Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பருத்தித்துறைக் கடலில் உக்கிர கடற்சமர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு கடற்பரப்பில் மோதல்...ஒன்று இடம் பெற்று இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன...இராணுவ தரப்பு தகவல்படி விடுதலைப்புலிகளின் ஒரு படகு ழூழ்கடிக்க பட்டுவிட்டதாகவும் தங்கள் தரப்பில் இழப்பு இல்லை என்றும் கூறி இருக்கின்றார்கள்..புலிகள் தரப்பிடம் விபரங்கள் பெறமுடியவில்லை...

செய்திகள் எடுத்து வந்தது.....SNS

சூரியன் செய்தியும் சொல்லியதாக தகவல் அறிந்தேன் :rolleyes:

பருத்தித்துறைக் கடற்பரப்பில் உக்கிர கடற்சமர் ஒன்று நடைபெற்றுள்ளதாக சிறிலங்கா அரசு அறிவித்துள்ளது. இன்று மாலை 4.30 மணிக்கு ஆரம்பித்ததாகவும், இதன்போது விடுதலைப் புலிகளிற்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் வழமை போன்று சிறிலங்கா அரசு அறிவித்துள்ளது.

எனினும் தமது தரப்பில் இழப்புக்கள் ஏற்படவிலலையெனவும் தெரிவித்துள்ளது.

மகிந்த ஆட்சிக்கு வந்து முழ்கடிக்க பட்ட புலிகளின் படகு களின் என்னிக்கை சுமார் 100 யை தாண்டி இருக்குமா? :P

மூன்று படகுகள் அழிக்கப்பட்டு, மேலும் இரு படகுகள் கடுமையாகச் சேதமடைந்ததாக பாதுகாப்பு அமைச்சு மற்றும் தேசிய பாதுகாப்பு ஊடகநிலையம் ஆகியவற்றின் இணையத் தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரொய்ட்டருக்கு கருத்துத் தெரிவித்த கடற்படைப் பேச்சாளர் புலிகளின் ஐந்து படகுகளை அழித்ததாகவும், 7 முதல் எட்டுப் படகுகளைச் சேதப்படுத்தியதாகவும் தெரிவித்தார்.

பின்பு சந்தேசியவிற்கு கருத்துத் தெரிவிக்கும் போது தேசமடைந்த படகுகளின் எண்ணிக்கை ஓன்பது என்று சொல்லியுள்ளார்.

இதில் இருந்து ஒண்டை விளங்கிக் கொள்ளலாம். தாங்கள் நினைத்த படி விரும்பியவாறு புலிகளின் இழப்புக்களை வெளியிடுகிறார்கள. என்பது.

  • கருத்துக்கள உறவுகள்

Posted on : Wed Jun 20 6:27:07 EEST 2007

வெற்றிலைக்கேணி, பருத்தித்துறையில் கடற்புலிகள் கடற்படையினர் மோதல்!

வெற்றிலைக்கேணி கட்டைக்காடு கடற் பகுதியில் நேற்று மாலை 4.45 மணியள வில் கடற்படையினருக்கும் கடற்புலிகளுக் கும் இடையில் பெரும் மோதல் ஒன்று இடம் பெற்றுள்ளது.

வெற்றிலைக்கேணி கடற்பகுதியில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த கடற்புலிகளின் 20 படகுகள் கொண்ட அணி மீது, அந்தப் பகுதியூடாக வந்த கடற்படையினர் வேட் டுக்களைத் தீர்த்தனர் என்றும்

அதன்பின்னர் இரு தரப்புகளுக்கும் இடையில் மோதல் இடம்பெற்றது என் றும் அறியப்படுகிறது.

மோதலைத் தொடர்ந்து கடற்படையி னர் காங்கேசன்துறைப் பக்கம் சென்றனர். அவ்வேளை கடற்புலிகள் பருத்தித்துறைக் கடலில் தரித்து நின்று கடற்படையினர் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்பட்டது.

கடற்புலிகள் பருத்தித்துறைக் கடலில் தரித்து நிலை கொண்டிருந்ததை அறிந்து நேற்று மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரையும் அப்பகுதி நோக்கிக் கடும் ஷெல் தாக்குதல் நடத்தப்பட்டது. பல்லப்பை, வரணி முகாம்களில் இருந்தும் ஷெல் தாக் குதல்கள் நடத்தப்பட்டதாக அப்பகுதி மக் கள் தெரிவித்தனர்.

கிபீர் விமானங்களும் அப்பகுதியில் வட்ட மிட்டு நோட்டம் இட்டதைக்கேட்க முடிந் தது.

