், காந்தியின் கதாபாத்திரத்தில், இந்தியாவை காலனித்துவப்படுத்திய அதே பிரிட்டிஷ் நாட்டின் நடிகர் பென் கிங்ஸ்லி தான் நடித்திருந்தார். எந்த வெள்ளை இனத்துக்கு எதிராக காந்தி போராடினாரோ, அதே இனத்தவர் தான் காந்தியாகவும் நடித்தார்.

Early life[edit]

Kingsley was born as Krishna Pandit Bhanji on 31 December 1943 in Snainton, North Riding of Yorkshire,[4][5][6] the son of actress and model Anna Lyna Mary (née Goodman; 1914–2010) and Dr. Rahimtulla Harji Bhanji (1914–1968).[7][8] His mother was English; she was born out of wedlock, and "was loath to speak of her background".[9][10] His father was born in Kenya and was of Gujarati Indian descent.[11] Kingsley's paternal grandfather was a successful spice trader who had moved from India to Zanzibar, where Kingsley's father lived until moving to the UK at the age of 14.[12][13][14] Kingsley grew up in Pendlebury, Lancashire. He was educated at Manchester Grammar School, where one of his classmates was actor Robert Powell.[15]

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, goshan_che said:

மருதர்,

வாழ்க்கை விசித்திரமானது இல்லையா மருதர்.

25 வருடங்களுக்கு முன் “இவர்களை கல்லால் அடித்து கொல்ல வேண்டும்” என்று என் நண்பர்களோடு ஒரு டியூசன் வகுப்பு முடிந்ததன் பின்னாக பீச்சில் இதை பற்றி கதைக்கும் போது கூறிய ஆள் நான் மருதர் 🤣.

2011 வரை கூட இதே மனோநிலையில்தான் இருந்தேன். பின் வேலையில் வேறு வழி இன்றி இதனோடு முகம் கொடுக்க வேண்டி வந்து, தனி மனிதர்களை சந்தித்து, அவர்கள் வாழ்வின் ஒவ்வொரு தருணங்களையும் ஆராயும் நிர்பந்தம் ஏற்பட்ட பின்பு, இது சம்பந்தமாக மேலும் வாசித்து அறிந்து இது “தேர்வு” (choice) இல்லாமல் மனிதருக்குள் தானாக  வரும் விடயம் இது என்ற புரிதலை அடைந்தேன்.

ஹோர்மொன்கள்தான் மனிதரின் வாழ்வின் உணர்வு சம்பந்தமான பல விடயங்களில் ஆளுகை செலுத்துகிறது. 

16 வயதில் நம் எல்லாரையும் டூயட் பாடல்களை பார்த்தே பரவச நிலைக்கு கொண்டு சென்றதும் ஹோர்மோன்கள்தான் 🤣.

நாம் எல்லாரும் ஆர்னோல்ட் சுவாஸ்நேகர் படத்தை ஆர்வமாக பார்க்க மிக சிலருக்கு மட்டும் எமக்கு சிம்ரனின் டூயட்டை பார்த்த அதே உணர்வு டேர்மினேட்டர் படத்தை பார்த்து உருவாவதுதான் மேட்டர்.

மனித வாழ்வின் எல்லா அங்கங்களும் nature மற்றும் nurture இன் பாதிப்புக்கு உள்ளானதே, அதில் இதுவும் விதி விலக்கல்ல.

ஆனால் எத்தனை படத்தை போட்டு காட்டினாலும் எனக்கு இந்த உந்துதல் வராது.

அதை போல் எந்த உந்துதலும், தூண்டலும் இல்லாமலும் ஒரு பையன் ஈரானின் குக்கிராமம் ஒன்றில் இதை வெளிபடுத்தி கல்லால் அடித்து கொல்லபடுவதும் நடக்கிறது.

ஆகவே இதில் nurture ( சூழலின் ?) பங்கு புறக்கணிக்க தக்கதே என்பது எனது முடிவு மட்டும் அல்ல, இதை பற்றிய ஏற்று கொள்ள கூடிய உளவியல், மருத்துவ, மரபணுவியல், சமூகவியல் ஆய்வாளர்களின் கருத்தும்.

நாம் வாதாடுவது இந்த படத்தின் கருவை ஒட்டியே ஆகினும், இந்த திரி படத்தை தமிழர் புறக்கணிப்பது பற்றியது.

ஆகவே திரியை திசை திருப்ப விரும்பாததாலும், நமது முன்னைய சம்பாசணைகள் போல் இதுவும் ஜவ்வு போல வாரக்கணக்கில் இழுக்க கூடாது என்பதாலும் 🤣 இத்துடன் முடிக்கிறேன்.

Let’s agree to disagree. 

"ஆகவே திரியை திசை திருப்ப விரும்பாததாலும், நமது முன்னைய சம்பாசணைகள் போல் இதுவும் ஜவ்வு போல வாரக்கணக்கில் இழுக்க கூடாது என்பதாலும் 🤣 இத்துடன் முடிக்கிறேன்"

 

அமெரிக்காவில் இப்படி ஆயிரம் இருக்கிறது 
இது பற்றி நான் நிறைய வாசித்து இருக்கிறேன் 
அவ்வாறான தேடலினால் இதை பற்றி மருத்துவர்கள் மருத்துவ அறிஞர்களின் 
கருத்துக்களை தேடி வாசித்து இருக்கிறேன் 
இவ்வாறான சத்திர சிகிச்சைகளை இங்கு புளோரிடா மாநிலத்தில் 
மிக இலகுவாக செய்யலாம் என்பதால் பலர் செய்துவிட்டு 
இப்போ அவதி படுகிறார்கள். 

