Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

காதலுக்கு எல்லை உண்டு(?)நட்புக்கில்லையாம்..

Featured Replies

நான் சிவனே எண்டு இருக்கேன், எதுக்கு என்னையும் சேத்து உள்ளே இழுக்கிறீங்க?

இங்கு எல்லோரும் நட்பை புகழ்கிறீங்க....ஆமா..ஏற்றுக்கொ

Edited by Kuddithambi

நட்பை உயர்த்தணும் என்றதுக்காக காதலை இப்படி கொச்சை படுத்திறீங்களே...

நான் நட்பை உயர்த்தவும் இல்லை தாழ்த்தவும் இல்லை. அதே போல தான் காதலையும். ஏனெனில் என் நட்பும் நட்பாகவே இருக்கு. காதலும் காதலாகவே இருக்கு. நம்பிக்கை காதலுக்கு படம் அதைப் போட்டார்கள். சோ அதை தான் நான் இங்கு காட்டினேன். பலரது காதல் அப்படித்தான் இருக்கு என்பதற்காக :P

real_love.med.jpg

மன்னிக்கவும், திரும்பவும் இங்கே வந்து குறுக்கிடுவதற்கு...

இந்த படம் எங்கே இருந்து பெறப்பட்டது என்று கூறமுடியுமா? ஏனென்றால், இப்படி சும்மா படத்தை போட்டுவிட்டு அதை வைத்து கருத்தாடல் செய்வதன் மூலம் மேலே தலைப்பில் கேட்கப்பட்ட கேள்விக்கு விடை காண முடியும் என்று நான் நினைக்கவில்லை.

இந்த படத்தை பார்க்கும்போது, இது இயல்பில் எடுக்கப்பட்ட படமாக தெரியவில்லை. செட் அப் செய்து எடுக்கப்பட்ட படம் மாதிரி இருக்கு. நீல சட்டை போட்ட பெண்ணிண்ட வலக்கையை வடிவா கவனிச்சு பாருங்கோ. உங்கள் உடம்பை அவவின் நிலையில் வைத்துக்கொண்டு பாவனை செய்து பாருங்கோ. அவ படத்திற்காக செயற்கைத் தனமாக போஸ் கொடுப்பது தெரியவரும். இந்த நிலையில் உடம்பை வைத்திருக்கும்போது வலக்கை மணிக்கட்டு கோயிலில் சுண்டல் கேட்பதற்கு வைக்கப்பட்டது போல் பின்வலம் திருப்பப்பட்டு விரித்து வைக்கப்பட்டுள்ளது அதன் செயற்கைத் தன்மையை காட்டுது. இயல்பான சூழ்நிலையில் படம் எடுக்கப்பட்டிருந்தால் இப்படி போஸ் கொடுக்க முடியாதிருந்திருக்கும் என்பது எனது அபிப்பிராயம்.

நான் இதை இங்கு எழுதுவது ஏனென்றால், இந்த சைனீஸ், ஹொங்கொங் இளைஞர், யுவதிகளிற்கு இப்படி படங்களிற்கு போஸ் கொடுக்கும் கலைகள் அத்துப்படி. கண்டபடி விளம்பரங்கள் செய்வார்கள். அதுவும் பள்ளிக்கூடத்தில் இந்த Image Arts, Theatre & Film, Journalism, Fashion படிக்கும் சனங்களை சொல்லி வேலை இல்லை. ஐயோ அதுகள் எந்த நேரமும் கையில வீடியோ கமராவோடதான் திரியுங்கள். :unsure:

இஞ்ச எழுதப்பட்டிருக்கிறதுகள வாசிக்க எல்லாரும் ஏதோ ஒரு முடிவோடதான் இருக்கிறீங்கள் போல தெரியுது... :P

இப்ப நான் உதாரணதிற்கு வான்வில்லை எடுகிறேன் அவர் காதலிகிறார் ஒருவாவை என்று வைத்து கொண்டா கட்டாயம் திருமணம் செய்ய வேண்டும் தானே(சிலர் பேர் செய்யிறதில்லை அது வேற கதை) இத்துடன் காதலுக்கு எல்லை முடிகிறது என்றே சொல்லுவன்............

அப்படியா ? ............. கல்யாணம் செய்த பிறகு காதல் முடியுதா ? ஏன் கல்யாணம் செய்த பின்னர் மனைவியை யாரும் காதலிப்பதில்லையா ? சாகும் வரை மனைவி மேல் அன்பில்லாமலா வாழ்கிறார்கள் ?