நேற்றைய மோதல்களில் விடுதலைப் புலிகளின் பத்துப்படகுகள் மூழ்கடிக்கப் பட்டது என்றும் சண்டை தொடர்ந்து நடை பெற்று வருவதாகவும் இராணுவப் பேச்சா ளர் பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க ஊடகங் களுக்கு நேற்றிரவு தெரிவித்தார்.

மோதல்கள் குறித்து விடுதலைப் புலி கள் தரப்புத் தகவல்கள் செய்தி அச்சுக்குப் போகும்வரை கிடைக்கவில்லை. (அ1)

உதயன்

தமிழ் நெற் இணையத்தை தடை செய்துவிட்டு சிங்களவரை ஏமாற்ற தொடங்கியாச்சு இனி ரம்புக்வல மற்றும் பிரசாத் சமரசிங்க போன்றவர்களின் வெடிப் புழுகல்களை வெளிச்சத்துக்கு கொண்டு வருவதற்கு இலங்கையில் தமிழ் நெற் இல்லை.

Sri Lanka Navy Destroys Five Tiger Vessels.

Sri Lanka's navy says it has destroyed five Tamil Tiger vessels after coming under attack from two dozen boats off the island's far northern tip, estimating it had killed dozens of separatist fighters.

Tuesday's clash at sea off Point Pedro in the northern army-held Jaffna peninsula, which is cut off from the rest of the island by separatist-held areas, was the latest in a string of land and sea battles and air strikes in recent months.

A navy spokesman said more than 40 Tigers were "presumed dead". We destroyed five boats and damaged seven to eight more.

"They were trying to attack our patrol boats, but they failed," DKP Dassanayake said, adding that no navy vessels were damaged.

The spokesman said 24 Tiger boats, including four suicide boats, were involved in the attack and the Sri Lankan navy was trying to recover one boat which was drifting.

The Liberation Tigers of Tamil Eelam, who are fighting for an independent state in the island's north and east, were not immediately available for comment and there was no independent confirmation of what happened or of any casualties.

-aljazeera-

Edited by யாழ்வினோ

கட்டைக்காட்டு கடற்பகுதியில் சிறிலங்கா கடற்படையினருக்கு எதிராக கடற்புலிகள் தாக்குதல்.

நேற்று மாலை 5.30 மணியளவில் பருத்தித்துறையில் இருந்து விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசமான கட்டைக்காடு பகுதியை நோக்கி சிறிலங்காப் கடற்படையின் டோராத் தொடரணி ஒன்று உட்செல்ல முற்றப்பட்ட வேளை விடுதலைப் புலிகளின் கடற்புலிகள் வழிமறித்து உக்கிர எதிர் தாக்குதலை மேற்கொண்டனர்.

இத்தாக்குதலில் சிறிலங்காப் கடற்படையினரின் ஒரு டோரார் பீரங்கிப் படகு கடுமையான சேதத்திற்குள்ளாக்கப்பட்டது. சேதத்திற்க்குள்ளாக்கப்பட்ட படகு கடற்படையினரால் கட்டியிழுக்கப்பட்டு காங்கேசன் துறைமுகத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டது.

இத்தாக்குதலில் கடற்படையினருக்கு கடுமையான சேதம் ஏற்ப்பட்ட போதும் இதுவரை கடற்படையினர் தங்களுடைய சேதவிபரங்களை வெளியிடவில்லை. இத்தீரமிகு தாக்குதலில் விடுதலைப் புலிகள் தரப்பில் இரண்டு கடற்புலிகள் வீரச்சாவடைந்துள்ளனர்.

-Sankathi-

அவ்வேளை கடற்புலிகள் பருத்தித்துறைக் கடலில் தரித்து நின்று கடற்படையினர் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்பட்டது.

கடற்புலிகள் பருத்தித்துறைக் கடலில் தரித்து நிலை கொண்டிருந்ததை அறிந்து நேற்று மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரையும் அப்பகுதி நோக்கிக் கடும் ஷெல் தாக்குதல் நடத்தப்பட்டது. பல்லப்பை, வரணி முகாம்களில் இருந்தும் ஷெல் தாக் குதல்கள் நடத்தப்பட்டதாக அப்பகுதி மக் கள் தெரிவித்தனர்.

கடலுக்க செல்லடிக்கிறாங்களாம் :P :blink:

கடலுக்க செல்லடிக்கிறாங்களாம் :P :blink:

மகிந்தா சிந்தனையில அதுவும் ஒன்று

:unsure:

  • கருத்துக்கள உறவுகள்

வடமராட்சி கடற்பரப்பு சமரில் டோறா பீரங்கிப்படகு சேதம்: இரு போராளிகள் வீரச்சாவு

[புதன்கிழமை, 20 யூன் 2007, 14:38 ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்]

யாழ். வடமராட்சி கிழக்கு கடற்பரப்பில் நடந்த மோதலில் சிறிலங்கா கடற்படை டோறா பீரங்கிப்படகு ஒன்று சேதமாகியுள்ளது.

