Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தோழனே....!!!!

Featured Replies

  • தொடங்கியவர்

நீங்க இப்பதான் வெண்ணிலா... 20% சித்தி

நீங்க என்னைப்பொறுத்தவரை போட்டிக்குள்ளே நுழையவேயில்லைப் போல..

:huh::lol::lol: 100% சித்தியாவேன் என நம் நட்பில் உறுதியாக இருக்கின்றோம். ம்ம் பார்ப்போம்.

  • Replies 98
  • Views 15.6k
  • Created
  • Last Reply

நீங்கள் ஒரு வீரமான தமிழ்ப்பெண்.... வாழ்த்துக்கள்..

நீங்க இப்பதான் வெண்ணிலா... 20% சித்தி

நீங்க என்னைப்பொறுத்தவரை போட்டிக்குள்ளே நுழையவேயில்லைப் போல..

இது வம்புக்கு சொல்வது போல இருக்கே விகடகவி சார்......! :P

ஒகே வெண்ணிலாவின் கருத்தை வச்சுப் பார்க்க அவா நட்பில் 100வீதம் சித்தி என்றே எனக்குத் தோணுது. :lol: வெண்ணிலாவின் நட்பு வாழ வாழ்த்துக்கள்.

:lol:

விகடகவி சாருக்கு யாரும் நட்புடன் பழகும் தோழிகள் இல்லையா ? :huh: அல்லது அப்படி இருப்பவர்களை கேள்விப்பட்டதும் இல்லையா ?

இங்கே விடயம் பெண் தோழி இருப்பதா இல்லையா என்பதல்ல..

தோளில் சாயும் தோழமை தமிழச்சியா இளம் வாலிபனுடன்..

சாத்தியமா..

அது புனிதமானதாக இருக்கமுடியுமா..

எல்லாப்பெண்களம் ஓம் என்று சொல்லுறத பார்த்தா பகீரென்று இருக்கு :huh:

Edited by vikadakavi

  • தொடங்கியவர்

என் நண்பன் விகடகவியின் கடைசிக்கு முதல் எழுதிய கருத்தைப் பார்வையிட்ட பின் தானும் தமிழ் எழுதக் கற்றுக்கொண்டு இக்களத்தில் நுழையப்போவதாகவும் தமிழ் கற்க நாளை(நாளள விடுமுறை நாள்) என்னிடமே வருவதாகவும் கூறிச்சென்றான். ம்ம் பார்ப்போம். நன்றி விகடகவி & அனிதா.

இங்கே விடயம் பெண் தொழி இருப்பதா இல்லையா என்பதல்ல..தோளில் சாயும் தோழமை தமிழச்சியா இளம் வாலிபனுடன்..சாத்தியமா..அது புனிதமானதாக இருக்கமுடியுமா..எல்லாப்பெண்க

இங்கே விடயம் பெண் தொழி இருப்பதா இல்லையா என்பதல்ல..

ஹா ஹா ....... தோழியோ தோழனோ அவை இருந்தால் தானே நட்பு ! அதுதான் கேட்டன் நீங்கள் அவ்வாறு நட்பு கொண்டதில்லையோ எண்டு. :huh:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ரெக்கோடிங் செய்யும் போது ஒன்றாக இருப்பது வேறு...தோளில் தலை சாய்வது வேறு...உங்கள் நண்பனின் நிச்சயம் செய்யப்பட்ட பெண் தன் கணவன் மீது தலை சாய விடுவாரா என்று கேட்டுப்பாருங்கள்...குறை ஒன்றும் சொல்லவில்லை கேட்டுப்பார்த்து தோளில் தலை சாய்ந்தீர்கள் என்றால் சொல்லுங்கள்....என் மனைவியும் விட மாட்டாராம்.. அதே போல நானும் விட விரும்பமாட்டேன்...

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே விடயம் பெண் தொழி இருப்பதா இல்லையா என்பதல்ல..

தோளில் சாயும் தோழமை தமிழச்சியா இளம் வாலிபனுடன்..

சாத்தியமா..

அது புனிதமானதாக இருக்கமுடியுமா..

எல்லாப்பெண்களம் ஓம் என்று சொல்லுறத பார்த்தா பகீரென்று இருக்கு :huh:

எனக்கும் உங்களின் கருத்தில் உடன்பாடு உண்டு. புனிதம், காக்க வேண்டும் என்ற அக்கறை இருந்தாலும், அப்புனிதம் என்பது ஒரு இலட்சியத்தன்மை கொண்டதாகவே இருக்குமே தவிர, அது சாத்தியமாகும் என்பது ஐயுறவே.

