Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நேரம் வியாழன் இரவு 11 ; ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறியது பிரிட்டன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நேரம் வியாழன் இரவு 11 ; ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறியது பிரிட்டன்

நான்கு வருடங்கள், 27 வாரங்கள் மற்றும் இரண்டு நாட்களுக்குப் பிறகு நாட்டைப் பிளவுபடுத்திய வாக்கெடுப்புக்குப் பின்னர் பிரிட்டன் வியாழக்கிழமை இரவு ஐரோப்பிய ஒன்றியத்தின் சுற்றுப் பாதையில் இருந்து வெளியேறியது.

spacer.png

இது பிரிட்டனை அரசியல் ரீதியாகப் பிரித்து, நவீன காலங்களில் உலக அரங்கில் நாட்டின் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளது.

பிரிட்டனின் வெளியேற்றமானது ஒரு சுயாதீனமான உலக சக்தியாக புதிய வாய்ப்புகளைத் தொடர நாட்டை விடுவிக்கும் என்று ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

எனினும் விமர்சகர்கள் இது அதன் நெருங்கிய அண்டை நாடுகளுடனான பல தசாப்த கால ஒருங்கிணைப்பை மாற்றியமைக்கிறது மற்றும் பிரிட்டனை உடைப்பதற்கும், நாட்டின் பொருளாதாரத்திற்கு தீங்கு விளைவிப்பதற்கும் அதன் சர்வதேச நிலையை குறைப்பதற்கும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளதாகவும் கூறிகின்றனர்.

இந் நிலையில் பிரிட்டன் பிரதமர், இது இந்த நாட்டிற்கு ஒரு அற்புதமான தருணம் என புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்ததுடன்,எங்கள் கைகளில் எங்கள் சுதந்திரம் உள்ளது, நாம் அதைப் பயன்படுத்த வேண்டியது அவசியம் என்றும் கூறியுள்ளார்.

சர்ச்சைக்குரிய 2016 ஜூன் மாத வாக்கெடுப்பில் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவதற்கு ஆதரவாக பெரும்பான்மையான பிரிட்டன்கள் வாக்களித்த நான்கு ஆண்டுகளுக்கு பின்னர் நேற்று வியாழக்கிழமை இரவு 11 மணியளவில் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது.

spacer.png

2016 இல் நடைபெற்ற வாக்கெடுப்பு பிரிட்டனின் ஒரு அரசியல் நெருக்கடியை கட்டவிழ்த்துவிட்டது. 

குறிப்பாக பிரதமர் போரிஸ் ஜோன்சனின் இரு  முன்னோடிகளான தெரசா மே மற்றும் டேவிட் கேமரூன் ஆகியோரின் அரசியல் வாழ்க்கையை திறம்பட முடிவுக்குக் கொண்டுவந்தது.

எவ்வாறெனினும் லண்டனுக்கும் பிரஸ்ஸல்ஸுக்கும் இடையிலான உறவு இப்போது அவர்களின் சமீபத்திய வர்த்தக மற்றும் ஒத்துழைப்பு ஒப்பந்தத்தின் விதிமுறைகளின் கீழ் மீட்டமைக்கப்படும்.

இது எரிசக்தி, போக்குவரத்து மற்றும் பொலிஸ் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களில் பிற ஒப்பந்தங்களுடன் சூழப்பட்ட ஒரு குறுகிய சுதந்திர வர்த்தக ஒப்பந்தமாகும்.

ஜனவரி மாதம் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இங்கிலாந்தின் முறையான விலகலுக்குப் பின்னர் தொடங்கிய "இடைக்கால காலம்" என்று அழைக்கப்படும் பல மாதங்கள் பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து இந்த ஒப்பந்தம் ஒரு வாரத்திற்கு முன்பு உடன்பாட்டுக்கு வந்தது.

இந்த ஒப்பந்தம் ஒரு குழப்பமான பிளவுக்கான வாய்ப்பைத் தவிர்க்கிறது மற்றும் சுங்கவரி அல்லது ஒதுக்கீடுகள் இல்லாமல் பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இடையில் பொருட்களை தொடர்ந்து பரிமாற்றம் செய்ய முடியும் என்பதை உறுதிசெய்கிறது.

