Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இங்கிலாந்து - இந்திய சமர் இன்று சேப்பாக்கத்தில் ஆரம்பம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இங்கிலாந்து - இந்திய சமர் இன்று சேப்பாக்கத்தில் ஆரம்பம்

இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சென்னையில் இன்று தொடங்குகிறது.

spacer.png

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி நான்கு டெஸ்ட், ஐந்து டி-20 மற்றும் மூன்று ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. 

இதில் முதலவதாக நடைபெறும் டெஸ்ட் தொடரின் முதல் போட்டி இன்று சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ளது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்றுள்ள இங்கிலாந்து அணியானது முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கவுள்ளது.

கொரோனா பரவலுக்கு பிறகு ஓராண்டு கழித்து இந்தியாவில் நடக்கும் முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டி இதுவாகும். 

கொரோனா தடுப்பு பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி அரங்கேறும் இந்த டெஸ்டில் ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

இந்திய அணி சமீபத்தில் அவுஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி வரலாறு படைத்தது. 

அணித் தலைவர் விராட் கோலி முதல் டெஸ்டுடன் விலகிய நிலையில் ரஹானே தலைமையில் இந்திய அணி பிரமாதப்படுத்தியது. தற்போது விராட் கோலி அணிக்கு திரும்பியிருப்பதால் பேட்டிங் வரிசை மேலும் வலுவடைந்துள்ளது.

சென்னை ஆடுகளம் பொதுவாக சுழற்பந்து வீச்சுக்கு உகந்தது. இறுதி இரு நாளில் பந்து அதிகமாக சுழன்று திரும்பும். அதனால் அஸ்வின், குல்தீப் யாதவ் ஆகியோரின் சுழல் ஜாலத்தை எதிர்பார்க்கலாம். 

ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து அணி கடந்த மாதம் இலங்கை மண்ணில் டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வசப்படுத்திய கையோடு மிகுந்த நம்பிக்கையுடன் இந்தியாவில் கால்பதித்து இருக்கிறது. 

30 வயதான ஜோ ரூட் எப்போதும் ஆசிய மண்ணில் ஆதிக்கம் செலுத்தக்கூடியவர். அவர் தான் இங்கிலாந்து பேட்டிங்கின் முதுகெலும்பாக இருக்கிறார். இலங்கை தொடரில் கூட 228, 186 ஓட்ட வீதம் விளாசியிருந்தார்.

மேலும், இது அவருக்கு 100 ஆவது டெஸ்ட் என்பது இன்னொரு சிறப்பம்சமாகும். 

இந்த தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்குட்பட்டது என்ற வகையிலும் முக்கியத்துவம் பெறுகிறது. டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு ஏற்கனவே நியூசிலாந்து தகுதி பெற்று விட்ட நிலையில் மற்றொரு அணி எது என்பது இந்த தொடரின் மூலம் தெரிய வரும். 

டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற இந்திய அணி குறைந்தது 2-0, 2-1 என்ற கணக்கில் தொடரை வென்றாக வேண்டும். இங்கிலாந்து அணி இறுதி சுற்றை எட்ட வேண்டும் என்றால் கண்டிப்பாக 3 டெஸ்டில் வெற்றி பெற்றாக வேண்டும். அதனால் இந்த தொடர் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கிறது.

 

spacer.png

https://www.virakesari.lk/article/99832

 

  • கருத்துக்கள உறவுகள்

இது சமர் இல்லை...வெத்து வேட்டு...

  • கருத்துக்கள உறவுகள்

தேவை இல்லாம அவர எதுக்கு அணியில் எடுத்தீங்க; கவுதம் கம்பீர் காட்டம் !!

