Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மடைச் சாம்பிராணிக்கு எங்கே போவது?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நாம் கடவுளர்க்குக் தூபம் காட்டும்போது இடும்  சாம்பிராணியும்[Frankincense ] மரத்தில் இருந்து வடிந்து காய்ந்த பாற்கட்டியே. ஐயாயிர வருடங்களுக்கு மேலாகச் சாம்பிராணியை மனிதர் பயன்படுத்துகின்றனர். சிலர் குங்கிலியமும் சாம்பிராணியும் ஒன்று என்று கருதுகின்றனர். வெவ்வேறு விதமான மரங்களில் இருந்தே இரண்டும் கிடைக்கின்றன. இவற்றிலிருந்து வெவ்வேறு அமிலங்கள் கிடைக்கின்றறன. குங்கிலியத்தில் Stearic acid [C18H36O2] இருக்கிறது. சாம்பிராணியில் Boswellic acid [C30H48O3]இருக்கிறது. அவை பலவைகையான நோய்களை நீக்கின்றன. 

Frankincense-Tree-Salalah-300x244.jpg

நம் முன்னோர் பெண்களின் கர்ப்பப்பைக் கட்டிகளையும் கர்ப்பப்பையில் ஏற்படும் புற்றுநோயையும் சாம்பிராணி நீக்குமென்பதை அறிந்திருந்தனர் என்பதற்கு நமது மருத்துவ வாகடங்களே சான்றாகும். ஆயிரக்கணக்கான வருடங்களாக நம்மவர்கள் முழுகியதும் தலைமயிருக்கு சாம்பிராணிப் புகை இட்டார்கள். சாம்பிராணியின் புகை மூளையில் கட்டி [Brain Tumour] உண்டாகாது தடுத்ததுடன் தலைமயிர் நரைக்காதும் காத்தது. மேலை நாட்டு மோகத்தில் நாம் அதைக் கைவிட்டு hairdryer போடுகிறோம்.

பண்டை நாளில் இருந்து இன்றுவரை உலகில் உள்ள எல்லாமதப் பூசைகளிலும் கோயில்களிலும் தூபமாக குங்குலியமும் சாம்பிராணியும் போடுகிறார்கள். அவை கலப்படம் இல்லாது இருக்கும்வரை அவற்றால் மனிதருக்கு நன்மையே கிடைக்கின்றன. இன்றைய உலகம் செய்துவரும் நகரமயமாக்கல் என்னும் நாகரீகத்தால் காடுகளை அழிக்கிறோம்.  உயர்ந்த கோபுரங்களோடு கோயில்களைக் கட்டி அழகு பார்க்கிறோம். கோயிலைப் புனிதமாக்கும் எண்ணத்தில் கண்ணுக்கு எட்டிய தூரம்வரை மரங்களை வெட்டி, புல் பூண்டுகளைச் செருக்கி பளிங்குக் கற்களைப் பதித்து நமது செல்வச் செழிப்பைப் பறை அடிக்கிறோம். ஆனால் கோயில்களில் தூபமாகப் போடும் சாம்பிராணி மரத்தையோ குங்குலிய மரத்தையோ எந்த சமயத்தைச் சேர்ந்தோராவது நட்டு வளர்க்கிறார்களா? இம்மரங்களை எந்தக் கோயிலின் அருகிலாவது பார்த்ததுண்டா?

ஒருமரத்திலிருந்து ஒருவருடத்திற்கு ஒரு கிலோ சாம்பிராணியோ ஒருகிலோ குங்குலியமோ பெறமுடியுமென்பதே மிகவும் வேதனையான விடையமாகும். அந்நாளில் இயற்கையாக மரப்பட்டையில் உண்டாகும் வெடிப்பில் இருந்து வடிந்த சாம்பிராணியைப் பெற்ற நாம் இப்போது மரத்தைக் கீறி சாம்பிராணி பெறுகிறோம். உலகம் 85% சாம்பிராணியை சோமாலியாவில் இருந்தே பெற்றுவந்தது. கடந்த பத்து ஆண்டுகளில் அங்கும் காடுகள் அழிக்கப்படுவதாலும் மரம் நடுவார் இன்மையாலும் சாம்பிராணி உற்பத்தி வீழ்ச்சி அடைகிறது. மேலே படத்தில் பாருங்கள் அந்த வெளியில் எத்தனை மரங்கள் நிற்கின்றன. அத்துடன் இம்மரங்கள் மிக மிக மெதுவாக வளர்வன. இன்றைய விஞ்ஞான உலகமும் சாம்பிராணியில் உள்ள இரசாயனப் பொருட்கள் புற்றுநோயை நீக்குவதைக் கண்டு கொண்டன.