அத்துடன் ஒரு வருடத்திற்கு நூற்றுக்கணக்கான பில்லியன் பவுண்டுகள் மற்றும் யூரோக்கள் மதிப்புள்ள வர்த்தகத்தை மென்மையாக்குகிறது.

ஆனால் பிரஸ்ஸல்ஸின் சுற்றுப்பாதையில் இருந்து பிரிட்டன் வெளியேறியுள்ளமை புதிய விதிமுறைகள் மற்றும் வணிகத்திற்கான சிவப்பு எச்சரிக்கையாகவும் அமைந்துள்ளது.

குறிப்பாக புதிய விசா விதிமுறைகள் நடைமுறைக்கு வரும் நிலையில், பிரிட்டன் மற்றும் ஐரோப்பியர்கள் எவ்வாறு வாழ்கிறார்கள், நாட்டிற்கும் கண்டத்திற்கும் இடையில் வேலை மற்றும் பயணம் உள்ளிட்ட விடயங்களில் மாற்றம் ஏற்படும்.

https://www.virakesari.lk/article/97653

  • Replies 102
  • Views 9.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, கிருபன் said:

பிரிட்டன் வியாழக்கிழமை இரவு ஐரோப்பிய ஒன்றியத்தின் சுற்றுப் பாதையில் இருந்து வெளியேறியது.

கிரேட் பிரிட்டன் விலகிய போது.......🤣

Comedy GIF - Find on GIFER

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

கிரேட் பிரிட்டன் விலகிய போது.......🤣

Comedy GIF - Find on GIFER

எனக்கு இங்கிருந்து ஆங்கிலத்தை மோய்ப்பம் பிடித்தபடி அங்கு புலம்பெயர்ந்தவர்களை நினைச்சாலே??

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, விசுகு said:

எனக்கு இங்கிருந்து ஆங்கிலத்தை மோய்ப்பம் பிடித்தபடி அங்கு புலம்பெயர்ந்தவர்களை நினைச்சாலே??

இஞ்சை ஒழுங்கான தொழில் பிள்ளைகளின்ரை வாழ்க்கையை தொலைத்துவிட்டு வெறும் ஆங்கில மோகத்துக்கு போய் அல்லல் படுறதை யோசிக்கத்தான்...

  • கருத்துக்கள உறவுகள்

இதற்கும் பிரெக்சிற்றுக்கும் அதிக சம்பந்தம் இல்லாவிடிலும் இந்தியாவை தாண்டி யூகே இந்த மாதம் மீண்டும் உலகின் 5 வது பெரிய பொருளாதாரமாக வந்துள்ளது.

பிரெக்சிற்றில் எனக்கு உடன்பாடில்லை. ஆனால் ஜனநாயக வாக்கு அதுதான்.

இதில் பொருளாதார அனுகூலங்களும் உள்ளன, அவற்றை சரியாக பயன்படுத்தினால் ஒரு புதிய வளர்சி பாதையில் பயணிக்க முடியும்.

கொவிட்டை கட்டுபடுத்தினால் பொருளாதாரம் 2021 இல் 6% வளர கூடும் என்கிறார்கள்.

ஜேர்மன், பிரான்சில் இருந்து வந்தவர்கள் இப்போதும் திரும்பி போகலாம். போகமாட்டார்கள். ஆங்கில மோகம் எம்மவர்கு ஒரு காரணம் என்றாலும் அதையும் தாங்கி இங்கே ஒரு மேஜிக் இருக்கிறது.

அது என்ன மேஜிக் என்றால் - 5 ரூபாயை போட்டும் ஒருவன் மிக விரைவாக 5 கோடியை எடுக்கலாம். 

இது எல்லா நாட்டிலும் உண்டு, ஆனால் அமெரிக்கா, பிரிட்டன் இந்த இரு நாடுகளிலும் விரைவான தனி மனித பொருளாதார வளர்சிக்கு வாய்பிருப்பதாக மக்கள் கருதுகிறாகள்.

American Dream என்பதும் London’s roads are paved with gold என்பதும் இதைத்தான்.

இது உண்மையா, அல்லது மாயையா நான் அறியேன். 

ஆனால் ஏனைய நாடுகளை ஐரோப்பிய நாடுகளை விட ஒரு கவர்ச்சி யூகேயுக்கு உண்டு என்பது மறுக்கவியலாதது.

