Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

களத்தை நோக்கி...

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அறிவுறுத்தல்

மதம்சார் பிரச்சார வடிவிலான எந்தப்பதிவுகளையும் யாழ் கருத்துக்களத்தில் இணைக்கவேண்டாம். விவாதங்களுக்கான களம் இது என்பதைக் கருத்தில்கொண்டு - விவாதத்தளத்துக்குள் மதங்களைக் கொண்டு செல்லும் விதமாக பதிவுகளை இடுவதை நாம் வரவேற்கிறோம். ஆனால், வெறுமனே எந்தவொரு மதம்சார்ந்த பிரச்சாரப் பதிவுகளையும் யாழ் கருத்துக்களத்தில் இணைப்பது தவிர்க்கப்படவேண்டும். இனி மதம்சார்ந்து இணைக்கும் பரப்புரை வடிவிலான பதிவுகள் அனைத்தும் நிர்வாகம் பகுதிக்கு நகர்த்தப்படும் என்பதை அறியத்தருகிறோம்.

* மதம்சார்ந்த பதிவுகள் தொடர்பாக முடிவெடுப்பதற்கு நீண்ட காலம் எடுத்தமைக்கு வருந்துகிறோம்.

மேலே உள்ளது இன்றைய யாழ் கள நிர்வாக அறிவிப்பு..!

வரவேற்கலாம்..! ஆனால் அதற்கு முதல் ஒன்றைச் சுட்டிக்காட்டனும்.. விவாதப் பொருளாக அன்றி வரும் பெரியார் புகழ்பாடல்.. பகுத்தறிவு என்று 1950-80 காலப் பழமைகளைக் கொட்டுத்தல் மற்றும் மத எதிர்ப்பு பிரச்சாரங்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்..!

உலகம் 2050 நோக்கி திட்டமிடல்களை 2007 இல் நின்று தீர்மானிக்க முயலும் போது பெண்களுக்கு விடுதலை.. ஆண்களுக்கு ஆப்பு என்று சமூக மாற்றங்களை சரிவர உள்வாங்காமல் இங்கு விதைக்கப்படும் பழமைவாதப் பிரச்சாரங்களுக்கும் இடமளிக்கக்கூடாது.

பெரியாரிசும்.. மத எதிர்ப்பு பிரச்சாரங்களால் தமிழர்கள் 2050 ஆண்டு உலக வளர்ச்சியில் அளிக்கப் போகும் பங்களிப்பு என்ன..??! மதம் சார் பிரச்சாரங்களை தடுக்கும் உரிமையைப் பாவிக்கும் போது இவற்றிற்கு எதிராகவும் அந்த உரிமை நிலைநிறுத்தப்படனும்.

நவீன உலகியலில் சமூக மாற்றங்களின் தன்மைகளை உள்வாங்கி எதிர்கால சமூக மாற்றங்கள் மற்றும் உலகியல் தேவைகள் நோக்கி அவற்றைப் பூர்த்தி செய்யக் கூடிய சிந்தனைகள் ஊக்கிவிக்கப்படுவதுடன்.. திராவிடவாதங்களை விடுத்து சர்வதேச அளவில் தமிழர்களின் அரசியல் மற்றும் சமூக இருப்பை நிலைநிறுத்தக் கூடிய தமிழ் தேசியமும் தமிழர் அடையாளத் தேடலும்.. பூர்வீகச் சான்றுகள் தேடலும் ஊக்கிவிக்கப்படும் வகையில் விவாதங்கள் அமைவது சிறப்பு.

சமகால சமூகப்பிரச்சனைகள் தாக்கங்கள் குறித்துப் பேசுவதும் கலந்துரையாடுவதும் அவசியம்.

மதப்பிரச்சாரங்களை தடுக்கும் போது மத எதிர்ப்புப் பிரச்சாரங்களை பகுத்தறிவுப் போதிப்பு என்பதன் கீழ் இங்கு நிலைநிறுத்துவதையும் அனுமதிக்க கூடாது.

தமிழர் சமூகத்துக்கு தற்காலத்தில் தேவையான பகுத்தறிவு என்பது அறிவியல் சார்ந்திருக்க வேண்டுமே தவிர வெறும் அரசியல் முழக்கங்கள் கருதி எழுந்த வெற்றுப் பிரச்சாரங்கள் அவசியமில்லை. சாதி எதிர்ப்பு என்பதை பிரச்சார வடிவில் மட்டும் கொண்டிருக்காமல்... சாதி இல்லை என்பதை நிறுவ அரசுகளின் செயற்திட்டங்கள் உட்பட சாதி சார் அரசியல் கட்சிகளின் இருப்புவரை அகற்றக் கூடிய கருத்துப் பகிர்வுகளும் சமூக அறிவூட்டலும் அவசியம்.

