Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

தீராவிடம்

தெள்ளுதமிழினுக்கு திராவிடமென்றொரு தீக்

கொள்ளியை வைத்தாரடி  கிளியே கொடுமை புரிந்தாரடி

உள்ளத்தில் நாம் தமிழர் உண்மை அதை உணர்ந்தும்

பள்ளத்தில் வீழ்ந்தோமடி கிளியே பற்றை இழந்தோமடி

ஆரியச் சங்கரரும் ஆங்கிலக் கால்டுவெல்லும்

பேரிதை வைத்ததனால் கிளியே பெருமையிழந்தோமடி

ஆரிவர் எங்குளரென் றனைவரும் விழித்திடத் தா

கூரும் அழைத்தாரடி கிளியே கூற்றிடம் வீழ்ந்தோமடி

நாம்தமி   ழர்கள்  என்று நம்மினத் தார்க்கும் சொல்ல

நாத்தடுமாறுதடி கிளியே நகைப்புக்குள்ளானோமடி

ஏன் தமிழர்க்கு இந்த இழிநிலை என்றுலுகம்

எம்மை இகழுதடி  கிளியே  இதுவென்ன மாயமடி

சாதிகள் தன்னைக்கொண்டு  சமத்துவம் என்னும் பேரில்

மோதிட வைத்தாரடி கிளியே மூடராயானோமடி

ஆதரவற்றிருந்த அடிமை நிலையொழிக்க

யாதவர் செய்தாரடி? கிளியே நாம்குழி வீழ்ந்தோமடி

ஈழத்தமிழர் கொடு இனக்கொலையால் மடிந்து  

பாழ்பட  விட்டாரடி கிளியே பதவிக்கலைந்தாரடி

தாழ்வுற்றுக் கொடுமையினால் தவித்துக் கிடக்கையிலே

தலைமைக்கு நின்றாரடி கிளியே தகைமை இழந்தாரடி

திராவிடம் என்று வாயாற் செப்பிடும் போதில் நாவில்

அராவிடம் ஊறுதடி கிளியே அடிமைகளானோமடி

விரைவினில் இத்துன்பத்தை மீட்டுத் துயர் துடைக்க

உரியவர் வந்தாலன்றி கிளியே உள்ள மகிழ்வேதடி

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 19/5/2021 at 06:33, karu said:

அருமையான கவிதை பகிர்வதற்கு நன்றிகள் தோழர்.👍

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மிக்க நன்றி தமிழ்த்தேசியன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.