செட் அப் செய்து எடுக்கப்பட்ட படம் மாதிரி இருக்கு. நீல சட்டை போட்ட பெண்ணிண்ட வலக்கையை வடிவா கவனிச்சு பாருங்கோ. உங்கள் உடம்பை அவவின் நிலையில் வைத்துக்கொண்டு பாவனை செய்து பாருங்கோ. அவ படத்திற்காக செயற்கைத் தனமாக போஸ் கொடுப்பது தெரியவரும்.

ம்ம் சரியா சொன்னீங்க................செட் அப் செய்து எடுத்த படம் மாதிரித்தான் கிடக்கு :unsure: B)

Edited by அனிதா

எங்கள் மக்களிடையே காம் காலமாக காதல் என்பது தீண்டத்தகாத விடயமாகப் பார்க்கப்பட்டு வந்துள்ளது. அதன் பிரதிபலிப்புத் தான் நட்பு காதலை விட உயர்ந்தது என்ற வாதம்.

உண்மையில் காதல் நட்பும் எப்படிப்பட்டது என்பது அதைக் கடைப்பிடிப்பவர்களிலேயே தங்கியுள்ளது.

உள்ளொன்று வைத்துப் புறம் ஒன்று பேசும் நண்பர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அது போல காதலைக் கொச்சைப்படுத்தும் காதலர்களும் இருக்கத் தான் செய்கிறார்கள்.

உயிர் கொடுப்பான் உண்மைத் தோழன. அதுபோலக் காதலுக்காக உணிர்விடவும் தயங்க மாட்டார்கள் உண்மைக் காதலர்கள்.

எனவே நட்பு காதல் இரண்டும் புனிதமானவைதான். அஆனால் எம்மவர்களால் தான் இரண்டும் கொச்சைப்படுத்தப்படுகிறது.

பிரச்சினை என்னவென்றால் எங்களில் அனேகரால் காதல் நட்பு இரண்டினதும் உச்சத்தை; தொட முடிவதில்லை

உதாரணமாக நீங்கள் திருமணம் மடித்து அன்பான கணவன்ஃ மனைவி 2 குழந்தைகள் இருக்கின்றார்கள் என்ற வைத்துக் கொள்வோம். இப்பொழுது உங்களுடைய மிக நெருங்கிய நண்பனைஃ நண்பியை மனதில் நினைத்துக் கொள்ளுங்கள். இரண்டு பேரில் ஒருவர் மட்டுமே உயிர் தப்பிக் கொள்ள முடியும் என்ற சந்தர்ப்பம் உன்றில் நீங்கள் என்ன செய்வீர்கள்.

இப்போது சொல்லுங்கள் நட்புக்கு எல்லை இல்லையா?

சபாஸ் காவியா..

அப்படியென்றால் இப்படி வைத்துக்கொள்வோமா..

திருமுணத்திற்கு முன் நட்புக்கு எல்லை இல்லை..

திருமணத்திற்கு பின் நட்புக்கு எல்லை உண்டு...

திருமத்திற்கு முன் காதலுக்கு எல்லை இல்லை.

காதலிப்பவனையே திருமணம் செய்துவிட்டால் திருமணத்திற்குப் பின்னும் காதலுக்கு எல்லை இல்லை..

அப்படியென்றால்..காதலித்து திருமணமாகாவிட்டாலும்.. வேறொருவரை திருமணம் செய்தாலும் காதலும் அதோ கதிதான்..

  • கருத்துக்கள உறவுகள்

காதல் என்பதற்கான வரைவிலக்கணம் என்ன?

இன்று பெரும்பாலானோர் எடுத்துக் கொள்கின்ற காதல் என்பது பற்றிய விளக்கமானது, ஆங்கிலத்தில் இருந்து நேரடியாக மொழிபெயர்ப்புச் செய்வதலால் உருவானதாகும். ஆங்கிலேயன் தான் காதலியையும் love பண்ணுவான், நாயையும் love பண்ணுவான். ஏனென்றால் அவனுக்கு அவ்வுணர்வைக் காட்ட அதைத் தவிர வேறு ஒரு சொல்லும் கிடையாது.

ஆனால் எமக்கு அப்படியல்ல. காதல், அன்பு, பாசம், பரிவு என்று என்னோரன்ன சொற்கள் உண்டு. எம்மைப் பொறுத்தவரைக்கும் காதலன், காதலி என்ற இரு பாத்திரங்கள் மேல் கொள்வது தான் காதல். மற்றதன் மேல் வருவது அன்பு, பாசம்....என்று ஏதாவது ஒன்று. இப்போது, எனக்கு நாய் மேலே பாசம் என்றால், அதை வைத்து தூயவன் நாயைக் காதலிக்கின்றான் என்று யாருக்காவது சொன்னால், காறித் துப்புவார்கள்.

