Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனியவளின் பொன் மொழிகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தன் கையே என்றாலும், விஷம் ஏறினால் வெட்டிவிடத்தான் வேண்டும்!

  • Replies 372
  • Views 56.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

துன்பங்கள் நிரந்தரமானவை அல்ல, அவை எப்போதும் பாலத்தின் அடியில் ஓடுகின்ற தண்ணீரைப்போல் ஓடிவிடும்.

ஓன்றின் தோல்வி மற்றொன்றின் வெற்றி, ஒன்றின் அழிவு மற்றொன்றின் ஆக்கம், ஒன்றின் ஒடுக்கம் மற்றொன்றின் தோற்றம். இந்த அழிவு ஆக்கங்களிலிருந்தே மனிதனுடைய எண்ணம், சக்தி, செயல் எல்லாம் வளர்ச்சியடைந்து வருகின்றன.

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

பெண்களில் இரண்டே பிரிவினர் தாம் இருக்கிறார்கள். ஒன்று அழகானவர்கள். மற்றொன்று அழகானவர்கள் என்று நம்பிக் கொண்டிருப்பவர்கள்

- பெர்னாட்ஷா

  • கருத்துக்கள உறவுகள்

நீ இறக்கும்போது உனக்காக அழக்கூடியவர்களை உன் உயிருள்ளபோதே தேடி வைத்துக்கொள்!

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

தன்மானத்திற்காக எதையும் இழக்கலாம்

எதற்காகவும் தன்மானத்தை இழக்கக்கூடாது.

என்னை அன்பு செய்யுமாறு நான் யாரையும் வருத்திட முடியாது.

நான் செய்யக்கூடியதெல்லாம் அன்பு செலுத்த தகுந்தவனாக என்னை மாற்றிக் கொள்வதுதான்.

  • கருத்துக்கள உறவுகள்

மகிழ்ச்சி பற்றிய சில பொன்மொழிகள்

"மகிழ்ச்சிக்கு வெற்றி திறவுகோலல்ல. மகிழ்ச்சியே வெற்றிக்குத் திறவுகோல். நீ செய்வதை நீ நேசித்தாயானால், நீ வெற்றியடைவாய்."

- Albert Schweitzer

"உங்கள் விதி என்னவாயிருக்கும் என்று நானறியேன், ஆனால் ஒன்று நானறிவேன்: உங்களில் யார் சேவை செய்வது எப்படி என்று விழைந்து கண்டுபிடித்துள்ளீர்களோ, அவர்கள் தான் உண்மையில் மகிழ்ச்சியடைவீர்கள்."

- Albert Schweitzer

"மகிழ்ச்சி என்பது நல்ல ஆரோக்கியமும் குறைந்த ஞாபக சக்தியையும்விட வேறொன்றுமில்லை."

- Albert Schweitzer

"செய்வதற்குச் சில, நேசிப்பதற்குச் சில, மற்றும் எதிர்பார்ப்பதற்குச் சில, இவைகளே மகிழ்ச்சியின் உன்னத அத்தியாவசியத் தேவைகள்."

- Allan K. Chalmers

"மகிழ்ச்சி: இதை நாம் அபூர்வமாக உணர்கிறோம். நான் அதை விலைக்கு வாங்குவேன், யாசிப்பேன், திருடுவேன்,இரத்தம் சொட்டும் நாணயங்களால் விலை கொடுப்பேன் இந்த எல்லையற்ற நன்மைக்காக."

- Amy Lowell

"நாமனைவரும் மகிழ்ச்சியாக இருக்கும் குறிக்கோளுடன் வாழ்கிறோம்; நம் வாழ்க்கைகள் எல்லாம் வேறுபட்டவை, இருப்பினும் ஒன்றே."

- Anne Frank

"மகிழ்ச்சி தன்நிறைவு பெற்றவருக்கு உரியது."

- Aristotle

"செயல்கள் எப்போதும் மகிழ்ச்சியைக் கொண்டு வருவதில்லை, ஆனால் செயலில்லாமல் மகிழ்ச்சியில்லை."