அவ்வாறு உண்மையாக இருந்தாலும் எம் சமூதாயம் அதை ஏற்றுக் கொள்ளாது. அதை நிச்சயம் தப்பான கண்ணோட்டத்தில் தான் பார்க்கும். இரண்டாவது சில வேளைகளில் இனக்கவர்ச்சியும் அப்படியான எண்ணப்பாட்டைத் தோன்றுவிப்பதுண்டு. பெண்கள் ஆண்கள் நட்பையும், ஆண்கள் பெண்கள் நட்பையும் தேடுவதும் இனக்கவர்ச்சியால் அமையும் ஒன்றே.

  • தொடங்கியவர்

தோளில் தலை சாய விடுங்கோ மனைவி ஒன்றும் சொல்ல மாட்டாவா இல்லையா என்பது இல்லை நம் வாதாட்டம். புனித நட்புக்குள் தோள் சாய்ந்தாலும் தப்பில்லை என்பதை தான் வாதாடுறம். அத்தோடு எல்லா நேரமும் சும்மா சும்மா தலை சாய முடியுமா? நாதன் இப்படி கேட்கிறார் ஒருக்கா சாயலாமா என கேட்கலாமா? நான் என் கவியில் சொன்னது அவ்நண்பனின் மனக்கவலையை ஆற்றவே தான். இதை புரிந்து கொள்ளாமல் ஆளாளுக்கு சும்மா தோழமை மேல் குறை காண முயலுறீங்களே. இதை பெண் எழுதிய கவிதைக்கு குறை கண்டுபிடிப்பது என சொன்னால் தகுமா? இதையே ஒரு ஆண் எழுதியிருப்பின் ஏற்றுக்கொண்டிருப்பீங்க என நினைக்கின்றேன். ஆனாலும் நான் சோரப்போவதில்லை இப்புனித நட்புக்குள் பதில் எழுதுவதாலும் என் நட்பின் மேலுள்ள நம்பிக்கை மீண்டும் மீண்டும் உறுதி பெறுகின்றது,

]தூயவன் அண்ணா ஆன் பெண் க்குள் இப்படி இருக்கு. இல்லையென சொல்லவில்லை. ஆனால் ஒரு ஆண் பெண் புனிதமான நட்புக்குள் இப்படி இருககது என்றுதான் சொன்னோம் கடந்த கருத்துக்களை முழுதாக வாசித்தால் மேலும் விளக்கம் தேவையில்லை என நினைக்கின்றேன்இனக்கவர்ச்சி என்பது வேறு. தோழமை என்பது வேறு. இங்கு தோழமை பற்றித்தான் பேசுகின்றோம். சமுதாயம் பற்றியும் மேலும் பார்த்தாகிவிட்டது. சமுதாயத்துக்கு பயப்பட்டால் நாம் எதுவும் அறியாமல் வீட்டில் அடங்கி வாழ வேண்டியதுதான்

Edited by வெண்ணிலா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏன் இதற்குள் ஆண் பெண் என பாகுபாடு....

தமிழ் பண்பாட்டில் இப்படி இல்லை ஆண் நண்பன் பெண் நண்பியின் தோளில் சாய்வது...மேலைத்தேய மக்களிடையே தான் இந்த கலாச்சாரம் உண்டு.....தமிழ் கலாச்சாரத்தில் பொதுவாக பெண்களுக்கு பெண் நண்பிகளும் ஆண்களுக்கு ஆண் நண்பர்களும் தான் .....ஏன் கலாச்சாரம் என கொண்டு வந்தார்கள் என நினைக்கிறீர்கள்?.....போகிற போக்கில் தமிழ் பண்பாட்டை உருவாக்கிய நாடுகளிலே நிலைத்து நிற்காது போல தோன்றுகிறதே.......புலத்தில் தான் பெற்றோர்கள் பிள்ளைகளை தமிழ் கலாச்சாரத்தை பேணும் படி திணிக்கிரார்கள் என்றே எண்ணத்தோன்றுகிறது...

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு எங்களில் பலர் நாம் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று அடம்பிக்கின்றோம். என்ன விளக்கம் கொடுத்தாலும்ஏற்றுக்கொள்ளக் கூடிய நிலையில் நாம் இல்லை. நட்பு நட்புத் தான், இதில் இருந்து என்ன புரிகிறது என்றால் எங்களில் பலருக்கு தன்னம்பிக்கை குறைவு. அதை ஏற்படுத்துவதிற்கு முயற்சி செய்ய வேண்டும்.

பெண்மை..நாணம்..அடக்கம்..அச்சம்..

