Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் மீதான விவாதம் ஆரம்பம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

UPDATE – துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் மீதான விவாதம் ஆரம்பம்

துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் மீதான விவாதம் ஆரம்பம்.

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பான இரண்டாவது நாள் விவாதம் சற்றுமுன்னர் ஆரம்பமானது.


துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் மீதான வாக்கெடுப்பு இன்று

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் மீதான வாக்கெடுப்பு இன்று (வியாழக்கிழமை) இடம்பெறவுள்ளது.

நாடாளுமன்றில் குறித்த சட்டமூலம் தொடர்பான விவாதம் நேற்று ஆரம்பிக்கப்பட்ட நிலையில், இன்றைய இரண்டாம் நாள் விவாதத்தின் பின்னர் அதன் மீதான வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளது.

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் கடந்த ஏப்ரல் மாதம் 8ஆம் திகதி நாடாளுமன்றில் சமர்பிக்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து, சட்டமூலத்தின் சில சரத்துக்கள் அரசியலமைப்பிற்கு முரணானது என உத்தரவிடுமாறு கோரி உயர்நீதிமன்றில் 19 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன

இந்த மனுக்கள் மீதான பரிசீலனை, பிரதம நீதியரசர் தலைமையிலான ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில், கடந்த மாதம் 19ஆம் திகதி ஆரம்பமாகி, 23ஆம் திகதி வரை இடம்பெறறுது.

இந்தநிலையில், உயர்நீதிமன்றின் வியாக்கியானம் குறித்து சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன நேற்று முன்தினம் சபையில் அறிவித்தார்.

அதன்படி, துறைமுகநகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தின் சில சரத்துக்கள் இலங்கையின் அரசியலமைப்புக்கு முரணாக இருப்பதாக உயர்நீதிமன்றம் தமது வியாக்கியானத்தில் தெரிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

அத்தோடு, குறிப்பிட்ட சரத்துக்களை நிறைவேற்றுவதற்கு சர்வசன வாக்கெடுப்பும் விசேட பெரும்பான்மையும் அவசியம் என உயர்நீதிமன்றம் தனது வியாக்கியானத்தில் குறிப்பிட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும் உயர்நீதிமன்ற தீர்பை ஏற்றுக்கொண்டு திருத்தங்களை மேற்கொண்டதன் பின்னர் சாதாரண பெரும்பான்மையுடன் அதனை நாடாளுமன்றில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இதேநேரம் குறித்த சட்டமூலம் நாட்டின் இறைமையை மீறும் வகையில் உள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜே.வி.பி. உள்ளிட்ட கட்சிகள் தொடர்ச்சியாக குற்றம்சாட்டி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2021/1217028

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பு துறைமுக நகர சட்டமூலத்திற்கு எதிராக வாக்களிப்போம்  - தமிழ் தேசியக் கூட்டமைப்பு

இராஜதுரை ஹஷான்

கொழும்பு துறைமுக நகர விசேட பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் நாட்டின் இறையாண்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு இச்சட்ட மூலத்திற்கு எதிராக வாக்களிக்கும். அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும்  அரசியல் கட்சி பேதங்களை துறந்து நாட்டின் எதிர்காலத்தை கருத்திற் கொண்டு இச்சட்ட மூலத்திற்கு எதிராக வாக்களிப்பது குறித்து அதிக அவதானம் செலுத்த வேண்டும் என  பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ சுமந்திரன் தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

sumanthiran_.jpg

 அவர் மேலும் குறிப்பிடுகையில்,

பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள கொழும்பு துறைமுக நகர  விசேட பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள பல விடயங்கள் அரசியலமைப்பிற்கு முரணானது என்பதை உயர்நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.

நாட்டின் வரையறுக்கப்பட்ட எல்லைக்கு மேலதிகமாக செயற்கையான முறையில் உருவாக்கப்பட்ட கொழும்பு துறைமுக நகரத்தின் நிர்வாக கட்டமைப்பு நாட்டின் பொது நிர்வாக கட்டமைப்பில் இருந்து  ஆணைக்குழுவின் அதிகாரத்தின் ஊடாக விலக்கப்பட்டுள்ளமை   ஒரு தனிப்பட்ட  நிர்வாக கட்டமைப்பின் ஆதிக்கத்தை வெளிப்படுத்தியுள்ளது.

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தினால் நாட்டுக்கு ஏற்படும் பாதிப்பு தொடர்பில் நீதிமன்றம் அவதானம் செலுத்தாது.

சட்டமூலம் அரசியலமைப்பிற்கு முரணானதா அல்லது முரணற்றதா என்பது குறித்து மாத்திரமே உயர் நீதிமன்றம் ஆராயும் அதன் பிரகாரம் இச்சட்டமூலத்தின் ஒரு சில விடயங்கள்  அரசியலமைப்பிற்கு முரண் என்றும்இ அதற்கான தீர்வினையும் உயர்நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தினால் நாட்டுக்கு எதிர்காலத்தில் ஏற்படும் பாதிப்பு குறித்து பாராளுமன்றில்  ஆராய வேண்டும்.