பல உயிராபத்துக்களை தாண்டி சின்ன இறப்பர் வள்ளங்களில் குடும்பமாக பிரான்சில் இருந்து தினமும் நூறு அளவில் வரும் புகலிடகோரிகளும், இங்கே இருந்து ஈயூ போனவர்களை விட பலமடங்கு இங்கே வந்த சட்டபூர்வ குடியேறிகளுமே இதற்கு சான்று.

பிரெட்சிற் முன்பாக இங்கே நிரந்த வதிவுரிமை பெற்ற ஈயூ நாட்டவரின் எண்ணிக்கை 6 மில்லியன் என நினைக்கிறேன்.

எதோ ஒரு மேஜிக் இருக்கிறது.

https://www.dailymail.co.uk/news/article-9088577/Britain-worlds-fifth-largest-economy-overtaking-India-despite-coronavirus-recession.html

1 hour ago, குமாரசாமி said:

இஞ்சை ஒழுங்கான தொழில் பிள்ளைகளின்ரை வாழ்க்கையை தொலைத்துவிட்டு வெறும் ஆங்கில மோகத்துக்கு போய் அல்லல் படுறதை யோசிக்கத்தான்...

2 hours ago, விசுகு said:

எனக்கு இங்கிருந்து ஆங்கிலத்தை மோய்ப்பம் பிடித்தபடி அங்கு புலம்பெயர்ந்தவர்களை நினைச்சாலே??

  • கருத்துக்கள உறவுகள்

பிரெக்சிற் ஈயூவிற்கும் ஒரு அபாயச் சங்குதான்.

பிரிட்டன் வெளியே நல்லாக வாழ்ந்தால், அடுத்து டென்மார்க்கிலும் ஹங்கேரியிலும் கலக குரல்கள் தோன்ற கூடும்.

அதே போல் இனவாதம் பெருகி பிரான்சில் மடேம் லெபென் ஜனாதிபதியானால் பிரான்ஸ் களரவும் கூடும்.

பிரான்சில் இன்னும் எத்தனை முறை லெபென்னை வீழ்த்த, வலதும், இடதும் ஒன்றாக வருவது பயனளிக்கும் என்பது தெரியவில்லை.

அதே போல் யூகே, ஸ்கொட்லாந்தில் இன்னொரு பிரிவினை வாக்கெடுப்பு பாதமாக அமையாது இருக்க பிரயத்தனபட வேண்டி இருக்கும்.

ஆனால் வட அயர்லாந்து, ஜிப்ரால்டர் விடயங்களில் ஈயூ, யூகே காட்டிய அணுகுமுறை, வாழு, வாழ விடு என்பதே எதிர்காலம் என்பதை காட்டி நிற்கிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
46 minutes ago, goshan_che said:

ஏனைய நாடுகளை ஐரோப்பிய நாடுகளை விட ஒரு கவர்ச்சி யூகேயுக்கு உண்டு என்பது மறுக்கவியலாதது.

உண்மைதான் ஏதோ ஒரு கவர்ச்சி மற்ற நாடுகளை விட  இங்கிலாந்திற்கு உண்டு.என்ன வசியமோ தெரியாது.

நம்ம பிரச்சனைக்கு வருவம்...😁
ஊரிலை எல்லாம்  லண்டன் ஆக்கள் எண்டால் கொஞ்சம் மதிப்பு கூட.....லண்டன் மாப்பிளையளுக்கு சீதனமும் எக்கச்சக்கம்...என்ன வேலை எண்டாலும் நோ ப்ரொப்பளம்😠
ஜெர்மன் ஆக்கள் எண்டால் கிட்டத்தட்ட தட்டிவான் லெவல்🤣
 
  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, குமாரசாமி said:

இங்கு சீதனம்  வாங்கினவன் என்றால் மதிப்பு கிடையாது சாமி .

சீதனம்  வாங்கினவனை வலசு  என்பாங்கள் .