சாம்பிராணி கிருமிகளைக் கொல்வதால் உணவு சமைக்கும் இடத்தில் சாம்பிராணிப்புகை இட்டனர். அப்புகை சமைத்த உணவுகள் கெட்டுப் போகாது காத்தது. உணவு சமைக்கும்  சமையலறை - அகடுக்களை, மடைப்பள்ளி எனவும் அழைக்கப்படும். இரண்டாயிர வருடங்களுக்கு முன்பே இலங்கையின் மாந்தையில் வாழ்ந்தோர் வீமன் எழுதிய மடைநூல் சொல்லியபடி சமையல் செய்ததை
“பனிவரை மார்பன்[வீமன்] பயந்த நுண்பொருள்
பனுவலின்[நூல்] வழாஅப்[வழுவாது] பல்வேறு அடிசில்[உணவு]” 
                                          - (சிறுபாணாற்றுப்படை: 240 - 241)
என்று சிறுபாணாற்றுப்படை கூறுகிறது. இவ்வரிகளுக்கு உரைஎழுதிய நச்சினார்க்கினியார் ‘பனிவரை மார்பன் பயந்த நுண் பொருள் பனுவலை’ - வீமன் எழுதிய மடைநூல் என்கிறார். எனவே மடையில் இட்ட சாம்பிராணியே மடைச் சாம்பிராணி.

பேச்சு வழக்கில் அது மடச்சாம்பிராணியாக மருவிவிட்டது. புத்தி குறைந்தோரைப் பார்த்து மடச்சாம்பிராணி என்று தமிழர் திட்டுவது உண்டல்லவா? ‘மடைச்சாம்பிராணிக்கு/மடச்சாம்பிராணிக்கு எங்கே போவது?’ என்று நம்மை நாமே கேட்கும் காலம் வெகுதூரத்தில் இல்லை. நம் நாட்டில் வளரக்கூடிய இனத்தைச் சேர்ந்த சாம்பிராணி, குங்கிலிய மரங்களை நாம் வளர்க்கலாம். இல்லையேல் மாமன்னன் அலெக்சாண்டரைப் போல் சாம்பிராணிக்காக நாடுகளைப் கைப்பற்ற வேண்டிய நிலை வரும். 

அலெக்சாண்டர் சிறுவனாக இருந்த பொழுது லியோனிடாஸ்[Lionidas] என்பவரிடம் கல்வி கற்றார். ஒரு நாள் அலெக்சாண்டர் கைநிறைய சாம்பிராணியை அள்ளி நெருப்பில் தூவுவதைக் கண்ட லியோனிடாஸ், “இப்படி நெருப்பில் இட்டு சாம்பிராணியை வீணாக்க  இது விளையும் நாடுகளைக் கைப்பற்ற வேண்டும்” என்று கண்டித்தார். அது நடந்து இருபது ஆண்டுகளின் பின் அலெக்சாண்டர் கி மு 332ல் காஷா[Gaza]வைக் கைப்பற்றினார். அப்போது தனது ஆசிரியருக்கு கப்பல் நிறைய சாம்பிராணியை அனுப்பிவைத்ததோடு ‘கஞ்சத்தனம் இல்லாது தாராளமாகச் சாம்பிராணியைப் பாவியுங்கள்’ எனத் துண்டெழுதி அனுப்பினான். அலெக்சாண்டரைப் போல் நாடுகளைக் கைப்பற்ற முடிந்தாலும் சாம்பிராணி மரங்களுக்கு எங்கே போவது? 
இனிதே, 
தமிழரசி.

https://inithal.blogspot.com/2016/09/blog-post_27.html

எமது இளமை பருவங்களில் நாம் செய்யும் குறும்புகளுக்காக வயதில் மூத்தவர்கள் குறிப்பாக அண்ணன் அக்காமார் எங்களை திட்ட வேண்டுமானால் மடச் சாம்பிராணி, சாக்கா, எருமை, குறுக்கால போவான், மொக்கன், இப்படி பல வார்த்தை பிரயோகங்கள் இருக்கும். அப்ப  ஒன்றும்  காதுக்குள் நுழையவில்லை, பொருளும் விளங்கவில்லை. நன்றாக திட்டுகிறார்கள் என்று மட்டும் தெரிந்தது. 

இப்ப பார்த்தால் ஒவொன்றுக்கும் பின்னால் ஒரு அர்த்தம் இருக்கும், சொல்லும் வார்த்தையின் செயல் அல்லது வடிவம் அல்லது குணம் .... இருக்கும், உதாரணம் எருமை: அசைய நேரமெடுக்கும். 

ஆனால் மடக் சம்பிராணியின் அர்த்தம் பொருந்தவில்லை. யாருக்கும் விளக்கம் தெரியுமா?

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று நானும் இணைத்து இருந்தேன்.இப்போ இதை எல்லாம் யாரு பார்கீனம் அசின் அகர்வால் என்று போட்டால் விழுந்து அடித்து பார்ப்பார்கள்.😀😆

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Ahasthiyan said:

எனக்கு அர்த்தம் தெரியாது ஏனென்றால் நான் ஒரு மடச் சாம்பிராணி.🤣

பிகு: எவ்வளவு நெருப்பு போட்டாலும் புகையும் ஆனால் எரியாது. எனவே விளக்கம் இல்லாதவர்களை இப்படி அழைப்பர்.

இதன் நேர் எதிர் பதம் “கற்பூரப் புத்தி” அல்லது “கற்பூரம்”.