மேற்குலக அரசியல் அரங்குகளில் விவாத அரங்குகளில் அரசியல் விஞ்ஞானமும் அறிவியல் விஞ்ஞானமும் சமூக விஞ்ஞானமும் செய்யும் தாக்கத்தை இங்கு காணக்கிடைக்கவில்லை. சோவியத்கால கருத்தியலை இன்றைய காலத்துக்கு பிரச்சார வடிவமாக மேற்கொள்ளுதல் அவசியமில்லை. அதை விவாத விடயமாக ஆக்குவதால் எந்தப் பயனும் இல்லை..! நவீன உலகியல் ஒழுங்கோடு சமூக அறிவு ஊட்டப்படுதலே அவசியம். பகுத்தறிவுள்ள விலங்கான மனிதனுக்கு பகுத்தறிவூட்டுவதாக சொல்லி வைக்கப்படும் கருத்துக்கள் தமிழர்களைக் காட்டுமிராண்டி ஆக்கிக் காட்டுகிறது சர்வதேச அரங்கில். இவை அவசியமில்லை.. என்பதைக் கள நிர்வாகமும் புரிஞ்சுக்க வேண்டும்.

நவீன உலகியல் ஒழுங்கில் பெண்விடுதலை பொட்டுக்கு விடுதலை தாலிக்கு விடுதலை என்பதல்ல அவசியம். பெண்கள் முன்னேறத்தயங்கும் துறைகள் எவை.. பெண்களின் பொருளாதாராம மேம்பாட்டுக்கு வழியென்ன.. சிறந்த சந்ததி உருவாக்கத்துக்கான வழிகாட்டல்கள் என்ன.. பெண்களுக்கு அவசியமான ஆய்வுகளைப் பெண்களே செய்யத் தூண்டுதல்.. 2050 இல் பெண்களின் உலகியல் தேவை என்ன.. பெண்களின் அரசியல் ஆதிக்கம் என்ன.. ஆண் பெண் ஒத்துழைப்பின் முக்கியத்துவம் என்ன.. குடும்பம் என்ற அலகின் தேவை என்ன.. அதன் நவீன வடிவம் 2050 இற்கு ஏற்ப எப்படி இருக்கனும் என்று பலவற்றை நோக்கிச் சிந்திக்க வேண்டிய நேரத்தில். அறிவுக்கும் வளர்ச்சிக்கும் சம்பந்தமே இல்லாத தாலி பொட்டு விடுதலை என்று போலி வாதங்களை முன்வைப்பதால் என்ன பயன்.

பெண்கள் ஆண்கள் என்று அவர்களின் சமூகப்பாதுகாப்புக்கான ஒருங்கிணைந்த வழிமுறைகள்.. மன ஒருமைப்பாடுகள்.. மனித சகோதரத்துவத்தின் தன்மை.. மனித நேயம்.. மனித உரிமைகள்..ஒடுக்குமுறைகள்.. அரச பயங்கரவாதங்கள்.. சர்வதேச பயங்கரவாதம் அதற்கு எதிரான யுத்தம்.. அதன் முடிவில் உலகில் பாதுகாப்பின் தீர்மானம்.. என்று பல களங்களில் ஆண்களும் பெண்களும் சிந்திக்க வேண்டிய நேரத்தில்..

தாலி பொட்டு.. தேவையா சார் சிந்தியுங்க.

தமிழர்கள் தங்கள் புராதணத்தைக் காட்ட அகழ்வாராட்சிகளிலும்.. பாரம்பரியக் காப்பிலும் ஈடுபட வேண்டிய நேரத்தில்.. கலாசார மாற்றம் முற்போக்கு என்ற ரீதியில் தமிழர்களின் பாரம்பரிய அடையாளங்கள் கூட தமிழர்களால் இனங்காண முடியாதபடி அழிக்கப்படும் போது எப்படி சார் நீங்கள் தமிழ் தேசிய தளத்தில் உங்களை இயக்கிக் கொண்டிருப்பதாக மார்தட்டிக் கொள்ள முடிகிறது..!

சிந்தியுங்கள்.. செயற்படுங்கள்..!

நல்ல முற்போக்கான கருத்துக்கள். வாழ்த்துக்கள் நெடுக்காலபோவான்

  • கருத்துக்கள உறவுகள்

வெறுமனே மதரீதியான ஆக்கங்கள் தவிர்க்க வேண்டும் என்ற கருத்துக்களில் எனக்கும் உடன்பாடு உண்டு. அந்த ஆக்கங்கள் எனக்குக் கூடப் புரியவதில்லை.அதைப் படிக்கின்ற மனநிலை கூட இல்லை.

ஆனால் இங்கே மதரீதியான வாதங்கள் ஏன் வந்தது என்றால், பகுத்தறிவு என்ற பெயரில் மத நிந்தனை செய்யப்பட்டமையால் தான்.

எனவே அந்தக் குப்பைகள் தவிர்க்கப்பட்டால் இது பற்றிய பிரச்சனை எழாது என்றே நினைக்கின்றேன். உப்புச்சப்பில்லாத ராமசாமிப் புகழ் பாடிப் பொழுது போக்குவதையும் நிர்வாகம் தடை செய்ய வேண்டும்.