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, குமாரசாமி said:

ஜெர்மன் ஆக்கள் எண்டால் கிட்டத்தட்ட தட்டிவான் லெவல்🤣

அதென்றால் உண்மை தான் அண்ணா. ஆனால் எனக்கு தெரிந்து கிட்டத்தட்ட 40 வருடங்களுக்கு மேலாக ஏதாவது உதவி அல்லது குடும்ப தேவைக்கு என்று உதவி கேட்டால் இன்றைக்கும் நாங்க சோசலில் இருக்கிறம் என்று இன்றும் அறம் கொட்டுவதும் ஒரு காரணமாக இருக்கலாமா??😂

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

உண்மைதான் ஏதோ ஒரு கவர்ச்சி மற்ற நாடுகளை விட  இங்கிலாந்திற்கு உண்டு.என்ன வசியமோ தெரியாது.

நம்ம பிரச்சனைக்கு வருவம்...😁
ஊரிலை எல்லாம்  லண்டன் ஆக்கள் எண்டால் கொஞ்சம் மதிப்பு கூட.....லண்டன் மாப்பிளையளுக்கு சீதனமும் எக்கச்சக்கம்...என்ன வேலை எண்டாலும் நோ ப்ரொப்பளம்😠
ஜெர்மன் ஆக்கள் எண்டால் கிட்டத்தட்ட தட்டிவான் லெவல்🤣
 
நீங்கள் சொல்வது சரிதான். ஆனால் இந்த வேற்றுமைக்கு காரணம் பலது என நான் நினைக்கிறேன்.

1. ஆங்கில மோகம்

2. அங்கே இருப்பவர்கள் - ஆங்கிலம் மூலம் படித்து ஒரு தகமையை வைத்து இருப்பார்கள், ஆகவே இங்கே வந்து அவர்களுக்கு அதை தொடருவது இலகு. கூட்டி வருபவர் மேலே போக கூடிய வேலையில் இல்லாவிடிலும் வருபவர் போக வாய்ப்பு கூட.

3. மற்றைய நாடுகளில் முதல் பரம்பரை குடியேறிகள் வந்து பெரிய தொழில்களில் இருந்ததாய் பெரிதாக தெரியவில்லை. ஆனால் இங்கே 5,10 வருடங்கள் முன் வந்தவர்கள் கூட, டாக்டர், சொலிசிட்டர், அக்கவுண்டன் என்று ஒரு நிலைக்கு வந்துள்ளார்கள்.

4. அதே போல் முதல் பரம்பரை குடியேறிகளில் சொந்தமாக தொழில் தொடங்கியவர்கள் ஒப்பீட்டளவில் லண்டனில் மிக அதிகம் என நினைக்கிறேன். ஈழத் தமிழ் மில்லியனர்கள் என பார்த்தால் இங்கேதான் ஐரோப்பாவில் ஏன் உலகிலேயே பலர். கனடா சில சமயம் கூடவோ தெரியாது. லைக்கா உட்பட பலர் இங்கே வந்துதான் சோபிக்க முடிந்தது.

5. லண்டன் காரரின் படம் 🤣. இங்கே எமது ஆக்கள் மத்தியில் நுகர்வு கலாச்சாரம் அதிகம். லண்டனில் இருப்பதை போல் அடிக்கடி ரெஸ்டூரண்ட் போய் செலவழிப்பவர்களை (தமிழர்) நான் யூரோப், அவுஸ், கனடாவில் காணவில்லை. இதையே ஊரிலும் போய் செய்வது கண்கூடு. விசுகு அண்ணர் சொன்னது போல் மற்றையவர்கள் கணக்கு பாக்கும் இடத்தில் சுவிஸ், யூகேகாரர் விலாசம் காட்டுகிறார்கள். ஆகவே லண்டன் தெருக்கள் தங்க முலாமிட்டன என்ற கருத்து ஊன்ற படுகிறது.

இவ்வாறான பல காரணங்கள் என்பதே நான் நினைப்பது.

1 hour ago, பெருமாள் said:

இங்கு சீதனம்  வாங்கினவன் என்றால் மதிப்பு கிடையாது சாமி .

சீதனம்  வாங்கினவனை வலசு  என்பாங்கள் .

ஆர் யு சுவர்? வாங்காத நாங்கள்தான் விடுபேயர் எண்டு ஒரு சாரார் சொல்வதாக கேள்வி🤣.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கு ஐரோப்பியர்  தொழில் வாய்ப்புக்க்காக  யூ.கே வர முடியுமா இனிமேல்?

தமிழர் ஏனையை ஐரோப்பிய நாடுகளில் இருந்து இலகுவாக யூ.கேக்கு  இடம்பெயர்ந்து பிள்ளைகளை படிப்பிக்க முடியுமா?