இச்சட்டமூலம் அரசியலமைப்பிற்கு முரண் என்பது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. ஆகவே இச்சட்டமூலத்திற்கு எதிராக வாக்களிக்க தீர்மானித்துள்ளோம்.

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் தற்போது ஒரு சில திருத்தங்களுடன்  நிறைவேற்றப்பட்டாலும்  எதிர்காலத்தில் நாட்டின் சுயாதீன தன்மைக்கு நிச்சயம்  பாதிப்பை  ஏற்படுத்த்தும். 

ஆகவே அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும்  அரசியல் கட்சி பேதங்களையும் சுய இலாபங்களையும் துறந்து நாட்டின் எதிர்காலத்தை கருத்திற்  கொண்டு இச்சட்டமூலத்திற்கு எதிராக வாக்களிப்பது குறித்து அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

கொவிட் அபாயத்திற்கு மத்தியிலும் இந்த சட்ட மூலம் அவசரமாக அரசாங்கத்தினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

நீதிமன்றத்திற்கு செல்ல வாய்ப்பளிக்காதவாறு விடுமுறை தினத்தில் சட்ட மூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. எனினும் இந்த சட்ட மூலம் அரசியலமைப்பிற்கு முரணானது என்பது நீதிமன்றத்தினால் பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த சட்ட மூலத்திலுள்ள 25 ஏற்பாடுகள் மூன்றில் இரண்டு பெரும்பான்மை மாத்திரமின்றி சர்வஜன வாக்கெடுப்புடன் நிறைவேற்றப்பட வேண்டும் என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த சட்ட மூலத்தை நிறைவேற்றுவதற்கு மக்கள் ஆணை வழங்க வேண்டும் என்பது வலியுறுத்தப்பட்டுள்ளது.

அரசியலமைப்பிற்கு முரணான சட்ட மூலத்தை சட்ட விரோதமாக இரகசியமாக நிறைவேற்றிக் கொள்ள அரசாங்கம் முயற்சித்தது. நீதிமன்றத்தின் தீர்ப்பின் ஊடாக இதனை ஓரளவிற்கு தோற்கடிக்க முடிந்துள்ளது. இது தொடர்பில் அறிந்து கொள்வதற்கு நாட்டு மக்களுக்கு காணப்படும் உரிமை மறுக்கப்பட்டுள்ளது.

எனவே நாட்டை காட்டிக் கொடுக்கும் இந்த சட்ட மூலம் நிறைவேறுவதற்கு இடமளிக்க வேண்டாம் என்று சகல தரப்பினரையும் கேட்டுக் கொள்கின்றோம். எனவே இது தொடர்பில் மக்கள் தெளிவடைவதற்கான வாய்ப்பளித்து , வாக்கெடுப்பினை ஒருவாரமேனும் ஒத்தி வைக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம் என்றார்.

 

https://www.virakesari.lk/article/105917

 

  • கருத்துக்கள உறவுகள்

நிறைவேறியது கொழும்பு துறைமுக நகர சட்டமூலம்..!

கொழும்பு துறைமுக நகர விசேட பொருளாதார ஆணைக்குழு தொடர்பான சட்டமூலம் 89 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

குறித்த சட்ட மூலத்திற்கு ஆதரவாக 148 வாக்குகளும் , எதிராக 59 வாக்குகளும் அளிக்கப்பட்டன. 

fasfasf.jpg

அற்கமைய இந்த சட்ட மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக சபாநாயகர் சற்று முன் பாராளுமன்றத்தில் அறிவித்தார்

 
  • கருத்துக்கள உறவுகள்

Congratulation China 🎇

இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே..😀

Bye Bye India 😜

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களம்  தன்தலையில் தானே மண்ணை வாரி அள்ளி கொட்டிகொள்ளுது. ஒரே நாடு, ஒரே சட்டம் பேச்சு வேறு.  தமிழர் ஒத்துழைப்பு, ஒப்புதல் இல்லாமலே எல்லாவற்றையும் செய்து கொண்டு நாம் ஒத்துழைக்கவில்லை, கைகொடுக்கவில்லை இன்னும் என்னென்னவோ குற்றச்சாட்டுகள். வளமான நாட்டை வரட்டுகவுரவத்தினால் பாலைவனமாக மாற்றிவிட்டு இப்போ அபிவிருத்தி பற்றி .... சகிக்கவில்லை. யாருக்கு அபிவிருத்தி? இன்னும் நிறைய விகாரைகள் தமிழர் பிரதேசங்களில்  கிளம்பும், இனங்களுக்கிடையில் முரண்பாடு கிளம்பும்.  அதுதான் இவர்கள் கூறும் அபிவிருத்தி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 1 person and text that says 'தனிமரம் நேசன் சீனாவுக்கு வீசா தேவையில்லை போகலாம் போல!)) 4m Haha Reply 1 உங்கள் கிரி தனிமரம் நேசன் சொந்த நாட்டுக்கு போக ஏன் வீசா மேனே.! #ஊர்கிழவி Just now Like Reply'

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.