 
தேவை இல்லாம அவர எதுக்கு அணியில் எடுத்தீங்க; கவுதம் கம்பீர் காட்டம் !! 1

 

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம், இந்திய அணியுடன் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.இந்த தொடரின் முதல் போட்டி, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று துவங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

 

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு, அந்த அணியின் துவக்க வீரரான பர்ன்ஸ் 33 ரன்கள் கொடுத்து சுமாரான துவக்கம் கொடுத்தார். இதன்பின் வந்த லாரன்ஸ் ரன் எதுவும் எடுக்காமல் விக்கெட்டை இழந்து வெளியேறினாலும், மூன்றாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஜோ ரூட் – டோமினிக் சில்பி ஆகியோர் இந்திய அணியின் பந்துவீச்சை நிதானமாக எதிர்கொண்டு பொறுமையாக ரன் சேர்த்தனர்.

தேவை இல்லாம அவர எதுக்கு அணியில் எடுத்தீங்க; கவுதம் கம்பீர் காட்டம் !! 2

தொடர்ந்து நிதானமாக விளையாடிய இந்த கூட்டணியை பிரிக்க இந்திய பந்துவீச்சாளர்கள் எடுத்த அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்தது.ஜோ ரூட் இந்தியாவுக்கு எதிராக சதம் அடித்து அசத்தினார்.


இந்நிலையில் சிராஜ தேர்வு செய்யாமல் ஏன் இஷாந்த் சர்மாவை தேர்வு செய்தீர்கள் என்ற கேல்வியை பல கிரிக்கெட் வல்லுனர்களும் எழுப்பினர்.இந்திய அணியின் இளம் வீரரான முகமது சிராஜ் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் சிறப்பாக செயல்பட்டதன் மூலம் இவர் இந்தியாவில் நடக்கும் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இவர் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது, இவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 டெஸ்ட் போட்டியில் 13 விக்கெட்டுகளை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது,
தேவை இல்லாம அவர எதுக்கு அணியில் எடுத்தீங்க; கவுதம் கம்பீர் காட்டம் !! 3


இதுபற்றி இந்திய அணியின் முன்னாள் வீரர் கௌதம் காம்பீர் கூறியதாவது இஷாந்த் ஷர்மா காயம் காரணமாக பல நாட்கள் விளையாடவில்லை இவருக்கு இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் பந்து வீசுவது மிகச் சிரமமாகவே இருக்கும் இதன் காரணமாகவே நான் முகமது சிராஜ் தேர்வு செய்தேன்.

 
தேவை இல்லாம அவர எதுக்கு அணியில் எடுத்தீங்க; கவுதம் கம்பீர் காட்டம் !! 4

கடந்த ஐபிஎல் போட்டியில் ஏற்பட்ட காயம் இஷாந்த் ஷர்மாவுக்கு இன்னும் பரிபூரண குணம் அடையவில்லை இவரால் சிறப்பாக பந்துவீசவும் முடியாது மேலும் ஃபீல்டிங் செய்வது சிரமம், மேலும் இவர் ரெட்- பாலில் விளையாடி பல நாட்கள் ஆகிவிட்டது எனவே இந்திய அணி இஷாந்த் சர்மாவின் உடலை தயார் செய்ய வேண்டும்,இவருக்கு பதிலாக மீண்டும் முகம்து சிராஜை களமிறக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

https://tamil.sportzwiki.com/cricket/india-vs-england-gautam-gambhir-unhappy-with-ishant-sharmas-inclusion-in-the-first-test/?fbclid=IwAR0tu8fps0Zfgh-J-dkg2KcRzoq4rnvxf8Mj8hsPjUNkfHlFAnBjJYFst5A

  • கருத்துக்கள உறவுகள்

ரோஹித் சர்மாவா இதை பண்ணாரு. ட்ரெஸ்ஸிங் ரூமில் இருந்து வாயை பிளந்த ஸ்டோக்ஸ் – வைரலாகும் வீடியோ

 இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டி தற்போது சென்னை மைதானத்தில் நேற்று துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் முதலில் பேட் செய்வதாக அறிவித்தார். அதன்படி தற்போது முதல் இன்னிங்ஸில் விளையாடி வரும் இங்கிலாந்து அணி இந்திய பந்து வீச்சை எதிர்த்து சிறப்பாக விளையாடி வருகிறது. இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 555 ரன்களை குவித்து 8 விக்கெட்டுகளை இழந்துள்ளது. முழுவதும் பேட்டிங்க்கு சாதகமாக இந்த மைதானத்தில் இங்கிலாந்து வீரர்கள் இன்று இந்திய அணி பவுலர்களை மிகவும் நோகடித்து ரன்களை சேர்த்தனர்.

முதல் நாளை விட என்று சற்று வேகமான ரன் குவிப்பில் ஈடுபட்ட இங்கிலாந்து வீரர்கள் ரன்களை குவித்து வந்தனர். இந்நிலையில் இந்த போட்டியில் 175வது ஓவரில் இங்கிலாந்து அணியின் வீரர் பெஸ் வாஷிங்டன் சுந்தர் வீசிய ஒரு பந்தை லெக் சைடில் காற்றில் அடித்தார். - Advertisement - இன்சைட் ஆன அந்த பந்து நேராக மிட் விக்கெட் திசையில் இருந்த ரோஹித்தின் கைகளுக்கு சென்றது. எளிதாக வந்த கேட்சை ரோகித் சர்மா கோட்டை விட்டார். இவ்வளவு எளிதான கேட்ச் விட்டது இந்திய அணி வீரர்களை சற்று அதிர்ச்சி அடைய வைத்தது. அதே வேளையில் இங்கிலாந்து அணியின் ஓய்வு அறையில் இருந்த ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் ரோஹித் இந்த கேட்ச்யை தவற விட்டதை பார்த்து “ஓவ் வாட்” என்பது போல வாயை பிளந்தபடி ஆச்சரியமாக பார்த்தார்.

ROHIT SHARMA TRYING HIS BEST NOT TO BAT TODAY. #INDVSENG BEN STOKES REACTION 😂 . TACTICAL DROP . PIC.TWITTER.COM/HZJD8UAEX6 — SURAJ (@DEMON_KHILADI) FEBRUARY 6, 2021

இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 555 ரன்களை எடுத்து இங்கிலாந்து அணி உள்ள நிலையில் பெஸ் 28 ரன்களுடனும், லீச் 6 ரன்களுடனும் களத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்திய அணி சார்பில் பும்ரா, இசாந்த் சர்மா, அஸ்வின், நதீம் ஆகிய நால்வரும் இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது. 

கடந்த ஆஸ்திரேலிய தொடரில் இருந்து இந்திய அணியின் வீரர்கள் இதுபோன்ற பீல்டிங் தவறுகளை செய்து வருவது சற்று வருத்தமான விடயம் தான். ஏனெனில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுபோன்ற விக்கெட் வாய்ப்புகள் எப்போதாவது தான் கிடைக்கும். இப்படி கைக்கு வரும் கேட்சை தவறவிடுவது சற்றே வருத்தப்பட வேண்டிய விடயம் தான் என்பதில் சந்தேகமில்லை.

https://crictamil.in/stokes-reacts-oops-after-rohith-drops-catch/?fbclid=IwAR2NAu75kvWE5dg_Qf9bdC1bwYfkck7JHKN3ojpuBwwT-AUC_YzEg8d4F7A

  • கருத்துக்கள உறவுகள்
Result
1st Test, England tour of India at Chennai, Feb 5-9 2021

 

இங்கிலாந்து வீரர்களுக்கு பாராட்டுக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

விராட் கோலி இருந்திருந்தால் ஆஸ்திரேலியாவிலும் அசிங்கப்பட்டிருப்போம்; முன்னாள் வீரர் அதிரடி கருத்து !!