போன்ற பெண்ணின் இனிய பண்புகள்..

சங்ககால வர்ணனைகள்..

இதிகாச கற்பனைகள்....

எல்லாம் சொன்ன பெண்ணின் குணாதிசயங்கள்..இப்போது பெண்ணுரிமைக்கு பங்கத்தை உண்டு பண்ணும் கெட்ட சொற்களாகிவிட்டது..

  • கருத்துக்கள உறவுகள்

ஆஹா!

ஆண் பெண் பிரச்சனை என்று கலைஞன் வைத்த நெருப்பின் புகை இப்போது தான் கிளம்புகின்றது. யாழ்களத்தில் அப்படி ஏதும் இல்லை என்று ஆதரித்த வெண்ணிலாவா இப்போது அந்தப் பிரச்சனையைக் கையில் தூக்குவது?

இல்லாத பிரச்சனை ஒன்றைக் கிளப்பி விட்டால் அதுவே மூலப்பெருளாகக்கப்படும் என்பதற்கான நல்ல உதாரணம்

  • தொடங்கியவர்

பெற்றோர் திணித்தாலும் பிள்ளைகள் அப்படி நடக்கின்றார்களா? கலாச்சாரம் என்பது வேறு. நீங்கள் சொல்லும் கலாச்சாரம் அதாவது ஆண் ஆணுடனும் பெண் பெண்ணுடனும் தான் பழகணும் என்றால் நம்ம போராளிகள் எல்லாம் ..........................................(ஏன் இவர்களாஇ உதாரணத்துக்கு கொணர்கிறீங்க என கேட்காதீர்கள். இலங்கை தமிழ் பண்பாட்டைப் பற்றி பேசியதால் கொணர்ந்தேன்)

இலங்கையில் கலாச்சாரத்தை பின்பற்ரவில்லை என்று சொல்லவில்லை. நாம் இப்போது தோழமை பற்றியே கதைக்கின்றோம். தோழமை கலாச்சாரத்தினுள் அடங்கும். யெஸ் ஆனால் அது ஒரு சிறு பகுதியே. பார்க்கிறவ்ங்க பழகுறவங்க சிரிக்கிறவங்க எல்லோரையும் நண்பன் / நண்பி என சொல்லலாமா? நட்பு என்னும் போது இருவரதோ இல்லை அக்குழாமின் பண்புகள் ஒத்தவையாக இருக்கும் பொழுதில் தான் நட்பு மலரும் நீடித்து நிலைக்கும். சண்டை வராமல் பாதுகாக்கும் வந்தாலும் உடனேயே மறையும்.

மேலும் விபரம் தேவையெனில் அதாவது ஆண் பெண் நட்பு பற்றி தேவையெனில்

நளாயினியின் கவி வரிகள்.

நாம் எல்லாம்

காதலை மட்டுமே

சுவாசித்து பழகியவர்கள்.

ஆண் பெண் நட்பை

சுவாசிக்க பழக்க வேண்டும்.

நான் இங்கு சொல்வது

சில சமயம்

பைத்தியக்காரத்தனமாக தெரியலாம்.

காதலைப்போன்ற

அத்தனை உணர்வும்

நட்புக்குள்ளும் உண்டு.

பிரிவு ஏக்கம்

இன்பம் துன்பம்

சல்லாபம் தழுவல்

குழந்தை தனம் எல்லாம்.

காதல் தனது ஆட்சியை

பள்ளியறையில்

முடித்துக்கொண்டு

மூச்சடங்கிப்போகிறது.

நட்பு அப்படியல்ல

இதயத்தின் இதயத்துள்

உணர்வின் உணர்வுள்

புதுப்புது அர்த்தங்களை

வாழ்வின் எல்லை வரை

தருவதாய்.

ஆண் பெண் நட்பை

இதுவரை சுவாசிக்க தவறியவர்க்கு

இது புரிய சந்தற்பமேது?!!!!

http://siragugal.blogspot.com/2006/07/blog-post.html

இப்படி பலரது ஆக்கங்கள் இருக்கின்றன.

அதாவது நட்பை எல்லோராலும் புரிய முடியாது. இதுவே என் முடிவு.

துளியே

கடல்

என்கிறது

காமம்

கடலும்

துளி

என்கிறது

நட்பு

புரிந்தவர்களுக்கு நட்பு தூசி. & பால். சமுதாயம் கலாச்சாரம் பண்பாடு என வாதாடுபவர்களுக்கு நட்பு ஒரு தண்ணீர் மேல் படரும் பாசி. (அதாவது பாசியை தான் தெரியும். உள்ளுக்குள் இருக்கும் தண்ணியை தெரியாது) & தண்ணீர் கலந்த பால். :'(

அருமை சிறப்பான வாதம்..