ஆகவே, காதல் என்ற உணர்வு எப்படிப்பட்டதாக இருக்கும் என்றால், அது தன்னிலை மறந்தநிலைக்கு இட்டுச் செல்வதாக இருக்கும். காதலன் காதலி தன்னிலை மறந்த நிலையில் இருப்பது காதலாகும். அவ்வாறே தன்னிலை மறந்த நிலையில் இறைவனை வழிபாடு செய்வதும் காதல் என்பதற்குள் அடங்கும்.

"காதலாகிக் கசிந்து கண்ணீர்மல்கி ஓது வார்தமை நன்னெறிக் குய்பது...." என்று பல சமயக்குரவர்கள் தன்னிலை மறந்தநிலையில் இறைவனை வழிபட்டனர்.

ஆனால் அம்மா, அப்பா, ஏனைய உறவுகள் மேல தன்னிலை மறந்து பாசம் வைத்திருக்கமுடியாது.

சோழியன் அண்ணா பிரிதொரு இடத்தில் சொன்னது போலக் கலங்கரை விளக்கு என்று பொருத்தமான தமிழ்சொல்லிருக்க, ஆங்கிலேயரின் light house என்பதைத் தமிழில் வெளிச்சவீடாக்கி அர்த்தப்படுத்துவது போல எல்லாச் சொற்களையும் செய்தால் தவறாகவோ, அசிங்கமாகவோ மாறக்கூடும்.

அப்படியா ? ............. கல்யாணம் செய்த பிறகு காதல் முடியுதா ? ஏன் கல்யாணம் செய்த பின்னர் மனைவியை யாரும் காதலிப்பதில்லையா ? சாகும் வரை மனைவி மேல் அன்பில்லாமலா வாழ்கிறார்கள் ?

அனிபாட்டி ஒரு பேப்யிட்ட போய் கல்யாணதிற்கு பிறகு காதலிப்பினமோ இல்லையோ என்று கேட்டா ........... :P

சரி சரி என்றாலும் சொல்லுறேன்...........வாயால் சொல்லாம் கல்யாணதிற்கு பிறகும் காதலிக்கலாம் அன்போடா இருக்கிறது என்று இல்லை என்று சொல்லவில்லை நிச்சயமாக ஒரு 20% அப்படி செய்வார்கள் ஆனாலும் திருமணதிற்கு பின் முதல் வைத்திருந்த காதலை எதிர்பார்க்க முடியாது அதற்கு காதலர்களை பிழை சொல்ல முடியாது தொழில் மற்றும் வேற பிரச்சினைகள் என்று வாழ்கை போராட்டதிலும் இணைய வேண்டுமே..................

அப்ப நான் வரட்டா.............. B)

என்ற வைத்துக் கொள்வோம். இப்பொழுது உங்களுடைய மிக நெருங்கிய நண்பனைஃ நண்பியை மனதில் நினைத்துக் கொள்ளுங்கள். இரண்டு பேரில் ஒருவர் மட்டுமே உயிர் தப்பிக் கொள்ள முடியும் என்ற சந்தர்ப்பம் உன்றில் நீங்கள் என்ன செய்வீர்கள்.

இப்போது சொல்லுங்கள் நட்புக்கு எல்லை இல்லையா?

காவியா நீங்க சொல்வது விளங்குகிறது நீங்கள் கேட்கும் கேள்வி அதாவது...........ஒரு பக்கத்தில் அம்மா மறு பக்கத்தில் மனைவி இதில் யாரை காப்பாற்றுவீங்க என்று கேட்பது போல இருக்கிறது..................இப்படி கேட்டா நீங்க யாரை காப்பாற்றுவீங்க என்று சொல்லுங்கோவேன் ..............அதை போல் காதல் மனைவி போலவும் நட்பு அம்மா போலவும் பாதுகாக்கபட வேண்டிய விசயம்.................