 
விராட் கோலி இருந்திருந்தால் ஆஸ்திரேலியாவிலும் அசிங்கப்பட்டிருப்போம்; முன்னாள் வீரர் அதிரடி கருத்து !! 1

 

 

நடந்து முடிந்த ஆஸ்திரேலிய அணியுடனான டெஸ்ட் தொடரில் இருந்து விராட் கோலி விலகாமல் இருந்திருந்தால், ஆஸ்திரேலிய அணியுடனான டெஸ்ட் தொடரை இந்திய அணி இழந்திருக்கும் என முன்னாள் வீரர் அசோக் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார்.

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இந்த தொடரின் முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

 
விராட் கோலி இருந்திருந்தால் ஆஸ்திரேலியாவிலும் அசிங்கப்பட்டிருப்போம்; முன்னாள் வீரர் அதிரடி கருத்து !! 2

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி, இந்திய அணியின் பந்துவீச்சை அசால்டாக எதிர்கொண்டு தனது முதல் இன்னிங்ஸில் 578 ரன்கள் குவித்ததோடு இல்லாமல், பந்துவீச்சிலும் இந்திய அணியை திணறடித்து வருகிறது.

இங்கிலாந்து அணியுடனான இந்த போட்டியில் இந்திய அணியின் மிக மோசமான ஆட்டம், கிரிக்கெட் வட்டாரத்தில் மிகப்பெரும் விவாதத்தையே ஏற்படுத்தியுள்ளது. இவ்வளவு மோசமாக விளையாடும் இந்திய அணியால் கடந்த மாதம் ஆஸ்திரேலிய அணியை அதன் சொந்த மண்ணில் எப்படி வீழ்த்த முடிந்தது என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். அதே போல் விராட் கோலியின் கேப்டன்சியும் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.

 
விராட் கோலி இருந்திருந்தால் ஆஸ்திரேலியாவிலும் அசிங்கப்பட்டிருப்போம்; முன்னாள் வீரர் அதிரடி கருத்து !! 3

இந்தநிலையில், இந்திய அணியின் மிக மோசமான ஆட்டம் குறித்து பேசியுள்ள முன்னாள் வீரர் அசோக் மல்கோத்ரா, விராட் கோலி இருந்திருந்தால் ஆஸ்திரேலிய அணியுடனான டெஸ்ட் தொடரையும் இந்திய அணி இழக்கும் நிலையே ஏற்பட்டிருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் பேசுகையில், “விராட் கோலி சூப்பர் ஸ்டார். அவர் தான் இந்திய அணியின் கேப்டன். ஆனால் ரஹானே ஆஸி.,யில் இந்திய அணியை வழிநடத்திய விதம், கோலி மீதான கேப்டன்சி அழுத்தத்தை அதிகரித்துள்ளது. ரஹானே கேப்டனாக செயல்பட்டதால் தான் ஆஸி.,யில் இந்திய அணி டெஸ்ட் தொடரை வென்றது. ஒருவேளை கோலி கேப்டனாக இருந்திருந்தால் தொடரை வென்றிருக்காது.

விராட் கோலி இருந்திருந்தால் ஆஸ்திரேலியாவிலும் அசிங்கப்பட்டிருப்போம்; முன்னாள் வீரர் அதிரடி கருத்து !! 4

ஏனெனில் புஜாரா, அஷ்வின் மாதிரியான வீரர்கள் எல்லாம் கோலிக்கு பக்கத்தில் கூட போகமாட்டார்கள். ஆனால் ரஹானே சூப்பர் ஸ்டாரெல்லாம் இல்லை; சாதாரண வீரர் என்பதால், அவர் கேப்டனாக இருக்கும்போது அவரை மற்ற வீரர்களால் எளிதாக அணுக முடிகிறது என்று அசோக் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார்.

https://tamil.sportzwiki.com/cricket/india-won-australia-ivirat-kohli-tests-ashok-malhotra/?fbclid=IwAR1upQ1jZhs_OFeXu0jFWjJYFmwQkafEmjBdpBN5dd_srL_QqHPWeu7dNX8