விகடகவிக்கு தெளிவு பிறந்தது வெண்ணிலா அவர்களே..

நன்றி

  • தொடங்கியவர்

அருமை சிறப்பான வாதம்..

விகடகவிக்கு தெளிவு பிறந்தது வெண்ணிலா அவர்களே..

நன்றி

நன்றி விகடகவி. இதுவே என் நட்பின் மாபெரும் வெற்றி.

நன்றி வணக்கம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

போராளிகளை நீங்கள் இங்கே கொண்டு வருவது சரியான விடயம் அல்ல...அவர்கள் நட்புக்காக ஒன்றாக இருக்கவில்லை...அவர்கள் தேசத்திற்காக வாழ்கிறார்கள்...தேச விடுதலைக்காக வாழ்கிறார்கள்...அவர்களுக்கு ஆண் பெண் நட்பை நினைப்பதற்கே நேரமில்லை ஏன் என்றால் அவர்கள் எண்ணம் எல்லாம் எம் மண்ணையும் பெண்களையும் சூறையாடும் பாதகர்களை ஒழிப்பதில்தான் இருக்கும்...தமிழீத்தில் (இலங்கை இல்லை) தான் எமது பண்பாடு பாதுகாக்கப்பட்டு இருக்கிறது....புலத்தில் தான் திணிக்கிறார்கள் என்றேன்.....பண்பாடு பிறந்த நாடுகளிலேயே பாதுகாக்க முடியவில்லை...புலத்தில் மேலத்தேயரோடு வாழும் பிள்ளைகள் பண்பாட்டை கடைப்பிடிக்கிறார்கள் சிலரோ பலரோ ஆனால் பண்பாடு பற்றி தெரிகிறது அவர்களுக்கு...

  • தொடங்கியவர்

நான் போராளிகளை உதாரணத்துக்கு கொண்டு வந்தமை தோழமைக்காக மட்டுமல்ல சிலர் வாதாடிய ஆண் பெண் காமத்துக்கு அதாவது கூச்சம் அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு தொடுகை இப்படி பல சொன்னார்கள். அதற்காக.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏட்டுச்சுரக்காய் கறிக்கு உதவாது என்பார்கள்....அது போல தான் எழுத்தில் எழுதிவிட்டால் எல்லாம் நடைமுறைக்கு சரிவரும் என்றில்லை...எந்த சந்தர்ப்பத்திலும் உங்கள் மனம் தடுமாறவில்லையா எந்த ஒரு நட்பிலையும்? உங்களுக்கு மட்டுமில்லை இது எல்லாருக்கும் பொருந்தும்....சும்மா பேச்சுக்காக சொன்னால் அதை எல்லாம் நம்ப முடியுமா? நட்பில் புனிதம் புனிதம் என்று யாரும் தங்களை தாங்களே ஏமாற்றி கொள்ளாமல் விட்டால் சரி.....பெண்ணுக்குரிய குணங்கள் பெண்ணிடம் இருந்தால் தான் அந்தப் பெண்ணை மதிகிறார்கள்...இல்லாட்டி.....அது அவரவர் இஸ்டம்

  • கருத்துக்கள உறவுகள்

பாராட்டுக்கள் வெண்ணிலா!.....

கவிதை மட்டுமல்ல, உங்க விவாதமும் பாராட்டத்தக்கது..

கிட்டத்தட்ட தனித்து நின்று விவாதித்துள்ளீர்கள்.

காதல் தனது ஆட்சியை

பள்ளியறையில்

முடித்துக்கொண்டு

மூச்சடங்கிப்போகிறது.

நாளாயினி அவர்களின் இந்த கவிதை வரிகளை மேற்கோள் காட்டி நட்பு உயர்வாக்கப்படுகின்றது. அதாவது காதல் காமத்துடன் மூச்சடங்கிப் போவதாக கூறப்படுகின்றது. காதல் காமத்தில் மூச்சடங்கி போனால் இங்கே நாம் கருத்துக்களை எழுதிக்கொண்டிருப்போமா? பள்ளியறைக்கு பின் பிள்ளை பிறப்பு பராமரிப்பு உழைப்பு என்னும் மானுடத்தின் பெருங்கடமைகள் எங்க தொலைந்தது? மானுட இருத்தலின் மூலமான காதலும் காமமுமஇ; தொடரும் கடமைகளை தூக்கியெறிந்து காமத்தின் இறுதிக்கண சலிப்பில் நின்றுகொண்டு நட்பை உயர்வென்று கூறுவது நாகரீகத்தின் அழகாக இருக்கலாம் ஆனால் அது மானுடத்தின் யதார்த்த அசைவல்ல. ஒருவரின் தனிப்பட்ட பாதிப்புகள் கருத்துக்கள் மானுடத்தின் பொதுவானதும் இயற்கையானதுமான காதல் காமம் கடமை என்ற தொடர்ச்சியை காமத்துடன் நிறுத்தமுடியுமா என்பதைப்பற்றி சிந்திக்க வேண்டும்.