காவியா நீங்க சொல்வது விளங்குகிறது நீங்கள் கேட்கும் கேள்வி அதாவது...........ஒரு பக்கத்தில் அம்மா மறு பக்கத்தில் மனைவி இதில் யாரை காப்பாற்றுவீங்க என்று கேட்பது போல இருக்கிறது..................இப்படி கேட்டா நீங்க யாரை காப்பாற்றுவீங்க என்று சொல்லுங்கோவேன் ..............அதை போல் காதல் மனைவி போலவும் நட்பு அம்மா போலவும் பாதுகாக்கபட வேண்டிய விசயம்.................

ஓரிரு மனைவியைக் காணலாம். ஆனால் அம்மா என்பது ஒன்றே ஒன்றுதான். இல்லையா ஆண் உறவுகளே :P :unsure: அப்போ நட்பு உயர்ந்தது காதலை விட என நிறுவலாமா ??

Edited by வெண்ணிலா

  • கருத்துக்கள உறவுகள்

இங்கேயும் அந்த நட்பு, காதல் விவகாரம்தானா?பலே..பலே....

  • தொடங்கியவர்

ஓரிரு மனைவியைக் காணலாம். ஆனால் அம்மா என்பது ஒன்றே ஒன்றுதான். இல்லையா ஆண் உறவுகளே :P :) அப்போ நட்பு உயர்ந்தது காதலை விட என நிறுவலாமா ??

:D ஓரிரு மனைவியை காணலாமா??? இதுதான் நான் சொன்ன அருமையான காதலோட மறு பக்கம்!

இப்பிடி நட்புக்கும் பல மறுபக்கங்கள் இருக்கு. நட்பென்ற போர்வைக்குள் சைட் அடிக்கும் ஆண்கள்/பெண்களும் உண்டு! :lol:

அதுசரி... இங்க யாரும்..எந்த ஆணும்..காதல் என்ற மனைவிக்காகவோ..இல்லை திருமணத்தின் பின்னோ அம்மாவை..அதுதான் அந்த நட்புக்காக சொன்ன தாயை..வயோதிபர் மடத்தில் விடவில்லையா? இல்லை மனைவிக்காக தாயோடு சண்டை போட்டதில்லையா???

தலைப்பு மாறுது போல ;)

Edited by பிரியசகி

பிள்ளைகள்,

இந்தப் பாடலை எல்லாரும் கேட்டு இருப்பீங்கள்.... இங்கு கூறப்படும் கருத்துக்கள் உங்கள் குழப்பங்களை தீர்க்க உதவுமா என்று பாருங்கோ...

ஜூன் போனா ஜூலை காற்றே!

கண் பார்த்தால் காதல் காற்றே!

பூ பூத்தால் தேன்வருமே!

பெண் பார்த்தால் தீ வருமே!

என்னாச்சு தோணலையே?

ஏதாச்சு தெரியலையே?

நட்பாச்சு லவ் இல்லையே!

லவ்வாச்சு நட்பில்லையே!

நேற்று என்பதுன் கையில் இல்லை!

நாளை என்பதுன் பையில் இல்லை!

இன்று மட்டுமே நெஞ்சில் மிச்சம் உண்டு!

தோழா, முத்த கூத்துகள் யாருக்காக?

மொத்த பூமியும் கூத்துக்காகத் தான்! அன்பே!

நேற்று என்பதுன் கையில் இல்லை!

நாளை என்பதுன் பையில் இல்லை!

இன்று மட்டுமே நெஞ்சில் மிச்சம் உண்டு!

தோழா, முத்த கூத்துகள் யாருக்காக?

மொத்த பூமியும் கூத்துக்காகத் தான்!

அ ன் பே! எ ன் அ ன் பே!

ஜூன் போனா ஜூலை காற்றே!

கண் பார்த்தால் காதல் காற்றே!

பூ பூத்தால் தேன்வருமே!

பெண் பார்த்தால் தீ வருமே!

அறைக் குள்ளே மழை வருமா?

வெளியே வா குதூகலமா!

இந்த பூமிப்பந்து - எங்கள் கூடைப்பந்து!

அந்த வானம் வந்து - கூரை செய்ததின்று!

கரை இருக்கும் நிலவினை சலவை செய்!

சிறை இருக்கும் மனங்களை பறவை செய்!

எந்த மலர்களும் கண்ணீர் சிந்திக் கண்டதில்லையே!

ஜூன் போனா ஜூலை காற்றே!

கண் பார்த்தால் காதல் காற்றே!

பூ பூத்தால் தேன்வருமே!

பெண் பார்த்தால் தீ வருமே!

என்னாச்சு தோணலையே?

ஏதாச்சு தெரியலையே?

நட்பாச்சு லவ் இல்லையே!

லவ்வாச்சு நட்பில்லையே!