நேரம் இருக்கும்போது இதை பாருங்கள் 

 

இப்போது உடம்பு பூராக பச்சை குத்துவதுபோல 
இயற்கைக்கு மாறான எல்லா எண்ணமும் தானாக தோன்றாது ஒரு உந்துதல் தேவை 
அதை முன்பு ஹொலிவூட் சிறப்பாக செய்தது இப்போ கீழத்திய நாடுகளுக்கு 
அதே யுத்தியை கொண்டு சென்று சேர்த்திருக்கிறார்கள் 
இப்போ உடலில் குத்தும் பச்சையை அழிக்கும் லேசர் 
தொழில் மில்லியன் டாலர் லாபம் தரும் வியாபாரம் .... இதே வியாபாரம் 
இந்தியா இலங்கையிலும் இன்னும் சில வருடங்களில் கொடிகட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

நான் பதின்ம வயது கோர்மோன் தூண்டுதல் என்று சொன்னது 
அதனால் மட்டுமே இதை செய்கிறார்கள் என்பதுக்கு அல்ல 
அந்த வயதில் உணர்ச்சி பொங்குவது என்பது மிக சாதாரணமான விடயம் 
காதல் கூட அந்த வயதில் வரும் உணர்ச்சி பின்பு யாருக்கும் வருவதில்லை 
அந்த வயதில் காதலுக்காக தற்கொலை கூட செய்துகொள்வார்கள் 
அந்த வயதில் இன்னபிற தூண்டுதல்களால் லெஸ்பியன் ஆனா பல பெண்கள் 
பின்பு பை என்று கூறி பின்பு 30 வயதாகும்போது .... முழு பெண்களாக ஆண்களோடு 
சேர்ந்து பிள்ளை பெற்று வாழ்கிறார்கள். உடல் இன்பம் என்பது அப்போது போதுமானதாக 
இருந்தது கூட காரணமாக இருக்கலாம் 

18 minutes ago, பிரபா said:

Early life[edit]

Kingsley was born as Krishna Pandit Bhanji on 31 December 1943 in Snainton, North Riding of Yorkshire,[4][5][6] the son of actress and model Anna Lyna Mary (née Goodman; 1914–2010) and Dr. Rahimtulla Harji Bhanji (1914–1968).[7][8] His mother was English; she was born out of wedlock, and "was loath to speak of her background".[9][10] His father was born in Kenya and was of Gujarati Indian descent.[11] Kingsley's paternal grandfather was a successful spice trader who had moved from India to Zanzibar, where Kingsley's father lived until moving to the UK at the age of 14.[12][13][14] Kingsley grew up in Pendlebury, Lancashire. He was educated at Manchester Grammar School, where one of his classmates was actor Robert Powell.[15]

அவை என்னுடைய வார்த்தைகள் இல்லை 
நான் குவாட் பண்ணியவை நீங்கள் ஆள் மாறி இணைத்து இருக்கிறீர்கள் 

  • கருத்துக்கள உறவுகள்

மன்னிக்கவும் மருதர்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Maruthankerny said:

"ஆகவே திரியை திசை திருப்ப விரும்பாததாலும், நமது முன்னைய சம்பாசணைகள் போல் இதுவும் ஜவ்வு போல வாரக்கணக்கில் இழுக்க கூடாது என்பதாலும் 🤣 இத்துடன் முடிக்கிறேன்"

 

அமெரிக்காவில் இப்படி ஆயிரம் இருக்கிறது 
இது பற்றி நான் நிறைய வாசித்து இருக்கிறேன் 
அவ்வாறான தேடலினால் இதை பற்றி மருத்துவர்கள் மருத்துவ அறிஞர்களின் 
கருத்துக்களை தேடி வாசித்து இருக்கிறேன் 
இவ்வாறான சத்திர சிகிச்சைகளை இங்கு புளோரிடா மாநிலத்தில் 
மிக இலகுவாக செய்யலாம் என்பதால் பலர் செய்துவிட்டு 
இப்போ அவதி படுகிறார்கள். 

நேரம் இருக்கும்போது இதை பாருங்கள் 

 

இப்போது உடம்பு பூராக பச்சை குத்துவதுபோல 
இயற்கைக்கு மாறான எல்லா எண்ணமும் தானாக தோன்றாது ஒரு உந்துதல் தேவை 
அதை முன்பு ஹொலிவூட் சிறப்பாக செய்தது இப்போ கீழத்திய நாடுகளுக்கு 
அதே யுத்தியை கொண்டு சென்று சேர்த்திருக்கிறார்கள் 
இப்போ உடலில் குத்தும் பச்சையை அழிக்கும் லேசர் 
தொழில் மில்லியன் டாலர் லாபம் தரும் வியாபாரம் .... இதே வியாபாரம் 
இந்தியா இலங்கையிலும் இன்னும் சில வருடங்களில் கொடிகட்டும்.

மன்னிக்க வேண்டும் மருதர். உங்கள் புரிதல் இந்த விடயத்தைப் பொறுத்தவரை மிகைப்படுத்தப் பட்டதாகத் தெரிகிறது. நீங்கள் இணைத்த உதாரண வீடியோவின் மூலம் பற்றி அறிந்திருப்பீர்கள் என நினைக்கிறேன்.

1. இந்த RT (Russian TV) ரஷ்யாவின் அரச தொலைக்காட்சி. கருக்கலைப்பு, பால் மாற்றம், ஓர்பாலுறவு , second amendment  என்று அமெரிக்காவில் சர்ச்சைக்குரிய விடயங்களைப் பற்றி பொய்மை விஞ்சிய வீடியோக்களை வெளியிடுவது அவர்களின் வேலை. இது இந்த பால்மாற்றங்களை எதிர்க்கும் அமெரிக்க வலது சாரிகளைத் தூண்டி விடும் கைங்கரியம். 

2.நீங்கள் சொல்வது போல அவசரப் பட்டு சிகிச்சைகள் செய்து விட்டு பின்னர் மாற நினைப்போர் இருக்கக் கூடும். அந்த எண்ணிக்கை பூச்சியமாக இருக்காது. ஆனால், அதுவே பெரும்பான்மை அல்ல. புளோரிடாவில் அவர்கள் பால் மாற்ற சத்திர சிகிச்சை செய்வதற்கு முன்னர் பல மருத்துவர்களைப் பார்த்து மனோவியல் ஆலோசனைகள் பெற்று மருந்துகளும் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதே அமெரிக்காவில் standard of care.

எனவே நீங்கள் நினைப்பது போல இது சினிமாவினாலும், சத்திர சிகிச்சை செய்து காசுழைக்க துடிக்கும் மருத்துவர்களாலும் உருவானதல்ல! இது இயற்கையான ஒரு நிலை. நான் மேலே இணைத்த மருத்துவ இணைப்புகளில் தெளிவாக ஆதாரங்களுடன் இருக்கிறது.  

  • கருத்துக்கள உறவுகள்

பனங்காய் என்று ஒன்று இல்லை 
இது போல பனையில் இருந்து வீழும் காய் இருக்கிறது 

sexual dysphoria

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Maruthankerny said:

பனங்காய் என்று ஒன்று இல்லை 
இது போல பனையில் இருந்து வீழும் காய் இருக்கிறது 

sexual dysphoria

பனையில் இருந்து விழும் எல்லாக் காயும் பனங்காய் அல்ல! 

தவறான உங்கள் புரிதலை மாற்றும் நோக்கம் இல்லை! ஆனால்  உங்கள் மருத்துவ அடிப்படையற்ற புரிதல் இங்கே பரவாமல் இருக்க மட்டுமே என் பதில்களும் இணைப்புகளும்!