உனக்குள் இருக்கும் சோகத்தை

எனக்குள் இன்றே புதைத்துவிட்டு

வெண்ணிலாவின் தோழி கவிதை வரிகளில் இந்த வரிகளை நட்பு என்பதில் இருந்து தியாகம் என்றே எண்ணத்தோன்றுகின்றது. உனக்குள் இருக்கும் சோகத்தை என்னுடன் பகிர்ந்து கொள் என்றால் நட்பாகலாம் என்னுள் புதைத்து விடு என்றால ;உங்களுக்கு அர்தம் என்ன? இங்கே ஒருவர் பலமானவராயும் மற்றவர் பலமற்றவராயும் கருத இடமுண்டு. உங்கள் சோகத்தை யாருள் புதைப்பீர்கள்?

பழையனவற்றை மறந்திடு

புதியதை தேடி விரைந்திடு

சோகத்தை தூக்கி எறிந்திடு

தோழி என் தோளில் தலை சாய்த்திடு

இந்த வரிகளின் அர்தம் ஒருவருக்கு ஒருவர் ஆறுதல் என்று நீங்கள் கருதினால் நான் அதற்கு மறுப்பு சொல்லவில்லை. ஆனால் ஒருவனின் பிரச்சனைக்கு நட்பின் மூலம் தீர்வு என்றால் அதில் பிரச்சனை உண்டு. பழயன எதையும் மறக்காதே அதிலிருந்து பாடங்களை படித்துக்கொள். சோகங்களை தூக்கி எறியாதேஇ உன் சோகத்துக்கான காரணங்களை கண்டுபிடி பின் அதிலிருந்து தீர்வை கண்டு கொள். புதியனவற்றை தேடு ஆனால் நீ நடப்பது முன்னோர் போட்ட சாலையில் என்பதை மறக்கதே.

துயரத்தால் மிகுந்த ஒருவனை சாந்தப்படுத்தும் தாய்மைக்கு கிட்டவான ஒரு ஆறுதல் இந்த அழகான கவிதையை அலங்கரிக்கின்றது. தோழமை (நட்பு) என்பது இது மட்டும் இல்லைஇ ஒரு கடமையை சேர்ந்து ஒற்றுமையாய் செய்யும் உயரிய அடயாளம் கொண்டது. ஒரு நட்பானது அது ஆண் பெண் இருபாலாருக்குள்ளும் எப்படி வேண்டுமானலும் வரும் போதும் ஏற்ற தாழ்வுகள் இன்றிய ஒன்றாகவே வர முடியும். நட்புக்குள் காமம் வரக்கூடாது காதல் வரக்கூடது என்று எதுவும் கிடையாது. அது மானுடத்தின் இயற்கையான அசைவுகளை நிராகரிப்பதாக அமையும். நாகரீகமஇ; கலாச்சாரம் என்பது நிராகரிப்புகளை செய்வதின் வெளிப்படு நட்புடன் புனிதம் என்ற ஒரு பதத்தை சேர்த்துள்ளது. மானுடத்தின் பரிணாம வளர்ச்சியில் நாகரீகமும் கலச்சாரமும் நிராகரிப்புகளையும் சில இணைப்புக்களையும் ஏற்படுத்துவது தவறென்பது எனது வாதமில்லை.

(கவிதையை நன்கு ரசித்தேன் அதில் குறை கூறுவது எனது நோக்கமும் அல்ல ஆனால் அது நகர்த்தப்படும் கருத்துக்களோடு என்சார்பாக எனது கருத்தை எழுதினேன்)

Edited by sukan

  • கருத்துக்கள உறவுகள்

காதல் காமத்துக்கும் அப்பாலானது. பலர் காதலை காமத்துக்க கலந்து கலியாணத்துக்க முடிச்சு வைக்கிறாங்க..! அது காதலின் கலப்படம் மட்டுமே..! சுயநலத்தேவைகளின் பூர்த்திக்கான சந்தர்ப்ப தேடலாகவே இன்றைய காதல் உணர்விக்கப்படுகிறது. ஆனால் அது அப்படியன்றாகவே நாம் உணர்கிறம்..!