உக்கூ உக்கூ உக்கூ ... :)

ஓ லா கோ மா ஸ் தா... (?)

பிதற்றல்.... (?)

ஓ சாமச் சீயமா .... (?)

இருப்போமா வெளிப்படையாய்?

விரிப்போமா மலர்க்குடையாய்?

சுட்டுவிரல்களும் சிலை செதுக்குமே!

பெண்ணின் விழிகளோ நம்மை செதுக்குமே!

ரொம்பக் காதலை இந்த பூமி கண்டிருக்கும்!

பல மாற்றங்கள் வந்துவந்து போயிருக்கும்!

இந்த உலகத்தில் எவருமே ராமன் இல்லை!

ஜூன் போனா ஜூலை காற்றே!

கண் பார்த்தால் காதல் காற்றே!

பூ பூத்தால் தேன்வருமே!

பெண் பார்த்தால் தீ வருமே!

என்னாச்சு தோணலையே?

ஏதாச்சு தெரியலையே?

நட்பாச்சு லவ் இல்லையே!

லவ்வாச்சு நட்பில்லையே!

நேற்று என்பதுன் கையில் இல்லை!

நாளை என்பதுன் பையில் இல்லை!

இன்று மட்டுமே நெஞ்சில் மிச்சம் உண்டு!

தோழா, முத்த கூத்துகள் யாருக்காக?

மொத்த பூமியும் கூத்துக்காகத் தான்! அன்பே!

நேற்று என்பதுன் கையில் இல்லை!

நாளை என்பதுன் பையில் இல்லை!

இன்று மட்டுமே நெஞ்சில் மிச்சம் உண்டு!

தோழா, முத்த கூத்துகள் யாருக்காக?

மொத்த பூமியும் கூத்துக்காகத் தான்!

அ ன் பே! எ ன் அ ன் பே!

பாடலை கேட்க இங்கே சொடுக்கவும்!

நன்றி! :D

ஓரிரு மனைவியை காணலாமா??? இதுதான் நான் சொன்ன அருமையான காதலோட மறு பக்கம்!

இப்பிடி நட்புக்கும் பல மறுபக்கங்கள் இருக்கு. நட்பென்ற போர்வைக்குள் சைட் அடிக்கும் ஆண்கள்/பெண்களும் உண்டு!

நீங்கள் தோழனே பகுதிக்குள் நான் சொன்ன கருத்துக்களை வைத்துத்தான் இக்கருத்து எழுதினீர்களெனில் உங்கள் மீது தப்பு சகி.

ஆண் பெண் என்ற நட்பு போர்வைக்குள் சைட் அடிக்கின்றார்கள். ஆனால் உண்மையான நட்புக்குள் இருக்காது. நீங்கள் சொல்வது போல போர்வை போர்த்திய நட்புக்குள். ஆனால் நான் அங்கு வைத்த கருத்துக்கள் தோள் சாய்தல் பற்றியே என்பதை மீண்டும் சொல்கின்றேன்.

கலைஞன் அண்ணா சொல்லிய பாட்டின்படி

நட்பாச்சு லவ் இல்லையே

லவ் ஆச்சு நட்பில்லையே

நட்புக்குள் லவ் இருக்காது. அது போல காதல் என்று வந்தால் நட்பு என்ற உறவும் போயிடும். அதாவது போர்வை போர்த்து நட்பென பழகுவோர் தடம்புரண்டால் காதலர்களாக மாறினால் அவர்களுக்குள் பின்பு நட்பு இருக்காது. ஆனால் நட்பு எப்போதும் நட்புதான், உண்மையான நட்பை பற்றி நான் சொன்னேன் ஆமா. திருதிருப்பி எனக்கு விளக்கம் சொல்ல என்னால் முடியாது.

காதலில் ஒரு நாளும் குறை இருக்காது. காதலரில்தான் குறை இருக்கும்.

நட்பில் குறை இருக்காது. நண்பர்களில் இருக்கும்.

காதலில் ஒரு நாளும் குறை இருக்காது. காதலரில்தான் குறை இருக்கும்.

நட்பில் குறை இருக்காது. நண்பர்களில் இருக்கும்.

வாசகன் நீங்கள் சொல்லும் வாசகங்கள் சின்னதாக இருப்பினும் உண்மையைச் சொல்லுறீங்க. ஐ லைக் இட். :P

  • 5 years later...

வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுப்பதில் இவ்வளவு விடயங்கள் இருக்கா என்ன :rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.