  • கருத்துக்கள உறவுகள்
இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்து, ஆங்கிலக் காலனித்துவ ஆட்சிக்காலத்தில் ஆங்கிலக்கல்வி கற்று, நிர்வாகப் பதவிகளைப்பெற்ற சில தமிழர்கள், கொழும்பைத் தமது சொந்த வாழ்விடமாக்கிக்கொண்டு, ஆங்கிலேயர்களின் பாணியிலேயே தமது வாழ்க்கையை அமைத்துக்கொண்டார்கள்.
அவர்களுக்குப் பின்னர்வந்த அவர்களது சந்ததியினரெல்லாம் முற்றுமுழுதாக ஆங்கிலக்கல்விகற்று, ஆங்கிலத்திலேயே உரையாடி, தமிழ் தெரியாத ஒரு தமிழ்ப்பரம்பரை கொழும்பில் உருவானது. அதுமட்டுமல்ல, சிலர் கிறிஸ்தவர்களாக மாறி அல்லது மாறாமலும்கூட அவர்களது குடும்பப்பெயர்மட்டும் தமிழ்ப்பெயராக இருக்;க சொந்தப் பெயர்களைக ஆங்கிலப் பெயர்களாக கொண்டிருந்தார்கள்.
உயர்ந்த அந்தஸ்த்திலுள்ள குடும்பமென்றால் அப்படித்தான் இருக்கவேண்டுமென்று நினைத்துப் பின்னால் வந்த சிலரும் அத்தகைய வாழ்க்கைமுறையை வலிந்து பின்பற்றத் தொடங்கினார்கள். வீட்டிலே சிங்கள வேலையாட்களைவைத்து, ஆங்கிலமும் சிங்களமும் பேசுவதுதான் கௌரவமென்று கருதி அப்படி வாழத்தலைப்பட்டார்கள். சில தமிழ் ஆண்கள் சிங்களப் பெண்களை மணந்து முற்றுமுழுதாக சிங்களவர்களாகவே மாறியிருந்தார்கள். அவர்களது குடும்பப்பெயர் மட்டும் தமிழில் இருக்கும்.
நான் எழுபதுகளின் ஆரம்பத்தில் கொழும்பில் பணிக்குச் சென்றபோது, அத்தகைய மூன்றாம் நான்காம் தலைமுறையினர் வாழ்ந்தார்கள். இலங்கை வானொலியின் ஆங்கில சேவைகளில் அத்தகைய பல இளைஞர்களும் யுவதிகளும் பணியாற்றினார்கள். சிங்கள உத்தியோகத்தர்களுடன் ஒருவித நாகரீகத் தொனியில் சிங்களத்தில் உரையாடும் அவர்கள், தமக்கு ஒரு தமிழ் வார்த்தைகூடத் தெரியாதென்று சொல்வதில் பெருமைகொள்வதைப் பார்த்திருக்கிறேன்.
அத்தகைய ஒரு வாழ்க்கைமுறையைக் கடைப்பிடிப்பதுதான் உயர்ந்த அந்தஸ்த்தின் அடையாளமென்று கருதிய பலர், அப்படி வலிந்து தம்மையும் மேட்டுக்குடிகளாகக் காட்டிக்கொள்ள முயன்றார்கள். அதன் முதலடையாளம் தமிழ் தெரியாமற்போவது, அல்லது சற்றுப்பின்னால் அந்த வர்க்கத்தில் இணைந்துகொள்ள முயல்பவர்கள் தமிழ் தெரியாதென்று பாவனைசெய்வதாகவே இருந்தது.
நான் கொழும்புக்குச் சென்றபோது இலங்கை சுதந்திரமடைந்து இருபத்திரண்டு ஆண்டுகள்தான். ஆங்கிலேய வாழ்க்கை மோகம் சற்றும் குறையாமலிருந்தது.
இந்த நிலையை மாற்றியது எழுபத்தேழு, எண்பத்திமூன்று இனக்கலவரங்கள்.
எழுபத்தேழாம் ஆண்டு கொழும்புப் பகுதியில் அவ்வளவாகக் கலவரங்கள் இடம்பெறவில்லை. இருந்தபோதிலும் ஓர் இளம் ஆங்கில அறிவிப்பாளர், சிறியளவில் பெண்மைத்தன்மைகலந்து சிங்களத்தை நாகரீகத் தொனியில் பேசும் கருமை நிறம்கொண்டவர், அவர் சிங்களவராக இருந்தபோதிலும் கருமைநிறத்தைக் கொண்டிருந்தமையினாலே தமிழரென்று கருதித் தாக்கப்பட்டார்.
எண்பத்திமூன்றாம் ஆண்டுக் கலவரத்தின்போது தமது குடும்பப்பெயரைமட்டும் தமிழ்ப் பெயராக வைத்துக்கொண்டு, ஆங்கிலமும் சிங்களமும் பேசித் தம்மை எள்ளளவும் தமிழர்களாகக் காட்டிக்கொள்ளாத சிலரும் தாக்கப்பட்டார்கள். அதன்பின்னர் இந்த ஆங்கிலேயத் தமிழர்கள் பலர் உணர்ச்சிமிக்க தமிழர்களாக மாறியதை நானறிவேன்;. அவர்கள் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு வெளிப்படையாக ஆதரவுகாட்டாவிட்டாலும் உளமார்ந்த ஆதரவு நிலைப்பாட்டைக் கொண்டிருந்தார்கள். இலங்கை அரசு போராட்டத்தில் திணறும்போது அதை இரகசியமாக இரசித்தார்கள்.