இலக்கியங்களில் கூட திருமணத்தை காதலில் இருந்து தெளிவாக வேறுபடுத்திக் காட்டியுள்ளனர்.. திருமணங்களில் தான் கடத்திட்டுப் போறது தொடங்கி அனைத்தும் உள்ளடக்கப்பட்டிருந்தது. ஆனால் காதல் மரணத்தைக் கடந்து வாழ்விக்கப்பட்டது..!

காதல் என்பது மன இணைவு..! திருமணம் என்பது உடலிணைவுக்கான பப்ளிக் சேற்றிவிக்கெற்..! நட்பு.. மன நெருக்கம்..! மன நெருக்கம் உள்ள போது.. உடல் நெருக்கம் கூட.. உணர்வைத் தீண்டாது.. நட்பைத்தான் உணர்த்தும்..! ஆனால் நட்பை என்ன காதலைக் கூட உடலிணைவுக்கான கருவியாக பாவிக்கும் மானிடர்கள் உலகில் உள்ளனர் என்பதால்.. உண்மை நட்பும் காதலும் கூட சந்தேகத்தோடுதான்... உலகில் இன்று.

மனங்கள் எங்கும் சந்தேகப் பேய்.. தலைவிரித்து ஆடுகிறது. அதை விரட்டும் போது.. உணர்வுகள் தெளிவாகும்..! சந்தேகம் இல்லை என்று சொல்லிச் சொல்லியே சந்தேகமும் சுயநலமும் கலந்து வாழும் மனித உணர்வுலகில்.. நட்பு.. காதல்... அவற்றின் உணர்விழந்து கோமாவில் என்பது யதார்த்தம் தான்..! :huh:

காதல் காமத்துக்கும் அப்பாலானது. பலர் காதலை காமத்துக்க கலந்து கலியாணத்துக்க முடிச்சு வைக்கிறாங்க..! அது காதலின் கலப்படம் மட்டுமே..! சுயநலத்தேவைகளின் பூர்த்திக்கான சந்தர்ப்ப தேடலாகவே இன்றைய காதல் உணர்விக்கப்படுகிறது. ஆனால் அது அப்படியன்றாகவே நாம் உணர்கிறம்..!

இலக்கியங்களில் கூட திருமணத்தை காதலில் இருந்து தெளிவாக வேறுபடுத்திக் காட்டியுள்ளனர்.. திருமணங்களில் தான் கடத்திட்டுப் போறது தொடங்கி அனைத்தும் உள்ளடக்கப்பட்டிருந்தது. ஆனால் காதல் மரணத்தைக் கடந்து வாழ்விக்கப்பட்டது..!

காதல் என்பது மன இணைவு..! திருமணம் என்பது உடலிணைவுக்கான பப்ளிக் சேற்றிவிக்கெற்..! நட்பு.. மன நெருக்கம்..! மன நெருக்கம் உள்ள போது.. உடல் நெருக்கம் கூட.. உணர்வைத் தீண்டாது.. நட்பைத்தான் உணர்த்தும்..! ஆனால் நட்பை என்ன காதலைக் கூட உடலிணைவுக்கான கருவியாக பாவிக்கும் மானிடர்கள் உலகில் உள்ளனர் என்பதால்.. உண்மை நட்பும் காதலும் கூட சந்தேகத்தோடுதான்... உலகில் இன்று.

மனங்கள் எங்கும் சந்தேகப் பேய்.. தலைவிரித்து ஆடுகிறது. அதை விரட்டும் போது.. உணர்வுகள் தெளிவாகும்..! சந்தேகம் இல்லை என்று சொல்லிச் சொல்லியே சந்தேகமும் சுயநலமும் கலந்து வாழும் மனித உணர்வுலகில்.. நட்பு.. காதல்... அவற்றின் உணர்விழந்து கோமாவில் என்பது யதார்த்தம் தான்..!

................................................................................

................................................................................

....................................

நெடுக்காலபோவான் அவர்களின் கருத்து என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.