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
57FBCF55-E79D-436C-90F6-6115C832E68D.webp
 

 

1. டாஸைத் தோற்றதும் இந்திய பந்து வீச்சாளர்கள் விக்கெட் எடுக்கும் ஆர்வத்தை இழந்து விட்டார்கள். அவர்கள் மட்டுமல்ல களத்தடுப்பாளர்களும் எதிர்மறை மனநிலையில் தான் இருந்தார்கள். ஆஸ்திரேலியாவில் நாம் கேட்சுகளை விட்டோம், கவனக்குறைவினால். ஆனால் களத்தில் துடிப்பாய் இருந்தோம். இங்கு முதலிரு நாட்களும் களத்தடுப்பாளர்களின் உடல்மொழி மோசமாக இருந்தது. இதை கோலியே தோல்விக்குப் பின்பான ஊடக சந்திப்பில் ஒப்புக் கொண்டார். இங்கிலாந்து மிகப்பெரிய இலக்கை அடைய இது உதவியது.

2. டாஸைத் தோற்று சிறப்பான மட்டையாட சூழலில் பந்து வீசவும், அதுவே பந்து திரும்பத் துவங்கியதும் மட்டையாட நேர்ந்ததும் இந்திய அணிக்கு நேர்ந்த ஒரு துரதிஷ்டம்.

3. மோசமான அணித்தேர்வு - நதீமை தேர்வு செய்தது. அவர் தொடர்ச்சியாக ஆடவில்லை. அண்மையில் முடிந்த முஷ்டாக் அலி தொடரிலும் சிறந்த ஆட்டநிலையில் இல்லை. ஐந்து போட்டிகளில் மூன்றே விக்கெட்டுகள் தாம் எடுத்திருக்கிறார். ஐ.பி.எல்லில் கூட சொற்ப விக்கெட்டுகளே வீழ்த்தினார். எதிர்பாராது வந்த இவ்வாய்ப்பை அவரால் பயன்படுத்திக் கொள்ள முடியவில்லை. ஆனால் உண்மையான பிரச்சனை கோலி ஒருவரை (குல்தீப் யாதவ்) டெஸ்ட் வாய்ப்புக்காக நீண்ட காலமாக வரிசையில் நிற்க வைத்து விட்டு, வாய்ப்பு வந்ததும் தெருவில் போகிற ஒருவரை (நதீம்) பிடித்து மாப்பிள்ளை ஆக்கினது. இதற்கு கோலி சொன்ன காரணம் - குல்தீப்பின் பந்து வலதுகையாளர்களுக்கு உள்ளே வரும், நதீமின் பந்து வெளியே போகும் — ஏற்புடையதாக இல்லை. குல்தீப்பின் கூக்ளி பந்து வெளியே போகும். அவர் கால்சுழலர் வேறு. உண்மையான காரணம் கோலிக்கு குல்தீப்பின் மீது நம்பிக்கை இல்லை என்பது. இப்போது அதை விட பெரிய பிரச்சனை அடுத்த போட்டியில் இந்தியா டாஸ் வென்று குல்தீப் மூன்றாவது நாள் வீச வந்து ஐந்து விக்கெட்டுகள் எடுத்தால் அவர் கோலியின் செல்லப்பிள்ளை ஆகி விடுவார். அடுத்த தொடரில் ஜடேஜாவை மூன்றாவது சுழலராக்கி ஜடேஜா நான்கு போட்டிகளில் விக்கெட் எடுக்காவிடில் ஜடேஜாவை அணியை விட்டு நீக்கி குல்தீப்பை பிரதான் சுழலராக்கி மூன்றாவது சுழலராக யாரோ ஊர் பேர் தெரியாத பையனைக் கொண்டு வந்து அதற்கு ஆயிரம் வியாக்கியானங்கள் சொல்லி .... இப்படி தேர்வு விசயத்தில் கோலி ஒரு முழுப்பைத்தியம். அவரால் தர்க்கபூர்வமாய் யோசிக்க முடியாது. ஒரே சமயம் நான்கு விதமாய் யோசித்து குழப்புவதே அவரது பாணி. எத்தனையோ போட்டிகளை முன்பு கோலியின் அணித்தேர்வினால் இழந்திருக்கிறோம். இப்போது இப்போட்டி. அவ்வளவு தான்!