வடமராட்சி கிழக்கு கடற்பரப்பில் கட்டைக்காடு முதல் பருத்தித்துறை வரையான கடற்பரப்பில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை 5.30 மணிமுதல் இரவு 10.30 மணிவரை கடற்புலிகளுக்கும் சிறிலங்கா கடற்படைப் பீரங்கிப் படகுகளுக்கும் இடையில் தொடர் மோதல் நடைபெற்றது.

இம்மோதலின் போது சிறிலங்கா கடற்படையின் டோறா பீரங்கிப்படகு ஒன்று சேதமாகியது. இப்படகை சிறிலங்கா கடற்படையினர் கட்டி இழுத்துச்சென்றனர்.

இதில் கடற்புலிகள் தரப்பில் போராளிகள் இருவர் வீரச்சாவைத் தழுவிக்கொண்டனர்.

புதினம்

  • கருத்துக்கள உறவுகள்

Posted on : Thu Jun 21 6:43:48 EEST 2007

பருத்தித்துறைக் கடலில் செவ்வாயன்று 5 மணிநேரம் கடும் மோதல் நடைபெற்றது டோறா சேதம் என்று புலிகள் அறிவிப்பு

பருத்தித்துறைக் கடலில் நேற்றுமுன் தினம் செவ்வாய்க்கிழமை மாலை 5.30 மணி முதல் ஐந்து மணிநேரம் கடற் படையினருக்கும் கடற் புலிகளுக்கும் இடையில் கடும் மோதல் ஒன்று இடம்பெற்றுள்ளது என ஊடகத் தகவல் நிலையம் தெரிவித்துள்ளது.

இந்த மோதலில் கடற் புலிகளின் ஐந்து படகுகள் மூழ்கடிக்கப்பட்டன. 9 படகுகள் சேதமாக்கப்பட்டன.

சேதமாக்கப்பட்ட படகு ஒன்றை காங்கேசன்துறைக்கு இழுத்துச் சென்று சோதனையிட்டபோது நால்வரின் சடலங்கள் மீட்கப்பட்டன. இந்த மோதலில் 30 கடற்புலிகள் கொல்லப்பட்டனர்.

மீட்கப்பட்ட படகில் இருந்து ரடார் ஒன்று, தொலைத் தொடர்புக் கருவி 4, மற் றும் ஆயுதங்கள் மீட்கப்பட்டன என்று ஊடகத் தகவல் நிலையம் அறிவித்துள்ளது.

கடற் படையினருடன் இடம்பெற்ற மோதலில் டோறா படகு ஒன்று சேதமாக்கப்பட்டுள்ளது. அந்தப் படகை படையினர் கட்டி இழுத்துக் காங்கேசன்துறைக்கு கொண்டு சென்றனர்.

இந்த மோதலில் லெப்.வர்மா, இளங்கீரன் ஆகிய போராளிகள் வீரச்சாவடைந்தனர் என்று விடுதலைப் புலிகளால் அறிவிக்கப்பட்டுள்ளது. (அ1)

உதயன்

  • கருத்துக்கள உறவுகள்

சமீபத்தில் யாழ் வடமராட்சிக் கடலில் நடந்த மோதலில் 40 விடுதலைப்புலிகளைக் கொன்றதாகவும் பல படகுகளை அழித்ததாகவும் அரச தரப்பு கூறி இருந்தது. புலிகள் தரப்பில் இரு போராளிகள் வீரமரணம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இன்றைய தமிழ்நெற் செய்தியின் படி கற்கோவளம் மற்றும் காங்கேசந்துறை கடற்கரையோரங்களில் மொத்தம் 6 இனந்தெரியாத உடலங்கள் கரையொதிங்கி உள்ளதாகவும் அவற்றைப் புலிகளிடம் கையளிக்க எடுக்கப்பட்ட ஐசிஆர்சியின் முயற்சி பாதுகாப்பமைச்சின் தாமதங்களால் கை கூடவில்லை என்று தமிழ் நெற் செய்தி வெளியிட்டுள்ளது.

கடலில் காவியமான வீரர்களுக்கு வீர வணக்கங்கள்.

Defence Ministry blocks ICRC attempts to transfer LTTE bodies

The efforts of Jaffna International Committee of Red Cross (ICRC) to hand over the bodies of the two Liberation Tigers of Tamil Eelam (LTTE) combatants recovered at Katkoava'lam area in Point Pedro Friday and another four bodies recovered Thursday following the recent sea battle at Kaangkeasanthu'rai, to the LTTE, failed due to Sri Lanka Defence Ministry refusal to accommodate ICRC's proposal. The two bodies, recovered at Katkoava'lam and kept at Manthikai hospital unidentified, were interred Tuesday, on Point Pedro magistrate's orders, on State expense.