காதலை காமத்துக்கு அப்பால் ஏன் வைக்கவேண்டும்? காதல் என்பது அன்பு பரிவு பாசம் என்ற உணர்வுகளால் நிரம்பிய ஒன்று. இவற்றை தனியாகவும் காமத்தை தனியாகவும் கையாள்வது நல்லதென்று கருதுகின்றீர்களா? மனஉணர்வுகள் துணையுடன் உடல் உணர்வுகள் செயல்பட்டால் அல்லது இரண்டும் இணைந்து செயற்படுவதானது கடமைகளுக்கு வித்திடுகின்றது. காமத்தின் விழைவு ஒரு குழந்தையாக மலரும் போது அது மானுடத் தொடர்ச்சியாகின்றது. இலக்கியங்கள் காதலை மரணத்தை கடந்து வாழ வைப்பது நாகரீகத்தின் செழுமை. மானுடத்தை தொடரவைப்பது காதல் காமம் கடமை என்ற கூட்டு இயக்கம்.

காமத்தை தனியே காதலில் இருந்து தனித்து நோக்குவதோ அல்லது இயக்குவதோ உணர்வற்ற சதைகள் சம்மந்தப்பட்டதாக கருத இடமுண்டு. காமத்தை வன்மமாக பார்க்காமல் இயற்கையாகவும் மென்மையாகவும் பார்ப்பது தான் நல்லதென்பது எனது கருத்து.

காமத்துள் அன்பும் பரிவும் நட்பும் காதலும் கடமை உணர்வும் கலந்திருந்தால் காமம் விகாரமானதாக இருக்கவோ அல்லது அதன் மேல் வெறுப்பும் வர ஒரு நிஜாயமும் இல்லை. காமம் ஒரு பிரச்சனைக்குரிய ஒன்றாக கருதப்படுகின்றதற்கு அதை தனித்து பார்ப்பதே காரணமாகின்றது. இயற்கையாக ஒருவனுக்கு உடற்சேர்க்கை உணர்வுகள் தோன்றும் போது காதல் கடமையுணர்வு பரிவு பாசம் என்பது அந்த உணர்வை வழிநடத்துமாக இருந்தால் அவனின் காமமும் அதன் செயற்பாட்டு விழைவும் பெறுமதி மிக்கதாகவும் கெடுதல் அற்றதாகவும் பொறுப்புள்ளதாகவும் அமையும்.

Edited by sukan

  • கருத்துக்கள உறவுகள்

காதல்.. கரும்பு

காமம் .. இரும்பு

நட்பு.. இனிப்பு என்று சொல்ல வரேல்ல நாங்க..

காதல் என்ற உணர்வு நட்பு என்ற உணர்வு காமம் என்பது எல்லாவற்றிற்கும் மூளையில வெவ்வேறான உணர்வுகள் உண்டு. அந்த உணர்வு நிலைகளை மனிதன் தெளிவாக வேறுபடுத்திக் காண முடியாத அளவுக்கு அவனை சுயநலம் சூழ்ந்து பிடித்திருக்கிறது.

திருமணம்.. முறிகிறது.. காமத்தை எதிர்பார்க்கும் காதலும் முறிகிறது..சுயநலத்தை எதிர்பார்க்கும் நட்பும் முறிகிறது.. அங்கெல்லாம்.. அவை அவற்றிற்கான சரியான உணர்வளவில் இல்லை என்பதுதான் உண்மை.

காமத்தை காதலிலும் மெல்லியதாக நோக்குவதும்.. கடுமையாக வன்முறையாக நோக்குவதும் செயற்படுவதும் கூட மனித சிந்தனையின் வெளிப்பாட்டில் செயற்பாட்டில்..உள்ளதே அன்றி... காமம் என்ற வரவிலக்கணத்தில் அல்ல..! பல விவாகரத்துக்கள காதலிச்சவங்க கூட செய்யுறாங்க...! காரணங்களின் பலாத்காரக் காமமும் அடங்கும்..! எனவே காமம் மலரினும் மென்மையாவதும்.. இரும்பாவதும்.. மனித சிந்தனை செயற்பாட்டில் உள்ளது..! காதல்... நட்பு... இவற்றில் கூட கலப்படங்கள் அவற்றின் தன்மையை சீரழிக்கும் வகையில் சந்தேகிக்கப்படுகின்றன என்பதுதான் வாதம்.

காதல்.. காமம்.. நட்பு இவை அனைத்துமே வெவ்வேறான உணர்வுகளின் நிலைகள்..! அதில் தெளி விருப்பவர்கள்.. நட்பை நட்பாக எப்பவும் உணர்வர். உடல் தொடுகை.. அங்கு உணர்விழப்பைத் தராது..!