- Benjamin Disraeli

"நமது மனோபலத்தின் பரிபூரண உபயோகிப்பும் நாம் வாழும் உலகைப் பரிபூரணமாய் உணர்வதும்உண்மையிலேயே திருப்திதரும் மகிழ்ச்சியை அளிக்கின்றன."

- Bertrand Russell

உன்னுடைய உழைப்பும் சொற்களும் உனக்கும் பிறர்க்கும் பயனுள்ளனவாயிருக்கையில் மகிழ்ச்சி வருகிறது.

- Buddha

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

வாய்ப்பு வரும் வரும் என்று யாரும் காத்திருக்க வேண்டாம். அந்த வாய்ப்புக்களை நீங்களே தேடித்தான் உருவாக்க வேண்டும். சந்தர்ப்பத்தை உருவாக்குங்கள். வெற்றியை ஈட்டுங்கள்.

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

"நம்மிடம் ஏதுமில்லை" என்று நினைப்பது ஞானம். "நம்மை தவிர ஏதுமில்லை" என நினைப்பது ஆணவம்.

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சிறிய செயலின் மூலம் ஒரு எளிய மனதை மகிழ்ச்சிப்படுத்துவது ஆயிரம் பேர் கூடும் ஒரு பிரார்த்தனையிலும் விட மேலானது.

  • கருத்துக்கள உறவுகள்

காலம் சாதகமாக இல்லாத வரை, பகைவரைத் தோளில் சுமக்கத்தான் வேண்டும்!

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

நூல்களில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்கள்.

தோழர் தியாகு எழுதிய சுவருக்குள் சித்திரங்கள் என்ற நூலில் இருந்து.

01. புரட்சிக்காரனை அவதூறு செய்வதற்காக புரட்சியின் பகைவர்கள் எவ்வளவு கேவலமான பொய்களைக் கூறவும் தயங்கமாட்டார்கள். இந்தப் பொய்ப் பிரச்சாரத்திற்குப் புரட்சியாளன் பொறுமையோடு முகம் கொடுத்தாக வேண்டும். இதுவும் ஒருவிதமான தியாகம்தான்.

--------------------------------------------------------------------------------

02. ஒருவன் தன்னை வள்ளல் என்று சொல்லிக் கொள்வதே மற்றவர்களை இழிவுபடுத்துவதாகும். ஏனென்றால் இந்தச் சொல் அந்த வள்ளலிடம் உதவி பெறுவோரை பிச்சைக்காரராக மாற்றிவிடும். உழைக்கிற மக்களே உண்மையான வள்ளல்கள். தங்கள் உழைப்பால் செல்வம் படைத்து உலகிற்கு அள்ளித்தரும் வள்ளல்கள்.

--------------------------------------------------------------------------------

03. வேலையற்றவர்களின் மூளை சாத்தானின் தொழிற்கூடம்.

--------------------------------------------------------------------------------

04. ஆத்திரமூட்டப்படும்போது ஆத்திரமடைவீர்களானால் ஆத்திரமூட்டுகிறவனுக்கே வெற்றி போய்விடும்.

--------------------------------------------------------------------------------

05. கார்ல்மாக்ஸ் லெனின் போன்றவர்கள் எல்லாம் தங்கள் வாழ்நாளில் பகைவர்களின் கொடிய அவதூறுகளுக்கு ஆளானவர்கள்தான். அதற்காக அவர்கள் ஆத்திரப்படவில்லை. தங்களுக்கு சரியெனப்பட்டதை தொடர்ந்து செய்து கொண்டிருந்தார்கள். அவர்கள் மீதான அவதூறுகளை வரலாறு பொய்ப்பித்தது.

--------------------------------------------------------------------------------

06. போராட்டம் என்றாலே அதில் தியாகம் இருக்கும் என்பது உண்மைதான். தேவையில்லாத தியாகத்தை தவிர்க்க வேண்டியதும் அதேயளவு உண்மையல்லவா?