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=22582

இரு தரப்புமே தத்தமது இழப்புக்களை யுத்த தந்திரோபாயம் கருதி மூடி மறைத்தே வருகின்றனர். இதனால் உண்மைகளை மக்களுக்கு மறைக்கும் ஒவ்வோரு தரப்பும் எதிர்தரப்பின் மீது குற்றம் சாட்டுகின்றனர்.

இந்த தலைப்பு இங்கேயே முடக்கப்படடுமா அல்லது ஊர்புதினம் பகுதிக்கு நகர்த்தப்படுமா என்பதிலிருந்து நீங்களே அதனை ஊகித்து அறியலாம்! (இணைக்கப்பட்டு ஏற்கனவே 8 மணித்தியாலங்கள் கடந்து விட்டன)

Edited by சாணக்கியன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாணக்கியன் அண்ணை

உங்களுக்குப் புதினம், சங்கதி, போன்றவற்றில் வாற செய்திகள் மட்டும் தான் தெரியும் போல. அதை மட்டும் படிச்சுக் கொண்டு புலிகள் மறைக்கினம் என்று கதையாதையுங்கோ.

விடுதலைப்புலிகள் உத்தியோகபூர்வ அறிவிப்புக்களை அவை தாங்கியும் வரல்லை கண்டியளோ!

விடுதலைப்புலிகளால் மாவீரர்கள் என்று, அல்லது நீண்டகால இடவெளியில் குறித்த போராளி பற்றிய விபரங்கள் கிடைக்காத விடத்து, அவர் களத்தில் வீரச்சாவு அடைந்ததாகக் கருதப்பட்டு, அவருக்கு நடுகைக்கல் இடப்படுது. சமீபத்தில் இந்தியன் ஆமியோட சண்டை பிடிச்ச நேரத்தில் காணாமல் போன போரளி ஒருவரின் நடுகைக்கல் நட்டிருக்கினம்.

கடலில் சண்டை நடக்கேக்க, சிலவேளைகளில் தொடர்பு கிடைக்காமல் போகலாம். எந்திரம் பழுதாகி கடலில் கடல் அலையோடு போய் பிறகு நீந்தி வாறவையும் உண்டு.

அதனால உறுதிப்படுத்தும் வரை ஒரு போரளி பற்றி அறிவிக்கமாட்டினம். அங்கையக்கண்ணி கூட கரும்புலியாகப்; போன ஒரு பிள்ளையும் வீரச்சாவு அறிவிச்ச பிறகு தாக்குதலை வெற்றிகரமாக நடத்தீட்டுத் திரும்பி வந்தது. அப்படித் தான் பலாலியில் கரும்புலித் தாக்குதல் நடத்தப் போன ஒரு கரும்புலி பற்றியும் வீரச்சாவு அறிவிச்ச பிறகு, அவர் ஆமியிடம் பிடிபட்டு, இந்தச் சமாதான காலத்தில் தான் விடுதலை ஆனவர். எனவே அப்படியான சம்பவங்களுக்குப் பிறகு, வடிவாகத் தகவல் கிடைக்காட்ட முதலில் சொல்லுறதில்லை.

ஆமியும் அப்படிச் செய்வதில் தப்பில்லை. எங்கட புலப்பெடியள் கூக்காட்டுகினம். அதை விடுங்கோ. ஆனா பெடி கிடைச்ச பிறகும் முல்லைத்தீவிலும், மன்னரிலும் நட்த சண்டையில் வாங்காதது தான் அவை மறைக்க விரும்பினம் என்பதைப் புலப்படுத்துது.

ஒண்டை மட்டும் சொல்லுறன் கேளுங்கோ. தங்களோடு பணம், சொத்து, சுயநலம் என்ற தேவையில்லாமல், எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல், தோளாக நின்று போராடி வீரச்சாவு அடைந்த போராளிக்கு உரிய மரியாதை கொடுக்காமல் புலிகள் இருக்க மாட்டினம் என்றதைத் தான் உங்களுக்குச் சொல்லுறன். என்ன நான் சொல்லுறது?

நீங்கள் கூறுவது மிகவும் சரி, அதைத்தான் நானும் "யுத்த தந்திரோபாயம் கருதி" என்று குறிப்பிட்டிருந்தேன்.

ஊடகங்கள் எதாவது ஒரு தரப்பிற்கு சார்பாக இரண்டு பட்டு நிற்பதால், மக்களை பொறுத்தவரையில் இரண்டு தரப்பு செய்தித்தளங்களிற்கும் சென்று உண்மை நிலை குறித்து ஒரு ஊகத்திற்கு வரவேண்டியுள்ளது! நடுநிலமை, ஊடக தர்மம் என்பனவெல்லாம் பேச்சளவிலேயே இருக்கின்றது!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.