உண்மையில் அப்படித் தாம் தமிழரென்ற அடையாளத்தைத் துறந்து, சிங்களவர்களுக்கு விசுவாசமாக வாழ்ந்தபோதிலும் தம்மை சிங்களவர்கள் புறக்கணித்துவிட்டார்களென்ற யதார்த்தத்தை அவர்களால் தாங்கமுடியவில்லை. இப்படி சிங்களவர்களாக மாறி வாழ்ந்த அவர்களும் தமிழ்க் குடும்பப் பெயரைக் கொண்டிருந்த ஒரே காரணத்துக்காக மட்டும் தாக்கப்பட்டமை, இலங்கையின் தமிழ் விரோத இனத்துவேஷத்தின் உண்மை முகத்தை உலகுக்குக் காட்டிய மிக முக்கியமான அம்சமென்று சொல்லலாம்.
வடக்குக் கிழக்கு மக்கள் மட்டுமே தாக்கப்பட்டார்களென்று அங்குள்ள பிரச்சினையின் அடிப்படை தெரியாத வெளிநாட்டவர்கள் அறிந்தால், வடக்குக் கிழக்குத் தமிழர்கள் பிரிவினை அரசியலில் ஈடுபடுவதால் சிங்களவர்கள் ஆத்திரமடைவது இயல்பானதென்று கருத இடமுண்டு. ஆனால், தம்மைத் தமிழரென்று இனங்காட்டாது, அது அகௌரவமென்று கருதி வாழ்ந்தவர்களே தாக்கப்பட்டமை கலப்படமற்ற இனத்துவேஷத்தைப் பிரதிபலிக்கும் செயலென்பதை சற்றுக் கவனமூன்றிப் பார்ப்பவர்கள் புரிந்துகொள்வார்கள்.
சரி, இதை ஏன் இப்போது எழுதுகிறேனென்று நீங்கள் நினைக்கலாம். அண்மையில் தீபா மேத்தா அவர்கள் இயக்கிய, ஷ்யாம் செல்லத்துரையின் Funny Boy என்ற திரைப்படத்தைப் பார்த்தபோது இந்த எண்ணம் மனதில் ஓடியது.
ரமணனின் வானொலிக் கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கென இந்தத் திரைப்படத்தைப் பார்த்தேன். அந்த நிகழ்ச்சியின் நேரக்கட்டுப்பாடு காரணமாகப் பல விடயங்களைத் தெரிவிக்கமுடியவில்லை. சந்தர்ப்பம் கிடைக்கும்போது முகநூலில் பதிவதென்று நினைத்திருந்தேன். இப்போதுதான் அதற்கான நேரம் கிடைத்தது.
நான் அந்தக் கதைப்புத்தகத்தை வாசிக்கவில்லை. ஆனால் அதைப்பற்றி நிறையவே கேள்விப்பட்டிருக்கிறேன். அதை எழுதிய ஷ்யாம் அவர்களின் தாய் ஒரு சிங்களப்பெண் என்பதாக அறிகிறேன். அதேநேரம் ஷ்யாம், செல்லத்துரை என்ற குடும்பப்பெயரை மட்டுமேகொண்டவராகவுமிருப்பதால் நான் மேலே கூறிய சமூகவர்க்கத்தைச் சேர்ந்தவராகவே அவரை அடையாளம் காண்கிறேன். எனவே, அவர்கள் இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்டார்கள் என்று திரைப்படத்தில் காட்டுவதில் எந்தவித சிக்கலும் இருந்திருக்காது.
ஆனால் அவர்கள் வலிந்து இனப்பிரச்சினைச் சம்பவங்களைப் புகுத்தி, தமிழ்ப்பாத்திரங்களைப் படைத்து, கதையை மாற்றி ஒரு திரைக்கதையை எழுதி இப்படிக் கடும் விமர்சனங்களுக்குள்ளாகியிருக்க- வேண்டியதில்லையென்று நான் கருதுகிறேன். நான் கேள்விப்பட்ட மூலக்கதையில்நின்றும் விலகாமல் திரைக்கதையாக எழுதியிருந்தாலே இனப்பிரச்சினை வலிந்து புகுத்தப்பட்டதுபோலில்லாமல் இயல்பாகவே பிரதிபலித்திருக்குமென்பது எனது அபிப்பிராயம்.
அப்படித் திரைக்கதையை அமைத்திருந்தால்
கலைஇயக்கம் (Art Direction), கலாச்சாரக்குழப்பம், வலிந்து படைக்கப்பட்ட தமிழ்ப்பாத்திரங்கள், இயல்பற்ற காட்சிகள், மொழிப்பிரயோகம், தகவற்பிழையென்று பல குழப்பங்கள் நேர்ந்திருக்காது. ஒருவெளை மூலக்கதையில் ஒரு திரைப்படத்துக்கு தேவையான அளவுக்கு சம்பவங்கள் இல்லையோ என்ற சந்தேகமும் எழுகிறது.
இந்தக் கதை நூலுருவில் மிகுந்த வரவேற்புப்பெற்றதென்று அறிந்திருக்கிறேன். ஒரு ஓரெபால் நாட்டம் கொண்டவர் தன்னை மிகஉண்மையாக வெளிக்காட்டியிருப்பதாகப் பேசிக்கொண்டார்கள். இந்தத் திரைப்படத்தைப் பார்த்தபோது அந்தக் கோணத்தில்க்கூட ஒரு தாக்கத்தை ஏற்படுத்தத் தவறிவிட்டதென்பது மட்டுமல்ல, ஷ்யாமின் Funny Boy என்ற நூல் ஏன் அவ்வளவு வரவேற்பைப்பெற்றதென்றும் என்னை நினைக்கவைத்தது.
இது முற்றுமுழுதாக நான் பார்த்த Funny Boy என்ற திரைப்படம்பற்றிய எனது அபிப்பிராயம் மட்டுமே. இந்தத் திரைப்படத்தைப் பார்த்தபின் மூலக்கதையைப் படிக்கவேண்டுமென்ற ஆவல் ஏற்பட்டிருக்கிறது.