--------------------------------------------------------------------------------

07. சிறை விதிகளின்படி சிறைச்சாலையில் உள்ள கைதிகளுக்கு பூனை வளர்க்க உரிமையுண்டு.

--------------------------------------------------------------------------------

08. இதுவரை தத்துவஞானிகள் எல்லாம் உலகையே விளக்கி வருகிறார்கள். ஆனால் உலகை மாற்றுவதுதான் முக்கியம் என்றார் கார்ல் மாக்ஸ்.

--------------------------------------------------------------------------------

09. எனக்கு என்று கேள் எங்களுக்கு என்று கேட்காதே இது சிறை அதிகாரிகள் பேசும் வசனம்.

--------------------------------------------------------------------------------

10. எதையுமே சந்தேகிக்கச் சொன்னார் மாக்ஸ். கண்மூடித்தனமாக ஏற்றுக் கொள்வதும் கடைப்பிடிப்பதும் மாக்சிய விஞ்ஞானத்திற்கு ஆகாது.

--------------------------------------------------------------------------------

11. புரட்சிக்கு கால நிர்ணயம் செய்வதை லெனின் புரட்சிகர வாய்ச்சவடால் என்றார்.

--------------------------------------------------------------------------------

12. தஞ்சையின் கடலோரப் பகுதியில் இருந்து புரட்சித் தீ கொழுந்துவிட்டு எரிவதாக பீக்கிங் வானொலி கூறியபோது நாங்கள் இருவர்தான் அங்கத்தவராக இருந்தோம். இதுதான் பீக்கிங் வானொலியின் புரட்சித் தீ.

--------------------------------------------------------------------------------

13. எங்களின் அதி தீவிர குணத்தால் எம்மை விட்டு விலகுவோரை நாம் கோழைகளாகக் கருதினோம்.

--------------------------------------------------------------------------------

14. இடதுசாரிக் கம்யூனிசம் ஓர் இளம் பருவக் கோளாறாகும் இது மாமேதை லெனின் எழுதிய நூல்களில் ஒன்று.

--------------------------------------------------------------------------------

15. வெற்றி மயக்கம் கூடாதென்பதும் ஆவசரம் ஆகாதென்பதும் சீனப் புரட்சியின் பாடமாகும்.

--------------------------------------------------------------------------------

16. சீனாவில் மக்கள் சகல இடங்களிலும் ஒரே மொழி பேசுபவர்கள் இதனால் புரட்சிகர சிந்தனைகள் சட்டெனப் பரவியது. இந்தியா அப்படியல்ல பல மொழிகள் அங்கு புரட்சியின் விரைவான பரவலுக்கு தடையாக இருந்தன.

--------------------------------------------------------------------------------

17. தவறே இல்லாத மனிதனும் கட்சியும் இல்லை என்கிறார் லெனின்.

--------------------------------------------------------------------------------

18. தியாகம் இல்லாத போராட்டம் இலலை. ஆனால் தியாகம் மட்டுமே போராட்டத்தை சரியென்று ஆக்கிவிடாது. குறிக்கோள்களையும், வழிமுறைகளையும் சரியாக வகுக்காவிட்டால், பகைவரும் நண்பரும் சரியாக இனங்காணப்படாவிட்டால் தியாகம் மட்டுமே வெற்றிக்கு உத்தரவாதமளிக்காது.

--------------------------------------------------------------------------------

19. எவ்வளவுதான் கசப்பானவை என்றாலும், எவ்வளவுதான் கொடியவை என்றாலும் உண்மைகளை நேருக்கு நேர் சந்தித்தேயாக வேண்டும்.

--------------------------------------------------------------------------------

20. லெனின் அண்ணன் அலக்சாந்தர் சார் மன்னரை கொலை செய்ய முயன்று தூக்கில் போடப்பட்டவர். அண்ணனின் மரணத்தைக் கண்டு சோர்ந்துவிடாது அதிலிருந்து உறுதி பெற்று சார் மன்னரை அழித்தவர் லெனின். அண்ணன் இறந்தபோது லெனின் வயது 14.