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, goshan_che said:

ஆர் யு சுவர்? வாங்காத நாங்கள்தான் விடுபேயர் எண்டு ஒரு சாரார் சொல்வதாக கேள்வி

நெஞ்சை நிமித்தி பார்ட்டிகளில் நில்லுங்க நான் அருகில் இருப்பேன் .😁

3 minutes ago, nunavilan said:

கிழக்கு ஐரோப்பியர்  தொழில் வாய்ப்புக்க்காக  யூ.கே வர முடியுமா இனிமேல்?

தமிழர் ஏனையை ஐரோப்பிய நாடுகளில் இருந்து இலகுவாக யூ.கேக்கு  இடம்பெயர்ந்து பிள்ளைகளை படிப்பிக்க முடியுமா?

அதிக வாடகைக்கு ஆசைப்பட்டு ரோமானியர்களுக்கு  வீடு கொடுத்த நண்பர் அழுகிறார் வீட்டில் உள்ள கார்பெர்ட் கூட கழட்டி எடுத்துக்கொண்டு ஓடிவிட்டார்களாம் நல்லகாலம் ஏஜென்ட் மூலம் போனபடியால்  தப்பினார் .

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, nunavilan said:

கிழக்கு ஐரோப்பியர்  தொழில் வாய்ப்புக்க்காக  யூ.கே வர முடியுமா இனிமேல்?

தமிழர் ஏனையை ஐரோப்பிய நாடுகளில் இருந்து இலகுவாக யூ.கேக்கு  இடம்பெயர்ந்து பிள்ளைகளை படிப்பிக்க முடியுமா?

இரெண்டுக்கும் ஆன பதில், உலகின் ஏனையோரை (இலங்கையர்) போல அதே விதிமுறைகளை பின்பற்றி மட்டும் வரலாம்.

முன்னர் இருந்தது போல் freedom of movement within EU வை பயன்படுத்தி ஒரு உரிமையாக எடுத்து வர முடியாது.

6 minutes ago, பெருமாள் said:

நெஞ்சை நிமித்தி பார்ட்டிகளில் நில்லுங்க நான் அருகில் இருப்பேன் .😁

நம்ம கிட்ட முகத்துக்கு நேர சொன்னா லெக்சர் எடுத்து சாவடிச்சிடமாட்டம் 🤪. எல்லாம் புறணிதான்.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி கோசான் & பெருமாள்.

Quote

இங்கு சீதனம்  வாங்கினவன் என்றால் மதிப்பு கிடையாது சாமி .

சீதனம்  வாங்கினவனை வலசு  என்பாங்கள் .

இது நம்ப கொஞ்சம் கஸ்டமாக இருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, nunavilan said:

நன்றி கோசான் & பெருமாள்.

இது நம்ப கொஞ்சம் கஸ்டமாக இருக்கு.

நான் நினைக்கிறேன் நீங்கள்  90 க்கு முதல் வந்த ஆள் ஆக இருக்கனும் .

😃

  • கருத்துக்கள உறவுகள்
Just now, பெருமாள் said:

நான் நினைக்கிறேன் நீங்கள்  90 க்கு முதல் வந்த ஆள் ஆக இருக்கனும் .

😃

அப்படி வேறு நாடுகளில் இல்லை. எப்படி லண்டனில் மட்டும் என யோசிக்கிறேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
25 minutes ago, goshan_che said:

சுவிஸ்

சுவிஸ் வேறை லெவல். நாங்கள் கிட்டவும் நிக்கேலாது. கலியாணவீட்டு மொய் கூட ஆயிரம் இரண்டாயிர லெவல்.... 😎

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, nunavilan said:

அப்படி வேறு நாடுகளில் இல்லை. எப்படி லண்டனில் மட்டும் என யோசிக்கிறேன்.

ஆமா  மாற்று உடுப்பே இல்லாமல் வந்து வந்த கடன் உடன் அடைத்து  கடை இரண்டு வீடு என்று  போனவர்கள் ஏராளம் சீதனம்  எதிர்பார்ப்பதில்லை ஆனல் மேட்டுக்குடி என்கிற கூட்டம் மட்டும் மாறவில்லை .😃 

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

சுவிஸ் வேறை லெவல். நாங்கள் கிட்டவும் நிக்கேலாது. கலியாணவீட்டு மொய் கூட ஆயிரம் இரண்டாயிர லெவல்.... 😎

🤣 உண்மைதான். இதற்கான காரணத்தையும், வரி, basic universal income பற்றிய திரியில் மருதர் எழுதி இருந்தார்.