நன்றி P Wikneswaran Paramananthan

  • கருத்துக்கள உறவுகள்

கிருபன் இணைத்த இன்னொரு பதிவில், எவ்வாறு புத்தகத்தை வாசிக்காமலே சில "பிளாஸ்ரிக்" விமர்சகர்கள் விமர்சனம் வைப்பார்கள் என்ற கருத்து அலசப் பட்டிருந்தது. 

மேலே பெருமாள் இணைத்த விமர்சனத்தை முன்வைத்தவர்  நல்ல உதாரணமாக தெரிகிறார்: படம் பார்த்த விமர்சகர்  நூலை வாசிக்கவேயில்லையாம், ஆனால் நூலில் இருப்பதாக தான் கேள்விப்பட்டது போல கதை அமைத்திருக்க வேணுமாம். ஆனால், ஏன் அந்த நூல் பிரபலம் என்றும் தனக்குக் குழப்பமாம்! 🤣

போலியாக இருக்க எங்காவது விசேட பள்ளிக் கூடம் போய்ப் பயிற்சி எடுத்திருப்பார் போல இருக்கு!

  • 4 months later...
  • கருத்துக்கள உறவுகள்

Funny Boy

இளங்கோ - டிசே

Sunday, May 23, 2021

1.

ஷியாம் செல்வதுரையின் நாவலான 'விசித்திரமான சிறுவன்' (Funny Boy) 1994 இல் வெளிவந்தது. ஷியாம் தமிழ்த் தந்தையிற்கும், சிங்களத் தாயிற்கும் பிறந்தவர். ஆகவே இரண்டு கலாசாரங்களின் இணக்கங்களும், பிணக்குகளும் சேர்ந்த கலவையில் வளர்ந்திருக்கக்கூடியவர். மேலும் தற்பாலினராகவும் இருப்பதால் அதன் நிமித்தம் இலங்கைச் சூழலில் வளர்ந்தவர்கள்/வாழ்பவர்கள் அனுபவித்திருக்ககூடிய எல்லாச் சிக்கல்களையும் சந்தித்தவர். அதேசமயம் கொழும்பில் வசதிபடைத்தவர்கள் வாழும் கறுவாத்தோட்டப் பகுதியைச் (Cinnamon Gardens)சேர்ந்தவர் என்பதையும் ஷியாம் மறைத்தவருமல்லர். இலங்கையில் 1983இல் தமிழருக்கெதிரான படுகொலையின் நிமித்தம் ஷியாம் தனது 19 வயதில் கனடாவுக்குக் குடிபெயர்ந்தவர். இந்த நாவல் அவரின் 29ம் வயதில் கனடாவில் வெளியாகி மிகுந்த கவனத்தைப் பெற்றிருக்கின்றது.
 
funny%2Bboy%2B1.jpg
'விசித்திரமான பையன்' கதை, ஒரு சிறுவன் பதின்மத்தை அடையும் (Coming of Age) வகையைச் சேர்ந்தது. இந்நாவலில் கொழும்பிலிருக்கும் தமிழ்ப் பெற்றோருக்குப் பிறந்த மூன்று பிள்ளைகளின் ஒருவரான அர்ஜூன் (அர்ஜீ) தனது கதையைச் சொல்கின்றார். சிறுவனாக இருக்கும் அர்ஜி ஆண்கள் அதிகம் விளையாடும் கிரிக்கெட் போன்றவற்றில் ஈடுபாடில்லாது, பெண்களுக்குப் பிடித்தமான விளையாட்டுக்களில் ஆர்வமுள்ளவராக இருப்பதை விபரிக்கும்போதே அவர் ஒரு நம் சூழலில் ஒரு 'விசித்திரமான பையன்' என்பது தெரிந்துவிடுகின்றது. தனது மகனின் இந்த 'விசித்திரமான பழக்கவழக்கங்கள்' மாறுமென ஒரு இறுக்கமான தனியார் பாடசாலையில் தந்தையார் பின்பு அர்ஜீயைச் சேர்த்துவிடுகின்றார். அங்கே ஏனைய மாணவர்களும், பாடசாலை அதிபரும் இவர் தமிழர் என்பதால் இவரைப் பல விடயங்களுக்கு பகடைக்காய் ஆக்கினாலும், அர்ஜீ தனது பாலின் அடையாளத்தை அவரின் நண்பரான ஷெர்கானின் மூலம் தெளிவாகக் கண்டடைந்து கொள்கின்றார்.
 
இவ்வாறு அர்ஜீ தனக்குரிய பாலின அடையாளத்தோடும், தமிழரென்ற திணிக்கப்பட்டுவிட்ட அடையாளத்தோடும் போராடும்போது, நாட்டு நிலைமைகள் சிக்கலாகின்றன. அர்ஜீயை அவருடைய அடையாளங்களோடு புரிந்துகொள்கின்ற ஒருவராக அவரது மாமியாரான ராதா மட்டும் இருக்கின்றார். நீ உனக்கு மகிழ்ச்சி தரும் எதையும், உனது அடையாளங்களை முன்னிட்டு மறைத்து வைக்கத்தேவையில்லை என்கின்ற நம்பிக்கை வார்த்தைகளை ராதா கொடுக்க, அர்ஜீயின் நண்பரான செர்கானோ அவரது பாலினத்தை மறைக்கத்தேவையில்லை என்று உடல் சார்ந்த மர்மங்களை அவிழ்த்து வைக்கவும் உதவுகின்றார்.
 
அர்ஜீயின் அம்மாச்சி (பாட்டி) அவரது தந்தையாரை இனவாதத்திற்கு 50களில் பலிகொடுத்தவர் என்பதால், அவர் சிங்கள மக்கள் மீதான வெறுப்பில் இருக்கின்றார். அதன் நிமித்தமே அவரின் மகளான ராதா சிங்களப் பையனை விரும்பியபோதும், அதைத் தடுத்து நிறுத்துகின்றார். அத்துடன் கொழும்புப் பகுதியில் இனத்துவேஷம் இறுக்கமடைந்திருக்கும் சூழலில் கூட, தனது தமிழரென்ற அடையாளத்தை மிகப்பெருமையாக முன்வைக்கின்ற நெஞ்சுரமும் வாய்ந்தவர் அவர்.
 
அர்ஜீயின் தந்தை கொழும்பில் ஒரு ஹொட்டலைச் சொந்தமாக வைத்திருக்கின்றார். அங்கு பணிபுரிய வடக்கிலிருந்து(?) ஒரு இளைஞன் கொழும்புக்கு வருகின்றார். யாழில் இருந்தால் அங்கு முளைத்துவரும் இயக்கங்களில் ஏதேனும் ஒன்றுக்கு போய்விடுவார் என்பதால் கொழும்பில் அர்ஜீயின் குடும்பம் அவருக்கு அடைக்கலம் கொடுக்கின்றது. அந்த இளைஞன் ஹொட்டலில் ஒரு நல்ல நிலையை அடையும்போது, அங்கே வேலை செய்யும் சிங்களவர்களால் ஏற்றுக்கொள்ளமுடியாது சிக்கல்களை ஏற்படுத்துகின்றனர். தரத்திற்கு ஏற்ப மதிப்பளிக்காத சிங்களவர்கள் என அந்த இளைஞன் திட்டும்போதும், என்ன செய்வது சிங்களவரோடு பணிந்துபோய்த்தான் வாழவேண்டுமென அர்ஜீயின் தந்தை அவனுக்கு அறிவுரை கூறுகின்றார்.
 