--------------------------------------------------------------------------------

21. தோழர்களின் தியாகத்தை மதிப்பதன் பெயரால் அவர்களுடைய தவறான கணிப்புக்களையும் வழிமுறைகளையும் நாம் அப்படியே பின்பற்றக் கூடாது.

--------------------------------------------------------------------------------

22. ஒரு ஜெயிலர் ஜெயிலரான கதை.

ஒரு நாள் நான் வயலில் உழுது கொண்டிருந்தேன். ரோட்டில் ஒரு வேன் வந்து நின்றது. உள்ளேயிருந்து காக்கிச் சட்டைக்காரர் குதித்து என்னை நோக்கி வரக்கண்டு போலீஸ் பிடிக்க வருவதாக நினைத்து ஓடினேன். அவர்கள் என்னைத் துரத்திப் பிடித்து வேனில் ஏற்றி வேலூர் ஜெயிலுக்கு கொண்டு போய் உன்னை வார்டர் வேலையில் சேர்த்துள்ளோம் என்று கூறி காக்கிச் சட்டையை மாட்டிக் கொள்ள செய்தனர். இதுதான் நான் ஜெயிலரான கதை என்றார்.

--------------------------------------------------------------------------------

23. பேச்சு வார்த்தை கூட ஒரு போர்க்களம்தான். அமைதியான ஒவ்வொரு வாய்ப்பையும் நாம் பற்றிக் கொள்கிறோம் என்பதையும், எதிரிதான் அதைக் குழப்புகிறான் என்பதையும் தவறாமல் மக்களுக்கு உணர்த்த வேண்டும்.

--------------------------------------------------------------------------------

24. எப்போதும் போராட்டக்களத்தை நாமே தீர்மானிக்க வேண்டும் எதிரியல்ல.

--------------------------------------------------------------------------------

25. ஒரு முடிவெடுத்தோம் சரி. முடிவெடுத்த சூழல் மாறும்போது அதைப் புரிந்து முடிவையும் மாற்றியாக வேண்டும். இல்லையேல் போராட்டத்தில் ஏற்படும் திருப்பங்களுக்கு எம்மால் ஈடு கொடுக்க முடியாது போய்விடும்.

  • தொடங்கியவர்

அனைத்தும் நல்ல விடையங்கள்!!

நன்றி

  • 1 month later...
  • தொடங்கியவர்

சிந்தனைக்கு விருந்து!!

1.

சிந்தனையே மனித குலத்தை

சிறப்பிக்கின்றதுவிலை கொடுத்து பெறும்

பொருளே அனுபவம்

2.விலை கொடுத்து பெறும்

பொருளே அனுபவம்

3,

அன்பிற்கும் அறிவிற்கும்

எல்லை இல்லை

4.புத்தகங்களை படிப்பதுடன்

மனிதர்களையும் படி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"சில நேரங்களில்... சில மனிதர்கள்...."

- இது தான் வாழ்க்கைநெறி.

  • கருத்துக்கள உறவுகள்

சுட்டவைகளில் உள்ள

சுயத்தை சுயமாக_சிந்தித்து

சுயம்புலிங்கமாக தோண்று

கிரேக்க தத்துவ ஞானி பரோட்டா

  • தொடங்கியவர்

அன்பு அதிகரிக்கும் போது எதிர்பார்ப்பு அதிகரிக்கின்றது.

எதிர்பார்ப்பு அதிகரிக்கும் போது எதிர்ப்பு அதிகரிக்கின்றது

  • கருத்துக்கள உறவுகள்

-- உண் உடலில் புண் இல்லாதவரை யார் உண்மீது உப்பைக் கொட்டினாலும் உணக்கு எரியாது!

-- யோக்கியமற்ற அப்பாக்கள் எப்போதோ விலங்கு, யோக்கியமற்ற அம்மாக்கள் எப்போதும் விலங்கு.