2 hours ago, யாயினி said:

நேற்று நானும் இணைத்து இருந்தேன்.இப்போ இதை எல்லாம் யாரு பார்கீனம் அசின் அகர்வால் என்று போட்டால் விழுந்து அடித்து பார்ப்பார்கள்.😀😆

நானும் பார்த்தேன் தனி நிலை தகவலில் போட்டதால் பதில் போடாமல் விட்டு விட்டேன்.

  • கருத்துக்கள உறவுகள்

வீட்டைச் சுத்தம்செய்து சாம்பிராணிப் புகைபோட்டால், தலைக்குக் குளித்த குழந்தைக்குப் பிடித்தால்.... அம்மா வீடெல்லாம் ஒரே மணம், யாரும் வந்தால் பட்டிக்காடுகள் என்று பரிகசிக்கப்போகிறார்கள் என, இன்றைய எங்கள் தலைமுறைகள் துள்ளிக் குதிக்கினம். 😲

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

எனக்கு அர்த்தம் தெரியாது ஏனென்றால் நான் ஒரு மடச் சாம்பிராணி.🤣

பிகு: எவ்வளவு நெருப்பு போட்டாலும் புகையும் ஆனால் எரியாது. எனவே விளக்கம் இல்லாதவர்களை இப்படி அழைப்பர்.

இதன் நேர் எதிர் பதம் “கற்பூரப் புத்தி” அல்லது “கற்பூரம்”.

நானும் பார்த்தேன் தனி நிலை தகவலில் போட்டதால் பதில் போடாமல் விட்டு விட்டேன்.

எனக்கு வெளியில் பகிர்வதை விட தனி நிலைப் பகுதியில் பகிர்வதில் ஒரு வித சந்தோசம்.மற்றப்படிக்கு வேறு ஒன்றும் இல்லை.😀

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 19/12/2020 at 16:54, goshan_che said:

எனக்கு அர்த்தம் தெரியாது ஏனென்றால் நான் ஒரு மடச் சாம்பிராணி.🤣

பிகு: எவ்வளவு நெருப்பு போட்டாலும் புகையும் ஆனால் எரியாது. எனவே விளக்கம் இல்லாதவர்களை இப்படி அழைப்பர்.

இதன் நேர் எதிர் பதம் “கற்பூரப் புத்தி” அல்லது “கற்பூரம்”.

விளக்கத்திற்கு நன்றி கோசன்-சே

3 minutes ago, Ahasthiyan said:

விளக்கத்திற்கு நன்றி கோசன்-சே

நான் பச்சை புள்ளிகள் வழங்க முடியாது உள்ளது, எல்லோரும் மன்னிக்கவும். நிர்வாகத்திற்கு அறிவித்துள்ளேன்

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, Ahasthiyan said:

விளக்கத்திற்கு நன்றி கோசன்-சே

நான் பச்சை புள்ளிகள் வழங்க முடியாது உள்ளது, எல்லோரும் மன்னிக்கவும். நிர்வாகத்திற்கு அறிவித்துள்ளேன்

🤣 இந்த பச்சைபுள்ளிகளை நான் கனம் பண்ணுவதில்லை அகத்தியன். 

இதை பாங்கில் போட்டு மோட்கேஜா எடுக்க முடியும் 🤣

உங்கள் பதில் மட்டும் போதும்.

  • கருத்துக்கள உறவுகள்

Prized Omani frankincense trees under threat | Environment – Gulf News

இந்த மரம் ஓமானிலுமிருக்கு, இந்த மரத்திலிருந்து தயரிக்கபடும் வாசனை திரவியத்திற்கு உலகில் நல்ல கேள்வி, விலையும் கூட. 

அறிவியல் எவ்வளவுதான் வளர்ந்தாலும் எம் முன்னேர்களின் வாழ்கைக்கு முன் தூசி.

சிலருக்கு அறிவியல் ஆதரம் வேண்டும், சின்ன புள்ளையல்🤣

On 19/12/2020 at 21:41, Ahasthiyan said:

எமது இளமை பருவங்களில் நாம் செய்யும் குறும்புகளுக்காக வயதில் மூத்தவர்கள் குறிப்பாக அண்ணன் அக்காமார் எங்களை திட்ட வேண்டுமானால் மடச் சாம்பிராணி, சாக்கா, எருமை, குறுக்கால போவான், மொக்கன், இப்படி பல வார்த்தை பிரயோகங்கள் இருக்கும். அப்ப  ஒன்றும்  காதுக்குள் நுழையவில்லை, பொருளும் விளங்கவில்லை. நன்றாக திட்டுகிறார்கள் என்று மட்டும் தெரிந்தது. 

இப்ப பார்த்தால் ஒவொன்றுக்கும் பின்னால் ஒரு அர்த்தம் இருக்கும், சொல்லும் வார்த்தையின் செயல் அல்லது வடிவம் அல்லது குணம் .... இருக்கும், உதாரணம் எருமை: அசைய நேரமெடுக்கும். 

ஆனால் மடக் சம்பிராணியின் அர்த்தம் பொருந்தவில்லை. யாருக்கும் விளக்கம் தெரியுமா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.