4. கோலி அமைத்த மோசமான களத்தடுப்புகள், பந்து வீச்சு முடிவுகள் - தொடர்ந்து இளம் நதீமை அவர் அழுத்தம் கொடுத்து அச்சுறுத்தி வந்தது. சுந்தருக்கு இரண்டாவது இன்னிங்ஸில் வாய்ப்பளிக்காதது. 

5. கடந்த இரு ஆண்டுகளாகவே நமது துவக்க மட்டையாளர்கள் சதமடிப்பதில்லை. துவக்க மட்டையாட்டம் அமையாததால் நமது 3வது, 4வது எண் மட்டையாளர்களால் சரளமாக அடித்தாட முடிவதில்லை. இதனாலே 35ஐ தாண்ட மாட்டேன் என்கிறோம். இங்கிலாந்துக்கு துவக்க மட்டையாளர்கள் சிறப்பான அடித்தளம் அமைத்துத் தந்ததாலே ரூட்டால் சிறப்பாக, ஓரளவுக்கு சுதந்திரமாக ஆட முடிந்தது. இதுவே அவர் 30/3 எனும் நிலையில் வந்திருந்தால் இங்கிலாந்து 280 தாண்டி இருக்காது. 

6. மத்திய வரிசையில் இப்போதைக்கு பிரச்சனைக்குரிய எண்கள் 4 + 5. ரஹானே தொடர்ச்சியாக ரன் அடித்து சில வருடங்கள் ஆகின்றன. கோலி சதமடித்தும் காலமாகிறது. எண் 3, 6, 7 ஆகியவற்றை சரி செய்து விட்டோம். 4 + 5 எண்ணின் சீனியர்கள் ரன் அடிக்க ஆரம்பித்தால் இந்திய அணி பெரிய இன்னிங்ஸை விரைவில் எடுக்கும்.

7. இப்போட்டியில் இஷாந்த் என்னதான் சிக்கனமாக வீசியிருந்தாலும், அவரிடத்தில் தாகூரை எடுத்திருந்தால் அது நமது முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 450ஐ தொட உதவியிருக்கும். சுந்தரும் சதம் அடித்திருப்பார். தாகூரை எடுக்காததால் இந்திய கீழ்மத்திய வரிசை மட்டையாட்டம் பலவீனமாகி விட்டது. இஷாந்துக்கு வயசாகிறது. இனி அவரை இந்தியாவில் ஆட வைப்பது வீண். வெளிநாட்டில் மட்டும் வீச வைத்து விட்டு, பெரும்பாலான போட்டிகளில் தாகூர் போன்ற இளைஞர்களுக்கு வாய்ப்பளிப்பதே அணியை வளர்க்க உதவும். இதே இஷாந்த் 4வது டெஸ்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஆடியிருந்தால் இந்தியா நிச்சயமாக தோற்றிருக்காதா? யோசியுங்கள்.