தாயை அணைக்கும்.. மகவும்.. துணையை அணைக்கும் மகவும் ஒரே உணர்வையா கொண்டிருக்கும்..! அது போலத்தான் நட்பு. தாயை அணைப்பதை துணையை அணைப்பதற்கு ஈடாக்க முடியாது. இரண்டுக்கும் தனித் தன்மைகளை மனம் உணர்கிறது..! துணையை அன்பால் அணைக்கும் போது தாயை அணைப்பதிலும் உள்ள உணர்வில் இருந்து வேறான உணர்வு இருக்கும். இரண்டுக்கும் இடையில் அன்புதான் அடிப்படை. காமத்தில் துணையை அணைக்கும் போது.. அதையும் அப்படியே உணர்வார்களா மனிதர்கள்.. இருக்க வாய்ப்பில்லை..!

மனிதன் தான் மிருகமில்லையே.. தாய்.. துணை என்று பகுத்தறிந்துதானே உள்ளான். அதுபோலத்தான்.. நட்பின் தோளில் சாய்வதற்கும்.. துணையின் தோளில் சாய்வதற்கும் இடையில்.. வேற்றுமையான உணர்வுகள் உண்டு..! நினைக்கையிலேயே உணர முடிகிறது.. ஏன் செயலில் சாத்தியமாக முடியாது. இருந்தாலும் ஊர் என்ன சொல்லும் என்ற தயக்கம்.. மனிதர்களுக்குள் ஒரு ஒழுக்கம் என்ற விதியை விதித்து.. எல்லைகள் மீறாத சந்தர்ப்பங்களை உருவாக்கி இருப்பதையும்.. குறை சொல்ல முடியாது. காரணம்.. நட்பு என்று கலங்கங்கள் வந்துவிட்டால்.. அந்த வடுக்கள்.. நட்பைக் கூட கலங்கமாக்கிவிடும்..! காதலோடு காமம் கலந்திட்டால் காதல் என்ற உணர்வின் உன்னதம் கெட்டுவிடும். காமத்தோடு.. ஏதேனும் வெறி கலந்துவிட்டால்.. அது கூடக் கசந்துவிடலாம்..! எல்லாம் எல்லையோடு அளவோடு இருந்தால்.. உணர்வது மனித மனத்துக்கு இதமானது..! :huh:

தாயை அணைக்கும்.. மகவும்.. துணையை அணைக்கும் மகவும் ஒரே உணர்வையா கொண்டிருக்கும்..! அது போலத்தான் நட்பு. தாயை அணைப்பதை துணையை அணைப்பதற்கு ஈடாக்க முடியாது. இரண்டுக்கும் தனித் தன்மைகளை மனம் உணர்கிறது..! துணையை அன்பால் அணைக்கும் போது தாயை அணைப்பதிலும் உள்ள உணர்வில் இருந்து வேறான உணர்வு இருக்கும். இரண்டுக்கும் இடையில் அன்புதான் அடிப்படை. காமத்தில் துணையை அணைக்கும் போது.. அதையும் அப்படியே உணர்வார்களா மனிதர்கள்.. இருக்க வாய்ப்பில்லை..!

................................................................................

................................................................................

நெடுக்கால போவான் உங்களின் ஆரோக்கியமான பார்வைக்கும் பகிர்வுக்கும் நன்றிகள்

தாய்மை என்னும் உணர்வு கடமைகளை உணர்வுடன் செவ்வனே செய்யும் ஒரு அற்புதமான ஒன்றாகவும் ஏனைய உணர்வுகளை செம்மைப்படுத்துவது தாய்மையில் இருந்து கற்றுக்கொள்ளப்படுகின்றது என்ற கருத்து என்னிடம் இருப்பதால் அதை ஏனைய உணர்வுகளுடன் ஒப்பிட முடியவில்லை. உணர்வுகளின் மேன்மைக்கு அதன் நிமிர்த்தம் விழையும் காரியங்கள் உதவுகின்றன. அன்பு மட்டும் உணர்வுகளின் அடிப்படையாவதோடு கடமைகளும் உணர்வுகளால் விழையும் காரியங்களும் உணர்வின் வளர்ச்சிக்கும் பகுப்பாய்வுக்கும் துணைநிக்கின்றது. அந்த வகையில் இருவருக்குள் மலரும் நட்பானது அவர்களின் இருப்பில் இருக்கும் மனதின் இயக்கத்தையும் அவர்கள் கருதும் நட்பு என்னும் உணர்வு எதை இலக்காக கொண்டுள்ளதோ அதில் எவ்வளவு தூரம் பற்றுள்ளதோ அதைப்பொறுத்து வடிவம் பெறும். இயற்கை புனிதம் தனித்துவம் என்பது அவரவர் நட்பை கையாழும் விதத்தை பொறுத்தது. என்ற கருத்துடன்இப்பகுதியில் இருந்து விடை பெறுகின்றேன்.

நன்றி

சுகன்

Edited by sukan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.