இந்த பெரியார் புகழ் பாடிகளால் எமது தேசிய விடுதலைக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் பற்றி தனியாக ஒரு கட்டுரை சீக்கிரமே நீங்கள் எதிபார்க்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த பெரியார் புகழ் பாடிகளால் எமது தேசிய விடுதலைக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் பற்றி தனியாக ஒரு கட்டுரை சீக்கிரமே நீங்கள் எதிபார்க்கலாம்.

நல்லது வெற்றி. உங்களின் முயற்சிக்கு எம் வாழ்த்துக்கள்.

தமிழர் தேசியம் என்பது பிறரால் தலமை தாங்கப்படுவதால் ஏற்படுகின்ற பிரச்சனையையோ, அல்லது அது பற்றிக் பிறர் தலமை ஏற்று நடத்தப்படுவதால் ஏற்படுகின்ற பிரச்சனைகள் பற்றியோ பலர் சிந்திப்பதில்லை. ரஜனி தமிழ்நாட்டினுள் புகுந்து தமிழ் மக்கள் மனங்களில் நல்லவன் போலக் காட்டிக் கொண்டு நடித்ததாலும், தமிழ் மக்கள் மீது எவ்வளவு வெறுப்புக் கொண்டுள்ளவர் என்பதை எழுதுகின்றவர்கள் மற்றவர்கள் தமிழினின் தலையில் சாணி மீதிக்கும்போது அது பற்றிக் கவலைப்படுவதில்லை.

தமிழ்நாட்டில் ரஜனியின் தொண்டர்கள் எப்படி தமிழருக்கு ரஜனி உதவுகின்றார் என்றும், தலைவன் என்றும் நம்புகின்றார்களோ, அது போன்று தான் ராமசாமியின் தொண்டர்களின் நினைப்புமாகும்.

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் ஒரு விவாதக்களம்.. வெறும் பிரச்சாரக் களம் அல்ல. பகுத்தறிவுப் பிரச்சாரமோ அல்லது சமயப் பிரச்சாரமோ இங்கு செய்யவேண்டியதில்லை. எனினும் அவற்றைப் பற்றி நாகரீகமாக விவாதிக்கமுடியும் என்றே நம்புகின்றேன்..

எனவே சக்கையான பிரச்சாரங்களை விட்டுவிட்டு சூடான விவாதங்களை ஆரம்பிப்போம்!

இந்த பெரியார் புகழ் பாடிகளால் எமது தேசிய விடுதலைக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் பற்றி தனியாக ஒரு கட்டுரை சீக்கிரமே நீங்கள் எதிபார்க்கலாம்.

பார்ப்பனிய வாதிகளாலும் பார்ப்பனிய புகழ்பாடிகளாலும் எமது விடுதலைப்போராட்டத்திற்கு ஏற்பட்ட/ஏற்பட்டுவரும் பின்னடைவுகளைப் பற்றிக் கட்டுரைகள் எழுதத் தேவையில்லை.. ஏனெனில் அவை நாள்தோறும் செய்திகளாக வந்துகொண்டே இருக்கின்றன :blink:

நல்ல ஒரு விடயம். சீக்கிரம் ஆன்மீகத்தில் உள்ள பகுதிகளில் அனேகமானவற்ரை பூட்டுங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் அவன் செயல்

எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது

ஒரு நாயனார் தேவாரம் பாடி எத்தனையோ கதவை(பூட்டை) திறந்தவர் பொறுத்திருந்து பார்போம் இந்த பூட்டை எந்த நாயனார் திறக்கிறார் என்று.

:P

களத்தி நிர்வாகத்தின் புதிய வரை முறை/ அறிவுறுத்தல் பற்றி சில கருத்துக்கள்

களத்தில் மதம் சார் பிரச்சாரம் தவிர்க்கப்பட வேண்டும், அதே நேரம் மதத்தை விவாதம் நோக்கி கொண்டு செல்லப்படும் கருத்துக்கள், தலைப்புக்கள் வரவேற்கப்படும்.நல்ல ஆரோக்கியமான விடயம்.

அதே நேரம் கள உறுப்பினர்கள், மற்றைய தலைவர்களை மரியதை குறைவாக விமர்சிப்பதை, அல்லது விழிப்பதை தவிர்க்க சொல்லும் நிர்வாகம்,

மதத்தை விமர்சிக்கிறோம் என்று கிளம்பி ஒரு குறிப்பிட்ட மததை, மக்கள் குழுமத்தை, மத்தை நம்புவோரை கீழ்தரமான வார்த்தைகள் கொண்டு விமர்சித்த,போது சும்மா பர்த்துகொண்டிருந்த நிர்வாகம்

இனிமேலும் அவ்வாறு விமர்சிக்கும் போது அது கள உறுப்பினரது சொந்த கூற்று அல்லாது வேறொரு உறுப்பினரின் கூற்றின் மேற்கோளாக இருந்தாலும் அதை நிர்வாகம் எதிர்காலத்தில் பார்த்து கொண்டிருக்காது என நம்புவோம்.

Edited by KULAKADDAN

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.