-- அடுப்பு ஊதும் பெண்களுக்கு படிப்பெதற்கு என்று அன்று கேட்டது அநியாயம், படித்த பெண்களுக்கு அடுப்பெதற்கு என்று பெண்கள் பலர் இன்று கேட்பது அக்கிரமம்.

-- வழி சொல்பவர்களும் வழி கேட்க வேண்டி வரும். உலகம் அவ்வளவு பெரிது!!!

சு.கி. சிவம்.

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

bar ©2008 tamilmanam.NET- Tamil blogs aggregator

சிந்தனைத் துளிகள்!

"உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒரு போதும் நினைக்காதே. அப்படி நினைப்பது, ஆன்மீகத்திற்கு முற்றிலும் முரண்பட்டது."

"நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய். உன்னை வலிமை உடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆவாய்."

"பலவீனத்திற்கான பரிகாரம், பலவீனத்தைக் குறித்து ஒயாது சிந்திப்பதல்ல. மாறாக வலிமையைக் குறித்துச் சிந்திப்பது தான்."

"'நான் எதையும் சாதிக்க வல்லவன்' என்று சொல். நீ உறுதியுடன் இருந்தால், பாம்பின் விஷம் கூட சக்தியற்றதாகி விடும்."

"மனிதனே மேலானவன். எல்லா மிருகங்களை விடவும் எல்லா தேவர்களை விடவும் உயர்ந்தவன். மனிதனை விட உயர்ந்தவர் யாருமே இல்லை."

"தனி மனிதனின் நிலை உயர்த்தப்பட்டால், தேசமும் அதன் நிறுவனங்களும் உயர்வடைந்தே தீரும்."

"உனக்குத் தேவையான எல்லா வலிமையும் உதவியும் உனக்குள்ளேயே உள்ளன".

"உயர்ந்த லட்சியம் கொண்ட மனிதன் ஒருவன் ஆயிரம் தவறு செய்தால், லட்சியம் ஒன்றும் இல்லாமல் வாழ்பவன் ஐம்பதினாயிரம் தவறுகளைச் செய்வான்."

"தூய்மை, பொறுமை, விடாமுயற்சி ஆகிய மூன்றும் வெற்றிக்கு இன்றியமையாதவையாகும். இவை அனைத்திற்கும் மேலாக, அன்பு வேண்டும்."

"எழுந்திருங்கள், விழித்துக் கொள்ளுங்கள், இனியும் தூங்க வேண்டாம். எல்லா தேவைகளையும் எல்லா துன்பங்களையும் நீக்குவதற்கான பேராற்றல் உங்கள் ஒவ்வொருவருக்குள்ளேயும் இருக்கிறது."

"முதலில் கீழ்ப்படிவதற்குக் கற்றுக் கொள். கட்டளையிடும் பதவி பிறகு உனக்குத் தானாக வந்து சேரும்."

"பாமரனைப் பண்புள்ளவனாகவும், பண்புள்ளவனைத் தெய்வமாகவும் உயர்த்தும் கருத்தே மதம்".

"கண்டனக் சொல் எதையுமே சொல்ல வேண்டாம். உதடுகளை மூடிக்கொண்டு உங்கள் இதயங்களைத் திறந்து வையுங்கள்".

"அடுத்தவனின் பாதையைப் பின்பற்றாதே. ஏனெனில் அது அவனுடைய பாதை, உன்னுடையது அல்ல. உன்னுடைய பாதையைக் கண்டுபிடித்து விட்டாயானால், அதன்பிறகு நீ செய்ய வேண்டியது எதுவும் இல்லை; கைகளைக் குவித்த வண்ணம் சரணடைந்து விடு. பாதையின் வேகமே உன்னை உனது லட்சியத்தில் சேர்த்து விடும்."

சுவாமி விவேகானந்தர்

  • கருத்துக்கள உறவுகள்

நெருக்கடி மிக்க வேளைதான் அதிகூடிய அனுபவத்தையும் அறிவையும் பெற்றுக்கொள்ளும் காலம்.