8. பும்ரா என்னதான் சிறப்பாக அவ்வப்போது வீசினாலும் அவர் முழுமையான உடல்தகுதியுடன் இல்லை. அவரால் குனிந்து பந்தை எடுக்க முடியவில்லை. முதுகுக்காயம் போல. இது அவரது ரன்னப்பை, ரிதமை நிச்சயமாக பாதித்தது. அவரிடத்தில் நல்ல உடற்தகுதியுடன், சிறந்த ஆட்டநிலையில் இருக்கும் முகமது சிராஜை கொண்டு வந்திருக்கலாம். மட்டையாட்டத்திலும் சிராஜ் கூடுதலாக 30 ரன்கள் சேர்க்கக் கூடியவர். பும்ராவால் உடல் பிரச்சனை காரணமாக கவனித்து மட்டையாட முடியவில்லை. மூச்சுக்கு முன்னூறு முறை உடல்தகுதியின் முக்கியத்துவம் பற்றி பேசி விட்டு குனிய முடியாத ஒரு வீரரை தேர்வு செய்யும் என்ன கட்டாயம் கோலிக்கு ஏற்பட்டது? ஒரே காரணம் தான் - கோலியின் குழப்பவாதம், பிடிவாத சுபாவம், நெருக்கடியை சமாளிக்கத் தெரியாதது!

9. இது மிக முக்கியமான காரணம் - இந்த போட்டி இப்படி போகும் என இந்திய அணி எதிர்பார்க்கவில்லை. ஆஸ்திரேலிய தொடரின் போது ஒரு மாதத்துக்கு மேலான பயிற்சி, தயாரிப்பு இருந்தது, திட்டமிடல் ஆறு மாதங்களுக்கு முன்பே ஆரம்பித்து விட்டிருந்தது என பந்து பயிற்சியாளர் பரத் அருண் சொல்கிறார். ஆனால் இத்தொடரை எப்படி ஆடினாலும் ஜெயித்து விடுவோம் எனும் மிகை நம்பிக்கையுடன் நம் ஆட்கள் இருந்தார்கள். ஒரு படு தட்டையான ஆடுதளத்தில் இங்கிலாந்து மட்டையாளர்கள் டாஸை வென்று இப்படி பட்டையை கிளப்புவார்கள் என இந்தியா எதிர்பார்க்கவில்லை. போதுமான திட்டமிடல், தயாரிப்பு இல்லை. கோலி தன் குழந்தையின் டயப்பரை மாற்றிய புளகாங்கிதத்துடன் முதல் போட்டியை ஆட வந்து விட்டார். நடுவே மத்திய அரசுக்காக டிவீட் போட்டது, அதைப் பற்றி அணியில் விவாதம் நடத்தியது வரை தேவையில்லாத விசயங்களிலே அவரது கவனம் இருந்தது. இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் ஜடேஜா இல்லையென்றானதும் தேர்வாளர்கள் மாற்று குறித்து அதிகமாய் யோசித்ததாய் தெரியவில்லை. அக்ஸர் பட்டேல் உள்ளூர் போட்டிகளிலேயே பிஸ்தா ஸ்பின்னர் அல்ல. அவரை ஒரு மாற்றாக கருதியதே அபத்தம் தான். பதிலாக இரண்டு நல்ல இளம் கால் சுழலர்களை அணிக்குள் கொண்டு வந்திருக்கலாம். எதுவும் நடக்கவில்லை. அதன் விளைவு பந்து வீச்சின் தரத்தில் தெரிந்தது. 

10. தேர்வு, திட்டமிடல், பயிற்சி, முனைப்பு, களத்தடுப்பு, உடல்தகுதி என எல்லா விசயங்களிலும் இங்கிலாந்து மேலான அணி. அதுவே நியாயமாக வென்றிருக்க வேண்டும். அதுவே வென்றது. 

 

இனி என்ன செய்யலாம்?

 

இனியும் இத்தொடரை காப்பாற்ற முடியும். அதற்கு

1. அடுத்து வரும் ஒவ்வொரு போட்டியிலும் முதல் இன்னிங்ஸில் இரண்டு பேராவது சதமடிக்க வேண்டும். குறைந்தது 400-450ஐ எட்ட வேண்டும். இதை ஒரு பொறுப்பாக, முக்கிய இலக்காக எடுத்துக் கொள்ள வேண்டும். 