அவர்கள் நடமாடும் நகைமாடங்கள்.

ஆனால் உபசரிப்புக்கு அவர்களை அடிக்க ஆள் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, goshan_che said:

ஆனால் உபசரிப்புக்கு அவர்களை அடிக்க ஆள் இல்லை.

உண்மைதான் பாஸ் .

12 minutes ago, குமாரசாமி said:

சுவிஸ் வேறை லெவல். நாங்கள் கிட்டவும் நிக்கேலாது. கலியாணவீட்டு மொய் கூட ஆயிரம் இரண்டாயிர லெவல்.... 😎

என்னவெண்டாலும்  அந்த நாட்டில் வாழும் மக்கள் தமிழ்க்கடை என்றால் சூரிசில்  உள்ள நா .... கடை க்கு போனால்த்தான் அவர்களால் தமிழ் சாமான் வாங்க முடியும் என்று சொல்வதை ஏற்க முடிவதில்லை . சாமி உங்களுக்கு விள ங்குதா ஏதாவது ?

Edited by பெருமாள்
எழுத்து பிழை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
55 minutes ago, பெருமாள் said:

உண்மைதான் பாஸ் .

என்னவெண்டாலும்  அந்த நாட்டில் வாழும் மக்கள் தமிழ்க்கடை என்றால் சூரிசில்  உள்ள நா .... கடை க்கு போனால்த்தான் அவர்களால் தமிழ் சாமான் வாங்க முடியும் என்று சொல்வதை ஏற்க முடிவதில்லை . சாமி உங்களுக்கு விள ங்குதா ஏதாவது ?

அதுக்கு வேறை திரி திறக்க வேணும். படங்கள் வீடியோக்கள் போட வேணும்.அதுக்கு இந்த திரி சரிப்பட்டு வராது.😁

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, குமாரசாமி said:

அதுக்கு வேறை திரி திறக்க வேணும். படங்கள் வீடியோக்கள் போட வேணும்.அதுக்கு இந்த திரி சரிப்பட்டு வராது.😁

நானும் போய்  நின்று பார்த்தேன் புரியாத மர்மம் ஆக உள்ளது .

பக்கத்தில் பாதி  விலை உள்ள கடைகள் இருந்தும் ஏன் என்ற மர்மம் தெரியவில்லை .

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு கிழமைக்கு ஒருக்கா டொச்லாண்டு  ஷொப்பிங் என்று உங்கடை நாட்டுக்குள் ஓடிப்போவினம் காரணம் கேட்டால் ஜெர்மன் குரோசரி  எப்பவும் மலிவு என்கினம் கேன்  சுகர் என்று கொட்டை  எழுத்தில் போட்டுவிட்டு சின்ன எழுத்தில் கிழங்கு சீனியும் கலந்து இருக்கு என்று போடுகினம் டொச்சில் வருத்தம் வருமா வராதா ?

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, குமாரசாமி said:

சுவிஸ் வேறை லெவல். நாங்கள் கிட்டவும் நிக்கேலாது. கலியாணவீட்டு மொய் கூட ஆயிரம் இரண்டாயிர லெவல்.... 😎

உண்மையில் சுவிசில் கொடுப்பது மாதிரி கொடுத்து பறிப்பது தான் நடக்கும். ஆனால் யேர்மனியில் எனக்கு தெரிந்து எனது உறவுகளின் அடுத்த தலைமுறையினர் மாதம் 5ஆயிரத்திலிருந்து 8ஆயிரம் யூரோ க்கள் சம்பளம் எடுக்கிறார்கள். இது சுவிசில் பின்னால் உள்ள செலவுடன் ஒப்பிடும்போது??? ஆனால் அந்த அடுத்த தலைமுறையும் போட்டது தான் வந்த மாதிரி?😂

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, goshan_che said:

பிரெக்சிற் ஈயூவிற்கும் ஒரு அபாயச் சங்குதான்.

விவாகரத்து என்றாலே இருபகுதிக்கும் இழப்பு தானே??

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.