- தலாய் லாமா.

பள்ளியில் பாடத்தை கற்றுக்கொண்டபின் பரீட்சை எழுதுகிறோம். ஆனால் வாழ்க்கையிலோ பரீட்சையின் பின்தான் பாடம் படிக்கிறோம்.

- யாரோ

  • கருத்துக்கள உறவுகள்

கண்களையும் காதுகளையும் திறந்து வைத்திருந்தால் ஒவ்வொரு தோல்வியும் ஒரு பாடத்தைப் புகட்டும். ஒவ்வொரு பின்னடைவும் மாறு வேடத்திலுள்ள ஆசீர்வாதங்களே. பின்னடைவுகளும் தற்காலிகத் தோல்விகளும் இல்லாமல் நாம் எவ்வாறு உருவாக்கப்பட்டிருக்கிறோம் என்பதை ஒரு போதும் அறிய முடியாது.

- நெப்போலியன் ஹில்

  • கருத்துக்கள உறவுகள்

எவ்வாறு எமது உள்ளத்தீயை அணையாமல் வைத்திருப்பது? இதற்கு குறைந்தது இரண்டு விடயங்கள் தேவைப்படும். ஒன்று : எம்மிடமுள்ள நல்ல குணங்கள், நாம் செய்த நல்ல விடயங்களை மெச்சிக்கொள்ளுதல். மற்றது : செயல்களை நிறைவேற்றி முடிக்கும் மனத்திடம்.

என்னுடைய வாழ்க்கையில் என்ன நல்ல விடயங்கள் உள்ளன?

நான் என்ன செய்ய வேண்டும்?

இவை ஒவ்வொரு நாளும் கேட்கப்பட வேண்டிய முக்கியமான கேள்விகளாகும்.

- நதானியல் பிராண்டன்

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

மகிழ்ச்சியினை எம்மில் காண்பது சுலபமானதல்ல. அத்துடன் அதனை வேறெங்காவது காண்பதும் சாத்தியமில்லை.

- அக்னஸ் றெப்லையர்

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
p120lt8.jpg
  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

1. தெரிந்து மிதித்தாலும் தெரியாமல் மிதித்தாலும் மிதிபட்ட எறுப்பிற்கு இரண்டுமே ஒன்றுதான்

2. குத்து விளக்கு எவ்வளவு பிரகாசமாக எரிந்தாலும் அதன் அடியில் சற்று இருள் இருக்கத்தான் செய்யும்

3. சுயநலம் என்பது சிறு உலகம். அதில் ஒரே ஒரு மனிதன்தான் வாழ்கிறான்

4.வெற்றியின் ரகசியம் - எடுத்த கரியத்தில் நிலையாக இருத்தல்

5. பணம் இருந்தால் உன்னை உனக்குத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் யாருக்கும் உன்னைத் தெரியாது.

6. மது உள்ளே சென்றால் அறிவு வெளி செல்கிறது

7 நண்பனைப் பற்றி நல்லது பேசு. விரோதியைப் பற்றி ஒன்றும் பேசாதே!

8. அதிர்ஷ்டத்திற்காகக் காத்திருப்பதும் சாவுக்காக் காத்திருப்பதும் ஒன்றே!

9. செல்வம் என்பது பணம் மட்டும்தான் என்பது இல்லை

10. நாக்கு கொடிய மிருகம். அதை எப்போதும் கட்டியே வை!

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு ஆணின் இதயம்,

முதுமை அடைவதே இல்லை!

அன்பு செலுத்துவதை அது நிறுத்தி விட்டால், அது

வாழ்க்கையையும் முடித்துக் கொள்கிறது!

இப்படியும் சொல்லலாம் தானே? எங்களுக்கும் இதயம் இருக்கிறது தானே? :lol:

இல்லை அப்படி சொல்ல முடியாது!

இரத்தொட்டம் நின்றால்தான் வாழ்வை நிறுத்தி கொள்ளும்.

இப'படி வேண்டுமானால் சொல்லலாம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.