2. குல்தீப், ராகுல் சஹார் போன்ற கால் சுழலர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் - அது இங்கிலாந்தின் முக்கியமான பலவீனம். அக்ஸர் காயத்தில் இருந்து மேம்பட்டால், அவர் மூன்றாவது சுழலாக இருக்கலாம். ஒரு போதும் அவரை இரண்டாவது சுழலராக பயன்படுத்தக் கூடாது. அக்ஸர் அணித்தலைவராக இருந்தால் கூட அப்படியான முடிவை எடுக்க மாட்டார். சுந்தரை ஒரு மட்டையாளருக்கு (ரஹானேவை துவக்க மட்டையாளராக்கலாம் அல்லது நீக்கலாம்) பதிலாக ஆட வைக்கலாம். அவர் நான்காவது சுழலராக 5-8 ஓவர்கள் மட்டும் வீசட்டும்.

3. கோலியுடனான லடாய் காரணமாகவோ என்னவோ ரோஹித்தின் மட்டையாட்டம், களத்தடுப்பு மிக மட்டமாக இருந்தது. அவரிடம் தேர்வாளர்கள் பேச வேண்டும் - விருப்பமில்லையெனில் (விருப்பமிருந்தாலும் கூட) அவர் விலகிக் கொள்ளட்டும். அவரிடத்தில் கெ.எல் ராகுல் / பிரியங்க் பஞ்சல் / அபிமன்யு ஈஸ்வரன் ஆகியோரில் ஒருவரை கொண்டு வரலாம். எப்படியும் ரோஹித்துக்கு வயதாகி விட்டது என்பதால் அவர் இனி ஒருநாள் போட்டிகளில் மட்டும் கவனம் செலுத்துவதே நலம். 

4. அடுத்த போட்டியில் இருந்தே நான் இத்தகைய மாற்றங்களை விரும்புவேன் - ஒரு இளைய அணியே துடிப்பாக ஆடும். இதை ஆஸ்திரேலியாவில் பார்த்தோம். காயத்தில் இருந்து மீண்டு வரும் சீனியர்கள் செட்டில் ஆகவே நாளெடுக்கும். அவர்கள் களத்தடுப்பில் மெதுவாக இருப்பார்கள். கோலி, ரஹானே, அஷ்வின் தவிர மிச்ச 8 பேரும் இளம் வீரர்களாக இருந்தால் இத்தொடரை நிச்சயமாக இந்தியா வெல்லும்.

5. அடுத்த மூன்று போட்டிகளில் இரண்டிலாவது டாஸை வெல்ல வேண்டும்!

6. இந்தியாவின் வெற்றிக்கு மிகப்பெரிய இடையூறு கோலியின் முடிவுகள், தேர்வுகள், நிலையற்ற மன அமைப்பு, தேவையில்லாமல் கொந்தளிக்கும் சுபாவம், (மனைவியைத் தவிர வேறெதிலும்) தொடர்ச்சியின்மை. ஆக இந்தியா கோலியையும் மீறி இத்தொடரை வென்றாக வேண்டும். கோலி தலைமையேற்ற கடந்த நான்கு டெஸ்ட் போட்டிகளை இந்தியா இழந்திருக்கிறது. இங்கிலாந்துக்கு இரண்டு அணித்தலைவர்கள்; நேரடித் தலைவர் ரூட்; மறைமுகத் தலைவர் கோலி. கோலி செய்கிற ஒவ்வொன்றுமே இங்கிலாந்துக்கு சாதகமாகும் போது அவரையும் மீறி நாம் வென்றாக வேண்டும் - ஆகையால் அது ஒரு மகத்தான சாதனையாக இருக்கும்
 

http://thiruttusavi.blogspot.com/2021/02/blog-post_9.html

 

 

  • கருத்துக்கள உறவுகள்

கோலியை கப்ரின் பதவியிலிருந்து துக்கினால் எல்லாம் சரி வரும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.