இதன் தொடர்ச்சியில் இலங்கையில் 1979 இல் கொண்டுவரப்படும் தீவிரவாத சட்டத்தினால் (Prevention of Terrorism Act (PTA), இற்றைவரை இலங்கையில் இது இருக்கின்றது. கடந்த வருடங்களில் ராஜபக்‌ஷேக்கள் இதை இன்னொரு பெயரில் இறுக்கமாக மாற்ற முயற்சித்திருந்தனர்) அந்த அப்பாவி இளைஞன், எண்ணற்ற இளைஞர்களோடு சேர்ந்து சிறையில் அடைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்படுகின்றார். இறுதியில் உனக்கு இங்கே நல்ல எதிர்காலம் இல்லையென அந்த இளைஞனை அர்ஜீயின் தந்தை மத்திய கிழக்கிற்கு விமானத்தில் ஏற்றிவிடுகின்றார் (தீபா மேத்தாவின் திரைப்படத்தில் அந்த இளைஞன் திரும்ப யாழ்ப்பாணத்துக்கு போகின்றான். கொழும்பில் அவனோடு திரும்பும் ஒரு முதியவர், இனி எங்களுக்கு ஒரு எதிர்காலம் இல்லை, இயக்கத்தில்தான் உன்னைப் போன்ற இளைஞன் சேரவேண்டும் என்று கூறுகின்ற காட்சி வருகின்றது).
 
அர்ஜீ தனது பாலினத்தை, பதின்மத்தின் காதல் முகையவிழ்தல்களை ஷெர்கான் என்ற இன்னொரு பதின்மனோடு கண்டுகொள்ளும் காலத்தில், 1983 இனப்படுகொலை (இனக்கலவரம் அல்லது ஆடிக்கலவரம் என்பதற்குப் பதிலாக இனப்படுகொலை என்பது இங்கே பாவிப்பது, அந்தக் காலத்தில் தமிழர்கள் எதிர்த்தாக்குதல் எதையும் நடத்தாமலே கிட்டத்தட்ட 2000-3000 இற்கு மேற்பட்டவர்கள் தமிழர்கள் என்ற காரணத்தாலே கொல்லப்பட்டார்கள்) நிகழ்கின்றது. அதன் நிமித்தம் அர்ஜீயின் குடும்பத்தினரின் உடைமைகள் சூறையாடப்பட்டு, உயிர்களைக் காப்பாற்றும் பொருட்டு தப்ப ஓட, அவர்களுக்கு -அன்றையகாலத்தில் பல தமிழர்க்கு அடைக்கலம் கொடுத்த- சிங்கள மக்களே இவர்களைப் பதுக்கி வைத்துக் காப்பாற்றுகின்றனர். இறுதியில் இனப்படுகொலை நடந்த சில மாதங்களில் இலங்கை என்ற தன் சொந்தநாட்டையும், ஷெர்கான் என்கின்ற காதலனையும் கைவிட்டு அர்ஜீ ரொறொண்டோவிற்கு வந்து சேர்வதோடு கதை முடிகின்றது.
 
2.
 
இந்த நாவலுக்கும், அதைத் திரைக்கதையாக மாற்றும்போது எவையெவை தவறவிடப்பட்டிருந்தன என்பதை, தீபா மேத்தா இயக்கிய 'விசித்திரமான பையனை'ப் பார்க்கும்போது இந்த இரண்டையும் வாசித்த/பார்த்தவர்கள் எளிதாகப் புரிந்துகொள்ள முடியும்.
 
funny%2Bboy2.jpg
ஒரு சிறந்த நாவலைத் திரைப்படமாக்கும்போது, ஏற்கனவே அந்த நாவலை வாசித்துப் பிடித்தவர்களுக்கு, எப்படியோ நிறைவின்மை வரத்தான் செய்யும். நாவலை வாசிக்கும்போது நம் மனதுக்கு விரித்துப் பார்க்கும் மிகப்பரந்த வெளி இருக்கின்றது. அதையே திரைப்படமாக்கும்போது நாம் விரித்தும்/விவரித்தும் பார்த்தவை சட்டகங்களுக்குள் ஒற்றைத்தன்மையாக அடைபடும்போது சலிப்பு வருவதும் இயல்பே. ஆகவேதான் காப்ரியல் மார்க்வெஸ் இறுதிவரை தனது 'நூற்றாண்டு காலத் தனிமை'யை (One Hundred Years of Solitude) திரைப்படமாக்க அனுமதி கொடுக்காதிருந்தவர். சல்மான் ருஷ்டியோடு தீபா மேத்தா திரைக்கதையாக்கியிருந்தாலும் 'Midnight's Children' திரைப்படமானபோது அபத்தமாக ஆகியிருந்தது.
 
ஒரு நல்ல புதினமான 'விசித்திரமான பையனை' திரைப்படமாகக் கொண்டுவருவதற்கு இயன்றளவு தீபா மேத்தா முயன்றிருக்கின்றார். மீரா நாயர், அபர்ணா சென் போன்றவர்களின் திரைப்படங்கள் கவர்ந்த அளவுக்கு தீபா மேத்தாவின் திரைப்படங்கள் என்னை ஒருபோதும் கவர்ந்ததில்லை. தீபா மேத்தாவின் திரைப்படங்கள் கவனிக்கப்படுகின்றவைக்கு அவர் சர்ச்சைக்குரிய கதைகளைத் தேர்ந்தெடுப்பதாலே தவிர அவரின் நெறியாள்கையினால் அல்ல என்பதை அவரின் திரைப்படங்களை முன்வைத்தே எளிதாக அறியமுடியும்.
 
அவரின் அதிகம் கவனம் பெற்றதான Water, Earth போன்ற திரைப்படங்கள் நாவலாசிரியையான Bapsi Sidhwa எழுதிய நாவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இப்போது Midnight's Children, Funny Boy போன்றவையும் ஏற்கனவே நாவல்களாக வந்து வரவேற்பவைப் பெற்றவைதான். இந்த 'விசித்திரமான பையன்' எப்படி நாவலிலிருந்து நல்லதொரு திரைப்பட அனுபவமாக மாறியதோ, இல்லையோ என்பதை இத்திரைப்படத்தைப் பார்ப்பவர்க்காய் விடுவோம்.
 
நாவலில் இருந்து திரைப்படமாக்கும்போது சற்று 'அரசியலை'க் கலக்கவேண்டும் என்ற கட்டாயத்திலோ என்னவோ, 1983 இனப்படுகொலை நடப்பதற்கு முன் இயக்கம் (புலிகள்?) சிங்கள மக்களைப் படுகொலை செய்வது போல ஒரு காட்சி வருகின்றது. நானறிந்தவரை 1983 இன் பிந்தான் நமது இயக்கங்கள் தறிகெட்டு அப்பாவி மக்களின் பலிகேட்டு அலைந்தனவே தவிர எந்த இயக்கமும் 1983 முன் இயக்கம் சார்ந்து படுகொலை செய்யவில்லை என்றே அறிகின்றேன் (1980களில் இயக்கத்தில் இணைந்த நண்பரும் இதை உறுதியளித்திருந்தார்). அவ்வாறு 1983 வரை இப்படி சிங்கள அப்பாவிமக்கள் மீது தாக்குதல்கள் நடக்கவில்லை என்றால் இத்திரைப்படத்தில் அப்படி ஒரு காட்சிவருவது அரசியல் discourseஐ மாற்றுவதைப் போன்றதாகும். கண்டிக்கவேண்டிய ஒரு காட்சியும் கூட.
 
இப்போது இந்த் திரைப்படம் குறித்து வரும் சர்ச்சைகளுக்குள் வருவோம். அதைத் தனியாக ஒரு பதிவாக எழுதமுடியும் என்பதால் நாம் இந்தத் திரைப்படம் குறித்து உரையாடப்படும் இரண்டு முக்கிய புள்ளிகளை மட்டும் பார்ப்போம்.
 
(1) தமிழ்ப் பாத்திரங்களுள்ள இத்திரைப்படத்தில் எந்த தமிழ் நடிகர்களும் நடிக்கவில்லை,
 
(2) இந்தத் திரைப்படத்தில் நடிகர்கள் உரைடால்களில் தமிழைக் 'கொலை' செய்து பேசுவது.
 
இன்று உலகமெங்கும் பாத்திரங்களுக்கேற்ப அந்த அடையாளங்களோடு நடிகர்களைத் தேர்ந்தெடுக்கவேண்டும் என்கின்ற குரல்கள் உறுதியாக ஒலிக்கத் தொடங்கிவிட்டன. முக்கியமாக ஒரு கறுப்பினப் பாத்திரத்துக்கு ஒரு வெள்ளையின நடிகர் இனி நடிக்கவே முடியாது மாதிரி நிலைமை வந்துவிட்டது. ஏனெனில் இன்று BIPOC (Black Indigenous People Of Color) என்கின்ற சிறுபான்மையினரை எல்லாச் சூழல்களில் அடையாளப்படுத்தவேண்டும் என்ற உரையாடல்கள் தீவிரமாக நடந்துகொண்டிருக்கின்றன. மேலும் ஒரு தமிழரரை அல்லது தமிழ் தற்பாலினரை அடையாளப்படுத்தும் பாத்திரங்களை வேறு எவரும் அவ்வ்வளவு கவனம் எடுத்து எழுதப்போவதுமில்லை. ஆகவே இவ்வாறான மிகக்குறைவான இடங்களே உள்ள சிறுபான்மை சமூகத்தினரின் பாத்திரங்களுக்கு அவர்களையே நடிக்கவைக்க வேண்டும். இது இன்னொருவகையில் நமது அடுத்த தலைமுறை பல்வேறு துறைகளுக்குள் நுழைவதற்குக் களங்களைத் திறந்துவிடுவதும் கூட.
 
 
ஒரு உதாரணத்துக்கு இங்கு வளார்ந்த ஒரு தமிழ்ப்பிள்ளை இங்குள்ள திரைத்துறைக்குள் புகுவதற்கு அந்தப் பிள்ளைக்கு இவ்வாறான நாவல்கள் திரைப்படமாக்கும்போதுதான் மிகப்பெரும் வாயில் திறக்கப்படுகின்றது. ஆனால் அங்கே கூட வேறொரு பிறிதொரு அடையாளத்தில் உள்ளவர் தேர்ந்தெடுக்கப்படும்போது இது அந்தச் சந்தர்ப்பம் இந்த பிள்ளைக்குத் தடுக்கப்படுகின்றது. ஆகவே இத்திரைப்படத்துக்கு இந்த விடயம் சார்ந்து (Tamil Casting - தமிழ் நடிகர்கள் அதற்குரிய பாத்திரங்களுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கவேண்டும்) எழும் எதிர்ப்புக்குரல் மிக முக்கியமானது. அது மிகச் சரியானதுங்கூட.
 
இந்த எதிர்ப்பு சார்ந்து ஒரு எள்ளல் கதையான 'யாழ்ப்பாணச் சாமி'யை எழுதிய ஷோபாசக்தி கூட, அவர் 'தீபன்' என்ற திரைப்படத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டு நடிக்கப்பட்டபின் தான் அவருக்கு வாயில்கள் பல திறக்கப்பட்டன. அதே 'தீபன்' திரைப்படத்தில் இலங்கை நாயகன் பாத்திரத்துக்கு ஒரு ஆங்கிலயரோ/பிரான்ஸ்காரரோ தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தால் ஷோபாசக்தி ஒரு நடிகராக இன்றிருப்பதுபோல ஒருபோதும் வெளியுலகிற்கு அறியப்பட்டிருக்கவே மாட்டார். ஆனால் என்ன முரண்நகை என்றால் அவர் இவ்வாறான ஒரு சந்தர்ப்பத்தைப் பெற்றுக்கொண்டு, அதே போல மற்ற நடிகர்களும் அது சார்ந்த பாத்திரங்களுக்கு பொருத்தமாகத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டுமென எதிர்ப்புக்குரல் எழும்போது ஷோபாச்கதியே நக்கலாக ஒரு கதையை எழுதிப்போகின்றார் என்பதுதான்.
 
ஆனாலும் என்ன, நமக்கும் நடிப்புக்கும் வெகுதூரம் என்றாலும், எமக்கு இந்த விடயம் சார்ந்து ஒருபோதும் அனுகூலங்கள் கிடைக்கப்போவதில்லை என்றபோதும், எம்மால் கொஞ்சம் திறந்தமனதோடு சிந்திக்கமுடிகின்றது என்பதால் ஷோபாசக்தி 'தீபனில் நடித்ததற்கு சந்தோசப்பட்டது போல, மற்றவர்களுக்கும் இதன் வாயில்கள் திறக்கப்படவேண்டும் என்று குரல் கொடுப்போம் ('தீபனில் ஷோபா நடித்தது மகிழ்ச்சி என்றாலும், அந்தத் திரைப்படம் அபத்தமானது என்பதைப் பற்றியும் ஏற்கனவே எழுதியிருக்கின்றேன்).
 
இந்த விடயத்தில் நமது அஷோக ஹந்தகம சொன்ன கருத்துக்கு இப்போது வருவோம். அவர் முட்டாள்தனமாக 'காந்தி படத்தில் பென் கிங்ஸி நடித்திருக்கின்றார். எனவே திரைப்படங்களை கலையின் அளவீடுகளினூடு மதிப்பிட வேண்டும் ("Kingsly played Gandhi, in the film Gandhi. A film should be reviewed on artistic merits." ) என்கின்றார். இது எவ்வளவு அபத்தமான பார்வை என்பதை அஷோக ஹந்தகம உணர்வாரோ தெரியவில்லை. இன்றைய காலகட்டத்தில் பென் கிங்ஸி மாதிரியான ஒரு வெள்ளையினத்தவர் காந்தி பாத்திரத்தில் நடிக்கவே முடியாது. அப்படி ஒருவர் நடித்தால் மிகப்பெரும் எதிர்ப்பு இந்தியாவில் மட்டுமில்லை, உலககெங்கும் இருந்து எழும். ஏற்கனவே ஒரு சிறுபாடலில் கறுப்பினப் பாடகியான பியான்ஸே இந்திய ராணியாக நடித்து பாடலாக்கியமைக்கே மிகப்பெரும் எதிர்ப்பை அவர் சந்தித்திருக்கின்றார்.
 
Life of Pi திரைப்படமாகியபோது இந்தியப் பாத்திரங்களுக்கு வெள்ளைக்கார நடிகர்களா (தமிழ் பேசும் பாத்திரமான பட்டேல் பாத்திரத்துக்கு ஒரு தமிழரைத் தேர்ந்தெடுத்திருக்கலாம் என்கின்றபோதும்) நடித்தார்களா என்ன?ஏற்கனவே எடுக்கப்பட்ட திரைப்படங்களை, சமகாலத்தில் எவ்வளவோ விடயங்கள் மாறிவிட்டபின் இப்படி முட்டாள்தனமாக ஒப்பிடுவது என்பது அஷோக ஹந்தகமவின் அரசியல் பிரக்ஞை குறித்த கேள்விகளை எழுப்புகின்றது. அத்தோடு அதே பதிவில் தனது திரைப்படத்தில் தமிழ் நடிகர்களை நடிக்கவைத்தும் ரொறொண்டோவில் அவ்வளவு ஆதரவு கிடைக்கவில்லை என்றும் குறிப்பிடுகின்றார். அவரின் 'இனி -அவனை' நாம் எதன்பொருட்டு எதிர்த்தோம் என்பதை என்னைப் போன்றவர்கள் 'இனி- அவன்', 'இது எனது பெளர்ணமி' (Me Mage Sandai) போன்ற அவரின் திரைப்படங்களுக்கு எழுதிய விமர்சனங்களை அவருக்கு யாரேனும் தமிழ் தெரிந்த நண்பர்கள் வாசித்துக் காட்டினால் நன்று.
 
இரண்டாவது சர்ச்சைக்குரிய கருத்து: தமிழ் ஒழுங்காகப் பேசப்படவில்லை/உச்சரிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு. அதிலும் உண்மை இருக்கின்றது. பலர் தமிழில் பேசும்போது என்ன பேசுகின்றார்கள் என்று விளங்கவே இல்லை. ஏதோ தமிழை கூகிள் டிரான்ஸிலேட்டரில் போட்டு எடுத்தமாதிரிப் பேசுகின்றனர். இலங்கை என்ற நாட்டில் தமிழ் பேசுகின்றவர்களாக இருந்த ஒரே காரணத்துக்காய் ஒடுக்கப்பட்டு, இந்த நாவலின் உச்சப்பகுதியான 1983-படுகொலைகளும் தமிழ் என்ற அடையாளத்துக்காய் நிகழும்போது,, இந்த 'மொழிக் கொலை'யையும் எளிதில் கடந்து செல்லமுடியாது. இன்னும் இதில் அக்கறை நிச்சயம் கொடுத்திருக்கவேண்டும்.
 
இங்கே அம்மாச்சியாக வரும் சீமா பிஸ்வாலுக்கு சுமதி குரல் கொடுப்பது மட்டுமே நன்றாக இருக்கின்றது என்பதைத் தவிர்த்து மிகுதிப் பாத்திரங்களின் தமிழ் உச்சரிப்புக்கள் சகிக்கமுடியாதிருக்கின்றது. தமிழ் பேசும் என்னைப் போன்றவர்களே அதற்காய் subtitle யே நம்பியிருக்க வேண்டியிருக்கின்றது. இதே சீமா பிஸ்வாலின் அம்மாச்சி பாத்திரத்துக்கு, குரல் கொடுத்திருந்த சுமதியே நடித்திருந்தால் இரண்டுமே சிறப்பாக வந்திருக்கக்கூடும். இப்படி பொருத்தமான அடையாளங்களுடன் பொருத்தமான நடிகர்களைத் தேர்ந்தெடுக்கப்படாமையே இந்தத் திரைப்படத்தின் முக்கிய பலவீனமாகும்.
 
இறுதியாக எத்தகைய படைப்பாக இருப்பினும் அது தடை செய்யப்படவேண்டும் என்பதில் எனக்கு ஒருபோதும் உடன்பாடு இருந்ததில்லை. ஆனால் அபத்தமான கலையாக்கங்களுக்கு எதிராக நாம் உரையால்களைச் செய்யவேண்டும். அதுதான் ஜனநாயகச் சூழலில் செய்யப்படவேண்டியது, இன்றைய உரையாடல்கள் நாளை இப்படி ஒரு திரைப்படம் எடுக்கப்படும்போது இன்னும் பொறுப்புடன் இவ்வாறான விடயங்களில் அதன் நெறியாளர்களைக் கவனமெடுக்க வைக்கும்.
 
இத்திரைப்படம் சார்ந்து தமிழ் நடிகர்கள் சரியாகத் தேர்ந்தெடுக்கப்படாமை, தமிழ் உச்சரிப்புக்களில் கவனமின்மை போன்ற இந்த இரண்டு முக்கிய காரணங்களுக்காகவும், மூன்றாவது முக்கிய காரணமான
 
Disregard for the Queer Tamil Identity
 
" Tamil life. For us, racial anti-Tamil violence is inextricably linked to homophobia in Sri Lanka and around the world. Homosexuality remains illegal in Sri Lanka and public homophobic violence includes abuses by police, military, judicial and medical officers. Tamils in the diaspora are also subject to violent homophobia. Within Tamil communities, entrenched homophobia means many of us have been disowned, shunned, and ostracized because of who we are and who we love. Mainstream groups like the Canadian Tamil Congress (CTC) do not speak for us. Outside the community, the recent serial murders of brown men in Toronto are a tragic illustration of our continued vulnerability to public racist homophobic violence." ஐயும் சேர்த்து நமது Queer Tamil Collective நண்பர்களுடன் இணைந்து எனது எதிர்ப்பையும் இங்கே பதிவு செய்துகொள்கின்றேன்.
 
...............................................
 
(Dec 05, 2020)
 
 
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.